Thursday, October 31, 2013

வவுனியாவிலிருந்து அதிவிரைவு தபால் சேவை ஆரம்பம்!

Thursday, October 31, 2013
இலங்கை::துரிதமாக கடிதங்களை கிடைக்கச் செய்வதற்காக அதிவிரைவு தபால் சேவை நாடளபவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வவுனியாவிலும் 29ம் திகதி முதல் உத்தியோக பூர்வமாக அதி விரைவு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் பிரதேச அஞ்சல் அதிபதி நாயகம் என்.ரட்ணசிங்கம் கருத்து தெரிவிக்கையில்..

எமது திணைக்களத்தின் மற்றுமோர் முயற்சியாக தபால்களை உடனடியாக கிடைக்கச் செல்லக் கூடியதாக எமது அமைச்சரின் நடவடிக்கை காரணமாக அதிவிரைவு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமக்கு இரண்டு வாகனங்கள் இந் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று யாழ்பாணம் செல்லும். இது வடமாகாண தபால்களை விநியோகிக்கும். மற்றையது தம்புள்ளைக்கு சென்று தபால்களை ஒப்படைக்கும்.

தென் பகுதிக்குரிய தபால்களை தம்புள்ளை பகுதியில் வைத்து சேகரிப்பதனால் அங்கு சென்று எமது வாகனம் விநியோகிக்கும் என்றார். இதன் மூலம் தபால் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்களை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையில் பிரதேச அஞ்சல் அதிபதி நாயகம் என்.ரட்ணசிங்கம், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எம.ஜி.அல்ஹா சல்ஹாது, மற்றும் வவுனியா அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

கொழும்பு, கசினோ சூதாட்டத்தில் வென்ற கொரிய பெண் பிரஜையின் பணம் திருட்டு: களவாடிய பெண்ணைக் காட்டிக் கொடுத்த கெமரா!!

Thursday, October 31, 2013
இலங்கை::கொழும்பு ஐந்து நட்­சத்­திர ஹோட்ட­லொன்றில் தங்­கி­யி­ருந்த கொரிய பிர­ஜை­யொ­ரு­வரின் 9 இலட்ச ரூபா திரு­டப்­பட்­டது தொடர்­பாக கொம்­பனித் தெரு பொலிஸார்  விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

கொரிய பிர­ஜை­யுடன் ஹோட்டல் அறை­யி­லி­ருந்த இனந்­தெ­ரி­யாத பெண்­ணொ­ருவர் இப்­ப­ணத்தை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்த கொரியப் பிரஜை கடந்த 2 ஆம் திகதி டி.ஆர். விஜ­ய­வர்­தன மாவத்­தை­யி­லுள்ள கெசினோ சூதாட்ட விடு­திக்குச் சென்று 6,600 அமெ­ரிக்க டெலர்­களை சூதாட்­டத்தில் வென்­ற­தா­கவும் விடு­தி­யி­லி­ருந்து ஹோட்­ட­லுக்கு வாக­ன­மொன்றில் சென்­ற­ போது வாகன சாரதி மூலம் அறி­மு­க­மான இந்தப் பெண்ணை ஹோட்­ட­லுக்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

கொரியப் பிரஜை இந்தப் பெண்­ணுடன் இரவைக் கழித்­த­தா­கவும் மறு­தினம் காலை எழுந்து பார்த்­த­போது பெண் அறையில் இல்­லா­ததால் அறையை சோத­னை­யிட்­ட­போது முதல் நாள் கெசி­னோவில் வெற்­றி­பெற்ற, 6,600 அமெ­ரிக்க டொலர்கள் உட்­பட அவ­ரி­ட­மி­ருந்த 33,000 ரூபா இலங்கைப் பணமும் காணாமற் போனதை அறிந்து கொம்­பனித் தெரு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

ஹோட்­டலில் பொருத்­தப்­பட்­டி­ருந்த பாது­காப்பு கெம­ராவை பரீட்­சித்­ததில் இப்பெண் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கொம்பனித்தெரு பொலிஸார் இப்பெண்ணைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

வட மாகாண சபை தவிசாளர் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்

Thursday, October 31, 2013
இலங்கை::வட மாகாண சபை தவிசாளர் சி.வி.கே சிவஞானம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக நேற்று 30 ஒக்ரோபர் 2013 அன்று கடமையேற்றுக் கொண்டார்.
வட மாகாண சபையின் பேரவைச் செயலாளர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி தவிசாளரினை அலுவலக வாயில் வைத்து சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஆவணத்தில் கையொப்பமிட்ட தவிசாளர் அலுவலக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

உள்ளூராட்சி செயலாளர் திரு.ஆர். வரதீஸ்வரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்
 
tamil matrimony_INNER_468x60.gif

இலங்கையில் கிறிஸ்­தவ, முஸ்லிம் அடிப்­ப­டை­வாத சக்­தி­கள்:; பெளத்­தர்கள், இந்துக்களை பலாத்­கா­ர­மாக மத­மாற்றம்: கல­கொட அத்தே ஞான­சார தேரர்!

Thursday, October 31, 2013
இலங்கை::காவியுடையணித்த பிக்குகளால் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட காவல்துறை பிரிவொன்றை அமைக்குமாறு புத்தசாசன அமைச்சின் செயலாளர் காவல்துறை மா அதிபரிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காவல்துறை மா அதிபரும் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று பொது பல சேனா அமைப்பு மற்றும் புத்தசாசன மற்றும் ஆன்மீக விவகார அமைச்சின் செயலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது..

புத்த சாசன அமைச்சின் செயலாளரினால் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட தகவல் தொடர்பில் அறிந்து கொள்வதற்கோ பொது பல சேனா குறித்த அமைச்சின் செயலகத்திற்கு சென்றது.

இது தவிர புத்த சாசன அமைச்சினால் புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதனிடையே, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், புத்த சாசன அமைப்புக்குள் நுழைய முற்பட்ட போது, அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தீவிர நிலை ஏற்பட்டது.

புத்தசாசன அமைச்சின் செயலாளர் எம்.கே.பி.திசாநாயக்க குறித்த இடத்திற்கு சென்று குறித்த பிக்குகளை கலந்துரையாடலுக்கு அழைத்துச் சென்றார்..
 
மத­மாற்ற தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­மாறும், புத்­த­சா­சன அமைச்­சரை மாற்­று­மாறும் பொது பல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இன்று காலை கொழும்­பி­லுள்ள புத்­த­சா­சன அமைச்சுக்கு முன்னால் கூடிய பொது பல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தினர்.

அதன்போது பொதுபலசேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட சிலர் அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இலங்கையில் கிறிஸ்­தவ, முஸ்லிம் அடிப்­ப­டை­வாத சக்­தி­கள், பெளத்­தர்கள், இந்துக்களை பலாத்­கா­ர­மாக மத­மாற்றம் செய்­யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரிவிக்கின்றார்.

அதனால் உட­ன­டி­யாக மத­மாற்ற தடைச்­சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற வேண்டும் என்ற பிர­தான கோரிக்­கை­யை முன்வைப்பதாக அவர் கூறினார். 
 
tamil matrimony_INNER_468x60.gif

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் அமைச்சரவைக் கூட்டம்: வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Thursday, October 31, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் மாகாண முதலமைச்சர்களும் இணைந்திருந்தனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

வடமாகாண முதலமைச்சர் மருத்துவ பரிசோதனைகளின் பொருட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்தும் இன்று பிற்பகல் வரை மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்வார் என்று மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் கீழ் ரத்து செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தல் முன்வைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், கெசினோ தவிர்ந்த விருந்தக கட்டிடம் அமைப்பதற்கு வரி சலுகை வழங்குவதற்காக வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதிக்காக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு விரிவாக்கல் அமைச்சர் செயலாளர் எம்.எம்.சி. பேர்டினான்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

செல்வாக்கு மிகுந்தவர் பட்டியல் ரஷ்ய அதிபர் புடின் முதலிடம் போர்ப்ஸ் பத்திரிகை கணிப்பு!!

Thursday, October 31, 2013
நியூயார்க்::உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் புடின் முதலிடம் பிடித்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
கடந்த 3 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்திருந்த ஒபாமா, இந்த முறை ஒரு இடம் பின் தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தை ரஷ்ய அதிபர் புடின் பிடித்துள்ளார். சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் திட்டத்தை தடுத்தது மற்றும் ரஷ்யாவில் 13 ஆண்டுகள் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, கடந்த 2012 மார்ச் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது என்ற வகையில் புடினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
 
ஆனால், அமெரிக்க அதிபராக 2வது முறை பதவியேற்றாலும் அரசின் நிதிசுமை, பற்றாக்குறை, தவறான கொள்கை முடிவுகளால் அரசு அலுவலகங்கள் 16 நாட்கள் முடங்கின. இது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், அமெரிக்க உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடனுக்கு அமெரிக்க எதிர்ப்பை மீறி ரஷ்யா தஞ்சம் அளித்த விவகாரமும் புடினின் செல்வாக்கு அதிகரிக்க காரணம். அதுவே ஒபாமா செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், 4ம் இடத்தில் போப் பிரான்சிஸ், 5ம் இடத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. செல்வாக்கு மிகுந்தவர்களை தேர்வு செய்ய போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டு 72 உலக தலைவர்களின் பெயர்களை பரிசீலித்தது. இதில் 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சாம்சங்க் நிறுவன தலைவர் லீ குன்ஹீ 41வது இடத்திலும், நைஜீரிய கோடீஸ்வரர் அலிகோ டாங்கோடி 64வது இடத்திலும் உள்ளனர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நிறுவன தலைவர்கள், கோடீஸ்வரர்கள் என பல தரப்பினரின் பெயர்களும் இடம் பெற்றிருந்த இந்த பட்டியலில் உலக அளவில் 9 பெண்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன.
tamil matrimony_INNER_468x60.gif

சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியலை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானம்!

Thursday, October 31, 2013
இலங்கை::சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியலை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அண்மையில் தயாரிக்கப்பட்ட தேசிய சிறுவர் கொள்கைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர்களின் பட்டியலை தயாரிக்கவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டார்.

சிறார்களை பாதுகாக்கும் நோக்கில், அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விரைவில் இதனை சட்டமாக்குவதற்கு அமைச்சரவையில் சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பட்டியலில் உள்வாங்கப்படும் நபர்கள் சிறார்கள் சம்பந்தமான தொழில்கள் எதிலும் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

ஆபரேஷன் ஹம்லா’ தொடங்கியது 13 கடலோர மாவட்டங்களில் தீவிரவாதிகள் தேடுதல் ஒத்திகை போலீஸ் படைகள் குவிப்பு!

Thursday, October 31, 2013
சென்னை::தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேஷன் ஹம்லா’ என்ற பெயரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை ஒத்திகை இன்று காலை தொடங்கியது. பாகிஸ்தானில் இருந்து படகில் கடற்கரை வழியாக மும்பை வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆபரேஷன் ஹம்லா’ என்ற பெயரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் திடீரென ஊடுருவினால் எப்படி அவர்களை வீழ்த்துவது என்று இந்த ஒத்திகை நடத்தப்படும். தமிழக கடலோர பகுதிகளில் 13 மாவட்டங்களில் ஹம்லா ஆபரேஷன் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசல் அதிகமாக உள்ளதால் அதை சமாளிக்கும் பொருட்டு இங்கு இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவில்லை. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம், கோவளம், திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் முதல் பழவேற்காடு வரையும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஹம்லா ஆபரேஷன் சோதனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. சட்டம் ஒழுங்கு போலீசார்  மற்றும் கடலோர காவல் படை, கியூ பிரிவு மற்றும் உளவுபிரிவு போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொள்கிறார்கள்.

கடலோர பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், படகுகள் கண்காணிப்பு, கோயில்கள், ஓட்டல்கள், ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்தது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இந்த சோதனை தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எஸ்.பி. தர்மராஜன் உத்தரவின் பேரில் சுமார் 300 போலீசார், கடலோர காவல்படையினர், இந்திய கப்பல்படை ஆகியோர் கூட்டாக இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் எஸ்.பிக்கள் தலைமையில் சுமார் 750 போலீசார் இந்த ஆபரேஷனில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மீனவர்களையும், மீனவ கிராம மக்களையும்அழைத்து கடற்கரை, அல்லது கடலில் புதிய நபர்கள் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். கடலில்  மர்ம பொருட்கள் மிதந்தால் அதுபற்றி போலீசுக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
புதுவையில் 18க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் போலீசார் மப்டி உடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு காவல் சரகத்தில் எஸ்பி பிரதீப்குமார் திரிபாதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ரங்கநாதன், வீரவல்லவன் தலைமையில் துப்பாக்கி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோரபடை போலீஸ் எஸ்பி வனிதா தலைமையில் கடலோரகாவல்படை, கடற்படை, மரைன் போலீசார், கியூ பிரிவு போலீசார் 300க்கும் மேற்பட்டோர் ஹம்லா ஒத்திகையில் ஈடுபட்டனர்.  கடலோர காவல்படை கமாண்டர் மோலே தலைமையில் ராமேஸ்வரம், சங்குமால், ஓலைக்குடா, பாம்பன், மண்டபம் வடக்கு, தெற்கு கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மீனவர்களின் படகுகளை மறித்து சோதனை நடத்தினர். சந்தேக நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை இரவு வரை நடைபெறும்.

வெடிகுண்டுகளுடன் 8 பேர் சிக்கினர்

ராமேஸ்வரம் கடலோர காவல்படை எஸ்ஐ கணேசன் தலைமையில் போலீசார், மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை சோதனை செய்தனர். மண்டபம் வடக்கு கடல் பகுதியில் ஒரு நாட்டுப்படகில் வெடிகுண்டுகளுடன் 8 பேர் சிக்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒத்திகைக்காக டம்மி வெடிகுண்டுகளுடன் பாதுகாப்பு படையினரே தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை, கமோண்டோ படையை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் போலீசார் நிம்மதியடைந்தனர். இதற்கிடையே, ராமேஸ்வரம் முழுவதும் 8 தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
tamil matrimony_INNER_468x60.gif

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது முக்கியமானது: வில்லியம் ஹெக்!

Thursday, October 31, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்தால், அது பொதுநலவாய அமைப்பு மீதான பாரிய அழுத்தமாக அமையும் என பிரித்தானியா குறிப்பிடுகின்றது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் நாடுகளின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வது முக்கியமானது என பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்றத்தில் உறையாற்றிய போது, வில்லியம் ஹெக் இதனை குறிப்பிட்டுள்ளாதாக பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, பிரித்தானியா மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென மொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் அலக்சான்டர் முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் வகையில் வில்லியம் ஹெக் இதனைக் கூறியுள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.13 வரை காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Thursday, October 31, 2013
இலங்கை::ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு வருகின்ற நவம்பர் 13ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 4 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
கச்சத்தீவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவலும் நவம்பர் 14ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் 32 பேரும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர்
 
tamil matrimony_INNER_468x60.gif

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் கோரிக்கை!

Thursday, October 31, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்வாரா இல்லையா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கு, இந்தியா அழுத்தம் பிரயோகித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவத்துள்ளார். கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணத்துடனும் இந்தியா உறவுகளைப் பேண வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளக் கூடாது: (கரடி புலி) கருணாநிதி!


Thursday, October 31, 2013
சென்னை::இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்துகொள்ளக்கூடாது என (கரடி புலி) கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கேள்வி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி :- தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி (புலிகளை) தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.

கேள்வி :- பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தியாவிலிருந்து சென்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டால்?

கலைஞர் :- இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல்லக் கூடாது என்று தான் பொருள்.

கேள்வி :- சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கேற்ப நீங்களும் அதனை ஆதரித்தீர்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அதனை ஆதரித்தார்களா..?
கருணாநிதி :- வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள்!

கேள்வி :- “டெசோ” அவசரமாகக் கூட்டப்படுமா?

கலைஞர்:- “டெசோ” கூட்டம் நடைபெற்றுத் தான் முதன் முதலில் இதற்கான தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அதை மீறித் தான் இப்போது காங்கிரஸ் கட்சி அல்லது பிரதமர் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி :- டெல்லியிலிருந்து வருகின்ற தகவல், காங்கிரஸ் கட்சியின் முடிவினை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ராஜினாமா செய்யப் போவதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- அதைப்பற்றி எனக்குத் தெரியாது. செய்தி வந்த பிறகு தான் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியும். என்று கருணாநிதி தெரிவித்தார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

பிரித்தானிய பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Thursday, October 31, 2013
இலங்கை::பிரித்தானிய பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச யுத்தக்குற்றச் செயல் விசாரணைகளை வலியுறுத்தி நிற்கும் தரப்பினர், பிரித்தனரிய பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாண விஜயத்தை பிழையாக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை புலி ஆதரவு தரப்பும், மனித உரிமை அமைப்புக்களும் பயன்படுத்திகொள்ளக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமன்றி வன்னியின் எந்தவொரு பகுதிக்கும் விஜயம் செய்ய முடியும் எனவும், அதனை வரவேற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை உள்ளி;ட்ட பல முக்கிய வெளிநாட்டுத் தலைவர்கள் யுத்த வலயத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான வெளிநாட்டுத் தலைவர்களின் வடக்கு கிழக்கு விஜயம், புலிகளுக்கு ஆதரவான தரப்பினரதும் ஊடகங்களினதும் போலிப் பிரச்சாரங்களை முறியடிக்க பாரியளவில் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையான கள நிலவரங்களை மக்களினால் புரிந்து கொள்ள வழியமைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் புலிபோராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு எவ்வாறு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் இதனை கவனிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டுத் தலைவர்கள் வடக்கின் கள நிலமைகளை நேரில் பார்வையிடுவது மிகவும் சிறந்த விடயம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

புலிகளுக்கு உதவிய கனடிய இலங்கை இளைஞருக்கு தண்டனை விதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம்: இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரிப்பு!

Thursday, October 31, 2013
வாஷிங்டன்::புலிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப மென்பொருள் கொள்வனவு, ஆயுதக் கொள்வனவு மற்றும் சட்டவிரோத நிதி திரட்டல் ஈடுபட்ட  ஸ்ரீஸ்கந்தராஜா.
 
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலங்கைத் தமிழரும் கனேடிய பிரஜையுமான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற இளைஞருக்கு தண்டனை விதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை அமெரிக்காவின் புருக்லைன் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  புலிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப மென்பொருள் கொள்வனவு, ஆயுதக் கொள்வனவு மற்றும் சட்டவிரோத நிதி திரட்டல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஸ்ரீஸ்கந்தராஜா மீது சுமத்தப்பட்டிருந்தது. தாம் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான சமாதானத்தை எட்டக் கூடிய வகையில் மெய்யான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஸ்ரீஸ்கந்தராஜா பகிரங்கமாக கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கடிதம் ஊடாக அமெரிக்க நீதிமன்றிடம் கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளதுடன், அவருக்கு இரண்டாண்டு காலத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 28ம் திகதி தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளித்தவர்களுக்கு அமெரிக்க சட்டத்தின் அடிப்படையில் பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் புலிகளுக்கு இவர் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் கவனத்திற் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாகவே ஸ்ரீஸ்கந்தராஜாவிற்கு குறைந்தபட்ச அதாவது இரண்டாண்டுகால தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
tamil matrimony_INNER_468x60.gif

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்­களையும் சொத்­துக்­க­ளையும் இழந்து பெற்ற வெற்­றி­யையும் பாது­காத்து வரும் நாட்­டி­னையும் புலிகள் ஆதரவு பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் கொடுக்க நாம் தயா­ரா­க­வில்லை: குண­தாச அம­ர­சே­கர!

Thursday, October 31, 2013
இலங்கை::நாட்டில் அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிங்­கள மக்­களே உள்­ளனர். சிங்­க­ள­வர்­களை பகைத்துக் கொண்டு அர­சாங்­கத்­தினால் எதையும் செய்­ய­மு­டி­யாது. நாட்டில் சமா­தா­னமும் அமை­தியும் நில­வ­வேண்டும் என்­ப­தற்­கா­கவே சிறு­பான்­மை­யி­னரை ஆத­ரித்துக் கொண்டு செயற்­ப­டு­கின்றோம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.
 
ஐக்­கிய தேசி­யக்­கட்சி சிறு­பான்­மை­யி­னரை ஆத­ரித்து ஆட்சி அமைக்­கலாம் என்ற நினைப்பில் செயற்­ப­டு­கின்­றது. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் வீழ்ச்­சிக்கும் அவர்­களின் அர்த்­த­மற்ற கொள்­கை­களே காரணம் எனவும் அந்த அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யது.
 
இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கருத்துத் தெரிக்­கையில்:-
 
இலங்­கையில் சிங்­கள மக்­களை பகைத்துக் கொண்டு எதிர்க்­கட்­சியால் அர­சாங்­கத்தை அமைக்­க­மு­டி­யாது. பெரும்­பான்­மை­யி­ன­மான சிங்­க­ள­வர்­களே இந்த நாட்டின் ஆட்­சி­யினை தீர்­மா­னிக்­கின்­றனர். இலங்­கையில் உள்ள சிறு­பான்மைக் கட்­சிகள் அனைத்­தையும் ஒன்­றி­ணைத்­தாலும் சிங்­கள மக்­களின் வாக்­குகள் அதி­க­மா­ன­தா­கவே உள்­ளன. இதனை புரிந்து கொண்­ட­தனால் தான் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் உறு­தி­யான ஒரு நிலையில் பல­மான ஆட்­சி­யினை அமைத்து அர­சாங்­கத்­தினை நடத்­து­கின்­றது.
 
எனினும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி சிறு­பான்மை மக்­களின் ஆத­ர­வினைப் பெற்று அவர்­க­ளி­­னூ­டாக ஆட்­சி­யினை அமைக்­கலாம் என நினைக்­கின்­றது. அதன் கார­ணத்­தி­னா­லேயே இன்று வடக்­கையும், வடக்கின் முத­ல­மைச்­சரைப் பற்­றியும் புக­ழாரம் சூட்டி வடக்கின் உரி­மை­களைப் பற்றி பேசிக் கொண்­டுள்­ளது.
 
இன்று வடக்கில் அமை­தியும் சமா­தா­னமும் நில­வு­கின்­றது. 30 வரு­டங்­க­ளாக இருந்த நிலைமை மாறி இன்று வடக்­கிலுள்ள அனைத்து மக்­களும் சுதந்­தி­ர­மாக செயற்­படும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எனினம் இதனை குழப்பி மீண்­டு­மொரு போர் சூழ­லினை உரு­வாக்­கவே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முயல்­கின்­றன.
 
உண்­மை­யி­லேயே இலங்கை இன்று அழுத்­தங்­களை சந்­திப்­ப­தற்கும் அன்று யுத்தம் ஒன்று ஏற்­ப­டு­வ­தற்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் புலிகள் ஆதரவு  தமிழ் பிரி­வி­னை­வாத கட்­சி­க­ளுமே கார­ண­மாகும். அப்­பாவி மக்­க­ளையும் சர்­வ­தேச சக்­தி­க­ளையும் குழப்பி நாட்டை பிரிப்­ப­தற்கு இவ் கட்­சிகள் துணை நிற்­கின்­றன.
 
பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்­களையும் சொத்­துக்­க­ளையும் இழந்து பெற்ற வெற்­றி­யையும் பாது­காத்து வரும் நாட்­டி­னையும் புலிகள் ஆதரவு பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் கொடுக்க நாம் தயா­ரா­க­வில்லை. யார் எவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் ஜனாதிபதியின் முடிவு இறுதியானது.
 
வடக்கில் இருந்து கொண்டு விக்கினேஸ்வரன் எதை குறிப்பிட்டாலும் எந்தக் கட்டளைகளை பிறப்பித்தாலும் மத்திய அரசாங்கம் செவிமடுக்கப் போவ­தில்லை. நாட்டிற்கும் மக்களுக்கும் எது சிறந்ததோ அதையே அரசாங்கம் செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

வட­மா­காண சபை வெளி­நாட்டுச் சக்­தி­களின் உத­வி­யுடன் தனி இராட்­சியம் நோக்கிச் செல்ல முயன்றால் வடமேல் மாகாண சபை அதற்கு எதி­ராக செயற்­படும்: வடமேல் மாகாண முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர!

Thursday, October 31, 2013
இலங்கை::வட­மா­காண சபை வெளி­நாட்டுச் சக்­தி­களின் உத­வி­யுடன் தனி இராட்­சியம் நோக்கிச் செல்ல முயன்றால் வடமேல் மாகாண சபை அதற்கு எதி­ராக செயற்­படும் என வடமேல் மாகாண முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். மாகாண சபையின் மாதாந்த அமர்வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
அவர் மேலும் கூறு­கையில்:-
 
வட­மா­காண சபையை உரு­வாக்­கி­யது ஜன­நா­யக ரீதியில் வெற்­றி­யாகும். அதேபோல் வடமேல் மாகாண சபையில் நாம் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வெற்றி கண்­டுள்ளோம். எதிர்­கா­லத்தில் எமக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
 
மாகாணம் முழு­வதும் கிரா­மிய மக்­களின் அபி­வி­ருத்தி தொடர்­பாக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். மக்கள் சேவையின் போது கட்­சி­பே­த­மில்­லாமல் செயற்­ப­ட­வேண்டும். அந்த வகையில் குரு­ணாகல் மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் ஒரே வித­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.
 
அனைத்து அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களும் மக்­க­ளுக்கு நன்மை பயப்­ப­தாக அமைய உறுப்­பி­னர்கள் ஒத்­து­ழைக்க வேண்டும். சுற்­று­லாத்­துறை கற்­பிட்டி பிர­தே­சத்தில் அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.
 
இதே­வேளை இப்­ப­கு­தியில் சிறு­நீ­ரக நோய் அதி­க­ரித்து வரு­வதால் அதைத் தடுத்து தூய குடிநீர் வழங்கும் திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.
 
இதே­வே­ளையில் இப்­ப­கு­தியில் விளை­யாட்­டுத்­து­றையை மேம்­ப­டுத்தி திட­மான சமு­தா­ய­மொன்று உரு­வாக்க வழி­ய­மைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பாட­சா­லையில் இருந்து விலகும் மாண­வர்­க­ளுக்கு தொழிற் பயிற்­சிகள் வழங்­கப்­படும். மேலும் காட்டு யானை­களை கட்­டுப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.
 
எதிர்க்­கட்சித் தலைவர் ஜே.சீ. அல­வத்­து­வல உரை­யாற்­று­கையில், மாகாண சபைகள் பய­னற்­றவை எனக்­கூ­று­வது மக்­க­ளுக்குச் செய்யும் அகெ­ள­ர­வ­மாகும், புதிய முதல்வர் வடமேல் மாகா­ணத்­திற்கு உரித்­தான கொள்­கை­களை உரு­வாக்க வேண்டும். 25 வருட கால வர­லாற்றைக் கொண்ட வடமேல் மாகாண சபைக்கு போதிய கொள்கைச் சாச­னங்கள் இல்­லாமை கவ­லைக்­கு­ரி­யது. எதிர்க்­கட்சி என்ற வகையில் மக்­க­ளுக்கு நன்மை பயக்கும் திட்­டங்­களை நாம் வர­வேற்போம்.
 
வடமேல் மாகாண கல்­வித்­து­றையில் பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. சுகா­தா­ரத்­துறை சீர­ழிந்து போயுள்­ளது. 75 வீத­மான மக்கள் விவ­சா­யத்தை நம்பி வாழ்­கின்­றனர். ஆனால் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. விவ­சாய ஓய்­வூ­தியம் தொடர்­பாக கவ­ன­மெ­டுக்­க­வேண்டும். சிறு­கைத்­தொழில் அபி­வி­ருத்தி செய்ய வேண்டும். சிறு­நீ­ரக நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
வடமேல் மாகாண அபிவிருத்தி தொடர்பாக வடமேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களே தீர்மானம் எடுக்க வேண்டும். ஏனையவர்கள் தலையிடுவதை தடுக்க புதிய வடமேல் மாகாண முதல்வர் முன் வரவேண்டும் என்றார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!

Thursday, October 31, 2013
இலங்கை::மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் மனித உரிமை நிலைமைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் (புலி)

பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய ஏற்கனவே இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் கமரூனின் யாழ்ப்பாண விஜயத்திற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்த போதிலும் வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சில வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

அன்று புலிகளினால் துப்­பாக்கி முனையில் விரட்­டப்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இன்று வரை ஆத­ரவு கிடைக்­க­வில்லை: விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் நாடகமாடாது முஸ்லிம்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்!

Thursday, October 31, 2013
இலங்கை::புலிகளினால் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்­களை வெளி­யேற்­றி­ய­மைக்கு வடக்குத் தமி­ழர்­களும் பொறுப்புக் கூற வேண்டும். அன்று துப்­பாக்கி முனையில் புலிகளினால் விரட்­டப்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இன்று வரை ஆத­ரவு கிடைக்­க­வில்லை.
 
விக்கி­னேஸ்­வ­ரனும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் நாட­க­மா­டாது முஸ்லிம் மக்­களின் நிலங்­களை உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்டும் என்று முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
பிர­பா­க­ரனால் முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றன. இதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் மேற்­கொள்­ள­வுள்ளோம் எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
செள­சி­ரி­பா­யவில் நேற்று முன்­தி­னம் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்­தனர்.
 
இது தொடர்­பாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் அர­சியல் குழுத் தலை­வ­ரு­மான மொஹமட் முசம்மில் கருத்துத் தெரி­விக்­கையில்,
 
வடக்கில் இருந்த அப்­பாவி முஸ்லிம் மக்கள்  புலி­க­ளினால் வெளி­யேற்­றப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றது. அன்று ஆயு­த­மு­ணையில் அப்­பாவி மக்­களை வெறும் 500 ரூபா­வுடன் விரட்­டினர். முஸ்லிம் பெண்­க­ளையும் வய­தா­ன­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி அவர்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்து ஒரு அரா­ஜ­க­மான செயலே அன்று பிர­பா­கரன் செய்தார். பின்னர் இலங்கை இரா­ணு­வத்­தினர்  அர­சாங்­கத்­துடன் சேர்ந்து செய்­து­மு­டித்த யுத்த வெற்­றி­யோடு நாட்டில் இருந்த தீவி­ர­வாதம் முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
 
எனினும் தற்­போது வட மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் முஸ்லிம் மக்­களை ஆத­ரிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர்.
 
வடக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் வாழ்­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதனை குழப்பும் வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் செயற்­ப­டக்­கூ­டாது விக்­கினேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் பொய்­யான கருத்­துக்­களை கூறி மக்­களை ஏமாற்­றாது குறித்த கால எல்­லைக்குள் முஸ்லிம் மக்­களை குடி­ய­மர்த்த வேண்டும்.
 
புலி­க­ளினால் அப­க­ரிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­களின் நிலங்­களை மீண்டும் அம் மக்­க­ளுக்கே ஒப்­ப­டைக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பினர் மெள­லவி எம். எப். பாரூக் தெரி­விக்­கையில்,
 
நாம் சகோ­த­ரத்­து­வத்­துடன் இலங்­கையில் அனைத்துப் பகு­தி­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்றோம். இதே நிலைமை வடக்­கிலும் ஏற்­பட வேண்டும். இலங்­கையில் வாழும் முஸ்லிம் மக்­களில் மூன்றில் இரண்டு பகு­தி­யினர் சிங்­கள மக்­க­ளு­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­தாலும் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யினை வாழ­வில்லை.
 
இன்று 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான முஸ்லிம் குடும்­பங்கள் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். இதற்கு தமிழ் மக்கள் பெறுப்­புக்­கூற வேண்டும். இன்று வடக்கில் வாழும் தமி­ழர்கள் முஸ்லிம் மக்­களை ஆத­ரித்து அவர்­களின் இடங்­களை ஒப்­ப­டைக்க அர­சாங்கம் உதவி செய்ய வேண்டும். தமிழர் சிங்­க­ள­வர்­களைப் போல் முஸ்லிம் மக்கள் யுத்­தத்­தினை விரும்­பு­வ­தில்லை அவர்கள் அனைத்து இனத்­த­வர்­களும் இணைந்து அமை­தி­யாக வாழ எப்­போதும் நினைப்­ப­வர்கள். இதனை வடக்கில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
எமக்கு கிடைக்க வேண்­டிய உரி­மை­க­ளுக்­காக நாம் தொடர்ந்தும் போரா­டுவோம். எமக்கு வடக்கு, கிழக்கு இணைப்­பினை விடவும் முஸ்லிம் மக்­களின் உரி­மை­களே முக்­கி­ய­மா­னது. அதை புரிந்து கொண்டு அர­சாங்­கமும் வடக்கின் கட்­சி­களும் செயற்­பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டிவிட்டமைக்கும் வடக்கில் மீண்டும் மக்களை குடியமர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
tamil matrimony_INNER_468x60.gif

கொழும்பில் காமன் வெல்த் மாநாடு: பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க அனுமதி- காங். உயர்மட்ட குழுவில் முடிவு!!

Thursday, October 31, 2013
புதுடெல்லி:காமன்வெல்த் அமைப்பில் மொத்தம் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கிலாந்து ராணியை தலைவராக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் கூடி நடைபெறும்.

1971–ம் ஆண்டு முதல் காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகள் இப்படி ஒன்று கூடி தங்களுக்குள் பல்வேறு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு பற்றி விவாதித்து வருகின்றன. இந்தியாவில் 1983–ம் ஆண்டு இந்த மாநாடு நடந்தது.

அந்த வரிசையில் காமன் வெல்த் அமைப்பின் 23–வது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 10–ந்தேதி தொடங்கி 17–ந்தேதி வரை நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையில் இந்த மாநாடு நடக்கிறது. 50–க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வருவதால் இந்த மாநாட்டுக்கு இலங்கை பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்துள்ளது.

கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது. அந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். அதோடு காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்’’ என்று புலிகளின் ஆதரவினர்களால் கூறப்பட்டிருந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் புலிகளின் ஆதரவு தலைவர்களின் வேண்டுகோள்களை மத்திய அரசு கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி எதுவும் தகவல் வெளியிடாமல் பிரதமர் மன்மோகன்சிங் வழக்கம் போல் மவுனமாக இருந்தார். இதற்கிடையே வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் தனது இலங்கை பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தார்.
அப்போதே புலிகள் ஆதரவு தமிழர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அதில் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா அவசியம் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

எனவே பிரதமர் மன் மோகன்சிங் நவம்பர் இரண்டாவது வாரம் இலங்கை செல்கிறார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை தடுக்க, வேண்டுமானால் கொழும்பு மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தால்தான் இலங்கை தமிழர்களுக்கு மேம்பாட்டு பணிகள் செய்வதை உறுதிப்படுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். எனவே இந்த சர்ச்சையில் தமிழ்நாட்டு புலிகள் ஆதரவு  கோரிக்கையை ஓரம் கட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்து விட்டனர்.

சமீபத்தில் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர், ‘‘கொழும்பு மாநாட்டில் பங்கேற்கா விட்டால், இந்தியா தனிமைப் படுத்தப்பட்டு விடும்’’ என்றார்.
tamil matrimony_INNER_468x60.gif
 

எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது!

Thursday, October 31, 2013
தூத்துக்குடி::எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கன்னியாகுமரி கடற்பரப்பில் தென்பகுதியில்  4 படகுகளில் 24 இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் கடலோர காவல்படைக்குத் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடந்து 24 இலங்கை மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
 
கன்னியாகுமரி கடல் பகுதியில் 90 கடல் மைல் தொலைவில் கடலோர காவல் படைக்கு சொந்தமான "வைபவ்' கப்பல் கமாண்டன்ட் சஞ்சீவ் திர்க்கா தலைமையில் ரோந்து பணியில் இருந்தது.
 
நேற்று காலை 8 மணியளவில், இலங்கையை சேர்ந்த 4 படகுகளில், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த, 24 மீனவர்களையும் சுற்றி வளைத்து, கடலோர காவல் படையினர் பிடித்தனர்.
 
இதே போல் அக்., 9 ல் கன்னியாகுமரி கடலில், வடகிழக்கு பகுதியில் இந்திய எல்லையில் மீன் பிடித்த 4 படகுகள், 26 மீனவர்கள் பிடிபட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இலங்கையை சேர்ந்த 8 படகுகள், 50 மீனவர்களை கடலோர காவல் படையினர் பிடித்துள்ளனர்.
tamil matrimony_INNER_468x60.gif
 

தமது நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலுள்ள தமிழக மாநில அரசாங்கமே இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது: மொஹான் சமரநாயக்க!

Thursday, October 31, 2013
இலங்கை::தமது நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலுள்ள தமிழக மாநில அரசாங்கமே இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது என ஜனாதிபதியின் பேச்சாளரும் சிரேஷ்ட அரசியல் அவதானியுமான கலாநிதி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
 
இதனை ஆயுதமாக்கிக் கொண்டே இந்தியப் பிரதமர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதை தடை செய்ய தமிழ்நாடு அழுத்தங்களைப் பிரயோ கிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.எவ்வாறெனினும் இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளா விடில் அது இந்தியாவுக்கு துரதிஷ்ட மாக அமைவதுடன் பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற பாரிய அமைப்புகளின் ஆதரவும் இந்தியா வுக்கு அற்றுப் போகும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
 
கலாநிதி மொஹான் சமரநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டி யில் மேலும் குறிப்பிடுகையில்:-
 
இந்தியாவின் அரசியல் வித்தியாச மானதும் சிக்கலானதுமாகும். எதிர்ப் புகள் பெருமளவில் உள்ள அரசியலாகும். ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர் எந்தவொரு கட்சிக்கும் தனியே அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு மாநில அரசுகளின் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.தமிழ்நாடு 44 தொகுதிகள் பலத்துடன் மத்திய அரசின் முக்கிய பங்காளியாக உள்ளது. இங்கு உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் உள்ளன. பல்வேறு சிக்கலுக்குட்பட்டுள்ளது. மக்கள் உணர்வு பூர்வமாகச் செயற்படும் நிலையும் உள்ளது.தமிழ் நாட்டிற்குள் பாரிய பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் இலங்கை தமிழர்கள் பற்றி நீளக் கண்ணீர் வடித்தபோதும் தமிழ்நாட்டு மக்கள் வசதிகளின்றி பட்டினியுடன் வாழும் நிலையே பல பகுதிகளில் உள்ளது. மலசல கூடம் இல்லாத மக்கள் பெருந்தொகையில் உள்ளனர்.
 
இதுபோன்ற நாட்டின் தலைவர் அயல் நாட்டு மக்களின் பிரச்சினையை மேலெழுப்புவது தமது மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணமே. தி.மு.கவும், அ. தி.மு.கவும் மக்களை ஏமாற்றியே அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகின்றன.மக்கள் பிரச்சினையை விடுத்து வேறு பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்தினால் மட்டுமே தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற கொள்கையிலேயே இக்கட்சிகள் இயங்குகின்றன. இதனையே இந்தியப் பிரதமர் இலங்கை மாநாட்டுக்கு வருவதைத் தடுக்க தமிழ்நாடு உபயோகப்படுத்துகிறது. இது இந்தியாவுக்கு துரதிஷ்டமானது. சமாதானம் அமைதிக்கும் பங்கமாக அமையும். பொதுநலவாய நாடுகள் அமைஎனவும் அவர் தெரிவித்தார்.
tamil matrimony_INNER_468x60.gif

பயமுறுத்தும் பணவீக்கத்தால் காத்திருக்கு அபாயம்: இந்தியா - சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 'திடுக்'!!

Thursday, October 31, 2013
சென்னை::இந்தியா, சீனாவைச் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிப்பதற்கு திட்டமிடுவதில்லை. பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில், நீண்ட கால நோக்குடன் முதலீடு செய்யாமல், குறுகிய கால திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இது, சர்வதேச தொழில் சேவை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஓய்வு பெற ஆசை:

 பொருளாதார வளர்ச்சியில், இந்தியா - சீனா இடையே போட்டி நிலவுகிறது. ஆனால், இரு நாடுகளிலும் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள், தொழிலாளர்கள், தங்கள் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை சேமிப்பதில், போதிய கவனம் செலுத்தாமல் உள்ளனர். அன்றாட வாழ்க்கையில், எதிர்பார்ப்புகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில், பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஓய்வு காலத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதலீடுகளை அமைத்து கொள்வதில், ஊழியர்கள் திட்டமிடுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, 'டவர்ஸ் வாட்சன்' நிறுவனம், இந்தியா, சீனாவில், நகர்ப்புறங்களில் அமைந்துள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலிருந்து, ஒன்றிரண்டு பேரை தேர்ந்தெடுத்தது. பல நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களிடம், முதலீடு செய்யும் பழக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து, ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரம் வருமாறு:

* சீனாவில், 90 சதவீதத்தினரும், இந்தியாவில், 80 சதவீதத்தினரும், 60 வயதுக்குள் அல்லது அதற்கும் குறைவாக ஓய்வு பெறலாம் என, எதிர்பார்க்கின்றனர். இதற்கு பின், தங்களின் வாங்கும் திறன் குறையும் என, கருதுகின்றனர்.

* இந்தியாவை பொறுத்தமட்டில், பெரும்பாலானவர்களின் முதலீடு, தங்கம் மற்றும் வெள்ளியில் தான் உள்ளது. 41 சதவீதம் பேர், முதலீடு என்ற பெயரில், நகைகளை வாங்குகின்றனர்.

* சீனாவில் பெரும்பாலானவர்களின் முதலீடு வங்கி டெபாசிட்டாக உள்ளது. 83 சதவீதத்தினர், வங்கிகளில் டெபாசிட் செய்வதை பாதுகாப்பாக நினைக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக, மியூச்சுவல் பண்ட், பென்ஷன் திட்டங்கள், இன்சூரன்ஸ், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

* மேற்கொள்ளப்படும் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி, பணவீக்கத்தின் தாக்கத்திற்கு ஏற்ப, ஓய்வு காலத்தில் மறைந்துள்ள, சவால்களை ஈடுகட்டும் வகையில் இல்லை.

* வீட்டு வசதி, குழந்தைகளின் எதிர்கால தேவைகளை சமாளிப்பது சவாலாக இருக்கும் என, 75 சதவீதம் பேர் ஒப்புக் கொள்கின்றனர்.

* இந்த ஆய்வு, இந்தியாவில், 2,440 பேரிடமும், சீனாவில், 2,261 பேரிடமும் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பெரும்பகுதியினரின் சராசரி வயது, 33.

* ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் பணவீக்கம், ஓய்வு பெறும் காலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதலீடுகளை அமைத்து கொள்ளாமல், குறுகிய கால முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றனர்.

விழிப்புணர்வு தேவை

* ஓய்வு காலத்தை திட்டமிடுவதற்கு தயார்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் அவசியம் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வு கால பலன் அளிக்கும் திட்டங்களை, கட்டாயமாக்குவது அவசியமாகும்.

* தேசிய பென்ஷன் திட்டம் ஊழியர்களை கவர்வதாக உள்ளது.

tamil matrimony_INNER_468x60.gif