Wednesday, December 7, 2016

சுப்ரமணியன் சுவாமி பேட்டி; அ.தி.மு.க. நிச்சயம் உடையும்!

தமிழக முதல்வர்  ஜெயலலிதா இறந்து ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் ‘அதிமுக’ வை உடைக்க பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சதி செய்வதாக சொல்லப்படுகிறது

உடல்நிலைக் குறைபாடு காரணமாக திங்கட்கிழமை இரவு தமிழக முதல்வர்  ஜெயலலிதா உயிரிழந்தார். இதனால் அதிமுக-வில் பெரும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அ.தி.மு.க கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-
 
அ.இ.அ.தி.மு.க. ஒரே கட்சியாக இருக்காது. சசிகலா நடராஜன் அந்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக இருக்க விடமாட்டார்.
 
தன்னுடைய குடும்பத்தில் இருந்து பன்னீர் செல்வம் இடத்திற்கு ஒருவரை கொண்டு வருவார்.
பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் எந்தவித அடித்தளமும் இல்லை. அதேபோல் சசிகலாவிற்கும் எந்தவொரு அரசியல் புத்திசாலித்தனமும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரபல காமடி நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி காலமானார்!

பிரபல காமடி நடிகரும், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) இன்று (புதன்கிழமை) காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

திரைப்படங்களில் காமடி நடிகராக அறிமுகமாகி திரைப்படத்துறையில் நிறைய நண்பர்களை பெற்று இருந்தார்.தன்னை அரசியல் விமர்சகராக நிலைநிறுத்திக்கொன்டாலும் பாஜக சார்பு, குறிப்பாக ஆர் எஸ் எஸ் வட்டாரங்களில் இவருக்கு தேசிய அளவில் நண்பர்கள் உண்டு. நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா மறைவு: திமுக தலைவர் கருணாநிதி, மு.க ஸ்டாலின் இரங்கல்!

ஜெயலலிதா மறைவையொட்டி திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர்  ஜெயலலிதாவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழக தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்கள் உள்ளட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், “உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சில நாளில் வீடு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் சிகிச்சை அளித்தும், அரசியல் கட்சி தலைவர்கள், லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தாய்மார்கள் வாழ்த்தியதற்கு மாறாகவும், ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று செய்திக் கேட்டு வருந்துகிறேன்.
கட்சி ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அவரது கட்சி நலனுக்காக பல துணிச்சலான காரியங்களை ஆற்றியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.குறைந்த வயதில் இறந்துவிட்டார் என்ற போதும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவரது கட்சி முன்னணியினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறியுள்ளார்
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தனது இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-  பெண் அரசியல்வாதியாக வியக்க வைக்க தலைவர் ஜெயலலிதா. அவரது போராட்ட குணங்களை கண்டு வியக்கிறேன். அதிமுக தொண்டர்களிடம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்...
 
பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.  அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
ஆயுதம்  தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது.  ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது.  காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும்  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்
* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.
* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அஞ்சலி
* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு  நடிகர் பிரபு, விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தினர்
* மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த கேரள ஆளுனர் சதாசிவம், கேரள் முதல்வர் பிரணாய் விஜயன் சென்னை வருகை,
* மத்திய அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு,கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், அரசு விழாக்களை ரத்து செய்ய உத்தரவு
* கேரள,கர்நாடக, புதுச்சேரி, உத்தரகாண்ட் , பீகார் மாநில அரசு சார்பில்  ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
* திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து
* ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ஒரு நாள் ரத்து
* மறைந்த ஜெயலலிதா உடலுக்கு  திராவிட கழக தலைவர் கீ. வீரமணி அஞ்சலி
* ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈ,வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு  நடிகர்கள் மன்சூர் அலிகான்,ராதாரவி அஞ்சலில் செலுத்தினர்
* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்
* இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
‘அமெரிக்கா-இந்தியா இடையிலான நெருங்கிய உறவுகளை ஆதரித்ததுடன் தமிழ்நாட்டுக்காக பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்தவர் என்ற முறையில் ஜெயலலிதா     நினைவுகூரப்படுவார்.இந்த துயரமான நேரத்தில் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனையும் தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஜெயலலிதா மறைவுக்கு  7 நாட்கள் தமிழக அரசு துக்கம் அனுசரிப்பு; 3 நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை
* ஜெயலலிதாவின் உடலுக்கு  கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.சந்தியாவுக்கு மகளாக பிறந்து இந்தியாவின் மகளாக மறைந்த ஜெயலலிதா – கவிஞர் வைரமுத்து புகழாரம்
* நடிகர்கள் சங்கம் சார்பில் கார்த்தி,நாசர், பொன்வண்னன், ஒய்.ஜி மகேந்திரன் கோவை சரளா, சத்யராஜ, மனோபாலா,ஸ்ரீமான்,ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகைகள் கவுதமி, விந்தியா அஞ்சலி செலுத்தினர்.
* தி.மு.க பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஆறுதல் கூறினார்.ஜெயலலிதா எந்த பொறுப்பேற்றாலும் அதில் தனி முத்திரை பதிக்க கூடியவர் என பாராட்டு தெரிவித்தார். அ.தி.மு.க நிர்வாகிகள் தொஇண்டர்களுக்கு ஆழ்ந்த் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். என கூறினார்.
*  விடுதலை சிறுத்தைகள் தலைவர் .தொல்.திருமா வளவன் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார்.  புதிய முதல்வராக பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 15 அமைச்சர்க

இதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரவு 10.30 மணியளவில் நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்க உள்ளார். முன்னதாக ஏற்கனவே பன்னீர் செல்வம் இரண்டு முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
அப்பல்லோ மருத்துவமனை சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல், மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கிரிட்டிக்கல் கேர் யூனிட் பிரிவில் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் தேறி சாதாரணமாக வாய்மூலம் உணவு உட்கொள்ளும் அளவிற்கு முன்னேறினார். இதன் அடிப்படை
யில் அவர் கிரிட்டிக்கல் கேர் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார்.
 
அங்கும் அவருக்கு சிறந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை நன்கு தேறி வந்தது.
துரதிஷ்டவசமாக டிசம்பர் 4ம் தேதி மாலை அவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் இன்டென்சிவ் கேர் பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. உலக அளவில் அளிக்கப்படும் ஒரு சிறந்த சிகிச்சைதான் எக்மோ சிகிச்சை அவருடைய உயிரை காப்பாற்ற இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அவர்கள் உடல் நிலை மிகவும் மோசமடைந்து 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது...
 
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வும் அரசியலும்!!
 

தமிழக முதல்வர்  ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள  மாண்டியா மாவட்டத்தில், பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் ஜெயராம் – வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார்.
jeya4

பெங்களூரில் ஜெயலலிதா பிஷப் கார்ட்டன் பெண்கள் உயர்நிலைப்  பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்..
jeya-3

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
1981ல் அ.தி.முக. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். எம் ஜி ஆரின்  மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயல்லிதா அணி என் இரண்டாக பிரிந்தது. தேர்தல் தோல்விக்கு பின் 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
 
இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.  2016 இல் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். எம் ஜி ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார்.
jeya-5

1991 முதல் 1996 வரையிலான  ஆட்சியின் மீது பல  ஊழல் வழக்குகளும், வளர்ப்பு மகன் திருமணம் என குற்றசாட்டுகளும் முன் வைக்கப்பட்டன,  அதற்கான வழக்குகளை அவர் இன்னும் எதிர்கொள்கிறார்.
கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும், அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர்.
 
ஜெயலலிதா முதல் முறையாக  தமிழக முதல்வராக இருந்த (1991-1996) போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது. அதேபோல  1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
jeya-2

தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின சதவிகிதம் 2011 ஆம் ஆண்டில் 946 ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதங்கள் அதிகரித்துள்ளது.
 
2011 ஆம் ஆண்டு மிண்டும் ஜெயல்லிதா முதல்வராக வந்த பின்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
2004 ஆம் ஆண்டு  நவம்பர் 11 ஆம் தேதி  ஜெயலலிதா  முதல்வராகவும் காவல்துறை அமைச்சராகவும் இருந்த போது இந்தியாவின் எல்லா  அதிகார மையங்களோடு குடியரசு தலைவர் அமைச்சர்கள் வரை வந்து சந்தித்து செல்லும் அதிகாரோத்தோடு இருந்த காஞ்சுபுரம் ஜெயேந்திரை  சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்தது  மிக துணிச்சலான  முடிவாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து இடஒதிக்கீட்டிற்கான போராட்டங்கள் நடத்தி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவித இடஒதிக்கீடு இருக்கிறது.
 
50 சதவித்திற்கு மேல் இட ஒதிக்கீடு  இருக்ககூடாது என  உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொண்டு வந்தபோது   69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாத்திட 1993 ஆம் ஆண்டு, ஜெயலலிதா அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தின் 31சி பிரிவின் கீழ் சட்டம் கொண்டு வந்தது. பின்னர் மத்திய அரசு இதனை அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்து இதுவும் இவரின் அரசியல் வாழ்வில் முக்கியமானதாக  கருதப்படுகிறது.
 
செப்., 22 முதல் டிச., 5 வரை...

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று (டிச.,4) மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா செப்., 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை மேற்கொண்ட சிகிச்சை விபரங்களை இங்கு பார்ப்போம்:
ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை...
2016 செப்., 22; காய்ச்சல், நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
2016 செப்., 23: முதல் மருத்துவ அறிக்கையை அப்பல்லோ வெளியி்ட்டது. உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்.
செப்., 24: சாதாரண உணவுகளை ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல்.
செப்., 25: ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
செப்., 27 : காவிரி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் உடன் நடந்ததாக தகவல் வெளியீடு.
செப்., 29: ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
அக்., 2: லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.
அக்., 3: ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.
அக்., 4: ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.
அக்., 6: டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வந்து லண்டன் டாக்டர், அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.
அக்., 8: நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை.
அக்., 10: சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதே நாளில், டில்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் அப்பல்லோ வந்தனர்.
அக்., 21: தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.
நவ., 14: அ.தி.மு.க., மூத்த உறுப்பினர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு, அவரது மகனிடம் ஜெ., தொலைபேசியில் இரங்கல் தெரிவி்ததார்.
நவ., 19: தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.
நவ., 22: மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து ஜெ., மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
டிச., 4: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை .வெளியீடு.
டிச., 5: ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துமனை அறிக்கை.
டிச., 5:முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
 

Sunday, December 4, 2016

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க செல்வோம்: மீனவர்கள் ஆவேசம்!

ராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தடையை மீறி படகில் செல்வோம்' என, மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் பழைய சர்ச் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.
 
இதன் திறப்பு, ஆர்ச்சிப்பு விழா வரும், 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசு அழைப்பு விடுக்க வில்-லை. இந்நிலையில், கச்சத்தீவு ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தமிழக மீனவர்களுக்கு அனுமதி கோரி, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இலங்கையில் உள்ள மீ
னவர்களை அனுமதிக்காத நிலையில், தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
 
இது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ராமேஸ்வரம் பாதிரியார் உட்பட நான்கு பேருக்கு, கச்சத்தீவு சர்ச் விழாவில் பங்கேற்க, இலங்கை பாதிரியார் ஜோசப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்க பாதிரியார் மற்றும் மீனவர்கள் மறுத்துவிட்டனர்.
இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில், ''கச்சத்தீவு சர்ச் விழாவில் இருநாட்டு மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. தடையை மீறி, ராமேஸ்வரத்தில் இருந்து, மூன்று படகுகளில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உட்பட, 105 பேர், கச்சதீவு செல்வோம்,'' என்றார்.

Saturday, December 3, 2016

டிரம்ப் குடும்பத்துக்கு ஒரு நாள் பாதுகாப்பு செலவு 1 மில்லியன் டாலர்!

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு
மட்டும் 6 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரத்து 450 ரூபாய். ( 1மில்லியன் டாலர்) ஆகிறது.
 
நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகரில் உள்ள டிரம்ப் டவருக்கு ஆகும் பாதுகாப்பு செலவை அமெரிக்க அரசே ஏற்க வேண்டும் என நியூயார்க் மேயர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் அழைப்பில் உத்தியோகபூர்வ தன்மை இல்லை: தினேஸ் குணவர்த்தன!

 தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான வட்ட மேசை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்துள்ளதன் உத்தியோகப்பூர்வ தன்மை தொடர்பில் சந்தேகம் உள்ளது என கூட்டு எதிர்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்பிரச்சினைக்கு வருமாறு அழைத்துள்ளதாக கூறுகின்றீர்கள். அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு எமக்கு கிடைக்வில்லை. அழைத்துள்ளார் என்றால் நாங்கள் எங்கே செல்வது. கொழும்பிற்கா? அதிகாரத்தில் நாங்கள் இல்லை . பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே உள்ளனர்.
 
 அதே போன்று அரசியலமைப்பு சபை ஒன்றுள்ளது. ஆனால் எவ்விதமான தெளிவற்றதும் உத்தியோகப்பூர்வமற்றதுமான அறிவிப்புகள் மற்றும் அழைப்புகளை மையப்படுத்தி எம்மால் செயற்படவோ பதிலளிக்கவோ முடியாது. பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பதாயின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிகழச்சி நிரல் காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

வெடித்து சிதறிய ரஷ்ய விண்கலம்!

மாஸ்கோ: சர்வதேச விண்வெளி மையத்துக்கு, நேற்று ஏவப்பட்ட ரஷ்யாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் வெடித்துச் சிதறியது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இது பூமியில் இருந்து சுமார் 28 ஆயிரம் கி.மீ., உயரத்தில் விண்வெளியின்
மேற்பரப்பில் அமைந்துள்ளது.
 
 இங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக விண்வெளி வீரர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இதற்காக அங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள்-, வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது அங்கு 6 வீரர்கள் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கஜகஸ்தான் நாட்டின் பைக்கானுார் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவுக்கு சொந்தமான விண்கலம் மூலம் அனுப்பப்படுகிறது.
 
இந்நிலையில் 2.4 டன் எடை கொண்ட உணவு, தண்ணீர், எரிபொருள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் 'MS-04' என்ற விண்கலம், சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த விண்கலம் புறப்பட்ட 6 நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க விண்வெளி மையமான 'நாசா' தெரிவித்துள்ளது.