Saturday, June 28, 2014

பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார்!

Saturday, June 28, 2014
சென்னை::ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.சி. 23 ராக்கெட் வருகிற 30–ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.
 
மாலை 3.30 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரும் அவருக்கு பா.ஜ.க. சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின் பிரதமராகி முதல் முறையாக சென்னை வரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
 
பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு புறப்பட்டு செல்கிறார். நாளை இரவு அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் தங்குகிறார்.
மறுநாள் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காலை 11 மணிக்கு மோடி சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
 
பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
பிரதமர் பயணத்திற்காக குண்டு துளைக்காத 2 ஹெலிகாப்டர்கள் டெல்லியில் இருந்த நேற்று வந்தன. பெங்களூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் வர வழைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 ஹெலிகாப்டர்களும் சென்னை பழைய விமான நிலையத்தில் 1–வது ஓடு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
பிரதமர் சென்னை வந்து செல்லும் வரை விமான நிலைய பாதுகாப்பு தமிழக போலீசார் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்கிறார்கள். மேலும் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment