Wednesday, August 31, 2011

ஹப்புதளை இரட்டை கொலை – 22 பேர் சரண்!

Wednesday,August,31,2011
ஹப்புத்தளை – தொட்டலாகலை தோட்டத்தில் இடம்பெற்ற இரட்டைகொலை தொடர்பில், மேலும் 22 பேர் காவற்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

இது தொடர்பில் ஏற்கனவே ஐந்து பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கிறீஸ் மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில், எல்லை – கும்பல்வெல பிரதேசத்தை சேர்ந்த இருவர் கடந்த 11ம் திகதி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

இந்த நிலையில் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும், கடந்த 27ம் திகதி பண்டாரவளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களை அடுத்த மாதம் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் 22 பேர் இந்த கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 10கத்திகள் மற்றும் ஒரு கோடரியுடன், சட்டத்தரணி ஒருவரின் ஊடாக சரணடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளின் தேர்தல்கள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன!

Wednesday,August,31,2011
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளின் தேர்தல்கள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு சுமனசிறி தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளின் காரணமாக, தொடர்ந்தும் அந்த பிரதேச மக்கள் குடியேற்றப்படாமல் உள்ளனர்.

இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு தேர்தலை நடத்த முடியுமான என தேர்தல்கள் ஆணையாளர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் இருந்து அறிக்கை ஒன்றை கோரி இருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜிவ் சிலைகள் அவமதிப்பு அண்ணா சாலையில் காங்கிரசார் மறியல்!

Wednesday,August,31,2011
சென்னை : சைதாப்பேட்டை சின்னமலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து சென்றுள்ளனர். வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலை மீதும் தார் பூசியுள்ளனர். இதனால், காங்கிரசார் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட சென்றனர். ஆனால் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். பின்னர் ராஜீவ் காந்தி சிலையில் இருந்த செருப்புகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த காங்கிரசார், காமராஜர் அரங்கம் முன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காங்கிரசார் அருகில் இருந்த தடுப்புவேலிகளை நடுரோட்டில் அடுக்கி வைத்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தினர். இதையடுத்து, கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ராஜீவ் காந்தி சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

வேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் கண்காணிப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன விதிகள் தளர்வு!

Wednesday,August,31,2011
வேலூர்: வேலூர் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற 8 வாரத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதால் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதையடுத்து, செப்டம்பர் 9ம் தேதி மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, சிறைக்குள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டது. சிறை விதிகளின்படி தூக்கு தண்டனை கைதிகள் தனி அறையில் அடைக்கப்பட்டனர்.

3 பேரையும் சிறைக் காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்தனர். மூவரையும் சந்திக்க வரும் பார்வையாளர்கள் பேசும் போதும் சிறை காவலர்கள் உடனிருந்தனர். சிறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தினமும் மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். விடுமுறை நாட்களிலும் தூக்கு தண்டனை கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்கவும், சிறப்பு உணவுகள் வழங்கவும் அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று விசாரித்து தூக்கு தண்டனையை 8 வார காலத்துக்கு நிறுத்திவைக்க உத்தரவிட்டனர். தூக்கு தண்டனை நிறுத்தப்பட்ட உத்தரவு நேற்று வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள், கண்காணிப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அவர்கள் மற்ற தண்டனை கைதிகளைப் போல நடத்தப்பட்டனர். மூன்று பேரையும் இனி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே உறவினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பேர் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்: தமிழக சட்டசபை தீர்மானம் பற்றி காஷ்மீர் முதல்-மந்திரி விமர்சனம்; அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றலாமா?

Wednesday,August,31,2011
தமிழக சட்டசபை தீர்மானம் பற்றி காஷ்மீர் முதல்- மந்திரி விமர்சனம் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.

இது குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கருத்து தெரிவிக்கையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. ஆனால் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் நாங்கள் (மத்திய அரசு) குறுக்கிட முடியாது, ஜனாதிபதியின் முடிவை மட்டும்தான் கவனத்தில் கொள்ள முடியும்,

ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். அந்தக்கருத்து உறுதிப்படுத்தப்படும் வரை அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்கும் என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் கூறும் போது, ராஜீவ் கொலையாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்ற தங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கூறுகையில், அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார். இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

இதற்கிடையே காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் இணைய தளத்தில் ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது போல் காஷ்மீர் சட்டசபையில் நாங்களும் அப்சல் குருவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றலாமா? இதை கட்சிகள் ஆதரிக்குமா? என்று கேள்வி விடுத்துள்ளார். அப்சல் குரு டெல்லி பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர். அவரது கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் அப்துல்லாவின் விமர்சனத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. அப்சல் குருவை உமர் அப்துல்லா ஆதரிக்கிறாரா? என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

வேலூர் சிறைச்சாலை முன்பாக பட்டாசு வெடித்த ம.தி.மு.க.,வினர் கைது!

Wednesday,August,31,2011
வேலூர்: வேலூர் சிறைச்சாலை முன்பாக பட்டாசு வெடித்த மதிமுக-வினரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றசாட்டு, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில்,சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், வேலூர் சிறைச்சாலை முன்பு கூடிய ம.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது தொடர்பாக ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜிவ் கொலை வழக்கில் கருணை மனுக்கள் மீதான பரிசீலனையில் தாமதம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் ரெடி!

Wednesday,August,31,2011
ராஜிவ் கொலை வழக்கில் கருணை மனுக்கள் மீதான பரிசீலனையில் தாமதம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் ரெடி!

புதுடில்லி: மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலிக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை ஐகோர்ட்டுக்கு பதிலளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும், அதுவரை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் முருகன், சாந்தன், பேரறிவாளன் தனித்தனியே, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். கருணை மனு, 11 ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்தது என்றும், முடிவெடுக்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுக்கள், நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. முருகன், சாந்தன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வழக்கறிஞர் வைகை, பேரறிவாளன் சார்பில், மூத்த வழக்கறிஞர் காலின் கான்ஸ்லேவ்ஸ், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகி வாதாடினர்.

விசாரணையின் முடிவில், மூன்று மனுக்களிலும் பிரதானமாக எழுப்பப்பட்ட வாதம், கருணை மனுக்களை பைசல் செய்ய 11 ஆண்டுகள் நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டது தான். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். இவ்வழக்கில், சட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படுகின்றன. மனுதாரர்கள் கோரியபடி, இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுக்களுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

ஒட்டு மொத்த இந்தியாவும் உற்றுநோக்கும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜனாதிபதிக்கு எவ்வித கால காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை ஐகோர்ட்டுக்கு பதிலளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் தடுத்து வைப்பு!

Wednesday,August,31,2011
இரண்டு சர்வதேச வரத்தக கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு கப்பல்களும் பனாமா மற்றும் வியட்னாம் நாடுகளுக்கு சொந்தமானவை என குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு எட்மிரல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமையவே இந்த கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வரத்தக கப்பல் பணிப்பாளர் ஷாந்த வீரகோன் தெரிவிக்கிறார்.

சிலப் பொருட்களுக்கு பணம் செலுத்தாமை மற்றும் வர்த்தக பிரச்சினை காரணமாக இந்த கப்பல்களை தடுத்து வைக்க நேரி்ட்டதாக வரத்தக கப்பல் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு கப்பல்களும் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் வெளியேற வேண்டும்-சுப்ரமணிய சுவாமி!

Wednesday,August,31,2011
இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் வெளியேற வேண்டும்-சுப்ரமணிய சுவாமி!

சென்னை:இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத்தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து வந்தவர். இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது. தமிழர்களின் உணர்வுகள் இது என்றால் இந்தியர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

வவுனியா தனியார் பஸ்ஸில் கைவிடப்பட்ட குழந்தை!

Wednesday,August,31,2011
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் புறப்பட இருந்த தனியார் பஸ்ஸூக்குள் இரண்டு மாத பெண் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயை பொலிசார் தேடிவருகின்றனர்.

நேற்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், கண்டெடுக்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வைத்தியசாலையில் இவ்வாறு நான்கு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

லொறி பள்ளத்தில் வீ்ழ்ந்து விபத்து - இருவர் பலி!

Wednesday,August,31,2011
ருவான்வெல்ல கோனகலந்த பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் வீ்ழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகனமொன்றை முந்திச்செல்வதற்கு சாரதி முயன்ங போது லொறி வீதயை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

லொறியின் சாரதியும் மேலும் ஒருவருமே உயிரிழந்தவர்களாவர்.

பொலிஸார் கைப்பற்றிய பொருட்களை மோசடி செய்தவர் கைது!

Wednesday,August,31,2011
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருட்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மற்றுமொரு சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் தலைமையக இன்ஸ்பெக்டரே இவ்வாறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார், இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 6 இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பெறுமதியுடைய மாணிக்க கற்கள், வைரங்கள், தங்கம் மற்றும் பணம் என்பவற்றை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு - தூத்துக்குடி கப்பலின் ஊடாக, தங்கம் கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Wednesday,August,31,2011
கொழும்பு - தூத்துக்குடி கப்பலின் ஊடாக, தங்கம் கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் மதிப்பு 30 லட்சம் இந்திய ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு விசா மறுப்பு : ஐ.நா சபையில் முறையீடு!

Wednesday,August,31,2011
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத்தமிழர்கள் தங்களுக்கு விசா வழங்குவதற்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு 38 குடியேற்ற அகதிகள் இவ்வாறு நேரடியாக மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறினோம். தொடர்ந்து பீதியில் வாழும் தாங்கள் எந்த அளவுக்கு, அடைக்கலம் அளிக்கும் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்போம் என அகதிகளில் ஒருவரான சுப்பிரமணியம் கோகுலகுமார் கேள்வியெழுப் பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. இருப்பினும் தங்களை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு தஞ்சம் அளிக்க மறுப்பது வேதனையாக உள்ளது என்று மற்றொரு இலங்கைத் தமிழர் குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கலாம். ஆனால், எவ்வித குற்றமும் செய்யாத தங்களுக்கு எவ்வளவு காலம் சிறைத் தண்டனை என தெரிவிக்காமல் அடைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிட்னி பல்கலைக்கழக சட்டத்தரணி ஒருவர் குறிப்பிடுகையில்:

இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசித்த மக்களில் பலருக்கும் விடுதலைப் புலிகளைப் பற்றி நன்கு தெரியும். இவர்களில் சிலருக்கு புலிகளுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளது என்றார்.

இருப்பினும் தஞ்சம் கோரியுள்ள 38 பேருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சம் கோரியுள்ளவர்களில் மூன்று குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப முடியாது. ஏனெனில் இவர்கள் நம்பகமான அகதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து எவ்வித நடவடிக்கையையும் அவுஸ்திரேலிய அரசு எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருநெல்வேலியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் ஆயுதந்தரித்த நபர்கள் நுழைய முயற்சி!

Wednesday,August,31,2011
திருநெல்வேலியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் ஆயுதந்தரித்த நபர்கள் நுழைய முயற்சி!

யாழ். குடாநாட்டில் தொடரும் கிறீஸ் மனிதன் சர்ச்சைகளும் வதந்திகளும் மக்களது இயல்பு வாழ்க்கையை இரவு வேளைகளில் முற்றாக சிதைத்து வருகின்றது. நேற்றிரவும் திருநெல்வேலி பகுதியில் ஆயுதங்கள் சகிதம் வீடொன்றினுள் சென்ற சிலர் உள் நுழைய முற்பட்டதாகவும் வீட்டவர்கள் அபயக்குரல் எழுப்பியதையடுத்து அவர்கள் தப்பியோடியதாகவும் கூறப்படுகின்றது.

தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம்:ஜெயலலிதாவுக்கு புலிகளின் செயற்பாட்டாளர்களும் ராஜீவ்காந்தி கொலையாளி தலைவர்களும் பாராட்டு!

Wednesday,August,31,2011
தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம்:ஜெயலலிதாவுக்கு புலிகளின் செயற்பாட்டாளர்களும் ராஜீவ்காந்தி கொலையாளி தலைவர்களும் பாராட்டு!

சென்னை : ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல்வர் ஜெயலலிதாவக்கு பல்வேறு தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். வைகோ(மதிமுக): சாவின் வாசலில் நின்ற வேளையில், தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்து, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.

எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஒளிச்சுடராக இத்தீர்மானம் உள்ளது. கோடானுகோடி தமிழ் மக்கள் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளனர். நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்ததும், வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முழக்கமிட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இப்படி ஒரு காட்சியை சென்னை உயர்நீதிமன்றம் இதுவரை சந்தித்ததில்லை. நிரபராதிகள் காப்பாற்றப்பட்டு விட்டனர்.

ராமதாஸ்(பாமக): தண்டனையை குறைக்க முடியாது என்று முதல்வர் அறிவித்த போதும், அவர் மனது வைத்தால் மூவரின் உயிரை காப்பாற்ற முடியும். இதற்காக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று நான் கூறியிருந்தேன். அதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்த நடவடிக்கையை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அமைச்சரவையை கூட்டி இதேபோன்று தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரை நேரில் சந்தித்து தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த கேட்டுக் கொள்கிறேன்.

சரத்குமார்(சமக): மனிதாபிமானத்தோடு மூவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி வரவேற்கிறேன். இலங்கை தமிழர்களின் நலனில் தனது அக்கறையையும், உண்மையான உணர்வையும் வெளிப்படுத்தி இருக்கும் இந்த சிறப்பு மிக்க தீர்மானம் முதல்வர் ஜெயலலிதாவின் உன்னதமான எண்ணங்களை பிரதிபலிக்கின்றன.

பழ.நெடுமாறன்(3 தமிழர்கள் உயிர் பாதுகாப்பு இயக்கம்): மூவரின் தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு முன்னோட்டமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பதை பாராட்டுகிறேன். தமிழர்களின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே இந்த விளைவுகளுக்கு காரணம். இதை உணர்ந்து மரண தண்டனையை அறவே ஒழிக்க ஒன்றுபட்டு போராட உறுதி எடுப்போம்.

ராஜீவ்காந்தியை கொலை செய்த 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றவேண்டும்-இளங்கோவன்!

Wednesday,August,31,2011
முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தியை கொலை செய்த 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றவேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இந்த நிலையில் ஒரு சரியான நிலை எடுத்துள்ளார்.

அவரை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 பேருக்கும் தூக்குத்தண்டனை தரவேண்டும் என்று தெளிவாக சொல்லிவிட்டு இப்போது அதை மாற்றி சொல்வது என்பது சரியாக இருக்காது. இந்த விஷயத்தில் கருணாநிதி இரட்டை வேடம்போடுகிறார்.

இந்த 3 பேரையும் தூக்கில் போடாமல் தடுப்பீர்கள் என்றால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும். அமைதியாக இருக்கும் பல மக்கள் தனது உயிரை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே வன்முறைக்கும் தீவிரவாதத்திற்கும் முடிவு கட்டவேண்டும் என்று சொன்னால் தீவிரவாதிகளிடம் எந்த வித கருணையும் காட்டக்கூடாது.

சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!.

Wednesday,August,31,2011
வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா (28.08.2011) மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி ரசிகர்கள் மேற்கண்ட பேனர்களை மதுரையில் வைத்திருந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது,

இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? அவருடைய கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்டுள்ள வணிக வரி கணக்கை காட்டுவாரா?

வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். உடனடியாக இந்த பேனர்களை திருப்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்ட களத்தில் இறங்கும் என்று இந்து மக்கள் கட்சி கண்ணன் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு எதிரான தடை தொடரும்:அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

Wednesday,August,31,2011
புலிகளுக்கு எதிரான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதற்கு சமாந்திரமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது.

இதன்படி உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தடை ஆகியன தொடர்ந்தம் அமுலில் இருக்கும்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்ட நீக்கத்துடன் புலிகள் மீதான தடை, உயர்பாதுகாப்பு வலயங்கள் போன்றனவும் வலுவிழப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கும், உயர்பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை உள்ளடக்கியுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதற்கோ அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாமல் ஒழிப்பதற்கோ சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்ட மூலமொன்று அறிமுகப்படுத்தப்படும் வரையில் தற்காலிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சரத்துக்கள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர்கள் குழு அறிக்கை தொடர்பாக ரொபர்ட் ஓ பிளேக்-புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை–திவயின!

Wednesday,August,31,2011
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்; கிழமை பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஐரின் புயல் காரணமாக அவர் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உரையாற்றி பிளேக், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு அமைய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தான் அதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அல்லது, அதன் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கையளிக்க போவததாக உறுதி வழங்கியுள்ளார்.

பிளேக்கிடம் கருத்து வெளியிட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகளில் பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கில், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதாகவும், சிங்கள மக்கள் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்படுவதாகவும் முறையிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பிளேக் இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறுகின்றன – வெளிவிவகார அமைச்சு!

Wednesday,August,31,2011
சர்வதேச சக்திகளின் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

வெளிநாடுகளுக்கான சகல இலங்கைத் தூதரகங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் சில நாட்டு அரசாங்கங்கள் சாதகமான பதிலை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஆணையாளர் நாயகம் சரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மதிப்பினை அதிகரிக்கும் வகையில் வெளிநாடுகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த அறிக்கை தொடர்பில் கருத்துக்களை எதனையும் வெளியிட முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

குற்றச் செயல் விசாரணை மற்றும் தண்டனை வழங்குதல் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேர் விரைவில் விடுதலை!

Wednesday,August,31,2011
அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேரை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவ ர்கள் தொடர்பான வழக்குக் கோவை களை சட்ட மா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவசரகால சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கமைய தடுத்து வைக்கப்பட்டவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என்ற கருத்தையும் தெரிவித்தார்.

அதேவேளை; பாரதூரமான குற்றங்களுக்குள்ளானவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அவசரகால சட்ட பின்னேற்பாடுகள் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய நலன் கருதிய அவசர சட்டமூலமாக இச்சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வுள்ளதாகவும் அதற்கு முன்னதாக அதனை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அதன் ஒழுங்கு விதிகளுக்கமைய தடுத்து வைக்கப்பட்டு ள்ளவர்களை விடுதலை செய்வதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அதன் ஒழுங்கு விதிகளுக்கமைய பல்வேறு காலகட்டங்களி லும் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட் டுள்ளன. சாதாரண குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களில் கணிசமானோரின் வழக்குக் கோவைகள் தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களில் 1200 பேரை விரைவில் விடுவிக்க முடியும்.

அதேவேளை; பாரதூரமான குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எதிரான சாட்சியங் கள் தற்போது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இவர்களின் விசாரணை தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே அவசரமான சட்டமூலமொன் றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு பாரதூரமான குற்றங்களுக்கு உட்பட்டவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

LTTE Diary: Prabakaran killed 300 cadres loyal to Mahattaya.....

Wednesday,August,31,2011
An LTTE diary in the hands of a Tiger cadre in Germany has revealed that slain LTTE leader, Velupillai Prabakaran ordered the massacre of 300 cadres loyal to his one time deputy leader,Mahendrarajah alias Mahattaya.Notes pertaining to threats on Anton Balasingham not to talk 'peace moves' issued by Prabakaran are also included in that diary,reports from Berlin said.

Prabakaran who fell out with Mahattaya over the latter's stand to seek a negotiated political settlement with the Colombo Government at that time, had personally shot dead Mahattaya near a Red Chilly chena cultivation in the thick jungles of Mullaitivu in the presence of Kittu,Raheem and Yogaratnam alias Yogi.At the time Mahattaya was killed, the trio Kittu, Raheem and Yogi were the trusted lieutenants of Prabakaran who spearheaded ground operations against the Sri Lankan military in the North.

Having shot dead Mahattaya, the remains of the slain LTTE deputy leader had been carried into the thick jungles and cremated, the diary has revealed.

Thereafter, 300 hundred hard core cadres allocated to Mahattaya had been targeted by Prabakaran and killed within six months laying booby traps,land mines and anti-personnel bombs on the paths they were directed to travel,the diary has noted.

The diary unfolds that the manner of the killing of Mahattaya was kept a well guarded secret in order to put the blame on the government security forces on the sudden disappearance of Mahattaya.However, after Prabakaran penalized Yogi and the LTTE 'Top Command' split,many well guarded secrets of the LTTE had been let out by disgruntled cadres.Many of them have been punished with death while Yogi was barricaded in Jaffna as a cricket coach prohibited to leave the peninsula without the consent of Prabakaran,the diary has unfolded.

அமெரிக்காவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிந்துகொள்ள புதிய தொலைபேசி இலக்கம்!

Wednesday,August,31,2011
ஐரின் சூறாவளி காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் வீடு திரும்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இந்த சூறாவளியால் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தூதரகத்தின் ஆலோசகர் வசந்தா பெரேரா குறி்ப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவில் உள்ள பெளத்த விகாரைகள் ஊடாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

001 202 352 0355 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பணிப்பாளர் சரத் திசாநாயக்க குறிப்பிட்டார்.

காணாமற்போன 700 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

Wednesday,August,31,2011
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணாமற்போன சிறுவர்களில் சுமார் 700 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்கள் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பீ.பி.சி செய்தி சேவைக்கு அளித்த செவ்வியில் வவுனியா அரச அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த சூழலில் சுமார் ஆயிரத்து 800 சிறுவர்கள் காணாமற்போனதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் கூறியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஓமந்தைக்கு வருகைதந்த பெற்றோர் தமது சிறார்கள் காணாமற்போனமை தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தனர்.

காணாமற் போன சிறார்கள் தொடர்பில் யுனிசெப் அமைப்பினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேலும் ஆயிரம் சிறார்கள் காணாமற் போயுள்ளதாக அரசாங்க அதிபரை மேற்கோள்காட்டி பீ.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சிறுவர்களை கண்டுபிடிப்பதற்கு இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து யுனிசெப் அமைப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தி உயிருடன் வந்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!

Wednesday,August,31,2011
சென்னை:புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தி உயிருடன் வந்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!

ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ராஜிவ் காந்தியும், அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

புலிச் சந்தேச நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தாகள் விடுதலை!

Wednesday,August,31,2011
புலிச் சந்தேச நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தாகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒருவரும் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விடுதலை அறிக்கைகளை மோசடியான முறையில் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பாபா மாஹில் டோல், எம்.எஸ்.எம். அஸ்லம், ஜெய்னுதீன் கமால்தீன், ஏ.விக்ரமசிங்க மற்றும் எம்.எப். புஸ்பகுமாரன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனா.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய கொழும்பு நீதவான் லங்கா ஜயரட்ன சந்தேக நபர்களை விடுதலை செய்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது-மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்!

Wednesday,August,31,2011
தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது-மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்!

புதுடில்லி : தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:ராஜிவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானம், யாரையும் கட்டுப்படுத்தாது. சென்னை ஐகோர்ட், ராஜிவ் கொலையாளிகளுக்கான தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

ஐகோர்ட் முடிவில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஐகோர்ட் இடைக்கால தடை தான் விதித்துள்ளது. ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை, நாங்கள் பதில் ஏதும் கூற விரும்பவில்லை.எனினும், ராஜிவ் கொலையாளிகள் விஷயத்தில் ஜனாதிபதியின் முடிவை தான், நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் ஐகோர்ட்டின் இடைக்கால தீர்ப்பு குறித்து, மத்திய அரசு தனது தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி குறிப்பிடுகையில், "சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, பிரதமர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட் தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை. பயங்கரவாதிகள் விஷயத்தில் கருணை காட்டக் கூடாது.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

ஐரின்‘சூறாவளியின் தாண்டவத்துக்கு அமெரிக்காவில் ரூ.58,000 கோடி நஷ்டம்!

Wednesday,August,31,2011
வாஷிங்டன் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாநிலங்களை புரட்டியெடுத்த Ôஐரின்Õ சூறாவளி, கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. சூறாவளி ஆடிய தாண்டவத்துக்கு ரூ.58,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 10 மாநிலங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கரீபியன் தீவில் உருவான Ôஐரின்Õ சூறாவளி, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதி மாநிலங்களை நேற்று முன்தினம் பயங்கரமாக தாக்கியது.

அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்றடித்தது. நியூஜெர்சி, மேரிலேண்ட், விர்ஜினியா, வடக்கு கரோலினா, நியூயார்க், வாஷிங்டன், தல்வார் உள்ளிட்ட கடற்கரையோர மாநிலங்களில் கன மழை கொட்டியது. சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்ட மாநிலங்களில் அவசர நிலையை அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். எனவே, மீட்பு மற்றும் நிவாரண படையினர் தயாராக இருந்தனர். கவர்னர்களுடன் சூறாவளி நிலவரம் குறித்து ஒபாமா தொடர்ந்து விசாரித்தார்.

பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் சாலை, ரயில், விமான போக்குவரத்து ரத்தானது. சென்னையில் இருந்து நியூயார்க் செல்ல வேண்டிய விமானங்கள் முன்பதிவு நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அணு மின் நிலையங்கள், துறைமுகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 21 ஆக அதிகரித்தது.

பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நீர் வடிந்த பிறகு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சூறாவளி காற்றால் வீட்டுக் கூரைகள், மரங்கள் பிய்ந்து காற்றில் பறந்தன. வாகனங்கள் புரட்டி போடப்பட்டு சேதமடைந்தன. வெள்ளத்தில் கால்நடைகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல பகுதிகளில் மின் கம்பங்கள் விழுந்து மின்சாரம் தடைபட்டுள்ளதால் லட்சக்கணக்கான 40 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. ஐரின் சூறாவளி மற்றும் மழை வெள்ளத்துக்கு 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.58,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப நிலை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கனடாவுக்கு குறி

அமெரிக்காவை புரட்டி போட்ட ஐரின் சூறாவளி, அந்த பகுதியில் வலுவிழந்த நிலையில் திசை மாறி கனடாவை நோக்கி மிரட்டி வருகிறது. அது முற்றிலும் செயலிழக்கவில்லை என்றும் கனடாவிலும் பலத்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. கனடா நகரங்களான நோவா ஸ்காடியா, நியூ பிரன்ஸ்விக் ஆகியவற்றில் நேற்று சில மணி நேரங்களில் 20 செ.மீ. மழை கொட்டியது. இதையடுத்து, அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Tuesday, August 30, 2011

»2ஆம் இணைப்பு:-முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் போட இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு!!

ஒரு முன்னால் பாரத பிரதமரை கொலைசெய்த, கொலை செய்யா உதவிய வங்களை காப்பாற்ற எவ்வளவு போராட்டம்...இனிமேல் இந்தியாவில் யாரும் யாரையும் கொல்லலாம். அடிக்கலாம், எந்த குற்றம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அவருக்கு மன்னிப்பு கிடைத்து விடும். நாட்டில் குற்றங்கள் பெருகுவது பற்றி யாரும் கவலை கொள்ள தேவையில்லை. வாழ்க ஜனநாயகம்!!!

Tuesday, August 30, 2011
»2ஆம் இணைப்பு:-முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் போட இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 11-ந் தேதி நிராகரித்தார். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் வேலூர் ஜெயிலில் செப்டம்பர் 9-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் செய்தனர். ஆனால் இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சிகள், வக்கீல்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் 3 பேரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து, போராட்டங்களை நடத்தினார்கள்.

காஞ்சீபுரத்தில் செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். இந்த நிலையில் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தடா சந்திரசேகர் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 3 பேரின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஏற்றுக் கொண் டார். அவசர சூழல் கருதி மனுக்கள் மீது உடனடியாக இன்று விசாரணை தொடங்கவும், அவர் ஒத்துக்கொண்டார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தங்கள் மனுவில், தங்களுக்கான தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை தொகுத்து கூறி இருந்தனர். 11 ஆண்டுகள் கழித்து கருணை மனு மீது முடிவு எடுத்ததும், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தண்டனை கொடுப்பதும் சட்ட விரோதமானது. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் மற்றும் தமிழ் இன ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஐகோர்ட்டு நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. 3 பேர் சார்பில் பிரபல மூத்த வக்கீல்கள் ராம்ஜெத்மலானி, காலின் கான்சிலேஸ், வக்கீல் வைகை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ராம்ஜெத்மலானி வாதம் வருமாறு:-

ஒரு மரண தண்டனை கைதியின் கருணை மனு மீது முடிவு எடுக்க மிக நீண்ட கால தாமதம் ஆனதற்காக அந்த கைதியின் தண்டனையை குறைக்க சுப்ரீம் கோர்ட்டு பல வழக்களில் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்க 11 ஆண்டுகள் 4 மாதம் கால தாமதம் ஆகி உள்ளது. இந்த கால தாமதத்தையே இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான காரணமான எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனை பெற்றவர்களின் கடைசி நிமிட தவிப்புகள் குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளேன். அந்த புத்தகத்தை நீதிபதிகள் படித்து பார்க்க சமர்ப்பிக்கிறேன்.

இந்தியா வில் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.

நீதிபதி சின்னப்பா ரெட்டி தனது தீர்ப்பில் கருணை மனு மீது முடிவு எடுக்க
2 1/2 ஆண்டுகள் கால தாமதம் ஆனதற்காக தூக்கு தண்டனையை குறைப்பதற்கு ஒரு காரணமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து 11 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில், கருணை மனு மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாதே தவிர நீண்ட கால தாமதத்தை தண்டனையை குறைப்பதற்கான ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

மரண தண்டனையை நிறைவேற்ற காலம் 30 நொடிகள் தான் ஆகும். ஆனால் இந்த 3 பேரின் கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள் கால தாமதம் ஆனது மிகப் பெரிய தண்டனை ஆகும்.

கருணை மனு மீது எப்படி முடிவு எடுப்பார்களோ என்று இவர்கள் நினைத்து, நினைத்து செத்து பிழைக்கிறார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை கோர்ட்டு நடவடிக்கைகள் குறித்த விசாரணை 1999. அன்றே முடிவடைந்து விட்டது. இவர்கள் கருணை மனு மீது தமிழக கவர்னர் 10 நாட்களில் முடிவு எடுத்து நிராகரித்து விட்டார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்க கவர்னருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. 2-வது கருணை மனு மீது தமிழக கவர்னர் 5 மாதத்தில் முடிவு எடுத்தார். அதன் பிறகு ஜனாதிபதியிடம் 26-4-2000 அன்று கருணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 11 ஆண்டுகள் 4 மாதத்துக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜனாதிபதிக்கு 5 தடவை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21க்கு எதிரானது. வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அந்த உரிமையை மீறும் வகையில் ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளார். இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் 3 பேரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ராம்ஜெத் மலானி வாதிட்டார்.

