Thursday, December 13, 2012

அழிவுயுத்தத்திற்கு காரணமானவர்களே திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடாத்த முயலுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 13, 2012
இலங்கை::குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிட்ட வகையில் சுயலாப அரசியல்வாதிகளால் இருட்;டடிப்பு செய்யப்பட்டு வருவதாக ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இன்றையதினம் (13) இடம்பெற்ற ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் 2012 பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து சுயதொழில் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குடாநாடு யுத்தத்தால் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கூட கட்சித் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

யுத்தம் முடிவிற்கு வந்துள்ள இன்றைய சூழலில் குடாநாட்டில் தற்போது பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் அவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக சில அரசியல்வாதிகள் திட்டமிட்ட ரீதியில் இருட்டடிப்புச் செய்வதுடன் சில குழப்பங்களையும் அரங்கேற்றி மக்களை குழப்பியும் வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியதுடன்,

இவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டும் இதுபோன்ற வாழ்வாதாரம் உள்ளிட்ட உதவித் திட்டங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது அழிவுயுத்தத்திற்கு காரணமானவர்களே பொய்ச்செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடாத்தி மீண்டும் அழிவை நோக்கி இட்டுச் செல்லவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

தென்மராட்சி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி சாந்தசீலன் அஞ்சலிதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து மகளிர் சங்கங்களுக்கு சுயதொழில் உபகரணங்களும், விளையாட்டு கழகங்களுக்குரிய விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

உபகரணத்தொகுதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் உதயன், தென்மராட்சி பிரதேச செயலர், ஈ.பி.டி.பியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இதன்போது ஈ.பி.டி.பியின் தென்மராட்சி இணை இணைப்பாளர் வலன்ரைன், ஈ.பி.டி.பியின் கொடிகாமம் இணைப்பாளர் விஸ்வா உள்ளிட்ட துறைசார்;ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - அம்பாள்குளம் வர்த்தக சங்கத்தலைவர்!

சொல்லில் மட்டும் நின்று விடாது அந்தசொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமேஎன அம்பாள்குளம் வர்த்தக சங்கத்தலைவர் இரத்தினமணி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் இயங்கிவரும் சந்தை வளாகத்தில் வர்த்தக சமூகத்தினரை அமைச்சர் அவர்கள் இன்றையதினம் (13) சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்திற்கு பின்னர் கிளிநொச்சியில் மக்கள் மீளக்குடியேறியதை அடுத்து மாவட்டத்திற்கான பிரதான சந்தை அம்பாள்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு, பல்வேறு இடர்களுக்கு மத்தியில் இயங்கி வந்தநிலையில் சந்தையை மீளவும் டிப்போ சந்திக்கருகாவுள்ள பழைய இடத்தில் நவீன கட்டிடத் தொகுதிகளை அமைத்து அங்கு இயங்க வைப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிக அக்கறை செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இதன்பயனாக 260 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடியதான சந்தைக் கட்டிடம் அமைக்கும் வகையில் 50 மில்லியன் ரூபா செலவில் மரக்கறிக்கு 54, மீனிற்கு 46 என கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே இவ்வாண்டு ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 210 மில்லியன் ரூபா செலவில் நவீன சந்தை பல்கூட்டுத்தொகுதி அமைக்கப்படவுள்ளதாகவும் இதனிடையே புதிய சந்தை வளாகத்தில் வடமாகாண ஆளுநரினால் 18 மில்லியன் ரூபாவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் புதிய கடைத்தொகுதிகளை வர்த்தகர்களுக்கு வழங்குவதிலுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு வர்த்தக சமூகத்தினராகிய நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரிடமும் கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.

அந்தவகையில் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி வர்த்தக சமூகத்தினருக்கு உரிய தீhவினைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அதன்பிரகாரம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று சொல்லில் மட்டும் நின்றுவிடாது தாம் சொல்லும் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது இம்மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மக்களோடு நின்று அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அதேவேளை, தவறான சுயலாப அரசியல் காரணங்களால் வர்த்தகர்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றமை குறித்து தாம் வேதனையடைவதாகவும் தெரிவித்தார்.

இன்றுள்ள சூழலில் இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு அதிலிருந்தே முன்னேற்றம் காணவேண்டும் என்பதுடன், இந்நிலையில் எம்மால் ஆற்றக்கூடிய பணிகளை கவனத்தில் கொண்டு அதனை முழுமையாக நிறைவேற்றுவோம் எனவும், மக்களின் நலனுக்கு எதிராக நாம் எவ்விதமான தீர்வையும் முன்வைக்கமாட்டோம் எனவும் உறுதிபடத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், துறைசார்;ந்தவர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனவரி மாதம் வர்த்தக சமூகத்தினருக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கிளிநொச்சி பொதுச்சந்தை விடயம் தொடர்பில் அரசியலுக்கு அப்பால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களின் நலன்களை கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் அம்பாள்குளம் சந்தை வர்த்தகர்கள் தொடந்தும் பாதிக்கப்படக் கூடாது இது தொடர்பில் அனைவரும் வர்த்தகர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகமிக அவசியமானது என்றும் வலியுறுத்திய அவர் பாராளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், மேடைகளிலும் முழங்குவது மக்கள் பணி அல்ல என்றும் மாறாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் மக்களாக அந்த மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து செயற்படுவதே மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பான பணியாகும் எனவும் தெரிவித்தார்

மேலும் கௌரவ அமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் வர்த்தகர்களின் நலன்களை கருத்தில் எடுத்து சுமூகமான தீர்வினை விரைவில் பெற்றுத்தருவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் மகேந்திரம், வர்த்தக சமூகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment