Tuesday, December 25, 2012

உயிரிழப்பு 42 ஆக உயர்வு; இடப்பெயர்வு 24 ஆயிரமாக அதிகரிப்பு!

சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது.
இவர்கள் 124 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் கதிர்காமம் திஸ்ஸவாவியில் மூழ்கிய ஏழு பேரும் உள்ளடங்குகின்றனர்.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 59 ஆயிரத்து 889 ஆக காணப்படுவதோடு இதுவரை ஒன்பது பேர் காணாமற்போயுள்ளனர்.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் மூவாயிரம் வீ்டுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சில வீதிகளூடான போக்குவரத்திற்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஹொரவப்பொத்தானை - திருகோணமலை வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - மட்டக்களப்பு வீதி வெருகல் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கந்தளாய் சேருநுவர வீதியூடான வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா - வெலிமடை வீதி மாலை ஆறு மணிவரை மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Sunday, December 16, 2012

சுயரூபக் கோவை, சிவசக்தி ஆனந்தன் (புலி விசுவாசி)

Sunday, December 16, 2012
இலங்கை::

பெயர்: சிவசக்தி ஆனந்தன் (புலி விசுவாசி)

 தொழில்: அரசியல்வாதி என்று ஒருசிலர்தான் கூறுகிறார்கள்

சாதனை புலி விசுவாசி


உண்மையான தொழில்: முல்லைத்தீவு காட்டில் விறகு வெட்டுவது


சைட் பிஸினஸ்: வசூல் ராஜா கதாபாத்திரம்


வருமானம்: செலவிருந்தால்தானே வருமானம் தேவை


பொழுதுபோக்கு: அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவது


அதிகம் இரசிப்பது: பத்திரிகைகளில் எப்போதாவது பிரசுரமாகும் தனது செய்திகளைப் பார்த்து


அசைக்க முடியாத பலம்: தமிழ்க் கூட்டமைப்பில் தனது கட்சி மூலமாக இணைந்திருப்பது


அசைக்கக்கூடிய பலம்: வேறென்ன எம்.பி பதவி ஒன்றுதான்


எதிர்பார்ப்பு: பாராளுமன்ற பதவியை ஆயுட்காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை


நண்பர்கள்: ஊரிலுள்ள பெரும் சண்டியர்கள்


எதிரிகள்: வன்னியில் அத்துமீறி நிலம் அபகரிப்போர்


மறந்தது: ஆயுதப் போராட்டம்


மறக்காதது: அறிக்கைப் போராட்டம்


மறந்தது: ஒன்றாயிருந்த தோழர்களை புலிகள் கண்ணெதிரே சுட்டுக் கொன்றமை

நிறைவேறாத ஆசை: பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவது


மிகவும் பிடித்தது: உடனிறக்கிய கள்ளும், நெத்தலியும்


சாதனை: தானும் எம்.பியாகி ஏ.ஸி. ஜீப்பில் கொழும்பு சென்று வருவது


ஏக்கம்: வன்னி மக்கள் தன்னைக் கண்டு கொள்ளாமை


அதிக மரியாதை வைத்திருப்பது: குட்டிமணி, தங்கத்துரை


மனம் வெதும்பிய சந்தர்ப்பம்: முள்ளிவாய்க்காலில் சனம் கஷ்டப்பட்டபோது


எதிர்கால இலட்சியம்: அறிக்கை மூலமாக அரசியல் செய்வது


கடும் கோபம் கொள்வது: நீங்கள் எம்.பி யோ என தொகுதி மக்களே கேட்பது


எதிர்பார்த்துக் கொண்டிருப்பது: வடமாகாண சபைத் தேர்தல்


எதிர்பாராத சம்பவம்: அடிக்கடி அடி வாங்குவது (தலைவரிடமிருந்து)

வெளிநாடுகளில் இருந்த சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தொழில்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயிரம் பேர் நாடுகடத்தல்!

Sunday, December 16, 2012
இலங்கை::வெளிநாடுகளில் இருந்த சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தொழில்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயிரம் பேர் இந்த வருடத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாக்களை மோசடி செய்த குற்றத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரிகளே பெருந்தொகையானோரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டோரில் அதிகளவானவர்கள் பாலியல் தொழில்களில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தும் பாரியளவு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து பெண்கள் சட்டவிரோதமான முறையில் வரவழைக்கப்பட்டு அவர்களை 25 ஆயிரம் ரூபாவுக்கும் மேலாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யும் ஒரு குழுவினரும் இதில் அடங்குகின்றனர்.

இதனடிப்படையில், நேற்றைய தினமும், இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, பிறிதொரு புறத்தில் பாரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் கையடக்க தொலைபேசிகளை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களும் வீசா நடைமுறைகளை மீறியவர்கள் என்ற வகையில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.

எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவதுடன். வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படாத புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்க தீர்மானம்!

Sunday, December 16, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படாத  புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்குவது என பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்து கொண்டு, தமது சொந்த கிராமங்களில் சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள முன்னாள்  புலிப் போராளிகளை, புனர்வாழ்வு பயிற்சிகளை பெறாதுள்ள, புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதே இதற்கான காரணமாகும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இந்த நிலையில், இராணுவம் மற்றும் காவற்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள புனர்வாழ்வு பயிற்சிகள் அளிப்படாத முன்னாள்  புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர், கைதுசெய்து, புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஏற்கனவே பாதுகாப்பு தரப்பினரால், பல முன்னாள் புலிபோராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, December 15, 2012

வடக்கின் முதலமைச்சராக டக்ளஸ் தேவானந்தா தெரிவுசெய்யப்படுவார் - அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை!

Saturday, December 15, 2012
இலங்கை::வடக்கின் முதலமைச்சராக டக்ளஸ் தேவானந்தா தெரிவுசெய்யப்படுவார் என அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித

சேனாரத்ன பாசையூரில் அமைந்துள்ள கடலுணவு பதனிடும் தொழிற்சாலை மற்றும் குருநகரில் அமைந்துள்ள ஐஸ்தொழிற்சாலை ஆகியவற்றினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்திட்டங்கள் அடுத்த வருடத்தில் மேலும் அதிகளவில் முன்னெடுகப்படவுள்ளது என்றார்.

நாடுஅபிவிருத்தியில் முன்னேற்றமடைந்து வருகின்ற அதேவேளையில் அரசியல் ரீதியிலும் முன்னேற்றமடைகின்றபோது எதிர்காலத்தில் வடக்கின் முதலமைச்சராக தற்போதைய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருப்பாரென்ற நம்பிக்கை இருக்கின்றது.

மேலும், அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியான முன்னேற்றங்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் நாம் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றும் கூறினார்.

800 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் - அவுஸ்திரேலியா!

Saturday, December 15, 2012
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 800 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இவர்களில் 680 பேர் சுயவிருப்பின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலியா குடிவரவு மற்றும் குடியுரிமை விவகாரங்களுக்கான அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகக படகுகள் மூலம் தமது நாட்டிற்குள் பிரவேசித்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமாக தமது நாட்டிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை விவகாரங்களுக்கான அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

Saturday, December 15, 2012
சென்னை::தமிழக மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க வசதியாக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வசதியாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றமும் தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர் பால் செல்லர்ஸ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். பேராசிரியர்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் மாணவர்களும் பேராசிரியர்களும் புகழ் பெற்ற அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க செய்யவும் ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும் முடியும். 2013ம் ஆண்டு 25 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் அயல்நாடு சென்று கல்வி கற்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவர் மற்றும் பேராசிரியருக்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் மூலம் ரூ.15 லட்சம் அனுமதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி, முதல் ஆண்டு முதுகலை படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த மாணவர்கள் 2ம் ஆண்டின் மூன்றாவது பருவத்தை அயல்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கும், அதே பருவத்திலேயே பேராசிரியர்களும் உரிய பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பான உயர்கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வி அறிவு பெரிதும் மேம்படும். அவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வழிவகை ஏற்படும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள், யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50 மோட்டார் சைக்கிள்களை வழங்கியமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணை!

Saturday, December 15, 2012
இலங்கை::புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள், யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50 மோட்டார் சைக்கிள்களை வழங்கியமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களை வழங்க தலையீடுகளை மேற்கொண்ட புலிகளுக்கு ஆதரவான தமிழ் அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவிகள் லண்டனில் உள்ள புலிகளின் வலையமைப்பினால், வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவீரர் தினத்திற்கு முன்னர் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

புலிகள் அமைப்பிற்கு நிதி திரட்டும் நோக்கில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை கொன்சோல் ஜெனரல் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்!

Saturday, December 15, 2012
இலங்கை::புலிகள் அமைப்பிற்கு நிதி திரட்டும் நோக்கில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை கொன்சோல் ஜெனரல் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புலிகள் வலையமைப்பை வியாபிக்கும் நோக்கிலும் நிதி திரட்டும் நோக்கில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அவுஸ்திரேலியாவில் தங்களது வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படவில்லை.

புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி இவ்வாறு ஆட்கடத்தல்காரர்கள் பணம் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவி வழங்கும் போர்வையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அமைப்புக்கள் இரகசியமான முறையில்  புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாகாணசபை கொண்டு வரப்பட்டதன் பின்பே புலிகள் தவிர்ந்த ஏனைய ஆயுதகுழுக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தன - அமைச்சர் திஸ்ஸ விதாரண!

Saturday, December 15, 2012
இலங்கை::மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தன் காரணமாகவே, புலிகளை தவிர இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஏனைய அனைத்து தமிழ் ஆயுத அமைப்புகளும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் இதனை மாற்றுமாறு கோரி சில அரசியல்வாதிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அவர்களுக்கு தவாறான செய்தி வழங்கப்படும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை நாட்டுக்கு தேவையான ஒன்றல்ல எனவும் அது இந்திய - இலங்கை உடன்படிக்கை ஊடாக இலங்கைக்குள் திணிக்கப்பட்டது என அரசியல்வாதிகள் கூறினாலும், முன்னாள் பிரதமர் எஸ். டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் மாகாண சபை முறை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

சமசமாஜ கட்சி என்ற வகையில் மாகாண சபை முறைமை இரத்துச் செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். அதிகார பரவலாக்கலை கீழ் மட்டத்தில் உள்ள கிராமங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி அன்று முதல் குரல் கொடுத்து வருகிறது. இலங்கைக்கு மாகாண சபை முறைமை சிறந்தது என இலங்கை அரசியல் தலைவர்கள் நிலைப்பாடுகளை கொண்டிருந்த போதே மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டது.

மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதன் காரணமாக  புலிகளை தவிர இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராடிய ஆயுத குழுக்கள் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டன.

மாகாண சபைகளை இரத்துச் செய்து விட்டால், சர்வதேசம், சிறுபான்மை இனங்களை ஏமாற்றி விட்டு, அவர்களை அடக்கி ஆழ முயற்சிப்பதாக கூறும். மாகாண சபை முறையில் காணப்படும் குறைகளை நிர்வத்தி செய்து மாகாண சபைகளை வலுப்படுத்துவதன் மூலம் மாத்திரமே இலங்கையில் உள்ளவர்கள் ஒரே தேசிய இனமாக வாழ முடியும். இதன் மூலம் பிரிவினைவாதத்தையும் தோற்கடிக்க முடியும் எனவும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் - (லங்காசைபர்நியூஸ்) இணையத்தளம் தெரிவித்துள்ளது!

Saturday, December 15, 2012
இலங்கை::புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அரசசார்பு சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில் வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தன.

இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை முதலீட்டுச் சபையில் பணியாற்றிய புலிகளுக்கு ஆதரவான உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன், புலிகளின் நிறுவனங்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. வன்னி இராணுவ நடவடிக்கைக்கு பின்னர், குறித்த அதிகாரி நாட்டில் இருந்து வெளியேறியதுடன், புலிகளின் நிறுவனங்களும் காணாமல் போயுள்ளன.

புலிகளின் நிறுவனங்கள் இலங்கையில் உள்ள 40 பாரிய நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் கொழும்பு நகரில், 40 வீத முஸ்லிம்களும், 33 வீத தமிழர்களும், 24 வீத சிங்களவர்களும் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.(லங்காசைபர்நியூஸ்)

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரை கொன்றது டீச்சர் பையன்!!

Saturday, December 15, 2012
நியூடவுண்::அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி குழந்தைகள் உள்பட 28 பேரை கொன்றது அந்த பள்ளி ஆசிரியையின் மகன்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவனது சகோதரனை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தில் உள்ள நியூடவுண், மிகவும் பாதுகாப்பான பகுதி என்று கருத்து கணிப்பில் அதிக ஓட்டுகள் பெற்ற நகரம். இந்நகரில் உள்ள சாண்டி ஹூக் தொடக்க பள்ளியில் நேற்று 9.30 மணிக்கு டீன் ஏஜ் வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இதில் 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சாண்டி ஹூக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் நான்சி. இவருக்கு ரியான் லான்சா (24), ஆடம் லான்சா (20) என்ற 2 மகன்கள். இவர்களில் ஆடம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இவன்தான் நேற்று காலை, தாயின் துப்பாக்கியை திருடி பள்ளியில் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளான். முதலில் வீட்டில் இருந்த அம்மா, அப்பாவை சுட்டு கொன்று விட்டு, நான்சியின் காரில் 9.30 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளான். முதலில் பள்ளி பிரின்ஸ்பாலை சுட்டுக் கொன்றுள்ளான்.

பின்னர் பள்ளியில் மனநல வகுப்பு எடுக்கும் ஆசிரியரை கொன்றுள்ளான். அதன்பின், அம்மா பாடம் நடத்தும் கிண்டர்கார்டன் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த குழந்தைகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். பின்னர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். பள்ளியில் .223 கேலிபர் ரைபிள், 2 கைத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஆடம்தான் இந்த கொடூர செயல் செய்தது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவனுடைய சகோதரன் ரியான் லான்சாவை கைது செய்து விசாரித்து வருகிறோம்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின் ஆடமின் காதலி மற்றும் நண்பர் ஒருவர் காணாமல் போய்விட்டனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர். ஆனால், ஆடமை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டாலும், திட்டமிட்டே 3 துப்பாக்கிகளை எடுத்து வந்து பள்ளியில் ஆடம் தாக்குதல் நடத்தி இருக்கிறான் என்று மற்றொரு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் விஜயகாந்த்!

Saturday, December 15, 2012
திருவள்ளூர்::திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மணவாளன் நகரில் நடந்தது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுதாகர், ஒன்றியக்குழு தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாசுரான், இன்பநாதன் வரவேற்றனர். லோகநாதன், பூபாலன், பட்டாபி, வலசை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது, காவிரி நீர் பிரச்னைக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று சாதனை படைத்தவர் ஜெயலலிதா.

சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். முல்லை பெரியாறு பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்கட்சி தலைவர் தான் வழிமொழிந்து பேசவேண்டும். அதுதான் சபை மரபு. அன்று அவர் சட்டசபைக்கு வரவில்லை. முல்லை பெரியாறு என்றால் என்ன என்று கேட்பவர்தான் எதிர்கட்சி தலைவர். சட்டசபைக்கு ஒழுங்காக வராத விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர். இவ்வாறு அவர் பேசினார். டெல்லி சிறப்பு பிரதிநிதி நரசிம்மன், மாநில இளைஞரணி இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார், ராம்குமார், வேல்முருகன், பெருவை சேகர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Supreme Court orders former Waterloo grad student extradited on terrorism charges!

Saturday, December 15, 2012
A former University of Waterloo grad student saw his last bid to remain in Canada turned down Friday.

The Supreme Court of Canada upheld an extradition order for Suresh Sriskandarajah, who was arrested in 2006 after a joint FBI-RCMP investigation into the Tamil Tigers Sri Lanka-based terrorist group.

Sriskandarajah, who was living in the Waterloo area at the time of his arrest, is one of two Canadians to be extradited to face charges in the United States.

Suresh Sriskandarajah is seen here being led into court. The Supreme Court upheld a decision that Sriskandarajah be extradited to the United Starts to face terrorism-related charges. (CTV Kitchener)

He allegedly conspired with others to provide support to the Tamil Tigers.

After being arrested, Sriskandarajah was released on $500,000 bail, completed a masters degree in business, and recently moved to Ottawa for law school.

In an email, Sriskandarajah's lawyer said his client had been back in custody since before the decision was rendered.

"The decision is a profoundly disappointing one, not just in the result but also in principle," lawyer Brydie Bethell told CTV News.

Sriskandarajah's trial is expected to take place in New York. If convicted, he could face up to 25 years in prison.

நவீனகால கூலிப்படைகள் : அம்பலமாகிய புலிகளுக்கும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு!

Saturday, December 15, 2012
இலங்கை::2009 இல் இலங்கையில் இருந்து புலிபயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து பலர் நஷ்டவாளிகள் ஆகியியுள்ளனர். உலகளாவிய ரீதியில்  புலிகளுடன் சட்டவிரோதமாக வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்துபவர்களுக்கு  புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை அவர்களை வீதிக்கிறக்கியது போலாயிற்று. போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல் மூலம் மில்லியன் கணக்கான பணத்தை இவர்கள் சம்பாதித்து சொகுசு வாழ்கையை அனுபவித்து வந்தனர்.

புலிகளின் தூதரகங்கள், மில்லியன் கணக்கான டொலர்களை நாளாந்தமும், மாதாந்தமும் மற்றும் வருடாந்தமும் புலம்பெயர் மக்கள் மூலம் திரட்டி வந்தனர். இம் மக்களில் சிலர் தமது சொந்தப் பணத்தை விருப்பத்திலும் மற்றும் சிலர் வலுக்கட்டாயத்தின் பெயரிலும் செலுத்தி வந்தனர். இதைத்தவிர பயங்கரவாதிகளுக்கு மேலும் பல வழிகள் வருமாணம் திரட்டுவதற்கு இருந்து வந்தது.

இவ்வாறு கிடைக்கப் பெறும் வருமாணங்களை பயன்படுத்தி இப் பயங்கரவாதிகள் தம்மை பலப்படுத்திக்கொண்டு பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு நாட்டின் இறையான்மையை முற்றாக சீர் குழைத்தனர்.

பயங்கரவாதிகள் முற்றாக தோற்றக்கடிக்கப்பட்ட பின்னர் இவர்கள் ஆரதவு சக்திகள் நஷ்டவாளிகள் ஆகி தமது இலாபத்தை முற்றாக இழந்தனர். இருப்பினும் இலங்கையில் வாழ்ந்த அனைத்து இன மக்களும் தற்கொலை குண்டு தாக்குதல், குண்டு வெடிப்பு, சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு, இறப்பு மற்றும் அனைத்து அழிவுகளிலும் இருந்து சுகந்திரம் பெற்றனர். அதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தில் மூலம் வடக்கில் வாழும் மக்கள் நிரந்தர நிம்மதியையும், சுகந்திரத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டனர். நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.

இலங்கையில் சமாதானம் ஏற்பட்டதால், தமது வருமாணத்தை முற்றாக இழந்த பயங்கரவாத ஆதரவு சக்திகள் இலங்கைக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் இலங்கையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர். இதில் ஒர் அங்கமே இவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களையும், சமாதானத்திற்கு எதிரானவர்களையும் ஒன்று திரட்டி இலங்கைக்கெதிராக செயற்பட்டு வருகின்றனர்.

புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்தவர்களின் குழுக்கள், வேறு சில செல்வாக்குள்ள நிறுவனங்களை தம்முடன் இணைத்துக் கொண்டு இலங்கைக்கெதிராக செயற்பட்டு வருவதால் அந் நிறுவனங்களும், புலம்பெயர் ஆதரவாளர்களும் பாரியளவு இலாபமீட்டி வருகின்றமை தெட்டத் தெளிவாக புலப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் இலங்கைக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக இவர்கள்  புலிகளின் பாணியை கையாண்டு வருகின்றனர். இவர்களது நடவடிக்கைகளை பார்க்கும் போது, இதில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் ஆதரவு சக்திகள் யாவும்  புலிகளி கூலிப்படைகள் போன்றே செயற்பட்டு வருகின்றனர்.

கீழ்காணும் வரைபடத்தின் மூலம்  புலிகளை பின் தொடர்பவர்களுடன் அதன் இலாபமீட்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படும் கபடத்தனமான நோக்கங்கள் தெளிவாகின்றது.

Friday, December 14, 2012

இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும் புலிகள் தனிநாடு கேட்டு போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம் - கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னா!

Friday, December 14, 2012
இலங்கை::இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும்  புலிகள் தனிநாடு கேட்டு போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம்' என்று கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னா தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் நடைபெற்ற புதிய ஐஸ் தொழிற்சாலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பெடரல் முறை வேண்டாம் என்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட விரும்பவதாக தெரிவித்திருந்தனர்.

1958ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டபோது ஒரு நாட்டுக்குள் இரண்டு மொழிகள் வேண்டும் என்று கோசமிட்டனர். இந்த கோசம் 20 வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கும் அவர்கள் தனிநாடு கேட்டு போராடுவதற்கும் வழிவகுத்தது.

இந்த போராட்டத்தின் விளைவாக 30 வருடகாலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு கோசங்களிட்ட இனவாதிகளில் 75 வீதமானவர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இன்னும் 25 வீதமானவர்கள் மட்டுமே தென்னிலங்கையில் இருக்கின்றார்கள்.

ஒரு நாணயத்தில் இருக்கின்ற இரண்டு பக்கங்களைப் போன்றது தான் இன்றுள்ள தமிழ், சிங்கள இனவாதம்.இந்த இனவாதப் போக்கை இனிவரும் காலங்களில் எமது எதிர்காலப் பரம்பரைக்கு நாங்கள் கொண்டு செல்ல விடமாட்டோம்.

வட மாகாணம் எம்மோடு என்றும் கூடவே இருக்கும் ஒரு மாகாணமாகும். டீ.எஸ்.சேனநாயக்க முதல் சந்திரிகா குமாரதுங்க வரை செலவழிக்காத பணத்தைச் செலவழித்து வடக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்திருக்கின்றது.

இனி ஒரு பயங்கரவாதம் உருவாவதை தடுக்க எம்மால் முடியும். அவ்வாறு உருவாகினால் தடுப்பதற்கு படையினரால் முடியும். அத்துடன் 2013ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
Friday, December 14, 2012
இலங்கை::வடமாகாணத்தில் கடற்றொழில்துறையை வளர்த்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!

வடமாகாணத்தில் கடற்றொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் 25 பட்டதாரிகளை கடற்றொழில் பரிசோதகர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள ஜஸ்தொழிற்சாலையை இன்றையதினம் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தினதும், வடமாகாணத்தினதும் கடற்றொழில் துறைசார்ந்தவர்களது மேம்பாட்டிற்காக எமது அமைச்சு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஐஸ் தொழிற்சாலை இயங்கவுள்ளது என்றும் இது இங்குள்ள கடற்றொழிலாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்குமென்றும் தெரிவித்தார்.

இந்நிலையத்தினூடாக நாளொன்று 35 மெற்றிக் தொன் ஐஸ் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் முன்னைய காலங்களைவிட இனிவரும் காலங்களில் குறைந்த செலவில் ஐஸைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினூடாக கடற்றொழில்துறை மென்மேலும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் யாழ்.பல்கலைக்கழகத்தினூடாக 25 பட்டதாரிகளை பரிசோதகர்களாக நியமித்து வடமாகாணத்தில் பணிக்கமர்த்தவுள்ளதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.

இதன்போது யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும், விரிவாக எடுத்து விளக்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தமது அமைச்சினூடாக யாழ்.மாவட்டத்தில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தமிழ்மக்களுக்கு அரசியல் உரிமை பிரச்சினை தொடர்பிலும் குரல் கொடுத்து வருபவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இந்திய கடற்றொழிலாளர்களது பிரச்சினை தொடர்பில் விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென உறுதிபடத் தெரிவித்தார்.

முன்பதாக மங்கள வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்ட அமைச்சர்கள் நிகழ்விடத்தில் மங்களவிளக்கேற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், ஒவ்வொரு தொகுதியையும் பார்வையிட்டனர்.

ஐஸ் கூட்டுத்தாபனமாக இயங்கிவந்த மேற்படி நிறுவனம் இன்றுமுதல் கொம்பனியாக இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (LANKA NORTH ICE CO (PVT) LTD) டுவுனு) இது போன்ற ஐஸ் கொம்பனிகள் ஏற்கனவே நாட்டின் பலபகுதிகளிலும் இயங்கி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் மேற்படி கொம்பனி 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும், கடற்றொழில் திணைக்களத்தினதும் அதிகாரிகள் உட்பட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது!

Friday, December 14, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பயங்ரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரியரட்னம் உட்பட பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நான்கு மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் நேற்றைய தினம் சென்று அவர்களைப் பார்வையிட்டதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த மாணவர்கள் நால்வரும் அங்கு பாதுகாப்பாகவே இருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். பாதுகாப்பு தரப்பினரால் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அம்மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம் என அவர் கூறினார்.

மாவீரர் தினத்தன்றும் அதற்கு மறுதினமும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து 11 மாணவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7பேர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள டெலோ அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை சிறையில் வாடும் 5 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: ஜெயலலிதா வழங்கினார்

Friday, December 14, 2012
சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா 13.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று விசைப்படகில் இலங்கை கடற்பகுதியில், நெடுந்தீவிற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, போதைப் பொருள் கடத்தியதாக கூறி படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள மல்லாக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்றும், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இராமேசுவரம் பகுதி மீனவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஐந்து மீனவர்களை விடுவிப்பதற்கு மீனவர்கள் சார்பில் வழக்காடுவதற்கு இலங்கையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திடவும், அவர்களை விடுவிப்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள ராமேசுவரத்திலுள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு என்ற நிறுவனத்தின் மூலம் நடவடிக்கை எடுத்திடவும் வழக்கு செலவுக்காக 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியும் 14.12.2011 அன்று ஆணையிட்டார்.

தமிழக அரசின் நிதியுதவியுடன், மேற்கண்ட ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுதலை செய்திட 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 11.6.2012 அன்று மேற்கண்ட மனுவின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் இம்மீனவர்களின் குடும்பங்கள், வருமானம் ஈட்டித் தரும் தங்கள் குடும்பத் தலைவர்கள் சிறையில் உள்ளதால், அன்றாட வாழ்க்கை நடத்திட போதிய வருமானமின்றி அல்லல்படுவதை கருத்தில் கொண்டு குடும்பம் ஒன்றிற்கு மாதந்தோறும் ரூபாய் 7500/- வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா 6.8.2012 அன்று ஆணையிட்டிருந்தார்.

இந்த உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் இக்குடும்பங்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கை– கொழும்பு சிறையில் வாடும் ராமேசுவரத்தைச் சேர்ந்த இந்த ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா 13.12.2012 அன்று வழங்கினார்.

மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து நிவாரண உதவித் தொகையினை பெற்றுக் கொண்ட ஐந்து மீனவர்களின் குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாதாரண மக்களின் காணிகளை இராணுவ முகாம்களை நிர்மாணிக்க பயன்படுத்துவதில்லை யாழ்ப் பிராந்திய இராணுவ கட்டத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க!

Friday, December 14, 2012
இலங்கை::சாதாரண மக்களின் காணிகளை இராணுவ முகாம்களை நிர்மாணிக்க பயன்படுத்துவதில்லை எனவும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த சாதாரண மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, அவை மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் யாழ்ப் பிராந்திய இராணுவ கட்டத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய தூதுவர் மோஹான் போஸ்டரை அண்மையில் யாழ் இராணுவ தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு, கனேடிய தூதுவர் அங்கு விஜயம் செய்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஹத்துருசிங்க, யாழ் மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி பணிகள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களது பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக கூறியுள்ளார். இந்த சந்திப்பில் கனேடிய தூதரக அதிகாரியான எஸ்தர் வென்நேக்கும் கலந்து கொண்டார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை தடுக்கும் அதிகாரம் கிடையாது – பான் கீ மூன்!

Friday, December 14, 2012
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை இழைத்த தவறுகளை ஆராய்வதற்கான மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே நிறைவு செய்யப்படும். என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில்; இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா இழைத்த தவறுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட சாள்ஸ் பெட்றியின் அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான குழு நியமிக்கப்படும் என்று பான் கீ மூன் அறிவித்திருந்தார்.

இந்த மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே நிறைவு செய்யப்படும். இந்த மீளாய்வில், ஐ.நாவின் நிதியங்கள், திட்டங்களே பங்கேற்கும் என்றும், அனைத்துலக நாணய நிதியம் போன்ற முகவர் அமைப்புகள் இடம்பெறமாட்டாது என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீளாய்வில் பங்கேற்பதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும்படி, ஐ.நா திணைக்களங்கள், நிதியங்களை அக்குழுவுக்குத் தலைமை தாங்கும் ஜான் எலியாசன, கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லெபனானில் ஐக்கிய நாடுகள் போர்க் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை தடுப்பதற்கு தனக்கு அதிகாரம் இல்லை.

சவேந்திர சில்வா, போர்க் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதை ஆசிய நாடுகள் பல ஆட்சேபிக்கின்ற போதிலும், அங்கத்துவ நாடுகளால் நியமிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில், அவரின் பணிகளில் தலையிட முடியாது என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஷூ‌ட்டி‌ங்: ஷாருக் படத்தை உதறும் (நாஸ்திகன் புலி விசுவாசி துடை நடிங்கி) சத்யரா‌ஜ்??

Friday, December 14, 2012
சென்னை::ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சத்யரா‌ஜ் நடிக்கிறார். முக்கியமான வேடம், தீபிகாவின் அப்பாவாக வருகிறார்.

இந்தப் படத்தில் (புலி விசுவாசி) சத்யரா‌ஜ் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இலங்கையில் எடுப்பதாக இருந்தார் இயக்குனர். இலங்கையில் நடக்கும் படப்பிடிப்புகளிலோ, கேளிக்கையிலோ கலந்து கொள்ளக் கூடாது என்ற  விதி இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. அப்படியிருக்க இலங்கைக்கு செல்வாரா (புலி விசுவாசி) சத்யரா‌ஜ்?

உடனடியாக ஷாருக்கானை தொடர்பு கொண்டு முடியாது என சத்யரா‌ஜ் கூறியதாக‌த் தெ‌ரிகிறது. சத்யராஜை இழக்க விரும்பாத அவரும் படப்பிடிப்பை இலங்கையிலிருந்து கோவாவுக்கு மாற்றியுள்ளார்.

சென்னை எக்ஸ்பிரஸில் தமிழர்களை மட்டம் தட்டும் காட்சிகள் இருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது. புரட்சி‌‌த் தமிழன் அடைமொழி வைத்து இதுபோன்ற படங்களில் நடிக்க இயலாது. பெயர் மட்டுமின்றி சத்யரா‌ஜின் உணர்வும் ஒத்துழைக்காது. முழு ஸ்கி‌ரிப்டையும் படித்து திருப்தி என்றால் மட்டுமே மேக்கப், இல்லையென்றால் பேக்கப் என கறாராக இயக்குன‌ரிடம் (புலி விசுவாசி) சத்யரா‌ஜ் தெ‌ரிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.

சுருக்கமாக சென்னை எக்ஸ்பிரஸில் (புலி விசுவாசி) சத்யரா‌ஜின் சீட் இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை

'Galle Dialogue 2012' Maritime Conference; 'Strategic Maritime Cooperation and partnerships to face the future with confidence!

Friday, December 14, 2012
Srilanka::The 'Galle Dialogue 2012' organized by the Sri Lanka Navy under the patronage of the Ministry of Defence and Urban Development began this morning (13th December 2012) at the Light House Hotel in the southern port city of Galle.

Hon. Minister of External Affairs Prof. G L Peiris graced the event as the chief guest. The guest of honour, Secretary Defence and Urban Development Mr. Gotabaya Rajapaksa made the keynote address. The welcome remarks were made by the Commander of the Navy Vice Admiral Jayanath Colombage.

Held for the third consecutive time 'Galle Dialogue 2012' brings together representatives from 29 countries including Sri Lanka to discuss matters on a vide range of maritime related issues.

Held under the theme "Strategic Maritime Cooperation and partnerships to face the future with confidence" the international conclave will see a number of speeches, presentations and panel discussions by subject related experts, intellectuals, diplomats and naval representatives from around the world.

The city of Galle provides the perfect setting for this two day international maritime conference. With a rich heritage and long maritime history, Sri Lanka rightly deserves due recognition for conducting such an event of international importance. The importance of the 'Galle Dialogue' is evident by the increasing number of participating countries from the inaugural event in 2010, where only 10 nations were represented to the impressive rise this year. Last year 19 countries had sent in their delegations.

Making the keynote address the Secretary Defence thanked all those present for their participation. He said that Strategic cooperation and partnership is essential to achieve lasting security, stability and success in the Indian Ocean region.

Stressing the importance of the Indian Ocean he said that despite adverse global economic conditions, the volume of world's containerized cargo that crosses the Indian Ocean has only increased over time and there is keen interest among the nations in assuring the safety and security of it.

Talking on the threats posed by the Indian Ocean he said that these threats may seriously affect the security, stability and sustainability of the Indian Ocean region and its impact is felt not only by regional littoral nations but also globally. He identified piracy, terrorism, illegal human, drug and arms trafficking, illegal and unregulated fishing and waste disposal as the major issues among others that seriously affect the security and sustainability of the Indian Ocean.

The Secretary revealed that Sri Lanka together with India and the Maldives have recently been working on a trilateral agreement for cooperation in carrying out surveillance, anti piracy operations and curbing illegal activities including maritime pollution.

He categorically stated that from Sri Lanka's perspective the Chinese investment in the Hambantota port is purely economic and not otherwise. Sri Lanka has always pursued a non-aligned foreign policy, and its only interest is in its economic development, he added.

He admitted that it was unfortunate to note the sense of mistrust between major powers in the Indian Ocean region that limits effective and long lasting multilateral cooperation. He maintained that Sri Lanka has a particular interest in promoting multilateral cooperation between the major powers present in this region.

In conclusion the Secretary Defence expressed optimism that the presentations and discussions during the two day sessions will be instrumental in fostering improved multilateral cooperation, build better partnership between naval powers in the region that will benefit not only the nations in the Indian Ocean littoral but the entire world, and enable all of us to face the future with confidence.

Hon. Governor of the Southern Province, Chief of Defence Staff, Additional Secretary (Defence) of the Ministry of Defence, Commander of the Army, Commander of the Air Force, Director General of the Civil Defence Department, Director General of the Coast Guard, ambassadors, diplomats, foreign dignitaries and senior military officers were present at the occasion.

போர் விமானங்கள் பறந்ததால் சீனா-ஜப்பான் இடையே பதற்றம்!

Friday, December 14, 2012
டோக்கியோ::சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே சென்காகு தீவு பங்கீடு பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனா விமானம் ஒன்று அந்த தீவின் மீது பறந்ததால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனா - ஜப்பானுக்கு இடையே பங்கீட்டில் பிரச்னை உள்ள சென்காகு தீவின் மீது சீனாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்ததை அடுத்து, ஜப்பான் தனது போர் விமானத்தை செலுத்தியது. அந்த தீவைச் சுற்றி சீனா தனது போர்க் கப்பல்களை நிறுத்த 2 மாத காலமாக முயற்சி செய்து வருகிறது. இருந்த போதும் ஜப்பான் தரப்பில் தற்போதுதான் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், அங்கு பதற்றம் நிலவுகிறது:

Thursday, December 13, 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக் குழு மீதான நம்பிக்கை இல்லாத நிலையில் நியமிக்கவில்லை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ!

Thursday, December 13, 2012
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக் குழுவின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான சுயாதீனக் குழுவினை, தெரிவுக் குழு மீதான நம்பிக்கை இல்லாத நிலையில் நியமிக்கவில்லை என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர், சுயாதீன குழு ஒன்று தொடர்பில் ஆலோசிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

சாதாரணமாக ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்று கிடைக்கப்பெறும் பட்சத்தில், அதனை மீளாய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும்.

இந்த அடிப்படையிலேயே இந்த அறிக்கை தொடர்பிலும் சுயாதீன குழு நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை ரத்து செய்யுமாறு கோரி, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தமக்கு தொலைபேசியில் அழுத்தம் வழங்கியதாக கூறப்படும் செய்தியையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் யாப்புக்கு அமையவே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்காலிகமாக பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஊடகபிரதானிகள் இதன் போது கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி சட்ட ரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவதாக குறிப்பிட்டார்.

அழிவுயுத்தத்திற்கு காரணமானவர்களே திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடாத்த முயலுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 13, 2012
இலங்கை::குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிட்ட வகையில் சுயலாப அரசியல்வாதிகளால் இருட்;டடிப்பு செய்யப்பட்டு வருவதாக ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இன்றையதினம் (13) இடம்பெற்ற ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் 2012 பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து சுயதொழில் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குடாநாடு யுத்தத்தால் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கூட கட்சித் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

யுத்தம் முடிவிற்கு வந்துள்ள இன்றைய சூழலில் குடாநாட்டில் தற்போது பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் அவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக சில அரசியல்வாதிகள் திட்டமிட்ட ரீதியில் இருட்டடிப்புச் செய்வதுடன் சில குழப்பங்களையும் அரங்கேற்றி மக்களை குழப்பியும் வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியதுடன்,

இவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டும் இதுபோன்ற வாழ்வாதாரம் உள்ளிட்ட உதவித் திட்டங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது அழிவுயுத்தத்திற்கு காரணமானவர்களே பொய்ச்செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடாத்தி மீண்டும் அழிவை நோக்கி இட்டுச் செல்லவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

தென்மராட்சி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி சாந்தசீலன் அஞ்சலிதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து மகளிர் சங்கங்களுக்கு சுயதொழில் உபகரணங்களும், விளையாட்டு கழகங்களுக்குரிய விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

உபகரணத்தொகுதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் உதயன், தென்மராட்சி பிரதேச செயலர், ஈ.பி.டி.பியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இதன்போது ஈ.பி.டி.பியின் தென்மராட்சி இணை இணைப்பாளர் வலன்ரைன், ஈ.பி.டி.பியின் கொடிகாமம் இணைப்பாளர் விஸ்வா உள்ளிட்ட துறைசார்;ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - அம்பாள்குளம் வர்த்தக சங்கத்தலைவர்!

