Sunday, March 31, 2013

நாளை ஏப்ரல் 1... ரொம்ப சூதானமா இருந்துக்கங்கப்பு...!!!

Sunday, March 31, 2013
சென்னை::முட்டாள்கள் தினம் என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1ம் தேதி நாளை. இதனால் பலரும் பல ரூபங்களில் உங்களை ஏமாற்றலாம். எனவே ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் பொய்யான தகவல்களைக் கூறி ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயல்வது சகஜம்.

மேலும் வதந்தி பரப்புவதற்கும் இந்த நாள்தான் உகந்தது என்பது மக்களின் கருத்தாகும்.

முதன் முதலில் பிரான்ஸில்தான் இந்த ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடியுள்ளனர். உண்மையில் இது முட்டாள்கள் தினமாக முன்பு இருந்ததில்லை. அதாவது 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகள் பலவும் ஏப்ரல் 1ம் தேதியைத்தான் புத்தாண்டாக கருதி அனுசரித்து வந்தன. 1562ம் ஆண்டுதான் கிரகெரியல் காலண்டரை ஏற்று ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தார் அப்போதைய போப்பாண்டவர் கிரகெரி.

ஆனால் இந்த புதிய புத்தாண்டை ஐரோப்பிய மக்கள் உடனடியாக ஏற்கவில்லை. ஒவ்வொரு நாடாக ஜனவரி 1க்கு மெதுவாக மாறி வந்தன. இங்கிலாந்து நாடானது 1752ம் ஆண்டில்தான் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றது.

இந்த நிலையில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்காமல் ஏப்ரல் 1ம் தேதியையே தொடர்ந்து புத்தாண்டு தினமாக கடைப்பிடித்து வந்த நாடுகளை ஐரோப்பிய நாடுகள் முட்டாள்கள் என்று கிண்டலடிக்க ஆரம்பித்தன. இதையடுத்தே ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் போல மாறியது.

வரலாறு எப்படியோ இருக்கட்டும்.. நாளைக்கு நீங்க முட்டாளாகக் கூடாது. பார்த்து சூதானமாக இருந்துக்கங்க, அவ்வளவுதான்.

மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள் 3 பேரும், ஆசிரியர் ஒருவரும் கடலில் மூழ்கி பலி!

Sunday, March 31, 2013
இலங்கை::பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேரும் ஆசிரியர் ஒருவரும் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரக் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட நாவலடி வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.

பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலய ஆசிரியர் கந்தசாமி பிரதாபன் வயது 40 நாற்பது, ஹாலிஎல ஊவா விஞ்ஞான கல்லூரியில் 2012ம் ஆண்டு க.பொ.த. சாதாண பரீட்சை எழுதிவிட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெளிவரவுள்ள பெறுபெறுகளை எதிர்பார்த்திருந்த மாணவர்களான கனகசபை நிதர்சன் (வயது 17), போல்ராஜ் சாந்தன் (வயது 17), பாலசுப்பிரமணியம் அபிசாந்த் (வயது 17), ஆகியோரே நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

மொத்தமாக 9 பேர் கடலில் நீராடியுள்ளதுடன் இவர்களில் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

அண்மையில் இதே கடற்பரப்பில் 2012ம் ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த டிலுஸ்காந் எனும் மாணவன் நண்பனை காப்பாற்றச் சென்ற வேளையில் கடலில் மூழ்கி பலியானமை குறிப்பிடத்தக்கது. 

சிறலங்கா முஸ்லிம் காங்கிரஸில் முரண்பாடு?

Sunday, March 31, 2013
இலங்கை::சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்றிரவு அவசரமாக கூட்டப்பட்டிருந்தது.

எனினும் இந்த கூட்டத்தில் முக்கியமான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளமை குறித்து, சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போது, அதில் பொது செயலாளர் ஹசன் அலி மற்றும் தவிசாலர் பசீர் சேகுதாவும் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

எனினும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதில் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்று கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்று இரவு ஏழு மணியில் அதிகாலை 1.30 வரையில் இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டும், எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள் தொடர்பில், எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விடயத்தை அரசாங்கத்தில் இருந்தபடியே சமாளிப்பதா? அல்லது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்ப்பை வெளிப்படுத்துவதா என்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் முதல்வராயிடுவாராம் - பிரேமலதாவின் பேராசை!!!

Sunday, March 31, 2013
சென்னை::தே.மு.தி.க. வுக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். விஜயகாந்த் தமிழகத்தின் முதல்அமைச்சராவது உறுதி என்று அவரது மனைவி பிரேமலதா பேசியுள்ளார்.

ஈரோடு காளைமாடு சிலை அருகே தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மனைவி இவ்வாறு பேசினார்.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் எல்லாவளமும் பெற்று சிறப்பாக இருக்கிறார்களா என்றால் இல்லை. தே.மு.தி.க. வுக்கு யாரையாவது திட்டி ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் இலலை. சட்டசபையில் தங்கள் தொகுதி பிரச்சினைக்ளை- தங்கள் தொகுதியை தன்னி கரில்லா தொகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்கள் பேசும் போது மைக்கை ஆப் செய்வது, அவர்களை பேச விடமால் செய்வது, காவலர்களை விட்டு சபையை விட்டு வெளியேற்றுவது போன்ற செயல்கள் நடக்கிறது.

ஈரோட்டை சேர்ந்த சந்திரகுமார், விஜயகாந்த் அடிக்கடி செல்வதை போல அரைக்கால்சட்டை போட்டதில் இருந்து கேப்டன் மன்றத்தில் இருந்து வருகிறார். இவருக்கு விஜய காந்த் கொள்கை பரப்பு செயலாளர் பதவிகொடுத்து உள்ளார். ஈரோடு மக்களின் செல்லப்பிள்ளையாக திகழும் அவர் சட்டசபையில் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். ஈரோட்டில் 12 மணி நேர மின் வெட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 18 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டினால், விவசாயம், நெசவு தொழில்கள் உள்பட அனைத்துதொழில்களும் பாதிக்கப்பட்டுஉள்ளன. இதனால் மக்கள் சரியான வேலை இல்லாமல்- வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த ஆட்சி சிறந்த ஆட்சி இலலை. தோல்வி ஆட்சி என்று மக்கள் கூறுகிறார்கள். பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் ஈரோடு பகுதி முழுவதும் மனிதர்கள் நடக்க முடியாமல் ரோடுகள் உள்ளது. பல வருடங்களாகவே நல்ல ரோடுகள் தோண்டப்பட்டு வீணாகி விட்டதாக பொதுமக்கள் குறை கூறுகிறார்கள். கடும் வறட்சியினால் கொங்கு மண்டலமும் கடுமையாக வறட்சி நிலவுகிறது. எனவே இங்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2500 வழங்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி புகழ் பாடுவதையே வழக்கமாக கொண்டு உள்ளனர். அவர்கள் மக்கள் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மாறி மாறி ஒட்டுபோடுவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் இதனால் தமிகழத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே தமிழக மக்கள் விழித்தெழ வேண்டும். இலங்கை பிரச்சினையை காரணம் காட்டி மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகி உள்ளது. இதை அப்பவே செய்திருந்தால் இலங்கை தமிழர்களுக்கு இந்த நிலை நேர்ந்து இருக்காது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்தவர் விஜயகர்நத் தான். இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ள அவர் தமிழகதில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து உள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுவதை அறிந்த அவர் அவர்களுக்காக தனதுபிறந்தநாளை கொண்டாடுவதையே விட்டு விட்டார். சட்டபையில் மக்கள் பிரச்சிகைளை பேசியவர்களை பதவி நீக்கம் செய்தது, அவர்களை தேர்ந்து எடுத்த தொகுதி மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம்.

பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி பிரச்சினைகளை பேசும் எம்.பி.க்கள் எப்போதும் வெளியேற்றப்பட்டது இல்லை. இந்தியாவிலேயே இது வரை எங்கும் இல்லாத அளவுக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பணி செய்யக்கூடாது என்று சொல்ல மக்களை தவிரவேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நீங்கள் எங்களை தடுக்க தடுக்க நாங்கள் வீறு கொண்டு எழுவோம். ஆலமரமாக எழுவோம். தடைகளைதாண்டி வெற்றி படிக்கட்டுகளில் ஏறுவோம். ஒரு சிற்பி சிலைகள் செய்வதற்காக கல்லை செதுக்கினார். அப்போது உளி பட்ட சில கற்கள் வலிக்கிறது என்று கூறியதால் அந்தகற்களை சிற்பி ஒதுக்கிவிட்டு வலியை தாங்கி கொண்ட கல்லை சிற்பி செதுக்கி அழகான தெய்வ சிலைலை உருவாக்கினார். அந்தசிலைகற்ப கிரகத்தில் மூலவராக வைக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட மற்ற கற்கள் படிக்கட்டுகளாக பயன் படுத்தப்பட்டது. இது போல பல வலிகளை தாங்கிய தே.மு.தி.க. வுக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். விஜயகாந்த் தமிழகத்தின் முதல்அமைச்சராவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்

இன்று ஈஸ்டர் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

Sunday, March 31, 2013
சென்னை::ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு, பாவிகளை ரட்சிக்க சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். பின்னர், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இந்நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சாந்தோம், பெசன்ட் நகர், அடையாறு உள்ளிட்ட தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஞானஸ்தானத்தை புதுப்பிக்கும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். உயிரோடு எழுந்த இயேசுவை பற்றிய தேவசெய்தி அளிக்கப்பட்டது.

சிலுவையில் அறைப்படுவதற்கு முன்பு இயேசு, 40 நாட்கள் உபவாசம் இருந்தார். இதை நினைவு கூரும் வகையில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக அசைவ உணவை தவிர்த்து உபவாசம் இருந்தனர். ஈஸ்டர் பண்டிகையான இன்று கிறிஸ்தவர்கள் உபவாசத்தை நிறைவு செய்து அசைவ உணவை சாப்பிட்டனர். இதனால் இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பேக்கரி கடையிலும் ஈஸ்டர் கேக், ஈஸ்டர் முட்டை என்ற ஈஸ்டர் ஸ்பெஷல் இனிப்பு வகைகள் விற்பனை படுஜோராக நடந்தது.

ஈபிள் டவருக்கு மிரட்டலால் பரபரப்பு!

Sunday, March 31, 2013

 பாரீஸ்::உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று எனப் புகழ் பெற்றது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் ஆகும். 1889ஆம் ஆண்டு கட்டப்பட இந்த டவர், உலகின் உயரமான கட்டமைப்பு என்ற பெருமையுடன், பிரான்சின் புராதான கலைச்சின்னனமாகவும் விளங்குகின்றது. நாள்தோறும், இதனைச் சுற்றிப்பார்க்க வருபவர்களில் வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவர்.

 2011-ஆம் ஆண்டில், இதனைத் தகர்க்கப்போவதாகப் பலமுறை வந்துள்ள மிரட்டல் எச்சரிக்கைகளால், இங்கு வந்த பார்வையாளர்கள் 4,000 பேருக்கும் மேல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நேற்று சனிக்கிழமை, அந்நாட்டு நேரப்படி 7 மணி அளவில், ஒரு அனாமதேய மிரட்டல் எச்சரிக்கை தொலைபேசி மூலம் வந்துள்ளது.

இதனால், அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் 1400 பேரும் அப்புறப்படுத்தப்பட்டு, மோப்பநாய்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தமுறை வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்புப்பணியில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மாலி நாட்டில், புரட்சியாளர்களை ஒடுக்க, அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் தனது ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. இதனால் எழும் தொடர் அச்சுறுத்தல்களால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவு தெரிவித்து ஏப்.2-இல் தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதம்!

Sunday, March 31, 2013
இலங்கை::சென்னை::இலங்கைத் (புலிகளுக்கு) தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல் 2ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் அறிவித்துள்ளது.

இது குறித்து சரத்குமார், ராதாரவி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலையில் இலங்கையில் இனப்போரினால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான நல்வாழ்விற்காக 02.04.2013 அன்று செவ்வாய் கிழமை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அதில் இணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் ஆகிய அனைத்து சங்கங்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள அமைப்புகளின் குரலுக்கு செவிக் கொடுக்காது, அரசாங்கம், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அதன் பின்னர், தெற்கில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோம்: தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு!

Sunday, March 31, 2013
இலங்கை::தேசப்பற்றுள்ள அமைப்புகளின் குரலுக்கு செவிக் கொடுக்காது, அரசாங்கம், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அதன் பின்னர், தெற்கில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட போவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது என தேசப்பற்றுள்ள அமைப்புகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில் அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், அரசாங்கம் இதனை விட தீர்க்கமான சந்தர்ப்பங்களில், கடுமையான தீர்மானங்களை எடுத்து நாட்டு நலனுக்காக செயற்பட்டுள்ளதால், மாகாண சபை முறைமையை ஒழிப்பது முடியாத காரியமல்ல எனவும் ஜெனிவா அல்லது இந்தியாவுக்கு பயந்து, வட மாகாண தேர்தல் நடத்தப்பட்டால், நாடு, அரசாங்கமும், மக்களும் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் ஆகஸ்ட் முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிப்ப முடியும்:இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Sunday, March 31, 2013
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, செயற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டத்திருத்தங்களை உருவாக்கப்பட்டுள்ளன என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் வடக்கில் காணி உரிமைகளை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளை சேர்ந்த இலங்கையர்களும் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்குலக நாடகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இரட்டை குடியுரிமையை பெறுவதற்காக காத்திருப்பதாக தெரியவருகிறது.

புலிகளியக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் பிரத்தியேக உதவியாளராக செயற்பட்டுவந்த அலெக்ஸ் என்பவரின் மனைவியை கரம்பிடிப்பதற்கு இயக்குனர் சீமான் முயன்றுவருவதாக தெரியவருகின்றது!

Sunday,31st of March 2013
சென்னை::புலிகளியக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் பிரத்தியேக உதவியாளராக செயற்பட்டுவந்த அலெக்ஸ் என்பவரின் மனைவியை கரம்பிடிப்பதற்கு இந்திய சினிமா இயக்குனர் சீமான் முயன்றுவருவதாக தெரியவருகின்றது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோது தமிழ் செல்வன் கலந்து கொண்ட சகல வெளிநாட்டு பேச்சுக்களிலும் அலக்ஸ் கலந்து கொண்டவர். புலம்பெயர் தேசங்களில் புலிகளின் முதலீடுகள் பலவற்றை தமிழ் செல்வனே மேற்கொண்டதுடன் அவை தொடர்பான பல விடயங்கள் புலிகளின் தலைமைக்கு தமிழ் செல்வனால் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும், இம்முதலீடுகள் தொடர்பான சகல விடயங்களையும் அலெக்ஸ் அறிந்து வைத்திருந்தார் எனவும் நம்பப்படுகின்றது.

அத்துடன் பெரும்பாலான முதலீடுகள் தமிழ் செல்வன் மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் குடும்ப அங்கத்தவர்கள் பலரின் பெயரில் முதலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முதலீடுகள் தொடர்பாக அலக்ஸின் மனைவி அறிந்திருக்கமுடியும் என நம்பும் சீமான் அலக்ஸின் மனைவியை கரம்பிடிப்பதன் முலம் தமிழ்செல்வன், அலக்ஸ் குழுவினரின் முதலீடுகளை கையாள முடியும் என்ற புது வியூகம் ஒன்றினை வகுத்துள்ளதாக தெரியவருகின்றது. புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் சாமாதான ஒப்பதம் செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தியா சென்றிருந்த அலக்ஸின் மனைவியார் சீமானின் மேற்பார்வையில் அங்கு தங்கியிருந்ததுடன் அக்கால கட்டத்தில் அவர்கள் இருவருக்குமிடையே உருவான நட்பினை பயன்படுத்தி சீமான் தற்போது அவரை தனது சித்துவிளையாட்டை ஆரம்பித்துள்ளதாக நம்பமுடிகின்றது. அலக்ஸின் துணைவியார் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரை அங்கிருந்து மீட்பதற்காக சீமான் பல லட்சம் ரூபாய்களை செலவிட்டதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு கோரியுள்ளது!

Sunday, March 31, 2013
இலங்கை::புலிகள் செய்த கொலலகளுக்கு உடந்தையாக இருந்த (புலி)கூட்டமைப்பை முதலில் விசாரணை செய்யவேண்டும்!
 
 இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு கோரியுள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் (புலி)சுரேஷ் பிரேமசந்திரனை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும், அதற்கு முன்னர் பலர் காணாமல் போயுள்ளனர்.

எனினும் யாரும் அவ்வாறு காணாமல் போகவில்லை என்று இராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சரியான முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை இல்லை.

எனவே இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு, நீதியான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச!

Sunday, March 31, 2013
இலங்கை::இலங்கையில் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச கூறியுள்ளார்.

