Saturday, December 31, 2011

இன்னும் சில மணி நேரங்களில்.... 2011க்கு விடை கொடுக்கவும், 2012-ஐ வரவேற்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்!!!

சென்னை::இன்னும் சில மணி நேரங்களில்.... 2011க்கு விடை கொடுக்கவும், 2012-ஐ வரவேற்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர். சென்னையில் புத்தாண்டு கோலாகலம் காலையில் இருந்தே களை கட்ட தொடங்கி விட்டது. கடைகள், ஓட்டல்கள், வீடுகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. வாழ்த்து எஸ்எம்எஸ்கள் வலம் வர தொடங்கி விட்டன. நட்சத்திர ஓட்டல்களில் கலாசார நடனங்கள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள், வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்க மெரினா கடற்கரையில் பல லட்சம் மக்கள் கூடுவார்கள். அங்கு மட்டும் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களை கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்க 80 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. மெரினாவில் மீண்டும் கடைகள்: தானே புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் கடல்நீர் புகுந்தது. அங்கிருந்த கடைகள் சேதம் அடைந்தன. இந்நிலையில், புத்தாண்டு வியாபாரத்திற்காக இன்று காலை 7 மணிக்கே வந்து தங்களது கடைகளை வியாபாரிகள் சரி செய்தனர். குப்பைகளை அகற்றி கடற்கரையை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

குடிமகன்’களுக்கு புத்தாண்டு செய்தி ‘பார்’ திறப்பு நேரம் 30 நிமிடம் நீட்டிப்பு!!!

Saturday,December,31,2011
சென்னை : டாஸ்மாக் பார் திறந்திருக்கும் நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 6,690 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. இதில் 4,506 கடைகளோடு பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலை நேரம் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி மட்டுமே. இதனால், இரவு 10 மணிக்கு மதுபான கடைக்கு வந்து மதுபானம் வாங்குபவர்கள், அதை வைத்து குடிக்க இடமில்லாமல் அல்லாட வேண்டிய நிலை இருந்தது.

இதுகுறித்து, வாடிக்கையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் சார்பில், டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை யில் நடந்த டாஸ் மாக் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முறையீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, டாஸ்மாக் பார் வேலை நேரத்தை இரவு 10 மணியிலிருந்து 10.30 மணி என்று நீட்டிப்பு செய்வது. பாருக்கான வாடகை கட்டணம் இதுநாள் வரை 2.5 சதவீதம் என்று வசூலித்ததை, ஒரு சதவீதம் குறைத்து 1.5 சதவீதமாக வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அந்தந்த டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.

தாய்லாந்து பறக்கும் விஷால்-த்ரிஷா!!!

Saturday,December,31,2011
சென்னை::சமரன் பட சூட்டிங்கிற்காக விஷால்-த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து பறக்க இருக்கின்றனர். ஒஸ்தி படத்தை தயாரித்த பாலாஜி ரியல் மீடியா அடுத்து விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய படம் "சமரன்". "தீராத விளையாட்டு பிள்ளை" படத்தை இயக்கிய திரு, இந்தபடத்தை இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக முதன்முறையாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமரன் என்றால் போர்வீரன் என்ற அர்த்தமாம். ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும், அதனால் அவன்படும் அவஸ்தைகளும் தான் படத்தின் கதையாம். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என்றும் கூறும் டைரக்டர் திரு, கூடவே 2012ம் ஆண்டில் ஆக்ஷ்ன் த்ரில்லர் நிறைந்த படமாக சமரன் இருக்கும் என்கிறார்.

முற்கட்ட சூட்டிங் ஊட்டியில் 15 நாட்கள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து தாய்லாந்தில் ஜனவரி 20ம் தேதி முதல் தொடர்ந்து 50நாட்கள் நடக்க இருக்கிறது. இதற்காக விஷால், த்ரிஷா உள்ளிட்ட சமரன் படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து பறக்க உள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்கள்!

Saturday,December,31,2011
இலங்கை::சீரற்ற வானிலை காரணமாக இலங்கை வடக்கு கடற் பிரதேசத்தில் நிர்க்கதியான இந்திய மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

21 மீனவர்களுடன் காணாமற்போயுள்ள ஐந்து மீன்பிடி படகுகளை கண்டுபிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த ஆறு மீனவர்களும் காப்பாற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர்களே சீரற்ற வானிலையால் காணாமற்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை கடற்படையின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு கடற்படை பிரிவுகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. ஏனைய மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக மலேஷியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு செல்ல முற்பட்ட 12இலங்கையர்களும்/4ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் மலேஷியாவில் கைது!

Saturday,December,31,2011
மலேஷியா::பன்னிரண்டு இலங்கையர்களும் நான்கு ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களும் மலேஷியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இவர்கள் நேற்று மாலை Pantai Sungai Tengah, Bandar Penawar பகுதியில் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தவர்கள் 17 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு மூலம் இந்தோனேஷியாவிற்கும் பின் அவுஸ்திரேலியா செல்வதே இவர்களது நோக்கமாக அமைந்திருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக 985 பேர் சட்டவிரோமான முறையில் மலேசியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கையில் இருந்து கடத்தி வந்த ஹெராயினை கேப்ஸ்யூலில் அடைத்து கடத்தியவருக்கு: 10 ஆண்டு சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும்!

Saturday,December,31,2011
மதுரை::இலங்கையில் இருந்து கடத்தி வந்த ஹெராயினை கேப்ஸ்யூலில் அடைத்து கடத்தியவருக்கு, 10 ஆண்டு சிறையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை கோர்ட் தீர்ப்பளித்தது.தூத்துக்குடி மாவட்டம் சோரிஸ் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன், 23. கடந்த 2010ல், கன்னியாகுமரி - திருச்செந்தூர் ரோட்டில் சுங்கத் துறை எஸ்.பி., தலைமையிலான குழுவினர் இவரைப் பிடித்தனர். இவரிடம், 99 ஹெராயின் கேப்ஸ்யூல்கள் இருந்தன.

மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இவ்வழக்கு நடந்தது. விசாரணையின் போது பாலமுருகன், "இலங்கையைச் சேர்ந்த குரு என்பவர் ஹெராயினை கொடுப்பார். அதை சென்னையில் ஜேசுதாசனிடம் சென்று கொடுப்பேன். குரு, ஜேசுதாசன், கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் சேர்ந்து, இக்கடத்தலைச் செய்வோம். மற்ற மூன்று பேர், தலைமறை வாக உள்ளனர்' என்றார்.

நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி, ""பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத்தவறினால், மேலும் மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்,'' என்றார்.

2011- ன் டாப் பாடலாக கொலவெறி'' : சிஎன்என் தேர்வு!

Saturday,December,31,2011
யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து தனுஷ் எழுதிப் பாடி பெரும் பாப்புலாரிட்டியைச் சம்பாதித்துள்ள ஒய் திஸ் கொல வெறிடி..-யை சிறந்த பாடலாக பிரபல சிஎன்என் தொலைக்காட்சி தேர்வு செய்துள்ளது. '2011-ன் டாப் பாடல்' என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது. இதற்கிடையே, பிரதமரின் விருந்தில் நேற்று முன்தினம் பங்கேற்ற தனுஷ், இன்று சென்னை திரும்பினார். இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய அவர், அன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யா பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளார்.