சொல்லில் மட்டும் நின்று விடாது அந்தசொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமேஎன அம்பாள்குளம் வர்த்தக சங்கத்தலைவர் இரத்தினமணி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் இயங்கிவரும் சந்தை வளாகத்தில் வர்த்தக சமூகத்தினரை அமைச்சர் அவர்கள் இன்றையதினம் (13) சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்திற்கு பின்னர் கிளிநொச்சியில் மக்கள் மீளக்குடியேறியதை அடுத்து மாவட்டத்திற்கான பிரதான சந்தை அம்பாள்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு, பல்வேறு இடர்களுக்கு மத்தியில் இயங்கி வந்தநிலையில் சந்தையை மீளவும் டிப்போ சந்திக்கருகாவுள்ள பழைய இடத்தில் நவீன கட்டிடத் தொகுதிகளை அமைத்து அங்கு இயங்க வைப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிக அக்கறை செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இதன்பயனாக 260 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடியதான சந்தைக் கட்டிடம் அமைக்கும் வகையில் 50 மில்லியன் ரூபா செலவில் மரக்கறிக்கு 54, மீனிற்கு 46 என கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே இவ்வாண்டு ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 210 மில்லியன் ரூபா செலவில் நவீன சந்தை பல்கூட்டுத்தொகுதி அமைக்கப்படவுள்ளதாகவும் இதனிடையே புதிய சந்தை வளாகத்தில் வடமாகாண ஆளுநரினால் 18 மில்லியன் ரூபாவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் புதிய கடைத்தொகுதிகளை வர்த்தகர்களுக்கு வழங்குவதிலுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு வர்த்தக சமூகத்தினராகிய நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரிடமும் கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.

அந்தவகையில் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி வர்த்தக சமூகத்தினருக்கு உரிய தீhவினைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அதன்பிரகாரம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று சொல்லில் மட்டும் நின்றுவிடாது தாம் சொல்லும் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது இம்மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மக்களோடு நின்று அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அதேவேளை, தவறான சுயலாப அரசியல் காரணங்களால் வர்த்தகர்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றமை குறித்து தாம் வேதனையடைவதாகவும் தெரிவித்தார்.

இன்றுள்ள சூழலில் இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு அதிலிருந்தே முன்னேற்றம் காணவேண்டும் என்பதுடன், இந்நிலையில் எம்மால் ஆற்றக்கூடிய பணிகளை கவனத்தில் கொண்டு அதனை முழுமையாக நிறைவேற்றுவோம் எனவும், மக்களின் நலனுக்கு எதிராக நாம் எவ்விதமான தீர்வையும் முன்வைக்கமாட்டோம் எனவும் உறுதிபடத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், துறைசார்;ந்தவர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனவரி மாதம் வர்த்தக சமூகத்தினருக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கிளிநொச்சி பொதுச்சந்தை விடயம் தொடர்பில் அரசியலுக்கு அப்பால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களின் நலன்களை கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் அம்பாள்குளம் சந்தை வர்த்தகர்கள் தொடந்தும் பாதிக்கப்படக் கூடாது இது தொடர்பில் அனைவரும் வர்த்தகர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகமிக அவசியமானது என்றும் வலியுறுத்திய அவர் பாராளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், மேடைகளிலும் முழங்குவது மக்கள் பணி அல்ல என்றும் மாறாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் மக்களாக அந்த மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து செயற்படுவதே மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பான பணியாகும் எனவும் தெரிவித்தார்

மேலும் கௌரவ அமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் வர்த்தகர்களின் நலன்களை கருத்தில் எடுத்து சுமூகமான தீர்வினை விரைவில் பெற்றுத்தருவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் மகேந்திரம், வர்த்தக சமூகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த புலி கொலையாளி தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை!

Thursday, December 13, 2012
இலங்கை::ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த புலி கொலையாளி தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற பெண் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை கேகாலை பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒன்றில் இருந்து அமைச்சரை கொல்வதற்கு திட்டம் வகுத்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு குற்றத்தடுப்புப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு விசாரணைகள் இடம்பெற்று கேகாலை நீதிமன்றுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்தே குறித்தப் பெண்ணுக்கு 20 வருடசிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது

நவம்பர் 3 ஆம் தேதி நடப்பதாக இருந்த இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் ராஜா இசை நிகழ்ச்சி: பிப்ரவரியில் லைவ் கான்சர்ட்!!!

Thursday,13th of December 2012
டொரன்டோ::நவம்பர் 3 ஆம் தேதி நடப்பதாக இருந்த இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் ராஜா இசை நிகழ்ச்சிக்கு சில புலம்பெயர் (புலி ஆதரவு தமிழர்கள் ஆதரவாளர்கள்) எதிர்ப்பு: அன்று நடக்காமல் போன இசை நிகழ்ச்சிக்கு புதிதாக - புயல் வராத தேதியாகப் பார்த்து நாள் குறித்திருக்கிறார்கள்.

2013 பிப்ரவரி 16. அன்றுதான் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. இருநூறுக்கும் அதிகமான இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்குபெறும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு நீங்கள் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தால், அதாவது நவம்பர் 3 ஆம் தேதிக்கு ரிசர்வ் செய்திருந்தால் அந்த டிக்கெட் பிப்ரவரிக்கு செல்லுபடியாகும்.

டிக்கெட்கள் அதிகமிருப்பதால் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்காமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட தேவையில்லை.