Monday, April 30, 2012

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் – பிரிட்டன் விகாராதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

Monday, April, 30, 2012
லண்டன்::இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் 28/04/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள கிங்க்ஸ்பரி பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மேற்படி விஜயத்தின் போது SLMDI UK இன் தலைவர் M.L நஸீர் உட்பட அதன் உறுப்பினர்களான S.M.இஸ்ஸடீன், A.அமீன் மற்றும் M. பவ்ஸிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி சந்திப்பின் போது கிங்க்ஸ்பரி பௌத்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் மற்றும் விகாரை நிர்வாகிகள் SLMDI UK இன் உறுப்பினர்களுக்கும் இடையில் தம்புள்ள பள்ளி உடைப்பு விவகாரம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது SLMDI UK உறுப்பினர்களால் தமது அமைப்பு பற்றிய அறிமுகம் மற்றும் அதன் குறிக்கோள்கள் தொடர்பில் விகாராதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தபட்டது.மேலும் தம்புள்ள பள்ளி உடைப்பு தொடர்பில் உரிய தீர்வினை பெறுவது தொடர்பில் பேசப்பட்டதோடு இலங்கையில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பள்ளி உடைப்பு தொடர்பிலான மகஜர் ஒன்றும் விஹாராதிபதி அவர்களிடம் SLMDI UK உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் அவர்கள் பள்ளி உடைப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்ததோடு இலங்கை வாழ் சிங்கள முஸ்லீம் சமூக இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட யாராக இருப்பினும் அவர்கள் தகுதி பாராது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் மூன்று இனங்களும் தத்தமது மதங்களை பின்பற்றும் உரிமை உண்டு எனவும் இனஇமத பேதங்களுக்கு அப்பால் நாம் இலங்கையர் என்ற ரீதியில் அதன் கல்வி பண்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

அத்துடன் அண்மையில் கிங்க்ஸ்பரி விகாரை மீது மேட்கொள்ளபட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் SLMDI UK யானது தனது கண்டனத்தையும் தெரிவித்தது.

இராணுவ கொடி வெளியீடு!

Monday, April, 30, 2012
இலங்கை::இராணுவ ஞாபகார்த்த மாதம் இன்று ஆரம்பமாகின்றது.

இந்தநிலையில். இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட இராணுவ கொடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

இந்த இராணுவ கொடி மூலம் திரட்டப்படும் நிதி இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரது சமூக சேவைகளுக்காக பயன்படுத்தப்படும்; என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளதுது.

இலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி)கருணாநிதி பேட்டி!

Monday, April, 30, 2012
2-ம் சென்னை::இணைப்பு இலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி) கருணாநிதி பேட்டி!

(புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி பேட்டி

சென்னை: இலங்கை தமிழர் உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட டெசோ அமைப்பின் முதல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. டெசோ அமைப்பின் உறுப்பினர்களான க.அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கை தமிழர் பிரச்னை தீர்வுக்கு தனி தமிழீழம் அமைவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உலக நாடுகள் உணர செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழீழம் விரைவில் அமைய ஐ.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு விரைவில் நடத்த வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

பின்னர் கருணாநிதி அளித்த பேட்டி:

ஆட்சியில் இல்லாதபோது, இந்த அமைப்பை தொடங்குவதாக கூறுகிறார்களே?

ஆட்சியில் இருக்கும்போதும், இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக போராடியிருக்கிறோம். தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான். ஜனநாயக ரீதியில் அறவழியில்தான் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

ஏ.கே.அந்தோணியிடம் தமிழீழம் பற்றி பேசினீர்களா?

என்னென்ன பேசினோம் என்று சொல்ல இயலாது.

மத்திய அரசு உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருமா?

முயற்சிக்கிறோம். முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இலங்கை பற்றிய தீர்மானத்தை எல்லா நாடுகளும் ஆதரித்தபோது, இந்தியா சற்று தாமதமாக முடிவெடுத்தது. இந்திய அரசின் ஒப்புதலை உருவாக்கியது திமுகவின் முயற்சி என்பதை மறந்து விடக்கூடாது.

இந்தியாவுக்கு எப்படிப்பட்ட ஜனாதிபதியை எதிர்பார்க்கிறீர்கள்?

நல்ல ஜனாதிபதியை.

ஏ.கே.அந்தோணி உங்களிடம் ஜனாதிபதி வேட்பாளர் பெயரை கூறினாரா?

சொன்னார். உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.

நீங்கள் பெயர்களை கூறினீர்களா?

நானும் கூறினேன். அதையும் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி!

Monday, April, 30, 2012
சென்னை::தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - (புலி ஆதரவு பிரிவினைவாதி) (புலி பினாமி) கருணாநிதி கோஷம்!

பல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப. வீரபாண்டியன் வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.

வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.

தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன.

அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது.

நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.

தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது.

இதன்மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் சிங்களர்கள்-(புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி

பின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.

இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

டெசோ பிறந்த கதை

டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. (புலி ஆதரவு பிரிவினைவாதிகள்)கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.

டெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஜெர்மனியில் பாடமாகிறது ஹிட்லரின் சுயசரிதை 67 ஆண்டு கழித்து அச்சாகும் புத்தகம்!

Monday, April, 30, 2012
லண்டன்::சிறையில் இருந்தபோது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகம், பள்ளி மாணவர்களுக்கு பாடமாகிறது. இப்புத்தகம் 67 ஆண்டுகளுக்கு அச்சிடப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது ‘மெய்ன் காம்ஃப்’ (மை ஸ்டிரகிள்) என்ற சுயசரிதை எழுதினார்.
ஹிட்லரின் அரசியல் சிந்தனையை விளக்கும் வகையிலான இந்த புத்தகம் முதலில் 1925,ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2,ம் பாகம் 1926,ல் வெளியிடப்பட்டது. 1945,ம் ஆண்டு வரை மொத்தம் 1 கோடி பிரதிகள் அடிக்கப்பட்டன. அதற்கு பிறகு அச்சிடப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 67 ஆண்டுகளாக அச்சிடப்படாமல் இருக்கும் ‘மை ஸ்டிரகிள்’ புத்தகத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அச்சிட்டு வழங்க ஜெர்மனியின் பவேரியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பவேரியா மாநில நிதி அமைச்சர் மார்கஸ் சோடர் கூறியதாவது:
மை ஸ்டிரகிள் அல்லது மை பேட்டில் என்ற பெயரில் மாணவர்களுக்கு இப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதில் ஹிட்லரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும். பெர்லினில் ஹிட்லர் 1945,ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பற்றிய தகவல்களை குழந்தைகள் அறிந்துகொள்வது அவசியம் என்பதால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அறிந்துகொள்வதும் புத்தகம் வெளியிடுவதும் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. நாசிச கொள்கைகள் நாட்டில் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்பட்டதால் இதுவரை இப்புத்தகம் அச்சிடப்படாமல் இருந்தது. கல்வி ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்களின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, 67 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘மை ஸ்டிரகிள்’ மீண்டும் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்?.

Monday, April, 30, 2012
சென்னை::அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது...

செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் கருணாநிதி.

திருமுறிகண்டிப் பகுதியில் ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளை!

Monday, April, 30, 2012
இலங்கை::திருமுறிகண்டிப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் சகிதமாகப் புகுந்த மூவர் அடங்கிய குழு வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அறையில் பூட்டிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

திருமுறிகண்டிப் பகுதியில் உள்ள சாரியா கிறீம் ஹவுஸ் என்ற கடைக் குள்ளும் அதனோடு இணைந்த வீட்டினுள்ளும் ஏ.கே.47 ரகத்துப்பாக்கிகள் சகிதமாக அத்து மீறி கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் துப்பாக்கிகளையும், கத்தியையும் காட்டி மிரட்டி அங்கிருந்த ஏழு வயதுப் பிள்ளையைப் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டு, ஏனையோரை வீட்டு அறைக்குள் அடைத்தனர். பின்னர் வீட்டைச் சல்லடை போட்டுத்தேடுதல் நடத்தி அங்கிருந்த பணம், நகை உட்பட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.

அதன்பின்னர் வீட்டிலுள்ளோரிடம் கிறீம் ஹவுஸ் திறப்பை வாங்கி, அதனைத் திறந்து அங்கிருந்த 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் போன்றவற்றையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் செல்லும்போது கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து அதன் பற்றரிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்கு அருகிலுள்ள பிறிதொரு இடமொன்றில் எறிந்துவிட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் காவற்துறையினரும், இராணுவத்தினரும் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தீவிர தேடுதலை நடத்தியபோது நடத்தியதுடன் இதுகுறித்த விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகளுடன் ஏ9 பிரதான வீதியோரமாகவுள்ள வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையால் அப்பகுதியெங்கும் நேற்றுப் பெரும் பதற்றம் நிலவியது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்!:-யாழ் மேதினத்தில் சஜீத்?

Monday, April, 30, 2012
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்:-

யாழ்ப்பாணத்தில் நளைய தினம் நடைபெறவுள்ள மே தினக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் எனவும் அது ஐக்கிய தேசியக் கட்சியினதோ, எதிர்க்கட்சிகளின் கூட்டு மே தினமோ அல்ல எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அந்த அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மே தினக் கூட்டம் குறித்த பிரசாரப் பணிகளை தமது கட்சியே மேற்கொண்டு, வட பகுதிகளுக்கு தெளிவுப்படுத்தியதாகவும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்...

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் சஜீத்?

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு, கட்சியின் பிரதித்தலைவர் சஜீத் பிரேமதாஸவின் குழுவின் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மேதின கூட்டத்தை புறக்கணிப்பதாக முன்னர் சஜீத் பிரேமதாஸ தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தில் மாத்திரம் கலந்துக் கொள்ளவிருப்பதாக அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த குழுவினர் யாழ்ப்பாண மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதனி கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜே வி பியியும், ஜேவி பியில் இருந்து விலகிச் சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் கொழும்பிலேயே தமது மேதின கூட்டத்தை நடத்துகின்றன.

கிணற்றுக்குள் வீழ்ந்த யானையை மீட்கச்சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!

Monday, April, 30, 2012
இலங்கை::வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் மீது அம்பன்பொல பகுதியில் பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அம்பன்பொல ரணவராவ பகுதி கிணரொன்றுக்குள் விழுந்த யானையை மீட்பதற்காக சென்றிருந்த அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, தாக்குதலில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

உதயகுமாரை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : யுவராஜா பேட்டி!

Monday, April, 30, 2012
ராமநாதபுரம்:;கூடங்குளத்தில் வன்முறையை தூண்டும் உதயகுமாரை கைது செய்ய, முதல்வர் ஜெயலலிதா, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக இளைஞர் காங்., தலைவர் யுவராஜா கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளிலும், இளைஞர் காங்., உறுப்பினர் சேர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அதிகரிப்பால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. கூடங்குளம் மின்சாரத்தை, தமிழகத்திற்கே முழுவதுமாக வழங்க வேண்டும். இலவசங்களுக்கான நிதியை ஜெ., நிறுத்திவிட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.

கூடங்குளம் மக்களின் கோரிக்கை ஏற்கப்படும். அங்கு மின் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட உதயகுமாரை, கைது செய்யாததற்கு, சட்ட அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் வன்முறையை தூண்டும் உதயகுமாரை, உடனே கைது செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரிச்சுமை, பால், பஸ் கட்டண உயர்வு, துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களால் மக்கள் தமிழக ஆட்சி மேல் நம்பிக்கை இழக்கும் சூழலில் உள்ளனர். சட்டசபையில், தொகுதி பிரச்னையை பேசவிடாமல் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கும் சூழல் ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவில், தி.மு.க.,-அ.தி.மு.க., பங்கேற்றிருக்க வேண்டும். மாவேயிஸ்ட்களால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு!

Monday, April, 30, 2012
ஜெனிவா::தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எம்து இளைஞர் பாராளுமன்றம் வேறு பல முக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன ஜெனிவாவில் இருந்து தெரிவித்தார்.

சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் இந்த முயற்சிக்கு World Muslim foundation, vital international, Islamic Relief organization, Centre islamic de Geneve, La Fondation culturelle islamique, Association Islamique de Suisse – Geneve, Muslim Rights and relief Foundation (MRRF), உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெனிவா நகரில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் இருக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் பங்குபற்றுவர்.

இவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும்.

ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த பல்லின இளைஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் ஊடாக இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, அவர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக முன்னெடுத்து வருவதுடன் உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவது, நல்லாட்சி, கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.

அனைவருக்கும் சம உரிமை – சம்பந்தன்!

Monday, April, 30, 2012
இலங்கை::தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிறுபான்மை சிங்கள மக்களுடன் சம உரிமைகள் வழங்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதனையே தாம் எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இலங்கையில் இரண்டாம் பட்ச மக்களாக வாழ்வதை தாம் விரும்பவில்லை.

அனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடமும் இதனையே தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டை பிரிக்காமல், ஒரே இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும்என்பதையும் தாம் இந்திய குழுவிடம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண tna விரும்புமாயின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும்-நிமால் சிறிபால டி சில்வா!

Monday, April, 30, 2012
இலங்கை::பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புமாயின் உடனடியாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமது கட்சியின் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும். சபாநாயகரைத் தொடர்பு கொண்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் இடம் பெறாது ஆளும் கட்சியும் தமிழ்த் ளூதசியக் கூட்டமைப்பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தும் இடமே பொருத்தமானதாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை நாட்டுக்குள்ளேயே காண்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தடங்கல் நிலைக்கு சென்றுள்ளமைக்கு நாங்கள் காரணமல்ல. நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகவே இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் அல்லது தயார் எனின் அவர்கள் முதலில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு தங்கள் கட்சியின் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்குவதாகும்.

சபாநாயகரைத் தொடர்புகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இ தனை செய்யவண்டும். அதாவது கூட்டங்களில் கலந்துகொண்டு இவ்வாறு பேச்சுகள் மூலம் தீர்வுகாண நாங்கள் தயார் என்று கூட்டமைப்பு கூறுவதில் அர்த்தம் இல்லை.

மாறாக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவண்டும். இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறாத நிலையில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றே கருதுகின்றோம்.

அதாவது ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. மாறாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ளூபச் நடத்தி அரசியல் தீர்வைக் காண முன்வரவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி என பல கட்சிகள் பாராளுமன்றத்தில் உள்ளன. அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டே இணக்கப்பாட்டுக்கு வரவவேண்டும்.

இது இவ்வாறு இருக்க இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய எதிர்க்கட்சி தலைவி ஷ்மா வரா ஜúம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது:முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது!

Monday, April, 30, 2012
இலங்கை::தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முடிவு இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது அவர் குறிப்பிட்டுள்ளார் .

தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் பிரதமரின் தீர்மானத்தை கண்டிக்கிறோம் - ரவூப் ஹக்கீம்!

தம்புள்ளையில் அமைந்துள்ள முஸ்லீம் பள்ளிவாசல் தொடர்பில் பிரதமர் டி.எம் ஜயரத்ன எடுத்த தீர்மானத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குறிப்பிடுகின்றது.

அந்த கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் நேற்று நடைபெற்ற கட்சி அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில், தம்புள்ளை பள்ளி விவகாரம் சம்மந்தமாக அந்தப் பள்ளியை அங்கிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற எந்த தீர்மானத்திற்கும் நாங்கள் உடன்பட மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக நேற்று எங்களுடைய அரசியல் உயர்பீடம் கூடித் தீர்மானித்திருக்கின்றோம். இது சம்பந்தமாக நாட்டின் பிரதம மந்திரி தன்னிச்சையாக எந்த அமைச்சரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்த தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறோம். இதுகுறித்து அரசியலில் இருக்கின்ற முஸ்லீம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் கூடிப்பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. இன்று காலை நான் ஜனாதிபதியுடன் இது சம்பந்தமாக கதைத்தும் இருக்கின்றேன். என்னுடைய பார்வையில் நிர்வாக ரீதியாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களில் எல்லாத் தரப்பினரையும் சரியாக விசாரிக்காமல் அவர்களுடைய உடன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல் எடுக்கின்ற எந்தத் தீர்வும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்வாக அமையும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்ற அதேவேளை, இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் ஊடாகவும் பரிகாரங்களைத் தேடமுடியும் என்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை விஜயம்!

Monday, April, 30, 2012
இலங்கை::ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்

இந்தக் குழுவில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மே மாதம் ஐந்தாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் நல்லுறவை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் வகையிலேயே ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாட்டில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாத்திலக்க அமுணுகம குறிப்பிட்டார்.

அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காது ரிஎன்ஏயுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும் - திஸ்ஸ விதாரண!

Monday, April, 30, 2012
இலங்கை::இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் எவ்வித மான நிபந்தனைகளையும் விதிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அதே போன்று கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவை புறக்கணிக்கக் கூடாது என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத்திட்டம் என்பது இன்று நாட்டில் அத்தியாவசியமான விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏனைய அரசியல்கட்சிகளும் சாதகமான தீர்வொன்றுக்கு பங்களிப்புக்களை செய்ய வேண்டுமே தவிர கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பது நாகரீகமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாளை மே முதலாம் திகதி உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தினம். இதனை அனைத்துக் கட்சிகளுமே உள்நாட்டில் வேறுபாடுகளை மறந்து உழைக்கும் மக்களின் எழுச்சிகளுக்காக பல்வேறு கூட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய இனப்பிரச்சி னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

அரசியல் தீர்வுத் திட்டத்தில் பங்கெடுக் கும் இரு பிரதான தரப்புக்களுமே வெளிப்படைத் தன்மையை பாதுகாக்க வேண்டும்.அத்துடன் நேர்மையும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியமாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத் தின் பாரிய பொறுப்பே தவிர கூட்டமைப்பிற்கு மட்டுப்பட்ட விடயமல்ல. எனவே தீர்வுத் திட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான நிபந்தனைகளையும் அரசாங்கம் முன் வைக்கக் கூடாது.

ஏனெனில் இவ்வாறு நிபந்தனைகளை முன் வைப்பதால் அநாவசியமான சந்தேகங்களே ஏற்படும். தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் எல்லைகளிட்டோ நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டோ பேசுவதால் பயன் ஏற்படப் போவதில்லை. இதனை இரு தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குய சந்தர்ப்பங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக் கூடாது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசியல் தீர்விற்காக கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது (பிரிவினைவாதி) கருணாநிதி அறிக்கை!

Monday, April, 30, 2012
சென்னை::இலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் மசூதி இடிப்பு

கேள்வி:- இலங்கையில் மசூதி இடிப்பு பிரச்சினை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

பதில்:-இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு, 2000-க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது. தென்னிலங்கையில் தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று வேறொரு செய்தி தெரிவிக்கின்றது, இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர். தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை. மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் - அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது; மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர்! இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை.

நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு

கேள்வி:-சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளாரே?

பதில்:-1988 முதல் 1990 வரை இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருக்கிறார். 20 ஆண்டுகளுக்குப்பிறகு, தற்போது இந்தியாவை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கு இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்கதாகும். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் செயல்படும், நெதர்லாந்தின் "தி ஹேக்'' நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறை அனுபவம் பெற்றுள்ள நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ந்து பாராட்டுவதற்கு உரியதாகும்.

கேள்வி:-ஆசிரியர்கள் தேர்வில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதைப் பற்றி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளதே?

பதில்:-தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23-8-2010க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி, அதன் அடிப்படையில் 23-8-2010க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறியுள்ளது. ஆனால் 23-8-2010-க்கு பின்பு பணியில்

சேர்ந்த பட்டதாரி-இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமச்சீர் என்றாலே

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை 25 ஆசிரியர்கள் அணுகினர். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பில், 25 ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத அரசு நிர்ணயித்துள்ள தேதியான 23-8-2010க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு மதிப்பில்லை; அவற்றை செய்யும் அமைச்சர்களுக்கும் அக்கறையில்லை. ஆரம்பம் முதலே பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது. சமச்சீர் கல்வியில் தொடங்கிய சோதனை, சமச்சீர் பாடப்புத்தகங்களுக்கும் பரவி, தற்போது ஆசிரியர் நியமனத்திலும் நிலவுகிறது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

5ல் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த முதல்வர்கள் மாநாடு: டெல்லி செல்லும் ஜெயலலிதா!

Monday, April, 30, 2012
புதுடெல்லி::தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த முதல்வர்கள் மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வரும் 5ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த மையம் அமைப்பது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது போன்றாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். முதல்வர்களின் எதிர்ப்பால் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு இது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது.

கடந்த 16ம் தேதி டெல்லியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தனியாக ஒரு மாநாட்டைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று வரும் 5ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி காலையில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்கிறார்கள்.

கடந்த 16ம் தேதி டெல்லி சென்ற ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்தில் வைத்து குஜராத் முதல்வர் மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில் வரும் 5ம் தேதியும் மோடி உள்பட சில மாநில முதல்வர்கள் ஜெயலலிதாவை சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது!

Monday, April, 30, 2012
இலங்கை::சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது!

இலங்கைக்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பான ஆவணப் படங்களை வெளியிட்ட பிரித்தானியாவின், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளுடன் சம்பந்தப்பட்டது என இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஸ்டுவர்ட்; கோஸ்த்ரேவ் இங்கிலாந்தில் வசித்து வரும் ஷிராணி சபாரட்னம் என்ற பெண்ணையே மணமுடித்துள்ளதாகவும் அந்த பெண் புலம் பெயர் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக கூறி, பல முறை இலங்கைக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் எந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் யூ.கே தொலைக்காட்சியில் ஷிராணி சபாரட்ணம் பணியாற்றி வருகிறார் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவை ஆலோசனை சபையிலிருந்து நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு!

Monday, April, 30, 2012
சவேந்திர சில்வாவை ஆலோசனை சபையிலிருந்து நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு:-

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையின் ஆலோசனை சபையின் உறுப்பினரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அதில் இருந்து நீக்க வேண்டும் என ஐ.நா அதிகாரியான லுவூகே பிரவுச்ட் விடுத்த கோரிக்கையை ஆசிய பசுபிக் நாடுகள் நிராகரித்துள்ளன. இந்த நாடுகளினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை மாற்ற முடியாது என ஐ.நா செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஆலோசனை சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மனுக்களை அனுப்பி இருந்தாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Sunday, April 29, 2012

மதுரை சித்திரை திருவிழா களைகட்டுகிறது மீனாட்சிக்கு நாளை பட்டாபிஷேகம்!

Sunday, April 29, 2012
மதுரை::மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகமும், மே 2ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். நாளை அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணியில் இருந்து 7.56 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.
பட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்ச முத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும்.
பின்னர், பல சாதி கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். மே 2ம் தேதி காலை 9.17 மணி முதல் 9.41 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மே 3ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
வாராரு... வாராரு அழகர் வாராரு
தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்கோவிலில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா சித்திரை திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத்திருவிழா கடந்த 20ம் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மே 2ம் தேதி மாலை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்படுகிறார்.
மே 5 நள்ளிரவு 12 மணிக்கு தல்லாகுளத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்கிறார். மே 6 அதிகாலை 2.30 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். அதிகாலை 3 மணிக்கு கோயில் எதிரில் வெட்டி வேர் சப்பரத்திலும், தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருள்கிறார். மே 6 காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவும் அழகர் கோயில் சித்திரை திருவிழாவும் தொடங்கியது முன்னிட்டு மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் இந்திய பிரஜை உள்ளிட்ட இருவர் கைது!:-போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!

Sunday, April 29, 2012
இலங்கை::கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும்
இந்திய பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுங்கம தேனிய பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக வருகைத் தந்த இந்திய பிர​ஜையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக இதற்கு முன்னர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இவர் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்...

போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!

67 போலி நாணயத்தாள்களுடன் இருவர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம் விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களால் சுமார் இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த நாணயத் தாள்கள் நீர்கொழும்பு உட்பட மேலும் சில பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டதாக குறித்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புத்தளம் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது...

புத்தர் சிலைகளை விற்பனை செய்ய முயன்ற ஏழு பேர் கைது!

சூரியவெவ பகுதியில் இரண்டு புத்தர் சிலைகளை விற்பனை செய்வதற்கு முயற்சித்த ஏழு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த புத்தர் சிலைகள் 17 அங்குலம் மற்றும் எட்டு அங்குலம் உயரத்தை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, பட்டபொல, தனமல்வில, ஹிக்கடுவ மற்றும் திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சூரியவெவ பகுதியில் இன்று காலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச தீவிரவாதிகள் இங்கு இல்லை - இலங்கை இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Sunday, April 29, 2012
இலங்கை::சர்வதேச தீவிரவாதிகள் இங்கு இல்லை - இலங்கை இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய:-

அல் - கைடா மாற்றும் தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்த நாட்டில் செயற்பட வில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கு பதில் வழங்கும் வகையில் கருத்துரைத்த இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய அதனை முற்றாக மறுத்தார்.

பீரிஸ் அமெரிக்கா விஜயம் செய்வதற்கு முன்னர் ஹிலரி இந்தியா விஜயம்!

Sunday, April 29, 2012
இலங்கை::இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

கிளின்ரன் இந்தியா மறறும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மே மாத முதல் வாரத்தில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளினதும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த விஜயத்தின் போது இலங்கை விவகாரம் தொடர்பில் ஹிலரி இந்தியாவுடன் பேசுவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா!

Sunday, April 29, 2012
சென்னை::தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கையிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, இத்தாலிய கடற்படையால் அண்மையில் கொல்லப்பட்ட 2 மீனவர்களுக்கு தலா ஒரு கோடியை அந்த அரசு வழங்கியது. தமிழக கடற்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நமது மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாகி உள்லனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இலங்கை அரசு மீது இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணத்தை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

செ‌ங்க‌ல்ப‌ட்டு அ‌க‌திக‌ள் முகா‌‌ம்க‌ளி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் 7 பே‌‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்ததா‌ல் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி!‌

Sunday, April 29, 2012
செ‌ங்க‌ல்ப‌ட்டு::செ‌ங்க‌ல்ப‌ட்டு இலங்கை அ‌க‌திக‌ள் முகா‌‌ம்க‌ளி‌ல் தொட‌ர்‌ உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் மேலு‌ம் 7 பே‌‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்ததா‌ல் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

செ‌ங்க‌ல்ப‌ட்டு இலங்கை அ‌க‌திக‌ள் முகா‌மி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் 10‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் அ‌ங்கு ‌சிறை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். தங்களை திறந்தவெளி சிறைக்கு மாற்ற‌க் கோ‌ரி கட‌ந்த 17ஆ‌ம் தே‌தி முத‌ல் இலங்கை புலி ஆதரவு த‌‌மிழ‌ர்க‌ள் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உ‌ள்பட 14 பே‌ர் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌தி‌ல் உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌ந்து வ‌ந்த சேக‌ர், நாகராசு, சுத‌ர்ச‌ன் ‌உ‌ள்பட 5 பே‌ர் உட‌ல் ‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மரு‌‌‌த்துவமனை‌யி‌ல் அனு‌‌‌ம‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்‌ட‌‌ம் 14வது நாளை எ‌ட்டியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ன்று மேலு‌ம் 7 பே‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்தது. இதையடு‌த்து அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

ஹெரோய்னுடன் இருவர் கைது!:-சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது!

Sunday, April 29, 2012
இலங்கை::களனி - கோனாவலை பிரதேசத்தில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டடின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 600 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடஹமுல்ல நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது!

சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் ரயில் குறுக்கு வீதி காக்கைபள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே 11 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதோடு அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, 1000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் குருநாகல் - சிலாபம் வீதியில் வசிக்கும் ஒருவரும் சிலாபம் காக்கைபள்ளியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

Sunday, April 29, 2012
சென்னை::இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எடுத்து வந்து, நடு வீதியில் வைத்து தீ வைத்து எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் பதாகையில் பொறிக்கப்பட்டு இருந்த இலங்கை தேசிய கொடியின் மீது செருப்பை வீசி கோஷம் போட்டுக்கொண்டு இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Sunday, April 29, 2012
இலங்கை::இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட போரின் போது தலைமறைவாகிய மற்றும் தப்பிச் சென்ற புலிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்படாத 500 புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவர்களில் 200 பேர் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.சில சிரேஸ்ட புலி உறுப்பினர்களும் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் பொலிஸார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.

சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மறைமுக இலாபம் என்ன!

Sunday, April 29, 2012
இலங்கை::சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மறைமுக இலாபம் என்ன:-

தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குத் தமது நல்லெண்ணத்தைக் காட்டி வரு வதாகவும், ஆனால் அரசாங்கம் அதனைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்து வரு கின்றனர். தமது நல்லெண்ணத்திற்கு அரசு என்ன கைமாறைச் செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலர் முகவரி இல்லாத பல இணையத்தளங்களுக்கு வெளியி ட்டு வரும் கருத்துக்களும், காணொளிக் காட்சி பேட்டிகளும் அரசாங்கத்தை வசை பாடுவதாகவும் அரசின் அபிவிருத்திப் பணிகளை விமர்சிப்பதுவுமாகவே உள்ளது. அதிலும் வேடிக்கையான விடயம் யாதெனில் இவர்களில் சிலர் தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்று தெரியாமலே பல அறிக்கைகளை விட்டு வருவதுதான்.

தமிழ்க் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியாது தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். புலத்தில் அதாவது உள்நாட்டில் அரசாங்கத்தி ற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இர ட்டை முகத்துடனேயே கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றது.

எனவே கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடகங்கள் மூலமாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் கூட்டமைப்பிலுள்ள சிலர் அரசின் செயற்பாடுகளை ஆதரிப்ப தாகவும், சிலரோ எதிர்ப்பதாகவுமே இன்றைய நிலை உள்ளது. இரா. சம்பந்தன் அவ ர்களின் மெளனத்தின் அர்த்தம் தான் என்ன? தமிழ் மக்களின் நலனுக்காக என்று இவர்கள் கூறி அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த விரும்பினால் அது குறி த்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தாம் எடுத்த முடிவுக்கான காரணத்தை யும் தெளிவாக விளக்கினால் தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வர்.

இரட்டை வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வாறு இவர்களால் அரசாங்கத்திட மிருந்து கைமாறை எதிர்பார்க்க முடியும். ஒன்று இவர்கள் புலிகள் இருந்தபோது செய்த வேலையை அதாவது அரசாங்கத்தை முடிந்தளவு எதிர்த்து விமர்சிப்பது என்ற கொள்கையிலிருந்து கொண்டு எந்தவிதமான அரசின் சலுகைகளையும் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுப்பதில் குறியாக இருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாகவே அரசிற்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு அரசின் அபி விருத்திப் பணிகள் சென்றடைய உதவி புரிய வேண்டும்.

இப்போது புலிகள் இல்லாததனால் இவர்கள் இதனைப் பயமின்றிச் செய்யலாம். கட ந்த காலங்களில் சில தமிழ்த் தலைவர்கள் தமது மக்களின் நலன் கருதி அரசாங்கத் துடன் இணைந்து துணிந்து செயற்பட்டது போன்று ஒவ்வொருவராக அல்லது கூட் டாக களத்தில் இறங்க வேண்டும்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் இவ ர்கள் அடையும் மறைமுக இலாபம் என்ன என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள் ளது. அரசை ஆதரித்தால் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் தோன்றும் என நினைக்கிறார்களா அல்லது அங்கு வசிக்கும் தமது உறவினர்களுக்கு அச் சுறுத்தல் நிலை ஏற்படும் எனப் பயப்படுகிறார்களா? என்பது புரியாத புதிராகவே உள் ளது.

எது எவ்வாறிருப்பினும், அரசாங்கத்திற்கு நல்லெண்ணம் காட்டுகிறோம் எனும் விடயத்தில் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதிச் செயற்பட வில்லை என்பது மட்டும் புலனாகிறது. இத்தகைய இரட்டை முகங்கள் உள்ளவர்கள் எப்படி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியும்? இதனால்தான் தமிழ் மக் கள் குறிப்பாக வடக்கு வாழ் தமிழ் பேசும் தமிழ் மக்கள் மூன்றாவது ஒரு சத்தியைத் தமது தலைமையாக ஏற்கத் தயாராகி வருகின்றனர். பழம்பெரும் பரம்பரைத் தமிழ்க் கட்சியும் அல்லாத முன்னாள் போராட்ட ஆயுதக் குழு அணியுமல்லாத இளைஞர் படையணியை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த இளைஞர் படையணியின் ஆதிக்கம் அடுத்துவரும் தேர்தல்களில் வடக்கில் தெரியவரும்.

உண்மையில் அரசாங்கம் வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற் கொண்டு வருகின்றது. நிவாரணம், மீள் குடியேற்றம் ஒருபுறமிருக்க தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடசங்கற்பம் பூண்டுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இப்போது தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் பலவும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இத்தகைய விடயங்களுக்கு கூட்டமைப்பினர் தமது ஆக்கபூர்வமான கருத்துக்க ளையும் முன்வைத்து கலந்துரையாடி ஒரு நிலையான தீர்வினை எட்ட வழி சமைக்க வேண்டும். பத்திரிகைகளில் அறிக்கைகளை விடுவதன் மூலமோ அல்லது தொலைக் காட்சிகளில் தோன்றி வீர வசனம் பேசுவதன் மூலமோ பிரச்சினைகளுக்குத் தீர்வி னைக் கண்டு விட முடியாது. மாறாக இது மேலும் பிரச்சினைகளையே தோற்றுவிக் கும்.

உண்மையான நல்லெண்ணத்தை இதய சுத்தியுடன் கபடமில்லாது நாம் வெளிப் படுத்தினால் பதிலுக்கு அரசிடமிருந்து நாம் நல்லெண்ணத்தைக் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்படாது. எல்லாம் தானாகவே எதிர்பார்ப்பதற்கும் மேலாகக் கிடை க்கும்.

தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டும் - புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்!

Sunday, April 29, 2012
இலங்கை::தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டும் - புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்:-

தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டுமென புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவய்க்கால் பகுதியில் சிறுவர் இல்லமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் மக்களை சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் பொது மக்களோடு விளையாட இது தருணமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் அனுபவித்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபடவே மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இழைத்த அதே தவறினை மீள இழைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான கணவனை இழந்த பெண்களும், அநாதைச் சிறுவர் சிறுமியரும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை மிகவும் நிதானமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்...“நீர்டோ” அமைப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வந்த முல்லைத்தீவு பாரதி இல்லம் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் குமரன் பத்மநாதன் (கே.பி.), முன்னாள் எம்.பி. சதாசிவம் கனகரட்ணம், முல்லை. அதிபர் என். வேதநாயகம், முள்ளியவளை இராணுவ தளபதி கேணல் மதநாயக்க ஆகியோர் விழாவில் வரவேற்கப்படுவதைப் படத்தில் காணலாம்.

கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா?கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியும் கசப்பான விமர்சனங்களும்!

Sunday, April 29, 2012
இலங்கை::சீரசியல் நீரோட்டத்தில் தாக்குப்பிடிக்குமா தமிழ்க் கூட்டமைப்பு? விமர்சனங்கள் எப்போதுமே கசப்பானவை. இதன் காரணமாகத்தான் நமது சூழலில் விமர்சனங்கள் என்றவுடன் நம்மையறியாமலே நாம் முகத்தை சுழித்துக் கொள்கிறோம்.

ஒரு நோயாளி தனது நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கசப்பான மருந்துகளை உட்கொள்ள பின் நிற்பதில்லை. மருந்து கசப்பானது என்று எண்ணி தயங்கினால் நோய் இறுதியில் நோயாளியை முழுவதுமாக விழுங்கிவிடும். ஒரு கட்சியின் மீது அல்லது அரசியல் நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்களும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

விமர்சனங்களை எதிர் மனோபாவத்துடன் அணுகும் அமைப்புக்கள் அனைத்தும், இறுதியில் தமது வீழ்ச்சியை தாமே வலிந்து வரவழைத்துக் கொள்கின்றன. விமர்சனங்கள் கசக்கும் என்பதால் புலிகள் அதனை ஒரு போதுமே விரும்பியிருக்கவில்லை. அதனையும் மீறி விமர்சித்தவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும் அரசின் கைக்கூலிகள் என்றுமே வர்ணிக்கப்பட்டனர்.

இதன் விளைவு மிகவும் பிரமாண்டமாகத் தோற்றம் காட்டிய புலிகள் மூன்றே வருடங்களில் அழிய நேர்ந்தது. புலிகளின் அழிவு என்பது நமக்கு முன்னால் இருக்கும் ஒரு கல்வெட்டுப் படிப்பினை. புலிகள் விமர்சனங்களை புறம்தள்ளி செயற்பட்ட காலத்தில் எங்களிடம் ஒரு கருத்திருந்தது. அதற்கு இந்த பத்தியாளரும் விதிவிலக்கானவர் அல்ல. இருக்கும் ஒன்றையும் விமர்சித்துவிட்டு நாம் என்ன செய்வது கூனோ, குருடோ ஏற்றுக் கொண்டு போவோம். இன்று நமக்கு முன்னால் மீண்டும் அத்தகையதொரு கருத்து ஊசலாடுகிறது. முன்னர் புலிகள் இருந்த இடத்தில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. ஆனால் முன்னர் நாம் செய்த தவறையே மீண்டும் செய்வதா? இந்தப் பத்தி த.தே.கூட்டமைப்பின் சமீபகால போக்குகள் குறித்து காய்த்தல் உவத்தலற்ற விமர்சனமொன்றை முன்வைக்க முயல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன? த.தே.கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா? இது அடிப்படையில் சிறுபிள்ளைத்தனமான கேள்வி போன்று தெரியலாம். ஆனால் இந்த பத்தியாளர் இத்தகையதொரு கேள்வி நோக்கி வருவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. த.தே.கூட்டமைப்பின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாலேயே, நமக்கு சிறுபிள்ளைத்தனமான கேள்விகளும் அவசியப்படுகின்றன.

நாம் அறிந்த வகையில் த.தே.கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிbழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிbழ விடுதலைக் கழகம் ஆகிய ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பாகும். ஆனால் இதில் அடங்கியுள்ள சித்தார்த்தன் தலைமையிலான தமிbழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கவில்லை. புலிகளின் ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றக் கொண்டவர்கள் மட்டுமே ஆரம்பத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்தனர். ஆனால் சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அத்தகைய ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றுக் கொண்டி ருக்கவில்லை. எனினும் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்ச் சூழ லில் ஏற்பட்ட அரசியல் பாலைவன நிலைமையை கருத்தில் கொண்டு கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் முடிவை அவர்கள் எடுத்தனர். அடிப்ப டையில் இது ஒரு முன்னேற்றகரமான முடிவு. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த பத்தியாளர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஆனால் இந்த முன்னேற்றகரமான வாய்ப்பு சரியான முறையில் கையாளப்படுகின்றதா என்பதுதான் இன்றுவரை விடையற்ற வினாவாகத் தொடர்கிறது. ஒரு சுவாரசியமான உதாரணத்தை தருகிறேன். த.தே.கூட்டமைப்பு இந்திய நாடாளுமன்றக் குழுவை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது எவ்வாறு சந்தித்தது என்னும் செய்தி எவருக்கும் தெரியாது. த.தே.கூட்டமைப்பின் ஒரு குழுவினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துவிட்டு வெளியில் வரும்போது த.தே.கூட்டமைப்பின் பிறிதொரு குழு அவர்களைச் சந்திக்கச் சென்றிருக்கிறது. இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு இதற்குப் பின்னர்தான் தெரிந்திருக்கிறது. த.தே.கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியல்ல. அது ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பு என்று. இந்த உதாரணம் த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான சரியானதொரு தலை மைத்துவத்தை வழங்குகின்றதா அல் லது இல்லையா என்பதை விளங்கிக் கொள்வதற்கு போதுமானதாகும்.

சமீபத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் வெளியான கூட்டமைப்பின் கருத்துக்கள், அதன் சிறந்த தலைமைத்துவத்திற்கு பிறிதொரு சிறந்த உதாரணம் ஆகும். த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்றவாறு அறிக்கை வெளியிட, சில தினங்களுக்கு பின்னர் த.தே.கூட்டமைப்பின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இரா. சம்பந்தன் அத்தகையதொரு மூன்றாம் தரப்பு அவசியமில்லை என்றவாறு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பிறிதொரு மிகச் சிறந்த ஆனால் புல்லரிக்க வைக்கும் உதாரணமொன்றையும் இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது. இந்த புல்லரிப்பிற்கு சொந்தக்காரர் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிவஞானம் சிறிதரன் ஆவார். இம்மாதம் மதுரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சிறிதரன் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருக்கின்றார் அவர் மீண்டும் வருவார் என்று தெரிவித்திருக்கின்றார். புலம்பெயர் சூழலில் இயங்கிவரும் ஒரு சில புலி ஆதரவுக் குழுக்கள் கூறிவந்த விடயத்தை தற்போது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். இது ஒரு பாரதூரமான விடயமாகும். இது த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல அதன் அரசியல் நிலைப்பாட்டையும் கூட கேலிக்குரியதாக்கியிருக்கின்றது.

ஒருபுறம் அரசு வடகிழக்கை இராணுவமயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வரும் கூட்டமைப்பினர் மறுபுறம் பிரபாகரன் வருவார் என்றும் கூறுவது என்ன வகையான அரசியல்? பிரபாகரன் மீண்டும் இயங்கக் கூடிய ஆற்றலுடன் இருப்பது உண்மையானால் அரசு வடகிழக்கில் தனது இராணுவ நிலைகளை பலப்படுத்துவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும்? இப்படியொரு வாதத்தை தெற்கு முன்வைக்குமாயின் நமது நிலைமை என்னவாகும்? உண்மையில் த.தே.கூட்டமைப்பு அரசியல் செய்கின்றதா அல்லது வேறு ஏதேனும் செய்கின்றதா என்பதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களே தெளிவுபடுத்த வேண்டும்.

த.தே.கூட்டமைப்பிற்குள் நிலவும் இவ்வாறான ஒழுங்கற்ற போக்குகள் அதன் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல தமிழ் மக்களை (இங்கு மக்கள் என்று நான் குறிப்பிடுவது வடகிழக்கில் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்களாகும். மேலும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்வதற்கே துணை புரிகிறது. கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஆழ்ந்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். சமீப காலமாக அரசும், தெற்கின் சிங்கள தேசியவாத சக்திகளும் கூட்டமைப்பு குறித்து தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை, கூட்டமைப்பினர் தங்களது கருத்துக்கள் மூலமாகவும் செயற்பாடுகள் மூலமாகவும் உறுதிப்படுத்தி வருவதை நாம் காணலாம். சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளை பொறுத்தவரையில், த.தே.கூட்டமைப்பினரை புலிகளின் நீட்சியாகவே பார்க்கின்றனர். ஆயினும் புலிகள் மீது விமர்சனமுள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி போன்றோர் கூட்டமைப்புடன் இணைந்து நிற்பதால் எழுந்தமானமாக கூட்டமைப்பை புலிகளுடன் தொடர்படுத்தி நிராகரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.

