Saturday, March 31, 2012

அமெரிக்காவின் மூன்று பிரபல கடனட்டை நிறுவனங்கள் பாதுகாப்பு தரவுகளின் கசிவு குறித்து எச்சரிக்கை

Saturday, March, 31, 2012
வாஷிங்டன்::அமெரிக்காவின் மூன்று பிரபல கடனட்டை நிறுவனங்கள் பாதுகாப்பு தரவுகளின் கசிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

கசிவு காரணமாக கடனட்டை வைத்திருப்போரின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக குறித்த நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

தமது கட்டமைப்புக்குள் எந்தவித அத்துமீறலும் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ள குறித்த நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியுள்ளன.

இவ்வாறான தரவுகள் நியூயோர்க்கில் வைத்து திருட்டுத் தனமான முறையில் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தகவல் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு நிறுவனமும் இதுவரை அறிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகாளாவிய ரீதியில் கடனட்டை மூலம் கொடுப்பனவுகளை செய்யும் நிறுவனமொன்று இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த நிறுவனத்தின் பங்குகள் 9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நான்சி போவல் நியமனம்!

Saturday, March, 31, 2012
வாஷிங்டன்::இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகியதை தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது. இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக கூறி வரும் அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கான புதிய தூதரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். பாகிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளில் தூதராக பணியாற்றிய நான்சி போவல் பெயரை பரிந்துரை செய்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.

மேலும், காலியாக இருக்கும் 15 நாடுகளுக்கான தூதர் பதவிக்கும் பெயர்களை பரிந்துரை செய்திருந்தார். கடந்த 2 மாதமாக இந்த பரிந்துரை பாராளுமன்றத்தில் நிலுவையில் இருந்தது. தூதர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து சமீபத்தில் கவலை தெரிவித்த ஒபாமா, பாராளுமன்றம் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியா, பார்படோஸ், கம்போடியா, ஜார்ஜியா, துனிசியா, லிபியா, ஹைதி, பனாமா, உருகுவே உள்பட 16 நாடுகளுக்கான தூதர்களை நியமிக்க பாராளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. அதன்படி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நான்சி போவல் நியமிக்கப்படுகிறார்.

LLRC யின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் உள்ளது - பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

Saturday, March, 31, 2012
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர் உதவிகளுக்காக அவர், அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் அபிவிருத்திகளை பார்வையிடுமாறும் கோத்தபாய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக -வாக்களித்த நாட்டுத் தூதுவர்களை அழைத்து ஆலோசனை - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானம்!

Saturday, March, 31, 2012
இலங்கை::ஜெனிவா மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராகவும் யோசனைக்கு ஆதரவாகவும் வாக்களித்த 24 நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களை இலங்கைக்கு அழைத்து, அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் சித்திரை புத்தாண்டு காலத்தில், இலங்கை செல்லவுள்ள இந்த தூதுவர்கள், தனித்தனியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சுவிஸர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், இந்தியா, ஹங்கேரி, செக், போலாந்து, மோல்டோவா, ருமேனியா,பெல்ஜியம், இத்தாலி, ஒஸ்திரியா, மொஸ்கோ, பெரு, உருகுவே, கொஸ்டரீகா, கௌதமாலா, சிலி, நைஜீரியா, பேனின், லிபியா, மொரிசியஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதுவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை தூதரங்கள் இல்லாத நாடுகளிலும் தூதுவர்களாக பணியாற்றி வருகின்றனர்.

போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்.. மீண்டும் சசி!!

Saturday, March, 31, 2012
சென்னை::உடன்பிறவா சகோதரி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சசிகலாவின் ஒரு டஜன் உறவினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டநிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு "அக்கா" ஜெயலலிதாவுக்காக "எதையும்" தியாகம் செய்யத் தயார் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே போயஸ் கார்டனில் சசிகலா குடியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடமைகள் அனைத்தும் திரும்ப கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

அமெரிக்கா வலியுறுத்தியே வாக்குகளை பெற்றது-டளஸ் அழகப்பெரும!

Saturday, March, 31, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாக அண்மைக்காலங்களாக பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக தமது வாக்குகளை பிரயோகித்த நாடுகள் தொடர்பாக சில அமைப்புகள் போன்றே அமைச்சர்களும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதேவகையில், கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இளைஞர் விவகார, திறனபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்டார்.

பிரேரணையை சமர்ப்பிக்கும் முன்னதாக மார்ச் 22 ம் திகதி வரை அது அமெரிக்காவின் யோசனையாக மாத்திரமே, இருந்தது..

அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 23 ம் திகதியிலிருந்து சர்வதேச சமூகத்தின் பிரேரணையாக மாறியது.

வெளி உலகுக்கு தெரியாமல் வலியுறுத்தியே, வாக்குகள் பெற்றமை தமக்கு தெரியும் என்றும் அமைச்சர் டளஸ் அழகப் பெரும குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய உதவிகளை வழங்கியநாடு.

அவர்கள் இல்லாத நிலையில் யுத்தத்தை வெற்றி பெற்றிருக்க முடியாது..

பாடசாலைகள் நெருக்கடியை எதிர்நோக்கி மூடப்பட்டிருந்த தருணத்திலும், இலங்கை திரைப்பட நடிகர்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும், கடந்த வருடம் ஏப்ரல், மே மாத காலப்பகுதிகளில் இந்தியா உதவியளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை எனவும், அமெரிக்கா அவர்களிடம் வலியுறுத்தல் விடுத்தே பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
.

வடக்கின் உள்ளுர் கலாச்சார விழுமியங்கள் மதிக்கப்பட வேண்டும் - பாதுகாப்பு அமைச்சு!

Saturday, March, 31, 2012
இலங்கை::வடக்கின் உள்ளுர் கலாச்சார பாரம்பரிய விழுமியங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மைக்காலமாக தெற்கிலிருந்து வடக்கு செல்வோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற யுத்த வலயங்களுக்கு தெற்கைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த வலயங்களை பார்வையிடச் செல்லும் மக்கள், அப்பிரதேச கலாச்சார விழுமியங்களை மதித்து நடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்களுக்கு செல்லும் போது அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்படடுள்ளது.

நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத சில பகுதிகள் இன்னமும் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையை அவமானப்படுத்தும் நோக்கிலேயே ஜெனிவாவில் முறைப்பாடு - திவயின!

Saturday, March, 31, 2012
இலங்கை::இலங்கையை அவமானப்படுத்தும் நோக்கிலேயே, ஜெனிவா சென்ற இலங்கை தூதுக்குழுவினர், அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் உள்ள கமராக்களில் கூட இந்த சம்பவம் பதிவாகவில்லை.

நவநீதம் பிள்ளையிடம் இலங்கைக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்யப்பட்ட உடனே, அந்த தகவல்கள் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை குழுவினர், தமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக, அரசசார்பற்ற நிறுவனங்களின் குழுவினர், சுவிஸ் காவற்துறையினரிடம் முறைப்பாடுகளை பதிவுசெய்யவில்லை. அங்கு முறைப்பாடு செய்திருந்தால், அவர்களின் பொய்யான குற்றச்சாட்டு, தொடர்பான உண்மை வெளியாகியிருக்கும் என இலங்கை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ்கோடி மணல் திட்டில் இலங்கை வாலிபர்: மீட்க அதிகாரிகள் நடவடிக்கை!

Saturday, March, 31, 2012
ராமேஸ்வரம்::தனுஷ்கோடி முதலாவது மணல் திட்டில் இருக்கும், இலங்கை நபரை மீட்க, ராமேஸ்வரம் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை புங்குடு தீவை சேர்ந்த சதீஷ்குமார், 35, சில நாட்களுக்கு முன், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித் திரிந்தார். இவரை, போலீசார் பிடித்து சோதனை செய்தனர். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால், புலனாய்வு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். புலனாய்வு துறையினரின் விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன், இலங்கையிலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தது தெரியவந்தது. ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க வந்ததாக தெரிவித்தார். "விரைவில் இலங்கை செல்வேன்' எனக் கூறிய இவரிடம், "தேவையில்லாமல் சுற்றித் திரியக் கூடாது' என, போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்ற இவர், அங்கிருந்து கடலில் நீந்தி, தனுஷ்கோடி கடலில், முதலாவதாக உள்ள மணல் திட்டுக்கு சென்றார். அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், அவரைப் பார்த்ததும், அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவரை மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தை வெளியேற்றும் வரையில் போராட்டங்கள் தொடரும் - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க!

Saturday, March, 31, 2012
இலங்கை::அரசாங்கத்தை வெளியேற்றும் வரையில் போராட்டங்கள் தொடரும் ன எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடக் கூடிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் தடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொருட்கள் சேவைகளின் விலைகள் கடுயைமாக உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வறிய மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்கும் அரசாங்கம், செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதனைத் தவிர வேறும் மாற்று வழி கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்?: சசிகலா கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெயலலிதா அறிவிப்பு!

Saturday, March, 31, 2012
சென்னை::தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் இன்று ஜெ.,அறிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து அவர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகள் போட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசி கோர்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ஜெ.,வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எல்லா முடிவுகளும் நானே எடுத்தது என்றார். இதுவும் ஜெ.,வுக்கு சற்று திருப்தியை தந்ததது.

இதனையடுத்து கடந்த வாரம் சசி , ஜெ.,வுக்கு ஒரு கடிதம் எழுதினார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்ற விரும்புவதாகவும், கனவில் கூட அக்காவுக்கு துரோகம் நினைத்தது இல்லை என்றும் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடிதம் எழுதப்பட்ட உடனே சசி மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்டுவார் என்று பேசப்பட்டது அதன்படி ஜெ., இன்று சசி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார். ஆனால் சசியின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றமில்லை என்றும் கூறியிருக்கிறார் ஜெ., எப்படியோ சசிக்கு எதிரான கட்சி பிரமுகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.

உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்க கடிதம் முழு விவரம் : முதல்வர் ஜெ.,வுடனான உறவு முறிந்தது ஏன் என்பது குறித்து சசிகலா தரப்பில் கடந்த 28 ம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் கூறியிருந்தது: நானும் முதல்வர் ஜெ.,வும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம். 1988 முதல் போயஸ் தோட்டத்தில் அவருடன் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக்கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை. அவரும் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்றி வந்தேன்.

ஆனால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்கள் நண்பர்கள் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது ஜெ., ( கடந்த டிசம்பர் மாதம் ) நடவடிக்கை எடுத்த பின்னரே தெரியவந்தது. ஜெ.,வுக்கு எதிராக சதி செய்தார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அவருக்கு நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை. ஜெ.,வுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் ஆவர். ஜெ.,வுக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் உறவை துண்டித்து விட்டேன். எனக்கும் அவர்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெ,.வுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன். ஏற்கனவே அவருக்கு எனது வாழ்க்கையை அர்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த உருக்க கடிதத்தை ஜெ., இன்று ஏற்றுக்கொண்டார்.

பியாந்த்சிங் கொலையாளி கருணை மனுவை ஏற்க மறுப்பு!

Saturday, March, 31, 2012
புதுடெல்லி::பியாந்த்சிங் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள பல்வந்த்சிங் ரஜோவ்னாவுக்கு கருணா காட்டக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலை வழக்கில் பல்வந்த்சிங் ரஜோவ்னா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தற்போது பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று தூக்கில்போட சண்டிகார் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஜோவ்னாவை தூக்கில் போடக்கூடாது என்று பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நிறைவேற்றப்படுவதாக இருந்த இவரது தூக்குத் தண்டனையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அனுப்பிய கருணை மனுவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ரஜோனா சார்பில் அபினவ் ராமகிருஷ்ணா என்பவர் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த கருணை மனுவை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், ரஜோவ்னா சார்பில் மற்றொருவர் தாக்கல் செய்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோன்ற ஒரு கருணை மனுவை தாக்கல் செய்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு தங்களது கருணை மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

கடற்கரையில் இனந்தெரியாத இரு சடலங்கள்!

Saturday, March, 31, 2012
இலங்கை::தலவில கடற் கரையோரத்தில் இருந்து இனந்தெரியாத இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 50 வயதான ஆண் மற்றும் 45 வயதான பெண் ஆகியோரின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இருவரும் நஞ்சருந்தி உள்ளதாக பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சடலங்கள் கற்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் EPDP உறுப்பினரை படுகொலை செய்தது: இந்தியாவில் இருந்து சென்ற ஆயுதக்குழு - திவயின!

Saturday, March, 31, 2012
இலங்கை::திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் ஈபிடிபி உறுப்பினரை ஒருவரை வெட்டிக்கொலை செய்தது, தென் இந்தியாவில் இருந்து சென்ற ஆயுதக்குழுவொன்று என விசாரணைகளில் கண்டறிந்துள்ள காவற்துறையினர், அந்த குழுவுடன் தொடர்புடைய மூன்று நபர்களை கைதுசெய்துள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி பெரியகுளம் பகுதியில் ஈபிடிபி உறுப்பினரை கொலை செய்த அந்த ஆயுதக் குழு, சடலத்திற்கு அருகில், துரோகிகளுக்கு மரணம், நாம் மீண்டும் வேலையை ஆரம்பித்து விட்டோம் என தமிழில் எழுதிய அட்டை ஒன்றை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த ஆயுதக்குழுவினர், தென் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கை சென்று இந்த கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் ரகசியமான முறையில் மீண்டும் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதும் அது கைக்கூடவில்லை. இதனால் கிழக்கு மாகாணத்தில் மறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி குழுவினர் கொலை செய்த முத்து என்ற ரகுநாதன் முச்சக்கர வண்டி சாரதியாவார். இவர் சில காலம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததுடன், பின்னர், ஈபிடிபியுடன் இணைந்து கொண்டார். இவரது கொலை தொடர்பாக மயூரி தினேஷ் என்ற பெண்ணை காவற்துறையினர், கடந்த 18 ஆம் திகதி கைதுசெய்தனர். கொலை செய்யப்பட்டவர், இந்த பெண்ணின் கணவருக்கு நெருக்கமானவர் என விசாரணைகளின் போது, பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது சிறிய தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்.

தனது கணவருடன் கோபி, கோகிலன் ஆகிய நண்பர்கள், வீட்டுக்கு வந்து தங்கியிருந்ததாக கைதுசெய்யப்பட்ட பெண் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான தினேஷ் குமார் ஆயுத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர் எனவும் அவர் இந்தியாவில் பயிற்சி பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகியிருந்ததுடன், அவர்களை கைதுசெய்ய காவற்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதேவேளை திருகோணமலை, 3 ஆம் கட்டை அலஸ் தோட்ட காவற்துறை சோதனை சாவடியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவரே, ஈபிடிபி உறுப்பினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைதுசெய்யப்படவிருந்த கோகிலன் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து தினேஷ் குமார் மற்றும் ராசு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் மூவரும், தென்னிந்தியாவில் உள்ள முகாம் ஒன்றில் ஒன்றாக பயிற்சி பெற்றுள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புலி ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்துத் எதிர்பிரச்சாரத்திற்கு திட்டம்!

Saturday, March, 31, 2012
இலங்கை::புலி ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்துத் எதிர்பிரச்சாரத்திற்கு திட்டம் கொழும்பு ஊடகம் கூறுகிறது:-

புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரையில் லண்டனில் ஒலிம்பிக் போட்டிடகள் நடைபெறவுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ள நாடு கடந்த தமிழீழ இராச்சிய அரசாங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2007ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடைபெற்ற கிரிக்கட் உலகக் கிண்ணப் போட்டிகளின் போது சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்திருந்தது.

அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சாரங்கள் கைவிடப்பட்டன.

இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த புலி ஆதரவு அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாக குறி;த்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிக்கமாட்டோம் - ஜெ!

Saturday, March, 31, 2012
சென்னை::"காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியுடன் செயல்படுவோம், காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்'' என்று சட்டசபையில் ஜெயலலிதா கூறினார்.

காவிரி பிரச்சினை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

இந்த சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கு பெறப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பேசியுள்ளார்கள்.

காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. இந்த இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் பிரசுரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு உடனே பிரசுரிக்கப்பட்டு இருந்தால், இந்த இறுதி ஆணை செயல்வடிவம் பெற்றிருக்கும். ஆனால், காவேரி தாவாவில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இதுதொடர்பாக விளக்கங்கள் கேட்டு காவிரி நடுவர்மன்றத்தை அணுகின. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுவில் மத்திய அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

பிரதமரிடம் கோரிக்கை

இந்தச் சூழ்நிலையில், 2011ம் ஆண்டு மே மாதம் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, 14.6.2011 அன்று பிரதமரை புது டெல்லியில் சந்தித்தபோது, காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடுவது; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும்; மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு 17.10.2011 அன்று நான் பிரதமருக்கு மீண்டும் கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால், இக்கோரிக்கை மத்திய அரசால் இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரை, அதன் 25.6.1991 நாளிட்ட இடைக்கால ஆணை அமலில் இருக்கும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. 16.10.2008 அன்று நடைபெற்ற காவேரி கண்காணிப்புக் குழுவின் 23வது கூட்டத்தில் அதன் தலைவரும் இதே கருத்தை உறுதி செய்துள்ளார்.

பாசன காலம்

தற்போது நடைமுறையில் உள்ள இடைக்கால ஆணையின்படி, நீரை விடுவிப்பதற்கான பாசன ஆண்டு என்பது ஜுன் மாதம் முதல் அடுத்த ஆண்டின் மே மாதம் வரை ஆகும். இம்முறையே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், நடுவர்மன்ற இறுதி ஆணையில் பாசன காலம் என்பது "ஜுன் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் நாள் வரை'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர்த் தாவாவினை காவிரி நடுவர்மன்றம் முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், அதன் 25.6.1991-ம் நாளிட்ட இடைக்கால ஆணை காலாவதி ஆகிவிட்டது என்றும்; நடுவர்மன்றத்தின் இறுதி ஆணை இன்னமும் நடைமுறைக்கு வராத நிலையில், இடர்ப்பாடு காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கர்நாடகாவில் பாசனம் மேற்கொள்ளுதல் உள்ளடக்கிய அனைத்து அம்சங்களுக்கும் இந்த இறுதி ஆணை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும் என கர்நாடக அரசு கருத்து தெரிவித்து வருகிறது.

உரிய நீர் வழங்குவதில்லை

கர்நாடக அரசு இக்கருத்தை கூறியபோதிலும் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படியோ அல்லது இறுதி ஆணைப்படியோ தமிழ்நாட்டுக்கு நீர் வழங்குவதில்லை. கர்நாடக அரசு தன்னுடைய நீர்த்தேக்கங்களில் எல்லா நீர்வரத்தையும் தேக்கி உபரி நீரை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது.

கர்நாடக அரசு நேர்மையற்ற வகையில், பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் தனது கோடைகாலப் பாசனத்திற்காக அதன் நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை உபயோகப்படுத்திக்கொண்டு வருகிறது. கர்நாடகத்தின் கருத்துப்படி, தற்காலிக ஏற்பாடாக இருக்கும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை பின்பற்றினால் கோடைகாலப் பயிர் பாசனத்திற்கு நீர் பயன்படுத்தக் கூடாது.

ஆனால், கடந்த 2007-2008 முதல் 2010-2011-ம் ஆண்டு வரையில், கர்நாடகாவின் 4 பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்து அதாவது ஹேரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து, கோடைகாலப் பாசனத்திற்காக பிப்ரவரி முதல் மே வரையில் 42 டி.எம்.சி. அடி முதல் 73 டி.எம்.சி. அடி வரை நீரினை பயன்படுத்தியுள்ளது.

இவ்வாறு கோடைகாலப் பாசனத்திற்காக நீரை பயன்படுத்தாமல், அடுத்த பாசன பருவகால உபயோகத்திற்கு கர்நாடக அரசு நீரைத் தேக்கி வைத்திருக்க வேண்டும்.

நிரம்பிய பின்னரே

இதைத் தவிர, காவிரி நடுவர்மன்றம் அதன் இறுதி ஆணையில் கர்நாடக அரசு அதன் நான்கு பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்தும் பாசன காலத்தில் நீரை பயன்படுத்திக் கொள்ள ஆண்டொன்றிற்கு மொத்தமாக ஒதுக்கீடு செய்துள்ள 103.240 டி.எம்.சி. அடிக்கு பதிலாக 203 டி.எம்.சி. அடி வரை நீரினைப் பயன்படுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் அவசியம் தேவையான ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் காவிரி நடுவர்மன்ற ஆணையின்படி தண்ணீரை வழங்குவதில்லை.

கர்நாடக அரசு கோடைகாலப் பாசனத்திற்கு நீரைப் பயன்படுத்துவதால் பருவமழை தொடங்கியவுடன் எல்லா நீர்வரத்தையும் தன் நீர்த்தேக்கங்களில் தேக்கி அவை நிரம்பிய பின்னரே தமிழகத்திற்கு நீர் வழங்குகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நியாயப்படி வந்து சேர வேண்டிய தண்ணீர் பெறப்படுவதில்லை.

உறுதியுடன் செயல்படுவோம்

எனவேதான், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கவும்; விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டும்; கர்நாடக அரசு பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் கோடைகாலப் பாசனத்திற்கு அதன் 4 நீர்த்தேக்கங்களிலிருந்து நீரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனுவினை 21.3.2012 அன்று எனது தலைமையிலான தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறுவதில்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில்; நானும், எனது அரசும் உறுதியுடன் செயல்படுவோம்.

கர்நாடகாவில் புதிய அணை

உறுப்பினர்கள் இங்கே பேசும்போது மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதாக குறிப்பிட்டார்கள்.

காவிரி நதியில், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சிவசமுத்திரம், மேகதாது, ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் எனும் இடங்களில் புனல் மின் திட்டங்களை செயல்படுத்த தேசிய நீர் மின் கழகம் கருதியது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஓர் ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய மின் அமைச்சகம் 1999-ல் அனுப்பி வைத்தது.

தமிழ்நாடு அரசு 2004 ஜுலை திங்களில், 1) முதல் நிலையாக, சிவசமுத்திரம் மற்றும் ஒகேனக்கல் நீர்மின் திட்டங்களுக்கான அனுமதியை பெற்ற பின்னர் ஒரே சமயத்தில் இதற்கான பணிகள் துவங்கப்பட வேண்டும்; 2) இரண்டாவது நிலையாக, இதே அடிப்படையில், மேகதாது மற்றும் ராசிமணல் நீர்மின் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்; 3) இந்த 4 புனல் மின் திட்டங்களை தேசிய நீர் மின்கழகம் செயல்படுத்த வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து, மேற்படி ஒப்பந்தத்திற்கு இசைவு அளித்தது.

4 புனல் மின்திட்டங்கள்

கர்நாடக அரசு ஜனவரி 2001-ல் இதற்கு இசைவு அளித்தபோதிலும் பின்னர் சிவசமுத்திரம் மற்றும் மேகதாது புனல் மின்நிலையங்கள் அம்மாநில எல்லைக்குள் இருப்பதால் அவைகளை அவ்வரசே செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்தது. தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் பன்மாநில நதியான காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது என்று அவ்வரசிற்கு தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு நவம்பர் 2008-ல் உச்சநீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனுவினை தாக்கல் செய்துள்ளது. இதில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் காவிரி நடுவர்மன்றத்தின் முன் நிலுவையிலுள்ள விளக்கம் கோரும் மனுக்கள் ஆகியன முடிவுக்கு வரும் வரையில், கர்நாடக அரசு சிவசமுத்திரம் மற்றும் மேகதாது புனல் மின் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்றும்; தேசிய நீர்மின்கழகமோ அல்லது மத்திய அரசின் மற்ற தகுந்த மின் உற்பத்தி நிறுவனமோ இந்த 4 புனல் மின் திட்டங்களையும் செயல்படுத்தவேண்டும் என்றும் தமிழ்நாடு கோரிக்கை வைத்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

அனுமதிக்க மாட்டோம்

இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் புதிய அணையை கட்ட இயலாது. அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால் தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் 9-ந் தேதி விசாரணை!

Saturday, March, 31, 2012
சென்னை::புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் (புலி)வைகோ தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 9-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

புலிகள் இயக்கத்தைத் தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் (புலி)வைகோ ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணை வருகிற 9-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் (புலி)வைகோ 9-ந் தேதி ஆஜராகி வாதாடுகிறார்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் புலிவாலுகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

Saturday, March, 31, 2012
இலங்கை::லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் அவருக்கு எதிராக லண்டனில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் புலிகளின் உலகத் தமிழர் பேரவை சார்பில் நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இராஜதந்திர விலக்குரிமையை அனுப்பும் நாட்டினால் மட்டுமே நீக்க முடியும் என்ற போதும், இராஜதந்திர விலக்குரிமையை நீக்கும்படி பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் கோர முடியும் என்று புலிகளின் உலகத் தமிழர் பேரவை சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இராஜதந்திர விலக்குரிமையை நீக்க மறுத்தால், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால், அவரை நீதிமன்ற உத்தரவுப்படி நாடு கடத்த முடியும் என்று புலிகளின் உலகத் தமிழர் பேரவை சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீதியின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று புலிகளின் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவிலும் நியுயோர்க்கிலும் உள்ள ஏனையவர்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் புலிகளின் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரில், முகமாலைப் பகுதியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி கரையோரமாக முன்னேறிய இலங்கை இராணுவத்தின் 55ஆவது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவே தலைமை தாங்கியிருந்தார்.

ஜெனீவா பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை - ஜீ.எல்.பீரிஸ்!

Saturday, March, 31, 2012
இலங்கை::இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை எனவும், சர்வதேசத்தின் தலையீட்டிற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் எதுவும் மாறப்போவதில்லை எனவும் சில செயற்றிட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவை அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கொள்கைளை மக்களின் ஆணையினைப் பெற்றுள்ள அரசாங்கமே தீர்மானிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் அபிலாஷைகளை புரிந்துகொண்டு எந்த செயற்றிட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்பது குறித்து நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இலங்கையின் செயற்பாடுகளை ஜெனீவாவுக்கு வழங்க நாம் தயாரில்லை. தற்பொழுது நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற் பாடுகளில் எந்த மாற்றத்தையும் அரசாங்கம் ஏற்படுத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீதியை நிலைநாட்டு வதற்காக ஸ்தாபிக்கப்பட்டு ள்ள ஐ. நா. மனித உரிமை பேரவை தமது நோக்கங்களுக்கு அப்பால் சென்று அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளிநாடுகளும் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கூறிவருவதாகவும் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

ஆறு திருத்தச் சட்டங்கள் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட விசேட தீர்மானம் தொடர்பில் விசேட உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள விவாதத்தின் போது விரிவாக விளக்கமளிக்கப்படும். எனினும் இது தொடர்பில் ஒரு சில கருத்துக்களை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கின்றேன்.

இலங்கை தொடர்பில் ஐ. நா. மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்பட்டது. இது நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்னப்பட்ட பேரவை அல்ல. அர சியல் மயப்படுத்தப்பட்டவை என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

47 நாடுகள் இந்தப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்றது. அவற்றில் 11 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டே இந்த விடயம் தொடர்பில் தமது கடுமை யான செயற்பாடுகளையும், அரசியல் நோக்கத்தையும் வெளிக் காண்பித்தனர்.

ஐ. நா. மனித உரிமை பேரவையானது கள்ளர்கள் நிறைந்த குகையாக மாறியுள்ளது. எனவே அதிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு கொள்கை சபை யின் தலைவி ரோஸ் கெலட் அண்மையில் கருத்து வெளியிட்டதை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அமெரிக்காவை அந்த பேரவையில் இருந்து விலகி நம்பகத் தன்மைக் கொண்ட மாற்றுக் குழுவொன்றை உருவாக்குமாறும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் மனித உரிமை பேரவை தனது கெளரவத்தை இழந்துள்ளதாக ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானத்தை காண்பித்து இலங்கையில் எந்த ஒரு மாற்றத்தை ஏற் படுத்தவோ இலங்கை தொடர்பில் தலையீடு செய்வதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை.

மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பலம் வாய்ந்த அரசு எம் மிடம் உள்ளது. எனவே எமது உள் விவகாரங்களில் உள்ளூர் பிரச்சினை தீர்த்துக் கொள்வதற்கு எமது திறமை உள்ளது.

மக்களின் தேவையை அறிந்தும் இலங்கையின் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் தேவையான தீர்மானத்தை நாம் எடுப்போம்.

சட்ட விதிமுறைகளுக்கு அமைய எந்த விடயத்தை முதலில் அமுல்படுத்துவது படிப்படியாக எதனை அமுல்படுத்துவது என்பதை நாம் அரசாங்கம் என்ற அடிப் படையில் உரிய தீர்மானத்தை எடுப்போம்.

ஜெனீவா தீர்மானத்தை வைத்து எமது செயற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏ.கே. அந்தோணி பதவி விலக வேண்டும்: பாரதீய ஜனதா வலியுறுத்தல்!

Saturday, March, 31, 2012
புதுடெல்லி::ராணுவத்துக்கு தத்ரா நிறுவனத்திடமிருந்து லாரிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் நேற்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவத்கர் ஒரு பிரச்சினையை எழுப்பினார்.

அப்போது அவர் பேசும்போது, தத்ரா நிறுவனத்திடமிருந்து ராணுவத்துக்கு லாரி வாங்கியது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளாக விசாரணை முடியவில்லை.

அப்படியென்றால் ஊழலை மூடி மறைக்க அரசும், ராணுவ மந்திரியும் முயற்சிக்கிறார்களா? ஊழலுக்கு ஆதரவு தருகிறபோது பதவியில் தொடர உரிமை இல்லை. ராணுவ மந்திரி பதவி விலக வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

இந்தப் பிரச்சினையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே விசாரணை நடத்துமாறு கூறி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணிக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியதையும் பிரகாஷ் ஜாவத்கர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது - நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே!

Saturday, March, 31, 2012
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே தெரிவித்துள்ளார்.இலங்கைப் பிரஜைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாது.

போர்க்குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணைக் குழு ஒன்றை நிறுவ வேண்டும் என்றாலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடருமாறு நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிட்டார்க், விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த போதே அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. எனவே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

சம்பந்தப்பட்டத் தரப்பினர் ஆயுதம் ஏந்தியதன் காரணமாகவே 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் , பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் கைது!

Saturday, March, 31, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பதினொரு உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ரன்கல காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பயணம் செய்த இரண்டு வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகளின் சமாதானம் பிரபாரகரனை தமிழீழத்தின் ஜனாதிபதி ஆக்கியிருக்கும் - விமல் வீரவன்ச!

Saturday, March, 31, 2012
இலங்கை::புலிகளுடன் அப்போதைய இல்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்ட வெளிநாட்டு சக்திகளின் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால் பிரபாகரன் தமீழத்தின் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் ரணில் அவரை சந்திக்க விசா எடுத்தே சென்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொழுது அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அதன் பொழுது புலிகளின் தமிழீழ இராச்சியம் நிறுவப்பட்டிருந்தால் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்கள் எமக்குச் சொந்தமில்லாது போயிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தினரும் பொறுப்போடு செயற்பட்டு புலி பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டிருக்கின்றார்கள். இந்த சவலை இலங்கை வென்றெடுத்த பின்னர் அவர்களை விரட்டியடிக்கின்றன வேலைத்திட்டங்கள் நடக்கின்றன என்று குறிப்பிட்டார் அமைச்சர்.

தொடர்ந்து பேசிய அமைச்சல் விமல் இதற்கு முன்பு நாட்டை ஆண்ட எந்தத் தலைவர்களும் செய்hத வேலையை மகிந்த ராஜபக்ச செய்து முடித்துள்ளார் என்று தெரிவித்தார். அத்துடன் அக்காலங்களின் அரசுகள் யுத்தம் செய்யவில்லை. யுத்தம் வேண்டுமா இல்லையா என்பதை வெளிநாட்டு தூதரகங்களே தீர்மானித்தன என்றார்.

வெளிநாட்டு சக்திகளால் தீர்மானிக்கப்பட்டு புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் ரணிலுக்கும் நடந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால் இப்பொழுது பிரபாகரன் தமீழத்தின் ஜனாதிபதியாக இருக்க ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனைச் சந்திக்க விசாவினைப் பெற்று சென்றிருப்பார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வெற்றிகரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாட்டு தூதர் சொன்னதை கேட்டு முன்னைய அரசாங்கம் யுத்தத்தை நிறுத்தி இராணுவத்தை பின்வாங்கச் செய்தனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே யுத்தம் நடத்திய பொழுது பல வெளிநாட்டு சக்திகள் யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தங்களைக் கொடுத்த பொழுதிலும் அதற்கு முகம் கொடுத்து யுத்த்தில் பாரிய வெற்றியைக் கண்டார் என்று தெரிவித்தார்.

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய படகு: இலங்கை மீனவர்கள் இருவர் அதிரடி கைது!

Saturday, March, 31, 2012
வேதாரண்யம்::வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் இரண்டு பேரை வேதாரண்யம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று மதியம் இரண்டு மணியளவில் பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதில், இலங்கையைச் சேர்ந்த இரு மீனவர்கள் இருந்தனர். இவர்களை வேதாரண்யம் போலீஸார் மற்றும் கடற்கரை போலீஸார், கோடியக்கரை கப்பற்படை முகாம் அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் இருவரும் இலங்கை பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த அந்தோணிபிள்ளை என்பவருக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடிக்க வந்துள்ளனர். அதேபகுதியை சேர்ந்த சிவாஜி மகன் சிவாஜி பிரபு (28), பையாராஜா மகன் தயாளன் (18) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் நேற்றுமுன்தினம் மதியம் இலங்கையில் இருந்து மீன்பிடிக்க கடலில் கிளம்பியுள்ளனர். அப்போது கடலில் காற்று அதிகமாக வீசியதால் திசைமாறி நேற்று மதியம் கோடியக்கரை கரையில் சேர்ந்துள்ளனர். "படகில் இருந்த எரிபொருள் தீர்ந்ததால் படகை தொடர்ந்து செலுத்த முடியாமல் கோடியக்கரையில் கரை ஒதுங்கநேரிட்டது' என, கைதான இருவரும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆபரேஷன் ஹம்லா என்னும் ஒத்திகையை போலீஸாரும், கடலோர பாதுகாப்பு போலீஸாரும், சுங்கத்துறை, கப்பற்படையினருடன் இணைந்து ஈடுபட்டிருந்தனர். கடலில் எந்தப் பொருட்கள் வந்தாலும் விசாரணை நடத்த வேண்டியது சுங்க இலாகாவினரின் பொறுப்பு ஆகும். ஆனால், கோடியக்கரையில் சுங்க இலாகா அதிகாரிகள், சூப்பிரெண்டு உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தும் சுங்கத்துறையினர் இலங்கை மீனவர்கள் குறித்து விசாரணை ஏதும் நடத்த முன்வராதது அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் படகு, யமஹா இன்ஜின், மீன் வலை ஆகியவற்றையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் இலங்கை நபர்கள் நடமாடியதால் பாஸ்போர்ட் சட்டப்படி இலங்கை மீனவர்கள் சிவாஜி பிரபு, தயாளன் ஆகிய இருவரையும் வேதாரண்யம் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் இருந்து, 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தியவர் ,சென்னை விமான நிலையத்தில் கைது!

Saturday, March, 31, 2012
சென்னை::இலங்கையில் இருந்து, 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தியவரை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை, மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரியாஸ்,55. இவர், இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று அதிகாலை சென்னை வந்தார். சுங்கவரி செலுத்தக்கூடிய வகையில், தன்னிடம் எந்த பொருளும் இல்லை எனக் கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய கஸ்டம்ஸ் அதிகாரிகள், உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, அவரது சூட்கேசில், 10க்கும் மேற்பட்ட போட்டோ ஆல்பங்கள் இருந்தன. அவற்றில் பொருத்தப்பட்டிருந்த கம்பி வலையங்கள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில், கம்பி வலையங்கள் அனைத்தும், தங்கத்தால் செய்யப்பட்டு, வெள்ளி முலாம் பூசப்பட்டவை எனத் தெரிந்தது.

தொடர்ந்து நடத்திய சோதனையில், சூட்கேசை தள்ளிச் செல்ல உதவும் கைப்பிடி, பெல்ட் பக்கிள்ஸ், கரும் பலகையில் எண்ணிக்கையை குறிக்க வைக்கப்பட்டிருக்கும் மணிகளை பொருத்தும் கம்பிகள் என, அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டு, முலாம் பூசப்பட்டவை என கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 890 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 26 லட்ச ரூபாய். கஸ்டம்ஸ் அதிகாரிகள், முகமது ரியாசை கைது செய்தனர்.

ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தால் எமக்கே பாதிப்பு - திஸ்ஸ விதாரண!

Saturday, March, 31, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கை எதிர்காலத்தில் சிறப்பான பாதையில் பயணிக்க முடியுமென சோஷலிச மக்கள் முன்னணி குறிப்பிடுகிறது.

ஜெனீவா மாநாட்டின்போது இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைத்த நாடுகளை தூற்றுவதில் எவ்வித பயனுமில்லை என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வூடகச் சந்திப்பில் அமைச்சர் ரோசிரியர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் டி.யூ.குணசேகர மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவுபவர்களின் முயற்சிகள் தோல்வி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, March, 31, 2012
இலங்கை::நாட்டிற்கு எதிராக பரப்பப்படும் தவறான பாரிய பிரசாரங்களி லிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பதிலளிக்கும் பொறுப்புக்கு மேலதிகமாக நாட்டைப்பற்றிய யதார்த்தத்தையும், சத்தியத்தையும் உலகிற்கு எடுத்துக் கூறவேண்டியதும் ஊடகங்களுக்கான பொறுப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி; சில சக்திகள் ஊடகங்கள் மூலம் எழுப்பும் தவறான பிரசாரங்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தை நேற்றுக் கொழும்பில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- ஊடகம் என்பது ‘கிளேமோர்’ குண்டு போன்று பலமுடையது. நாடுகளைக் கடந்து செயற்படுவது. எனினும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமானது. மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும் மீள இனவாதம் கிளப்பப்படக் கூடாது.

நாம் இலங்கையர் என்ற வகையில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் வெற்றி கண்டுள்ளோம். எனினும் இன்றும் கட்சி பேதங்களுடன் செயற்படுபவர்கள் ஊடகங்களினூடாக நாட்டுக்கெதிராக பிரசாரங்களை மேற்கொள்வதற்கு இடமளிக்க முடியாது.

இன்றும் எதிர்காலத்திலும் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளி லிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கும் குறிப்பாக தகவல் திணைக்களத்திற்கும் உள்ளது. தேசிய மட்டத்திற்கு மேலாக உலகளவில் உண்மையையும் யதார்த்தத்தையும் எடுத்துக் கூறுவதில் முன்னிற்பது அவசியமாகும். 48ம் ஆண்டளவில் சோல்பரி ஆணைக்குழுவின் ஆலோசனைக்கிணங்க தகவல் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூருகிறேன். இத்திணைக்களமானது முக்கியமான பல நடவடிக்கைகள் மூலம் அதன் இலக்குகளை எட்டி வருகிறது.

தற்போது புதிதாக இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையம் பல முக்கியமான பிரிவுகளை உள்ளடக்கி ஊடகத்துறையினருக்கு உறு துணை புரிய உள்ளது. இந்தத் திணைக்களம் நாட்டிற்காக, மக்களுக்காக அரிய பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதைப் பெருமையுடன் கூற முடியும். அதேபோன்று இங்கு பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் அர்ப்பணிப்புடனான சேவை களை நாட்டிற்காக வழங்கியுள்ளனர். இவர்களை நான் வாழ்த்துவதில் மகிழ்ச்சி யுருகிறேன். இவர்கள் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச விருதுகள் பலபெற் றவர்கள்.

அதேபோன்று தகவல் திணைக்களமானது அரசாங்கத்தின் அபிவிருத்தியை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கிலேயே ஆரம்பிக் கப்பட்டது. அதன் இலக்கை அது நிறைவேற்றிவருகிறது.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள், நாடு பெற்ற வெற்றி, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை தேசிய மட்டத்தில் மட்டுமின்றி முழு உலகிற்கும் வெளிப்படுத்தும் செயற்பாட்டை இக்கால கட்டங்களில் அது முன்னெடுக்க வேண்டியது முக்கியம்.

கொழும்பை மட்டும் இலக்காகக் கொண்ட அபிவிருத்தியும் மாற்றப்பட்டு தற்போது வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுதுமும் அபிவிருத்தி செயற் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் துறைகளான விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம், மின்சாரம் ஆகியதுறைகள் பாரிய அபிவிருத்தி கண்டு வருகின்றன. இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் செயற் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. எனினும் இது ஊடகங்களுக்குத் தெரிவதில்லை என நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் புலிகள் அமைப்பி லிருந்த முன்னாள் உறுப்பினர்களில் பெருமளவிலானோரை நாம் விடுதலை செய்துள்ளோம். அவர்கள் புனர்வாழ்வு பெற்றுவிட்டதாகவும் நம்புகிறோம். நான் சந்தித்த பல வெளிநாட்டுத் தூது வர்கள் இது பற்றி என்னிடம் தெரிவிக்கும் போது இந்த விடயம் தமக்குத் தெரியாது எனக் கூறினர்.

எமது ஊடகங்கள் ஏன் இதனை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. ஊட கங்கள் இதனை மறந்து விட்டனவா?

பெண்கள் மீதான துஷ்பிரயோகம், எங்காவது நடக்கும் படுகொலைகள் பற்றி பெரும் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஊடகங்கள் ஏன் இத்தகையவற்றை வெளிப்படுத்த தவறுகின்றன? இந்த நாட்களில் 2500 ரூபாவிற்கு தாராளமாக உண்டு, குடிக்க முடியும்’ என்ற கூற்று பெரிதாக பிரசாரப்படுத்தப்படுகிறது.

உண்மையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, குரோதம் நிறைந்த அரசியல் செயற்பாடுகளை ஒழிப்பது, தேசிய அபிவிருத்தியை உலகிற்குத் தெரியப்படுத்து வது போன்ற நடவடிக்கைகள் ஊடகங்களில் இடம்பெறுவதில்லை.

சில கிராமப் பிரதேசங்களில் அங்கு நடைபெற்றுவரும் கெட்ட விடயங்கள் பதாதைகளில் பதியப்பட்டுள்ளது போல் அங்கு நடக்கும் நன்மைகள் எழுத்து வடிவில் வெளிப்படுத்தப்படுவதில்லை.

கிராமங்கள் தற்போது எழில் பெற்றுள் ளனடுத்த முன்வருவதில்லை.

நாம் முதலில் எம் நாட்டின் மீது அன்பு செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். எந்த இனம், எந்த மதம், மொழி என்றில்லாமல் அவர்கள் தாய் நாட்டுக்கு அன்பு செலுத்த வேண்டும். அதற்குப் பெருமை பாராட்டப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது முக்கியம்.

தனமல்வில, கதிர்காமம் பகுதிகளில் வீதி நிர்மாணப் பணிகளின் போது மாணிக்கக் கற்கள் காணப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல சம்பவம், எனினும் அதனை மோசமாகவும், அதனை வைத்து அரசாங் கத்தைச் சாடவும் சில ஊடகங்கள் முயற் சித்தன. இதனால் இவர்கள் மக்களுக்கு கூற முற்படுவதென்ன?

குப்பை மேடுகளாகக் காட்சியளித்த கொழும்பு நகரம் தற்போது எழில் பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப் படுகின்றது. இவற்றை ஏன் ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை?

நல்லதை நல்லதாக வெளிப்படுத்த வேண்டும். மக்கள் மேம்பாடு, நாட்டின் எதிர்காலம் தொடர்பான நடவடிக்கைகள் போன்றவை வெளிப்படுத்தப்பட வேண் டும். அதர்மத்தையன்றி தர்மத்தையும் வளம் குன்றியதையன்றி வளம் பெறு வதையும் வெளிப்படுத்துவது அவசியம்.

தவறுகள் பற்றி எடுத்துக் கூறுவது போல் நல்லவைகள் பற்றியும் யதார்த்தம் பற்றியும் கூற வேண்டும். இனவாதத்தைக் கிளப்பும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

மக்கள் பட்ட துயரங்கள், கஷ்டங்கள் போதும் இனியும் அதற்கு வழி வகுக்காது சரியானதை சரியாக வெளிப்படுத்துவது முக்கியம். இதை மறந்து செயற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவுபவர்களின் முயற்சிகள் தோல்வி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேவைப்படும் எந்தத் தொலைவுக்கு செல்லவும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிர லுக்கு இன்னும் உதவி வருகின்ற வர்களின் முயற்சிகள் தோல்வியுற்று இருப்பதையே உங்களது வருகை எமக்கு உணர்த்துகின்றது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். எக்ஸ்போ- 2012 சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு- 7 லுள்ள பண்டார நாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமான இக்கண்காட்சியில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, கொரியா உட்பட அறுபது நாடுகளைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கு பற்றியுள்ளனர்.
இந்தக் கண்காட்சியை அங்கு ரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந் தும் உரையாற்றுகையில், எமது நாட்டின் வர்த்தகத் துறையில் ஏற் பட்டு வருகின்ற பாரிய முன்னேற் றத்தில் நாம் அடுத்தபடி எடுத்து வைக்கவிருக்கின்றோம். இந்த முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பத்தில் நடைபெறும் இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் பிரதம அதிதியாகப் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தற்போது இலங்கையில் புதிய அபிவிருத்தி நடைபெறுகின்றது. வர்த்தக முதலீடு மற்றும் முக்கியத்துவம் மிக்க பங்களிப்புகளுக்காக இலங்கை மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்தினர் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இந்த சந்தர்ப்பத்தில் பங்குபற்றி இருப்பதை நான் அறிவேன். வர்த்தகம், முதலீடு, சுற்றாடல் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பங்குபற்ற வருகை தந்துள்ள சகல வெளிநாட்டவர்களையும் அன்புடன் வரவேற்கின்றேன். இவ்வாறு பெருந்தொகை வர்த்தக சமூகத்தினரின் வருகையானது இந்நாட்டின் வர்த்தக துறையின் மேம்பாட்டில் சிறந்த வெளிப்பாட்டைக் காட்டுகின்றது.
இலங்கை தற்போது வர்த்தக நடவடிக் கைகளுக்காக முழுமையாக திறக்கப்பட்டு ள்ளது. இதனை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கையும் அவற்றின் வித்தியாசமும் நன்கு தெளிவுபடுத்தும்.

இந்த சந்தர்ப்பம் 15 வருடங்களுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. வர்த்தகம், முதலீடு உல்லாசப் பயணத்துறை மற்றும் அபிவிருத்தி என்பன ஒன்றாகக் கவரக்கூடியவையாக இணைந்து காணப்படுகின்றன. இவ்வாறு 15 வருட கால இடைவெளி ஏற்பட்டதற்கான காரணத்தை கூறுவதை பொருத்தமான தெனக் கருதுகின்றேன். இந்தக் காலப்பகுதியில் மிகக் குரூரமான பயங்கரவாதத்திற்கு முகம்கொடுத்தோம். இந்தக் காலப் பகுதியில் வெளிநாட்டவரி டமிருந்து சில உதவிகளை பெற்று வந்த பயங்கரவாத சக்திகளின் செயற்பாட்டி னால் வர்த்தக நடவடிக்கைகளும் எம்மை விட்டு தூரமாகி இருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான நெருக்கடி இப்போது முடிவுற்றுள்ளது என்பதை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம். நீங்கள் சுதந்திரமாக நடமாடும்போது இவற்றை உங்களால் பார்க்கவும், உணரவும் முடியும். அது உண்மையாகவே முடிந்துள்ளது.

பிரிவினைவாதமும் வன்முறைச் சக்திகளும் மீண்டும் அவற்றின் குரூர தலைகளை தூக்குவதற்கு எமது தாயகத்தில் எங்கும் நாம் இடமளிக்கமாட்டோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக் கின்றேன். இலங்கை மிக அர்ப்பணிப்புடன் வென்றெடுத்த சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையில் முன்னோக்கி செல்லுகின்றோம்.

நல்லிணக்கத்தின் ஊடாக நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேவைப்படும் எந்தத் தூரத்திற்கு செல்லவும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இது எமது மக்களுக்காக எமக்குள் ஏற்பட்டிருக்கும் அர்ப்பணிப்பாகும். இதனை எப்படி செய்யவேண்டும்? எந்த முறையில் மேற்கொள்ளவேண்டும் என்றும் எவரும் எமக்கு சொல்லித் தரத்தேவை இல்லை.

நாட்டில் யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுற்றுள்ளது. தேவையற்ற கடும் ஒழுங்குவிதிகள் ஊடாக போட்டி வர்த்தக துறை மட்டுப்படுத்தப்படாது திறந்து விடப்பட்டுள்ளது. வர்த்தகத்தை ஊக்குவிக்கும் அரச தலைவரின் கீழ் தனியார் துறையின் முழுமையான பங்களிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் பயனாக தற்போது எமது நாட்டில் இப்பிராந்தியத்திலேயே தனித்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடம் இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடு இரு மடங்காக அதிகரித்தது. அத்தோடு இவ்வருடமும் கொழும்பு பங்குச் சந்தையின் அண்ணளவான முதலீடுகளைப் போல வணிக வங்கிகளின் முதலீடுகளும் அதிகரித்துள்ளன.

இந்தக் கண்காட்சியில் 370 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறிய, மத்திய அளவிலான கைத்தொழில் துறையினர் பங்குபற்றியுள்ளனர். இவர்களில் 25 வகையைச் சேர்ந்தவர்கள் இறக்குமதி துறையைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மேற்கொள்ளும் இறக்குமதி நடவடிக்கை களால் இந்நாட்டில் பொருளாதாரம் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இப்பிராந்தியத்திலேயே இலங்கை வர்த்தக மற்றும் வணிக நடவடிக்கைகளில் தற்போது கேந்திர நிலையமாக மாறியுள்ளது. என்றாலும் வெகு விரை வில் இலங்கை ஆசியாவின் கேந்திர நிலையமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

கடந்த முப்பது வருடகாலத்தில் இலங்கையின் அபிவிருத்தி தடைப்பட்டிருந்தது. பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இன்னும் உதவி வருகின்றவர்களின் முயற்சிகள் தோல்வி யுற்று இருப்பதையே உங்களது வருகை எமக்கு உணர்த்துகின்றது என்றார்.

Friday, March 30, 2012

ஓய்வெடுத்து வரும் யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சச்சின்!

Friday, March,30, 2012
லண்டன்::நுரையீரலுக்கு அருகே ஏற்பட்ட புற்றுநோய் கட்டிக்காக அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து லண்டனில் ஓய்வெடுத்து வரும் இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கை, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த ஆண்டு (2011) உலக கோப்பை தொடரில் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்ற அவர், அதன்பிறகு பங்கேற்ற போட்டிகளில் சொதப்பலாக ஆடினார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சோதனை செய்தபோது அவரது நுரையீரலுக்கு அருகே புற்றுநோய் கட்டி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிகிச்சைக்காக யுவராஜ் சிங் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு 3 நிலைகளில் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதி சிகிச்சை முடித்த யுவராஜ் சிங் டிஸ்சார்ஜ் ஆனார். தற்போது லண்டனில் ஓய்வெடுத்து வருகிறார்.
Read: In English
முன்னதாக யுவராஜ் சிங்கின் சிகிச்சையின் போது முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்பளே, யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேற்கண்ட சம்பவங்களை யுவராஜ் சிங் தனது ட்விட்டர் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28ம் தேதி சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த சச்சின், யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் 1 மணி நேரத்திற்கு மேலாக பேசி கொண்டனர். அப்போது சிகிச்சை முடித்து ஓய்வெடுத்து வரும் யுவராஜ் சிங் விரைவில் குணமாக சச்சின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடன் சேர்ந்து சச்சின் புகைப்படம் எடுத்து கொண்டார்.

சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வரும் யுவராஜ் சிங், மே மாதம் இறுதி வாரத்தில் முழு உடல்திறனுடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழில் இருவர் காணாமல் போன சம்பவம் - சாட்சி விசாரணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில்!

Friday, March,30, 2012
இலங்கை::மக்கள் போராட்ட இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவத்தின் சாட்சி விசாரணைகளை, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இருவரும் காணாமல் போனமை தொடர்பில் அவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த இரண்டு இளைஞர்களும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ இல்லை என இதன்போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அவர்கள் கைதுசெய்யப்படவில்லை எனில் சம்பந்தப்பட்ட பிரதேச நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை ஆரம்பிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இதன்போது மனுதாரர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தார்.

எவ்வாறாயினும் இந்த வழக்கின் பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர் மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் இதுவரையில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்காத காரணத்தினால், அந்தத் தீர்மானத்தை சாட்சியமளித்ததன் பின்னர் எடுக்க வேண்டும் என பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

காரணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், குறித்த சாட்சி விசாரணைகளை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதன் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அடுத்த மாதம் 27 ஆம் திகதி மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்த நீதிபதிகள் குழாம், குறித்த தினம் பிரதிவாதிகளின் எதிர்ப்புகளை முன்வைக்க முடியுமெனக் குறிப்பிட்டார்.

குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார ஆகிய மக்கள் போரட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ்பாணத்தில் காணாமற்போனமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை!

Friday, March,30, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 13 வயதான சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீதான விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இதன்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை சந்தேகநபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே தமது சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.

கடந்த மூன்றாம் திகதி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நெடுந்தீவு எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த யேசுதாசன் லக்சினி என்ற குறித்த சிறுமியின் சடலம், நெடுந்தீவு ஒன்பதாம் வட்டாராப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

குறித்த சிறுமி வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் தாக்கி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த யேசுதாசன் லக்சினி ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையாவார்.

சிறுமியின் கொலைச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வியறிவு அமைப்பு தகவல் இங்கிலாந்தில் 5 பேரில் ஒருவர் படிக்காதவர்!

Friday, March,30, 2012
லண்டன்::இங்கிலாந்தில் 5 பேரில் ஒருவருக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என்று உலக கல்வியறிவு அமைப்பு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. உலக கல்வியறிவு அமைப்பு, பணக்கார நாட்டு மக்களின் கல்வியறிவு குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், இங்கிலாந்தின் மக்கள் தொகையில் 80 லட்சம் பேர் கல்வியறிவில் குறைந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு சரியாக எழுத, படிக்க தெரியவில்லை. மருத்துவ சீட்டுகளில் உள்ளவற்றை படிக்க முடியவில்லை. பலருக்கு செக் புக்கை சரியாக பூர்த்தி செய்ய தெரியவில்லை என்று தெரிய வந்துள்ளது.இதுகுறித்து இந்த அமைப்பின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ கே கூறுகையில்,

கல்வியறிவை பொறுத்த வரையில் நீங்கள் வளர்ந்த நாட்டினரா, வளரும் நாட்டினரா, வறுமையில் உள்ள நாட்டை சேர்ந்தவரா என்பதெல்லாம் கிடையாது. ஆனால், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தின் கல்வியறிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றார். உலக நாடுகளில் இத்தாலியில்தான் 47 சதவீதம் பேருக்கு எழுத படிக்க தெரியவில்லை. 2வது இடத்தில் அயர்லாந்து (22.6 சதவீதம்), 3வது இடத்தில் இங்கிலாந்து (21.8 சதவீதம்) இடம்பெற்றுள்ளது என்று இந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நான்காவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கர்களில் 20 சதவீதம் பேருக்கு எழுத படிக்க தெரியவில்லை என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.

சீனாவில் சக்கை போடு போடுகிறது சிறுவர்கள் உச்சா வில் வேக வைக்கும் முட்டை!

Friday, March,30, 2012
டாங்யாங்::தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கெட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். அழகிய கடலோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்டை எடுத்து செல்லதான் அவர்களும் காத்திருக்கின்றனர். காலையில் இருந்து மாலை வரை பள்ளியில் சிறுவர்கள் கழிக்கும் சிறுநீர், பக்கெட்டில் சேகரிக்கப்படுகிறது. அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீர் மட்டுமே சேகரிக்கின்றனர்.

இதற்கு பள்ளிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அனுமதி வழங்கி உள்ளன. பள்ளி முடிந்து சிறுவர்கள் சென்றபின், டாய்லெட்டில் சென்று சிறுநீர் நிரம்பி இருக்கும் பக்கெட்டை தூக்கி செல்கின்றனர். பின்னர் அந்த சிறுநீரில் முட்டைகளை போட்டு வேக வைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். அப்போது கமகம வென வாசனை வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்கள் அந்த வாசனையை நுகர்ந்தபடி செல்கின்றனர். டாங்யாங் நகரில் பல நூறு ஆண்டுகளாக இந்த வழக்கம் இருப்பதாக கூறுகின்றனர். பாரம்பரிய உணவு வகைகளில் இதுவும் ஒன்றாம். சிறுநீரில் வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டால் மூட்டு வலி இருக்காது, சன் ஸ்ட்ரோக் வராது, வாசனையாகவும் இருக்கும். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்த எந்த சரியான விளக்கமும் உள்ளூர் நிர்வாகத் தரப்பில் இல்லை. எனினும் இந்த முட்டை விற்பனையை தடுக்கவும் இல்லை. இந்த பாரம்பரிய உணவை தயாரிக்க நிறைய நேரம் ஆகும்.

பள்ளிகளில் சிறுநீரை சேகரித்து, முட்டைகளை அதில் ஊறவைத்து, பின்னர் வேகவைத்து, அதன்பின் ஓடுகளை நீக்கி, அதன்பின் சில மணி நேரம் முட்டைகளை மீண்டும் கொதிக்கும் சிறுநீரில் வேகவைக்க வேண்டும். அதன்பின்னர்தான் விற்க வேண்டும் என்று பெருமையாக கூறுகின்றனர். இவ்வளவு கஷ்டங்கள் இருப்பதால், இந்திய மதிப்பில் ரூ.12.50க்கு ஒரு முட்டையை விற்கின்றனர். அதற்கேற்ப தங்கள் மூதாதையர்கள் கண்டுபிடித்த இந்த பாரம்பரிய உணவை உண்பதால், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும், உடல் வலி இல்லாமல் இருப்பதாகவும் டாங்யாங் நகரத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. கடைகளில் விலை அதிகம் என்பதால் வீடுகளிலும் சிலர் சிறுவர்களின் சிறுநீரை சேகரித்து முட்டைகளை அதில் வேகவைத்து உண்கின்றனர். எனினும், இந்த முட்டையை பிடிக்காதவர்களும் நகரில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ராமஜெயம் உடல் தகனம் ஸ்டாலின், அழகிரி அஞ்சலி:- கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை துப்பு துலங்குகிறது 5 தனிப்படை தீவிரம்!