இதையடுத்து காலின் கான்சிலேஸ் வாதாடுகையில் கூறியதாவது:- தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட கால தாமதம் ஏற்படுத்தியதற்காக பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில், கருணை மனு மீது முடிவு எடுப்பதில் மிக நீண்ட கால தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாண்டுகள், நான்கு ஆண்டுகள் கால தாமதம் ஏற்படுத்தியதற்காக சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளது. குறைத்துள்ளது. இதற்கு தயாசிங் வழக்கு, சேர்சிங் வழக்கு, மதுமேதா வழக்கு உள்பட பல வழக்குகள் முன் உதாரணங்களாக உள்ளன. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க இத்தனை ஆண்டுகள் கால தாமதம் ஆனதற்கான காரணங்கள் கூறப்படவில்லை.

இவ்வாறு வக்கீல் காலின் கூறினார்.

வக்கீல் வைகை வாதிடுகையில், 3 பேருக்கும் விதித்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றார். இதையடுத்து நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு விவரம் வருமாறு:- மனுதாரர்களின் கருணை மனுக்களை பைசல் செய்வதற்கு 11 ஆண்டுகள் 4 மாதம் ஆனதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சட்ட கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மனுதாரர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரை தூக்கில் போட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து 8 வாரத்தில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழக அரசு, சிறைத்துறை ஐ.ஜி., வேலூர் ஜெயில் சூப்பிரண்டு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீத கிருஷ்ணன், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆகியோர் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். இந்த வழக்கு விசாரணையை பார்க்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மணிவண்ணன், சாகுல் அமீது மூத்த வக்கீல் என்.நடராஜன், மனுதாரர் தரப்பு வக்கீல்கள் வைகோ, என்.சந்திரசேகரன் வந்திருந்தனர். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் திரளாக வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டதும் அவர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.

என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். தமிழ் இன உணர்வாளர்களும், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்த பல்வேறு அமைப்பு மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் கோர்ட்டு தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் இன்று காலை ஐகோர்ட்டு வளாகத்தில் தமிழ் இன ஆர்வலர்களின் மகிழ்ச்சி வெள்ளம் கட்டுக் கடங்காதபடி இருந்தது.

புது டெல்லி மகாநாட்டினைத் தொடர்ந்து, தமிழ் கட்சிகள் சென்னையில் சந்திப்பு!

Tuesday, August 30, 2011
சென்னை: புது டெல்லியில் நடந்த இலங்கை தமிழ் கட்சிகளின் மகாநாட்டினைத் (23,24-08-2011) தொடர்ந்து 29-08-2011 அன்று காலை தமிழ் கட்சிகள் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.

தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப் (பத்மநாபா. ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ஆகிய நான்கு கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன.

தமிழர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை இந்திய அரசிடம் எடுத்துச் செல்வதற்கு சரியான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்வதென்றும்,

இது தொடர்பாக எமது நாட்டிலும், உலக நாடுகளிலும் வாழும் அறிவு ஜீவிகளின் ஒருங்கிணைப்பையும், ஆலோசனையையும் பெறுவதென்றும்,

தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்ற வகையில் கூட்டுத் தலைமை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்த மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக்கூட்டணி,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,

பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எப்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

இலங்கையிடமிருந்து 80 போர்ப்படகுகளை கொள்வனவு செய்யும் இந்தியா!

Tuesday, August 30, 2011
இலங்கையிடம் இருந்து 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.

250 கோடி ரூபா பெறுமதியான இந்த உடன்பாட்டு கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியக் கடற்படையில் அண்மையில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப்பிரிவுக்காகவே இந்தப் படகுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி இலங்கை கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது.

சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கே இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படகுகளை இலங்கையின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்கள் கட்டிக் கொடுக்கவுள்ளது.

இலங்கை கடற்படையின் சிறப்புப் படகு அணியை சேர்ந்த 42 கொமாண்டோக்கள் சில மாதங்களுக்கு முன்னர் மும்பைக்குச் சென்று இந்திய கடற்படையினருடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசுபிக் ஆகாய மார்க்க திரளணி 2011” இனிதே நிறைவு!

Tuesday, August 30, 2011
என்றும் இல்லாதவாறு ரத்மலானை விமானப் படைத்தளத்தில் இடம்பெற்ற பிரமிப்பூட்டக்கூடிய பசுபிக் ஆகாய மார்க்க திரளணி கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி இனிதே நிறைவு பெற்றது.

உலக நாடுகளின் விமானப்படைகளுக்கிடையே சிறந்த்தொரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத் தரளணிப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பல நாடுகளைந் சேர்ந்த படையினரும் இதில் கலந்து கொண்டனர்.

ஒருவாரகாலமாக இடம் பெற்ற இப் பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து படைவீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதேவேளை தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

ஐக்கியஅமேரிக்காவின் விமானப்படையின்c130, ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின்c130 J ஆகிய விமானங்கள் இப்பயிற்சியில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டன.

இகன் இறுதி நிகழ்வில் ரத்மலானை படைத்தள கட்டளைத்தளபதி எயாகொமடோ சுமங்கல திஸ்ஸ அவர்களால் இருதியுரை நிகழ்த்தப்பட்டு அனைத்து படைவீர்ர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், நாடுகளுக்கிடையே ஞாபகச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம்!

Tuesday, August 30, 2011
இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியவை வருமாறு:

இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்ட கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்.

ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி அங்குள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்கு பொதுமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வழிபாடு நடத்த மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு வரை தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டது உண்மைதான்.

ஆனால் கடந்த 6 மாதமாக ஒன்று இரண்டைத் தவிர வேறு எந்தவித அசம்பாவிதமும் கடல் பகுதியில் நடக்கவில்லை.

சீனா எங்கள் நட்பு நாடு. இந்தியா எங்கள் உறவு நாடு. இந்தியாவின் உறவுடன் வர்த்தகத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.

இதனால்தான் பெங்களூரில் இலங்கை கௌரவப் பிரதிநிதி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. கௌரவப் பிரதிநிதியாக கே.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா எங்கள் வர்த்தகத்திற்கும், சுற்றுலாவிற்கும் பெரிதும் உதவுகிறது. எனவே இந்தியாவுடனான வர்த்தக உறவை மேலும் பெருக்க விரும்புகிறோம். இவ்வாறு கூறினார் பிரசாத் காரியவசம் அவர்கள்.

இலங்கை சட்டக்கல்லூரியினால் ஜனாதிபதி கொரவிப்பு!

Tuesday, August 30, 2011
இலங்கை சட்டக்கல்லூரியின் 137 ஆம் ஆண்டு நினைவையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்லூரி வளாகத்தில்வைத்து “வொஹராபதி” எனும் பெயர் நாமம் வழங்கி கொரவிக்கப்பட்டார்.

இவ்வாறாக இலங்கையில் மிகவும் உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி, கல்லூரியின் 100 ஆவது வகுப்புப் பிரிவை சேர்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விருதை கல்லூரியின் அதிபர் டபில்யு.டீ. ரொட்ரிகோ வழங்கி கொரவித்தார். இந் நிகழ்வானது ஹுனுபிடிய கங்காராம கிரிந்த அசகிதேரவினால் நிகழ்த்தப்பட்ட சமைய நிகழ்வுகளின் பின்னர் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்காக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக, நீதி அமைச்சர் ரவூப் ஹகீம், மற்றும் நீதித்துறை சார்ந்த பல முக்கியஸ்த்தர்களும் வருகை தந்திருந்தனர்.

நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது-திவயின!

Tuesday, August 30, 2011
நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும், பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிய பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 250 குற்றவாளிகளுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என சிரேஸ்ட அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியமை, குண்டுகளை வைத்தல், படையினரை படுகொலை செய்தல் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 250புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்களுக்கு அவசரகாலச் சட்ட நீக்கத்தின் ஊடாக எவ்வித சலுகைகளும் அளிக்கப்பட மாட்டாது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய உரிய முறையில் வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா:இங்கிலாந்து:இந்தியாவின் நெருக்குதலால் தான் எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை எடுத்தார் என்று சொல்வது தவறு.கோத்தபாய ராஜபக்ச!

Tuesday, August 30, 2011
அமெரிக்கா:இங்கிலாந்து:மற்றும் இந்தியாவின் நெருக்குதலால் தான் எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை எடுத்தார் என்று சொல்வது தவறு. அவர் யாருக்கும் பயப்படுபவரில்லை. அவர் எப்போதும் பயப்படப் போவதுமில்லை என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த வாரம் கிறீஸ் பூத விவகாரம் தொடர்பாக முஸ்லீம் சமூகத் தலைவர்களையும் முஸ்லீம் மதத் தலைவர்களையும் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச,

அதேபோல அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக அரசாங்கமே கிறீஸ் பூதம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது என்ற புரளியும் நாட்டில் பரவியுள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால் எங்களுடைய அரசாங்கத்திற்கு அப்படிச் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாட்டுக் நண்மை பயக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனது சகோதரினிற்குத் தெரியும் அதனால் தான் அவர் பாராளுமன்றத்தின் உதவியுடன் அவசரகாலச் சட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளார் எனத் தெரிவித்த கோத்தபாயவிடம்,

படைகளும் அரசும் கிறீஸ் பூத விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியை வெளியிட்ட மேற்படி முஸ்லீம் தலைவர்கள் கிறீஸ் பூத விவகாரத்தில் 25வீதம் உண்மையாக சம்பவங்கள் இடம்பெற அதையொட்டிய வதந்தி 75 வீதமாக இருக்கிறதென்றும் எனினும் அந்த 25வீத உண்மைச் சம்பங்களும் ஆராயப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் பயணம் 4 இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

Tuesday, August 30, 2011
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை தனியார் விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய 4 வாலிபர்கள் மொட்டையடித்து இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது 4 பேரும் போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் போரூரை சேர்ந்த ராஜேந்திரன், கும்மிடிப் பூண்டியை சேர்ந்த சசிகுமார், ஸ்ரீராம், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த செந்தூரன் என்பதும் 4 பேரும் அங்குள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, சிங்கப்பூரை சேர்ந்த ஏஜெண்டு ஜீவா என்பவர் எங்களிடம் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ.2 1/2 லட்சம் வாங்கிக் கொண்டு போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார்.

பின்னர் அங்குள்ள ஓட்டலில் 4 நாட்கள் தங்க வைத்தார். பின்னர் எங்களை ஓட்டலில் விட்டு விட்டு தப்பி சென்று விட்டார். அங்கு அனாதையாக திரிந்த எங்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து 45 நாட்கள் சிறையில் அடைத்தனர். ஜெயிலில் இருந்து வெளிவந்ததும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். இங்கு வந்ததும் விமான நிலைய அதிகாரிகள் நாங்கள் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக கூறி கைது செய்து விட்டனர் என்றனர். பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இலங்கையர் இன்டர்போலினால் கைது!

Tuesday, August 30, 2011
இலங்கைக்கு டயோனியல் குளோரைட் எனும் இரசாயன பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் காரணமாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவர், சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து இன்டர்போலினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கென்யூட் சிறிபாலன் பீரிஸ் அல்லது கனீ பீரிஸ் என்பவருக்கு இலங்கை நீதிமன்றமொன்று பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.

தற்போது அவரை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இன்டர்போல் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கமவிலுள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றின் பயன்பாட்டிற்காக என்ற போர்வையில் இந்த இரசாயனப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் நச்சுப் பானமொன்றுக்காக அது இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரதேச சபைத் தலைவரை படுகொலை செய்ததாக ஊர்காவற்றுறையில் மாணவர் கைது!

Tuesday, August 30, 2011
பதினொரு வயதில் பிரதேச சபைத்தலைவரை படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டி பாடசாலை மாணவனொருவன் ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியினில் கைது செய்யப்பட்டுள்ளான். எனினும் ஊர் மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பினையடுத்து கைது செய்யப்பட்ட மாணவன் இன்று விடுவிக்கப்பட்டுள்ளான். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தினில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிஸாரே நேற்றிரவு இம்மாணவனை கைது செய்துள்ளனர்.

16 வயதுடைய கிருஸ்ணகுமார் மணி எனும் மாணவனே கைது செய்யப்பட்டுள்ளான். சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்த ஈபிடிபி கட்சியின் பிரதேச சபைத்தலைவரொருவரது மரணத்துடன் இம்மாணவன் தொடர்பு பட்டிருந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து ஏற்பட்டிருந்த இழுபறிகளையடுத்து காலை இம்மாணவன் விடுவ்க்கப்பட்டுள்ளான். எனினும் அண்மையில் இப்பகுதியினில் சர்ச்சைக்குரிய வகையினில் புலிக்கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பினில் இக்கைது இடம்பெற்றிருக்கலாமென சந்கேகிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி நிராகரித்த பிறகு தூக்கு தண்டனையை நிறுத்த முடியாது; எழுத்தாளர் “சோ” கருத்து!

Tuesday, August 30, 2011
ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து இனி காப்பாற்ற முடியுமா? முடியாதா? என்ற சர்ச்சை வலுத்து வருகிறது. இதுபற்றி எழுத்தாளர் “சோ”விடம் கருத்து கேட்ட போது, அவர் கூறியதாவது:-

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மீண்டும் அதில் தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. இதை தவிர சில விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே மாநில அரசு, இந்த கருணை மனுவை நிராகரித்துள்ளது. அது கலைஞர் அரசு செய்த காரியம். இப்போது ஜனாதிபதி நிராகரித்த நிலையில் மாநில அரசு அதில் தலையிட முடியாது.

கேள்வி:- கேரளா, ஆந்திராவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகும் மத்திய அரசு மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- நீங்கள் சுட்டிக் காட்டுக்கிற ராமதாசின் பேச்சிலேயே கூட ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மாநில அரசு கருணை மனுவை ஏற்றதாக சொல்லப்படவில்லை. மீண்டும் மத்திய அரசுதான் பரிசீலனை செய்ததாக அவர் சொல்லி உள்ளார். இந்த நிலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இந்த பேச்சிலும் உறுதியாகிறது.

கே:- இனி 3 பேரையும் காப்பாற்ற வழி இருப்பதாக தெரிகிறதா?

ப:- மரண தண்டனையையே இனி கிடையாது என்றால்தான் இதுவும் நிற்கலாம்.

இவ்வாறு “சோ” கூறினார்.

ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

திட்டமிட்டு மற்றும் மனி தாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட கொலை குற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தூக்கு தண்டனையை உறுதி செய்து ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்த பிறகு அந்த தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது. சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த பிறகு மீண்டும் மறுபரிசீலனை செய்ய முடியாது.

வேண்டுமென்றால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட விதம், கையாளப்பட்ட வழிமுறைகள் தவறு என்று வாதிடலாம். அதுபற்றி கோர்ட்டும் விளக்கம் கேட்க வாய்ப்பு உண்டு. இதனால் தண்டனையை நிறைவேற்றும் காலம் வேண்டுமென்றால் தள்ளிப்போகலாம். ஆனால் தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை. இருந்தாலும் சில வழக்கு களில் தண்டனை குறைக்கப்பட்டும் உள்ளது.

1990-ல் உ.பி.யைச் சேர்ந்த ஜும்மான்கான் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் அனுப்பிய கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லாத காலதாமதம் ஏற்பட்டு இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதேபோல் 1991-ல் தயாசிங் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் போட்ட முதல் கருணை மனு தள்ளுபடி ஆனது.

2-வது கருணை மனு மீது 2 வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை. முதல் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை வைத்து தயாசிங்கை தூக்கில் போட்டி ருக்கலாம். அனால் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் மனுதாக்கல் செய்து கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. கருணை மனு கால தாமதம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை குறைத்து விடாது. காலதாதம், குற்றத்தின் தன்மையையும் பரிசீலித்து முடிவு செய்யும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகி யோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்த முடியாது. இதை தடுத்து நிறுத்த அரசியல் சட்டப்படி யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த விஷயத்தில் முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து மிகவும் சரியானது. இந்த பிரச்சினை மீதான அரசியல் சட்ட நிலையை அவர் சரியாக புரிந்து விளக்கி உள்ளார்.

நளினிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைப்பு சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தில் இது மோசமானது. எனவே, சட் டத்தில் மேற்கொண்டு யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது. 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை வருகிற 9-ந்தேதி நிறைவேற்றப்பட வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் கொண்ட நமது நாடு, மென்மையான போக்கை கடைப்பிடிக்காது என்பதை உணர்த்த வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

ராஜுவ் காந்தி கொலை வழக்கு : 3 பேரை தூக்கிலிட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!.

இதெல்லாம் ஒரு தீர்ப்பா..... ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும்.....

Tuesday, August 30, 2011
சென்னை : ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய 3 பேரை தூக்கிலிட 8 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சநங்கரநாராயணன் தடை விதித்து உத்தரவிட்டனர். தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி மூவரும் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மூவரையும் தூக்கிலிட செப்.,9 ந் தேதி நிர்ணயிக்கப் பட்டிருந்தது. உயர்நீதிமன்ற தடையை அடுத்து தூக்கிலிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றத் தடை உத்தரவை வேலூர் சிறை நிர்வாகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி அவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பேரறிவாளன் சார்பில் வக்கீல் தடா சந்திரசேகரன், சாந்தன், முருகன் சார்பில் வக்கீல் வைகை ஆகியோர் நேற்று மனுக்களை தாக்கல் செய்தனர்.

அப்போது நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு வக்கீல் தடா சந்திரசேகரன் ஆஜராகி, ’’தூக்கு தண்டனை பிரச்சினை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இந்த மனுக்கள் அவசர வழக்காக ஏற்கப்படுவதாகவும், விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்றும் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது. மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர். துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் ஐகோர்ட்டில் குழுமினர். மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.