புளொட் மற்றும் த.வி.கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளுமே த.தே.கூட்டமைப்பின் பன்முகத் தன்மையின் சாட்சியாக இருக்கின்றன. இது ஒரு சாதகமான அம்சமாகும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை ஆரம்பித்திலிருந்தே மேற்படி இரண்டு கட்சிகளின் சமகால முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டிருக்கவில்லை. முக்கியமான முடிவுகள் எவற்றிலும் மேற்படி இரண்டு கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. நாம் மேலே பார்த்த கேள்விக்கான விடை த.தே.கூட்டமைப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமாக இருக்கின்றதே தவிர, அது கட்சிகளின் கூட்டாக இன்றுவரை செயற்பட்டிருக்கவில்லை. இந்த இடத்தில் தெற்கின் தேசியவாத சக்திகள் கூட்டமைப்பு குறித்து பேசிவரும் இரண்டு விடயங்களை கூட்டமைப்பினர் மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர்.

கூட்டமைப்பினர் புலிகளின் நீட்சியாகத் தொழிற்படுகின் றனர் மற்றும் அவர்கள் புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலில் செயலாற்று கின்றனர் என்பதே தெற்கின் பொது வான குற்றச்சாட்டுக்களாக இருக்கின் றன. புலிகள் இருந்த காலத்தில் த.தே. கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதைத் தவிர்த்த ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் முக்கிய முடிவுகளின் போது நிராகரிக்கப்படுவதானது தெற்கின் விமர்சனங்களையே நியாயப்படுத்துகின்றது. தவிர குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினர் ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பில் தொடர்ந்தும் இடம்பெறுவதை விரும்பவில்லை என்பதையும் நாம் இந்த இடத்தில் ஒப்பு நோக்கலாம். உண்மையில் த.தே.கூட்டமைப்பில் தற்போது சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் வகிக்கும் இடமானது முன்னர் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரன் புலிகளுடன் இணைந்திருந்தபோது வகித்துவந்த இடத்திற்கு ஒப்பானதாகும். தனது ஒரு தரப்பினரின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் பிரபாகரனுடன் இணைந்து கொண்ட பாலகுமாரன் இதுவரை எந்தவொரு பொறுப்புக்களுமற்று முக்கியஸ்தர் என்னும் அடைமொழியுடன் தனது காலத்தை கழித்திருந்தார்.

புலிகளின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தது போன்று சித்தார்த்தனும் ஆனந்தசங்கரியும் த.தே.கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது சந்தேகமே! உண்மையில் இது ஒரு மிக முக்கியமான காலகட்டமாகும். இந்தக் காலத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு த.தே.கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவருக்கும் உண்டு. தற்போது கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் இரா. சம்பந்தன் சில விடயங்களில் மிகவும் நிதானமான போக்கை கொண்டிருந்தாலும், அவரது கருத்துக்களை மறுதலிக்கும் வகையிலான அபிப்பிராயங்கள் கூட்டமைப்பிற்குள் இருந்தே வந்தவண்ணமிருக்கின்றன. சிறிதரனின் கருத்து இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே தமிழ் நாட்டில் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்த நிலையில் அதற்கு முற்றிலும் மாறான வகையில் சிறிதரனின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த சிறிதரனின் பேச்சு இரா. சம்பந்தனை பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளிவிடலாம். அது சம்பந்தனின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும். அதேவேளை அவரது நிதானமான அரசியல் நகர்வுகளையும் பரிகாசிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்த நிலைமை தொடருமாயின் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே! பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தலைவர் உண்மையிலேயே சம்பந்தன்தானா என்று ஒருவர் சிந்திக்கும் அளவிற்கே தற்போதைய நிலைமைகள் வெளித்தெரிகின்றன.

க. சிவராசா

11 வீடுகளை உடைத்து களவாடியவர்கள் கைது:- இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு; தாய் கைது!

Sunday, April 29, 2012
இலங்கை::வீடுகளை உடைத்து பொருட்களை களவாடும் குழுவொன்றைச் சேர்ந்த மூவர் கிரிந்திவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர்கள் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிலுள்ள ஒன்பது வீடுகளையும் பூகொடை பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளையும் உடைத்து அதிலிருந்து பொருட்களை களவாடியுள்ளனர்.

சந்தேகநபர்கள் மே மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு; தாய் கைது!

பலாங்கொடை, கல்தோட்டை பிரதேசத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இரட்டைக் குழந்தைகளை பிறசவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு குழந்தை வீட்டிற்கு அருகேயுள்ள காட்டில் கைவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மற்றைய குழந்தை பிறக்கும் போதே உயிரிழந்திருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பொலிஸ் பாதுகாப்புடன் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

70 இலட்ச ரூபா பெறுமதியான பலசரக்கு பொருட்களை திருடியவர்கள் கைது!

மொத்த விற்பனை நிலையங்களின் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பலசரக்கு பொருட்களை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவை, கட்டுகஸ்தோட்டை, மாவனெல்ல, மெனிக்கென்ன, கம்பளை ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில இருந்து இவர்கள் பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களால் திருடப்பட்ட பலசரக்கு பொருட்களின் பெறுமதி சுமார் 70 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. மிளகு ஏலம் கராம்பு உள்ளிட்ட பலசரக்கு பொருட்களையே சந்தேகநபர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் வசமிருந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து அகதிகள் வருகை குறைவு!

Sunday, April 29, 2012
இலங்கை::இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர்
நாடு திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இ;ந்த வருடத்தில் முதல் காலாண்டில் குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 408 பேர் யுஎன்எச்சிஆர் இன் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 597 பேர் நாடு திரும்பியிருந்தனர்.

கடந்த ஆண்டு முதல் கொழும்பு - தூத்துக்குடி படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டமையும் இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டில் நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்திருந்த அவேளை அவ் ஆண்டின் இறுதிப் பகுதியில் சடுதியாக குறைவடைந்தது.

பெரும்பாளான இலங்கை அகதிகள் தமிழக முகாம்களிலேயே இருக்கின்றனர்.

இதனை விட மலேசியா, ஜோர்ஜியா, ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் கணிசமான அளவு இலங்கை அகதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவை விட இலங்கை முன்நிலையில்!

Sunday, April 29, 2012
பொருளாதாரம் மற்றும் பூகோல ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 வது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

கே. பி. எம்.ஜீ என்ற சர்வதேச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு 60 உலக நாடுகள் எடுகோளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்படி பொருளாதார மற்றும் பூகோல ரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இந்த இடம்கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 23 வது இடமும், பங்களாதேஷிற்கு 45 வது இடமும், நோபளத்திற்கு 50 வது இடமும், பாகிஸ்தானுக்கு 54 வது இடமும் கிடைத்துள்ளன.

Saturday, April 28, 2012

அமெரிக்க கோர்ட்டில் பின்லாடன் படம், வீடியோவை வெளியிட கோரிய மனு தள்ளுபடி!