சிவில் உரிமைகளுடன் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் - கரு, சஜித்!

Saturday,December,31,2011
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிவில் உரிமைகளுடன் விடுதலை செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய தினம் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்கோவை, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக் குழுவினர் பூரண ஆதரவை வழங்குவதாக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அனுபவிக்கக் கூடிய சகல சிவில் உரிமைகளுடனும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இவ்வாறு சிவில் உரிமைகள் முடக்கப்படாது விடுதலை செய்யப்பட்டால் சரத் பொன்சேகா செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு விவகாரம் கோவையில் லாரிகள் ஸ்டிரைக் 200 கோடி வர்த்தகம் பாதிப்பு!

Saturday,December,31,2011
கோவை::முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும். நதிகளை தேசியமயமாக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சரக்கு வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒருநாள் வாகன நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில் கோவை லாரி உரிமையாளர் சங்கம், கோவை சரக்கு போக்குவரத்து சங்கம், மாநகர லாரி புக்கிங் ஏஜென்ட்ஸ் சங்கம், கோவை பேக்கர்ஸ், மூவர்ஸ் சங்கம், கோவை எல்சிவி ஆபரேட்டர்ஸ் சங்கம், கோவை மாவட்ட லாரி பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கம், கோவை தினசரி பார்சல் புக்கிங் சங்கம், கோவை இலகு ரக வாகன உரிமையாளர் சங்கம் ஆகியன பங்கேற்றுள்ளன. கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரம் சரக்கு லாரிகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மினி லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் இன்று காலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக வார கடைசி நாட்களில் காய்கறிகளை அதிகளவில் ஏற்றிக்கொண்டு லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்படும். இந்த லாரிகள் ஏதும் செல்லவில்லை என்று மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம் கூறினார். இதனால் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் டி.கே. மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது பாதிக்கப்பட்டது. ஒரு நாள் ஸ்டிரைக் காரணமாக ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தக இழப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் முதல் சீன விமானங்கள் சேவையில்!

Saturday,December,31,2011
இலங்கை::சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விமானங்கள் ஜனவரி மாத நடுப்பகுதியிலிருந்து உள்ளூர் விமான சேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எம்.ஏ.60 ரகத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் உள்ளூர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்களில் தலா 55 பயணிகள் செல்லக்கூடிய வசதிகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விமானங்களை சேவையில் இணைப்பதற்கு பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்காதல் தெரிந்ததால் 99 வயதான தாத்தா விவாகரத்து கேட்டு மனு

Saturday,December,31,2011
ரோம்::இத்தாலியை சேர்ந்த 99 வயது தாத்தா தனது 96 வயது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். இதன் மூலம் உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கோரிய தம்பதிகள் இவர்கள்தான் என்ற சாதனை படைத்துள்ளனர். இத்தாலியை சேர்ந்தவர் அன்டோனியோ சி (99). இவர் சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்யும் போது, அவரது மனைவிக்கு வந்த கடிதம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதை பிரித்து படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதம் அவர் மனைவிக்கு வந்திருந்த மிகப்பழமையான காதல் கடிதம். மனைவியிடம் இதுகுறித்து கேட்ட போது அவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து அன்டோனியோ மனைவியிடம் இருந்து விவாகரத்து கோர முடிவு செய்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1940களில் தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் காதல் இருந்ததற்கான ஆதாரம் சமீபத்தில் கிட்டியதால் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் தற்போழுது வழமைக்கு திரும்பியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக கரைவலைத் தோணியின் மூலம் மீனவர்கள்!

Saturday,December,31,2011
இலங்கை::கடந்த வாரம் பெய்த மழை, சீரற்ற காலநிலை, கடல்கொந்தளிப்பு மற்றும் கடலரிப்பு காரணமாக மீனவர்கள் தமது கடத்தொழிலில் ஈடுபடாமல் பல சிறமங்களை
எதிர் நோக்கிவந்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் தற்போழுது வழமைக்கு திரும்பியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக கரைவலைத் தோணியின் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
குறிப்பாக, சாய்ந்தமருது, கல்முனை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்று வந்ததைக் காணக் கூடியதாகவும் இருந்த்தோடுஅம்பாறை மாவட்டத்தில் மிகக் குறைந்தளவான கடற்றொழிலாளர்களே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்

ஆந்திர எல்லையில் மீன் பிடிக்க சென்றபோது புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு!

Saturday,December,31,2011
கும்மிடிப்பூண்டி::கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று காணாமல்போன 122 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம், பாட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியாகுப்பம், வெங்கடேசபெருமாள் நகர் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த 122 மீனவர்கள், 15 படகுகளில் கடந்த 5 நாளுக்கு முன் மீன் பிடிக்க சென்றனர். ஆந்திர மாநில கடல் எல்லையில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். புயல் காற்றில் சிக்கிய படகு திசை மாறி தத்தளித்தது. கடும் போராட்டத்துக்கு பிறகு, ராக்கெட் ஏவுதளம் இருக்கும் இடமான ஸ்ரீஹரிகோட்டாவை நோக்கி படகை திருப்பி, அங்கு மீனவர்கள் தஞ்சம் அடைந்தனர். சந்தேகத்தின்பேரில் அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தங்களது விவரங்களை தெரிவித்து, ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் ராமபிரான், ஒன்றியக்குழு தலைவர் குணம்மா, டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். கூடூர் ஆர்டிஓ வீரபாண்டியன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களை மீட்டனர். பின், 122 மீனவர்களையும் வேனில் ஏற்றி, சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். அவர்களை உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலிபோராளிகள் மேலும் ஒரு தொகுதியினர் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி விடுதலை!

Saturday,December,31,2011
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலிபோராளிகள் மேலும் ஒரு தொகுதியினர் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கும் வைபவம் மட்டக்களப்பு நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வுக்குப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உட்பட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுமார் 70 முன்னாள் போராளிகள் ஜனவரி மாதம் 22ம் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருங்கள் : உம்மன்சாண்டிக்கு கருணாநிதி கடிதம்!

Saturday,December,31,2011
சென்னை::முல்லை பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும்படி கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. கேரளாவில் உள்ள தமிழர்கள் மீதும், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் குறித்து நான் தெரிவித்த கவலைகள் தவறான தகவல்கள் அடிப்படையில் அமைந்தவை என அதில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனது கவலைகள் தவறான தகவல்கள் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியான உண்மையான சம்பவங்கள் அடிப்படையில் அமைந்தவை. நெடுங்குண்டம், கைலாசபாறை, மணப்பாடு, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள், சமூக விரோத கும்பல்களால் விரட்டியடிக்கப்பட்டது, கேரள எல்லைகளில் வசிக்கும் தமிழர்களின் சொத்துகளுக்கு தீ வைத்தல் மற்றும் கல்வீசி தாக்குதல், சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்களின் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது என பல்வேறு சம்பவங்கள் குறித்து பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் உண்மை நிலையை உங்களுக்கு உணர்த்தும்.

தமிழ்நாட்டுடனும் தமிழக மக்களுடனும் உள்ள நல்ல உறவை கேரளா மதிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த 9ம் தேதி திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுக்கும் கேரள மக்களுக்கும் உள்ள வரலாற்று உறவுகளை குறிப்பிட்டுள்ளோம். பண்டைய தமிழகத்தை ஆண்ட 3 பேரரசர்களில் சேர மன்னர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்த சிந்தனையாளர்களை தமிழகம் கவுரவித்து மதித்து வந்துள்ளது. இதே போல் தமிழக சிந்தனையாளர்களை கேரளம் மதித்து வந்துள்ளது. முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டியதன் அவசியத்தை நான் உணரவில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். முல்லைப்பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 7 பேர் வல்லுனர் குழு அணை வலுவாக இருப்பதாக கடந்த 2001ம் ஆண்டு தெரிவித்துள்ளது. அணை வலுவாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மத்திய அரசு தனது நிலையை தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இந்தப் பிரச்னை நிலுவையில் இருக்கும் போது புதிய அணை கட்ட முயல்வது நீதி நடவடிக்கைகளை குழிதோண்டி புதைப்பதற்கும், தமிழக மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதற்கும் சமமாகும்.

இரண்டு மாநிலங்களிலும் அமைதியை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங்கும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். பொறுப்புள்ள தேசிய கட்சியின் அனுபவம் வாய்ந்த தலைவர் என்ற முறையில் அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நீங்கள் அறிவீர்கள். சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அணையின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் என கேரள மக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். இந்திய குடிமகன்களின் நலனை இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், சுப்ரீம் கோர்ட்டும் கவனித்து கொள்ளும். இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

Saturday,December,31,2011
சென்னை::ஆங்கில புத்தாண்டையொட்டி கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசய்யா: அனைவருக்கும் எனது இதயபூர்வமான புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், இந்த புத்தாண்டில் அமைதியுடனும், நல்ல வளத்துடனும் மக்கள் வாழ வேண்டும். இந்தியா மேன்மையடைய வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: புதுப்பொலிவுடன் புத்தாண்டு பிறக்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் வேளை இது. சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும்.

திமுக தலைவர் கருணாநிதி: ஆட்சியாளர்களின் அடக்கு முறை போக்குகள் மாறிட வேண்டும். ஏழை, எளியோர் நலம் பெற திமுக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும்; மின்சார தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலை வாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும். அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து; தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்து குலுங்கட்டும். தொடங்கும் 2012 ஆங்கில புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): 2012ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தென்றலாக வரவேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன்னேற்றத்தையும் தர வேண்டும். போனது புயலாக இருக்கட்டும். வருவது தென்றலாக இருக்கட்டும். இந்த புத்தாண்டு நன்மை பயக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
ஞானதேசிகன் (தமிழக காங்கிரஸ் தலைவர்): புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டில் எல்லா நலமும், வளமும் தமிழக மக்கள் பெற வேண்டும். இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): புதிய நம்பிக்கை, புதிய உற்சாகத்துடன் 2012ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிற அனைத்து மக்களுக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ (மதிமுக தலைவர்): கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும், தமிழ்குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது. ஊழலற்ற ஆட்சி வேண்டும். மக்கள் மகிழ்ச்சி பெற 2012ம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.

நான்கு இந்திய மீனவர்கள் இன்று கைதடி நீதவான் நீதிமன்றத்திற்கு!

Saturday,December,31,2011
இலங்கை::நான்கு இந்திய மீனவர்கள் நேற்று இரவு தமது படகு விபத்துக்குள்ளான நிலையில் நெடுந்தீவின் மேற்கு கடற்கரையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைதடி நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் இம்மீனவர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஒப்படைக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதுவருட கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் - அஜித் ரோஹண!

Saturday,December,31,2011
இலங்கை::புதுவருட பிறப்பைக் கொண்டாடும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பபடும் பல்வேறு களியாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு திட்டமொன்றை பொலிஸார் தயாரித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றவர்களை கைதுசெய்வதற்கும் முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமாக அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

காலிமுகத்திடலின் பாதுகாப்புக்காக மாத்திரம் 850 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

கடந்த சில தினங்களின் தரவுகளை அவதானிக்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் சகல முக்கிய இடங்களிலும் இன்றிரவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றவர்களை கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை பொலிஸார் இன்றிரவு முன்னெடுக்கவுள்ளனர்.

இந்திய மாணவன் பிரிட்டனில் கொலை : கொலையாளிகளுக்கு ஜாமீன்!

Saturday,December,31,2011
லண்டன்: கடந்த வாரம் (வெள்ளி கிழமை) பிரிட்டனில் 23 வயது நிரம்பிய இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டார். அந்நாட்டை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு அக்கொலையில் சம்பந்தம் இருப்பதாக கருதி அவர்களை பிரிட்டன் போலீஸார் கைது செய்தனர். மேலும் இன்று அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய நாட்டை சேர்ந்த பித்வே(23) என்பவர் மேல்படிப்புக்காக பிரிட்டன் சென்று, முதுகலை கல்வியை பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் 26 வெள்ளி கிழமையன்று திடீரென்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இத்தகவலை பிரிட்டன் போலீசார், மாணவரின் பெறோர்களுக்கு தெரியபடுத்தவில்லை. மேலும், தன் மகன் கொலை செய்யப்பட்ட விஷயத்தை ஃபேஸ்புக் மூலம் அறிந்த அம்மாணவனின் தந்தையிட்ம் பிரிட்டன் போலீசார் மன்னிப்பு கோரியதோடு கொலையில் சம்பந்தபட்ட மூன்று மாணவர்களை கைது செய்தனர். அம்மூவரும் இன்று ஜாமீனில் வெளியானார்கள். இந்நிலையில், தன் மகன் உயிரை பறித்தவர்களுக்கு அவ்வளவு தான் தண்டனையா என்று பித்வேயின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

2011இல் இந்தியாவின் அயல் கடன் 327 பில்லியன் டாலர்!!

Saturday,December,31,2011
இந்தியாவின் அயல்நாட்டுக் கடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6.6 விழுக்காடு அதிகரித்து 326.6 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலர்களாக அதிகரித்துள்ளது.

2011ஆம் ஆண்டில் அயல் நாட்டில் இருந்து வாங்கிய வணிகக் கடன்கள், ஏற்றுமதிக் கடன்கள், குறைந்த கால கடன்கள் ஆகியவற்றின் கூட்டுத் தொகை இதுவாகும். இது கடந்த ஆண்டு 306.4 பில்லியனாக இருந்தது.

அயல் நாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளில் உள்ள நிதிகள், வணிகக் கடன்கள் ஆகியவையும் இதில் அடக்கமாகும். இந்தியாவின் மொத்த கடனில் குறைந்த கால கடன்கள் 21.9 விழுக்காடு, நீண்ட காலக் கடன்கள் 78.1 விழுக்காடு ஆகும்.

அயல் நாட்டில் இருந்து வாங்கிய வர்த்தகக் கடன்கள் 30.3 விழுக்காடு, அயல் நாடு வாழ் இந்தியர்களின் வைப்பு நிதி 16 விழுக்காடு, மற்ற கடன்கள் 15 விழுக்காடு.

2006ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை இந்தியா வாங்கிய வர்த்தக கடன்கள் 27.4 விழுக்காடு அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், அயல் நாட்டில் இருந்து வாங்கிய வர்த்தகக் கடன்களுக்கு அளிக்க வேண்டிய வட்டிக்கு ரூபாயில் அதிகம் செலவழிக்க வேண்டியதிருக்கும் என்பதால் இது கவலையளிக்கக் கூடியதாகும் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கி தீர்வு காண வேண்டும்-அமைச்சர் வாசுதேவா!

Saturday,December,31,2011
இலங்கை::அரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை கையாண்டு அரசாங்கம் புதுவருடத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கிவிடும் என்று அமைச்சர் வாசுதேவநாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பரந்தளவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. விரைவில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தீர்வு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் வாசுதேவநாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில், அரசியல் தீர்வு என்பது நாட்டிற்கு அத்தியாவசிய விடயமாகவே காணப்படுகின்றது. இதனால் தான் அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது.

அடுத்தாண்டில் நிச்சயம் தீர்வு வந்து விடும். இதற்கு தடையாக உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இணக்கப்பாட்டுடன் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

உதாரணமாக சிறு குற்றங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்க வேண்டும். காணி அதிகாரத்தில் மத்திய அரசிற்கும் மாகாண சபைக்கும் இடையில் பொது சுயாதீன ஆணைக்குழு ஊடக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இதனை ஒரு யோசனையாகவே கூற விரும்புகின்றேன்.

விரைவில் அரசியல் தீர்வை வழங்க முடியாமைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மீதான பிரச்சினையே காரணமாகும்.

இதனை தொடர்ந்தும் இழுபறி நிலையில் வைத்துக் கொள்ள முடியாது. புது வருடத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும். இதனூடாக விரைவில் தமிழ் மக்களின் அரசியல் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவேண்டும்.

அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் எனக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை விஜயம்!




Saturday,December,31,2011
சென்னை::முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் விஜயம். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது.ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார்.அப்துல்கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விடயங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த இளைஞர்கள் கைது!

Saturday,December,31,2011
இலங்கை::சுவீடன் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர் கொழும்பு பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நீர் கொழும்பு கடற்கரையோரத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த இளைஞர்களே இவ்வாறு சுவீடன் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

15 முதல் 17 வயது வரையிலான ஐந்து இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் மது போதையில் இருந்ததாகவும், பெண் சுற்றுலாப் பயணி அவர்களை கடந்து சென்ற போது இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

பெண் சுற்றுலாப் பயணி சத்தமிட்டதனைக் கேட்ட கவால்துறையினர், இளைஞர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் : முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை!:-நிவாரண பணிக்கு ரூ.150 கோடி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

Saturday,December,31,2011
சென்னை::அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவில் பேசிய அவர், தமிழ்நாட்டை தாண்டி, தேசிய அரசியலிலும் சாதனை படைப்பதற்கான காலம் அதிமுகவிற்கு நெருங்கிவிட்டதாகவும் கூறினார்.

மேலும், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் அதிமுகவினருக்கு மன்னிப்புக் கிடையாது என்றும் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்திற்காக கையேந்தி போராட வேண்டிய நிலை ஒருபோதும் வராது என்றும் அவர் கூறியுள்ளார். மிகுந்த கவனத்துடன் தாம் ஆட்சியை நடத்தி வருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிவாரண பணிக்கு ரூ.150 கோடி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

சென்னை::புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புயல் மற்றும் மழை சேதங்கள், மேற்கொள்ள வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புயலால் சாய்ந்த மரங்கள், மின் கம்பங்களை சரி செய்யவும், போக்குவரத்தை சரி செய்யவும் உத்தரவிட்ட முதல்வர், உடனடி நிவாரணப்பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ. 150 கோடியை உடனடி நிதியாக விடுவித்து உத்தரவிட்டார்.

அதே போல புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும் நிவாரணப்பணிகளை பார்வையிட திருவள்ளூர் மாவட்டத்துக்கு அமைச்சர் ரமணா, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சின்னையா, விழுப்புரம் மாவட்டத்துக்கு சி.வி.சண்முகம், நாகை மாவட்டத்திற்கு ஜெயபால், கடலூர் மாவட்டத்திற்கு சம்பத் ஆகியோரை அனுப்பியும் முதல்வர் உத்தரவிட்டார்.

வடக்கு கிழக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பில் UNPகட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்டுள்ள கருத்து நகைப்பிற்குரியது-கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday,December,31,2011
இலங்கை::வடக்கு கிழக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்டுள்ள கருத்து நகைப்பிற்குரியது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கை புலிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜயலத் கொண்டிருந்தார் என அமைச்சர் கெஹலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜயலத் ஜயவர்தன இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் ஆச்சரியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்காது 13ம் திருத்தச் சட்ட மூலத்தின் ஏனைய விடயங்களை அமுல்படுத்துவது என்பது தொடர்பில் நாட்டின் எல்லாத் தரப்பினரும் இணக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தேசியக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு இவ்வாறான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை அரசாங்கம் ஏற்கனவே பெயரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் வழியைப் பின்பற்றி தெரிவுக்குழுவிற்கான தமது பிரதிநிதிகளை பெயரிட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1985ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைகள் முதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் உரிய அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என அமைச்சர் ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் தீர்வுத் திட்டத்தை எட்டும் அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு - ஜயலத்தின் கருத்து UNPயின் நிலைப்பாடு அல்ல – காமினி ஜயவிக்ரம!

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்ட கருத்தை, கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது என கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு பகிரப்பட வேண்டும் எனவும், அவ்வாறு பகிரப்படாவிட்டால் 13ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் ஜயலத் ஜயவர்தன கோரியிருந்தார்.

காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், இந்தக் கருத்தானது ஜயலத் ஜயவர்தனவின் தனிப்பட்ட கருத்து எனவும், கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல எனவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மிக முக்கியமான தேசியப் பிரச்சினை தொடர்பில் கட்சியின் செயற்குழுவே தீர்மானங்களை வெளியிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் கட்சியின் கொள்கைகள் பற்றி கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஜயலத் ஜயவர்தனவின் கருத்தை, கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக கருத முடியாது என காமினி ஜயவிக்ரம பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தானே புயலின் எதிரொலி : தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலான மழை!

Saturday,December,31,2011
திண்டுக்கல்::தானே புயலின் எதிரொலியாக தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டுமின்றி, திண்டுக்கல், கரூர் போன்ற உள்மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று பலத்த காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது.

ஊட்டி மத்திய பேருந்து சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கரூர் மாவட்டத்தில், தானே புயலின் தாக்கத்தால் நாள் முழுவதும் லேசான மழை பெய்தது. மாலை நேரத்தில் கனமழை பெய்ததால், அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனிடையே, தானே புயலின் காரணமாக சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என அதன் இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதியைக் கடந்து கேரளாவை நோக்கி தானே புயல் நகர்வதால், உள் மாவட்டங்களில் இன்று மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரில் ஜனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் 1400 பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர்-றொகான் குணரட்ண!

Saturday,December,31,2011
இலங்கை::போரின் இறுதிக்கட்டத்தில் 1200 பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட, தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய புலமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் 'வெளிநாட்டு மண்ணில் புலிகளைத் தோற்கடித்தல்' என்ற பொருளில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்:-

போரின் இறுதிக்கட்டத்தில் 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சில அமைப்புகள் சொல்கின்றன. வேறு சில அமைப்புகளோ 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றன. இன்னும் சில தனிநபர்கள் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சொல்கின்றன. ஆனால் எந்த அமைப்பிடமும் கொல்லப்பட்ட பொதுமக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இல்லை.

உண்மையில், ஜனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் 1400 பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் புலிகளின் மீது, அவர்களின் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எவ்வாறாயினும் 1200 பொதுமக்களினதும் மரணங்களுக்கு இலங்கைப் படையினரே பொறுப்பு எனவும் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப் படையினர் பங்கேற்ற படை நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டது மிகமிகக் குறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மூன்று முக்கியமான தவறுகளை இழைத்துள்ளதாக பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

ஒரு மோதலின் முடிவில், ஒரு சில மாதங்களுக்குள் உண்மையான இழப்பு விபரங்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை ஒனறு சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். போர் முடிவுக்கு வந்ததும் இலங்கை அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்காமை முதலாவது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தாமதித்த காலப்பகுதியில், புலிகள் மதிப்புமிக்க அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளை தம் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு செய்த இரண்டாவது தவறு, ஐ.நா நிபுணர்குழுவை அழைக்காதது.

அந்தக் குழுவை கொழும்புக்கு அழைத்து உண்மையான தகவல்களை வழங்கி, நிலைமையை நேரில் பார்வையிட அனுமதித்திருந்தால், அந்தக் குழு தவறான தகவல்களுடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பித்திருக்காது. அவர்களை அனுமதிக்க மறுத்ததால், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஒரு பக்கத் தகவல்களை மட்டுமே கொண்டதாக வெளியானது.

மேலும், மூன்றாவதாக, தவறான செய்திகளை முறியடிக்கும் பொறுப்பை நிறைவேற்ற இலங்கை வெளிவிவகார அமைச்சு தவறிவிட்டது. பாதுகாப்பு அமைச்சு, தகவல் ஊடக அமைச்சுடன் இணைந்து, புலிகளின் பரப்ரைகளை முறிடிக்க வேண்டிய பொறுப்பை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளவில்லை என பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புலிகள் சார்பு அமைப்புகள் சொல்வதை இப்போதும் பலரும் நம்புகிறார்கள்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளுடன் கொண்டிருந்த சிறப்பான உறவு சீர்குலைந்தமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் கடந்த காலங்களில் இருந்த மிகச்சிறந்த உறவு இப்போது இல்லை.

போரின் இறுதிகட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று சரியாக விளக்கமளிக்கப்படாததால், புலிகள் சார்பு அமைப்புகள் சொல்வதை குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சுகளும், அரசார்பற்ற நிறுவனங்களும் நம்புகின்றன என்றுபேராசிரியர் றொகான் குணரட்ண மேலும் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

Saturday,December,31,2011
இலங்கை::போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் அசராங்கம் கவனம் செலுத்தத் தவறினால், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படா பட்சத்தில் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரணிகள், போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் சத்தியாக் கிரக போராட்டங்களை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சாதகமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படாத பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், தமி;ழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கும் இடையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த பேச்சுவார்;த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு ஏற்கனவே தமது தீர்வுத் திட்ட யோசனைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

நாகர்கோவிலில் கூடங்குளம் அணு உலை ஆதரவு மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Saturday,December,31,2011
நாகர்கோவில்::அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி மற்றும் கூடங்குளம் அணு உலை ஆதரவு மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் அணு உலை ஆதரவு 3 நாள் மாநாடு நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாநாட்டுக்கு வந்திருந்த ஒரு பிரமுகர் மண்டபத்தின் முகப்பில் நின்று கொண்டு இருந்ததார். அப்போது ஒரு காரில் 4 பேர் அங்கு வந்து, பிரமுகரின் சட்டையை பிடித்து இழுத்து கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகவா மாநாடு நடத்துகிறீர்கள்.

இது போல் மாநாடு நடத்தினால் மண்டபத்தை வெடிகுண்டு வீசி தகர்த்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமியிடம் கேட்ட போது, "கூடங்குளம் அணு உலை ஆதரவு மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. இருந்த போதிலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது'' என்று கூறினார்.

அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கு நெருக்கமான 8 பேர் அதிரடி நீக்கம்!

Saturday,December,31,2011
சென்னை : சசிகலாவுக்கு நெருக்கமானவர்களான 8 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக ஜெயலலிதா நேற்று நீக்கியுள்ளார். அதிமுகவில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் கடந்த 19ம்தேதி அதிரடியாக கட்சியை விட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சில நாட்களில் சசிகலா குடும்பத்தினர் 3 பேர் நீக்கப் பட்டனர். இதுவரை 17பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சசிகலாவுக்கு நெருக்கமானவர்களான 8 பேரை ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் மன்னார்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் அசோகன், மன்னார்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ வக்கீல் சீனிவாசன், சிவா. ராஜமாணிக்கம், சிஆர்சி ஆசைத்தம்பி, காசிப்பாளையம் நகர ஜெயலலிதா பேரவை இணைச் செய லாளர் மோகன், கோவை தமிழ்மணி, விஜயகுமார், லியோ என்ற விமல் ஆதித்தன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடமராட்சியின் கரவெட்டி துன்னாலை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் சிக்கி இருவர் காயம்!

Saturday,December,31,2011
இலங்கை::வடமராட்சியின் கரவெட்டி துன்னாலை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் சிக்கி இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீதியோரமாக கண்டெடுத்த பொதியொன்றினை உடைத்துப்பார்க்க முற்பட்ட வேளையிலேயே அது வெடித்ததாக கூறப்படுகின்றது. இவ்வெடிப்பு சம்பவத்தினில் அதே இடத்தை சேர்ந்த இராசகுலசிங்கம் தங்கமலர் (வயது 33) மற்றும் மகன் முறையான தவராசசிங்கம் சசிகரன் (வயது 9) ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். முன்னதாக இவர்கள் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர்.
யாழ் மாநகர சபை புலிப் பயங்கரவாதிகளை ”கௌரவமான மனிதர்கள்” என்று கூற சபை அனுமதிக்கிறது: புலிகள் முஸ்லிம் சமூகதிற்கும் தமிழ் சமூகதிற்கும் இழைத்துள்ள கொடுமைகளை பேசமுடியவில்லை- எம்.எம்.ரமீஸ்!

Saturday,December,31,2011
இலங்கை::யாழ்.மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. சபை ஆரம்பித்தவுடன் முதல்வரின் விசேட அனுமதி பெற்ற ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயக்காந், ‘சிறைகளில் வாடுவோரின் விரைவான விடுதலையும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையும்’ என்ற தலைப்பிலான பிரேரணை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.

இதை தொடர்ந்து யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் இழப்புகளை பற்றி பேசினார் அந்த உரையையும் இடைமறித்த புலிசார்பு உறுப்பினர்கள், இந்த உரை இனரீதியான பாகுபாட்டுடன் புலிகளை குற்றஞ்சாட்டுவதாக அமைந்துள்ளது என்று உரையை இடைமறித்து குழப்பினர்,.\
ந்தப் பிரேரணையை எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் மு.றெமிடியஸ் கூச்சலிட்டார். எதிர்கட்சி உறுப்பினர் சங்கையா, இது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் எனக் குற்றம் சாட்டினார்.

ஆளும் தரப்பு உறுப்பினர் நிஷாந்தன், ‘இது ஜனநாயகப் பண்புகள் அற்ற ஈ.பி.டி.பி.யின் அறிக்கை மாதிரி இருக்கிறது’ எனக் கூறி இந்த பிரேரணையை சபையில் கிளித்து எறிந்தார். இந்தச் செயற்பாட்டை அடுத்து சபை 30 நிமிடங்கள் குழப்பத்தில் மூழ்கியது அதன் போது மிகவும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டது .

புலிகள் கௌரமானவர்கள் அவர்களைக் குற்றம் சொல்வதற்கு இங்கு நாம் யாரையும் விடமாட்டோம் என சபையில் எதிரணி உறுப்பினர் விந்தன் தெரிவித்தார். விந்தன் முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று தெரிவித்துள்ளார்.

இதில் தலையிட்ட மாநாகர முதல்வர் ஜனநாயகப் பண்புகயோடு நடந்து கொள்ளும் படி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன் ‘இந்த சபையில் உண்மையில் யார் முதல்வர்? யோகேஸ்வரியா, விஜயக்காந்தா? என கேள்வி எழுப்பியவுடன் சபையில் அமர்ந்திருந்நத விஜயக்காந் ஆளும் உறுப்பினர் நிஷந்தனைத் தாக்கத் தொடங்கியதுடன் ஆளும் தரப்பிற்கிடையில் மோதல் வெடித்தது.
புலிகள் முஸ்லிம் சமூகதிற்கும் தமிழ் சமூகதிற்கும் இழைத்துள்ள கொடுமைகள் பற்றி தமிழர்களோ , முஸ்லிம்களோ பேசினால் அதனை இனவாதம் என்று முத்திரை குத்தி புலி தொடர்பாக பேசியவர்களை இனவாதிகளாக காட்டும் செயல் அரங்கேறியுள்ளது. புலிகள் மேற்கொண்ட அநியாயங்களை சுட்டிக்காட்டி அவர்களின் பயங்கரவாதம் பற்றி பேச முடியாத சபையில் விடுதலை புலி பயங்கரவாதிகளை ”கௌரவமான மனிதர்கள்” என்று கூறுவதை எவராலும் தடுக்க முடியவில்லை என்பது மிக தெளிவான ஆபத்தை உணர்த்துகின்றது , புலிகளை கௌரவமான மனிதர்களாக சித்தரிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட மாநகர சபை நடவடிக்கை எடுக்குமா ?

யாழ் மாநகர சபை என ஜனநாயக சபையில் புலிப் பயங்கரவாதிகளை ”கௌரவமான மனிதர்கள்” என்று கூற சபை அனுமதிக்கிறது ஆனால் அந்த ஜனநாயக சபையில் எவரும் புலிகள் இழைந்த மனித குலத்திற்கு எதிரான கொடுமைகளை பேசமுடியவில்லை என்றால் அது மீண்டும் பயங்கரவாதம் ஜனநாயகத்தின் குரல் வலையை நசுக்க தொடங்கியுள்ளது என்பதுதான் பொருள்.

வட கொரிய இளம் தலைவருக்கு புதிய பதவி!

Saturday,December,31,2011
பியாங்யாங்::வட கொரியாவின் சர்வ அதிகாரம் படைத்த தலைவராக, கிம் ஜாங் உன் அறிவிக்கப்பட்டுள்ளார்.வட கொரிய அதிபர் கிம் ஜாங் இல், கடந்த 17ம் தேதி மாரடைப்பால் காலமானார்.வட கொரிய அரசியலில், தொழிலாளர் கட்சி, ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு கமிஷன் ஆகிய மூன்று அமைப்புகள் தான் பலம் வாய்ந்தவை. இவை தான், நாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்கும். மறைந்த தலைவர் கிம் ஜாங் இல், இந்த மூன்றுக்கும் தலைவராக இருந்தார்.

அவரது மறைவை அடுத்து, அவரின் இளைய மகன் கிம் ஜாங் உன், ராணுவத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் தலைவராகவும், அவரை அரசு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அவர் வட கொரியாவின் சர்வ அதிகாரம் படைத்த தலைவராகியுள் ளார். கிம் ஜாங் இல்லின் இரண்டாவது நாள் இறுதிச் சடங்கு, தலைநகரில் உள்ள கிம் சங் சதுக்கத்தில், நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம் ஜாங் உன்னுக்கு, ராணுவ தளபதிகள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

வதந்திகளை பரப்பி மக்களை அச்சுறுத்தி நாட்டுக்கு அபகீர்த்தி செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday,December,31,2011
இலங்கை::சென்னையிலிருந்து விமானம் மூலம் கொண் டுவரப்பட்ட இறந்தவரின் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு வந்த அவரது 11 உறவினர்கள் பத்து நாட்களாக காணாமல் போயிருக்கிறார்கள் என்ற செய்தியை டிசம்பர் மாதம் 29ம் திகதி உதயன் பத்திரிகையின் முன்பக் கத்தில் பார்த்த பின்னர் அதுபற்றி தாம் விசாரணை களை மேற்கொண்ட போது இது ஒரு தவறான செய்தி என்பதை தெரிந்து கொண்டதாக பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி, அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினகரனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இது போன்ற செய்திகளை சில விஷமிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் போர்வையில் பரப்பி நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை உண்டுபண்ண எத்தனிக்கிறார்கள் என்றும் அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், சில அரசியல் சக்திகள் அரசியல் இலாபம் திரட்டுவதற்காக மக்க ளிடையே இதுபோன்ற போலியான வதந்திகளை கிளப்பி, மக்களை அச்சுறுத்துவதற்கும் எத்தனிக்கிறார்கள்.

அரசியலில் செல்லாக்காசாக மாறிக் கொண்டிருக்கும் இந்த சக்திகள் குட்டையை கிளப்பிவிட்டு, வேடிக் கைப் பார்த்து சுயலாபம் தேடுவதற்கும் முயற்சி செய்கின்றனர். கடந்த காலத்திலும் இந்த சக்திகள் இத்தகைய போலிப் பிரசாரங்கள் மூலம் சுயவியாபாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் பணம் திரட்டுவதற்கும் எத்தனித்த எத்தனையோ நிகழ்வுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழ் மக்கள் இத்தகைய பொய் பிரசாரங்களை நம்பி ஏமாந்துவிடமாட்டார்கள்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் போன்றவை தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற தப்பபிப்பிராயத்தை வெளிநாடுகளில் பரப்புவதன் மூலமும் சுய பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான பொய் காரணங்களை காட்டி, வெளிநாடு செல்ல எத்தனிப்பவர்களுக்கு உதவும் முகமாகவே இத்தகைய போலி செய்திகளும், வதந்திகளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரப்பப்படுகின்றன.

11 பேர் காணாமல் போன செய்தி கிடைத்தவுடன் விசாரணைகளை செய்து உண்மையை வெளிப்படுத்துவேன் என்ற அச்சத்தில், இந்த போலி செய்தியை வெளியிட்டவர்கள் இப்போது மெளனமாகியிருக்கிறார்கள்.

ஒரு தவறான செய்தியை வெளியிட்ட இப்பத்திரிகை அதனை திருத்தி உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூறும் பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிப்பது நல்லது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் மீண்டும் சமாதானமும் அமைதியும் திரும்பிக் கொண்டிருப்பதனால் இன்று நாடு பொருளாதாரத்துறையில் அதிவேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது. இப்போது எவ்வித அச்சுறுத்தலுமின்றி தமிழ் மக்கள் குறிப்பாக வடபகுதி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

இலங்கையில் மீண்டும் அமைதியும், சமாதானமும் ஏற்பட்டிருக்கிறது. என்ற நற்செய்தியை வெளிநாட்டு அரசாங்கங்கள் தெரிந்து கொண்டால் அந்நாடுகள் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நட்டுக்கோ திருப்பி அனுப்பிவிடும் என்ற அச்சத்தினால் அவர்களை ஆதரிக்கும் சில சக்திகள் இத்தகைய போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு அரசாங்கங்களை நம்ப வைப்பதற்காகவே இத்தகைய போலி பிரசாரங்களும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இவ்விதம் நாட்டுப்பற்றற்ற முறையில் இலங்கைக்கு வெளிநாடுகளில் அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய தேசத்துரோக செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

கடலூர், புதுச்சேரியில் தாண்டவமாடியது ‘தானே’ கோரப்புயலுக்கு 40 பேர் பலி!

Saturday,December,31,2011
கடலூர்::தானே’ புயல் கோரத்தாண்டவத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் சின்னாபின்னமானது. மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான படகுகள் நொறுங்கின. புதுச்சேரி தெருக்கள் எல்லாம் அலங்கோலமாயின.

நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புதுச்சேரியில் இருந்து 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டு நகர தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணியளவில் புயல் ஆக்ரோஷமடைந்தது. காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை ‘தானே’, தாண்டவம் ஆடியது. பயங்கரமான இரைச்சலுடன் சூறைக் காற்று வீசியது.

தென்னை மரங்கள், மின் கம்பங்கள் தலை திருகினாற் போல் திருகி விழுந்தது. கூரை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. பெரிய விளம்பர நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர்கள் மற்றும் கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்து பேனர்களும் புயலின் சீற்றத்துக்கு இரையாயின. சுவர்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான கூரை வீடுகள் மீது மரங்கள் விழுந்தது.

மரம், சுவர் இடிந்து விழுந்தது உள்பட புயலுக்கு கடலூரில் 28 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கான பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், கம்பிகள் சேதமடைந்தன. சுமார் க்ஷீ 5 ஆயிரம் கோடி பொருட்கள் சேதமடைந்துள்ளன. மின்விநியோகம் சீராக குறைந்தது 15 நாள் ஆகும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போக்குவரத்து துண்டிப்பு: தானே புயலால் சென்னை&புதுச்சேரி இசிஆர் சாலை மற்றும் புதுவை&சிதம்பரம் சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி, சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் போக்குவரத்து துண்டிப் பானது. இதுபோன்று விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி உள்ளிட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பானது.

புதுச்சேரியில் 7 பேர் பலி: தானே புயல் புதுவை மாநிலத்தையும் நிலைக்குலைய செய்தது. புயலுக்கு 7 பேர் இறந்தனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை நாசமானது. அதுபோல, சூறைக் காற்றில், முக்கிய வீதிகள் பல சின்னாபின்னமாயின. விளம்பர போர்டுகள்,கூரைகள் எல்லாம் பிய்த்தெறியப்பட்டன. சென்னையில்: சென்னை பெரம்பூரில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். அதேபோல ஆவடியில் மின்கம்பியை மிதித்த ஒருவர் பலியானார். காஞ்சிபுரத்தில் 3 பேர் மழைக்கு பலியாகினர்.

புயல், கனமழை எதிரொலி பஸ்களில் கூட்டம் குறைந்தது சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி!

சென்னை::தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பஸ்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதேபோல், கடற்கரை, சுற்றுலா இடங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன. புயல் மழை காரணமாக வள்ளுவர் கோட்டம், வண்டலூர் பூங்கா, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை, மாமல்லபுரம், விஜிபி, மாநகராட்சி பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், பிர்லா கோளாரங்கம், அண்ணா நூலகம் மற்றும் சினிமா தியேட்டர்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல், வெளியூர் செல்லும் பஸ்களும் காலியாகவே சென்றன. வழக்கமாக வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையில், வெளியூருக்கு அதிகமானோர் செல்வார்கள். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புயல், மழை வெள்ளம் காரணமாக பொதுமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்தனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்கு வரத்து பெருமளவு குறைந்து காணப்பட்டது.

மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு முக்கிய வருவாயை ஈட்டி தருவதே Ôபீச் ரூட்கள்Õ தான், அதிலும், தற்போது பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் சராசரியாக ரூ.2.60 கோடி வருமானம் கிடைக்கும். அதில், தற்போது ஸீ70 லட்சம் வரை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை: நிரந்தர சமாதானத்துக்கு சிறந்த ஆவணம்-அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ரெல்மோ லங்கியூலர்!

Saturday,December,31,2011
இலங்கை:இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தையும், நிலை யான சமாதானத்தையும் ஏற்படுத்துவ தற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக் கையானது அரசாங்கத்துக்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ரெல்மோ லங்கியூலர் தெரிவித்துள் ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்றிருக்கும் அவர், நாட்டில் சமாதா னத்தையும், நல்லி ணக்கத்தையும் ஏற்படுத் துவதற்கு அரசா ங்கம் எடுத்திருக்கும் நட வடிக்கைகளையும் வரவேற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை சமூகத்தவர்களின் அழைப்பையேற்று தனிப்பட்ட விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்திருந்த ரெல்மோ லங்கியூலர் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு கூறினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பல்வேறு விடயங்களை ஆராய்ந்திருப்ப தாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அக்கறையுடன் இருப்பதாகவும் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த அறிக்கையானது சகல தரப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டால் சட்டரீதியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இதனை நாம் வரவேற்கிறோம். மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது என்ற செய்தியையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கைக்கும், வெளிநாட்டுக்கும் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது தொடர்பில் அவுஸ்ரேலியா உன்னிப்பாக அவதானிக்கும் அதேநேரம், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்ரேலியா தொடர்ந்தும் தயாராகவுள்ளது.