இலங்கையில்
தென்பகுதியில் உள்ள விகிரகெனாவில் நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில்பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது:-

இலங்கை ஜனநாயக நாடு. இங்கு பௌத்த மதத்தைச் சாராதவர்களுக்கும் முழு சுதந்திரமும், அனைத்து உரிமைகளும் உண்டு. மற்ற மதத்தினரின் உரிமைகளைக் காப்பது பெரும்பான்மையாக உள்ள பௌத்த மதத்தினரின் கடமை.மதவாதத்தைத் தூண்டி இலங்கைக்கு எதிரான தவறான கருத்துகளை ஏற்பட்ட முயலுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தாய் நாட்டின் மீது பற்றுள்ள அனைவருக்கும் இனம், மதங்களிடையே நல்லிணக்கத்தைப் பேண வேண்டிய பொறுப்பு உள்ளது. இலங்கைக்கு இனவாத நாடு அல்லது மதவாத நாடு என்ற பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது. பண்டைய காலத்தில் இருந்தே இலங்கையின் நேர்வழிப்படுத்திய பெருமை பௌத்த மதத்துக்கு உண்டு என்று பேசினார்,

அனைத்து இனங்கள் மற்றும் மதங்களின் உரிமைகளும் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றவர்களுக்கு, அதற்கு ஏற்ற சூழல்களை உருவாக்க கொடுக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விடிவெள்ளியாக திகழ்ந்த தலைவர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்த புலிகளை இந்திய அரசு ஒரு போதும் மன்னிக்காது, மறக்கவும் செய்யாது: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி!

Sunday, March 31, 2013
சென்னை::இந்தியாவின் விடிவெள்ளியாக திகழ்ந்த தலைவர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்த விபுலிகளை இந்திய அரசு ஒரு போதும் மன்னிக்காது, மறக்கவும் செய்யாது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது உருவப் படங்களை எரித்ததை கண்டித்து காரைக்கால் கடற்கரை சாலையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

இலங்கை தமிழர்கள் மீது இந்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி மட்டுமே அதிகம் செய்துள்ளது.

 புலிகளை இந்தியஅரசு ஒரு போதும் மன்னிக்காது, மறக்கவும் செய்யாது. ஏனென்றால் இந்நாட்டின் எதிர்கால விடிவெள்ளியாக திகழ்ந்த தலைவர் ராஜீவ்காந்தியை அவர்கள் படுகொலை செய்துள்ளார்கள். அவரை நாங்கள் இளம் வயதிலேயே இழந்துள்ளோம். அதனால்தான்  புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்துள்ளோம்.

ஜெயலலிதா அம்மையார்,  புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டவர். ஆனால்  புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றவர்கள் எல்லாம் இப்பொழுது அதனை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி முதல் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் வரை நிறைய செய்துள்ளார்கள். இலங்கையில்  புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக ராஜீவ்காந்திதான் கப்பல் மூலம் உணவுப் பொருட்களையும், விமானம் மூலம் மருந்துப் பொருட்களையும் அனுப்பி வைத்தார். உலகில் வேறு எந்த நாடும் அதுபோன்று செய்யவில்லை.

ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு சோனியாவை பிரதமராக பதவியேற்க சொன்னபோது அதனை வேண்டாம் என்று கூறி, மன்மோகன்சிங்கை பிரதமராக ஆக்கினார்.

ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நளினிக்கு பொது மன்னிப்பு அளிக்கும்படி பெருந்தன்மையுடன் கூறினார். எங்காவது தனது கணவரை கொலை செய்தவர்களை மன்னித்து விட்ட சம்பவம் நடைபெற்றுள்ளதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி தனது மகள் பிரியங்காவையும் அனுப்பி நளினியை பார்த்து பேசச் செய்தார். புதுச்சேரியில் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது உருவப்படத்தை எரித்தவர்களே, உலகப் புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமத்தையும் தாக்கி உள்ளனர்.

அது அரசியல் கட்சி அலுவலகம் அல்ல. எனவே அந்த ஆசிரமம் மீது நடந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத முதலமைச்சர் என்று சர்வதேச அளவில் முதலமைச்சருக்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்திய அரசு ரூ.2550 கோடி நிதியுதவி அளித்தது. அதனை காங்கிரஸ் அரசுதான் தந்ததே தவிர, தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ, சீமானோ, முண்டாசு கட்டிய வைகோவோ தரவில்லை.

இலங்கை தமிழர்களின் பெயரை சொல்லிக் கொண்டு வெளிநாடுகளில் வசூல் செய்யும் கட்சிகளும் இங்கு உள்ளன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து உங்கள் இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்றும் தமிழர்களுக்கு அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் தர வேண்டும் என்றும் நாங்கள்தான் கூறினோம்.

காங்கிரஸ் கட்சி மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை என்பதற்காக 2014-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பலர் இலங்கை பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது போன்று மக்களை திசை திருப்பி வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.

மோல்டா கடவுச்சீட்டுடன் ஈரான் பிரஜைகள் கைது!

Sunday, March 31, 2013
இலங்கை::போலியான மோல்டா நாட்டு கடவுச் சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்ல முயற்சித்த மூன்று ஈரான் நாட்டு பிரஜைகள் கடடுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டு தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து இலங்கை விமான சேவை ஆணைக்குழு ஆவண சோதனை அதிகாரிகளால் கட்டுநாயக்க சர்வதேச நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களிடம் ஈரான் நாட்டு கடவுச் சீட்டும் காணப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெல்லம்பிட்டிய,சிறி அனந்தாராம பிரதேசத்தில் ஹேரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டிய, சிறி அனந்தாராம பிரதேசத்தில் ஹேரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் 50 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே. காந்தா இந்திய வெளியுறவுகள் துறை செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்!

Sunday, March 31, 2013
சென்னை::இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே. காந்தா இந்திய வெளியுறவுகள் துறை செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இதற்காக இந்தியாவின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் இந்தியாவின் கிழக்காசிய விவகாரங்களை பொறுப்பேற்கவுள்ளார்.

கிழக்காசிய நாடுகள் தொடர்பிலான அசோக் கே காந்தாவின் பரந்த அனுபவமே அவரை இந்த பதவிக்கு பரந்துரைக்கப்பட்டமைக்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டுத் தமிழர்கள் சிங்கள மக்களை மனித நேயத்துடன் நண்பர்களாக நேசிக்கிறார்கள்:!

Sunday, March 31, 2013
இலங்கை::கேள்வி : தமிழ்நாட்டில் இலங்கையர் மீதும் பெளத்த மகா சங்கத்தினர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில் பொதுமக்கள் இருந்தார்களா? அல்லது திட்டமிட்ட ஒரு குழு செயற்பட்டதா?

பதில்: சிறு குழுக்களே இத்தகைய தாக்குதல்களை ஏதோ ஒரு குறுகிய நோக்கத்துடன் பிரச்சினைகளை உருவாக்கும் எண்ணத்துடன் மேற்கொண்டுள்ளன. இலங்கையில் இந்தியர்களுக்கு எதிராக இது போன்ற பதிலடி ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இன ரீதியிலான தாக்குதலை உருவாக்கும் எண்ணத்துடன் இவர்கள் செயற்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இதுதான் தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கமொன்பதை நாம் புரிந்து கொண்டுள்ளேன்.பொதுமக்கள் இத்தாக்குதல்களை கண்டிக்கிறார்கள். குறிப்பாக பெளத்த பிக்குமாருக்கு எதிரான தாக்குதலை தென்னிந்திய மக்கள் கண்டிக்கிறார்கள். தென்னிந்திய தமிழர்கள் இத்தாக்குதல்களை கண்டித்து இத்தகைய கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்டுள்ளார்கள். இதுதான் சென்னையில் உள்ள நிலமையாகும். தஞ்சாவூரிலும், சென்னையிலும் இரண்டு பெளத்த பிக்குமார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் இடம்பெற்றது.

தஞ்சாவூரில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்குதலுக்குள்ளானவர்களை காப்பாற்றி அவர்களை விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். வீடியோ தொலைக்காட்சி படங்களை ஆதாரமாக வைத்து இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக பொலிஸார் குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். மேலும் மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருக்கிறார்கள். இப்போது பொலிஸார் அவர்களை தேடி வருகிறார்கள்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் சங்கைக்குரிய வங்கீஸா தேரர் மீதான தாக்குதல் தொடர்பாக பொலிஸார் கடந்தவாரம் மூன்று பேரை கைது செய்தனர். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்மூவரும் விசாரணையின் பின்னர் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பொலிஸார் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கேள்வி : இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்களை அடையாளம் கண்டுள்Zர்களா? இவர்கள் ஏதாவது அரசியல் குழுக்களை சார்ந்தவர்களா?

பதில்: இந்த விசாரணையின் மூலம் இத்தாக்குதலின் பின்னணியில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு ஆதரவான சிறிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பின்னணியில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட வில்லை. அவர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

கேள்வி : இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அங்கிருந்த இலங்கைக் குழுவினர் ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடந்து கொண்டார்களா?

பதில்: இல்லவே, இல்லை. அவர்கள் எவரையும் ஆத்திரமடையக்கூடிய வகையில் நடந்து கொள்ளவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் எப்போதாவது ஓரிடத்தில் நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாகும். இத்தகைய தாக்குதல்கள் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இடம்பெற்றன. ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் இத்தகைய சம்பவங்கள் தானாகவே ஓய்ந்துவிடும். இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருவதற்காகவும் அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதற்காகவுமே இத்தகைய சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேள்வி : தற்போதைய பதற்ற நிலையை இல்லாமல் செய்வதற்கு எத்தகைய இராஜதந்திர செயற்பாடுகளை செய்துகொண்டு வருகிaர்கள்?

பதில்: இலங்கை யாத்திரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஏற்கனவே இந்திய மத்திய அரசாங்கத்துடனும், தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடனும் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

தமிழ் நாடு பொலிஸாரும் அரசாங்கமும் சென்னைக்கு வரும் இலங்கையருக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என்று எமக்கு உறுதியளித்துள்ளனர். சென்னையில் அமைந்துள்ள இலங்கை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நாம் கேட்டுள்ளோம். ஏற்கனவே இலங்கை வங்கிக் கிளையில் உத்தியோகத்தர்கள், ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் காரியாலயத்தின் உத்தியோகத்தர்கள், மாபோதி சங்க யாத்திரிகர்கள் தங்குமிடம் ஆகியவற்றுக்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கும் அங்கிருக்கும் பிரதி உயர் ஸ்தானிகரின் இல்லத்திற்கும் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்ஸ்தானிகராலயத்தில் சுமார் 20 உத்தியோகத்தர்கள் கடமை புரிகிறார்கள். அவர்களுடன் இலங்கை வங்கி உத்தியோகத்தர்களும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களும் இருக்கிறார்கள். இவர்களுடன் மாபோதி நிலையத்தின் தங்குமிடத்தில் இலங்கையில் இருந்து வரும் பெருமளவு யாத்திரிகர்கள் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் பாதுகாப்பைத் தருமாறு கேட்டுள்ளோம். புத்தகயாவுக்கு செல்லும் பெளத்த யாத்திரிகர்கள் பெரும்பாலும் சென்னை மார்க்கமாகவே அங்கு செல்கிறார்கள். மாபோதி சங்கத்துக்கு கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ஜெனீவா மாநாட்டை காரணமாக வைத்து நாம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். சென்னை மத்திய ரயில் நிலையத்தில் பெளத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து எமது வெளிவிவகார அமைச்சு தமிழ் நாட்டுக்கு செல்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். நான் சென்னையில் பொலிஸ் திணைக்களத்துடனும் மாநில அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பை வைத்திருந்தேன். புது டில்லியில் உள்ள எமது உயர் ஸ்தானிகராலயம் இந்திய வெளிவிவகார அமைச்சுடன் இது குறித்து தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் உள்ள பொலிஸார் எங்களுடன் பூரணமாக ஒத்துழைக்கிறார்கள். ஆயினும் இப்போது இடம்பெறும் சம்பவங்கள் குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.

கேள்வி : பெளத்த பிக்கு ஒருவர் உடல் ரீதியில் தாக்கப்படுவதை தொலைக்காட்சியின் மூலம் பார்த்த இலங்கை மக்கள் மிகவும் வேதனையும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்?

பதில்:- நாம் இவர்களின் துஷ்ட செயல்களுக்கு பலியாகக் கூடாது இத்தகைய வன்முறைகளும் துஷ்ட செயல்களும் தமிழ் நாட்டு மக்களின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படவில்லை. எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் சிறிய தீவிரவாத குழுக்களே இத்தகைய வன்முறைகளுக்கு பின்னணியில் இருந்து இலங்கையில் நற்பெயருக்கு தீங்கிழைக்கும் செயற்பாடுக ளில் ஈடுபடுகின்றனர். இலங்கையும் இந்தியாவும் பல்லாண்டு காலம் நட்புறவுடன் இருந்து வரும் அயல் நாடுகளாகும். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைப்பதே இவர்களின் நோக்கமாகும். இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த வன்முறைகள் குறித்து புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மூலமும் சென்னையில் உள்ள பிரதி உயர் ஸ்தானிகராலயம் மூலமும் இந்திய அரசாங்கத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

.தி.மு.க., நேர் எதிரான தீர்மானங்களை இலங்கை பிரச்சனையில் நிறைவேற்றிவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது: கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ!

Sunday, March 31, 2013
சென்னை::அ.தி.மு.க., நேர் எதிரான தீர்மானங்களை இலங்கை  பிரச்சனையில் நிறைவேற்றிவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. புலிகள் தலைவர் பிரபாகரனை, கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினோம். ராஜிவ் கொலையில், அவர் முதல் குற்றவாளி. அவரை விசாரித்தால், ராஜிவ் கொலையில் அவிழாத முடிச்சுகள் பல அவிழும். தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதற்காக, அந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம். பிரபாகரனை விசாரிக்க, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் இடமுள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, ஒரு பெண்ணின் திருமணத்துக்கு உதவுகிறோம். அப்பெண் மணம் முடித்து, நன்றாக வாழ்கிறாளா என்பதை பார்க்க விரும்பும். அதுபோல, ஈழ தமிழர்களுக்காக, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

அடிமேல் அடி அடித்தால் தான், அம்மியும் நகரும். கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை உள்ள காங்கிரஸ் அரசு, தமிழக சட்டசபை தீர்மானத்துக்கு, மதிப்பளிக்க வேண்டும். இதே நேரத்தில்,தமிழர்களுக்கு உதவுகிறோம்; 2 ஆயிரம் கோடி ரூபாய் வீடு கட்ட அளித்துள்ளோம் என, காங்கிரஸ் மார் தட்டுகிறது. ஆனால், அப்பணத்தைக் கொண்டு, தமிழர் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் தான் நடக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, ராஜிவ் கொலையில் ஏற்பட்ட ஆதங்கம் இன்னும் நீங்கவில்லை என்று தான் தெரிகிறது. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தவரை, இரு முறை பிரதமராக அமர்த்தி அழகு பார்த்துள்ளனர்.

கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,

காம்ரேடுகள் இல்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி: தி.மு.க., புது வியூகம்!

Sunday, March 31, 2013
சென்னை::லோக்சபா தேர்தலுக்கு, "மெகா' கூட்டணி அமைக்கும் வகையில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளை இழுக்க, தி.மு.க., தரப்பு விரும்புகிறது.

 நிபந்தனை: ஆனால், தே.மு.தி.க.,வை தவிர மற்ற கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுமானால், கடைசி கட்டத்தில், ஒற்றை இலக்கத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட நிபந்தனைகளுடன், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., புது வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், மத்திய அரசு கவிழும், முன் கூட்டியே தேர்தல் வரும் என்ற யூகங்கள் டில்லி அரசியல் வானில் நிலவுகின்றன. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆதரவில், தற்போது மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், மத்திய அரசு தற்போது முலாயம் சிங் கைப்பிடியில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியை முலாயம் சிங் கடுமையாக விமர்சிப்பதால், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, மத்திய அரசை கவிழ்க்கும் செயலில் முலாயம் சிங் ஈடுபடுவார் என்ற சந்தேகம், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது.

கூட்டணி தீவிரம்: இதனால், மத்திய அரசுக்கு, எந்த நெருக்கடியும் ஏற்படாமல் இருக்க, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகிய இருவரின் ஆதரவை காங்கிரஸ் நாடி வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில், ம.பி., டில்லி, சத்தீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநில சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் முன் கூட்டியே வருமா? என்ற கேள்வியும் உருவாகியிருப்பதால், தமிழக அரசியல் கட்சிகள், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., வெளியேறியதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, டி.ஆர்.பாலு, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மற்றும் தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான், "காங்கிரஸ் கட்சியை கவிழ்க்க மாட்டோம்' என, தி.மு.க., செயற்குழுவில் பொதுச்செயலர் அன்பழகன் பேசினார். கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா போன்ற ஒரு சிலரின் அபிலாஷையின் படி தி.மு.க., மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறி விட்டது. இதனால் என்ன நடந்து விட்டது' என, கேள்வி எழுப்பியுள்ளார். கருணாநிதியின் திடீர் ஆதங்கத்தை பார்க்கும் போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடரும் வாய்ப்பு இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மத்திய அரசின் பல்வேறு கமிட்டிகளில், தி.மு.க.,வினர் உறுப்பினராக இருப்பதால், அவர்கள் யாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவில்லை.

பங்கீடு: இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் பிரச்சனையை மையப்படுத்தி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியது. காங்கிரஸ் வெளியேறினால் தான் தே.மு.தி.க.,வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி பங்கீடு செய்ய முடியும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மற்றும் சிறிய கட்சிகளுடன் ஒருங்கிணைந்து, "மெகா' கூட்டணி அமைக்க முடியும் என, கருணாநிதி தரப்பு விரும்புகிறது. தே.மு.தி.க.,வை தவிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை இழுத்துக் கொள்ளவும், கருணாநிதி தரப்பு திட்டமிட்டுள்ளது. கடைசி நேரத்தில், காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதி பங்கீடு வழங்கி, கொடுக்கிற தொகுதிகளை பெற்றுக் கொள்ள வைக்கும். இதன் எதிரொலியாகத்தான், தி.மு.க., செயற்குழுவில் அன்பழகன் பேசுகையில், "மதவாத சக்திகள் தலை தூக்காமல் இருப்பதற்காக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறோம்' எனக் கூறி, கருணாநிதியின் மனசாட்சியை வெளிபடுத்தினார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலைமை; பௌத்த விகாரையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு!

Sunday, March 31, 2013
இலங்கை::நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு குழுவினர் குரோதத்தையும், வெறுப்பையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று  பிற்பகல் கண்டி ஜம்புகஸ்பிட்டியவில் மூனமலை போதிருக்காராமை விகாரையில் நடைபெற்ற அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமரபுர நிகாயே சத்தம்மோதய சங்க சபாவே அனுநாயக்கர் சாஸ்திரபதி தொடங்கொட தம்ம ரத்தின தேரர், மூனமலை போதிருக்காராம விகாராதிபதி கம்பளை ஜினாலங்கார தேரர் ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவையாவன,

இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த உதவும் பிரதானமான இடம்தான் தஹம்பாசல் எனப்படும் அறநெறிப் பாடசாலைகள்.

தற்போது சமயங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் ஒரு சாரார் வெளிக்கிளம்பியுள்ளனர். இதன் பின்னணியில் பார்க்கும் பொது சில வருடங்களுக்கு முன்னர் நாடு அழிவை நோக்கிச் சென்றதை அநேகர் மறந்நு விட்டார்கள் போல தெரிகிறது.

எல்லாச் சமயத்தினரும் தமது சமயக் கலாசராங்களைப் பின்பற்றி ஒழுகுவதற்கான வகதிகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். புதிய இனவாதக் குழுக்களின் தோற்றத்தோடு இந்த நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்லும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் பெப்பிலியான என்ற இடத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் நாடெங்கிலுமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருந்தன.

வைராக்கியத்தோடும் வெறுப்போடும் வெறியோடும் இத்தகைய கீழ்த்தரமான காரியங்கசை; செய்கின்றனர். நான் சிறுபான்மைச் சமுகம் ஒன்றைச் சேர்ந்தவனாக இருந்தாலும் கூட, இவ்வாறான பௌத்த அறநெறிப் பாடசாலை நிகழ்வுக்கு என்னை அழைத்து கௌரவப் படுத்துகின்றீர்கள். சென்ற முறையும் என்னை இதற்கு அழைத்திருந்தீர்கள் இவ்வாறான சூழ்நிலையில் தான் எங்களுக்கு எதிரான முயற்சிகளும் இன்னொரு சாராரால் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று அதிகாலையிலேயே நான் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன். இவ்வாறான துர்ப்பாக்கிய நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வியாபித்து விடாமல் தடுக்க வேண்டுமானால் அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி ஆராயுமாறு அமைச்சர் அவையின் உறுப்பினர் என்ற முறையில் நான் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை இன்று கோடாரியினால் கொத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து அறிக்கை விடுமாறு பணித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் தெரிவித்தார்.

இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதானத்தை அனுபவிப்பதற்கு அதாவது யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியைக் குழைப்பதற்கு தீய சக்திகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. நாட்டை மீண்டும் நாசத்திற்கு இட்டுச் செல்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு குரோதத்தையும் வெறுப்பையும் வளர்ப்பவர்கள் நாட்டுக்கே சாபக்கேடாகும்.

அவ்வாறான சக்திகளுக்கு தங்களது அனுமதியோ, ஆசீர்வாவதமோ இல்லையென மதிப்பிற்குரிய மகா நாயக்க தேர்களும் கூறி வருகின்றனர்.

இது பல்லின மக்கள் வாழும் நாடு என எனக்கு முன்னர் உரையாற்றிய நாயக்க தேரர் குறிப்பிட்டார். அத்துடன், வேறுபட்ட சமயங்களை பின்பற்றும் இந்நாட்டு பெற்றோரும், தாய்மாரும், பிள்ளைகளும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமைப்பட்டு இந்ந நாட்டைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அவரது கூற்று என்னை வெகுவாகக் கவர்ந்தது.

இவ்வாறான பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கு எதிர்காலத்திலும் உரிய ஒத்துழைப்பை வழங்குவோம் எனக்கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்” என்றார்.

புதிய காத்தான்குடி இல் 2கிலோகிராம் கஞ்சாவை பொலிசார் கைப்பற்றினர்!

Sunday, March 31, 2013
இலங்கை::புதிய காத்தான்குடி மத்திய வீதி 167சீ தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றிலிருந்து 2கிலோ கிராம் இடையுள்ள கஞ்சாவை காத்தான்குடி பொலிசார் நேற்றைய தினம் காலை கைப்பற்றி உள்ளனர் .

நேற்றைய தினம் பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலை அடுத்து மத்திய வீதியிலுள்ள வீடொன்றை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்ட போது வீட்டிலுள்ள அலுமாரி ஒன்றிலிருந்து 2கிலோ இடையுள்ள கஞ்சாவை கண்டு பிடித்தாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது அவ்வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி மயக்கமுற்று தனது வீட்டிலேயே விழுந்ததனால் உடனடியாக வைத்திய சாலையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவரது கணவரான மதார் போதைப்பொருள் மொத்த வியாபாரி என தெரிய என வந்துள்ளதாக மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது - பிரசாத் காரியவசம்!

Sunday, March 31, 2013
சென்னை::புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது - பிரசாத் காரியவசம்!

ஈழம் கொள்கைக்காக செயற்படும் சர்வதேச புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களினால் இலங்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக  இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவையின் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானவர்களின் எண்ணங்கள் மாற்றமடைய வேண்டும் எனவும் நாட்டில் அனைவரும் சமத்துவமாக வாழும் முறைமையை எடுத்துக்காட்டாக கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிலவும் பிரச்சினைகள், அபிவிருத்தி, இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தல் போனற அடிப்படை விடயங்களுக்கான தீர்வினைப் பெறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியை சக்திமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது: எஸ்.எம். சந்திரசேன!

Sunday, March 31, 2013
இலங்கை::சிறிலங்கா சுதந்திர கட்சியை சக்திமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொருளாதார பிரதி அமைச்சர்
எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

யாப்பகுவ விஜயபாகு வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே யாரும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கிடையில் யுத்த காலத்தில் மக்களிடேயே காணப்பட்ட ஒற்றுமை தற்போது மறந்து போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, March 30, 2013

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை: இராணுவம் நிராகரிப்பு!

Saturday, March 30, 2013
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த தாக்குதலை, இராணுவத்தினரே மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் எமது செய்திப்பிரிவு இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரியவை தொடர்பு கொண்டு வினயபோது, இந்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,
பொது மக்களே இந்த தாக்கதலை மேற்கொண்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நிலைமையை காவற்துறையினர் பின்னர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவததாக தெரிவித்த அவர், எனினும் இதற்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் உள்ள தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் காரியாலயம் மீது இன்று தாக்குதல் ஒன்ற மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 13 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், காவற்துறையினர் அதனை உறுதிப்படுத்தவில்லை.

சுமார் 50 பேர் கொண்ட குழு ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக காவற்துறை ஊடகப்பிரிவில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் IPL நடப்பதில் தொடர் குழப்பம்!!

Saturday, March 30, 2013

சென்னை::சென்னை போட்டிகளை கொச்சியில் நடத்துவதிலும், சென்னை அணி சார்பில் முக்கிய வீரர்கள் பங்கேற்க்காவிட்டால் அணிக்கு பலம் குறையும் என்று அணியின் உரிமையாளர்கள் ஐ.பி.எல் நிர்வாகத்திடம் கருத்து வேறுபாடு தொடர்வதாலும், சென்னையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுவதில் தொடர் இழுப்பறி நடந்து வருகிறது.

ஆறாவது ஐ.பி.எல்.,டி20 தொடர் வரும் ஏப்ரல்3 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இதை ஏற்றுக்கொண்ட ஐ.பி.எல் நிர்வாகம், மாற்று வழியை தேடியது. அணித்தலைவர் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அனைத்து போட்டிகளையும் நடத்தலாம் என்று அணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு ஐ.பி.எல்., நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. கடைசியில், சென்னையில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டர் என்று உறுதி தெரிவித்தது.

பிரச்சனை தீர்ந்தது என்ற நிலையில் சென்னைக்கெதிரான போட்டிகளில் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கினால் அது அந்த அணிக்கு சாதகமாகி விடும் என்று அணி உரிமையாளர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் கூறப் படுகிறது. இதில் முடிவு ஏற்பட்டால், சென்னையில் நடக்கவுள்ள போட்டிளை கேரளாவின் கொச்சிக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, விசாகப்பட்டின மைதானத்தையும் தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் மே21, 22 ல் நடக்கவுள்ள “பிளே ஆப்” போட்டிகள் கட்டாயம் சென்னையில் நடக்காது என்று தெரிகிறது. ஏனெனில், இறுதிச்சுற்றுக்கான தகுதிப் போட்டி என்ற நிலையில் முன்னணி வீரர்களை சேர்த்தாக வேண்டிய நிலை இருப்பதால், அதில் இலங்கை வீரர்கள் நிச்சயம் இடம் பெறுவர் . இந்த போட்டிகள் பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில் நடக்கும் எனத் தெரிகிறது.

இலங்கையின் மொத்த சனத் தொகையில் பௌத்த மதத்தினர் 70.2 வீதம்!

Saturday, March 30, 2013
இலங்கை::இலங்கையின் மொத்த சனத் தொகையான இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 63 ஆயிரம் பேரில் ஒரு கோடியே 42 லட்சத்து 22 ஆயிரம் பேர் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் எனவும் இது மொத்த சனத் தொகையில் 70.2 வீதமாகும் எனவும் இலங்கை புள்ளிவிபரம் மற்றும் சனத் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஒரு கோடியே இரண்டு லட்சமாக இருந்த பௌத்தர்களின் எண்ணிக்கை 9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

முழு சனத் தொகையில் 12.6 வீதம் இந்துக்கள், இவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரமாகும். 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, இலங்கையில் 22 லட்சத்து 90 ஆயிரம் இந்துக்கள் இருந்தனர். இது 15. 5 வீதமாகும்.

இலங்கையில் தற்போதுள்ள இஸ்லாம் மதத்தினரின் எண்ணிக்கை 19 லட்சத்து 60 ஆயிரமாகும். இது மொத்த சனத் தொகையில் 9.7 வீதமாகும். 1981 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 11 லட்சத்து 21 ஆயிரம் முஸ்லிம்கள் இருந்தனர். இது 7.5 வீதமாகும்.

றோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் 12 லட்சத்து 30 ஆயிரம் பேரும், கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ சமயங்களை பின்பற்றும் இரண்டு லட்சத்து இரண்டாயிரம் போர் இலங்கையில் உள்ளனர் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.