Sunday, January 29, 2017

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் இருந்து சமந்தா பவர் நீக்கம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் பதவியில் இருந்து நிஷா பிஸ்வால் நீக்கப்பட்டுள்ளார்.
 
நிஷா பிஸ்வால் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதியில் இருந்து இந்த பதவியை வகித்து வந்தார். இவருக்கு பதிலாக வில்லியம் ட்ரொட் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் இருந்து சமந்தா பவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
 
ஐக்கிய நாடுகளுக்கான 28 வது அமெரிக்க தூதுவரான சமந்தா பவர் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் அந்த பதவியை வகித்து வந்தார்.
 
சமந்தா பவருக்கு பதிலாக நீகி ஹெலி ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 2 பொலிஸார் கைது!

கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுக்கான  பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (29) இவர்கள் கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மட்டக்களப்பில் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது!

அதிக மழைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 
இவர்களில் 163 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் சன்முகநாதன் இன்பராஜா குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், பலத்த மழைக் காரணமாக மண்முனை வடக்கு பகுதியில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் சன்முகநாதன் இன்பராஜா தெரிவித்துள்ளார்.
 
மேலும் மழைக் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 800 இற்கும் மேறபட்டோர் பாதிக்கப்ப்டுள்ளனர்.
 
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொடரும் கடும் மழைக் காரணமாக 72 பிரதான நீர்த்தேக்கங்களில் ஏழு நீர்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சில நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வான் பாயும் நிலையை அண்மித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான் பாயும் நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இதேவேளை குறித்த பகுதிகளிலுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளதாக நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
 
கிரான் – தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
 
இதன் காரணமாக பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை, திகிலிவட்டை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக இப்பிரதேசங்களுக்கான தரை வழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
 
இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Saturday, January 28, 2017

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த ரணில் விக்ரமசிங்கவே நாட்டில் இருக்கும் போர் வீரன்: விக்ரமபாகு கருணாரட்ன!

 புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்து அந்த போரை நிறுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நாட்டில் இருக்கும் போர் வீரன் எனவும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்
ன தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த வரலாற்று வீரன் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் மகாவம்சத்தில் எழுதப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே விக்ரமபாகு கருணராட்ன இதனை கூறியுள்ளார்.
 
 

எதற்காக ஆட்சியைப் பெற்றோம் என்பதை அறியாத இந்த ஆட்சியாளர்கள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே நாம் கடன் பெற்றோம். அதன் பிரதிபலன்களை பொதுமக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்த அரசாங்கம் பெற்ற கடனால் என்ன செய்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினா எழுப்பினார்.
 
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற புரட்சியின் ஆரம்பம் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
மோசடியான அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அதற்கு எதிராக செயற்பட வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.
 
தற்போது நாடு பாரிய கடன் சுமையுடன் காணப்படுகின்றது.  அதற்காக தன்னை இந்த அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றது.
 
இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் எதற்காக ஆட்சியைப் பொறுப்பேற்றோம் என்பதை அறியாதுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் புனர்வாழ்வு அளிக்கப்படாத 300 புலி உறுப்பினர்கள்!

வடக்கில் புனர்வாழ்வு அளிக்கப்படாத 300  புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இறுதிக் கட்ட போரின் போது படையினரிடம் சரணடையாத சுமார் 300 புலி உறுப்பினர்கள் வடக்கில் இருக்கின்றார்கள். இந்த  புலி உறுப்பினர்கள் ஐரோப்பிய  புலம்பெயர் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர் என வடக்கு இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், இவர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
இதற்கு முன்னதாகவும் வடக்கில் குற்றச் செயல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் புலிகளின் புனர்வாழ்வுக்கு உட்படாத முன்னாள் புலி போராளிகள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளினால் தாக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி தாக்குதல்: 21 வருடங்களாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

புலிகளினால் தாக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு மட்டுமே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி தாக்குதலால் மரணித்த மற்றும் ஊனமுற்றவர்களுக்கான சங்கத்தின் தலைவர் எல்.டி.எல்.ஏ.குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச் சம்வத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வு வழங்கப்படும் எனக் கூறியபோதும், இறுதியில் கையெழுத்திட்ட நாள் முதல் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் இடம்பெற்ற காலப் பகுதியில் மத்திய வங்கி ஆளுனராக இருந்த ஏ.எஸ்.ஜெயவர்த்தன, பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு மத்திய வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த போதும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னரும் பதவிக்கு வந்த மத்திய வங்கி ஆளுனர்களுடன் இது பற்றி கலந்துரையாடியுள்ள போதும் அது பலனளிக்கவில்லை எனவும் குணவர்த்தன கூறியுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் தாக்குதல் இடம்பெற்ற தினத்தை அனுஷ்டிக்க மாத்திரம் பாரிய நிதி செலவிடப்படுவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேனும் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Croton and Jak leaves exhibited at the Nugegoda joint opposition rally



Mahinda Rajapaksa arrives at Nugegoda rally


நல்லாட்சிக்கெதிரான மஹிந்தவின் பேரணிக்கு மக்கள் கூட்டம்!

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நுகேகொடையில் இன்று மாலை நடைபெற்ற பேரணியில் பெருந்திரளான மக்கள் கையில் பலா மற்றும் குரோட்டோன் இலைகளை ஏந்திவந்தனர்.
 
நல்லாட்சி அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தி வாழ்க்கை செலவை உயர்த்தியுள்ளதால் தற்போது விலங்குள் உண்ணும் இலைகளை சாப்பிடும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை சித்தரிக்கும் முகமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்த பலா மற்றும் குரோட்டன் இலைகளை ஏந்திவந்தனர்.
 
நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்
பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மேசடி என்பவற்றை பிரதானப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
 
இதில் கூட்டு எதிரணியின் உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, ஜி.எல். பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண டலஸ் அழகப்பெரும ,உதயகம்மன்பில உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி மற்றும் அவருடைய மகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விமல் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆவேசமான உரை: நுகேகொடை மேடையில்!

ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மக்கள் மத்தியில் புரட்சியை ஆரம்பிக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான மாபெரும் கூட்டம் நுகேகொடையில் நேற்று நடைபெற்றது.கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த குறித்த பேரணியில் மகிந்த ராஜபக்ச உட்பட அனைத்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

என்றபோதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆத்மார்த்த நண்பனான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வாகன முறைக்கேடு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.

ஆனாலும் மகிந்தவிற்கும், கூட்டு எதிர்க்கட்சியின் மிக முக்கிய நபரான விமலின் குறையை இன்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியின் நினைவு படுத்தினர்.கூட்டத்திற்கு வருகைத் தந்திருந்த அரசியல் வாதிகளும் பொதுமக்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று விமலுக்கு உச்ச கட்ட மரியாதை செலுத்தினர்.
மேலும் விமல் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆவேசமான உரையின் காணொளியும் மேடையில் ஒளிபரப்பப்பட்டது.

விமலின் கைது முற்று முழுதான அரசியல் பலிவாங்கல் செயற்பாடு எனவும், அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் மேடையில் உரையாற்றிய அரசியல் தலைவர்களும் தெரிவித்தனர்.கூட்டு எதிர்க்கட்சியினரும் மக்களும் விமலுக்கு கொடுத்த அங்கீகாரத்தால் பொதுமக்கள் அனைவரும் வியப்படைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமலின் உரை மேடையில் ஒளி பரப்பப்பட்ட போது விமல் நேரடியாக மேடைக்கே வந்து விட்டதைப் போல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Friday, January 27, 2017

ஓய்வுபெற்றுச் சென்ற என்னை மீண்டும் அரசியலுக்கு இங்கு இழுத்தவர் மைத்திரி: மஹிந்த ராஜபக்‌ஷ!(

படங்கள் இணைப்பு) : லங்கா ரைம் (தமிழ் நியூஸ்) :இங்கே கிளிக் செய்யவும் 

ஓய்வுபெற்றுச் சென்று சுகபோகமாக இருக்க எண்ணிய என்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று நடைபெற்ற புரட்சியின் ஆரம்பம் பேரணியின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டில் பிரதமராக்குவோம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது!

mahinda www.nethnews (19)
mahinda www.nethnews (1)
mahinda www.nethnews (7)
mahinda www.nethnews (10)mahinda www.nethnews (2) mahinda www.nethnews (3) mahinda www.nethnews (4) mahinda www.nethnews (5) mahinda www.nethnews (6)  mahinda www.nethnews (8) mahinda www.nethnews (9)   mahinda www.nethnews (12) mahinda www.nethnews (13) mahinda www.nethnews (14) mahinda www.nethnews (15) mahinda www.nethnews (16) mahinda www.nethnews (17)    mahinda www.nethnews (21)
mahinda www.nethnews (23)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டில் பிரதமராக்குவோம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் ‘எழுச்சியின் ஆரம்பம்’ பேரணி தற்பொழுது நுகேகொடையில் இடம்பெற்று வருகின்றது. இங்கு உரையாற்றும் போது முன்னாள் அமைச்சர் குமார வெல்கம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹட்டனில் ஏற்பட்ட கோர விபத்து: பெண் பலி, இருவர் கவலைக்கிடம்!!

உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்: அமெரிக்க பத்திரிக்கை தகவல்!

வாஷிங்டன்: உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பிரபல அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கையான அமெரிக்கன் பாரின் பாலிசி, 2017 ம் ஆண்டுக்கான உலகின் எட்டு வல்லரசு நாடுகள் பட்டியலை தயாரித்தது. அப்பத்திரிக்கை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது.

 
மற்ற நாடுகள்

அமெரிக்கன் பாரின் பாலிசி என்ற அந்த அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கை நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2017 ம் ஆண்டிற்கான வல்லரசு நாடுகளில் முதலாவது இடத்தில் அமெரிக்கா, இரண்டாம் இடத்தில் சீனா மற்றும் ஜப்பான், நான்காம் இடத்தில் ரஷ்யா, ஜந்தாம் இடத்தில் ஜெர்மனி, ஏழாவது இடத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் எட்டாம் இடத்திலும் உள்ளன.
 

வேகமாக முன்னேற்றம்

இந்தியாவை பற்றி அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது. ஆங்கிலம் பேசும் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு அப்பத்திரிக்கை தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இன்று நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆயத்தமாக இருந்ததாகவும், எனினும், அவர்களை பங்கேற்க வேண்டாம் என தாம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத காலம் வரையில் அவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டாம் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அத்துடன், இதுதொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கின்றதா அல்லது அமைச்சர்கள் தீர்மானங்கள் எடுக்கின்றார்களா என்பது புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொட பேரணியில் விமல் வீரவங்சவின் குரல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொட பேரணி இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
 
இந்த பேரணியில்,கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் குரல் பதிவு ஒன்றும் ஒலிபரப்பப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதி பெற்றே விமலின் இந்த குரல் பதிவு ஒலிபரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கிணங்க குறித்த காணொளி 20 நிமிடங்கள் ஒலிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ,குறித்த பேரணியின் சிறப்பு உரை ஒன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தில் பிளவு : தினேஸ் குணவர்தன!

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போ
தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த அணியால் இன்று நுகேகொடையில் நடத்தப்படவுள்ள கூட்டம் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கபட்டுள்ளது.
 
இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, January 26, 2017



இந்தியாவின் குடியரசு தின விழா!


மறைந்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள்!

புதுடெல்லி -மறைந்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள் அறிவிப்பு
குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய கவுரவமான பத்ம விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் இந்த விருதுகளை மார்ச் அல்லது  ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவிப்பார்.
யேசுதாசுக்கு...
திரையிசையில் பல்லாண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய கவுரவமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
பத்ம விபூஷண் விருது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 7 பேருக்கு பத்ம பூஷன் விருது மற்றும் 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 19 பேர் பெண்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட 7 பேர் வெளிநாட்டினர். 9 பேருக்கு இறப்புக்கு பின் இந்த உயரிய கவுரவம் அளிக்கப்படுகிறது.
பத்ம விருதுகள் முழுப் பட்டியல்
 
பத்ம விபூஷண்:
 
கே.ஜே.யேசுதாஸ் - இசை - கேரளா
சத்குரு ஜக்கி வாசுதேவ் - ஆன்மிகம் - தமிழகம்
சரத் பவார் - பொது வாழ்க்கை - மகாராஷ்டிரம்
முரளி மனோகர் ஜோஷி - பொது வாழ்க்கை - உத்தரப் பிரதேசம்
உடுப்பி ராமச்சந்திர ராவ் - அறிவியல் / பொறியியல் - கர்நாடகம்
சுந்தர் லால் பாட்வா (மறைவு)- பொது வாழ்க்கை - மத்தியப் பிரதேசம்
பி.ஏ.சங்மா (மறைவு) - பொது வாழ்க்கை - மேகாலயா
 
பத்ம பூஷன்:
 
விஷ்வா மோகன் பட் - கலை / இசை - ராஜஸ்தான்
பேராசிரியர் தேவி பிரசாத் திவிவேதி - இலக்கியம் / கல்வி - உத்தரப் பிரதேசம்
தெஹாம்தன் உத்வாடியா - மருத்துவம் - மகாராஷ்டிரா
ரத்னா சுந்தர் மகராஜ் - ஆன்மிகம் - குஜராத்
நிரஞ்சனா நந்தா சரஸ்வதி - யோகா - பிஹார்
ஹெச்.ஆர்.ஹெச். பிரின்சஸ் மஹா சக்ரி ஸ்ரீநிதோன் (வெளிநாடு) - இலக்கியம் / கல்வி - தாய்லாந்து
'சோ' ராமசாமி (மறைவு) - கல்வி / இலக்கியம் / இதழியல் - தமிழகம்
 
பத்மஸ்ரீ:
 
வசந்தி பிஷ்த் - கலை / இசை - உத்ராகண்ட்
செம்மஞ்சேரி குஞ்சிராமன் நாயர் - கலை / நடனம் - கேரளா
அருணா மஹோந்தி - கலை / நடனம் - ஒடிசா
பாரதி விஷ்ணுவர்தன் - கலை / சினிமா - கர்நாடகா
சாது மெஹர் - கலை / சினிமா - ஒடிசா
டி.கே.மூர்த்தி - கலை / இசை - தமிழகம்
லைஷ்ராம் வீரேந்திரகுமார் சிங் - கலை / இசை - மணிப்பூர்
கிருஷ்ண ராம் சவுத்ரி - கலை / இசை - உத்தரப் பிரதேசம்
போவா தேவி - கலை / ஓவியம் - பிஹார்
திலக் கீதாய் - கலை / ஓவியம் - ராஜஸ்தான்
அக்கே யாத்கிரி ராவ் - கலை / சிற்பம் - தெலங்கானா
ஜிதேந்திர ஹரிபால் - கலை / இசை - ஒடிசா
கைஷால் கேர் - கலை / இசை - மகாராஷ்டிரம்
பரஸல்லா பி பொன்னம்மாள் - கலை / இசை - கேரளா
சுக்ரி பொம்மகவுடா - கலை / இசை - கர்நாடகா
முகுந்த் நாயக் - கலை / இசை - ஜார்கண்ட்
புருஷோத்தமன் உபாத்யாயே - கலை / இசை - குஜராத்
அனுராதா பாத்வால் - கலை / இசை - மகாராஷ்டிரா
வாரெப்பா நபா நில் - பொது சேவை - தெலங்கானா
டி.கே.விஸ்வநாதன் - பொது சேவை - ஹரியானா
கன்வால் சிபல் - பொது சேவை - டெல்லி
பிர்கா பதாதூர் லிம்பூ முரிங்லா - இலக்கியம் / கல்வி - சிக்கிம்
ஏலி அகமது - இலக்கியம் / கல்வி - அஸ்ஸாம்
நரேந்திர கோலி - இலக்கியம் / கல்வி - டெல்லி
ஜி.வெங்கட சுப்பையா - இலக்கியம் / கல்வி - கர்நாடகா
அக்கிதம் அச்சுதன் நம்பூதரி - இலக்கியம் / கல்வி - கேரளா
காசிநாத் பண்டிதா - இலக்கியம் / கல்வி - ஜம்மு காஷ்மீர்
சாமு கிருஷ்ண சாஸ்திரி - இலக்கியம் / கல்வி - டெல்லி
ஹரிஹர் க்ரிபாலு திரிபாதி - இலக்கியம் / கல்வி - உத்தரப் பிரதேசம்
மைக்கேல் டனினோ - இலக்கியம் / கல்வி - தமிழகம்
பூனம் சூரி - இலக்கியம் / கல்வி - டெல்லி
வி.ஜி. படேல் - இலக்கியம் / கல்வி - குஜராத்
கோடேஸ்வரம்மா - இலக்கியம் / கல்வி - ஆந்திரா
பல்பீர் தத் - இலக்கியம் / கல்வி / இதழியல் - ஜார்கண்ட்
பாவனா சோமையா - இலக்கியம் / கல்வி / இதழியல் - மகாராஷ்டிரா
விஷ்ணு பாண்டியா - இலக்கியம் / கல்வி / இதழியல் - குஜராத்
சுப்ரதோ தாஸ் - மருத்துவம் - குஜராத்
பக்தி யாதவ் - மருத்துவம் - மத்தியப் பிரதேசம்
முகமது அப்துல் வஹீத் - மருத்துவம் - தெலங்கானா
மதன் மாதவ் கோத்போலே - மருத்துவம் - உத்தரப் பிரதேசம்
தேவேந்திர தயாபாய் படேல் - மருத்துவம் - குஜராத்
ஹரிகிருஷ்ணன் சிங் - மருத்துவம் - சண்டிகர்
முகுந்த் மின்ஸ் - மருத்துவம் - சண்டிகர்
அருண் குமார் சர்மா - தொல்லியல் - சண்டிகர்
சஞ்சீவ் கபூர் - சமையல் நிபுணர் - மகாராஷ்டிரா
மீனாட்சி அம்மா - களரி - கேரளா
ஜெனாபாய் தர்காபாய் படேல் - வேளாண்மை - குஜராத்
சந்திரகாந்த் பிதாவா - அறிவியல் / பொறியியல் - தெலங்கானா
அஜோய் குமார் ராய் - அறிவியல் / பொறியியல் - மேற்கு வங்கம்
சிந்தாகினி மெல்லேஷம் - அறிவியல் / பொறியியல் - ஆந்திரா
ஜிதேந்திர நாத் கோஸ்வாமி - அறிவியல் / பொறியியல் - அஸ்ஸாம்
தரிபள்ளி ராமையா - சமூக சேவை - தெலங்கானா
கிர்ஷி பரத்வாஜ் - சமூக சேவை - கர்நாடகா
காரிமுக் ஹக் - சமூக சேவை - மேற்கு வங்கம்
பிபின் கனத்ரா - சமூக சேவை - மேற்கு வங்கம்
நிவேதிதா ரகுநாத் பீடே - சமூக சேவை - தமிழகம்
அப்பாசாஹேப் தர்மாதிகரி - சமூக சேவை - மகாராஷ்டிரா
பல்பீர் சிங் சீசேவால் - சமூக சேவை - பஞ்சாப்
விராட் கோலி - விளையாட்டு / கிரிக்கெட் - டெல்லி
சேகர் நாயக் - விளையாட்டு / கிரிக்கெட் - கர்நாடகா
விகாஸா கவுடா - விளையாட்டு / வட்டு எறிதல் - கர்நாடகா
தீபா மாலிக் - விளையாட்டு / தடகளம் - ஹரியானா
மாரியப்பன் தங்கவேலு - விளையாட்டு / தடகளம் - தமிழகம்
தீபா கர்மாகர் - விளையாட்டு / ஜிம்னாஸ்டிக் - திரிபுரா
பிஆர் ஸ்ரீஜேஷ் - விளையாட்டு / ஹாக்கி - கேரளா
சாக்ஷி மாலிக் - விளையாட்டு - மல்யுத்தம் - ஹரியானா
மோகன் ரெட்டி வெங்கட்ராம போதனபு - வர்த்தகம் / தொழில் - தெலங்கானா
இம்ரான் கான் (என்ஆர்ஐ/பிஐஓ) - கலை / இசை - அமெரிக்கா
ஆனந்த் அகர்வால் (என்ஆர்ஐ/பிஐஓ) - இலக்கியம் / கல்வி - அமெரிக்கா
எச்.ஆர்.ஷா (என்ஆர்ஐ/பிஐஓ) - இலக்கியம் / கல்வி / இதழியல் - அமெரிக்கா
சுனிதி சாலமன் (மறைவு) - மருத்துவம் - தமிழகம்
அசோக் குமார் பட்டாச்சார்யா (மறைவு) - தொல்லியல் - மேற்கு வங்கம்
டாக்டர் மாபுஸ்கர் (மறைவு) - சமூக சேவை - மகாராஷ்டிரா
அனுராதா கொய்ராலா (மறைவு) (வெளிநாட்டினர்) - சமூக சேவை - நேபாளம்.