Friday, March,30, 2012
திருச்சி::திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம் நேற்று மர்ம கும்பலால் காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று இரவு 7 மணியளவில் அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், திமுக முன்னாள் அமைச்சர்கள் கோசி மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஐ. பெரியசாமி, செல்வராஜ், எம்எல்ஏ கே.சி. பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், பரணிக்குமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.க.தலைவர் கி.வீரமணி, கனிமொழி எம்.பி., மத்திய இணை அமைச்சர்கள் நெப்போலியன், காந்திசெல்வன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராமஜெயத்தின் உடல் தில்லைநகரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தில்லைநகர், தெப்பக்குளம் வழியாக திருச்சி காவிரி கரையிலுள்ள ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.



கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை துப்பு துலங்குகிறது 5 தனிப்படை தீவிரம்!
திருச்சி::முன்னாள் அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். கொலையாளிகள் பற்றிய விவரம் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் (52), திருச்சியில் நேற்று படுகொலை செய்யப்பட்டார். தில்லை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு வாக்கிங் சென்றவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்து, உடலை கல்லணை அருகே காவிரி ஆற்றின் ஓரம் புதருக்குள் வீசிவிட்டு சென்றனர். பின்னந்தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் மூச்சுவிட முடியாமல் திணறடித்து ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அவரை கடத்திய கார் திருச்சி நகரின் பல பகுதிகளில் சுற்றியுள்ளது. கொலையாளிகள், காரிலேயே அவரது வாயில் துணியை திணித்து செல்போன்களை பறித்துள்ளனர்.ராமஜெயம் கிரானைட் ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் தொழில்கள் செய்துவந்தார். பொறியியல் கல்லூரி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அரசியலிலும் நேருவுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டார். தொழில் ரீதியாக இவருக்கு போட்டிகள் இருந்தன. பலமுறை அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. அவற்றை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார்.

நேற்று அதிகாலை வாக்கிங் சென்றபோது 3 செல்போன்களை அவர் எடுத்துச் சென்றுள்ளார். வாக்கிங் செல்லும் பகுதி அதிகாலையில் பரபரப்பாக இருக்கும் என்பதால் அவரை அங்கு வைத்து யாரும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியிருக்க முடியாது. காரில் இருந்தவர்கள் தங்களை உயர் போலீஸ் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் என கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லது இவருக்கு தெரிந்தவர்கள் யாரும் காரில் இருந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ராமஜெயத்தை கடத்தி கொலை செய்ததும், அவரது செல்போனில் இருந்தே வீட்டுக்கும், கல்லூரிக்கும் கொலையாளிகள் பேசி உள்ளனர். எனவே, செல்போன் மூலம் துப்பு போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் பேசியபோது, கல்லூரியில் போனை எடுத்தவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். போனில் பேசியவர் குரல் எப்படி இருந்தது? சென்னை அல்லது நெல்லை தமிழில் பேசினாரா, வேறு மொழியில் பேசினாரா என விசாரித்தனர். ராமஜெயத்தின் மனைவி லதாவிடம் நாளை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ராமஜெயம் அதிகாலை 5.15 முதல் 5.30 மணிக்குள் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் திருச்சி கே.டி. தியேட்டர் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் எத்தனை வாகனங்கள் கடந்து சென்றுள்ளன என போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 டெம்போ டிராவலரும், 11 கார்களும் கடந்தது தெரியவந்தது. அந்த வண்டிகளின் நம்பர்களை சேகரித்த போலீசார், அவை யாருக்கு சொந்தமானது, அந்த வாகனம் அதிகாலை வேளையில் அங்கு ஏன் வந்தது என விசாரித்து வருகின்றனர்.

அடுத்தகட்டமாக சடலம் கிடந்த திருவளர்ச்சோலை பகுதியில் இருந்து நேற்று காலை எத்தனை போன்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது என ஒரு டீம் விசாரித்து வருகிறது. அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரை அந்த பகுதியில் 11 செல்போன்கள் பயன்படுத்தப்பட்டதும், 20 நிமிடம் அந்த போன்கள் உபயோகத்தில் இருந்ததும் தெரியவந்தது. எந்தெந்த எண்களில் இருந்து யார், யாருக்கு பேசி உள்ளனர் என செல்போன் நிறுவனங்களிடம் போலீசார் விசாரித்தனர். ராமஜெயத்தின் மனைவியை தொடர்பு கொண்ட நபரும் அங்கிருந்துதான் பேசியுள்ளார். கொலையாளிகள்தான் 11 போன்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அவற்றில் சில போன் எண்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த போன் எண்களை வைத்து, கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ராமஜெயம் கொலையில் செல்போன் மூலம் துப்பு துலக்கி வருகிறோம். அதில் கொலையாளிகள் பற்றிய சில விவரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களை பிடித்து விடுவோம் என்றார்.

நிலையான அமைதியை எட்டுவதற்கு இலங்கை அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனுப்பியுள்ளோம் - விக்டோரியா நூலண்ட்!

Friday, March,30, 2012
நிலையான அமைதியை எட்டுவதற்கு இலங்கை அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் நேற்று வாசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இலங்கை, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:-

உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளது.

அதற்கு உதவ சர்வதேச சமூகம் தயாராகவே உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், புதிய தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஊக்குவிப்பை வழங்கியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர், எம்.பி. கோஷ்டி மோதல் திருப்பூரில் ஜெ. பேனர் கிழிப்பு!

Friday, March,30, 2012
திருப்பூர்::திருப்பூரில் அமைச்சர் ஆனந்தன், எம்.பி. சிவசாமி ஆதரவாளர்களுக்கிடையேயான கோஷ்டி பூசலில், ஜெயலலிதா படத்துடனான பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் அதிமுகவில் அமைச்சர் ஆனந்தன் மற்றும் எம்.பி. சிவசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். சிவசாமியின் ஆதரவாளர்கள் சிலர், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றியையொட்டி முதல்வர் ஜெயலலிதா படத்துடன் மெகா பேனர்களை, புஷ்பா ஜங்ஷன் மற்றும் காங்கயம் ரோடு, சி.டி.சி. கார்னர் பகுதியில் வைத்திருந்தனர். சிவசாமி, மேயர் விசாலாட்சி உள்ளிட்டோரின் படங்களுடனான இந்த பேனர்களில், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆனந்தன், துணை மேயர் குணசேகரன் ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை.இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென மெகா பேனர்கள் கிழித்து அகற்றப்பட்டுள்ளன.

தகவல் அறிந்த எம்.பி. ஆதரவாளர்கள் நேற்று இரவு அங்கு கூடினர். பேனர் கிழிப்புக்கு எதிராக திடீர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு காவல்நிலையங்களில் புகார் தெரிவித்தனர். அதிமுக நிர்வாகிகள் சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள் தான் தங்கள் பேனரை கிழித்து அகற்றியதாக தெரிவித்தனர். அதிமுகவினரிடையே முற்றியுள்ள கோஷ்டி பூசல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மகளிர் அணி நிர்வாகியும், கவுன்சிலருமான கீதா, மாநகர சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி இப்ராஹிம் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தார். இதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, மர்ம நபர்கள் தன்னை தாக்கியதாக கூறி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பி இப்ராஹிம், கட்சியினர்தான் தன்னை தாக்கியிருக்க கூடும் என்று போலீசில் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவ நீதிமன்றம் தேவை ஏற்பட்டால் இராஜதந்திரப் பதவிகளில் இருக்கும் படை அதிகாரிகளைக் கூட அழைத்து விசாரிக்கும் - ருவன் வணிகசூரிய!

Friday, March,30, 2012
இலங்கை::இலங்கை இராணுவ நீதிமன்றம் தேவை ஏற்பட்டால் இராஜதந்திரப் பதவிகளில் இருக்கும் படை அதிகாரிகளைக் கூட அழைத்து விசாரிக்கும் - ருவன் வணிகசூரிய:-

இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இராணுவ நீதிமன்றம் தேவை ஏற்பட்டால் இராஜதந்திரப் பதவிகளில் இருக்கும் படை அதிகாரிகளைக் கூட அழைத்து விசாரிக்கும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவத்தினுள் விசாரணைகளை மேற்கொள்ளப் படைத்துறைத் தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் தொடர்பாகக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறுீனார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினர் குற்றமிழைத்ததற்கான சான்றுகள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

இது உட்பட படையினர் தொடர்பாக ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாகவே இராணுவத் தளபதியினால் நீதிமன்றமொன்று நியமிக்கப்பட்டது.

இந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவ நீதிமன்ற விசாரணை தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை அல்ல.

நல்லிணக்க ஆணைக்குழு ஏற்கனவே விரிவான விசாரணைகளையும் ஆராய்வுகளையும் மேற்கொண்டே அதன் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே சாட்சியமளித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று இல்லை.

எவ்வாறிருப்பினும் தேவையேற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட எவரையும் அழைத்து விசாரிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இருக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமையவே படையினர் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணைக்குத் தெரிவு செய்யப்படுவர் என்றார்.

இலங்கையிலே இன்று ஒன்றிற்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள் -(புலி வால்) மனோ கணேசன்!

Friday, March,30, 2012
இலங்கை::இலங்கையிலே இன்று ஒன்றிற்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்சவை அடுத்து விமல் வீரவன்ச இரண்டாவது ஜனாதிபதி. சம்பிக்க ரணவக்க மூன்றாவது ஜனாதிபதி.

