Saturday, January 28, 2017

விமல் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆவேசமான உரை: நுகேகொடை மேடையில்!

ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மக்கள் மத்தியில் புரட்சியை ஆரம்பிக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான மாபெரும் கூட்டம் நுகேகொடையில் நேற்று நடைபெற்றது.கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த குறித்த பேரணியில் மகிந்த ராஜபக்ச உட்பட அனைத்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

என்றபோதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆத்மார்த்த நண்பனான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வாகன முறைக்கேடு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.

ஆனாலும் மகிந்தவிற்கும், கூட்டு எதிர்க்கட்சியின் மிக முக்கிய நபரான விமலின் குறையை இன்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியின் நினைவு படுத்தினர்.கூட்டத்திற்கு வருகைத் தந்திருந்த அரசியல் வாதிகளும் பொதுமக்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று விமலுக்கு உச்ச கட்ட மரியாதை செலுத்தினர்.
மேலும் விமல் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆவேசமான உரையின் காணொளியும் மேடையில் ஒளிபரப்பப்பட்டது.

விமலின் கைது முற்று முழுதான அரசியல் பலிவாங்கல் செயற்பாடு எனவும், அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் மேடையில் உரையாற்றிய அரசியல் தலைவர்களும் தெரிவித்தனர்.கூட்டு எதிர்க்கட்சியினரும் மக்களும் விமலுக்கு கொடுத்த அங்கீகாரத்தால் பொதுமக்கள் அனைவரும் வியப்படைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமலின் உரை மேடையில் ஒளி பரப்பப்பட்ட போது விமல் நேரடியாக மேடைக்கே வந்து விட்டதைப் போல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment