Monday, June 30, 2014

ஜ.நாவினால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையினை கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்கிறதாம்: (முன்னாள் கொலையாளி புலி பினாமி பிறாடு) சுரேஷ் பிரேமச்சந்திரன்


Monday, June 30, 2014
ஜ.நாவினால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையினை (புலி)கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்பதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். சர்வதேச விசாரணையை மறுப்பதால் நாடும், அரசும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளவேண்டிவரும். அதனை புரிந்துகொண்டு அரசு நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார. (புலி) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இலங்கை சிறையில் உள்ள 28 மீனவர்களை மீட்க பிரதமருக்கு கோரிக்கை ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

Monday, June 30, 2014
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களையும், அவர்களது 41 படகுகளை யும் மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 19ம் தேதி, நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் பேரில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இலங்கை கடற்படையினரால் கடந்த 18ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 46 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்கள் மற்றும் அவர்களது 1 படகும் விடுவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கடந்த 23ம் தேதி இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 11 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளும், வலைகள் உள்பட மீன்பிடி சாதனங்களும் இன்னும் மீனவர்களிடம் ஒப்படைக்கப்
படவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை கடற்படையினர் மீண்டும் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்களையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்கள் இலங்கையில் உள்ள தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்தி வரும் இது போன்ற தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடிப்பு சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாக ஆக்கி விடுகிறது.நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம் காரணமாகவே தமிழக மீனவர்கள் பாக்ஜல சந்தியில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பாக் ஜல சந்தியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை தமிழக மீனவர்களுக்கு மீட்டு தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 மீனவர்கள் மற்றும் அவர் களது 38 படகுகள் உள்பட 28 தமிழக மீனவர்களையும், அவர்களது 41 படகுகளையும் மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது நடத்தப்படவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்வது சாத்தியமில்லை: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

Monday, June 30, 2014
இலங்கை::இலங்கை மீது நடத்தப்படவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்வது சாத்தியமில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ள வல்லுநர் குழுவை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த விசாரணைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பங்களிப்பு வழங்குமா என்று மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவாவிடம் சர்வதேச ஊடகமொன்று கேட்டபோதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

'எங்களால் நேரடி பங்களிப்பைச் செய்யக்கூடிய நிலைமை இல்லை. நாங்கள் தேசிய மட்டத்தில் தான் பணியாற்ற முடியும். எனவே எங்களின் நேரடி பங்களிப்பு இந்த விடயத்தில் இருக்கும் என்று தெரியவில்லை' என தெரிவித்தார்.

'20 பேர் ஐ.நா குழுவுக்கு சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 

ஐ.நா சபையால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் இலங்கைக்கு வெளியில் இருந்துகொண்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் இலங்கையிலுள்ள மக்களிடம் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என கேட்கப்பட்டிருந்தது.

'20 பேர் அல்லது 20 அமைப்புகள் சாட்சியமளிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்ததை நாங்கள் அவதானித்துள்ளோம். தேசிய மட்டத்தில் இவர்களிடமிருந்து தகவல்களை பெறுவது எந்தளவுக்கு சாத்தியப்படும். முறையான விசாரணை ஒன்று நடக்குமானால், இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகத் தான் பணியாற்ற முடியும்' என்றார்.

ஐ.நா விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளது. அந்த விசாரணைகளுக்கு தகவல் அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தென்னிலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்குமான பரிந்துரைகளை இந்த விசாரணைகளின் முடிவில் தாம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தொடர்பில் ஆளும் கட்சியினர் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

Monday, June 30, 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தொடர்பில் ஆளும் கட்சியினர் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்த உள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

பேருவளை பென்தொட்டவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று மதியம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடு எதிர்நோக்கி வரும் பல முக்கியமான தேசிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் விசாரணைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியே இன்றைய சந்திப்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சந்திப்பில் பங்கேற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இரவுப் பொழுதை ஹோட்டலிலேயே கழிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், தேசிய ரீதியான தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு தியதலாவையில் இவ்வாறான ஓர் சந்திப்பினை ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 29, 2014

இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பாக்.தீவிரவாதிகளை கட்டுப்படுத்த இலங்கை தீவிர கண்காணிப்பு!

Sunday, June 29, 2014
இலங்கை::இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த இலங்கை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நின்றிருந்த அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது என்று விசாரணையில் தெரியவந்தது.
 
மேலும் அவர்கள் இலங்கை மற்றும் மாலத்தீவு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்றும் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலில் தொடர் புடைய மலேசியாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஷாகீர் உசைன் இதேபோல் இந்தியாவுக்கு 20 முறை வந்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அவனிடம் நடைபெற்ற விசாரணையில், பெங்களூர் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள், சென்னையில் உள்ள விமானநிலையம் மற்றும் அணுஉலை நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் நடத்திய சதி திட்டமும் வாக்குமூலத்தின் மூலம் அம்பலமானது.
 
இதற்காக மாலத்தீவு மற்றும் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே இந்தியாவில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை படம் பிடித்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அனுப்பிய தீவிரவாதியும் பிடிப்பட்டான். இதனால் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் பாகிஸ்தானியர்களை கண்காணிக்க இந்தியா, இலங் கைக்கு கோரிக்கை விடுத்தது.
 
மேலும் தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இலங்கைக்கு வரும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை இலங்கை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை இலங்கை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

புலி பினாமி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணிக்காலம் இன்னும் எட்டு வாரங்களில் நிறைவு!

Sunday, June 29, 2014
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் (புலி  பினாமி) நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது.
 
டந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பணியாற்றிய, நவநீதம்பிள்ளையின் பணிக்காலம் இன்னும் எட்டு வாரங்களில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் நேற்றுடன் நிறைவடைந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில் அவருக்குப் பிரிவுபசாரம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா  பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் மைக்கேல் முல்லர் வாசித்தார். நவநீதம்பிள்ளை ஒரு அசாதாரணமான மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றியுள்ளதாகவும் நம்பகத்துடனும் (புலிகளுக்கு ஆதரவாகவும்) உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர் பாடுபட்டவர் என்றும் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து நவநீதம்பிள்ளையின் பணியைப் பாராட்டியும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தியும் பல்வேறு நாடுகளின் ப - ரதிநிதிகள் உரையாற்றினர். மேலும் இறுதியில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளுக்கும் பிரதிநிதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை தன் மீது அன்பு பாராட்டியதற்கும் நன்றி தெரிவித்தார்.

சென்னை அருகே அடுக்குமாடி கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 12 ஆனது!

Sunday, June 29, 2014
சென்னை::சென்னை போரூர் அருகே 11 மாடி அடுக்குமாடி கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 80 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்த போரூர் குன்றத்தூர் சாலையில் மவுலிவாக்கம் பகுதியில் பாய் கடை பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் மதுரையை சேர்ந்த மனோகரன்(46) என்பவர் ‘டிரஸ்ட் ஹைட்ஸ்’ என்ற பெயரில் 11 மாடிகள் கொண்ட இரு அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருகிறார். இந்த 2 அடுக்குமாடி கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வருகிறது. கட்டிட பணியில் மதுரை மற்றும் ஆந்திரா, பீகார் மாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள், தங்குவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்படாததால், அதே கட்டிடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர். சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று மாலையில் திடீரென்று பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்தது.

சூறைக்காற்றும் வீசியது. போரூர் பகுதியில், பலத்த இடி சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் அப்பகுதியில் பெரிய நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம், தரைத்தளத்தில் கார் பார்க்கிங்குடன் சீட்டு கட்டுகள் போல இரண்டாக பிளந்து, சரிந்து விழுந்தது. இதில், 4 தளங்கள் பூமிக்குள் புதைந்து விட்டது. மழை பெய்தபோது, இடிந்து விழுந்த கட்டிடம் மற்றும் வேறொரு கட்டிடத்தில் வேலைபார்த்த 80 பேர் கீழே இறங்கி, கார் பார்க்கிங்கில் மழைக்கு ஒதுங்கினர். 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில்  அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த ஒருவரால் கூட இடிபாடுகளில் இருந்து வெளியே தப்பி வர முடியவில்லை. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் அபாய குரல் மற்றும் கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். காவல்துறை, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், 12 ஆம்புலன்ஸ், மெட்ரோ, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள், நர்சுகள் சம்பவ இடத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்தனர்.

அப்பகுதி பொதுமக்கள் என மொத்தம் 1000 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். இதில், மதுரையை சேர்ந்த மருதுபாண்டியன் (32) மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்ற 8 பேரும் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல  பிரபல கட்டுமான நிறுவனமான எல்.-.டி.யை சேர்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் 60 ஊழியர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை கமாண்டோ படை டி.எஸ்.பி இளங்கோ மற்றும் ஸ்டீபன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு குழுவினர் மோப்ப நாய் மற்றும் சிறப்பு நவீன கருவிகளுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரம் என்பதாலும், பலத்த மழை பெய்ததாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், மீட்பு பணியை துரிதப்படுத்த சரியான திட்டமிடுதல் இல்லாததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி மருதுபாண்டி, சுசீலா, சங்கர், சத்தியலெட்சுமி, பாண்டி உள்ளிட்ட 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கருதப்படும் 40க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை.  கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய, மாநில பொறியாளர்கள் கூறுகையில், “இந்த அடுக்குமாடி கட்டிட விபத்தில் 4 மாடிகளுக்குமே பூமிக்குள் புதைந்து காணப்படுகிறது. மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் மீட்பு பணி நடைபெற்றால் தான் இடிபாடுகளை அகற்றமுடியும். எனவே, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதுÕÕ என்றனர். அமைச்சர்கள் சின்னையா மற்றும் உதயகுமார் நேற்று முதல் விபத்து நடந்த இடத்தில் தங்கியிருந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். எனினும், அவர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசுவதை தவிர்ப்பதுடன், மீட்பு பணிகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மாநில நிவாரண ஆணை யாளர் ஸ்ரீதரன் கூறுகையில், கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டிருந்தால் அரசு விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் குறித்து அரசுடன் பேசி முடிவு செய்யப்படும்Õ என்றார்.

Saturday, June 28, 2014

இலங்கை தமிழர்கள் வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்தோம் போலி பாஸ்போர்ட் கும்பல் பரபரப்பு வாக்குமூலம்!

Saturday, June 28, 2014
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாததால் அவர்களில் பலர் வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு  உதவ நாங்கள் போலி விசா, பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கிறோம் என்று போலி பாஸ்போர்ட் கும்பல் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளது.போலி விசா,  பாஸ்போர்ட் தயாரித்து பலரை தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்பியதாக சென்னை ஆலப்பாக்கம் ராஜன் (42), புரசைவாக்கம் முகமது அபுபக்கர் சித்திக்,  மூர்த்தி, ஆலப்பாக்கம் சிவரங்கன் (55), திருவான்மியூர் தேவ சகாயம் பேட்ரிக் ஸ்ரீதர் (48), மதுரவாயல் ஜெயராஜ சேகரன் என்ற ஜூலி (29) ஆகிய 6 பேரை கடந்த சில  தினங்களுக்கு முன்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
 
இதில், முகமது அபுபக்கர் சித்திக் தவிர மற்ற 5 பேரும் இலங்கை தமிழர்கள். மூர்த்தி  மூளையாக செயல்பட்டுள்ளார். இவர்கள் போலி விசா மற்றும் பாஸ்போர்ட் தயாரித்து சுமார் 400 பேரை கனடா, ஆஸ்திரேலியா உள்பட 53 நாடுகளுக்கு அனுப்பி  வைத்ததை ஒப்புக்கொண்டனர். ஒரு போலி பாஸ்போர்ட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரையும், விசாவுக்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரையும் வசூல் செய்துள்ளனர்.மோசடி கும்பல் பெரும்பாலும் இலங்கை தமிழர்களுக்கே போலி விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளனர். இப்படி போலி விசா மற்றும்  பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர்களின் பட்டியலை தயார் செய்யவும், இதற்கு உடந்தையாக இருந்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளை அடையாளம்  காணவும் போலீசார் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து மோசடிக்கு உடந்தையாக உள்ளவர்களை அடையாளம் காணுவதற்காக, சிறையில் உள்ள 6 பேரையும் போலீசார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.  அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், “இலங்கை தமிழர்களுக்கே அதிகமான போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை தயார் செய்து கனடா, ஆஸ்திரேலியா உள்பட  53 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு போதிய சலுகைகள் இல்லை என்ற காரணத்தால் தமிழகத்தில் அவர்கள் அகதிகளாக  வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். சென்னையை பொருத்தவரை 25  ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் இந்தியாவில் சொந்தமாக நிலம் கூட வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தாலும்  குடியுரிமை கிடைக்காது.
 
ஆனால், ஆஸ்திரேலியா, லண்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முறையான ஆவணம் இல்லாமல் சென்றால் கூட அவர்கள்  எங்களை முதல் இரண்டாண்டுகள் அகதிகள் என்று கூறி கைது செய்து முகாம்களில் அடைக்கின்றனர். பின்னர், விடுதலை செய்து எங்களுக்கு குடியுரிமை  வழங்குகின்றனர். இதனால், தமிழகத்தில் வாழ விருப்பம் இல்லாமல் அது போன்ற நாடுகளுக்கு செல்ல பல இலங்கை தமிழர்கள் விரும்புகின்றனர். சிலர் கள்ள படகு  மூலம் கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்கின்றனர். இதற்கான பயண நாட்கள் 22. உயிரை கையில் பிடித்து பயணம் செய்து சிலர் தப்பி செல்கின்றனர். அதில்,  செல்ல மனம் இல்லாதவர்களுக்கு நாங்கள் போலி விசா, பாஸ்போட் தயாரித்து கொடுக்கிறோம் இதில், என்ன தவறு“ என்று ஆவேசமாக கூறியதாக போலீசார்  தெரிவித்தனர்.

கனடாவில் தஞ்சம் கேட்கும் 54 நாட்டு தூதர் குடும்பங்கள்!

Saturday, June 28, 2014
ஒட்டவா::கனடா அரசிடம் தஞ்சம் கேட்டு 54 நாடுகளின் தூதர் கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரான்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மதம், இனம், நாடு பிடிக்கும் ஆசை போன்ற பல்வேறு காரணங்களால் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகளிலும் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையிலான சண்டையில் கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற சண்டைகளால் கொல்லப்பட்டும் வருகின்றனர்.  ஈராக், சிரியா, ஆப்கன் போன்ற பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாடுகளிலும், அண்டை நாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

 இந்நிலையில், இது போல் சச்சரவுகள் நிறைந்த நாடுகளை சேர்ந்த தூதர்களும் தங்களுக்கு புகலிடம் அளிக்கக் கோரி கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசின் ரகசிய ஆவணங்களில் இருந்து திரட்டப்பட்டதாக கூறப்படும் அந்த தகவல் வருமாறு:
 சிரியா, ஈராக், கிரீஸ், ஹோண்டுராஸ், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 16 தூதர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் தஞ்சம் கேட்டு கனடாவை நாடியுள்ளனர். அதே போல், ஆப்கானிஸ்தான் நாட்டின் 38 தூதர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் தங்களுக்கு தஞ்சம் அளிக்கக் கோரி கனடாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இதில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிஒருவரும் கூட கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.இதுகுறித்து கனடாவின் முன்னாள் தூதரக அதிகாரி கூறுகையில், இது முன் எப்போதும் இல்லாததை விட அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சி: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Saturday, June 28, 2014
இலங்கை::
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதி உதவியில் இயங்கி வரும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கூடுமெனவும், தேர்தல்களை இலக்கு வைத்து சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தி;ற்கு பின்னர் இலங்கை மக்கள் பெரும் எண்ணிக்கையிலான தேர்தல்களில் வாக்களித்துள்ளதாகவும், தேர்தல் தொடர்பில் அமெரிக்கா இலங்கை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில் பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களிடமிருந்து பணம் திரட்டி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அமெரிக்கா கருவியாக பயன்படுத்திக்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

முக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.அநேகமாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பாரியளவு பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புலிகளின் உத்தரவிற்கு அமைய மக்கள் வாக்களிப்பில் பங்கேற்காத போதிலும். 2001ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வராதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இலங்கை மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதி மூலங்கள் தொடர்பில் விசாரணை செய்வதாகவும் அதில் தவறில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் திவயின!.

Saturday, June 28, 2014
இலங்கை::புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாழ்ந்து வரும் புலி ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒன்றிணைந்த செயலாளர் ரன்கே சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழர்களின் போலிப் பிரசாரங்களினால் இந்தியாவின் முக்கிய பிரபுக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் பிரிவினைவாதம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.இதன் ஓர் கட்டமாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவு நாட்டின் பாதுகாப்புத்துறையை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தின் பயிற்சி!

Saturday, June 28, 2014
இலங்கை::மாலைதீவு நாட்டின் பாதுகாப்புத்துறையை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் இலங்கையின் அனுபவங்கள், பயிற்சி மற்றும் உதவி ஒத்துழைப்புக்களை வழங்கி உதவுமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கேர்ணல் மொஹமட் நந்ம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் குரும்பா தீவிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்குள்ள சுற்றுலா விடுதியில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய போதே மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு முக்கிய தேவையாகவுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் ஜனாதிபதிக்குத் தெளிவு படுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், படையினருக்கான பயிற்சிகள் உட்பட பல பிரிவுகளில் தற்போது இலங்கை வழங்கி வரும் உதவிகளுக்கு மேலதிகமாக மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோள் தொடர்பிலும் ஆராய்ந்து முடியுமான அளவில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் இணக்கம் தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறையில் இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டு தெரிவித்தார். இந்து சமுத்திரத்திலுள்ள நாடுகள் என்றவகையில் அன்னியோன்யம் மற்றும் உதவிகளுக்கப்பால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை சம்பந்தமான ஒத்துழைப்புகள் முக்கியமானதாகும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார்.

கடலில் விபத்துக்களில் அகப்படுவோரை தேடுதல் மற்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கை இடர் முகாமைத்துவம், சமுத்திர மாசடைதலைத் தடுத்தல் தமது படையினருக்கு இலங்கையில் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் கல்வி மற்றும் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்ளுதல், படையினருக்கான மருத்துவ முகாம் அமைப்பது, கடற்பிராந்திய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறையினருக் கிடையிலான ஒத்துழைப்பு போன்றவற்றை மாலைத்தீவு அரசாங்கம் இலங்கையிட மிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வெளிநாட்டு சக்திகள் நாடுகளை வீழ்ச்சியுறச் செய்வதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்தவகையில் மாலைதீவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அதற்குட்பட்ட படைகளுக்கு விமான யுத்த பயிற்சிகளை வழங்குமாறும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமது கடற்படையினருக்கான படகுகளை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் வினவிய மாலைதீவு பாதுகாப்பமைச்சர் அதற்கான உதவிகளை இலங்கை வங்கி மூலம் மேற்கொள்வது தொடர்பிலும் ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளார். 

தனுசின் ‘ஆடுகளம்’ படத்தில் வில்லனாக நடித்த புலிகளின் ஆதரவாளரான ஜெயபாலனுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் அடித்து உதை!!

Saturday, June 28, 2014
சென்னை::யார் இந்த டைரக்டர் கவுதமன்  வெளிநாட்டு புலிகளின் பணத்தில் வாழ்கை நடத்தும்  டைரக்டர் கவுதமன், தனுசின் ‘ஆடுகளம்’ படத்தில் வில்லனாக நடித்த புலிகளின் ஆதரவாளரான ஜெயபாலனுக்கு  புலிகளின் ஆதரவாளர்கள் அடித்து உதை!!

தனுசின் ‘ஆடுகளம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஜெயபாலன். பரதேசி உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் இலங்கை தமிழ் கவிஞர் ஆவார்.
 
ஜெயபாலனுக்கு சென்னையில் அடி, உதை விழுந்தது. சிங்கள டைரக்டர் பிரசன்னவிதானகே இயக்கிய வித்யு வித்தவுட் யு என்ற படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட போது இச்சம்பவம் நடந்தது.
 
இந்த படத்தை சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிட டைரக்டர் முயன்றார். ஆனால் இங்குள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இது  (புலிகளின்) ஆதரவாளர்களுக்கு  தமிழர்களுக்கு எதிரான படம் என்று போராட்டத்தில் குதித்தனர். படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கும் மிரட்டல் வந்தது. இதையடுத்து படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று டைரக்டர் மறுத்தார். படத்தை தமிழ் அமைப்பினருக்கு திரையிட்டு காட்டவும் ஏற்பாடு செய்தார்.
 
படத்தை பார்ப்பதற்காக நடிகர் ஆடுகளம் ஜெயபாலன், டைரக்டர் கவுதமன், மற்றும் புலிகளின் ஆதரவு 17 இயக்கத்தினர் மற்றும் மாணவர்கள் வந்து இருந்தனர்.
 
படம் முடிந்ததும் சிங்கள டைரக்டரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. படத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் என வசனம் வருவதாக கண்டித்தனர். டைரக்டர் கவுதமனும் சரமாரியாக கேள்வி கேட்டார். அதற்கு டைரக்டரால் பதில் சொல்ல இயலவில்லை. இதையடுத்து நடிகர் ஜெயபாலன் எழுந்து சிங்கள டைரக்டருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் ஜெயபாலனை அடித்து உதைத்தனர். போலீசார் மீட்டு அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
 
படம் குறித்து டைரக்டர் கவுதமன் கூறியதாவது:–
 
வித்யு வித்தவுட் யு படம்  ராணுவத்தில் பணியாற்றும் சிங்களவருக்கும்   தமிழ் பெண்ணுக்கும் திருமணம் நடப்பது போல் படம் எடுத்துள்ளார். இது சிங்கள தமிழ் இனகலப்பை வலியுறுத்துவதாக உள்ளது. எனவே தமிழ் பெண்கள் சிங்களர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மறைமுகமாய் சொல்லி உள்ளார். இந்த படத்தை அனுமதிக்க முடியாது.
 
நடிகர் ஜெயபாலன் படம் பார்த்ததும் வெல்டன் டைரக்டர். எல்லோரும் கைதட்டுங்கள் என்றார். சிங்கள டைரக்டருக்கு அவர் ஆதரவாக பேசியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 

இலங்கைக்கு கஞ்சா கடத்தல்:உதவிய மீனவர்கள் கைது!

Saturday, June 28, 2014
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் ஜூன் 11ல் உயிருக்கு போராடிய இலங்கைத் தமிழர் சிந்துசன், 27, என்பவரை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்தனர்.
 
 பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற போது, தனுஷ்கோடி மூன்றாம் மணல் தீடையில் மீனவர்கள் இறக்கி விட்டதாக, விசாரணையின் போது பொய் சொல்லி நாடகமாடினார்.
 
இதன்பின் சிந்துசனை தனுஷ்கோடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, பாம்பனில் இருந்து 60 கிலோ கஞ்சாவை கடத்தி சென்று, மூன்றாம் தீடையில் இறங்கியதாகவும்; அங்கு இலங்கை படகு வராததால் கடலில் நீந்தி மீண்டும் தனுஷ்கோடிக்கு திரும்ப முயற்சித்தாகவும் தெரிவித்தார்.கஞ்சா கடத்தலுக்கு உதவிய தனுஷ்கோடி புதுரோடு மீனவர்கள் தியாகராஜன், முருகேசன், முனியசாமி, ராமநாதன், கர்ணன் கைது செய்யப்பட்டனர்.
 

