Saturday,December,31,2011லண்டன்: கடந்த வாரம் (வெள்ளி கிழமை) பிரிட்டனில் 23 வயது நிரம்பிய இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டார். அந்நாட்டை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு அக்கொலையில் சம்பந்தம் இருப்பதாக கருதி அவர்களை பிரிட்டன் போலீஸார் கைது செய்தனர். மேலும் இன்று அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய நாட்டை சேர்ந்த பித்வே(23) என்பவர் மேல்படிப்புக்காக பிரிட்டன் சென்று, முதுகலை கல்வியை பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் 26 வெள்ளி கிழமையன்று திடீரென்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இத்தகவலை பிரிட்டன் போலீசார், மாணவரின் பெறோர்களுக்கு தெரியபடுத்தவில்லை. மேலும், தன் மகன் கொலை செய்யப்பட்ட விஷயத்தை ஃபேஸ்புக் மூலம் அறிந்த அம்மாணவனின் தந்தையிட்ம் பிரிட்டன் போலீசார் மன்னிப்பு கோரியதோடு கொலையில் சம்பந்தபட்ட மூன்று மாணவர்களை கைது செய்தனர். அம்மூவரும் இன்று ஜாமீனில் வெளியானார்கள். இந்நிலையில், தன் மகன் உயிரை பறித்தவர்களுக்கு அவ்வளவு தான் தண்டனையா என்று பித்வேயின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment