Thursday, July 18, 2019

அமெரிக்கா ஆயுத விற்பனை ஈரான் எதிர்ப்பு!

டெஹ்ரான், அமெரிக்கா ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அவர்கள் ஈரான் பகுதியில் ஆயுதங்கள் விற்கக்கூடாது , என அறிவித்துள்ளது.இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப் கூறும்போது, “அமெரிக்கா எங்களுடன் ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அவர்கள் ஆயுதங்கள், ஏவுகணைகளை எங்கள் பகுதியில் விற்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ், பந்து தற்போது அமெரிக்காவில் வீசப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது குறிப்பிடத்தக்கது.

60 இடங்களில் பணம் பதுக்கல் துரைமுருகன் தரப்பு மீது ஏ.சி.சண்முகம் புகார்!

குடியாத்தம், ''கடந்த தேர்தலில் செய்த அதே தவறை மீண்டும் தி.மு.க., வினர்செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்'' என வேலுார்தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.குடியாத்தத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த முறை தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைத்திருந்தார். கணக்கில் வராத 10 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.அப்போது 50 - 60 கோடி ரூபாயைதுரைமுருகன் வீட்டின் பின்பக்கமாக எடுத்துச் சென்று விட்டனர். மீண்டும் அதே தவறை தி.மு.க. வினர் செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். சமீபத்தில்

Wednesday, July 17, 2019

கிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்!

கிரீஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தலையை உரசும் அளவுக்கு விமானம் தாழ்வாக பறந்தது. ஏதென்ஸ்:கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடற் கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பறக்கும்போது அதன் கீழ்பகுதியில் நின்று ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அப்படி விமானங்கள் தரையிறங்கும்போது, விமான என்ஜின்களில் இருந்து வெளிப்படும் வேக காற்றினால் சுற்றுலா பயணிகள் தூக்கி வீசப்பட்டு

எதற்கும் தயாராக உள்ளோம்: இந்திய விமானப்படை தளபதி!

எந்த வகையான சூழ்நிலையிலும் உடனடியாக களமிறங்க விமானப் படை எப்போதும் தயாராக உள்ளது' என விமானப் படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போரின் 20வது ஆண்டையொட்டி டில்லியில் நேற்று(ஜூலை 16) நடந்த கருத்தரங்கில் விமானப் படையின் தலைமை தளபதி தனோவா கூறியதாவது: கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் 17வது ஸ்குவாட்ரனின் தலைவராக பங்கேற்றேன். அப்போது நமது விமானப் படைக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தன. மிராஜ் - 2000 போர் விமானத்தில் மட்டுமே குண்டு திறன் இருந்தது. தற்போது நமது அனைத்து விமானங்களிலும் இந்த வசதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பல முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.கார்கில் போரின்போது இக்கட்டான கட்டத்தில் இரவு நேரத்தில்

ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றி நிச்சயம்: பொதுஜன பெரமுன உறுதி!

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய பாராளுமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் எதிர்வரும் 2020 சித்திரைப் புத்தாண்டை எதிர்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர், இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் சாதனை படைக்கும் வெற்றியொன்றை பதிவு செய்வார் என நாம் நம்புகின்றோம்.இதனையடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு

ரகசிய சந்திப்பில் ரவி- மஹிந்த?

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லமான கால்ட்டனில் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும், அக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பது தற்போது வெளிப்படையாகவே மேடைகளில் பேசப்படுகிறது.

Monday, July 15, 2019

தமிழகத்தில் IS பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம்?

கோவையை அடுத்து தற்போது சென்னை மற்றும் நாகையில் அடுத்தடுத்து பயங்கரவாதத் தொடர்புள்ள நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என்.ஐ.ஏ., வேட்டை :-இந்தியாவில் உளவுப்பிரிவினரும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பு கோரத்தில், 259 பேர் உயிரிழந்த பின்னர் இந்திய உளவுத்துறை உஷாராகியுள்ளது. கோட்டை விட்ட இலங்கை :ஏனெனில் முன்கூட்டியே எச்சரித்தும், இலங்கை உளவுத்துறை கோட்டை விட்டதால் இலங்கை குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

வடக்கில் சென்று “கார்ட்போர்ட்” வீரர்கள்!

வடக்கில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் உயிருக்குப் பயந்து கொழும்பிலுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று வடக்கில் சென்று “கார்ட்போர்ட்” வீரர்கள்  போன்று செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது யார் என்பதைக் கூட இந்த மக்கள் மறந்துள்ளனர். இந்த கார்ட்போர்ட் வீரர்கள் வடக்கு மக்களைக் காப்பாற்றியவர்கள் போன்று செயற்பட்டு வருகின்றனர். யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் உண்மை நிலைமை எது

Sunday, July 14, 2019

தமிழிசைக்கு தேசிய அளவில் பதவி... தமிழக பாஜக தலைவராகும் புதுமுகம்!

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை நீக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற பாஜக தமிழகம், ஆந்திரா, கேரளாவில் மட்டும் படுதோல்வியை சந்தித்து. மேற்கு வங்கத்தில் வெற்றி வாகை சூடியது. தெலுங்கானாவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வாக்குகளை பெற்றது. இதனை அடுத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தென் மாநிலங்களில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளாவில் பாஜகவை வலுவாக காலூன்றச் செய்ய பல்வேறு வியூகங்களை அமித் ஷா வகுத்து வருகிறார். அதன்படி தமிழக பாஜகவிற்கு புதுமுகம் ஒருவரை தலைவராக நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து வரப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.இது குறித்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.இதேநேரம், புலனாய்வுத்துறை அதிகாரிகளை புகைப்படம் எடுப்பதற்கும் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வேலூரில் புயல் வேகத்தில் தேர்தல் பணி... திமுகவிற்கு பீதி கிளப்பம் ஏ.சி. சண்முகம்!

வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அதாவது தேர்தல் தேதி அறிவித்த அன்றே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் பணிகளை துவக்கினார் ஏ.சி. சண்முகம்.
பணப்புழக்கம் அதிகம் இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சுமார் 13 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. இந்த பணம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் ரத்தால் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டது அதிமுக சார்பில் களம் இறங்கிய ஏசி சண்முகம் தான்.
ஏனென்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நாள் வரை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை அவர்

Friday, July 12, 2019

ராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி!

பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறாததை அடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார்.தனது குடும்பத்தில் இருந்தும் யாரையும் தலைவர்

சஹ்ரான் (ஐஎஸ்) இலங்கைக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு ஐ.எஸ் இடம் கோரியிருந்தார் !

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள்  பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்  ஆரம்பிக்கப்பட்டு ​நேற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

சீனாவிடம் பணம் வாங்கிய அமெரிக்க துாதரக அதிகாரிக்கு சிறை!

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை பணத்துக்காக சீனாவிடம் வழங்கிய துாதரக பெண் அதிகாரிக்கு 40 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அமெரிக்காவை சேர்ந்தவர் கண்டசி மேரி கிளைபோர்னி 63. அமெரிக்க வெளியுறவு அதிகாரியாக பணியாற்றிவந்தார். இவர் சீனா தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ள அமெரிக்கத துாதரக கிளைகளில் 2007ம் ஆண்டு முதல் அலுவலக நிர்வாகியாக பணியாற்றினார்.
அப்போது சீன பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தை சேர்ந்த இரண்டுபேர் கிளைபோர்னியை சந்தித்துள்ளனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த முக்கிய

Thursday, July 11, 2019

வக்கிர புத்தியில் குழந்தைகள் மீது கை வைக்கும் ஒருத்தரும் இனி உயிரோடு தப்ப முடியாது-மரண தண்டனைக்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய அரசு.!

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்குவது உள்ளிட்ட போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை

வைகோவுக்கு எதிராக துணை ஜனாதிபதியிடம் புகார்!

மாநிலங்களவை உறுப்பினராக வைகோவை பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்த வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனால் திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனுதாக்கல் செய்தார். வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு வைகோ மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

அரசாங்கத்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளிலே! மனம் திறந்து கூறினார் மஹிந்த!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சம்பந்தன் - சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று வாக்களித்தால்தான் வெற்றி கிடைக்கும்; அரசும் கவிழும்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் (Gilles de Kerchove) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.குறித்த அறிக்கையில், கில் டி கெர்ச்சோவ் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நாளை(12) முதல் ஜூலை 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அவர் தனது இலங்கைக்கான விஜயத்தின் போது அரசாங்க உறுப்பினர்கள்,

பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!

தி.மு.க.வில் அதிகாரமிக்க அமைப்புகள் என்று மாணவர் அணியையும் இளைஞர் அணியையும் தான் கருணாநிதி குறிப்பிடுவார்.மாணவர் அணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டது. அடுத்து இளைஞர் அணி 1980-களில் தமிழ்நாட்டு இ
ளைஞர்களிடம் தி.மு.க.வை கொண்டு சென்றது. அவசர காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினின் போராட்டங்களுக்காக அவருக்கு கிடைத்த பதவி.சுமார் 30 ஆண்டுகளாக ஸ்டாலின் வசம் இருந்த இந்த பதவி, கடந்த 2 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைக்குள் இருந்தது. தி.மு.க.வின் அதிகாரமிக்க பதவியான இந்த பதவிக்கு வந்து இருக்கிறார் உதயநிதி

Wednesday, July 10, 2019

கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!

இலங்கை கரையோர பாதுகாப்பு படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்   இடம்பெற்றது. நேற்று காலை இடம்பெற்ற இக்கூட்டத்தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.வைபவ இடத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்கள் வரவேற்றார். இந்த ஆண்டு இடம்பெறும் இம் மாநாட்டில் பல்வேறு உறுப்பு

அமெரிக்காவில் புயல்மழை அதிபர் மாளிகைக்குள் வெள்ளம் புகுந்தது!

அமெரிக்காவின் நேற்று முன்தினம் திடீரென புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜினியா மாகணங்களில் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் 4 அடி அளவுக்கு வெள்ளம் தேங்கியிருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு பூங்கா பகுதியில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் பல கார்கள் சிக்கின. இதனால் அதில் பயணம் செய்தவர்கள் தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர். ரீகன் விமான நிலையத்திலும் வெள்ளம் புகுந்ததால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீத கிரீன்கார்டு வழங்கும் மசோதாவை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

அமெரிக்காவில், ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் கிரீன்கார்டு வழங்கும் திட்டத்தை நீக்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் இந்தியர்கள் கூடுதல் பலன்பெறுவார்கள்.அமெரிக்காவிற்கு இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் வேலைக்காக எச்1பி விசா மூலம் செல்கின்றனர். இவ்வாறு அங்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற செல்லும் இந்தியர்கள் நிரந்தரமாக தங்கி பணிபுரிய அல்லது வீடு வாங்க கிரீன்கார்டு அவசியம். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள குடியேற்ற சட்டப்படி பிற நாட்டை சேர்ந்தவர்கள் தலா 7 சதவீதம் பேர் தான் கிரீன்கார்டு பெற முடியும். இதனால் பல லட்சம் ஐடி இந்தியர்கள் 70 ஆண்டுக்கும் மேலாக காத்திருந்தும் கிரீன்கார்டு பெற முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

Tuesday, July 9, 2019

அறிவாளித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து, ப்யூஷ் கோயலிடம் மூக்குடைந்த தி.மு.க எம்பி கனிமொழி!

அறிவாளித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து, அறிவிலித்தனமாக ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயலிடம் மூக்குடைந்த தி.மு.க எம்பி கனிமொழி - பரிதாப காட்சி! தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, ரயில்வே ஊழியர்களின் நலன்
கருதி ரத்தக்கண்ணீர் விடுவதாக நினைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்டதிலேயே மூக்குடைந்து போகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். அவர் , “மத்திய அரசு, ஏன் ரயில்வேயில் உள்ள ஐந்து பிரிண்டிங் பிரஸ்களை மூடியது. அவர்கள் வேலை வாய்ப்பு என்னாவது.? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். உலகமே இன்டெர் நெட், ஆன்லைன் என்று மிக வேகமாக போய் விட்டது. இந்த நேரத்தில் பிரிண்டிங் பிரஸ்

இங்கிலாந்து தூதர் மீது டொனால்டு டிரம்ப் பாய்ச்சல்!

தகுதியற்றவர் என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடிந்துகொண்டார். இந்த மோதலால் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருப்பவர் கிம் டர்ரோச். இவர், இங்கிலாந்து அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம், எப்படியோ கசிந்துள்ளது. அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பையும், அவரது அரசையும் கிம் டர்ரோச் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.அதில், கிம் டர்ரோச் கூறியிருப்பதாவது:-அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தகுதியற்றவர். பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும்

சடடத்திற்கு விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 இந்தியர்கள் கைது!

சடடத்திற்கு விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 இந்தியர்கள் கைது!
 
சடடத்திற்கு விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் அழுத்கம பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படு உணவகம் ஒன்றில் வேலைபார்த்துள்ளதுடன் அதில் 12 பேர் சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சந்தேக நபர்கள் மிரிஹான பகுதியில் அநை்துள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறை மேற்கொண்டு வருகின்றது

உடைந்தது சீ.வி.விக்னேஸ்வரன் - கஜேந்திரகுமார் உறவு: சு.பிரேமசந்திரன் இன்றி பேச்சுவார்த்தை இல்லை!

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டுள்ளதாக, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இவ்வாறான கூட்டணியை அமைப்பதற்கு, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியை விலக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தது.எனினும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை

Monday, July 8, 2019

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!

கனிமொழி வெற்றியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகிறார்.மக்களவைத் தேர்தல் நடந்த சமயத்தில் வேலூர் தொகுதியில் ரூ.10 கோடி பணம் கைப்பற்றப்பட்டதால் அங்கு நடக்க இருந்த தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இதுபோலவே தேனி தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேனி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அந்தத் தொகுதியின் வாக்காளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வேலூர் தேர்தலை ரத்துசெய்தது போலவே தூத்துக்குடி தொகுதி தேர்தலையும்

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட P-625 கப்பல் கொழும்பில்!

சீன அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள P625 கப்பல் இன்று(08) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்காக இக்கப்பல் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கட்டளைத்தளபதி இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.1994ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம் 112மீற்றர், அகலம் 12.4 மீற்றர் ஆகும். இதன் எடை 2300 தொன்கள் ஆகும். இதில் 18 அதிகாரிகள் உள்ளடங்களாக 110 பேரைக் கொண்ட பணியாளர் சபையும்

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது..?

கர்நாடகாவில் சுயேச்சை எம்எல்ஏ எச்.நாகேஷ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.224 உறுப்பி
னர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு, சபாநாயகரையும் சேர்த்து 79 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆளும் கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும், ஒரு பகுஜன்சமாஜ் உறுப்பினர் ஆதரவும் இருந்தது.

தமிழக மக்கள் வருத்தப்பட்டதால் வலைத்தள பதிவை நீக்கி விட்டேன்: கிரண்பேடி!

தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது, தமிழக மக்களை வருத்தமடைய செய்ததால், அந்த பதிவை நீக்கி விட்டேன் என கிரண்பேடி தெரிவித்தார்.புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக நான் தமிழர்களுக்காக சேவை செய்து கொண்டு இருக்கிறேன். புதுச்சேரி முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றனர். தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தது, தமிழக மக்களுக்கு வருத்தம் ஏற்படும் வகையில் இருப்பதாக அறிந்ததும் அதை நீக்கிவிட்டேன்.
தமிழக மக்கள் தண்ணீர் பிரச்சினையில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பைத் தாருங்கள்: BBS!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பை இந்நாட்டிலுள்ள பிக்குகளிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொள்வதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் நேற்று  கண்டியில் வைத்து தெரிவித்தார்.அடிப்படைவாதம் எனும் விசப் பாம்பை அழிப்பதற்கு முடியும், தர்மம் எனும் பெயரையுடைய வாளினால் மாத்திரமே முடியும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிக்குகளும் இப்போதாவது பீட பேதம், நிற பேதம் என்பவற்றைப் பின்னால் வைத்து விட்டு தேசிய பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் எனவும் தேரர்

Saturday, July 6, 2019

கேள்விக்கு பயந்தே தி.மு.க. எம்பி பெருத்த தூக்கமா.? முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே திமுகவிற்கு முக்காடு போட வைத்த சம்பவம்.!

நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டதற்கே, ஏதோ சரித்திர சாதனை படைத்தது போல பீற்றிக்கொண்ட திமுக எம்.பிக்கள், நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை கண்டு வயாடைத்து போய் நின்றனர்.பாராளுமன்றத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். இதனை திரு திருவென விழித்துக்கொண்டே பார்த்த திமுக எம்பிக்கள் ‘நாம் வெறும் தமிழ் வாழ்க என்று எளிதாக வாயில் வந்ததை கூறி அரசியலாக்க

இலங்கையில், அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லை -அலேனா டெப்பிளிஸ்!

இலங்கை – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எவ்விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலேனா டெப்பிளிஸ் (Alaina Teplitz) வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதெனவும், தேசிய தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டார்.அமெரிக்க இராணுவ முகாம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுமென்று ஊடகங்களின் ஊடாக போலியான பிரச்சாரங்கள்

Friday, July 5, 2019

மரண தண்டனையினை நிறைவேற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை கொழும்பு – உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றினை இன்று(05) பிறப்பித்துள்ளது.
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

புலிகளுக்கு ஆதரவாக பேசிய வைகோ: எம்பி ஆக நினைத்த வைகோ: கம்பி எண்ண வைத்த வழக்கு!

புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சிறப்பு கோர்ட், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வி
தித்துள்ளது.கடந்த 2009 ல் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ல் வழக்கு தொடரப்பட்டது. இதில் சில நாட்கள் வைகோ சிறையில் இருந்தார். இந்த வழக்கில் இன்று (ஜூலை 5) தீர்ப்பு வழங்கிய சென்னை சிறப்பு கோர்ட், வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

Thursday, July 4, 2019

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் பெண்களை களையெடுக்க “ராணுவ பெண் போலீஸ் படை”! 100 இடங்களுக்கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர் !!

ஆண்டுக்கு 100 பெண்கள் வீதம் அடுத்த 17 ஆண்டுகளில், ராணுவ போலீஸ் பணியில், அதிகாரிகளுக்கு கீழான அதிகாரத்தில் 1,700 பெண்களை நியமிக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்தது. இதற்காக தேர்வு செய்யப்படும் பெண் வீராங்கனைகளுக்கு பெங்களூருவில் பயிற்சி அளிக்க ரா
ணுவம் முடிவு செய்துள்ளது. பின்னர் அவர்களை காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெண் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: –ராணுவ போலீஸ் அதிகாரிகளாக பெண்களை நியமிக்க தேர்வு நடந்து வருகிறது. 100 பணியிடங்களுக்கு தற்போது வரை 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள்

ராகுல் காந்தியின் ராஜினாமா, காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம்: பாஜக கருத்து!

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.அப்போது அவர் கூறுகையில், பழமையான காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம் இது என்றும், இதில் தாங்கள் சொல்வதற்கு ஒன்று இல்லை என்றும் தெரிவித்தார்.  ராகுல் காந்தி பதவி விலகியது பற்றி, அமேதி தொகுதியில் அவரை தோற்கடித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கருத்து கேட்ட போது, “ஜெய்ஸ்ரீ ராம்” என்று மட்டும் கூறினார்.பாரதீய ஜனதா செய்தித்

மரண தண்டனை அமுல்படுத்துவதை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரிய மனு ஒத்திவைப்பு!

மரண தண்டனை அமுல்படுத்துவதை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி, ஊடகவியலாளர் ஒருவரால், தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை(05) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையெனத் தெரிவித்து, எதிர்ப்புக்கான விளக்கங்களை சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் நாயகம் நெரின் புள்ளே இன்று(04) நீதிமன்றத்தில் முன்வைத்தார்.பிரதி சொலிஸிட்டர் நாயகம் நெரின் புள்ளே முன்வைத்துள்ள எதிர்ப்பு தொடர்பில், மேலதிக விளக்கங்களை முன்வைப்பது நாளை வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு

பலாலி விமான நிலையம் சர்வதேசமயமாகிறது!

பலாலி விமான நிலையம் சர்வதேசமயமாகிறது!
பலாலி விமான நிலையம் எதிர்வரும் காலத்தில் சர்வதேசமயமாக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.
 
அதன்படி, எதிர்வரும் காலங்களில் சிவில் விமான நிலையமாகவும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.மான நிலையமாக தரமுயர்த்துவது மற்றும் அதற்கு தேவையான காணிகள், அதனை அண்டிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘எச்1-பி’ விசா முறைகேடு - 4 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் ‘எச்1-பி’ விசா மோசடி தொடர்பாக விஜய் மனோ உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் 4 பேரும் ‘எச்1-பி’ விசா திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது, ரகசிய விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, இவர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு ‘எச்1-பி’ விசா மூலம் ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்திக் கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிடுவார்கள்.
இந்த மோசடி தொடர்பாக விஜய் மனோ உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே சமயம் இது தொடர்பாக வழக்கு விசாரணை நியூஜெர்சி கோர்ட்டில் நடந்து வருகிறது.

தேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா 6 ம் தேதி சென்னை வருகை: தமிழக பாஜக 6 மண்டலங்களாக பிரிக்கப்படுவதாக பேச்சு !

அமித் ஷா, உள்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து, கட்சியின் புதிய தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜே.பி. நட்டா, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அதன்ஒருபகுதியாக, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி, தேசிய அளவில் வரும் 6ம் தேதி துவங்குகிறது.தமிழக பா.ஜ.க,வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை, சென்னையில் ஜே.பி. நட்டா துவக்கிவைக்கிறார். அதேபோல், பிரதமர் மோடி வாரணாசியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை, தெலுங்கானாவிலும் வரும் 6ம் தேதி துவக்குகின்றனர்.தமிழகத்தில் மொத்தம்

US நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பாடு: எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது, நெறிமுறையற்ற உடன்பாடுகளை அடுத்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.இந்த உடன்பாடுகளை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க அரசாங்கம் முற்படும் போது,

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த ரணில் தலைமையிலான அரசாங்கம் முயற்சி: தினேஸ் குணவர்தன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீக்கி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.எனினும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி அவசரகாலச் சட்டத்தை நீடித்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாக தினேஷ் குணவர்தன பெருமிதம் வெளியிட்டிருக்கின்றார். .அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்

காங்., கட்சி தலைவர் பதவி ராஜினாமா விளக்கம்: ராகுல் உருக்கம்!

காங்., கட்சி தலைவர் பதவியை நேற்று
முறைப்படி ராஜினாமா செய்துள்ள ராகுல், தனது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.அதில் அவர், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்., கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. கட்சியின் தலைவர் முறையில் 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். தோல்விக்கு நான் உட்பட பலர் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.சுமூகமான தலைமை மாற்றத்திற்கு நான் முழு

Wednesday, July 3, 2019

வைகோவின் எம்.பி கனவு அம்போவா? தேச துரோக வழக்கால் சிறைக்கு செல்வாரா இல்லை ராஜ்யசபாவிற்கு செல்வாரா?

தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 24 – ல் முடிவடைகிறது. புதிய எம்.பி.க்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18- ல் நடைபெறுகிறது; இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி விட்டது. அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளின் சார்பில் தலா மூன்று எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.நாடாளுமன்ற தேர்த
லில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ம.தி.மு.க.வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து ம.தி.மு.கவின். மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று சென்னையில்

இலங்கை தமிழ் பெண் அவுஸ்திரேலியாவில் கொலை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த 52 வயதான தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்தின் பேரில் தேவகியின் கணவர் குயின்லாந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட

இலங்கை அகதிகள் நலன் குறித்து இரு நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டும்!

இந்தியாவில் வசித்து வருகின்ற இலங்கை  அகதிகள் நலன் தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று த ஹிந்து பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.தற்போது 95 ஆயிரம் இலங்கை  அகதிகள்  வரையில் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர்.அவர்களில் பலர்இலங்கைக்கு திரும்ப விருப்பம் கொண்டுள்ளனர்.ஆனால் தற்போது பலர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தநிலைமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.நீண்டகாலமாக குறித்த

தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி! சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 3 – வது வாரத்தில் தமிழகம் வர உள்ளார். இதற்கான தேதி இன்னும் வெளியாகவில்லை.இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை ஐஐடியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்
.இது குறித்து சென்னை ஐஐடி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சென்னை ஐஐடி, இந்த ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இந்த ஆண்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அழைப்பை, பிரதமர் மோடி ஏற்று கொண்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விழாவிற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார்.