Saturday, March 31, 2012

வெளிநாட்டு சக்திகளின் சமாதானம் பிரபாரகரனை தமிழீழத்தின் ஜனாதிபதி ஆக்கியிருக்கும் - விமல் வீரவன்ச!

Saturday, March, 31, 2012
இலங்கை::புலிகளுடன் அப்போதைய இல்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்ட வெளிநாட்டு சக்திகளின் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால் பிரபாகரன் தமீழத்தின் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் ரணில் அவரை சந்திக்க விசா எடுத்தே சென்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொழுது அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அதன் பொழுது புலிகளின் தமிழீழ இராச்சியம் நிறுவப்பட்டிருந்தால் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்கள் எமக்குச் சொந்தமில்லாது போயிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தினரும் பொறுப்போடு செயற்பட்டு புலி பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டிருக்கின்றார்கள். இந்த சவலை இலங்கை வென்றெடுத்த பின்னர் அவர்களை விரட்டியடிக்கின்றன வேலைத்திட்டங்கள் நடக்கின்றன என்று குறிப்பிட்டார் அமைச்சர்.

தொடர்ந்து பேசிய அமைச்சல் விமல் இதற்கு முன்பு நாட்டை ஆண்ட எந்தத் தலைவர்களும் செய்hத வேலையை மகிந்த ராஜபக்ச செய்து முடித்துள்ளார் என்று தெரிவித்தார். அத்துடன் அக்காலங்களின் அரசுகள் யுத்தம் செய்யவில்லை. யுத்தம் வேண்டுமா இல்லையா என்பதை வெளிநாட்டு தூதரகங்களே தீர்மானித்தன என்றார்.

வெளிநாட்டு சக்திகளால் தீர்மானிக்கப்பட்டு புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் ரணிலுக்கும் நடந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால் இப்பொழுது பிரபாகரன் தமீழத்தின் ஜனாதிபதியாக இருக்க ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனைச் சந்திக்க விசாவினைப் பெற்று சென்றிருப்பார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வெற்றிகரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாட்டு தூதர் சொன்னதை கேட்டு முன்னைய அரசாங்கம் யுத்தத்தை நிறுத்தி இராணுவத்தை பின்வாங்கச் செய்தனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே யுத்தம் நடத்திய பொழுது பல வெளிநாட்டு சக்திகள் யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தங்களைக் கொடுத்த பொழுதிலும் அதற்கு முகம் கொடுத்து யுத்த்தில் பாரிய வெற்றியைக் கண்டார் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment