Thursday, July 26, 2012

பேருந்து விபத்தில் மாணவி பலி:அதிகாரிகள் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Thursday, July 26, 2012
தாம்பரம்::பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியானது தொடர்பாக தாம்பரம் பள்ளி முதல்வர், பஸ் உரிமையாளர், டிரைவர், கிளீனர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் விடிய விடிய போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32), ஆட்டோ டிரைவர். மனைவி பிரியா (28). இவர்களது மகன் பிரணவ் (9), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். மகள் ஸ்ருதி (6), சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பள்ளி பஸ்சில் 60 மாணவர்கள் இருந்தனர்.

முடிச்சூர் இ.பி. காலனி பஸ் நிறுத்தம் அருகே பஸ் வேகமாக திரும்பியபோது, நிலைதடுமாறிய சிறுமி ஸ்ருதி, இருக்கைக்கு கீழ் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். அதுகூட தெரியாமல் டிரைவர், பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். ஸ்ருதி விழுந்ததும் சக மாணவிகள் அலறினர். சாலையில் சென்றவர்கள், பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் மாணவர்களை இறக்கிவிட்டு, பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் படைப்பையை சேர்ந்த சீமானை (58) கைது செய்தனர். பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), பள்ளி முதல்வர் விஜயன் (60), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரித்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிகாலை 3.30 மணியளவில் அனைவரையும் கைது செய்தனர்.

மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குநர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோரும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். ‘விசாரணை அறிக்கையை முதல்வருக்கு அனுப்புவோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று பள்ளிக் கல்வி துறை செயலர் சபீதா தெரிவித்தார். மாணவி பலியானதை தொடர்ந்து சீயோன் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் 4 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பஸ்சில் இருந்து விழுந்து மாணவி இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி திறந்தவுடன் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை செய்யப்படுகிறது. குறை ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அளிக்கப்படும் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்படும். விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் பர்மிட் ரத்து செய்யப்படும்’ என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.

பள்ளி பஸ்சில் ஓட்டை இருப்பது தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் இதே ஓட்டையில் மாணவி ஸ்ருதியின் கால் சிக்கியுள்ளது. அப்போது அதிர்ஷ்டவமாக தப்பிய சிறுமி, இதுபற்றி தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் பஸ்சில் உள்ள ஓட்டையை அடைக்கும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். டிரைவர் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அநியாயமாக ஒரு சிறுமியின் உயிர் போயிருக்காது. அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடைகள் அடைப்பு பள்ளி சிறுமி இறந்ததையடுத்து முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.

ஐகோர்ட் கடும் கண்டனம்
பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் இன்று காலை கோர்ட்டுக்கு வந்ததும், அரசு வக்கீல் வெங்கடேஷை பார்த்து, ‘சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, பஸ் ஓட்டையில் விழுந்து இறந்தது மிகவும் சோகமானது; வேதனையானது. நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இதுபோன்ற பஸ்கள் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் எங்கே இருக்கிறார்? அவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

கடும் நடவடிக்கை: முதல்வர்

முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவி ஸ்ருதி, நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ்சில் இருந்த துவாரம் வழியாக கீழே விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். பழுதுள்ள பஸ்சை குத்தகை அடிப்படையில் பள்ளி வாகனமாக இயக்கியதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாணவி ஸ்ருதி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பள்ளி முதல்வர் விஜயன் (60), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரித்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிகாலை 3.30 மணியளவில் அனைவரையும் கைது செய்தனர். மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குனர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோரும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவி பலியானதை தொடர்ந்து சீயோன் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் 4 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று காலை சிறுமியின் உடல் அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஸ்ருதி படித்த பள்ளியின் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், சுற்று வட்டார ஊர்மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து சிறுமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘சிறுமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது தயவுதாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். பள்ளி சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே, சிறுமி பலியான சம்பவத்தை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இன்று காலை முதல் பெஞ்ச் கோர்ட்டுக்கு வந்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், அரசு வக்கீல் வெங்கடேஷை அழைத்து, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, பஸ் ஓட்டையில் விழுந்து இறந்தது மிகவும் சோகமானது; வேதனையானது. இதைக் கேட்டு நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இதுபோன்ற பஸ்கள் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் எங்கே இருக்கிறார்? அவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பஸ்சில் இருந்து விழுந்து மாணவி இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அலட்சியம்
பள்ளி பஸ்சில் ஓட்டை இருப்பது தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் இதே ஓட்டையில் மாணவி ஸ்ருதியின் கால் சிக்கியுள்ளது. அப்போது அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி, இதுபற்றி தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் பஸ்சில் உள்ள ஓட்டையை அடைக்கும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். டிரைவர் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அநியாயமாக ஒரு சிறுமியின் உயிர் போயிருக்காது. அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

6வது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரம் 5 மனைவிகள் சேர்ந்து ‘சீரழித்த’தால் மூச்சு திணறி கணவன் பரிதாப சாவு!

Thursday, July 26, 2012
அபுஜா::ஆறாவது மனைவியுடன் கணவன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரமடைந்த 5 மனைவிகளும் சேர்ந்து வலுக்கட்டாயமாக கணவனை பலாத்காரம் செய்து கொன்றனர். நைஜீரியாவில் கத்திமுனையில் நடந்த இந்த பயங்கரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவின் ஓக்பேடிபோ கிராமத்தை சேர்ந்தவர் உரோகோ ஒனோஜா. பெரும் தொழிலதிபர். இவருக்கு 5 மனைவிகள். ஆறாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த இளம்பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இதனால் 5 மனைவிகளுக்கும் பொறாமை ஏற்பட்டது. கடந்த வாரம், வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஒனோஜா நேராக 6வது மனைவியின் அறைக்கு சென்றார். அங்கு அவருடன் உல்லாசமாக இருந்தார்.

இதனால், மற்ற 5 மனைவிகளும் ஆத்திரம் அடைந்தனர். கத்தி, கம்புகளை எடுத்து கொண்டு அந்த அறைக்குள் ஆவேசமாக நுழைந்தனர். ‘‘புதிதாக ஒருத்தி வந்ததும் நாங்கள் பழசாகிப்போய்விட்டோமா. எங்களுடனும் உல்லாசமாக இரு’’ என்று கூறி மிரட்டினர். அவர்களை சமாதானப்படுத்த ஒனோஜா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. வலுக்கட்டாயமாக கத்தி முனையில் மிரட்டி அவருடன் 4 மனைவிகளும் உறவுகொண்டனர். 5வது மனைவியுடன் உறவுகொள்ளும் நேரத்தில் மயங்கி விழுந்த ஒனோஜா படுக்கையிலேயே சரிந்து இறந்தார். அதை பார்த்த 5 மனைவிகளும் தப்பியோடி விட்டனர். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காட்டுக்குள் தப்பியோடிய 2 பெண்களை கைது செய்தனர். மற்ற 3 பெண்களை தேடி வருகின்றனர். இந்த தகவலை நைஜீரியாவில் இருந்து வெளிவரும் தி டெய்லி போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் விமான நிலையத்தில் கைது!

Thursday, July 26, 2012
இலங்கை::அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அதிகாரி ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கிருந்து இந்த நபரை பொறுப்பேற்று அழைத்து வந்ததாக குடிவரவு - குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ச்சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் கூறினார்.

போலி கடவுச்சீட்டுடன் அவுஸ்திரேலியா சென்றிருந்ததை இந்த சந்தேகநபர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றில் ஆஜராகவும்; அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவு!

Thursday, July 26, 2012
இலங்கை::அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கொன்றின் தீர்ப்பு குறித்து மன்னார் நீதவானுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாம் ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களை அன்றையதினம் முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட ஏழு சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த பின்னர், இன்று முற்பகல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்களுக்கு அல்லது அவர்களின் உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு ஏதேனும் விதத்தில் அழுத்தம் கொடுக்கப்படுமாயின், சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என இந்த உத்தரவைப் பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.எல்.ரஞ்சித் சில்வா குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பிரசன்னமாகியிருந்தார்.

நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற சுயாதீன தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர்கள் சட்டத்தரணிகள் என்ற ரீதியில் மன்னார் சம்பவத்தைக் கண்டிப்பதாகவும் ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் கூறினார்.

அசாம் கலவரத்தின் பின்னணியில் வங்கதேசம்? மத்திய அரசு விளக்கம்!

Thursday, July 26, 2012
புதுடெல்லி::அசாம் மாநிலம் போடோ பிராந்திய மாவட்டங்களில் கடந்த 6 நாட்களாக நீடித்து வரும் கலவரத்தின் பின்னணியில் வங்கதேச தூண்டுதல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அசாம் மாநிலம் போடோ பிராந்திய மாவட்டங்களான கோக்ரஜா, சிராங், துப்ரி, போங்கைகான், உதல்குரி ஆகியவற்றில் கடந்த 6 நாட்களாக போடோ இனத்தவருக்கும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரை அனுப்பி வைத்துள்ளது. போலீஸ் படையும் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், தொலைதூர பகுதிகளில் இரவு நேரங்களில் மோதல் நீடித்து வருகிறது. மைனாரிட்டியாக இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் அடைக்கலம் தேடி வருகின்றனர். இதுவரை 42 பேர் கலவரத்துக்கு பலியாகியுள்ளனர்.

2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக மொத்தம் 71ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ரயில் நிலையங்களில் முடங்கி கிடக்கின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் கவுகாத்திக்கு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய போலீஸ் படையைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த 6 நாட்களாக பரவி வரும் கலவரத்துக்கு வங்கதேசம் தூண்டுதல் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கலவரத்தை தூண்டும் லோக்கல் தலைவர்களை கைது செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வடக்கு கிழக்கின் 4 வைத்தியசாலைகளை விருத்தி செய்ய 60 மில்லியன் ரூபா நிதியுதவி!

Thursday, July 26, 2012
இலங்கை::வடக்கு கிழக்கில் உள்ள 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய அமெரிக்காவின் மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு 60 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய போதனா வைத்தியசாலைகள், கிளிநொச்சி ஆதார வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

அமெரிக்கா நிறுவனத்தின் இந்த நிதியுதவி வழங்கப்படுவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் சுகதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க மற்றும் அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு சுகாதார அபிவிருத்திக்காக நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுவிஸ் அதிகாரிகள் இலங்கை விஜயம்!

Thursday, July 26, 2012
புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். சுவிட்சர்லாந்தின் பெடரல் காவல்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இவ்வாறுஇலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். 26 பேரிடம் குறித்த அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சட்டத்தரணிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. சுவிட்சர்லாந்தில், புலிகளின் செயற்பாடுகள் குறித்து 120சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பணம் பயன்படுத்தியும், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் இந்தக்குழுவினர் இலங்கையில் விசாரணைகளை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட உள்ளதாகக்குறிப்பிடப்படுகிறது. இந்த விசாரணைகளுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட உள்ளதாக சுவிஸ் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, July 25, 2012

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் ஹெராயின் ஏர்போர்ட்டில் பறிமுதல்: இருவர் கைது!

Wednesday,July 25, 2012
மீனம்பாக்கம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் புறப்பட தயாரானது. அதில், ஏற வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள், சோதனை நடத்தினர். அப்போது, இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த தன்வர் முகமது (35), மபின் நிசார் (32) ஆகியோர், இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னைக்கு நேற்று மாலை வந்து விட்டு இன்று அதிகாலையில் புறப்பட இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.

அப்போது, இருவரது ஆசன வாயிலிலும் சிறிய பொட்டலம் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். கருப்பு கார்பன் பேப்பரில் சுற்றி வைத்திருந்த அந்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தனர். அதற்குள், 500 கிராம் ஹெராயின் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் போதை பொருளை கொடுத்து அனுப்பியது யார், போதை கடத்தும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் தேர்தல் வன்முறையின்றி மிகவும் அமைதியாக காட்சியளிக்கின்றது! – கபே பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்!

Wednesday,July 25, 2012
இலங்கை::சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபே நீண்ட காலமாக இந்த மாவட்டத்தை அவதானித்து வருகின்றது என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமே இதுவரை எதுவிதமான தேர்தல் வன்முறையுமற்ற மாவட்டமாக அவதானிக்கப்பட்டுள்ளது என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களுக்குமிடையிடையிலான சந்திப்பு நேற்று திங்கட் கிழமை பிற்பகல் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக் காரியாலத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கே மட்டக்களப்புத் தேர்தல் களம் மிகவும் அமைதியாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். நான் தற்சமயம் மட்டக்களப்பில் இருக்கின்றேன். அதேவேளை நீண்டகாலமாக மட்டக்களப்பை நோட்டமிட்டு வந்திருக்கின்றேன். இந்தமுறை பாரிய சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடவில்லை அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் நமக்குக் கிடைத்திருக்கவும் இல்லை. போலியாக அச்சுறுத்தல்கள் இருப்பதாக உருவகப்படுத்தும்போது சிலவேளை உண்மையாகவே எதுவும் நடந்து விட்டாலும் கூட அதன் பாரதூரமும் அது பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு இந்தவகை போலிப்புனைவுகள் தடங்கல்களை ஏற்படுத்தி விடும் என்றார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுயேட்சைக் குழு வேட்பாளருமான தங்கேஸ்வரிக்கு ஒரு மிரட்டல் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்கேஸ்வரி அரசின் ஆலோசனைப்படி அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிறதடிக்கத் துணை நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மாத்திரம்தான் கபே யிடம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முறைப்பாடாகக் கிடைத்துள்ளது என்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறினார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தங்களது வேட்பாளர்களும் கூட எல்ரீரீஈ யின் கடிதத் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதங்களைப் பெற்றுள்ளார்கள். ஆனாலும் நாங்கள் இதை ஒரு பாரிய அச்சுறுத்தலாகக் கருதி இதுபற்றி எங்குமே முறையிடவில்லை என்றார். இது தேர்தல் காலங்களில் இடம்பெறும் வழமையான மிரட்டல்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்னையும் எனது கட்சியையும் மக்களிடமிருந்து ஓரங்கட்டவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கங்கணம் கட்டி நிற்கின்றனர். ஆயினும் நான் எனது கட்சிக்காரர்களுக்கு இந்தத் தேர்தலில் மிகுந்த கட்டிடுப்பாட்டைக் கடைப்பிடித்து மிகவும் முன்மாதிரியான ஜனநாயகப் பண்புகளைக் காண்பிக்குமாறு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். சுவரொட்டிகளைக்கூட மதில்களில் ஒட்டவேண்டாம் என்று பணித்துள்ளேன். அதே வேளை சில ஊடகங்கள் பக்கச் சார்பாக நடந்து கொண்டு வன்முறைகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக செயற்படுகின்றன.

எனது ஆட்சிக்காலத்தில் 120 பேர் கடத்தப்பட்டுள்ளதான செய்தி மற்றும் கிழக்கில் ஆயுதக் கலாசாரம் இன்னமும் இருக்கிறது என்பதான புனைவுக்கதைகதைகளை ஜேவிபி இனரும் ஏனையோரும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எங்களது மாகாணத்தில் எதுவித வன்முறைகளும் இடம்பெறாமல் தேர்தலை ஜனநாயகத்தின் வழியில் சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் முன்னாள் முதலமைச்சர் கபே தேர்தல் கண்காணிப்புக் குழுவினரிடம் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் கபே அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ. மனாஸ் அதன் மாவட்டக் கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே. யோகவேள் அதன் கொள்கை பரப்புச் செயலாளர் ஆசாத் மௌலானா மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய அணி "சரண்டர்!': இலங்கைக்கு முதல் வெற்றி!

Wednesday,July 25, 2012
இலங்கை::அம்பாந்தோட்டை: இரண்டாவது ஒருநாள் போட்டியில், பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. சொந்த மண்ணில் எழுச்சி பெற்ற இலங்கை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என, முன்னிலையில் இருந்தது. நேற்று இரு அணிகள் இடையிலான, இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இலங்கை அணியில் காயமடைந்த குலசேகராவுக்குப் பதில், இஸ்ரு உதனா அறிமுக வீரராக களமிறங்கினார்.

நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி மீண்டும் துவக்கம் தந்தது. உதனா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில், 2 பவுண்டரிகள் விளாசினார் சேவக். உதிரிகள் 5 உட்பட, இந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் கிடைத்தது. மலிங்காவின் முதல் ஓவரில், காம்பிர் தன்பங்கிற்கு 2 பவுண்டரி அடிக்க, இந்திய அணி 3 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்தது.

விக்., மடமட: இதன் பின் எல்லாம் அப்படியே தலை கீழானது. முதலில் சேவக் (15) அவுட்டாகி, சரிவைத் துவங்கி வைத்தார். இலங்கைக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்த விராத் கோஹ்லி, இம்முறை வந்த வேகத்தில், ஒரு ரன்னுடன் நடையை கட்டினார்.

ரோகித் சொதப்பல்: கடந்த போட்டியை போல, இம்முறையும் மாத்யூஸ் பந்தில் போல்டாகிய ரோகித் சர்மா (0), ரசிகர்களை வெறுப்பேற்றினார். பின் வந்த ரெய்னாவையும் (1) "போல்டாக்கி' அனுப்பி வைத்தார் பெரேரா. இந்திய அணி 41 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அஷ்வின் ஆறுதல்: "டக்' வாய்ப்பில் இருந்து தப்பிய தோனி, 11 ரன்னுக்கு திருப்தியடைந்து திரும்பினார். இர்பான் பதானும், தன்பங்கிற்கு 6 ரன்கள் மட்டும் எடுக்க, இந்திய அணி 100 ரன்களை கடப்பதே சிரமம் ஆனது. அடுத்து வந்த அஷ்வின், வழக்கம் போல பேட்டிங்கில் சற்று ஆறுதல் தந்தார். மலிங்கா, உதனா, ஹெராத் பந்துகளில் பவுண்டரிகள் அடித்த அஷ்வின் (21), தேவையில்லாமல் மூன்றாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு, விக்கெட்டை பறிகொடுத்தார்.

காம்பிர் அரைசதம்: ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதும், துவக்க வீரர் காம்பிர் ஒன்றும் இரண்டுமாக ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். ஜாகிர் கான் (2), பிரக்யான் ஓஜா (5) நிலைக்கவில்லை. மனம் தளராமல் போராடிய காம்பிர், தனது 32வது அரைசதம் கடந்தார். இவர், 65 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி 33.3 ஓவரில், 138 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் பெரேரா, மாத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

"சூப்பர்' துவக்கம்: போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு, சேவக் உதவியால் "சூப்பர்' துவக்கம் கிடைத்தது. கடந்த போட்டியில் தில்ஷன், "கேட்ச்சை' கோட்டைவிட்ட சேவக், இம்முறையும் பந்தை கை நழுவ விட்டார். சுதாரித்துக் கொண்ட தில்ஷன், உமேஷ் யாதவ் ஓவரில், அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். இவரது சகா தரங்கா, ஜாகிர் கான் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இவர்களை பிரிக்க தோனி எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடித்த தில்ஷன் (50), அஷ்வினிடம் சிக்கினார். மறுமுனையில், தன் பங்கிற்கு அரைசதம் அடித்த தரங்கா, வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 19.5 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தரங்கா (59), சண்டிமால் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், தற்போது 1-1 என, சமனில் உள்ளது.

இலங்கையில் இருந்து படகில் வந்தவர்கள் விடுதலை புலிகளா?

Wednesday,July 25, 2012
மண்டபம்::இலங்கையில் இருந்து படகில் வந்து, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கரை ஒதுங்கி தலைமறைவான மூன்று பேர், புலிகளா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மண்டபம் வேதாளை ஊராட்சி குறவன்தோப்பு கடற்கரையில், நேற்று முன்தினம் அதிகாலை, இலங்கை பிளாஸ்டிக் படகு கேட்பாரற்று நின்றது. அப்பகுதி மக்களின் தகவலையடுத்து, கியூ பிரிவு போலீசார் படகை சோதனையிட்டனர். இதில், அது, இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரியவந்தது.

படகில் இன்ஜின் இல்லாததால், அதை கடற்கரை மணலில் புதைத்து வைத்துள்ளனரா என போலீசார், அந்த பகுதி முழுவதும் சோதனையிட்டனர். ஆனால், இன்ஜின் கிடைக்கவில்லை.கியூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "படகு காற்றில் திசைமாறி வந்ததாக தெரியவில்லை. படகில் வந்தவர்கள் சாவகாசமாக நங்கூரமிட்டு, படகை நிறுத்தி உள்ளனர். இதில் இருந்து கழற்றிய இன்ஜினை எங்கோ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இப்பகுதியில் விசாரணை செய்ததில் சரியான தகவல் தெரியவில்லை. ஆனால், இலங்கையர் படகில் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார். படகில் மூன்று நபர்கள் வந்து இறங்கிச் சென்றதாக, கடலோரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். வந்தது இலங்கையர்களா? அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பதிலும் தெளிவு ஏற்படவில்லை. மேலும், இலங்கை படகில் வந்ததன் மூலம், இலங்கையர் என நம்ப வைப்பதற்காகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. வந்தவர்கள் சர்வசாதாரணமாக படகை நிறுத்திவிட்டுச் சென்றது, கடலோர பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தொய்வு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்பு!

Wednesday,July 25, 2012
புதுடில்லி::குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டு, நாட்டின், 13வது புதிய ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்கிறார். பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கும் கோலாகல பதவியேற்பு விழாவில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, நாட்டின், 13வது ஜனாதிபதியாக, இன்று பதவியேற்க உள்ளதால், டில்லியில், இதற்கான விழா ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. புதிய ஜனாதிபதியை வரவேற்று, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, டில்லி பார்லிமென்ட் வளாகத்தின் மைய மண்டபம், ஜோராக வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மைய மண்டபத்தில், இன்று காலை 11.30 மணியளவில், ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார்.

பலத்த பாதுகாப்பு: இதையொட்டி, பார்லிமென்ட் வளாகமும், அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும், நேற்றே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது குடியிருக்கும் தல்கோத்ரா சாலை இல்லத்தில் இருந்து, காலையில் கிளம்பி, பிரணாப் முகர்ஜி நேராக ஜனாதிபதி மாளிகை செல்வார். அங்கு, ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் பிரதிபா பாட்டீலுக்கு, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு, பிரணாப் முகர்ஜியை அழைத்துக் கொண்டு, பிரதிபா பாட்டீல் நேராக பார்லிமென்டிற்கு வருவார். குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், இருவரும் அமர்ந்து வருவர். அவர்கள் இருவரையும், பார்லிமென்டில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் மீராகுமார் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா ஆகியோர் வரவேற்று, பார்லிமென்ட் மைய மண்டபத்திற்கு அழைத்து வருவர்.

பதவி பிரமாணம்: இதன்பின், பதவி ஏற்பு விழா துவங்கும். பிரணாப் முகர்ஜிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான கபாடியா, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பிரணாப் பதவியேற்றதும், ராணுவ வீரர்கள், 21 குண்டுகள் முழங்க, வரவேற்பு அளிப்பர். ஜனாதிபதி, முப்படைகளின் தலைவர் என்பதால், தங்களது புதிய தலைவரை வரவேற்கும் வகையில், குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின், புதிய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்துவார்.

புத்தகங்கள்: கடந்த ஒரு வாரமாகவே, பார்லிமென்ட் நூலகத்தில் இருந்து, நிறைய புத்தகங்களை பிரணாப் வரவழைத்து படித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதிகளான ராஜேந்திர பிரசாத் மற்றும் ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகங்கள் நிறையவற்றை, பிரணாப் வாங்கிச் சென்றுள்ளதாக, பார்லிமென்ட் நூலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், புதிய ஜனாதிபதியான பிரணாப், இன்றைய உரையில், முன்னாள் ஜனாதிபதிகள் பற்றியும், அவர்களது பங்களிப்பையும், நிறைய குறிப்பிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மீண்டும் பிரதிபா பாட்டீலும், பிரணாப்பும், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், பார்லிமென்டிலிருந்து கிளம்பி, நேராக ஜனாதிபதி மாளிகைக்கு செல்வர். அங்கு, புதிய ஜனாதிபதியாக வந்திறங்கியுள்ள பிரணாப் முகர்ஜிக்கு, முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதை ஏற்றுக் கொண்டு, அதிகாரப்பூர்வமாக, தன் பதவியில் பிரணாப் அமர்வார். அந்த இடத்திலேயே, பிரதிபா பாட்டீலுக்கு, சிறியதாக, பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெறும்.

வெளியேறுவார்: இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டதும், மூத்த மத்திய அமைச்சர் யாராவது ஒருவர், பிரதிபா பாட்டீலை அழைத்துக் கொண்டு, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறுவார். பிரதிபா தங்குவதற்காக, டில்லி துக்ளக் சாலையில் தயார் செய்யப்பட்டிருக்கும் பங்களாவில், அவரை மத்திய அமைச்சர் அழைத்துக் கொண்டு போய், விட்டுச் செல்வார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், எம்.பி.,க்கள், பல்வேறு தூதரகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜனாதிபதி இல்லை: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வாகி, கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. அதனால், பிரதிபாவின் அலுவலகமும், நேற்று நள்ளிரவு, 12 மணியுடன் மூடப்பட்டு விடும். அவரின் அதிகாரங்களும், அத்துடன் நிறைவு பெற்று விடும். புதிய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியோ, இன்று காலை 11.30 மணிக்குத் தான் பொறுப்பை ஏற்கிறார். ஆக, இடைப்பட்ட 12 மணி நேரங்களுக்கு, ஜனாதிபதியாக யாருமே இல்லை என்றாகிறது. முப்படைகளின் தலைவர் என்ற, மிக முக்கிய பதவி காலியாக இருக்கப் போகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அரசியல் சட்ட காப்பாளராக, ஜனாதிபதியின் இடத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே இருந்து செயல்படுவார். ஏதேனும், இக்கட்டுகளோ நெருக்கடியோ, இந்த 12 மணி நேரத்தில் ஏற்பட்டால், அதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் கையாள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரது "லிஸ்ட்'டும் ரொம்ப நீளம்: இன்றைக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவியேற்பு விழாவில், மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, பாஸ் பிரச்னை. விழாவில் பங்கேற்பவர்களுக்காக, மிக குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளதால், அதற்கேற்ற வகையில், பாஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி பதவியில் இருந்து கீழிறங்கும் பிரதிபா பாட்டீல் மற்றும் ஜனாதிபதியாகப் போகும் பிரணாப் முகர்ஜி என, இருவரது குடும்பத்தினருக்கும், ஏகப்பட்ட பாஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களது குடும்ப உறுப்பினர்களது பட்டியல், பெரியதாக நீள்வதே, இதற்கு காரணம். துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரின் குடும்பத்தினரை தவிர, அமைச்சர்களோ அல்லது எம்.பி.,க்களோ, தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரணாப்பிற்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன? நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள பிரணாப் முகர்ஜிக்கு, மாதம் ஒன்றுக்கு, 1.5 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும். டில்லியில் உள்ள பிரமாண்டமான மாளிகையில் வசிக்கலாம். இந்த மாளிகையில், மிகப் பெரிய அறைகளும், பூங்காக்களும் உள்ளன. அவருக்கு உதவி செய்ய, மாளிகையில், 200 ஊழியர்கள் பணியாற்றுவர். அவர் ஓய்வெடுக்க, சிம்லா மற்றும் ஐதராபாத்தில் மாளிகைகள் உள்ளன. முப்படைக்கும் தளபதியான அவர், தனி விமானத்தில், எந்த நாட்டுக்கும் பறக்கலாம். வேண்டுமானால், குடும்பத்துடன் செல்லலாம். நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, பிரணாப் முகர்ஜி ராணுவத் துறையால் பதிவு செய்யப்பட்ட அம்பாசிடர் காரில் தான் பயணித்து வந்தார். இன்று முதல், அவர், மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணிக்கலாம். அதுதான், இனி அவரது அலுவலக கார். குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டது. அவர் பதவியில் இருக்கும்போது, இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கும் என்றால், அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவருக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக, 75 ஆயிரம் ரூபாயும், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பங்களா, அதில், இரு தரைவழி தொலைபேசி இணைப்புகள் இருக்கும். அத்துடன், மொபைல்போன் இணைப்பும் வழங்கப்படும். ஒரு கார், ஒரு தனிச் செயலர் உட்பட, ஐந்து ஊழியர்கள் அவருக்காக பணி அமர்த்தப்படுவர். அவர்களது மாதச் செலவுக்கென, 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இலவசமாக விமானத்திலும், ரயிலிலும் அவரின் மனைவியுடன், நாடு முழுவதும் செல்ல சலுகையும் வழங்கப்படும்.

பிரணாப் தொகுதியில் போட்டியிட மகன் அபிஜித் ஆசை: நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வாகியுள்ளதால், அவரின் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, அவரது மகனும், மேற்குவங்க சட்டசபை எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, இன்று பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேர்ந்ததால், அவர் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தன் தந்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, பிரணாப்பின் மகனும், பிர்பும் மாவட்ட நல்ஹாதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.பி.,யுமான, ஆதிர் சவுத்திரி கூறுகையில், ""ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதியில், பிரணாப் முகர்ஜி, நிறைய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். எனவே, அபிஜித் முகர்ஜி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது நிச்சயம்,'' என்றார்.

Tuesday, July 24, 2012

புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த சவூதி அல்-ராஜ் வங்கிக்கு UK யின் பிரபல சர்வதேச வங்கி நிதியுதவி!

Tuesday, July 24, 2012
புலிகளுடன் சமூக தொடர்புகளை கொண்டிருந்த சவூதி அரேபியாவின் அல்-ராஜ் வங்கிக்கு, பிரித்தானியாவில் உள்ள பிரபலமான சர்வதேச வங்கி ஒன்று, நிதியுதவி வழங்கியிருப்பதாக அமெரிக்கா செனட் சபையின் நிரந்திர உபக்குழு நடத்திய விசேட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கையின் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த பிரித்தானிய வங்கி, 2009 ஆம் ஆண்டு அல்-ராஜ் வங்கிக்கு நிதியுதவியை வழங்கியிருப்பதாக செனட் சபையின் உபக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்- ராஜ் வங்கி, புலிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

லண்டன் நகரை மையமாக கொண்டு இயங்கும் மேற்படி சர்வதேச வங்கி, எதனையும் தேடிபார்க்காமல், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் நிதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாகவும் செனட் உபக்குழு குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அந்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களில் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது-பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ!

Tuesday, July 24, 2012
இலங்கை::கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களில் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது எனவும், இலங்கையில் குற்றச் செயல்கள் வெகுவாக அதிகரித்து வருவதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸாரின் கணிப்பீட்டில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைவடைந்து செல்வது புலப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்துடன் இணைந்து, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குற்றம், ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக கருத்தரங்கு, நேற்று (ஜூலை-23) தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்களில் பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்‌ஷ விசேட உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக் கருத்தரங்கில் மேலும் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்,

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குற்றச் செயல்களை தடுக்கும் விடயத்திலேயோ, குற்றவாளிகளை கைது செய்யும் விடயத்திலேயோ அரசியல் அழுத்தங்களுக்கும், தலையீடுகளுக்கும் இடமளிக்கப்படுவதில்லை என திட்டவட்டமாக கூறியதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு பாரிய திட்டங்களை அரசாங்கமும் பொலிஸாரும் அமுல்படுத்தி வருகின்றனர்.

இதனை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஊடகங்கள், பொதுமக்கள், சமயத் தலைவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அந்த அடிப்படையில் மாகாண மட்டத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் அதிகாரம் வழங்கப்பட்ட ஆலோசனைக் குழுக்களை நியமித்து அதன் ஊடாக குற்றச் செயல்களை தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். அத்துடன் பொது மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் பொலிஸார் செல்வதை தவிர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் குற்றச் செயல்கள் பெருமளவில் இடம்பெற்று வருவதாக பல்வேறு ஊடகங்கள் அறிக்கைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸில் பதிவாகியுள்ள புள்ளி விபரங்களின் படி அது அடிப்படை அற்ற செய்திகளாக நான் கருதுகிறேன்.

2011ம் ஆண்டில் 54,521 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. எனினும் இந்த ஆண்டில் இதுவரை 30,328 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 1990ம் ஆண்டு 48,264 சம்பவங்களும் 2006ம் ஆண்டு 60,161 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 1993 ஆம் 1994 ஆம் ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்பட்டதுடன் 2009 ஆம் ஆண்டு அது 13.7 வீதமாக குறைந்துள்ளது.

அதேபோன்று 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை தற்பொழுது புள்ளி விபரத்தில் சேர்க்கப்படுகின்றன.

இந்த நிலையில் பொலிஸ் மா அதிபரினால் எனக்கு தரப்பட்ட 1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரையிலான புள்ளி விபரத்தை ஒப்பிட்டு பார்க்கையில் வெகுவாக குறைந்துள்ளதை காணமுடிகின்றது. அதேபோன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படையினரால் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று வெளிநாட்டு தூதுவர் ஒருவரும் கூறினார்.
அந்த தகவல்களின் அடிப்படையில் தகவல்களை திரட்டினேன். பொலிஸாரின் தகவல்களின் அடிப்படையில் அல்ல, நலன்புரி நிலையங்களின் தகவல்களின் அடிப்படையில் அது உண்மைக்கு புறம்பானது என்பது தெரியவந்துள்ளது.

வவுனியாவில் இவ்வாறான துஷ்பிரயோகச் சம்பவம் மூன்று பதிவாகியுள்ளன. அது இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களினால் அதுவும் சிங்கள கிராமத்திலாகும். ஆனால் ஆய்வுகளின்படி நான்கு விடயங்களின் அடிப்படையில் வடக்கு, கிழக்கில் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

1. உறவினர்கள், 2. அண்டை வீட்டார்கள், 3. தெரிந்தவர்கள் இவற்றில் அடங்குவர். ‘தந்தை, மாமா, சகோதரர், மைத்துனர், நண்பர்கள், வளர்ப்பு தந்தை ஆகியோரினாலேயே இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கணிப்பீட்டின் இறுதியான தகவல்களின் அடிப்படையில் பாதுகாவலர்கள் என்று பொறுப்பு சாட்டப்பட்டவர்களினாலேயே இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அடிப்படையற்ற நிலையில் ஊடகங்கள் பாதுகாப்பு படையினர் மீது சுமத்துகின்றன என்றார்.

குற்றச் செயல்கள் தொடர்பிலும், அதனை கட்டுப்படுத்தும் விடயத்திலும் அரசாங்கமும் பொலிஸாரும் பொறுப்பு கூற வேண்டும். ஆனால் அது எல்லா விடயத்திலும் முடியாத ஒரு விடயமாகும்.

கொலை, கொள்ளை, பாதாள உலகம், போதைப் பொருள் பாவனை போன்ற விடயங்களில் பொலிஸார் செயற்பட முடியும். துஷ்பிரயோகம் விடயத்தில் நூறு வீதம் பொலிஸாரினாலோ, பாதுகாப்பு படையினராலோ தடுக்க முடியாது. பெற்றோர்கள், சமய தலைவர்கள், கிராம தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டியதுடன், பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

எந்த ஒரு குற்றவாளிக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்காது. குற்றம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கிலிருந்து ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளன.

பலவந்த குடியேற்றம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக் கப்பெற்றன. அவைகளில் பெரும்பாலானவற்றுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. அதேபோன்று பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகளை முறியடிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சட்டத்திலுள்ள சில குறைபாடுகளினால் குற்றம் செய்யக்கூடியவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளை, குற்றச் செயல்களை செய்ய முற்படுகின்றனர்.

பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக பொலிஸாரிடம் சரணடைந்து நீதித்துறையிலுள்ள சலுகைகளை பயன்படுத்தி பிணை பெற்று வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து தமது பழைய நடவடிக்கைகளை வழிநடத்துகின்றனர்.

குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதாக கூறுகின்றவர்கள் 3 தசாப்தங்களாக நிலவிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே பஸ்ஸில் செல்வதற்கு அச்சம் கொள்வர் குண்டு வெடிப்பு காரணமாக. ஆனால் தற்போது இந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது-

குற்றச் செயல்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது என்று நான் கூற முற்படவில்லை. மாறாக செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பிடிவிறாந்து விடுக்கப்பட்டவர்களை ஏன் தேடி கைது செய்வதில்லை என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததில் அதிகமானவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த முடிந்தது. அதுபோன்ற நல்ல விடயங்களும் ஊடகச் செய்திகளின் ஊடாக இடம் பெறுகின்றன. எனவே குற்றச் செயல்களை தடுக்க அரசாங்கமும், பொலிஸாரும் பாரிய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர்.

பயங்கரவாதத்தை திட்டமிட்ட அடிப்படையில் முறியடித்தது போன்று குற்றச் செயல்களும் திட்டமிட்ட அடிப்படையில் முறியடிக்கப்படும் என்றார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடும் பட்சத்தில் அது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மக்களை குழப்பத்தில் ஆழ்த்தாமல் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அப்போது சிறந்த பெறுபேறுகளை காண முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இக் கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையத்தின் பொதுப் பணிப்பாளர் திரு.லக்‌ஷ்மன் ஹுலுகெல்ல, அரச தகவல் திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்தின அதுகல்ல, ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பல ஊடகவியலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரக் கடனுதவி!

Tuesday, July 24, 2012
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1,200 க்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்களுக்காக, அரச கடனுதவி வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 12,000 க்கும் அதிகமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் அவர்களைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் தவறான தொடர்புகள் என்பன வரவில்லை எனத் தெரிவித்தார்.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு, அவர்களை சமூகத்துடன் இணைத்தது மற்றுமின்றி, நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்வதற்கான வழியையும் வகுத்துக்கொடுத்துள்ளோம் எனவும், இவர்களுக்கான இக்கடனுதவியானது 4 வீத வட்டியுடன் 10 ஆண்டுகளில் மீளச் செலுத்தக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதல் ஆண்டில் அவர்கள் வட்டித்தொகையை மாத்திரம் செலுத்துதல் போதுமானதாகும் எனவும் தெரிவித்தார்.

இவர்களுக்கான இக்கடனுதவியானது எதிர்வரும் ஜூலை 30 அம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுயதொழில், சிறு கைத்தொழில் மற்றும் விவசாயத் திட்டங்களில் மூதலீடு செய்யவென 250,000 ரூபா உயர்ந்த பட்சக் கடன்தொகை இவர்களுக்காக வழங்கப்படவுள்ளது. இக்கடன்களை வழங்குவதற்காக இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி போன்றன முன்வந்துள்ளன.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தமிழக மீனவர்களை பற்றி கடுகளவும் கவலைப்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்!

Tuesday, July 24, 2012
கரூர்::கரூர் வருகை தந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியில் தண்ணீர் வர வில்லை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை இப்படி பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களின் அளவு சுருங்கி கொண்டு வருகிறது. விவசாய நிலங்கள் தற்போது வணிக தளங்களாகவும், வீடுகளாகவும், தொழில் கூடங்களாகவும் மாறி வருகின்றன.

இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயம் செய்ய நிலம் இருக்காது. விவசாயிகளும் இருக்க மாட்டார்கள். அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை தரவேண்டும். தண்ணீர் இல்லாததால் ஆறுகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை திட்டமிட்டு நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி மணல் அள்ளுவதில் தனி ஒரு அரசாங்கமே நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காவிரியில் மணல் எடுத்தால், காவிரியில் தண்ணீர் வந்தாலும், வந்த தண்ணீர் வயலுக்கு செல்வதற்கு ஆறு இல்லாமல் போய் விடும்.

எனவே காவிரி தாயை காப்பாற்றும் பொறுப்பு தமிழக முதல்வர் அம்மா கையில் இருக்கிறது. தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர். தற்போது 23 மீனவர்களை கைது செய்து உள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 3 முறை தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து வருகிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழக மீனவர்களை பற்றி கடுகளவும் கூட கவலைப்பட வில்லை. இதை பாரதீய ஜனதா கட்சி கண்டிக்கிறது. எனவே மீனவர்களை காப்பாற்ற பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக முதல்வர் குரல் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை ராணுவப்படைக்கோ, கடற்படைக்கோ, விமானப்படைக்கோ எந்த காரணம் கொண்டும் இந்தியாவில் பயிற்சி அளிக்ககூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, July 18, 2012

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்பாட்டத்தில் புலிக்கொடியுடன் வலம்!

Wednesday,July 18,2012
இலங்கை::நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நெல்லியடி பஸ் நிலையத்திற்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 இனந்தெரியாத நபர்கள் புலிக்கொடியை அசைத்தவண்ணம் நெல்லியடி பஸ் நிலையத்தை இரண்டு சுற்று சுற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழில் நடைபெற்ற எதிர்க்கட்சியினரின் கூட்டு மேதின நிகழ்விலும் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு இளைஞர் புலிக்கொடி அசைத்துவிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி!

Wednesday,July 18,2012
இலங்கை::புனர்வாழ்வு முகாங்கள் மற்றும் அரசாங்கப் பாதுகாப்பு தங்குமிடம் ஆகியவற்றில், எஞ்சியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தமது புனர்வாழ்வு நிகழ்ச்சியுடன் சிங்கள மொழி பயிற்சிகளையும் பெற்றுவருகின்றனர்.

நாட்டின் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுடனும் பழகுவதற்கான இயலுமையை ஏற்படுத்தல், தன் நம்பிக்கையை வளர்த்தல், சமூகத்துடன் ஒருமைப்பாடுடன் பழகுதல் போன்றவை இலகுவாக மேற்கொள்வதற்கு வழிதிறக்கும் வகையில் இப் பயிற்சியை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது என தேசிய மொழி பிரிவுக்கான பொதுப் பணிப்பாளர் பிரஷாத் ஹேரத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, வெலிக்கடை புனர்வாழ்வு நிலையம் மற்றும் அரசாங்க பாதுகாப்புத் தங்குமிடம் ஆகியவற்றிலுள்ள 90 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இப் பயிற்சி நெறி வழங்கப்படுவதாகவும், இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து தொழிற்திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இப்பயிற்சிகள் அமையும் எனவும் தெரிவித்தார்.

ஒருநாள் போட்டி தொடர் : இந்தியா , இலங்கை 21ந் தேதி மோதல்!

Wednesday,July 18,2012
சென்னை::5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20,20 கொண்ட தொடரில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டூரில் படுதோல்வி, அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து சிறிது கால ஓய்வுக்கு பின் புத்துணர்ச்சியுடன் வீரர்கள் உள்ளனர். சேவாக், ஜாகீர்கான் அணிக்கு திரும்பியிருப்பது வலுசேர்த்துள்ளது. இலங்கை சென்றடைந்த இந்திய வீரர்கள் இன்று பிற்பகலில் பயிற்சியை மேற்கொண்டனர். முதல் ஒருநாள் போட்டி வருகிற 21ந் தேதியும், 2வது ஆட்டம் 24ந் தேதியும் ஹம்பன்தோட்டாவில் நடக்கிறது. 3வது ஆட்டம் 28ந் தேதியும், 4வது ஆட்டம் 31ந் தேதியும் கொழும்பில் நடக்கிறது. கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4ந் தேதி பாலிகலே மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் பகல் , இரவாகவே நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டிகள் துவங்குகிறது. ஒருநாள் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 20,20 ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஆகஸ்ட் 7ந் தேதி பாலிகலே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம் : கோட்டையில் நாளை வாக்குப்பதிவு, பாதுகாப்பை பலப்படுத்த தீவிரம்!

Wednesday,July 18,2012
சென்னை::ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை கோட்டையில் நாளை நடக்கிறது. இதையொட்டி, கோட்டை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., அதிமுக ஆதரவுடன் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகின்றனர். எம்எல்ஏக்கள் ஓட்டு போட வசதியாக அந்தந்த மாநில தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலாளர் அறை அருகே உள்ள குழுக்கள் அறையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். டெல்லியில் இருந்து எடுத்து வரப்பட்ட ஓட்டு பெட்டி மற்றும் வாக்குச்சீட்டுகள் சீல் வைக்கப்பட்ட அறையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தேர்தலை பார்வையிட டெல்லியில் இருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர் நிதின் குலாட்டி, இன்று காலை சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தலைமைச் செயலகத்துக்கு வந்த பார்வையாளர், வாக்குப்பதிவு நடக்கும் இடத்தையும் ஓட்டுப் பெட்டி, வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறையையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அன்பு ஆகியோருடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை நடத்தினார். வாக்குப்பதிவையொட்டி தலைமைச் செயலக நுழைவாயில், வெளியேறும் வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்துவது, வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே அனுமதிப்பது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்எல்ஏக்கள் அடையாள அட்டை காட்டிய பிறகே ஓட்டு போட அனுமதிக்கப்படுவர். அங்கு சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் சென்னையில் ஓட்டு போடுகின்றனர். தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுடன் சங்மா ஆலோசனை :கோடநாட்டில் கடந்த 26 நாட்களாக ஓய்வெடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடவும் இன்று மதியம் சென்னை வருகிறார். பிற்பகல் 3 மணிக்கு போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பி.ஏ.சங்மா சந்தித்து பேசுகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும் எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவது குறித்து அவர்களுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்குகிறார். நாளை காலை 10 மணிக்கு கோட்டைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்கிறார். அங்கிருந்து போயஸ் தோட்டம் திரும்பும் அவர், பிற்பகலில் மீண்டும் தனி விமானம் மூலம் கோடநாடு புறப்பட்டு செல்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் 14 பேர் கைது!

Wednesday,July 18,2012
இலங்கை::கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்குடா மற்றும் திருகோணமலை ஆகிய கடல் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு, வெளிநாடு செல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 334 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து நேற்றைய தினம் 41 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத்தவிர கல்குடா பகுதியில் வைத்து கடந்த 13 ஆம் திகதி 109 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட 61 பேர் கடந்த வியாழக்கிழமை திருகோணமலை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 10, 2012

தடங்களுக்கு வருந்துகிறோம்........!!!


எமது செய்தி சேவை எதிர் வரும் 15.07.2012 இல் இருந்து புது பொலிவுடன் உங்களிடம் வந்து சேரும், பூந்த்தளிர் நிர்வாக குழு,மயிலாப்பூர்.thank you.

இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Tuesday, July 10, 2012
சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கடந்த 2 ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பிடிபட்ட 10 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று 9ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வந்து சேருவார்கள்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்துள்ள புதிய புதிய புள்ளிவிபரம் - 8400 புலிகளுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை!

Tuesday, July 10, 2012
இலங்கை::பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்துள்ள புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய புலிகளுக்கு எதிரான போரில், 3 ஆயிரத்து, 292 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 400 புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை.

தற்போது இலங்கை சென்றுள்ள வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், தூதரக பிரதிநிதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகள் கலந்துக்கொண்ட கருத்தரங்கில் உரையாற்றும் போதே கோத்தபாய இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

போர் நடைபெற்ற போது, விடுதலைப்புலிகள் அமைப்பில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர் எனக் கூறும் பாதுகாப்புச் செயலாளர், இவர்களில் 12 ஆயிரம் பேர் போரின் இறுதியில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர் எனவும் மேலும் 4 ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், 8 ஆயிரத்து 400 புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளியிடவில்லை என்பது அவரது உரையை மேற்கோள்காட்டி பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளம் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

அதிகளவான புலி உறுப்பினர்கள் உட்பட 7 ஆயிரத்து 896 பேர் யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தின் புள்ளிவிபர திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக கோத்தபாய ராஜபக்ஷ, ராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

அதேபோல் உயிரிழந்தவர்களில் குறைந்தது 3 ஆயிரத்து 296 பேர் பொதுமக்கள் என அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் 2 ஆயிரத்து 635 பேர் போரில் காணாமல் போனதாக ஆய்வில் தெரியவந்தது எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

போரில் 7 ஆயிரத்து 721 பேர் கொல்லப்பட்டு, மேலும் 18 ஆயிரத்து 479 பேருக்கு காயம் ஏற்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டுடன், புள்ளிவிபர திணைக்களத்தின் ஆய்வறிக்கையின் தரவுகள் பொருந்துவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஐக்கிய நாடுகள் அமைப்பு அந்த அறிக்கையை வெளியிடாதது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.

இதனை தவிர யுனிசெப் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரமான ஆய்வில் வெளியாகிய விபரங்களை பற்றி தெரிவித்த கோத்தபாய, காணாமல் போன 2 ஆயிரத்து 564 பேரை தேடி தருமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் அவர்களில் ஆயிரத்து 888 பேர் முதியவர்கள் எனவும் 676 பேர் சிறுவர்கள் எனவும் கூறியுள்ளார்.

காணாமல் போன சிறுவர்களில் 60 வீதமான சிறுவர்கள் புலிகளால் படையில் சேர்க்கப்பட்டவர்கள் என பெற்றோர் தெரிவித்திருந்தாகவும் இலங்கையின் சிரேஷ்ட ராஜதந்திரிகள் முன்னிலையில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்

Saturday, July 7, 2012

இலங்கை விமானப்படையினர் வெளியேற்றப்படவில்லை - வெளிவிவகார அமைச்சு!

Saturday, July 07, 2012
இலங்கை::சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டிருந்த இலங்கை விமானப் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இந்தியாவில் இலங்கை விமானப்படையினர் தமது பயிற்சிகளை தொடர்ந்தும் பெற்று வருவதாக அமைச்சு குறிப்பிடுகிறது.

சென்னையில் ஒரு கட்ட பயிற்சி நடவடிக்கைகள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி இலங்கை விமானப்படையினர் தற்போது பெங்களூர் நகரில் பயிற்சிகளை பெற்று வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சிகளை பெற்று வந்த இலங்கை விமானப்படையினர் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்கேற்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது!

Saturday, July 07, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்கேற்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்நோக்கில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத்திட்டத்தில் கூட்டமைப்பினர் இணைந்து கொள்வார்கள் என நம்புவதாக ஊடக அமைச்சர் கெஹலியரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பினர் எப்போதும் கலந்து கொள்ள முடியும், அதற்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்காலை ஒன்றையும் மாலையில் வேறு ஒன்றையும் தெரிவிக்கும் பழக்கத்தை உடையவர்கள் என அவர்குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்ஷிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பியகேள்விக்கு பதிலளித்த போது, கூட்டமைப்பினர் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டு வருவதாககெஹலிய குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், தேசிய இனப்பிரச்சினைக்குதீர்வு காணும் முனைப்புக்களில் கூட்டமைப்பினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகக்குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயமாகிறது : மினிமம் ரூ20 நிர்ணயிக்க திட்டம்!

Saturday, July 07, 2012
சென்னை::ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் கட்டாயமாகிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்பட பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், போக்குவரத்து தேவையும் அதிகமாகவே உள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆட்டோக்களுக்கு புதிதாக பர்மிட் வழங்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 10 ஆயிரம் ஷேர் ஆட்டோ, 54 ஆயிரம் ஆட்டோக்கள் என மொத்தம் 64 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இப்போது எந்த ஆட்டோவிலும் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. டிரைவர்கள் சொல்லும் கட்டணம்தான் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களிடம் கடந்த மாதம் போக்குவரத்து துறை ஆணையரகம் பேச்சுவார்த்தை நடத்தியது. முக்கியமான ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இதில் கலந்து கொண்டன. ஆட்டோக்களில் கட்டாயம் மீட்டர் பொருத்த வேண்டும். அதன்படிதான் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்தது.

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்கிறது. ஷேர் ஆட்டோக்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டால் குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும், கி.மீட்டருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கைகள் பற்றி அரசுக்கு தெரிவித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் சேஷசாயன் கூறியதாவது: தற்போது பெட்ரோல் விற்கும் விலையில் பழைய கட்டணத்தின்படி எங்களால் ஆட்டோ ஓட்ட முடியாது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.14ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல கி.மீட்டருக்கு ரூ.6 என்பதை மாற்றியமைத்து ரூ.10 என நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல் விலை உயரும்போது, ஆட்டோ கட்டணத்தை குறைந்த அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்களுகான கேஸ் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பாக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

21 நாட்களாக நீடித்த செங்கல்பட்டு அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்!

Saturday, July 07, 2012
செங்கல்பட்டு::செங்கல்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகள், கடந்த 21 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 32 பேரில் 22 பேர், தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தனர். தொடர் உண்ணாவிரதத்தால் மயங்கி விழுந்த 11 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள், உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர், முகாமுக்கு எதிரே போராட்டம் நடத்தினர். ஊர்வலம், மறியல் போராட்டமும் நடந்தது. இதில் 100 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த 4 பேரை க்யூ பிரிவு போலீசார் விடுதலை செய்தனர். மற்றவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர், மேற்கொண்டு சிகிச்சையை ஏற்க மறுத்துவிட்டனர். ஆர்டிஓ செல்லப்பா தலைமையில் இருகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் க்யூ பிரிவு எஸ்பி சம்பத்குமார், டிஎஸ்பி ராமசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் உத்தமன், ஆர்டிஓ செல்லப்பா, தாசில்தார் இளங்கோ ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அகதிகளை சந்தித்தனர். ‘அரசிடம் பேசி படிப்படியாக உங்களை விடுதலை செய்கிறோம்’ என உறுதி அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். 11 மணியளவில் ஆர்டிஓ செல்லப்பா ஜூஸ் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் முகாமில் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமரசத்தை ஏற்க மறுத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு 12 மணியளவில் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். 21 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போராட்டம் நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.

எந்தவொரு இலங்கை ராஜதந்திரியும் சந்திக்காத சவீடனின் வெளிவிவகார அமைச்சரை, புதிய இலங்கைத் தூதுவர் சந்திப்பு!

Saturday, July 07, 2012
கடந்த பல வருடங்களாக எந்தவொரு இலங்கை ராஜதந்திரியும் சந்திக்காத சவீடனின் வெளிவிவகார அமைச்சரை சுவீடனில் புதிய இலங்கைத் தூதுவர் ஒஸ்டீ அழகப்பெரும சந்தித்துள்ளார். புதிய தூதுவர் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நட்புறவு ரீதியல் நடைபெற்றன. சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கால் பில்டிட் இந்த உறவுகள் பலமடையுமென தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தில் இலங்கை அடைந்து வரும் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றம், இனங்களுக்கு இடையிலான நட்புறவு போன்றவை தொடர்பாக அரசு கவனம் செலுத்துவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேற்குலகம் அதற்கு பொறுமையாக ஆதரவளிக்க வேண்டுமெனவும் தூதுவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் 347,099 பேர் வாக்களிக்கத் தகுதி!

Saturday, July 07, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதியிலும் 3,47,099 பேர் வாக்களித் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் 100,616 வாக்காளர்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 162,451 வாக்காளர்களும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 84,032 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2011ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றுபட்டு செயற்பட மூன்று முஸ்லிம் கட்சிகள் இணக்கம்!

Saturday, July 07, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபை தேர்தலில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்று பட்டு செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.

நேற்று (வெள்ளிக்கிழமை 06.07.2012) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடை பெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்லின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கொழும்பு தாறுல் ஈமான் கட்டிடத்தில் முஸ்லிம் கட்சிகளை ஒன்றினைக்கும் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டம் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க றிஸ்வி முப்தி, அதன் செயலாளர் முபாறக் மதனி பொருளாளர் கலீல் மௌலவி கொழும்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் அஸிஸ் மிஸ்பாஹி ஆகிய உலமாக்கள் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அன் தவிசாளரும் பிரதி யமைச்சருமான பசீர் சேகுதாவூத், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொருளாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்லம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அதன் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், சட்டத்தரணி சஹீட் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இக் கூட்டத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சிகளும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஒன்று பட்டு செயற்படுவதுடன் சமூகத்தின் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு செயற்படுவதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை தேர்தல் காலமும் புனித றம்ழான் நோன்பு காலமும் ஒன்றாக வருவதனால் யாரையும் யாரும் வமர்சிக்காமல் நடந்து கொள்வது எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் மற்றும் தேசிய காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அதாவுல்லா ஆகியோர் கலந்து கொள்ளாவிடினும் இங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று நடாத்துவது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டை பிரிக்க முனைகின்றனர் -

Saturday, July 07, 2012
இலங்கை::வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் நாட்டை மீண்டும் பிரிப்பதற்கு முனைபவர்களே என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜேநாயக இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு தேர்தலை இவ்வாறு விரைவாக நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது ரணில் விக்ரமசிங்க வடக்கில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருகிறார்.

இவ்வாறு விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவது மூலம் மீண்டும் நாட்டில் பிரிவினை வாதத்தை தேற்றுவிப்பதாகும்.

வடக்கு மாகாண சபை தேர்தலின் ஊடாக மறைந்திருக்கும் பிரிவினைவாதிகளை ஒன்றிணைக்க முனைவார்களானால் அதனை ஒருபோதும் ஏற்க முடியாது.

இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. இந்த நிலையில் வீணே கையை சுட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜேநாயக இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை வீரர்களுக்கு நாட்டில் எப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது: ஜெ., திட்டவட்டம்!

Saturday, July 07, 2012
சென்னை::இலங்கை வீரர்களுக்கு, நாட்டில் எப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது,'' என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ""இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெற வேண்டும். அதுவரை, பிற நாடுகளுடன் இணைந்து, இலங்கை மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது, மவுனியாக உள்ளது மத்திய அரசு. ஆனால், தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் ஓன்பது விமானப் படை வீரர்களுக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஏற்கனவே கண்டனத்தை தெரிவித்து இருந்தேன். தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், இதுபோன்ற செயல்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தேன். தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளன. 'தமிழர்களுக்காகவே பாடுபடுகிறேன் எனக் கூறும் தலைவர், அந்த செய்தி உண்மையானால், அது கண்டிக்கத் தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவதே சரியாக இருக்கும்' என, பட்டும் படாமல் கூறியிருந்தார். எனினும், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தாம்பரத்திலிருந்த ஒன்பது இலங்கை வீரர்களை, பெங்களூருவில் உள்ள, எலகங்கா விமான படைத் தளத்தில், பயிற்சி அளிக்க, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம், தமிழர்களுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஐ.நா., சபை மூலம், "போர்க் குற்றவாளிகள்' என அறிவித்து, இலங்கை அரசு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் விருப்பம். இந்நிலையில், சென்னையில், இலங்கை வீரர்களுக்கு, பயிற்சி அளிப்பதை தவிர்த்து, பெங்களூருவில் பயிற்சி அளிப்பதை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். இலங்கை வீரர்கள் எவருக்கும், இந்திய மண்ணில், பயிற்சி அளிக்கக் கூடாது. அவர்களை, உடனடியாக நாட்டை விட்டு திருப்பி அனுப்ப வேண்டும் என, மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை ரூ.9.81 கோடியில் திட்டம் தொடக்கம்!

Saturday, July 07, 2012
சென்னை::சென்னை துறைமுகத்தில் ரூ.9.81 கோடியில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘கப்பல் போக்குவரத்து மேலாண்மை திட்டம்’ தொடக்க விழா இன்று காலை துறைமுகத்தில் நடந்தது. இந்த திட்டத்தை மத்திய போக்குவரத்து கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.

அப்போது, ஜி.கே.வாசன் பேசுகையில், ‘இந்த புதிய திட்டத்தின் மூலம் சென்னை துறைமுகத்துக்கு வரும் அனைத்து கப்பல்களையும், எல்லையிலேயே கண்காணிக்க முடியும். இதில் தானியங்கி கண்காணிப்பு கேமரா, ரேடார் மற்றும் கப்பல்களுடன் தகவல் பரிமாறும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு, கப்பல்கள் நிறுத்த இடங்கள் ஒதுக்குவது மற்றும் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான தகவல்களையும் எளிதில் பெறலாம்’’ என்றார்.

அதன்பின், ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சிங்களருக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும், இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தாம்பரம் விமான படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது வருத்தத்துக்கு உரியது. இது ஏற்புடையது அல்ல. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் டெல்லியில் அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேது சமுத்திர திட்டம் தமிழர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சிக்கும் முக்கியமான திட்டம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு 4ஏ என்ற மாற்று பாதையை ஆராய குழு நியமித்துள்ளது. குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு வாசன் கூறினார்.

சென்னை துறைமுக தலைவர் அதுல்ய மிஸ்ரா, கப்பல் துறை தலைவர் கேப்டன் சின்ஹா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை வீரர்கள் வெளியேற்றம்பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

Saturday, July 07, 2012
சென்னை::சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்தில் பயிற்சிக்கு வந்துள்ள, இலங்கை வீரர்கள் ஒன்பது பேரை, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என, தமிழக கட்சிகள் ஒரு சேர குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.பயிற்சி:இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள், பயிற்சிக்காக சென்னை தாம்பரம் விமானத் தளத்துக்கு கடந்த வாரம் வந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள ராணுவ உடன்படிக்கையின் அடிப்படையில், இவர்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அவர்களை இரண்டாம் தர மக்களாக, இலங்கை அரசு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு வீரர்களுக்கு, ராணுவப் பயிற்சி அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மற்றும் தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, தமிழக காங்கிரஸ் உள்ளிட்டோர், இலங்கை வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், தாம்பரம் விமானப் படைத் தளம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு:தமிழகத்திலிருந்து எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பும் முடிவை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலின் பேரில், தாம்பரம் விமானப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை வீரர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வாறு, பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே இலங்கை வீரர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டனர் என, செய்தி வெளியாகியுள்ளது.

வவுனியா சம்பவத்தால் முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லை:தமிழ் கைதிகள் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றங்கள்!

Saturday, July 07, 2012
இலங்கை::தமிழ் கைதி களுக்கு எதிரான வழக்கு விசார ணைகளை துரித மாக முன்னெ டுப்பதற்காக மூன்று விசேட நீதிமன்றங்களை அமைக்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள தோடு இந்த மாதத்தில் இவர்களுக் கெதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிரி கஜதீர கூறினார். புனர்வாழ்வு பெற விருப்பமானவர்களு க்கு புனர்வாழ்வு வழங்கவும் ஏனை யவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியா சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, புலிச் சந்தேக நபர்கள் 3 சிறைச்சாலை அதிகாரிகளை பணயக் கைதிகளாக தடுத்து வைத்ததால் தான் வவுனியா சிறையில் குழப்பம் ஏற்பட் டது.

நீதிமன்ற உத்தரவின்படி வேறு சிறைக்கு இடமாற்றப்படவிருந்த புலி சந்தேக நபர்கள் சிலரை மீளவும் வவுனியா சிறைக்கு அழைத்து வருமாறு கோரியே புலிகள் குழப்பம் ஏற்படுத் தினர். சிறை அதிகாரிகளினால் புலி சந் தேக நபர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. இந்த நிலையிலே விசேட அதிரடிப்படையின் ஒத்துழைப்புடன் சிறை அதிகாரிகள் மீட்கப்பட்டனர். துப்பாக்கியோ ரவையோ பயன்படுத்தாமலே இவர்கள் மீட்கப்பட்டனர். பல்வேறு ஆயுதங்கள், வெளிநாடுகளுக்கு பேசும் தொலைபேசிகள் உடனே புலி சந்தேக நபர்கள் இருந்ததன் மூலம் இந்த நடவடிக்கையின் பயங்கரம் தெளிவாகிறது.

எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. ஒரு கைதி இறந்துள்ளதால் இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் நீதவானின் தீர்ப்பு இதுவரை வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகிறது. எனவே இந்த மரணம் குறித்து முன்கூட்டி எந்த வித முடிவுக்கும் வர முடியாது. இவர் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் உண்மை வெளியாகும். இறந்தவரின் சடலத்தை உறவினர்கள் கோரியுள்ளதாக கூறப்பட்டபோதும் சடலத்தை ஏற்க யாராவது முன்வரவேண்டும். எனக்குத் தெரிந்தளவில் இதுவரை யாரும் சடலத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சு மட்டத்திலும் குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தகவல் திரட்டப்படுகிறது. எந்த கைதிக்கும் எதுவித அநியாயமும் ஏற்படுத்தாதிருக்க எமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா சம்பவத்தின் மூலம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாது. தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் வழக்குகளை விசாரணை செய்வதற்கு மூன்று விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

புனர்வாழ்வு பெற விரும்பும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் ஏனையவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இரா சம்பந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் உரையாற்றுகையில் கூறியதாவது;

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு பல கைதிகள் காயமடைந்தனர். இறந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை. இவரின் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஒரு மாத காலத்தினுள் தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணை அல்லது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது.

இந்த நிலையிலே வவுனியா சம்பவம் நடந்துள்ளது. எனவே மேலும் பலரை கொல்லாது. தமிழ் கைதிகளை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோருகிறேன்.

இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 180 ஏக்கர் காணி பொதுமக்கள் வசம்!

Saturday, July 07, 2012
இலங்கை::யுத்தம் இடம்பெற்றபோது வவுனியாவில் தற்காலிகமாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அங்கு வீடமைப்பு பணிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த சுமார் 180 ஏக்கர் காணி தற்போது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாண்டிக்குளம், ஓமந்தை உள்ளிட் சில பகுதிகளில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் தற்போது வீடுகள் அமைக்கப்பட்டு வருவதுடன் சிறு கைத்தொழில்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமது சொந்தக் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Friday, July 6, 2012

இலங்கை தமிழர் பிரச்னை: கருணாநிதிக்கு பிரதமர் மன்மோன்சிங் பதில் கடிதம்!

Friday, July 06, 2012
சென்னை::இலங்கை தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண, தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அவசியம் குறித்து, இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன்' என, பிரதமர் மன்மோன்சிங், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு, மன்மோகன்சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகா பேச்சு தொடர்பாக, கடந்த மாதம் 20ம்தேதியிட்ட தங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது. கடந்த மாதம் 21ம்தேதி ரியோடி ஜெனிரோ மாநாட்டில், இலங்கை அதிபரை சந்தித்தேன். அப்போது இந்தப் பிரச்னை தொடர்பாகவும், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதற்காக இலங்கை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசினேன். தமிழர் பிரச்னைக்கு இலங்கைக்கு உள்ளேயே தகுந்த அரசியல் தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் குறித்து, இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன். அதுதான் இலங்கை தமிழர்கள் கவுரமான வாழ்க்கை வாழவும், சொந்த வீட்டில் வசிப்பது போன்ற உணர்வைப் பெறவும், போதுமான நடவடிக்கையாக அமையும் என்று இலங்கை அதிபரிடம் தெரிவித்தேன். இவ்வாறு மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

ஆறு மாதங்களில் 700 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு!

Friday, July 06, 2012
இலங்கை::கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் கணிசமானளவு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் சுமார் 700 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இது கடந்த வருடத்தின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் இது ஐந்து வீத அதிகரிப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தவிர பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 975 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இளம்வயது பெண்களே அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறிப்பாக பெற்றோரும் பாதுகாவலர்களும் அதிக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

Thursday, July 5, 2012

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அலட்சியம் : கடல் மட்டம் ஒரு அடி உயரும், 88 ஆண்டுகளில் நாடு, தீவுகள் காலி

Thursday, July 05, 2012
லண்டன்::சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தாவிட்டால் கடல் மட்டம் 2100,ம் ஆண்டில் ஒரு அடி அதிகரிக்கும். 2300,ம் ஆண்டில் சுமார் 5 அடி அதிகரிக்கும் என்று பீதி கிளப்புகின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். புவி வெப்பம் உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது: இயற்கை மற்றும் மனித இடர்பாடுகளால் பருவநிலையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பருவநிலை மாறுபாடுகள், தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பம், இதனால் பனிப்பாறை மற்றும் பனிப்படலங்கள் வேகமாக உருகுதல், கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகம் வெளியாவது, ஓசோன் படலத்தில் ஓட்டை உருவாவது போன்றவற்றால் மனித இனம் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள் உள்பட சகல ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக 1980,ம் ஆண்டில் இருந்ததைவிட புவி வெப்பம் 2010,ல் 0.17 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பனிப்பாறைகள், பனித்தீவுகள் உருகுவதால் 2005,ம் ஆண்டில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 2.3 மில்லிமீட்டர் என்ற அளவில் கடல் மட்டம் உயர்வதாகவும் தெரிகிறது. தொடர்ந்து கடல் மட்டம் உயரும் பட்சத்தில் கரீபியன் தீவுகள், மாலத்தீவு, ஆசிய பசிபிக் தீவுக்கூட்டங்கள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கிப் போகும் அபாயம் இருக்கிறது. பூமியில் மட்டுமின்றி ஆழ்கடல் பகுதியிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்தே காணப்படுகிறது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வரும் 2020,ம் ஆண்டுக்குள் சுமார் 180 நாடுகளில் பருவநிலைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க 100 சதவீத நடவடிக்கை எடுத்து 2100,ம் ஆண்டில் புவி வெப்பத்தை 0.83 டிகிரியாக குறைத்தாலும்கூட, கடல் மட்டம் 14.2 செ.மீ. (ஏறக்குறைய அரை அடி) அளவுக்கும், 2300,ம் ஆண்டில் 24.2 செ.மீ. அளவுக்கும் உயரும்.
மாறாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏனோதானோவென்ற நடவடிக்கை எடுத்தால், 2100,ல் புவி வெப்பநிலை 3.91 டிகிரியாக இருக்கும். இதனால், கடல் மட்டம் 32.3 செ.மீ. (ஒரு அடிக்கு மேல்) உயரும். 2300,ல் கடல் மட்டம் 139.3 செ.மீ. (4.6 அடி) அதிகரிக்கும். பல தொலைவுக்கு ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும்.

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி: ஜெயலலிதா எதிர்ப்பு!

Thursday, July 05, 2012
சென்னை::இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-

இலங்கை இனக் கலவரத்தில் இடம் பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டின் ஒன்பது விமானப் படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத கால தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான, தமிழ் இனத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர்களுக்கு சமமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, வாய் மூடி மௌனியாக உள்ள மத்திய அரசு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

இலங்கை இனப் போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டைச் சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கு, இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு இலங்கை விமானப் படை வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்...

நாடு திரும்பவுள்ள இலங்கை மீனவர்கள்!

Thursday, July 05, 2012
இலங்கை::இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் பத்துப் பேர் இரண்டு படகுகளுடன் நாடு திரும்பவுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து இந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடலுக்குச் சென்றிருந்தனர்.

கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மீனவர்கள் பத்துப் பேரும் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை இன்றும் 11 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகளும் அந்த நாட்டின் பொறுப்பில் உள்ளதாக கடற்தொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.

உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் பிரேத பரிசோதனை இன்று!

Thursday, July 05, 2012
இலங்கை::ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் சிறைக்கைதியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதியொருவர் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

கருணாகரன் நிர்மலரூபன் என்ற 22 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கடந்த மாதம் 29ஆம் திகதி மகர சிறைச்சாலைக்கு இந்த கைதி மாற்றப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து ராகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதிசெய்ய முடியுமென அவர் மேலும் கூறினார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சி - சிவஞானம்!

Thursday, July 05, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தேசிய இணக்கத்திற்கான கிழக்கு மக்கள் அமைப்பின் பிரச்சாரச் செயலாளரும், முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினருமான முருகேசு சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இன சமூகங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்த சம்பந்தன் முனைப்புகாட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை சம்பந்தன் அடிக்கடி மாற்றிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், சம்பந்தனின் கருத்துக்களை கிழக்கு மக்கள் நம்ப மாட்டார்கள்என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாட்டிலைட் போன்' பறிமுதல்: இலங்கை வாலிபர்கள் கைது!

Thursday, July 05, 2012
சென்னை::சாட்டிலைட் போன்' வைத்திருந்த இலங்கை வாலிபர்களை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை புழலில் இலங்கை அகதிகள் முகாமில் மோகன், சுரேஷ் ஆகியோர் தங்கியுள்ளனர். இவர்கள், சக அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு, கள்ள தோணியில் அனுப்புவதாகக் கூறி, ஆறு லட்ச ரூபாய் வசூலித்தனர். பணத்தை வசூலித்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பாமல் ஏமாற்றினர். இதுகுறித்து, பணத்தை இழந்தவர்கள், கியூ பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புழல் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். அதில், இலங்கை அகதிகள் சுரேஷ், மோகன் ஆகியோரிடம் இருந்த, "சாட்டிலைட் போனை' பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் உள்ள அவர்களது கூட்டாளிகளிடம் இருந்து கள்ள தோணியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, இலங்கை வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.