Thursday, November 15, 2018

நாடாளுமன்றில் தற்போது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது!

நாடாளுமன்றில் தற்போது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல்.. பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி. இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜேவிபி ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Saturday, November 10, 2018

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். பிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரச துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்த ஆராயப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை மீளப் பெற்றுக்கொடுத்தல், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு கொள்கை ஒன்றை தயாரித்தல் மற்றும் தேசிய வேதனக் கொள்கையை பாதுகாக்கும் அடிப்படை வேதன முறைமையை ஏற்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 6, 2018

அபிவிருத்திக்காவும் மக்கள் நலன்களுக்காகவும் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ


ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்ட பேரணியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 3 வருடங்களும் 10 வருடங்களும் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் எனவும் நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காக கடமையாற்றப் போவதாகவும், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Sunday, November 4, 2018


http://lankatime.over-blog.com

                                                
                                          Lankatime.over-blog.com

மஹிந்த ராஜபக்ஷ வெள்ளவத்தை கதிரையன் ஆலயத்தில் மத விழாக்களில் கலந்து கொண்டார்

 மஹிந்த ராஜபக்ஷ வெள்ளவத்தை கதிரையன் ஆலயத்தில் மத விழாக்களில் கலந்து கொண்டார்

Saturday, November 3, 2018

நாடே எதிர்ப்பார்த்துள்ள நாடாளுமன்ற பெரும்பான்மை தொடர்பில் கோட்டாவின் அதிரடி அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நிலையத்தில நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியையும், பிரதமரையும் பிரதிநிதித்துவப்படுத்தி, குறித்த சந்திப்பில் தாம் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது தற்போதைய நிலைமையை மேலும் பிரச்சினைக்குரிய நிலைமைக்கு கொண்டு செல்லாமல் தீர்ப்பது குறித்தும், அலரி மாளிகை தொடர்பிலும், ரணில் விக்கிரமசிங்வின் பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாடியதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

lankatime.over-blog.com

                                               lankatime.over-blog.com

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கதிர்காமம் ஆலயத்தில் வழிபாடு!


பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவி ஏற்ற பின்னர் நேற்று காலை கதிர்காமம் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

கிரிவெஹேர விகாரையில் வாழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கதிர்காமம் ஆலயத்திற்கு பிரதமர் வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, பழ பூஜையினை மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

http://poonththalir.over-blog.com

                                            poonththalir.over-blog.com

ஐ.தே.கட்சி கட்சி பெரும்பான்மையை காட்ட வேண்டிய இடம் இங்குதான்

ஐ.தே.கட்சி கட்சி பெரும்பான்மையை காட்ட வேண்டிய இடம் இங்குதான் - கெஹலிய ரம்புக்வெல்ல ,
 
ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை காட்ட வேண்டியது குழு கூட்ட அறையில் அல்ல, நாடாளுமன்றத்திலே என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.