Sunday, March 31, 2013

.தி.மு.க., நேர் எதிரான தீர்மானங்களை இலங்கை பிரச்சனையில் நிறைவேற்றிவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது: கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ!

Sunday, March 31, 2013
சென்னை::அ.தி.மு.க., நேர் எதிரான தீர்மானங்களை இலங்கை  பிரச்சனையில் நிறைவேற்றிவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. புலிகள் தலைவர் பிரபாகரனை, கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினோம். ராஜிவ் கொலையில், அவர் முதல் குற்றவாளி. அவரை விசாரித்தால், ராஜிவ் கொலையில் அவிழாத முடிச்சுகள் பல அவிழும். தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதற்காக, அந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம். பிரபாகரனை விசாரிக்க, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் இடமுள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, ஒரு பெண்ணின் திருமணத்துக்கு உதவுகிறோம். அப்பெண் மணம் முடித்து, நன்றாக வாழ்கிறாளா என்பதை பார்க்க விரும்பும். அதுபோல, ஈழ தமிழர்களுக்காக, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

அடிமேல் அடி அடித்தால் தான், அம்மியும் நகரும். கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை உள்ள காங்கிரஸ் அரசு, தமிழக சட்டசபை தீர்மானத்துக்கு, மதிப்பளிக்க வேண்டும். இதே நேரத்தில்,தமிழர்களுக்கு உதவுகிறோம்; 2 ஆயிரம் கோடி ரூபாய் வீடு கட்ட அளித்துள்ளோம் என, காங்கிரஸ் மார் தட்டுகிறது. ஆனால், அப்பணத்தைக் கொண்டு, தமிழர் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் தான் நடக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, ராஜிவ் கொலையில் ஏற்பட்ட ஆதங்கம் இன்னும் நீங்கவில்லை என்று தான் தெரிகிறது. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தவரை, இரு முறை பிரதமராக அமர்த்தி அழகு பார்த்துள்ளனர்.

கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,

No comments:

Post a Comment