Tuesday, April 30, 2019

மேலும் இருவர் பலி! மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 28ஆக உயர்ந்துள்ளது!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 28ஆக உயர்ந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நாவற்குடாவினை சேர்ந்த ரஞ்சித் சுரங்க (45வயது) நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோன் கல்லடி வேலூர் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான திருமதி கிருஜா பிரசாந் (35) பெண் நேற்று காலை உயிரி

சுரங்க என்பவரின் மனைவி குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வானின் மரண விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார்: ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையின் (Alliance of Civilizations) இன் உப செயலாளர் மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம், ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு தமது அனுதாபங்களை மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ் தெரிவித்துக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் தற்போதைய நிலைமையில், இலங்கை மக்களிடையேயான ஒற்றுமையை நிலைநாட்ட தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.

இலங்கையின் இராணுவத்துக்கு சரியான தலைமைத்துவம் வழிகாட்டினால் வெளிநாட்டு இராணுவ உதவி இன்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும்: மகிந்த ராஜபக்ஷ!

இலங்கையின் இராணுவத்துக்கு சரியான தலைமைத்துவம் வழிகாட்டினால், வெளிநாட்டு இராணுவ உதவி இன்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
சீ.என்.என்னிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த விபரங்களை இந்த அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்தது. ஆனால் அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்த அவதானம் செலுத்த தவறிவிட்டனர்.
இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி இருக்கிறது. அதன் புலனாய்வுத் தகவல்களும் இலங்கைக்கு ஏலவே கிடைக்கப்பெற்றுள்ளன.
 
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா என எந்த நாடானாலும் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புமாறு கோரினால் அந்த நாடுகள் இராணுவத்தை அனுப்பும். ஆனால் இலங்கையில் இருப்பது 30 வருடகால யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவம். அவர்களால் இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும். ஆனால் இயலுமை மிக்க தலைமைத்துவம் ஒன்று அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்று நான் அமெரிக்க பிரஜை இல்லை! இலங்கை பிரஜை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

இன்று நான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும், இலங்கை பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்று  இரவு இடம்பெற்ற 360 அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் தன்னை எதிர்பார்ப்பதால், தான் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 

லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளின் பிரதானி என கருதப்படும் IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி மீண்டும் தோன்றினான்!

மீண்டும் தோன்றிய “பக்தாதி”லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளின் பிரதானி என கருதப்படும் IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி சற்றுமுன் வீடியோவில் தோன்றிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!
 
2014 இல் குண்டுத்தாக்குதல் ஒன்றில் “பக்தாதி” கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 5 வருடங்களின் பின்னர் தன் முக்கிய சகாக்களுடன் நேற்று 18 நிமிட வீடியோவில் தோன்றியுள்ள காட்சிகள் வைரலாக பரவி வருகிறது!
குறித்த காணொளியில் சிரியா மற்றும் ஈராக்கில் யுத்தம் செய்வதனை வலியுறுத்திய பக்தாதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து பெருமித்து பேசியதாகவும் புர்கான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சிஐஏ வால் பயிற்றுவிக்கப்பட்ட எல்லியட் சாம் என்ற அபுபக்கர் அல்பாக்தாத் இறந்துவிட்டதாக அமெரிக்கா 2வருடத்திற்கு முன் கூறிய போதும்‌ நான் உயிருடன் இருக்கிறேன் என பேட்டி தராதவர்.இலங்கை தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்க படைகள் இலங்கையில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பிறகு தான் அல்பாக்தாத் என்ற எல்லியட் சாம் ஒரு காணோலியை வெளியிடுகிறார்கள்.அதில் இலங்கை தாக்குதல் நடத்தியது பளிவாங்குவதற்கு தான் என அதில் கூறப்பட்டுள்ளது  (ஆதாரம்: Al-Jazeera 29-04,2019)

ISIS leader al-Baghdadi shocks world with first sighting in years: Report!


பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (29) பெற்றுக்கொண்டுள்ளார். 
 
கொழும்பில் பொலிஸார் மற்றும் முப்படையினரை மையப்படுத்தி தலைமையகம்!
 
மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவுகள் கொழும்பை மையப்படுத்திய ஒட்டுமொத்த நடவடிக்கை தலைமையகத்தின் கீழே உடன் அமுலுக்கு வரும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் எங்கே?

இலங்கையில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து, அதன் சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல் போயோ இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

மொஹமட் ஹாசிம் மதானியா என்ற அவர், சீ.என்.என். ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சஹ்ரானின் தந்தையும் இரண்டு சகோதரர்களும் உயிரிழந்தனர்.

அவர்களுடன் ஆறு சிறார்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 29, 2019

மத்தியகிழக்கு தீவிரவாதம்! இலங்கையில் பயங்கரம் தீவிரவாதம் - isis vs ltte sucide attack!!

ஜிகாத் அமைப்பு இலங்கையில் வளர்ச்சியடைந்த விதத்தினை கடந்த 21 ஆம் திகதிதான் உலகம் அறிந்துகொண்டது. இது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியினையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதன்மூலம் மத்திய கிழக்கின் இரத்த கரை படிந்த எல்லைகள் இந்த தீவை நோக்கி நகர்த்தமை தெரியவந்துள்ளது.
 
ஐக்கிய அமெரிக்காவின் அரச திணை;கள அதிகாரிகள் ‘இலங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எந்தவிதமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்கள்.
சில தசாப்;தங்களுக்கு முன்பு இந்த நாட்டில் வியாபித்த பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்களை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான வருடமாக மாறியது.
அந்த வருடம் வன்முறை தாக்குதல்களும் ஜிஹாத் அமைப்பினரின் தாக்குதல்களுட் படிப்படியாக வளர்ந்து 2019 ஆம் மிகவும் பயங்கரமாக வெடித்தது.கடந்த 30 வருடங்களாக இலங்கையில்  புலிகளின் பய்ஙகரவாத செயல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.புலிகள் சீருடை அணிந்தவர்களாகவும், கடற்படை மற்றும் விமானப்படை போன்ற போன்ற படைகளை அமைத்து ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்த அதேநேரத்தில் அவர்கள் ஓரு அரசங்கமாகவும் மாறியிருந்தார்கள்.
கடந்த 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் அவருடைய சகோதரரரான கோட்டாபய ராஜபக்ஷவை செயலாளராக நியமித்ததன் பின்னர் புலிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கும் வழக்கத்தினையும் கைவிட்டார்.அதே நேரத்தில் மகிந்த தலைமையிலான அரசாங்கம் புலிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களை பூண்டோடு அழித்தது.இன்று அந்த பயங்கரவாத இயக்கம் மக்களின் நினைவில் நிழலாடுவதுடன் சில இணையதத்தளங்களில் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது.
 
ஆனால் இன்று இலங்கையில் தீவிரவாத பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இலங்iகில் இஸ்லாமியர்களுடைய அச்சுறுத்தல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட காணொளியில் இலங்கை வைத்தியர்கள் ஈராக் ரக்கா, சிரியாவில் சிகிச்சையளிப்பதை எடுத்துணர்த்தியது.கடந்த 2016 ஆம் ஆண்டு நீதியமைச்சராக கடமையாற்றிய நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் போது ‘ இலங்கையில் நன்றாக கல்வி கற்ற 32 முஜ்லிம்கள் ஐ.எஸ.ஐஎஸ் அமைப்புடன் இணைந்து சிரியாவில் இணைந்து போராடுவதாக குறிப்பிட்டார்.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஐ.எஸ.ஐஎஸ் பயங்கரவாத கூடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பயங்கரவாத கூடம் அநுராதபுரத்திலுள்ள பௌத்த விகாரைகளை குண்டு வைத்து தாக்க திட்டமிட்டமை கண்டறியப்பட்டது.இன்று இலங்கையிலுள்ள ஜிஹாத் அமைப்பினர் கிறிஸ்த்தவ மதங்கள் மற்றும் உல்லாச பயணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த முன்வந்துள்ளது.
 
கடந்த 21 ஆம் திகதி வன்முறைகளை நடத்தியதும் இந்த அமைப்பாகும்.30 நிமிட இடைவெளிக்குள் 8 தற்கொலை குண்டுதக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.கிறிஸ்த்தவ தேவாலயங்கள் மற்றம் நட்சத்திர விடுதிகள் என்பன தாக்கியளிக்கப்பட்டன.இவ்வளவு தீவிரமான ஒரு திட்டத்தை தேசிய ரீதியில் நடத்தியமைக்கு தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பு உரிமை கோரியதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகையில், ஒரு சர்வதேச வலைபின்னல் இல்லாமல் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது.
 
அதேநேரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரும் இந்த தாக்குதலை கொண்டாடியும் உரிமைகோரியும் இருந்தனர் என்பதோடு, இலங்கையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை ஸ்ரீ லங்கா ஜிஹாடி எ பெயரிட்டிருந்தனர்.இந்த தீவிரவாத அமைப்பு மத்திய கிழக்கில் தாக்கப்பட்டபொழுது சிரியாவிலிருந்த ஸ்ரீ லங்கா ஜிஹாடி அமைப்பினர் நாடு திரும்பினர்
.அது மாத்திரமன்று, சர்வதேச ரீதியில் இடம்பெற்ற போதை பொருள் வர்த்தகம் இலங்கையில் தீவிரவாதம் வளர்வதற்க காரணமாக அமைந்தன.கொழும்பின் தெற்கே இஸ்லாமியர்கள் வாழும் பிரதேசமாகும். அந்த பிரதேசத்தின் ஒரு பாரிய போதை பொருள் விநியோகஸ்த்தரான தாவுத் இப்ராஹிம் கஸ்கர் போதை பொருள் விநியோகத்திற்கான ஒரு அமைப்பினை உருவாக்கினர்.அவர் பாரிய அளவிலான போதை பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் திரைசேரி திணைக்களம் இப்ராஹிம் தாவுத்தை பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று பிரகடனபடுத்தியது.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை பொலிசாரின் வாக்குமூலத்திற்கு அமைய தாவுத்திற்கு சொந்தமானது என கருதப்படும் 736 கிலோ கிராம் போதை பொருளை கைப்பபற்றினர்.இந்த தாவுத் என்பவர் ஆரம்பத்தில் அப்கானிஸ்தானில் தலிபான்களின் உதவியோட அபின் வியாபாரத்தில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் ஐ.எஸ அமைப்பினர் பாகிஸ்தான் உளவு துறை ஊடாக அபினை நாடு கடத்த முயற்சித்தனர்.அத்துடன் பாகிஸ்தர்ன கராச்சியிலுள்ள தாவுத்தின் வீட்டினை பாகிஸ்தான் உளவு பிரிவின் பாதுகாத்து வருகின்றனர்.இந்த போதை பொருள் விநியோகம், இந்தேநேசியா சிங்கப்பூர், தாய்லாந்து வியட்நாம், பங்களாதேஷ், இந்தியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
 
இவ்வாறு நடைபெறும் போதை பொருள் விநியோகத்தின் கிடைக்கப்பெறும் இலாபத்தினை அல்கய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ், லக்சரி டீ தொயிபா, ஜமாத் ஆகிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பிரித்து வழங்கக்படப்டன.சட்டவிரோதமான அமைப்பு, போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் ஆகியனவற்றினால் இலங்கையில் வன்செயல்கள் இடம்பெறலாம் என்று கருதப்படுகின்றது.
 
இந்த 3 விடயங்களை தடுத்தாலன்றி வேறொன்றும் செய்யமுடியாது. பயங்கரவாத விடுதலை புலிகளை முறியத்த பின்னர் புதிதாக முளைத்துள்ள மத்திய கிழக்கு நாட்டிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் தiதூக்க தொடங்கியுள்ளது.இந்த பயங்கரவாத்தினை முறியடிக்க வே;ணடும் என சர்வதேசத்தினர் அரசாங்கத்தினை எச்சரிக்கின்றனர்.இது முஸ்லிம்களுக்கு எதிரான விளைவுகளை உருவாக்கும் என்பதோடு இதனை தடை செய்வது கடினமான விடயமாகும்.

Lankatime:ලංකා වේලාව:லங்கா ரைம்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளிடம் மஹிந்த ராஜபக்ஸ அவசர வேண்டுகோள்!

 எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் பலர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று விஜேராபவிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் வீட்டில் நடைபெற்றுள்ளது.நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் கடற்படைத் தளபதிகளான வசந்த கரன்னாகொட, மொஹான் விஜேவிக்ரம, முன்னாள் இராணுவத் தளபதிகளான தயா ரத்னாயக்க, ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஸான் குணதிலக்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஸ, ஜி.எல். பீரிஸ், பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அடிப்படைவாதத்தை தோற்கடிக்கவும், தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தவும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை அவசரமாக வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறித்த முன்னாள் பாதுகாப்புப் பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , கல்கிஸ்ஸ - வடரப்பல பிரதேசத்தில் 6 பேரும் மற்றும் வெலிகட பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் நைஜீரியா பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

நவகமுவ பகுதியில் ஈரான் நாட்டவரும் , ரத்மலானை பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை - நெதிமால பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் 38 வயதுடையவர் என காவற்துறையினர் குறிப்பிட்டனர்.
 
சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் மதவாச்சிய - இகிரிகொல்லேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சிய காவற்துறைக்கு மற்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

47 வயதுடைய மொஹமட் ஷாபிர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தேசிய தவூஹித் ஜமாத் அமைப்பின் சார்பில், கொழும்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த ஒருவர் வாழைத்தோட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடம் இருந்து குறித்த அமைப்புக்கு சொந்தமான பொருட்கள் சிலவும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையில் தானே, குண்டு தாக்குதலை நடத்தியதாக சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தெரிவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபரிடம் சென்னை காவற்துறையினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தான் மதுபோதையில் இவ்வாறு அழைப்பை மேற்கொண்டு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
 
துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

.

விசேட செய்தி ! – “தற்கொலை தாக்குதல் வேண்டாமென கூறினோம்” – கைதானோர் பரபரப்பு வாக்குமூலம்!

விசேட செய்தி ! – “தற்கொலை தாக்குதல் வேண்டாமென கூறினோம்” – கைதானோர் பரபரப்பு வாக்குமூலம் !
 
தற்கொலைதாரிகளில் சிலர் இந்தியாவில் பயிற்சிகளை எடுக்க சென்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
தற்கொலை செய்வதையோ அல்லது தற்கொலை தாக்குதல்களையோ இஸ்லாத் அனுமதிக்கவில்லை என்று கூறினாலும் அவர்களில் சிலர் தீவிர அடிப்படைவாதத்துடன் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமற் போனது..”இவ்வாறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் வழங்கியபோது தெரிவித்ததாக பொலிஸ் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
...
தேசிய தவ்ஹீத் ஜமாத் – அரசியல் பிரிவு மற்றும் இராணுவப்பிரிவு என்று இயங்கியதாகவும் அதில் இராணுவப்பிரிவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் தீர்மானித்ததாகவும் கைதானோர் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மேல்மட்டத்திடம் கூறியபோது அது கணக்கில் எடுக்கப்படவில்லை என்றும் தற்கொலை தாக்குதல் நடத்துவதை பெருமையாக சிலர் கருதினார்கள் என்றும் கைதான சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்தது .
 
தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ள கைதானவர்கள் – ஆயுதங்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் முக்கியமான 4 நபர்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர்.
அதுபோல் இந்த தகவல்களின் பிரகாரம் தற்கொலை தாக்குதலுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களென சந்தேகிக்கப்படும் 34 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ள பொலிஸ் அவர்களிடம் இருந்தும் பல முக்கிய தகவல்களை பெற்றுள்ளது.
 
தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் முக்கியமான தற்கொலைதாரிகள் அனைவரும் சம்மாந்துறை வீடொன்றில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதாகவும் அதற்கு முன்னர் பெருமளவிலானோர் காத்தான்குடி வீடொன்றில் ஒன்றாக உணவருந்தியதாகவும் தெரியவந்துள்ளது.
 
தற்கொலைதாரிகளில் சிலர் இந்தியாவில் பயிற்சிகளை எடுக்க சென்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டுள்ளது!

தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் இதுவரை தீர்க்கப்படாது இருந்த முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானின் வாகன சாரதியாக கடமையாற்றிய கபூர் மாமாவைக் கைதுசெய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
 
அத்துடன் அது தொடர்பில் மேலும் இரு காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் நிந்தவூர் மற்றும், புத்தளம் - வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு கண்டறியப்பட்டன. அத்துடன் அவற்றிலிருந்து ஆயுதங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலை பொலிஸாரினால், திருகோணமலை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

EP KO 4217 என்ற TOYATA சில்வர் நிற காரில் தீவிரவாதிகள் திருகோணமலை நகருக்குள் ஊடுருவி உள்ளதாக, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்! 

 எனவே திருமலை வாழ் மக்கள், இந்த இலக்கமுடைய வாகனத்தை பொது இடங்களிலோ, வணக்க ஸ்தலங்களிலோ கண்டால், உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! 

பொலிசார் திருகோணமலை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Trincomalee Police Headquarters  0262 222223
 
Uppuveli Police Station 0262 222522

நாட்டின் பாதுகாப்பு கருதி இன்று முதல் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது!

 பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் இன்று முதல் பொது இடங்களில் முக அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதபடி புர்கா அணிதல் தடை செய்யப்பட்டுள்ளது!
 
Wearing of burka & other garments covering full face will be banned from tomorrow by the President under Emergency Regulations to ensure public safety.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இன்று முதல் முகத்தை மூடுவது தடை!

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இன்று  முதல் அமுலுக்கு வரும் வகையில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது அதேவேளை அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை அணியக் கூடாதென அரசு அறிவித்துள்ளது.ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
 
இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (2019.04.29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உரு
வாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sunday, April 28, 2019

படத்தில் உள்ள (ஐஸ் தீவிரவாத சந்தேக நபர்கள்) பற்றிய விபரங்கள் தெரிந்தால் போலீஸாருக்கு முன் கூட்டியே அறிவியுங்கள்!

படத்தில்(ஐஸ் தீவிரவாத சந்தேக நபர்கள்) உள்ளவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் நாட்டின் நன்மை கருதி போலீஸாருக்கு முன் கூட்டியே அறிவியுங்கள்.
 
பிரச்சினைகளை எதிர் நோக்குவதற்கு முதல் பொலிஸிடம் தங்களை உறுதிப்படுத்த ஏதுவாக இருக்கும்.நெஞ்சில் ஈரமில்லாத இந்த காட்டுமிராண்டிகளை கண்டு பிடிப்பதற்காக
 
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
071 8591771
011 2422176
011 2395605

Lankatime:ලංකා වේලාව:லங்கா ரைம்


                               Lankatime.over-blog.com

Respect our sri lankan army

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளலாம்! சிக்கியது தொடர்பாடல் கருவி!

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், கத்திகள் இரண்டினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ- கல்லெலிய பிரதேசத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த தொடர்பாடல் கருவி ஊடாகப் பயன்படுத்த முடியும்.
அங்கு கிடைத்த சிம் அட்டைகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெயங்கொட பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றினை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்துக்கிடமான முறையில்வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவரும் இளைஞரொருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே நிட்டம்புவையில் இச்சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்களுள் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகித்ததாகக் கூறப்படும் நபரின் மனைவியும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது சம்பவத்துக்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்!

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு.
அத்துடன், சாய்ந்தமருது பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்கள் என குறிப்பிட்டு ISIS ஆல் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.
 
அம்பாறை மாவட்டம், கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.
தமது உறுப்பினர்களின் தாக்குதலில் இலங்கைப் பொலிஸார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது.
...
சாய்ந்தமருது தற்கொலைதாரி றிழ்வான் துப்பாக்கியுடன், உயிர்த்த ஞாயிறு தினமன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரான் ஹாசீமும் நிக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சாய்ந்தமருது சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் ஐ.எஸ் அமைப்பு செயற்பாட்டாளர்கள் 03 பேர் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை!

பாதுகாப்பு தரப்பினரால் கல்முனையில் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பின் போது தமது 3 செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டமையை ஐ.எஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
 
ஐ.எஸ். பிரசார பிரிவான அல் அமாக் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது..
 
அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனினும், தோட்டாக்கள் தீர்ந்ததையடுத்து அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவத்தில் 15 பேர் பலியாகினர்.
 
பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கிடையே வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற ஆயுத மோதலானது தமது செயற்பாடு என ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
அது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட காணொளியில் இருந்த பயங்கரவாதி ஒருவரின் சடலத்தை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர்.

அவர் இலங்கையின் ஐ.எஸ்ஸை பின்பற்றுபவர்களின் தலைவரான சஹரான் ஹாசீமுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை அல் அமாக் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணை!

(ஸ்பெசல் றிபோட்) ஸஹ்ரானின் நெற்வேக்கை அலசுகிறது சீ ஐ டீ!
தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தி தற்கொலைதாரிகளின் முழு விபரங்களை பெற்றுள்ளது சி.ஐ.டி .
...
இதன்படி ,மட்டக்களப்பு சேயோன் தேவாலயத்தில் மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸார் ,கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இப்ராஹிம் இல்ஹாம் அஹ்மத் ,தெமட்டகொடை வீட்டில் பாத்திமா ஜெப்ரியா ,தெஹிவளையில் அப்துல் லத்தீப் ஜெமீல் ,கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் அலாவுதீன் அஹ்மத் முவாத் ,கிங்ஸ்பரி ஹோட்டலில் மொஹம்மட் முபாரக் ஆகியோர் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
 
தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட ,சஹ்ரானின் உறவினர் என்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கவிருந்தாரெனவும் சொல்லப்படும் நவ்பர் மௌலவி என்பவரிடம் நடத்தப்படும் விசாரணைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
அதற்கமைய ,சஹ்ரானின் மனைவி ஹாடியாவின் குருநாகல், கட்டுப்போத்த பொலிஸ் பிரிவின் கெக்குணகொல்ல வீட்டு பகுதிகளில் பொலிஸ் விசேட தேடுதல்களை செய்து வருகிறது.
2017 மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றையடுத்து தலைமறைவான ஸஹ்ரான் , புத்தளம் வண்ணாத்திவில்லு லெக்ரோவத்த பாழடைந்த இடமொன்றில் சில அடிப்படைவாத கருத்துக்களை பயிற்றுவித்து வந்தார் என தெரியவந்துள்ளது.இவருடன் இணைந்து செயற்பட்டதாக சொல்லப்படும் சாதிக் அப்துல்லா,சாஹித் அப்துல்லா ஆகியோரையும் பொலிஸ் தேடுகிறது.
 
சஹ்ரானுடன் முகநூலில் நெருக்கமாக இருந்தவர்களின் பின்னணி குறித்து தேடப்படுகிறது . ஸஹ்ரான் பாவித்ததாக சொல்லப்படும் தொலைபேசியின் சிம் அட்டை மருதமுனை ஒருவரின் பெயரில் இருந்துள்ளது.அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் உறவினர் ஒருவர் ஏமனில் இருப்பதாகவும் அவர் ஐ எஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் பொலிஸ் சொல்கிறது.ஏமனில் உள்ள உறவினருக்கு சிம் அட்டையினை மருதமுனைவாசி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த சிம்மை சஹ்ரானுக்கு வழங்கியுள்ளார்.இது பற்றி விசாரணைகள் நடக்கின்றன.
சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்க தனி குழு ஒன்று செயற்படுகிறது.
பள்ளிவாசல்களில் கத்திகள் !
 
பள்ளிவாசல்களில் கத்தி மற்றும் வாள்கள் கண்டுபிடிப்பது குறித்து விசாரணைகள் நடக்கின்றன.
மாவனல்லை புத்தர் சிலை தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்க பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தற்பாதுகாப்புக்கு இந்த வாள்கள் வழங்கப்பட்டதாக கைதானார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளியில் ஒருவரிடம் மட்டும் 200 வாள்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 300 வாள்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதற்கான பணத்தை தெமட்டகொட வர்த்தகர் ஒருவர் வழங்கியதாக கூறப்பட்டிருப்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.முக்கியமான சந்தேக நபர்கள் சிலர் மலேசியா செல்ல முயன்று சிக்கியுள்ளதாகவும் பொலிஸ் கூறுகிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவத்தை அடுத்து இந்தியர்கள் இலங்கை செல்லுவதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவத்தை அடுத்து இந்தியர்கள் இலங்கை செல்லுவதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.கடந்த 21-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் தற்கொலை படையினர்வெடி குண்டுகளை வெடிக்கச்செய்தனர். இச்சம்பவத்தில் பொதுமக்கள் சுமார் 253க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இச்சம்பவத்தில் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.தொடர்ந்து இலங்கை அரசு இது குறித்து விசாரணை நடத்திவந்தது.மேலும் நாட்டின் பல்வேறு பகுதிளில் அவசரநிலை பிரகடனப்படுத்தியது.

அமெரிக்கா எச்சரிக்கை:

இலங்ககையில் மேலும் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழக்கூடும் என தகவல்கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டிற்கு சுற்றுலாவாக சென்றுள்ள அமெரிக்கர்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தியா அறிவுறுத்தல்

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்தியர்கள் அவசியமின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும், தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தைதவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு உதவி ஏதேனும் தேவைப்பட்டால் அங்கு உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

National Thowheed Jamath and Jammiyathul Millathu Ibrahim banned in Sri Lanka!

President Maithripala Sirisena has taken steps to ban two local Islamist groups in Sri Lanka suspected of carrying out the attacks on churches and hotels on Sunday.
 
In terms of powers vested in him as the President of the Democratic Socialist Republic of Sri Lanka under Emergency Regulations No. 01 of 2019, the President has taken steps to declare the organizations National Thowheed Jamath (NTJ) and Jammiyathul Millathu Ibrahim (JMI) banned in Sri Lanka.
 
As such, all activities of those organizations as well as their property will be seized by the government the President’s Media Division said.
Steps are being taken to ban other extremist organizations operating in Sri Lanka, under Emergency Regulations, the statement said.
 
The Islamic State has claimed responsibility for the coordinated attacks that killed more than 250 people and wounded about 500.
 
The authorities in Sri Lanka have said the attack had been carried out by a local group, National
Thowheed Jamath, with help from international militants and possibly another local militant group, Jammiyathul Millathu Ibrahim.

15 killed as Sri Lanka forces raid Islamist hideout!

Fifteen people including six children died in a battle between Sri Lankan security forces and suicide bombers who blew themselves up in the latest fallout from the Easter attacks, police said Saturday.
Three men set off explosives that killed themselves, three women and six children inside what was believed to a jihadist hideout near the eastern town of Kalmunai on Friday night.
‘Three other men, also believed to be suicide bombers, were found dead outside the house,’ police added in a statement. The three outside were shot dead by security forces, police officials added.
Security forces tried to storm the house and a one-hour long gun battle ensued before the explosions, a military official said.
 
A civilian was also killed in the crossfire during the night-time raid near the predominantly Muslim town, with hundreds of families later fleeing their homes.
Police and troops have stepped up raids after the Islamic State group claimed responsibility for the suicide attacks on three churches and three luxury hotels, which killed least 253 people and injured 500.
Kalmunai is in the same region as the home town of the jihadist Zahran Hashim who founded the group accused of staging the attacks.
The operation followed a tip-off that people linked to the attacks were in the town, 370 kilometers east of the capital.
Video on state television showed explosives, a generator, a drone and a large quantity of batteries inside the house.
 
The clashes came hours after security forces raided a nearby location where they believe Hashim and the other bombers recorded a video pledge of allegiance to Islamic State leader Abu Bakr al-Baghdadi before carrying out the attacks.
Police said they found an IS flag and uniforms similar to those worn by the eight fighters for the video. IS released the video two days after the attacks.
 
Authorities named Hashim’s group, National Thowheeth Jama’ath, as the perpetrators of the attack, but announced Friday he had been killed in the bombing of the Shangri-La hotel in Colombo.
The government is on the defensive over its failure to heed a foreign intelligence warning that NTJ was planning suicide bombings on churches.
 
Police chief Pujith Jayasundara became the second top official to resign over the blunders Friday, after top defence ministry official Hemasiri Fernando also stepped down.
Sri Lanka’s Catholic leader, Cardinal Malcolm Ranjith, the archbishop of Colombo, has said he felt ‘betrayed’ by the government’s failure to act on the warnings.
Prime minister Ranil Wickremesinghe apologised on Friday.
‘We take collective responsibility and apologise to our fellow citizens for our failure to protect victims of these tragic events,’ the PM wrote on Twitter.
 
Amidst fears of new attacks, the Roman Catholic church has suspended all public services across the country until security is guaranteed by the government, with the archbishop appealing to Catholics to stay home and say private prayers.
Security has been stepped up at churches and mosques across the South Asian nation.
Some groups were expected to hold public vigils in Colombo and Negombo, where St Sebastian’s Church suffered some of the worst casualties in the bombings.
The military have poured troops onto the streets to back up police as they search for suspects using newly granted powers under a state of emergency.
At least 94 people are in custody, including a man believed to be the father of two of the bombers. Authorities warned the hunt would continue.

‘We now have info that there are about 140 people in Sri Lanka linked to the Islamic State. We can and we will eradicate all of them very soon,’ president Maithripala Sirisena said Friday, announcing new legislation on extremist groups.
Dozens of foreigners died in the attacks and the government has said it expects the number of overseas tourists to fall by 30 percent this year, at a cost of $1.5 billion in revenues.
Finance minister Mangala Samaraweera said the island - which depends on tourism as a cornerstone of its economy - could take up to two years to fully recover.
The US state department on Friday escalated its travel warning for Sri Lanka and ordered the departure of all school-age family members of US government employees.
Other nations including Israel, Australia and Britain have already warned against visiting Sri Lanka.