மகிந்தவின் கருத்து என்று சொல்லி, ஜெனீவா சென்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை நிறைவேற்றுவோம் என வெளிநாட்டில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தது அரசாங்க தூதுக்குழு. இன்று உள்நாட்டில் பார்த்தால் கதையே வேறு.

இங்கே இன்று இரண்டாவது, மூன்றாவது ஜனாதிபதிகள் கற்றுக்கொண்ட ஆணைக்குழுவையே தூக்கி எறிந்துவிட்டார்கள்.

கண்டியில் நடைபெற்ற எதிரணி போராட்ட கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். கண்டி மத்திய சந்தை பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ், சிங்கள மொழிகளில் உரையாற்றிய (புலிகளின் வால்)
மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க

நமது இரண்டாம் ஜனாதிபதி விமல் வீரவன்ச கற்றுக்கொண்ட ஆணைக்குழுவை திட்டி தீர்த்து, அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்கிறார். நாளாந்தம் இவரது வேலை இதுதான். இவரது அமெரிக்க எதிர்ப்பு கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இவருக்கான பதிலை இவரது அமைச்சரவை சகா டிலான் பெரேரா சொல்லிவிட்டார். சாரத்தை கட்டிக்கொண்டு தலைக்கீழாக நிற்பவர் இவர் என டிலான் பெரேரா சொல்லிவிட்டார். சாரத்தை கட்டிக்கொண்டு தலைகீழாக நின்றால் என்ன நடக்கும் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். எனவே நான் அந்த சாரம்கட்டி தலைகீழாக நிற்கும் கதையை இங்கே மீண்டும் விபரித்து சொல்ல சொல்ல விரும்பவில்லை.

மூன்றாம் ஜனாதிபதி சம்பிக்க ரணவக்க இந்தியாவை திட்டி தீர்க்கிறார். ஜெனீவாவிலே அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்துவிட்டது என்பதுதான் இவர்களுக்கு கோபம். இந்த கண்மூடித்தனமான கோபத்தில் இவர்களுக்கு, இவர்கள் நடத்திய போருக்கு இந்தியா செய்த உதவிகள் மறந்து விட்டது.

2009 இல் யுத்தம் நடைபெற்ற கடைசி நாட்களில் சர்வதேச படைகள் அமெரிக்காவின் தலைமையில் இலங்கைக்கு வராமல் தடுத்து நிறுத்தியது இந்தியா என்பது எமக்கு தெரியும். இது இவர்களுக்கும் தெரியும். R2P என்ற விதியின் கீழ் இலங்கையிலே சிறுபான்மை மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி, ஐநா படை இலங்கைக்கு வாராததன் காரணம் இந்தியாதான். இந்தியாதான் தலையிட்டு அது நடைபெறாமல் தடுத்து நிறுத்தியது. சர்வதேச படைகள் இலங்கைக்குள் வந்திருந்தால், இன்று நிலைமையே தலைகீழாக மாறி இருக்கும். இந்த உண்மைகள் தெரிந்தும் இவர்கள் இன்று இந்தியாவை திட்டி தீர்க்கிறார்கள்.

இவர்களது கூட்டாளித்தான் தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர. இந்த மனிதர் இன்னொரு இனவாத முட்டாள். இவர் ஒருபடி மேலே போய் இந்தியா விரைவில் துண்டு, துண்டாக உடையவேண்டும் என சாபம் போடுகிறார். நல்ல சாபம் இது. இந்தியா துண்டு, துண்டாக உடைந்தால், இன்றைய தமிழ்நாடு மாநிலம் தனித்தமிழ் நாடு ஆகும். தனி தமிழ்நாட்டின் முதல் வேலை, இலங்கையில் தமிழர்களை இணைத்துக்கொண்டு இங்கே தனி தமிழ் ஈழத்தை அமைப்பதாகத்தான் இருக்க முடியும்.

எனவே தமிழ் ஈழத்துக்கு இவர்கள்தான் இன்று வழி காட்டுகிறார்கள். இவர்களுக்கு தனி தமிழ் ஈழம் தேவையா? அப்படியானால் ஏன் ஐயா , எங்களையும், கூட்டமைப்பையும் பார்த்து பிரிவினைவாதி, ஈழம்வாதி என்றெல்லாம் சொல்லி திட்டுகிறீர்கள்?

இதன் பின்னால் உள்ள அரசியல் உண்மை இதுதான். இந்த முட்டாள்களுக்கு நேற்று முதல்நாள் நடந்த வரலாறு மறந்துவிடுகிறது. எதிர்காலம் பற்றிய தூர நோக்கும் கிடையாது. இவர்களது அரசியல் , அன்றாட காய்ச்சி அரசியல் ஆகும். கடந்த காலம், எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் எதுவும் இல்லாமல், ஒவ்வொரு தினமும் அன்றைய தினம் தங்கள் இனவாத சிந்தனைக்கு எட்டுவதை மாத்திரம் பேசுகிறார்கள்.

இந்த அடிப்படையில்தான், தமிழ் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் இவர்கள் பேசுகிறார்கள். தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படுவதையும் இவர்கள் இந்நோக்கில்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள். இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆறுமுகன் தொண்டமான்

இன்றைய இலங்கையில் இன்னொரு அதிசய அரசியல்வாதி ஆறுமுகன் தொண்டமான் ஆகும். இவரை இன்று மாண்புமிகு அமைச்சர் என அழைப்பதா அல்லது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதா என எனக்கு தெரியவில்லை. இன்று இவர் இந்த அரசாங்கத்தில் திரிசங்கு நிலையில் இருக்கிறார். மேலேயும் போக முடியாது, கீழேயும் வர முடியாது என்ற திரிசங்கு நிலை இவருக்கு இன்று ஏற்பட்டு உள்ளது.

இவருக்கு வாக்களித்து பதவி வாங்கித்தந்த அப்பாவி தோட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு தமது தலைவன் இன்று அமைச்சரா, வெறும் எம்பீயா என தெரியாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருக்கிறதா என்பதுவும் நிச்சயமாக தெரியவில்லை. ஏனென்றால் இதொகா தலைவர் முத்து சிவலிங்கம், தொண்டமானுடன் இருக்கிறாரா அல்லது பசில் ராஜபக்சவுடன் இருக்கிறாரா என மக்களுக்கு விளங்கவில்லை.

ஜனாதிபதியுடன் இவர் இன்று முரண்பட்டுள்ள காரணத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மலையக மக்களின் சம்பள பிரச்சனை, மண்ணெண்ணெய் பிரச்சனை, கோதுமை பிரச்சனை, விலைவாசி பிரச்சனை, கொழுந்து பிரச்சனை ஆகியவற்றுக்காக இந்த மலையக தலைவன் சண்டை போடவில்லை. இதை மலையக மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் .

ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் கீழ் வரும் ஒரு நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை பதவி நீக்கம் செய்து விட்டார். இவர் அந்த பணிப்பாளரை பதவி நீக்கம் செய்துவிட்டு தனது வீடு போவதற்குள், அந்த பணிப்பாளருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு விட்டது. இதுதான் பிரச்சினை.

அந்தளவிற்கு அந்த பணிப்பாளருக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது. இதுதான் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசாங்கத்துக்குள் இருக்கின்ற மரியாதை. இவர்களது பந்தா எல்லாம் அப்பாவி மலையக மக்களிடம்தான் என்பதை தோட்ட தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மரியாதை இல்லாத இடத்தில் இன்னமும் ஒட்டிக்கொண்டு இவர் இருக்கிறார். தன்மானம், சுய மரியாதை என்பதெல்லாம் பதவியின் முன் இன்று தோற்றுபோய் விட்டன என்பதுதான் உண்மை.

பாராளுமன்ற பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் அன்றும், இன்றும் தலைவன். ஏனென்றால் நான் தன்மானம் கொண்ட மறத்தமிழ் மானஸ்தன். தமிழ் மக்கள் என்னை, எனது கொள்கைகளை, எமது கட்சியை மதிக்கிறார்கள். தமிழ் மக்கள் என்னை ஏற்றுகொளும்வரை நான் தலைவன்தான். இலங்கையில் தமிழன் வாழும் பிரதான பிராந்தியங்கள் வடக்கு, கிழக்கு, மேலகம், மலையகம் ஆகிய நான்கு ஆகும். மேலகத்திலும், மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் என்னை மதிக்கிறார்கள். இந்த அந்தஸ்து இவர்களுக்கு இல்லை. ஏனென்றால் நான் மானமுள்ள மறத்தமிழன். அதை நான் நடைமுறையில் காட்டி இருக்கிறேன். பாராளுமன்ற பதவி இருந்தும், ஆறுமுகன் தொண்டமான் போன்றவர்கள் மண்ணாங்கட்டி தமிழர்கள். இந்த மண்ணாங்கட்டிகள் இன்று தமிழ் மக்களின் சாபக்கேடுகள்.

இன்று ஜனாதிபதி இவரது, ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. அதனால் இந்த மனிதர் இன்று திரிசங்கு நிலையில் இருக்கிறார். அதாவது ஜனாதிபதி இவருக்கு வழங்கியிருப்பது உண்மையிலேயே சங்குதான். எத்தனையோ கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நான் இந்த விசயத்தில் பாராட்டுகிறேன்.

இன்றைய நிலைமை என்ன? தான் பணி நீக்கம் செய்த பணிப்பாளர் விசயத்தையே மறந்துவிடுகிறேன், பதவியில் மீண்டும் அமர்த்துங்கள் என கெஞ்சும் நிலைமை இவருக்கு இன்று ஏற்பட்டு விட்டது. அதாவது ‘பிச்சை வேண்டாம் ஐயா, நாயை பிடியுங்கள் போதும்’ என்று மன்றாடும் நிலைமை ஆறுமுகன் தொண்டமானுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.