Saturday, April, 28, 2012
வாஷிங்டன்::பாகிஸ்தானில் அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அதன் படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட கோரி தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த ஆண்டு மே 2ம் தேதி ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான படங்கள், வீடியோவை வெளியிட கோரி, நீதித்துறை கண்காணிப்பு என்ற சமூக அமைப்பினர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் இ போஸ்பெர்க் விசாரித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு படம் சமம் என்று சொல்வார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட பின்லாடனின் படங்களை வெளியிட்டால், அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த படங்கள், தகவல்களை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அவை தடை செய்யப்பட்ட விஷயங்கள். எனவே, பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், அவரது இறுதி சடங்கு தொடர்பான படங்கள் தகவல்கள் எதையும் வெளியிட முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, April, 28, 2012
இலங்கை::யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் நேற்று சந்தித்து தமது நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் அவர்கள் நியமனங்கள் கிடைக்கப் பெற்றதும் ஒவ்வொருவரும் தத்தமக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்து விட்டதாக மாத்திரம் எண்ணி விடக் கூடாது.

சமூக நலன்களோடும் அக்கறையோடும் மக்களது பிரச்சினைகளை அணுகி அவர்களுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும் என்பதுடன் அதன் மூலமே எமது சமூகத்தையும் நல்வழிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்...

ஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டும்: சுதந்திர ஊடகக் குரல் நிறுவனத்திற்கு-டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!

ஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர ஊடகக் குரல் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் சுதந்திரமாகவும் சரியானதாகவும் வெளியிடுவது மட்டுமன்றி உண்மைச் செய்திகளையும் வெளியிட வேண்டும்.

குடாநாட்டிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாகச் சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் இது விடயம் தொடர்பில் சில ஆதாரங்களையும் இதன்போது காண்பித்தார்.

அத்துடன் எதிர்காலங்களில் இங்குள்ள ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிடுகின்ற போது பக்கசார்பின்றியே செயற்பட வேண்டும். அதேவேளை சுதந்திரமாகவும் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலமே மக்கள் உண்மையான செய்திகளையும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.

சார்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடகக் குரல் நிர்வாகத்தினர் அமைச்சர் அவர்களை இன்றைய தினம் சந்தித்த போது அதன் வளர்ச்சிக்காக 25 ஆயிரம் ரூபா நிதியை வழங்கியதுடன் தமது உதவிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி முஸ்லிம் பிரநிதிகளுடன் சந்திப்பு!

Saturday, April, 28, 2012
இலங்கை::தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள்தான் திரிபு படுத்தியுள்ளன என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.
நேற்று மாலை காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின்அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் முஸ்லிம் பிரநிதிகளுடனான சந்திப்பில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல்உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால்திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள்அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன் எனவும் முஸ்லிம்களாகிய நீங்கள் அந்தப் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சில பௌத்த மத குருக்களின் நடவடிக்கைக்கு முழு பௌத்த சமூகமும் ஆதரவுதெரிவிக்கவில்லை. இதை வண்மையபகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தம்புள்ள பள்ளிவாயல்சம்பவமானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் விரிசலையம் ஏற்படுத்தச் செய்யும் நடவடிக்கையாகும்.

இச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடே தவிர சிங்கள சமூகம் இதை எதிர்க்கின்றது.

முஸ்லிம்கள் அமைதியைக் கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளும் தான் ஜெகீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கைக்கு கைகொடுத்தார்கள் என்பதை தெரிவித்துகொள்வதோடு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டில் 30வருட கால புலி பயங்கரவாத யுத்தத்திற்குப் பின்னர் சமாதானமாக நிம்மதியாக இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையை குழப்புவதற்காக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பல கோணங்களில் பல சதி முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

ஒரு கால கட்டத்தில் முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இது போன்ற நிலைமைகள் மீண்டும் உருவாகக் கூடாது.

எமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவும் , அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவினால் எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை தடைசெய்வதற்காகவும் எல்.டி.டி.ஈ. விடுதலைப் புலி அபிமானிகளால் பல விதமாக தடைகள் போடப்பட்டு பல விதமான தொந்தரவுகளும் தரப்பட்டு வந்தன.

எல்.டீ.டீ.யினரால் பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது போன்ற நிலைமைகள் இனி ஒரு போதும் நடைபெறக் கூடாது.

எமது பாதுகாப்புக் கடமைகளை செய்வதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள்அமைதிகாத்து பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏனெனில் நிரந்தர சமாதானம்தொடர்ந்து இருப்பதற்கும் அதனை ஸ்தீரப்படுத்துவதற்கும் முஸ்லிம்களின் ஒத்துழைப்புஅவசியமாகும்.

இந்த நாட்டிலே தமிழ் சிங்கள பௌத்த கிறிஸ்தவ சகலருக்கும் நமமான உரிமை வழங்கப்படுகின்றது.

இந்த நாடு இறைவனின் அருட்கொடைகள் நிறைந்த ஒரு நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓவ்வொரு சமயத்திலும் சமயத்திற்கு தூரமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பதுடன் கட்டுக்கடங்காதசில நடவகெ;கைகளையும் செய்து கொண்டு இருப்பார்கள்.

இவர்கள் சமயக் கட்டமைப்புக்குள்கொண்டு வரப்பட வேண்டும். அது ஒவ்வொரு சமயத்திலுமுள்ள சமூகத்தவர்களின் கடமையாகும்.

ஆகவே இந்த விடயத்தில்முஸ்லிம்களாகிய நாம் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.

இதன் போது முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் பல தரப்பட்ட கேள்விகளை கட்டளைத் தளபதியிடம் கேட்டனர்.

ஏலவே முஸ்லிம்களின் அநுராதபுரம் தர்ஹா உடைப்பு விவகாரத்தில் அரசாங்கம் உரியநடவடிக்கை எடுக்க வில்லை.

தம்புள்ள பிரச்சினையை இனவாதத்தை தூண்டும் செயலாக சித்தரித்து வருபவது ரண்கிரி வானொலி அலைவரிசையே ஏன் இதைஅரசாங்கம் இது வரைக்கும் கண்டிக்கவில்லை.

தம்புள்ள பள்ளிவாயல் சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்றாகும். இதுவரைஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பன போன்ற கேள்விகளை இதன் போது கேட்டதுடன் தம்புள்ளசம்பவம் தொடர்பில் தமது விசனங்களையும் கவலைகளையும் தெரிவித்தனர்.

காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகள் உலமா சபை பிரதி நிதிகள் மட்டக்களப்பு கல்லடி234வது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேனல் திலகரட்ண’கோயில்குளம் இராணுவ முகாமின் கட்டளைதளபதி ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன!Saturday, April, 28, 2012
இலங்கை::யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் அது குறைந்தபாடாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் உச்சக் கட்டமாக சாவகச்சேரியைச் சேர்ந்த 17 வயது இளைஞன், 14 வயதான தனது சொந்த தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியதன் பின்னரே பெற்றோருக்குக் கூட தெரியவந்தது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 62 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் 12 சம்பவங்களும் பெப்ரவரி மாதம் 21 சம்பவங்களும் மார்ச் மாதம் 2 சம்பவங்களும் ஏப்ரல் மாதம் இதுவரையில் 27 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவுகள் உள்ளன.

இதில் 34 சம்பவங்கள் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை என்பது கண்டறியப்பட்டுள்ளது.