இலங்கை விஜயத்தின்போது நான் யாழ்ப்பாணம், காலி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்தேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படு கின்றன. அங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதே நடைமுறையான நல்லிணக்கமாக அமையும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதைக் காணக்கூடியதாகவிருந்தது.

அதேநேரம், யாழ் குடாநாட்டிலுள்ள இராணுவத்தினரின் பிரசன்னங்களைக் குறைப்பதற்கே விரும்புவதாக யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் என்னிடம் கூறினார். அங்குள்ள இராணுவ அதிகாரிகள் உட்பட கீழ்மட்ட இராணுவத்தினருடன் கலந்துரையாடியதில் அனைத்துப் பொறுப்புக்களையும் யாழ் குடாநாட்டு மக்களிடம் கையளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவதற்கே விரும்புவதாகக் கூறுகின்றனர்.

யாழ் குடாநாட்டிலுள்ள வீடற்றவர்களுக்கு இராணுவத்தினர் வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். இதனையிட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அத்துடன், யாழ் குடாநாட்டிலுள்ள மீனவர் கிராமம் ஒன்றுக்கு அவுஸ்ரேலியா நிதியுதவி வழங்கியுள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் உதவி வழங்குவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் அவுஸ்ரேலியா தயாராகவே உள்ளது. இலங்கையின் உண்மை நிலைமை தொடர்பில் சக அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

Friday, December 30, 2011

தினமும் 20 சிகரெட் பிடிக்கிறேன் : மது ஷாலினி!!

Friday, December,30, 2011
சென்னை::நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன் என்றார் நடிகை மது ஷாலினி. அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக்கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

சிகரெட் வாடையே எனக்கு பிடிக்காது. அதை பிடிப்பவர்களையும் அடியோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக்கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித்தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவேன்.

வேடத்துக்காக சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டதே கஷ்டமான அனுபவம். காட்சியில் நடிக்கும்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 சிகரெட்டாவது பிடிக்கிறேன். பலமுறை மறுத்த பிறகும் என்னையும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும் இணைத்து நிறைய கிசுகிசு வருகிறது. அதெல்லாம் வெறும் வதந்திதான். தொழில் ரீதியாகத்தான் நாங்கள் பழகுகிறோம். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் காதலியைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை:-ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டு கொலை:-கொழும்பில் மீன் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை!

Friday, December,30, 2011
இலங்கை::தான் நீண்ட காலமாக உயிருக்கு உயிராக நேசித்து வந்த பெண்ணைச் சுட்டுக் கொன்ற புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.புத்தளம் மதுரங்குளியிலுள்ள மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று புத்தளம் மதுரங்குளியிலுள்ள அவரது காதலியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட கான்ஸ்டபிளும் அவரது காதலியும் பேசிக் கொண்டிருந்த அறையை யுவதியின் தந்தை திறந்து பார்த்த போது அங்கு இருவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டு கொலை!

கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட பிரதே சபையின் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் இந்திக்க சந்திரசிறி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட இந்திக்க, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மினுவங்கொட கொட்டாதெனிய மாவுஸ்ஸா என்னும் இடத்தில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுண்ட இந்திக்க சந்திரசிறிக்கு எதிராக, பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திக்க ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே, முன் விரோதம் காரணமாக இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் மீன் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை!

கொழும்பு 15. முகத்துவாரம் பகுதியில் வைத்து கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்படும் மீன் வர்த்தகர் கொழும்பின் பாலத்துறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

36வயதான இராஜேந்திரன் முரளிதரன் என்பவரே கொல்லப்பட்டவர் என்ற பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர் தாம் பயணம் செய்த முச்சக்கர வண்டியுடன் கடந்த புதன்கிழமையன்று முகத்துவாரம் (மோதரை), எஸ் பி பெர்னாண்டோ மாவத்தை என்ற இடத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்டிருந்தார்.

இக்கொலை தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்ட நாள் தனிப்பட்ட முறுகலே இந்த கடத்தல் மற்றும் கொலைக்கான காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தானே உஷார் முடங்கியது இயல்புநிலை:தானே புயல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

Friday, December,30, 2011
சென்னை::தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது. இதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசப்படும் பெயர் ‘தானே’. வங்கக் கடலில் ஒரு வாரம் முன்பு குறைந்த காற்றழுத்த நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று தற்போது படுபயங்கர புயலாக கரையை கடந்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பானில் சூறாவளி அபாயம் அதிகம் என்பதால் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து அழைப்பார்கள். வங்கக் கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களை நாமும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்ற ஐடியா உதயமானது 2004ல். பெயர் வைக்கும் வேலையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தளித்தது சர்வதேச வானிலை ஆய்வு துறை. மொத்தம் 64 பெயர் பட்டியலிடப்பட்டன. இதுவரை பெயர் வைத்து அழைத்து 28 புயல்களை அனுப்பி வைத்திருக்கிறோம். மியான்மர் நாடு வைத்த பெயர் ‘தானே’. வங்கக்கடலில் இது உருவாக ஆரம்பித்ததில் இருந்தே பல பகுதிகளிலும் பரவலாக மழை தொடங்கிவிட்டது. கரையை நெருங்க நெருங்க மழை வலுவடைந்தது. மழை, சூறைக்காற்று காரணமாக கூரைகள் பறந்து, மரங்கள் முறிந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இத்தனை கி.மீ. வேகத்தில், இத்தனை தூரத்தில் புயல் வந்துகொண்டிருக்கிறது என்று துல்லியமாக கணக்கிடக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ரமணன் தினமும் ரன்னிங் கமென்ட்ரி கொடுக்கிறார். அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக முடிகிறது.

மக்கள் உஷாராகிறார்கள். முன்னேற்பாடு நடவடிக்கைகளை எளிதாக எடுக்க முடிகிறது. ‘வெளியே போகவேண்டாம். மரம், மின்கம்பங்கள் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்’ என்று தெளிவாக எச்சரிக்க முடிகிறது. சில நேரங்களில் அனாவசியமாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட நேர்ந்தாலும் புயல் வருகையை ஓரளவு துல்லியமாக தெரிந்துகொள்ள முடிவதே அறிவியல், தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றிதான். அரசு தரப்பில் ஏற்பாடுகள் இன்னும் பக்காவாக இருந்தால், பாதிப்புகளை இன்னும்கூட தவிர்க்க முடியும். மழைநீர், கழிவுநீர் கால்வாய்களை சீரான இடைவெளியில் சரிசெய்யலாம். ஆறு, ஓடை, வாய்க்கால்களில் குப்பை போன்ற அடைப்புகள் தேங்காமல் அடிக்கடி தூர் வாரலாம். தண்ணீருக்காக சண்டை போடும் தீவிரத்தை நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் செலுத்தலாம். குளம், ஏரிகளில் நீர் தேங்க வசதியாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றலாம். மழை பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும் அதே நேரம், கோடையில் குடிநீருக்கு திண்டாடுவதையும் தவிர்க்கலாம். அரசு இதில் கவனம் செலுத்தினால், புயல்கள் ‘தானே’ போய்விடும்!