Thursday, July 26, 2012தாம்பரம்::பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியானது தொடர்பாக தாம்பரம் பள்ளி முதல்வர், பஸ் உரிமையாளர், டிரைவர், கிளீனர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் விடிய விடிய போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32), ஆட்டோ டிரைவர். மனைவி பிரியா (28). இவர்களது மகன் பிரணவ் (9), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். மகள் ஸ்ருதி (6), சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பள்ளி பஸ்சில் 60 மாணவர்கள் இருந்தனர்.
முடிச்சூர் இ.பி. காலனி பஸ் நிறுத்தம் அருகே பஸ் வேகமாக திரும்பியபோது, நிலைதடுமாறிய சிறுமி ஸ்ருதி, இருக்கைக்கு கீழ் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். அதுகூட தெரியாமல் டிரைவர், பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். ஸ்ருதி விழுந்ததும் சக மாணவிகள் அலறினர். சாலையில் சென்றவர்கள், பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் மாணவர்களை இறக்கிவிட்டு, பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் படைப்பையை சேர்ந்த சீமானை (58) கைது செய்தனர். பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), பள்ளி முதல்வர் விஜயன் (60), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரித்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிகாலை 3.30 மணியளவில் அனைவரையும் கைது செய்தனர்.
மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குநர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோரும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். ‘விசாரணை அறிக்கையை முதல்வருக்கு அனுப்புவோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று பள்ளிக் கல்வி துறை செயலர் சபீதா தெரிவித்தார். மாணவி பலியானதை தொடர்ந்து சீயோன் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் 4 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பஸ்சில் இருந்து விழுந்து மாணவி இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி திறந்தவுடன் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை செய்யப்படுகிறது. குறை ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அளிக்கப்படும் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்படும். விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் பர்மிட் ரத்து செய்யப்படும்’ என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
பள்ளி பஸ்சில் ஓட்டை இருப்பது தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் இதே ஓட்டையில் மாணவி ஸ்ருதியின் கால் சிக்கியுள்ளது. அப்போது அதிர்ஷ்டவமாக தப்பிய சிறுமி, இதுபற்றி தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் பஸ்சில் உள்ள ஓட்டையை அடைக்கும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். டிரைவர் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அநியாயமாக ஒரு சிறுமியின் உயிர் போயிருக்காது. அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடைகள் அடைப்பு பள்ளி சிறுமி இறந்ததையடுத்து முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
ஐகோர்ட் கடும் கண்டனம்
பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் இன்று காலை கோர்ட்டுக்கு வந்ததும், அரசு வக்கீல் வெங்கடேஷை பார்த்து, ‘சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, பஸ் ஓட்டையில் விழுந்து இறந்தது மிகவும் சோகமானது; வேதனையானது. நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இதுபோன்ற பஸ்கள் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் எங்கே இருக்கிறார்? அவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
கடும் நடவடிக்கை: முதல்வர்
முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவி ஸ்ருதி, நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ்சில் இருந்த துவாரம் வழியாக கீழே விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். பழுதுள்ள பஸ்சை குத்தகை அடிப்படையில் பள்ளி வாகனமாக இயக்கியதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாணவி ஸ்ருதி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
பள்ளி முதல்வர் விஜயன் (60), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரித்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிகாலை 3.30 மணியளவில் அனைவரையும் கைது செய்தனர். மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குனர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோரும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவி பலியானதை தொடர்ந்து சீயோன் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் 4 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று காலை சிறுமியின் உடல் அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஸ்ருதி படித்த பள்ளியின் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், சுற்று வட்டார ஊர்மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து சிறுமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘சிறுமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது தயவுதாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். பள்ளி சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, சிறுமி பலியான சம்பவத்தை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இன்று காலை முதல் பெஞ்ச் கோர்ட்டுக்கு வந்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், அரசு வக்கீல் வெங்கடேஷை அழைத்து, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, பஸ் ஓட்டையில் விழுந்து இறந்தது மிகவும் சோகமானது; வேதனையானது. இதைக் கேட்டு நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இதுபோன்ற பஸ்கள் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் எங்கே இருக்கிறார்? அவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பஸ்சில் இருந்து விழுந்து மாணவி இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அலட்சியம்
பள்ளி பஸ்சில் ஓட்டை இருப்பது தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் இதே ஓட்டையில் மாணவி ஸ்ருதியின் கால் சிக்கியுள்ளது. அப்போது அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி, இதுபற்றி தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் பஸ்சில் உள்ள ஓட்டையை அடைக்கும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். டிரைவர் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அநியாயமாக ஒரு சிறுமியின் உயிர் போயிருக்காது. அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.










Wednesday,July 25, 2012




Tuesday, July 24, 2012




Wednesday,July 18,2012
Wednesday,July 18,2012