புலம் பெயர்ந்த (புலி தீவிரவாதிகளை) தமிழர்களை இணைக்க மொரீசியஸில் சர்வதேச மாநாடு: ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறுகிறது!

Saturday, June 28, 2014
வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழும் (புலி தீவிரவாதிகளை) தமிழர்களுக்கான முதல் அனைத்துலக மாநாடு, மொரீசியஸில் ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.
 
இதுகுறித்து, புலம் பெயர்ந்த (புலி தீவிரவாதிகளுக்கான(tna.tnf))தமிழர்களுக்கான ஒருங்கிணைப் புக் கமிட்டி தலைவரும், மொரீசிய ஸின் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
 
சுமார் 60 நாடுகளில் பரந்து விரிந்து வாழும், தமிழர்களை பண்பாடு, கலாச்சாரத்தால் இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதை யொட்டி இந்த மாநாடு மொரீசிய ஸின் மோகா நகரில் மகாத்மா காந்தி கல்வி நிறுவன வளாகத்தில், ஜூலை 23 முதல் 27 வரை நடை பெற உள்ளது.
 
இந்த மாநாட்டை பிரதமர் நவின் ரம்கூலம் தொடங்கி வைக்கிறார். 3 நாட்களும் கட்டுரை சமர்ப்பித்தல், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன. 60 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் வர விரும்பி பதிவு செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து மாநாட்டில் பங்கேற்போர் சென்னை சோழிங்க நல்லூரில் செயல்படும் ஆசிய வியல் நிறுவன அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.
 
தமிழர்கள் மொழியாலும், பண் பாட்டாலும், கலாச்சாரத்தாலும் ஒன்றுபட வேண்டுமென்ற நோக்கத்தில், தமிழ்க் கலாச்சார பாது காப்பு மற்றும் அடையாளப் படுத்துதல் என்ற வகையில் மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு ஆறுமுகம் பரசுராமன் கூறினார்.

கொழும்பு விஷேர்லி சர்வதேச பாடசாலையின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர்!

   
   
   
Saturday, June 28, 2014
வாழ்க்கையில் வெற்றி வாழ்க்கை முன்னேற்றத்திலோ அல்லது பணம் சம்பாதிப்பதிலோ இல்லை அது தனிப்பட்ட இலக்குகளை திறம்பட அடைதல், ஒரு உண்மையான வெற்றிகரமான நபராக இருத்தல், அவர் ஒரு நாட்டின் ஒரு பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருத்தல், சிறந்த பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பவற்றிக்கு கட்டுப்பட்டவராக இருத்தல் என்பவற்றில் தங்கியுள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்  (ஜூன் 26) மாலை கொழும்பு விஷேர்லி சர்வதேச பாடசாலையின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
 
கொழும்பு பீஎம்ஐசீஎச் இல் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ அவர்களும் கலந்துகொண்டார்.
 
1985 இல் நிறுவப்பட்ட விஷேர்லி சர்வதேச பாடசாலையானது தீவின் பழமையான சர்வதேச பாடசாலைகளுல் ஒன்றாகும். பாடசாலை முகாமைத்துவ பணிப்பாளர் பேராசிரியர் புனர்ஜீவ கருணாநாயக, அதிபர் கிங்ஸ்லி ஜயசிங்க, இயக்குனர் பி சரவணன், சிறப்பு விருந்தினர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

Saturday, June 28, 2014
இலங்கை::அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைக்கும் பணிகள் இன்று (27) முதல் ஆரம்பமானது.
 
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க முழுமையான புனரமைப்பு பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன், இதற்கென இராணுவத்தின் பொறியியல் பிரிவைச்சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற சுமார் 700ற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் புனரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
முழுமையான மற்றும் பகுதியளவில் என இரண்டு வகைகளாக பாதிக்கப்பட்ட 94 வீடுகள், 137 வியாபார நிலையங்கள் அடையாளங்காணப்பட்டு புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தவர்களினதும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுமே இவ்வாறு புனரமைக்கப்படவூள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
இவற்றில் முழுமையாக பாதிக்கப்பட்ட 27 வீடுகள் மற்றும் 47 வியாபார நிலையங்களும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட 67 வீடுகள் மற்றும் 90 வியாபார நிலையங்களும் அடங்குவதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.
 
இந்த புனரமைப்பு பணிகளுக்கு அரசாங்கம் திரைசேரி, மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி துரிதமாக இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார்.
 
இதேவேளை, மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல தலைமையில் நேற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தீவைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று பார்வைட்டதுடன் முதற் கட்டமாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி! (புலிகளின் கிளர்ச்சியாளர்களுக்கு செய்தது போன்று)

Saturday, June 28, 2014
வாஷிங்டன்::சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்குவது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா எம்.பி.க்களுடன் ஆலோசித்து வருகிறார்.
 
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு உள்நாட்டு கலவரம் நடைபெற்று வருகிறது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆசாத் அரசு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. இதையடுத்து ஐ.நா. அதிகாரிகள் தலைமையில் ரசாயன குண்டுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
 
இதற்கிடையே சிரியாவில் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்லனர். இந்த சூழலில் அதிபர் ஆசாத் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கவது (புலிகளின் கிளர்ச்சியாளர்களுக்கு செய்தது போன்று) குறித்து ஆலோசனை நடத்த எம்பிக்களுக்கு அமெரிக்க அதபிர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இதில் ரூ.3 ஆயிரம் கோடியில் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சியாளர்களின் படையை மேம்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
 
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹெய்திலின் ஹைடன் கூறுகையில், சிரியா மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்கா உதவுவதில் இது ஒரு முன்னேற்றமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார்!

Saturday, June 28, 2014
சென்னை::ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.சி. 23 ராக்கெட் வருகிற 30–ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.
 
மாலை 3.30 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரும் அவருக்கு பா.ஜ.க. சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின் பிரதமராகி முதல் முறையாக சென்னை வரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
 
பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு புறப்பட்டு செல்கிறார். நாளை இரவு அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் தங்குகிறார்.
மறுநாள் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காலை 11 மணிக்கு மோடி சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
 
பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
பிரதமர் பயணத்திற்காக குண்டு துளைக்காத 2 ஹெலிகாப்டர்கள் டெல்லியில் இருந்த நேற்று வந்தன. பெங்களூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் வர வழைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 ஹெலிகாப்டர்களும் சென்னை பழைய விமான நிலையத்தில் 1–வது ஓடு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
பிரதமர் சென்னை வந்து செல்லும் வரை விமான நிலைய பாதுகாப்பு தமிழக போலீசார் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்கிறார்கள். மேலும் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Friday, June 27, 2014

புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தால்,அல்லது உதவி செய்திருந்து நாட்டைவிட்டு தப்பித்துச் சென்றிருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: புலிகளுடன் தொடர்புபட்ட 110 பேர் இதுவரை கைது: அஜித் ரோஹண!

Friday, June 27, 2014
இலங்கை:: புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தால்,அல்லது எவ்வகையிலாவது உதவி செய்திருந்து நாட்டைவிட்டு தப்பித்துச் சென்றிருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னரான ஒற்றுமையை குழப்பி மறுபடியும் அதனை சீரழிக்க முயற்சி செய்பவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதுடன் இதுவரை அவ்வாறான 110 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மார்ச் மாதம் பளைப் பகுதியில் இடம்பெற்ற கைதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 51 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதற்கு முன்பும் இடம்பெற்ற சந்தேகநபர்கள் கைதுகளின் அடிப்படையில் இதுவரை 110 பேர் கைதாகியுள்ளனர்.

இம்மாதம் 17 ஆம் திகதி ஹொரணை ரைகம பகுதியில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பில் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இந்நபர் 2002 இல்  புலிகள் அமைப்பில் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் தலைமறைவாகி இருந்துள்ள இந்நபரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் றைகம பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த நபர் இவ்வருடம் அப்பகுதி கிராம சேவகருக்கு 500 ரூபா இலஞ்சம் கொடுத்து ரைகம பகுதியில் வசிப்பதாக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது. இதற்கமைய ஓய்வுபெற்றுள்ள குறித்த கிராம சேவகரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அதேபோல கடந்த 19 ஆம் திகதி புலிகள் அமைப்பில் கடற்புலியாகவிருந்த திருநாவுக்கரசு என்ற நபரும் கட்டுநாயக்காவில் இருந்து கட்டார் நோக்கி புறப்பட்டுச் செல்ல தயார் நிலையில் இருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நபரும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவராவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விடுதலை செய்த தமிழக மீனவர்கள் 29 பேர் இன்று ஊர் திரும்புகின்றனர்!

Friday, June 27, 2014
நாகை::இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலையான புதுகை மீனவர்கள் 24 பேர் நேற்று மாலை காரைக்கால் வந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர், நாகை மீனவர்கள் 7 பேர் என 29 பேர் இன்று மாலை மண்டபம் வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ம் தேதி 8 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 24 மீனவர்களையும், ராமேஸ்வரத்திலிருந்து 3 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

இதேபோல் கடந்த 19ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை சிறைபிடித்துச் சென்றது.கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தமிழக மீனவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசும் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்பயனாக 18ம் தேதி கைது செய்யப்பட்ட புதுகை மீனவர்கள் 24 பேரையும், ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரையும் நேற்று முன்தினம் இலங்கை அரசு விடுதலை செய்தது. இதில் புதுகை மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று இந்திய எல்லையில் காரைக்கால் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவல்படை கமாண்டர் உதல்சிங் தலைமையில் நேற்று மாலை காரைக்கால் மார்க் தனியார் கப்பல் துறைமுகத்திற்கு மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் நாகை மற்றும் புதுக்கோட்டை மீன்வளத்துறை அதிகாரிகள் சுப்புராஜ், மோகன்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் ஊர் திரும்ப இருந்த நிலையில், 19ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை விடுதலை செய்தது. இதையடுத்து திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரும், நாகை மீனவர்கள் 7 பேரும் என 29 மீனவர்களை இன்று இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கின்றனர். அவர்கள் இன்று மாலை அல்லது இரவுக்குள் மண்டபம் துறைமுகம் வந்து சேர உள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தானுக்கு விமான சேவையை நிறுத்திய சர்வதேச நிறுவனங்கள்!

Friday, June 27, 2014
பெஷாவர்::பாகிஸ்தானில் விமான நிலையங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் கடந்த 8ம் தேதி உள்ளே புகுந்த 10 தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். சுமார் 5 மணிநேரம் அந்த விமான நிலையத்தை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர்.
 
தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடியில் 10 பேரும் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெஷாவர் நகரில் தரையிறங்கிய விமானத்தின் மீது விமான நிலையத்திற்கு வெளியே இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
பெஷாவரில் விமான நிலையத்திற்கு வெளியே இருந்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியிருந்ததால், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் கண்காணிக்க முடியாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். இதனால், சர்வதேச விமான நிறுவனங்கள் பெஷாவருக்கு விமான சேவை அளிக்க தயக்கம் காட்டி வருகின்றன. இதனையடுத்து பெஷாவருக்கு இயக்கி வந்த சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
 
அதே போல் ஹாங்காங்கின் கதே பசிபிக் நிறுவனம் பாகிஸ்தானுக்கு இயக்கப்படும் அனைத்து சேவைகளையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் எமிரேட்ஸ், எதிகாட், கத்தார் போன்ற நிறுவனங்களும் பெஷாவருக்கான தங்களது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெஷாவரில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு தவித்து வருகிறது என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறுபடியும் கொலைகள் செய்வதற்கு புலி பினாமிகளான அனந்தியும் கஜதீபனுகும் நவீன ஆயுதமும், பயிற்சியும் வேண்டுமாம்!!

Friday, June 27, 2014
மறுபடியும் கொலைகள் செய்வதற்கு புலி பினாமிகளான அனந்தியும் கஜதீபனுகும் நவீன ஆயுதமும், பயிற்சியும் வேண்டுமாம்!!
 
பொலிஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தமது பாதுகாப்புக்காக நவீன ஆயுதங்களையும், அவற்றைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் வழங்குமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பா.கஜதீபன் ஆகியோர் சபை அமர்வில் கோரிக்கை விடுத்தனர். நேற்று நடந்த வடமாகாணசபையின் 11ஆவது அமர்விலேயே மாகாணசபை உறுப்பினர்கள் மேற்படி கோரிக்கையை விடுத்தனர். மாகாணசபை உறுப்பினர்களான அனந்த சசிதரன், சுகிர்தன், கஜதீபன், சிவாஜிலிங்கம் ஆகியோருக்கான பொலிஸ் பாதுகாப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான கடிதங்கள் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உறுப்பினர்களுக்கு நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில் நேற்று மாகாணசபை அமர்வின்போது உறுப்பினர்கள் இந்த விடயத்தை எடுத்துக் கொண்டனர். மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தாம் தமது அரசியல் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் தனக்கோ தன்னுடைய பிள்ளைகளுக்கோ ஆபத்து உண்டாகுமானால் அதற்கு மாகாணசபையும் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும் அவர்கள் எமக்கு பொலிஸை பாதுகாப்பை வழங்க மறுத்தால் நவீன ஆயுதங்களையும் அவற்றைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் தமக்கு தரவேண்டும் என்றும் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்தார்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர் கஜதீபன் அவ்வாறான ஆயுதத்தை தமக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் -பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை. எனவே பாதுகாப்பு அமைச்சிடம் அந்தக் கோரிக்கையை முன்வையுங்கள் என பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ்வரும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் எதற்காக விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றும்- வடமாகாண சபையில் உள்ள சிங்கள உறுப்பினர்களுக்கும், தென்னிலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இன்னமும் பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில் எமக்கு மட்டும் எதற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும் சபையில் கேள்வி எழுப்பினார்.
 
இதையடுத்து பாதுகாப்பு விலக்கப்பட்டமை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பேச்சு நடத்தப்படும் என அவைத் தலைவர் கூறினார். இந்த நிலையில் மாகாணசபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மீள வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி இந்த விடயத்தை தீர்மானமாக நிறைவேற்றவேண்டும் என கல்வியமைச்சர் த.குருகுலராஜா பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்ததுடன், அந்தப் பிரேரணையினை தானே முன்மொழிந்தார். அந்தப் பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் வழிமொழிந்த நிலையில் பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.