Tuesday, July 9, 2019

அறிவாளித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து, ப்யூஷ் கோயலிடம் மூக்குடைந்த தி.மு.க எம்பி கனிமொழி!

அறிவாளித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து, அறிவிலித்தனமாக ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயலிடம் மூக்குடைந்த தி.மு.க எம்பி கனிமொழி - பரிதாப காட்சி! தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, ரயில்வே ஊழியர்களின் நலன்
கருதி ரத்தக்கண்ணீர் விடுவதாக நினைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்டதிலேயே மூக்குடைந்து போகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். அவர் , “மத்திய அரசு, ஏன் ரயில்வேயில் உள்ள ஐந்து பிரிண்டிங் பிரஸ்களை மூடியது. அவர்கள் வேலை வாய்ப்பு என்னாவது.? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். உலகமே இன்டெர் நெட், ஆன்லைன் என்று மிக வேகமாக போய் விட்டது. இந்த நேரத்தில் பிரிண்டிங் பிரஸ்
பற்றி கவலைபடும் ஒரே ஆள் இவராக தான் இருக்க முடியும். அதுவும் வேலைவாய்ப்பு பறிபோகுதாம்.

அதற்கு ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் சரியான சாட்டை அடி கொடுக்கும் விதமாக கீழ்கண்டவாறு பதிலளித்தார்.
 
அவைத்தலைவர் அவர்களே, உலகம் எதிர்காலத்தையும், நவீன தொழில் நுட்பத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஈ-டிக்கெட், ஆன்லைன் டிக்கெட் என்று மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் பிரிட்டீஷ் காலத்தில் அமைக்கப்பட்ட பிரிண்டிங் பிரஸ்ஸை மூடக் கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த பழைய அச்சகங்களில் பிரிண்டிங் செய்தால் மிகப்பெரும் செலவினங்களை செய்ய வேண்டி உள்ளது. இதனால் சில சமயங்களில் டிக்கெட்டுகளின் விலையை விட அதனை அச்சடிக்கும் செலவு அதிகமாக உள்ளது. மேலும் இப்படி செலவீனங்களை நாம் குறைக்காமல், ரயில்வே துறையை திறனுள்ள லாபம் ஈட்டும் துறையாக மாற்றாமல் இருந்தால், டிக்கெட் விலையை ஏற்ற வேண்டி வரும், அதன் மூலம் அரசியல் செய்யலாம் என இவர்கள் யோசிக்கிறார்கள். அது நடக்காது. ரயில்வே துறை ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிறப்படையும். என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment