Monday, June 29, 2015

புலிகளின் சீருடையுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

Monday, June 29, 2015
புலிகளின் சீருடையை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதடி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் இன்று உத்தரவிட்டார்.
 
புதுக்குடியிருப்பு மற்றும் கைதடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தும் சீருடையொன்று, 3 தொப்பிகள், 2 ஜாக்கட்கள் என்பன மீட்கப்பட்டன.
 
விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்து, அதனை வைத்து புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் பிரஜாவுரிமையைப் பெறும் முயற்சியில் ஈடுபட்ட மேற்படி இருவரும், அப்புகைப்படங்களை பிரதியாக்க முற்பட்டபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடிகள் குறைவடையும் வகையில் பொதுமக்கள் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, June 29, 2015
நெருக்கடிகள் குறைவடையும் வகையில் பொதுமக்கள் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டிக்கு  விஜயம் செய்திருந்த அவர் தலதா மாளிகையில் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்த கருத்தை வெளியிட்டார்.
 
பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக நாளை மறுதினம் அறிவிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்கப்படாது என வெளியான தகவல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையே தீர்மானங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
முன்னாள் கலாச்சார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கவை பல மணித்தியாலங்கள் விசாரித்தனர்.
பௌத்த விகாரைகளுக்கு நிதியொதுக்கீடுகளை எவ்வாறு மேற்கொண்டார் என்ற அடிப்படையில் அவர் ஏன் அவ்வாறான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
அதேவேளை, தம்முடன் இருப்பவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படுகிறதா இல்லையா என்பதை நேரம் வரும் போது பார்த்துக்கொள்ள முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்....
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று செல்ல உள்ளது. தங்காலையில் அமைந்துள்ள மஹிந்தவின் கார்ல்டன் இல்லத்திற்கு இவ்வாறு வாகனத் தொடரணிகள் செல்ல உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 1ம் திகதி வாகனத் தொடரணியாக சென்று மஹிந்தவை அரசியலில் ஈடுபடுமாறு அழைக்க உள்ளனர்.
 
கூட்டமைப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதன் போது முன்னாள் ஜனாதிபதி விசேட அறிப்பு ஒன்றை விடுக்க உள்ளார்.
 
மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன, தேசிய சுதந்திரன் முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழப்பெரும, குமார வெல்கம, எஸ்.எம். சந்திரசேன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்டவர்களைக் கொண்ட 15 பேர் அடங்கிய கமிட்டியின் தீர்மானத்திற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு வாகனத் தொடரணியாக சென்று அவரை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
 
நாட்டை பாதுகாக்க தேர்தலில் போட்டியிடுமாறு மஹிந்தவிடம் கோரப்பட உள்ளது. இந்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது: வாசுதேவ நாணயக்கார!

Monday, June 29, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமது தரப்பினருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
 
முன்னாள் ஜனாதிபதி தோல்வியடைந்தாலும் யாரிடமும் அடிபணியவில்லை.
 
அவருக்கு வெற்றிலை சின்னத்தில் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் செயற்பட்டுள்ளார்.
 
எனவே அந்த பிரச்சினை தற்போது தீர்வை எட்டியுள்ளது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
இந்தநிலையில், மத்திய வங்கி முறி பிரச்சினை காரணமாகவே, குறிப்பிட்ட காலத்திற்கு புறம்பாக தற்போது நாடாளுமன்ற கலைக்கப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன எதிர்வரும் தேர்தலில் 55 க்கு மேற்பட்ட ஆசனங்களை பெறாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
 
கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அண்மைக்காலமாக எதிர்கட்சியினர் இனவாதத்தை தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றியீட்டி அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறது.
 
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கிடைத்த வாக்குகளிலும் பார்க்க 30 சதவீதமான வாக்கு எண்ணிக்கை குறைவடையும் என்பது உறுதி.
 
புதியதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அமைய அந்த வாக்குகள் தமது கட்சித் தரப்பினருக்கு நிச்சயமாக கிடைக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 1இல் துரோகிகளுக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ!

Monday, June 29, 2015
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்றியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்தவின் விசுவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதன் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டுவரும் சுசில் பிரேமஜயந்தவை தமது பக்கம் வளைத்துப் போட்டுள்ளனர். மஹிந்தவை ஆதரிக்கும் முடிவை அவர் இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
 
இதனால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, சு.கவின் உயர்மட்ட பிரமுகர்களுடன் தொடர் பேச்சு நடத்திவருவதாகவும், சுசில் பிரேமஜயந்தவின் பொறுப்புகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயகவிடம் ஒப்படைக்க உத்தேசித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது. அத்துடன், சு.கவிலுள்ள மேலும் சிலர் மஹிந்த பக்கம் சாயும் நிலையில் இருப்பதால் அவர்களுக்கு கடிவாளம் போடுவது பற்றியும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார். பொதுத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்‌ஷ அணிக்கும், மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையில் பனிப்போர் நடந்துவந்தது. நாடாளுமன்ற கலைப்புக்குப் பின்னர் அந்தப் போர் உக்கிரமடைந்துள்ளது. மஹிந்தவை பிரதமராக்கவேண்டும் என சு.கவிலுள்ள அவரது விசுவாசிகள் வலியுறுத்திவருகின்றனர். இதற்குப் பச்சைக்கொடி காட்ட ஜனாதிபதி மறுத்துவருவதால் மஹிந்த தலைமையில் மூன்றாம் கூட்டணி அமைப்பது பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில், ஜூலை முதலாம் திகதி இது விடயம் பற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவுள்ளது. அதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடையுமா? மஹிந்த மூன்றாம் கூட்டணி அமைப்பாரா என்ற வினாவுக்கு இன்றைய தினம் விடை கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது. இதற்கிடையில் இரு தரப்பினருக்குமிடையில் இன்று நடைபெறவுள்ள சந்திப்பின்போது, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு மைத்திரிபால சிறிசேன தரப்பு இணங்கியுள்ளபோதிலும் மஹிந்தவைப் போட்டியிட அனுமதிக்கமுடியாது எனக் கூறியுள்ளது. இதை ஏற்கமறுக்கும் மஹிந்த தரப்பு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவேண்டும் என்றும், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும் தரப்பு வலியுறுத்தி வருகின்றது.
 
இந்நிலையில், இருதரப்பும் ஜூலை முதலாம் திகதி ஏதாவதொரு முடிவுக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேன தரப்பு இணக்கம் தெரிவிக்காவிடின் தனித்துப் போட்டியிடும் முடிவை மஹிந்த ராஜபக்‌ஷ அன்றைய நாளை அறிவிப்பார் என்றும் கூறப்படுகின்றது. எது எப்படியிருந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சுத்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு மஹிந்தவுக்கு ஜனாதிபதி வாய்ப்பளிக்க மாட்டார் என்பதால், மஹிந்த மூன்றாம் கூட்டணி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அவர் தலைமையிலேயே அநுராதபுரத்தில் அவர்சார்பு கூட்டம் நடைபெறவுள்ளது. -

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மறுக்கப்பட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவார்: விமல் வீரவன்ஸ!

Monday, June 29, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மறுக்கப்பட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ஸ, அவரது கட்சியிலேயே தமது கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.
 
பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதானது, ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்துக்கொள்வதற்காகும். மத்திய வங்கி ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கை ரணிலுக்கு எதிராக இருந்தமையால் கடந்த வெள்ளிக்கிழமை அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது தடுத்தார். 100 நாள்களின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக குறிப்பிட்ட ஐ.தே.க. அரசு அவ்வாறு செய்யாது இழுத்தடித்தது. இந்நிலையில், திடீர் என நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
 
ஆனாலும், நாங்கள் நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை. நாங்கள் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த அரசின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி வந்தோம். இவர்கள் மீண்டும் நாட்டில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். புலிகள் தலைதூக்கும் நிலை உருவாகியுள்ளது. பொய்யால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசை மேலும் தொடரவிட முடியாது. ஜனவரி 8ஆம் திகதி பொதுமக்களுக்குத் தவறியதை அவர்கள் இம்முறை தேர்தலில் சரிபடுத்துவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளது. அவர்கள் தேர்தலுக்கு முன்னர் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளமை தற்போது ஒவ்வொன்றாகத் தெரியவருகின்றது. அண்மையில் நாட்டுக்காக வடக்கில் போராடிய இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
புலி உறுப்பினர்களை சிறையிலிருந்து விடுவிக்க குழு நியமித்து பேச்சு நடத்தப்படுகின்றது. ஆனால், நாட்டுக்காக புலிகளுக்கு எதிராக போராடிய சிப்பாய்களை சிறையில் அடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பயங்கரமான நிலையைத் தடுப்பதற்கு மக்களுக்குக் கிடைத்துள்ள இறுதிவாய்ப்பு, எதிர்வரும் பொதுத் தேர்தலாகும். பயங்கரவாதத்திலிருந்து மீட்ட நாட்டை தொடர்ந்தும் பாதுகாக்க இன, மத பேதமின்றி மக்கள் அனைவரும் மஹிந்தவுடன் இணைந்து அவரை பிரதமராக்க வேண்டும்'' - என்றார். தேசிய சுதந்திர முன்னணி எக்கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது, மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கட்சியிலேயே தமது கட்சி கூட்டணி அமைப்பதாகவும் தான் வழமைபோன்று கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுவேன் என்றும் விமல் தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளோம். எது எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தலில் போட்டியிடுவது உறுதி'' - என்றார். அதுமாத்திரமல்லாது, எமக்கு இது தொடர்பில் 'ஏ', 'பி' திட்டங்கள் உள்ளன. இதில் 'பி' திட்டம் சிறந்தது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளேன் என்று விமல் மேலும் தெரிவித்தார்.

Thursday, June 25, 2015

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்:முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை!

Thursday, June 25, 2015
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தற்போது குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரலந்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்...
 
தமது ஆட்சி காலத்தினுள் அபிவிருத்திகள் முன் எடுக்கப்பட்டதுடன் அரச சேவையாளர்களுக்கு உரிய காலத்திற்கு வேதனம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் வெலிமட - பொரலந்த ஸ்ரீ சுதர்ஷனாராமயில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மக்கள் இன்னமும் விரும்புகின்றார்கள் - ஜோன் செனவிரட்ன!

Thursday, June 25, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மக்கள் இன்னமும் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை கட்சிக்குள் உள்ளீர்க்கும் இறுதி முயற்சியாககக் கூட இது இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிக்கு சேவையாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவிற்கு சில சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளராக கடமையாற்றி வரும் ராஜித சேனாரட்ன எந்த பொறுப்புணர்வும் அற்ற ஓர் நபர் எனவும் கருத்துக்களை வெளியிடும் போது உண்மையை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதித்தாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாது என ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Wednesday, June 24, 2015

அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி: அறிமுகப்படுத்தியது ஜி-மெயில்!!!

Wednesday, June 24, 2015
வாஷிங்டன்:இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற நினைத்தால், அது முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் ஜாம்பவானாக உள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி எப்படி unsend செய்வது என்பதை பார்ப்போமா. முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும. அதற்குள் சென்றவுடன் Undo Send என்ற பகுதிக்குள் செல்லவும். அதில் Undo வசதியை Enable செய்யவும். பின்னர் Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.

அதன் பின் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு இமேஜ் தானாக தோன்றும். அதில் UnSend என்ற ஆப்ஷன் 30 செகண்டுகள் டிஸ்பிளே ஆகும். ஒரு வேளை நீங்கள் அனுப்பிய மெயிலை திரும்பப்பெற விரும்பினால் Unsend ஆப்ஷனை கிளிக் செய்து திரும்ப பெறலாம்.

ரணில் விக்கிரமசிங்க காலாட்டுகிறார்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதணி போடுகிறார்!: விமல் வீரவன்ஸ கிண்டல்!

Wednesday, June 24, 2015
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலை ஆட்டிக் கொண்டிருக்கின்றார் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று பாதணியை எடுத்து மாட்டிப் பார்க்கின்றார் என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
 
அத்துடன், ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டது ஜனாதிபதி வாசம் செய்யத்தான். மாறாக, எலியும் பூனையும் இருப்பதற்கும் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் மறைமுகமாகச் சாடினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "100 நாட்கள் அரசு, தற்போது பெரும் பிரச்சினையில் உள்ளது. என்ன நடக்கிறது என்று அதற்கே தெரியவில்லை. 100 நாட்களில் புதிய அரசு என்றார்கள். ஆனால், இங்கு பிரச்சினைதான் உள்ளது. அமைச்சர்கள் 25 பேர் என்றனர்.
 
ஆனால், தற்போது 80ஐத் தாண்டிவிட்டது. அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுமார் ஒரு கோடியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்று அரசுக்குத் தெரியவில்லை. பிரதமர் நன்றாக காலாட்டிக்கொண்டிருக்கின்றார். ஜனாதிபதி திடீரென்று பாதணி வாங்கிவந்து அணிந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார். இப்படித்தான் நடக்கிறது.
 
ஜனாதிபதி மாளிகை இருக்கிறது. ஆனால், ஜனாதிபதி அதில் வசிப்பதில்லை. சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை தற்போது சுமார் 20 கோடி ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்கின்றனர். இது எதற்காக? ஜனாதிபதி மாளிகையில் இருந்தால், பதவி விலகிய பின்னர் அங்கிருந்து வெளியேறவேண்டும். ஆனால், இப்படியொரு வீட்டை அமைத்துக்கொண்டால் அதிலேயே நிரந்தரமாக இருந்துவிடலாம்'' - என்றார். -

இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்கிறது ஒருங்கிணைப்பு குழு!

Wednesday, June 24, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளின் பொருட்டு இருவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டது.
அண்மையில் அந்த குழு ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேனவை சந்தித்தது.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆறுபேர் கொண்ட இந்த இணக்கப்பாட்டு குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.             

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

Wednesday, June 24, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அடிப்படைவாத பிரிவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் ஆராய்ந்துள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்மூல கேள்வியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக பொது நல்லிணக்க மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் முன்வைத்த ஆவணத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரி;க்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஓய்வு பெற்றபோது அவருக்கு 138 காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

ஆனால் அந்த தொகை தற்போது 66 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்ற தருணத்தில் 102 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தற்போது அந்த தொகை 105 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
            

புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் புலிகளின் அனுதாபிகள் குறித்த அமெரிக்க அறிக்கை - கவனத்தில் எடுக்க வேண்டும்: பீரிஸ்!

Wednesday, June 24, 2015
புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் புலிகளின் அனுதாபிகள் தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில், அரசாங்கம் தீவிர கவனமெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
கொழும்பு, அபயராமவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு தொடர்பான விடயத்தை கையாளும் போது, ஏற்கெனவே இரண்டு தடவைகள் விழுந்ததைப்போல் அதே வலையில் விழுந்து விட வேண்டாமெனவும் வலியுறுத்தினார். சர்வதேச நிதி வலையமைப்பினூடாக வழங்கப்படும் நிதியுதவியால் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்தும் இயங்குகிறது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தாக அவர் தெரிவித்தார்.
 
பிரதமர், அமைச்சரவையை கூட்டி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: நிமல் சிறிபால டி சில்வா!

Wednesday, June 24, 2015
புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
 
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,டயஸ் போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார்.
 
புலிகள் இலங்கையில் தோற் கடிக்கப்பட்ட போதும் அதன் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருகிறது. பணம் திரட் டப்படுகிறது.
 
எமது நாட்டின் மீதான அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் காணப்படுகிறது. இந்த அச்சுறுத்தலில் இருந்து மீள அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இது குறித்து மக்கள் அவதானமாக உள்ளனர். எமது அரசாங்கம் புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கவில்லை. தேசிய பாது காப்பிற்கு முன்னுரிமை வழங்கினோம் என்றார்.

மஹிந்தவா அல்லது நிமலா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா!

Wednesday, June 24, 2015
மஹிந்தவா அல்லது நிமலா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இயங்குகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே உள்ளது.
 
இந்த நிலையில் கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் மத்திய குழுக் கூட்டமே கட்சியின் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற தீர்மானம் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கட்சியின் தலைவரால் அறிவிக்கப்படும். இதில் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் மஹிந்தவா அல்லது நிமலா என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை கூட்டணியின் ஒட்டுமொத்த முடிவாகவும் கருதுவது தவறானது. கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் ஒரு குழுவினர் உள்ளனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவும் மற்றொரு குழுவினர் உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களை கட்சிக் கூட்டத்தில் ஆராய்ந்து இறுதியில் ஒருமித்த தீர்மானத்துக்கு வரவேண்டும்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தமது கட்சியின் பெயரில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த முடியும். அதை எம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பெயரில் இவர்கள் முரண்பாட்டுக் கருத்துக்களை முன்வைப்பது கட்சியின் விதிகளுக்கு முரணானதாகும். அதை கட்சி கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் எடுப்போம். அதேபோல் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த ஒருசிலர் முயற்சித்து வருகின்றனர்.
 
கட்சியை உடைப்பதற்காக மஹிந்த மைத்திரி முரண்பாட்டை தூண்டிவிட்டு அதனை சாதகமாக பயன்படுத்த எண்ணுகின்றனர். இதற்கு ஒருபோதும் நாம் இடம்கொடுக்க மாட்டோம். கட்சிக்குள் மஹிந்தவையும் ஜனாதிபதி மைத்திரியையும் ஒன்றிணைத்து தேர்தலில் முகம்கொடுக்க நாம் தயாராகி வருகின்றோம். அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். தொடர்ந்தும் ஜனாதிபதியுடனும் முன்னாள் ஜனாதிபதியுடனும் நாம் பேசி வருகின்றோம். சாதகமான பதிலை இரண்டு தரப்பில் இருந்தும் நாம் எதிர்பார்த்தே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.
ஆயினும் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நாம் இன்னும் கட்சிக்குள் ஆரம்பிக்கவில்லை. ஜனாதிபதி அதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை. ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கட்சி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தேர்தல் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி எமக்கு உறுதியளித்துள்ளார்.
 
19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவந்ததைப்போல் 20ஆம் திருத்தமும் நிறைவேற்றப்படவேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.ஆகவே அதற்கமைய ஜனாதிபதி எமக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம். இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் நாம் குழப்பங்களை ஏற்படுத்த விரும்பவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் செயற்பாடுகள் குறித்து கோத்தபாய ராஜபக்ஸ எச்சரிக்கை!

Wednesday, June 24, 2015
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில்  புலிச் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் புலிகளின் சர்வதேச வலையமைப்பும் ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மையமாகக் கொண்டு கோதபாய ராஜபக்ஸ, தனது முகநூல் பக்கத்தில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புலிகளின் செயற்பாடுகள் குறித்து கடந்த அரசாங்கம் மிக நிதானமாக கண்காணித்து வந்தது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீள தலைதூக்குவதனை தடுக்க முடிந்தது. 2009ம்ஆண்டின் பின்னர் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என்பதனால் புலிகள் முற்று முழுதாக அழிந்து விட்டதாக அர்த்தப்படாது. தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இவ்வாறான ஓர் முயற்சி முறியடிக்கப்பட்டது. புலி உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஓர் பின்னணியில் அரசு வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை குறைக்கத் தொடங்கியுள்ளது. மிக முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள்  புலிகள் மீள ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு தந்திரோபாய ரீதியாக வழியமைக்கும் அதேவேளை, நாட்டுக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். தேசியப் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் மிக கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Saturday, June 20, 2015

உலங்கு வானுர்தி விடயம் பொய்யானது: முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான்!

Saturday, June 20, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விஜயங்களுக்காக உலங்கு வானுர்தி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பில் இருந்து தங்காலைக்கு செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பயன்படுத்திய உலங்கு வானுர்தி விஜயத்தை தவிர இன்று வரை அரசாங்கத்தின் உலங்கு வானுர்தி வசதிகளை பெற்று கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அதனை தவிர எந்த சந்தர்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி உலங்கு வானுர்தி வசதியை கோரவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள காவற்துறை மற்றும் இராணுவ பாதுகாப்பு தொடர்பிலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

105 காவற்துறை அதிகாரிகளும், 108 இராணுவ அதிகாரிகளும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அதிகாரிகளுக்கான உரிய வசதிகள் கிடைக்க பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
            

புலிகளின் சர்வதேச நெட்வொர்க் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது: அமெரிக்கா அறிக்கை!

Saturday, June 20, 2015
வாஷிங்டன்:இலங்கை அரசால் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டதாக கூறப்படும் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்புகளும் நிதி பரிவர்த்தனைகளும் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளன என அமெரிக்காவில் உள்நாட்டு தீவிரவாதம் தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்நாட்டு தீவிரவாதம்- 2014 என்ற தலைப்பில் நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 'உச்சகட்டப் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவிலான எந்த தாக்குதல்களையும்  புலிகள் நடத்தவில்லை.

எனினும், இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட  புலி இயக்க ஆதரவாளர்களில் 13 பேர் கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் நிதி உதவிகளை செய்து வருவதாக கருதப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 422 தனிநபர்களை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் பட்டியலில் இணைத்து கடந்த (2014) ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, June 19, 2015

உண்மையான ஸ்ரீ.ல.சு கட்சியினர் எம்முடன்: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Friday, June 19, 2015
உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தம்முடனே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கண்டியில் இன்று மதவழிபாடுகளில் ஈடுபட்ட அவர், பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
 
உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களே தம்வசம் இருக்கின்றனர்.
கட்சியை விட்டுச் சென்ற தலைவர் என்று தம்மை மாத்திரமே குறைகூறமுடியாது.
கட்சியுடன் இணைந்த நாள் முதல்  அதே கட்சியிலேயே இருந்து வருகிறேன்.
 
எனது வயதை கவனத்தில் கொண்டு தம்மை பாட்டன் என சிலர் கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.....

 
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை படுகொலை செய்வதற்கான சதித்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக மக்கள் ஊடக இயக்கமென்ற அமைப்பொன்று இன்று மீண்டும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிமால் வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸ்- மா- அதிபரிடம் இது குறித்து முறைப்பாடு செய்தோம், குறிப்பிட்ட முறைப்பாட்டை விசேட விசாரணை பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியை கொலைகாரன் என பிழையாக சித்தரிக்கின்றனர்,நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ரமநாயக்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம்,

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 300 உறுப்பினர்களை விடுதலை செய்து சமுகத்தில் நடமாட விடப்போவததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனால் முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். டீன அவர் தெரிவித்துள்ளார்

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் மிகவும் முக்கியமானவை: சபாநாயகர் சமால் ராஜபக்ஸ!

Friday, June 19, 2015      
சீன ஊடகமொன்று அண்மையில் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தலைமுறைகளாக மிகச் சிறந்த உறவு நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றதாகவும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு காத்திரமான பங்களிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
1952ம் ஆண்டு சீன - இலங்கை அரிசி ஒப்பந்தம் இலங்கையின் அபிவீருத்திக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டு கால யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் சீனா இலங்கைக்கு கடன்களை வழங்கியதுடன் முதலீடுகளையும் செய்திருந்ததாகவும் அதன் பின்னர் நாட்டில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு!

Friday, June 19, 2015      
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் நிறுவப்படும் புதிய அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி அபாயாராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து நிறுவப்படும் காபந்து அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பிரதமராக பதவி வகிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு இருந்த ஆதரவினை விடவும் தற்போது பல மடங்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டி: வாசுதேவ நாணயக்கார!

Friday, June 19, 2015      
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
மஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம். ஏற்கனவே இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
சில கட்சிகள் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்தலின் போது மஹிந்த தலைமயிலான கூட்டணி 100 ஆசனங்களை வெற்றிக்கொள்வதனை இலக்க வைத்து செயற்பட உள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருபது ஆசனங்கள் எஞ்சியிருக்கும் என நம்புவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பத்மநாபாவின் 25 வது நினைவு தினம்!

பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட Eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினம்  இன்று
 
 
சென்னை::அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல்மிகு தோழர்களே!
உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கனிந்த புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது கட்சியின் செயலாளர் நாயகமும் எமது பெருமைக்குரிய அருமைத் தோழருமான பத்மநாபா அவர்களும் அவரோடு கட்சியின் புரட்சிகரச்செயற்திட்டங்களிலும் மக்களுக்கான தொண்டுகளிலும் இணைபிரியாத் தோழர்களாக இருந்த தோழர் கிருபாகரன் தோழர் யோக சங்கரி தோழர் கமலன் உட்பட பன்னிரு தோழர்களும் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஜுன் 19ம் நாளை நாம் வருடாவருடம் தியாகிகள் தினமாக நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடி வருகின்றோம். அதற்காக இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரோடும் நானும் இணைந்து புரட்சிகர அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தோழர் பத்மநாபா அவர்கள் நடைமுறையில ஈழமக்களுக்கான புரட்சிகர விடுதலைப் போராட்டத்தோடு; தன்னை முழுமையாக அhப்பணித்தவரென்றாலும் அவர் ஈழத் தேசியவாதம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்திருந்தவரல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.ஈழமக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவாத அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு உடனடியாக முடிவுகட்டவேண்டுமென்பதில் குறியாக இருந்தவnhனினும் அவர் இலங்கை மக்கள் அனைவரையும் நேசித்தார்: இலங்கை தழுவிய ஒரு சோசலிசப் புரட்சியையே அவர் தனது நீண்டகால அபிலாஷையாகக் கொண்டிருந்தார். அவர் ஒரு சர்வதேசிய புரட்சிவாதி: உலகம் முழுவதுவும் அனைத்து மக்களும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதார சுரண்டல்களிருந்தும் அரசியல் அதிகார அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்பதில் அவாக் கொண்டிருந்தார். அதனால் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு தேசிய விடுதலை இயக்கங்களோடும் புரட்சிகர இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்

தோழர் நாபாவின் மனிதாபிமான அணுகுமுறையும்;, மாற்றுக் கருத்தாளர்களை மதிக்கின்ற பண்பும், முற்போக்கானவர்களிடையே எப்போதும் வேற்றுமையிலும் ஒற்றுமை அவசியம் என்பதை வலியுறுத்தி விடாப்பிடியாக உழைத்தமையும் எதிர்கால மக்கள் விடுதலைப் போராளிகளுக்கும் சமூக ஜனநாயக விரும்பிகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் உதாரணங்களாகும் என்பதில் ஐயமில்லை

அன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!

இலங்கையில் நிலவும் அரசியற் சூழ்நிலைமைகளை குறிப்பாக நாட்டிலுள்ள தமிழ் அரசியற் சக்திகளின் நிலைமைகளையும் தன்மைகளையும் மேலைத்தேயத் தமிழர்களின் அரசியற் செல்வாக்குகளையும் அத்துடன் அரச அதிகாரத்திலுள்ளவர்களின் அகங்கார நிலைப்பாடுகளையும் சந்தேகங்களை நிறைக்கும் செயற்பாடுகளின்; போக்குகளையும் மேலும் இலங்கையின் அரசியற் பொருளாதாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பிராந்திய சர்வதேச சக்திகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளையும் நாம் இன்றைய காலகட்டத்தில் தெளிவாகவும் சரியாகவும் வகுத்து தொகுத்து ஆய்ந்து கணிப்பீடுகளை மேற்கொள்வது எமது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிhகாலத்திட்டங்கள் தொடர்பான முடிவுகளை மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் எமது தனிப்பட்ட எதிர்கால அரசியல் வாழ்வு பற்றியும் நாம் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய பங்கு தொடர்பான முடிவுகளையும் எடுப்பதற்கு அவசியமானவைகளாகும்

இலங்கைத் தமிழர்களின் போராட்டம் அரசியல் பொருளாதார சமூக நியாயங்களோடும் புனிதமான இலட்சியங்களோடும் தொடங்கப்பட்ட ஒன்றே. அந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்கென குறித்துக் கொண்ட இலக்குகளில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்;வொருவரும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட போது தமது சுயநலன்களுக்கான இலக்குகளோடு ஈடுபடத் தொடங்கினார்கள் என்றில்லை. நாடாளுமன்றப் பதவி, நாடாளுமன்றப்பாதை என்ற இலக்கணத்துக்குள்; ஈடுபட்டிருந்தவர்களிற் கூட பதவிகளைப் பிடித்து அதிகாரங்களில் அமர வேண்டும் அல்லது பதவிகளினூடாக மக்கள் விரோதமான முறைகளில் தமது சொந்த வாழ்வுக்குக் கொழுப்பேற்றி வளங்களைக்குவித்துக் கொள்ள வேண்டும் என்றிருந்தவர்கள் மிகவும் ஒருசிலரே. ஆனால் இன்றைக்கு நிலைமைகள் வெகுவாக மாறிவிட்டன. போராட்ட காலத்தில் வௌ;வேறு இயக்கங்கள் இருந்தனதான்: அவை தமக்கிடையே கொள்கை வேறுபாடு, போராட்ட அணுகுமுறை வேறுபாடு, சமூக அரசியற் கண்ணோட்ட வேறுபாடு என்பவைகளால் வேறுபட்டன, பிளவுபட்டன, போட்டியிட்டன, ஏன்! மோதியும் கொண்டன. ஆனால் இன்று தமிழர்கள் மத்தியில் பாராளுமன்றப் பதவிகளுக்காகவும் அல்லது மாகாண சபைப் பதவிகளுக்காகவுமே போட்டி, கழுத்தறுப்பு, ஆள்கூட்டல், குழுச் சேர்த்தல், ஆளுக்கெதிராக ஆள் அவதூறு பரப்பல், யுத்த அழிவுகள் பற்றி ஒப்பாரி வைத்தல் ராஜபக்சாக்களுக்கு எதிராகக் கோசமெழுப்புதல், இராணுவத்துக்கு எதிராக கொட்டி முழங்கல் ஏன்! ஒற்றுமைக்குக் கோரிக்கை விடல் என்பவைலெல்லாம் தேர்தல் பதவி நோக்கங்களிலேயே நடைபெறுகின்றன

இன்றைய பதவி அரசியற் களத்தில் நாம் எம்மை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள அதற்கான அரசியற்பண்பாட்டைக் கடைப்பிடிக்கத் தயாரா? எம்மிடம் இதுகாலவரை வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன பண்புகளும் குணங்களும் எம்மைப் பற்றிய எமது கருத்துக்களும் அதற்கு இடம் கொடுக்குமா? பதவி மற்றும் அதிகார அரசியலுக்கு மாறும்போது அது தோழர்களை மாற்றும், ஆதரவாளர்களை மாற்றும், நண்பர்களை மாற்றும், ஏன் பழகுகின்ற பேசுகின்ற மனிதர்களேயே மாற்றும்.இன்றிருக்கும் உறவுகள் தொடர்புகள் சந்திப்புக்கள் அத்தனையையும் அது மாற்றிவிடும். ஆரசியலில் மாறிக் கால் வைக்கம் போது வாழ்வின் கூட்டிலும் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்படவே செய்யும். புதவி அதிகார அரசியலில் ஆறு கடக்கும் வரைக்கும் தான் அண்ணனும் தம்பியும் பதவி வந்த பின் நீ யாரோ நான் யாரோ! பதவி அதிகார அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர பகைவர்களும் இல்லை. அதில் கொள்கைகளும் இல்லை வாய்மைகளுக்கும் வாய்ப்பில்லை. தோழமை என்பதற்கு துளியும் இடமில்லை. இருந்தாலும் அது நுனி நாக்கிலே ஏமாற்றுவதற்கு மாத்திரமே இருக்கும். இங்கு புதவியைப் பிடிப்பதுவும் கிடைத்த பதவியைத் தக்க வைப்பதுவுமே இலட்சியம் கொள்கை குறிக்கோள். இவற்றை நாம் புரிந்து கொள்ளாமல் இன்றைய அரசியலில் நாம் வெற்றிகரமாக இல்லை என்று கவலை கொள்வதில் அர்த்தமில்லை
அது இலங்கை மக்களின் அரசியலிலும் குறிப்பாக தமிழர்களின சமூக பொருளாதார வாழ்விலும் முன்னேற்றகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்போம். நாம் விரும்புவது நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு சமூக முன்னேற்றத்துக்கு அச்சமூக மக்களின் வாழ்வுக்கு எவை நல்லவையோ எவை அவசியமானவையோ அவற்றுக்காக உழைப்பதாகவே எமது சமூக ஈடுபாடும் அமைய வேண்டும் என்று கூறி உங்கள் அனைவர் மத்தியிலும் தோழர் நாபாவின் நாமம் நீடு வாழ்க என விடை பெறுகிறேன்.

தோழமையுடன்
தோழர் வரதராஜப்பெருமாள்,

Thursday, June 18, 2015

இந்தியா - இலங்கையை இணைக்கும் வகையில் கடல் மீது பாலம்: மத்திய அரசு பரிசீலனை!

Thursday, June 18, 2015      
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில், கடல் குறுக்கே 23 கி.மீ தொலைவில் பாலம் கட்ட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கடகரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சார்க் நாடுகளான வங்க தேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு அண்மையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்த நாடுகளுடன் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சார்க் நாடான இலங்கையுடன் சாலை மற்றும் சுரங்கம் மூலம் போக்குவரத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாரை இணைக்கும் வகையில் 23 கிலோ மீட்டர் நீள பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலுக்கு மேலே மற்றும் கடலின் கீழே சுரங்கம் அமைப்பது பாலம் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கடலுக்கு மேலே அமைக்கப்படும் பாலமானது "சார்க்" நாடுகளின் போக்குவரத்து துறையில் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் தனியான தேர்தல் விஞ்ஞாபனம் தயார்!

Thursday, June 18, 2015      
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளதுடன் அதனை அச்சிடவும் தயாராகி வருகின்றனர்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுப்படுத்தி எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மைத்திரி – மகிந்தவை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மகிந்த கோஷ்டி தனியான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர்களாவர்.
 
2015ம் ஆண்டு பொதுத் தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட உள்ள இந்த தேர்தல் விஞ்ஞாபனம் 19 பக்கங்களை கொண்டது என தெரியவருகிறது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாஙங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தியுள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைத்து விட போவதாகவும் மத்திய வங்கியின் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுதி தராதரமின்றி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....
 
சில தரப்பினர் இலங்கையின் கலாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
நேற்று இடம்பெற்ற பூஜை வழிபாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு சென்ற பாதையை வேறு பக்கம் திசை திருப்பும் முயற்சிகளிலேயே இவர்கள் ஈடுபடுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
எதிர்காலத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளும் மேடைகள் அல்ல மாறாக அரசியல் மேடைகளே உருவாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
குழுவொன்று இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
சிங்கள கலாசாரத்தை நம் மத்தியிலிருந்து தகர்த்தி தூரமாக்குவதற்கே இத்தரப்பினர் முனைந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமைகள், சமத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டு தேசியத்தை நாசகரமாக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வீடுகளில், மாளிகைகளில் திருட்டுத்தனமாக செய்தவற்றை தற்போது பொது இடங்களில் செய்து அதை சட்டமாக்க முனைகின்றார்கள்.
 
நாம் சென்ற பாதையை வேறுபக்கமாக மாற்ற முனையும் போது பழிவாங்கல்கள், பகைமை, குரோதங்கள் இவர்களின் முக்கிய பங்காக காணப்படும் வேளையில் நாம் செய்யும் பூஜை வழிபாடுகளின் காரணமாக அந்த தலைவர்களின் மனங்களில் பகைமை உணர்வுகள் இல்லாமல் போகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மழை விட்டும் தூவானம் நின்று விடவில்லை!!

Thursday, June 18, 2015
மகிந்தவுடைய ஆட்சிக்காலத்தில் தமக்கு கேட்டவையெல்லாம் கிடைக்கவில்லை. பிரதம செயலாளரை மாற்றவில்லை. ஆளுநரை மாற்றவில்லை என வசை மாரி பொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினர் தற்சமயம் தமக்கு பிடித்தமான ஆளுநரையும் தமக்கு ஏற்ற பிரதம செயலாளரையும் வடமாகாணசபைக்கு நியமித்து ஆட்சி செய்து வருகின்றனர்.
சுமார் ஆறுமாதங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி செய்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே யார் பெரிது என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டதை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போது வடமாகாணசபைக்கு தெரியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிஅளித்தமை தொடர்பில் பிரஸ்தாபித்தது கோடிட்டு காட்டுகிறது.
 
மக்கள் பணிசெய்வதில் இவர்களிடையே போட்டியில்லை. வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபை உறுப்பினர்களும் வடமாகாண தமிழ் பேசும் மக்களினால் மக்கள் பணிசெய்வதற்காக தமது பொன்னான வாக்குகளை அளித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதனை போட்டியாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.
மகிந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களுக்கோ ஒன்றும் தரவில்லை என்று ஒப்பாரி வைத்தவர்கள் மைத்திரி அரசாங்கம் எனக்குத் தான் தரவேண்டும். உனக்குத் தரக்கூடாது என்ற கோதாவில் நிற்பது முழுத் தமிழ் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மகிந்த அரசாங்கத்துடன் நெருங்கமாக இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோடிக்கணக்கான ரூபாய்களை தாங்கள் சார்ந்த பிரதேச அபிவிருத்திக்காக செலவளித்ததனை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலொன்று வருகின்ற நிலையில் பல சவால்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அந்தக் கட்சியினர் எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுமிடையிலான அதிகார போட்டி, குறிப்பாக வடமாகாண சபையில் காணப்படுகின்ற குறைபாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே சட்டத்தரணிகளுடைய மேலாதிக்கம், வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை விமர்ச்சிக்கின்ற தன்மை ஆகியன இந்தக் கட்சியினுடைய எதிர்கால செயற்பாடுகளை ஒரு மந்த நிலைக்கு தள்ளியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எக்காலத்திலும் சவால் விடுகின்ற அளவிற்கு தனித்துவமாக காணப்படுகின்ற ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள், மைத்திரி அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலை, புலம்பெயர் தமிழர்களுடைய தற்கால நிலைப்பாடு ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அவளவு மகிழ்ச்சிதரக் கூடியதாக இல்லை.
வடமாகாண சபையை பொறுத்தளவில் முன்னைய ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். அமைச்சு செயலாளர்கள் உள்ளக ரீதியாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்.
மேற்கொண்ட மாற்றங்கள் ஒரு பெயரளவிலான மாற்றங்களாக மட்டுமே இருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது.
வடமாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பாரியளவு ஊழல் இருப்பதாக கூறப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
நெல்சிப் திட்டம் வடமாகாண சபை உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருகின்ற உள்ளுராட்சி திணைக்களத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளினுடைய வீதி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
ஆனால் பெருமளவு நிதி பயன்படுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி உயர்த்தினர்.
சாதாரண ஒரு சிறிய விடயத்திற்கே ஒரு பிரேரணையை நிறைவேற்றும் வடமாகாண சபை இந்த பாரிய நிதிமோசடி தொடர்பில் எந்தவொரு பிரேணையும் நிறைவேற்றாதது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியாக நெல்சிப் திட்டத்திற்கு பொறுப்பான உள்ளூராட்சி ஆணையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு பேரவைச்  செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மகிந்த ஆட்சியை ஊழல் நிறைந்த ஆட்சி என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆட்சி நடைபெறும் வடமாகாண சபையில் நெல்சிப் திட்ட ஊழலை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
வடமாகாண சபையில் கீழ் வருகின்ற அமைச்சுக்கள் யாவற்றினதும், பொதுச்சேவை ஆணைக்குழுவினதும், பிரதம செயலகம், ஆளுநர் செயலகத்தினுடையதும் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பேரவைச் செயலாளர் ஆகியோர் இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது பொது நிர்வாக சுற்றறிக்கையிலும் இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது,
ஆனால், பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர், உள்ளுராட்சி அமைச்சு செயலாளர், சுகாதார அமைச்சு செயலாளர் ஆகியோர் மட்டுமே இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இதில் என்ன வேடிக்கையென்றால் விவசாய அமைச்சு செயலாளரும், பேரவை செயலாளரும் இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட சேவை மூப்பு குறைந்த உத்தியோகத்தர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; சிலருடைய தயவிலும் அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடைய அழுத்தத்திலும் பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி வடமாகாண சபையில் மட்டுமே செய்யப்பட்ட இந்த நூறுவீத அரசியல் நியமனங்கள் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறப் போகும் தபால் மூல வாக்குகள் குறைவடைவதற்கு வாய்ப்பாகின்றது.
இதேபோன்று பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்தவர்களுக்கு திணைக்களத்தலைவர்களாக முடிசூட்டி அழகுபார்க்கப்படுகின்றது.
உண்மையில் திணைக்களத் தலைவர்களாக கட்டாயம் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டுமென்பதே விதி. கடந்த ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் சரி பிழைக்கு அப்பால் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் தற்போது தங்களுடைய ஆளுநர் தங்களுடைய பிரதம செயலாளர் என்று கூறிக் கொண்டு பிழையைச் சரியெனவும், சரியை பிழையெனவும் காட்டி அதிகாரிகளை வேண்டுமென்றால் ஏமாற்றலாம் ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது.
தவறுகள் திருத்தப்பட வேண்டும் ஒரு தவறை தொடர்ந்து செய்வதனால் தவறு சரியாகாது. பிழையானது சரிக்கு நிகராகாது. சரியை பிழையென்று காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கடந்த காலத்தில் சரியென நினைத்து புள்ளடி (x) போட்ட மக்கள் எதிர்காலத்தில் பிழையை நினைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு புள்ளடி (x) போடவும் தயங்க மாட்டார்கள் என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு!

Thursday, June 18, 2015
தமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் வழங்க கோரி ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று விஜித் மலல்கொட மற்றும் எப்.சீ.ஜே மடவல ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் படி, குறித்த மனுவினையை நடத்திச் செல்லுமளவிற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று நீதியரசர்கள் குழு இதன்போது தெரிவித்தது.

முன்னர், சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்குமாறு நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு பணிப்புரை விடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த மனுவை சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
            

மைத்திரி - மகிந்த மீண்டும் சந்திக்க ஏற்பாடு!!

Thursday, June 18, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் பிறிதொரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன்பொருட்டு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசேட குழு சந்திக்கவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மைத்திரி -மகிந்த இணக்கப்பாட்டுக்கென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது.

இதன்படி, அந்த குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மகிந்த ராஜபக்ஸவையும் மீண்டும் சந்திக்க வைப்பது குறித்த பேசப்படவுள்ளதாக இந்த குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.              
           

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்ற ஓர் யுகப் புருஷரை தோற்கடித்தமை ஓரு வரலாற்றுத் தவறு: உதய கம்மன்பில !

Thursday, June 18, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்ற ஓர் யுகப் புருஷரை தோற்கடித்தமை ஓரு வரலாற்றுத் தவறு என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
திவுலபிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்கவோ அல்லது மைத்திரிபால சிறிசேனவோ தோற்கடிக்கவில்லை. பராக் ஒபாமா, நரேந்திர மோடி போன்றவர்கள் கூட்டாக இணைந்து மஹிந்தவை தோற்கடித்தனர்.
 
ஜோன் கெரி, நரேந்திர மோடி போன்றவர்கள் இலங்கை விஜயம் செய்தமை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவேயாகும். இலங்கைக்கு விஜயம் செய்த நரேந்திர மோடி மற்றும் ஜோன் கெரி இலங்கைக்கு உதவியாக ஒரு சதமேனும் நிதி உதவி வழங்கவில்லை.
 
மஹிந்த ராஜபக்ச ஓர் யுகப்புருஷர். அவ்வாறான ஓர் அரச தலைவரை தோற்கடித்தமை வரலாற்றில் நாம் செய்த மாபெரும் தவறாகாவும், முட்டாள்தனமாகவும் கருதப்பட வேண்டும். இன்னும் 40 ஆண்டுகளில் நாட்டின் எரிபொருள் வளம் இல்லாமல் போய்விடும். மன்னாரில் காணப்படும் எரிபொருள் வளங்களை சூறையாடவே வெளிநாட்டு சக்திகள் இந்த முயற்சியை மேற்கொள்கின்றன. இலங்கையை இந்தியாவினதோ அல்லது அமெரிக்காவினதோ காலனியாக மாற்ற இடமளிக்கப்பட முடியாது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேல்முறையீட்டு மனுவால் ஜெ.. முதல்வர் பதவிக்கு ஆபத்து!!

Thursday, June 18, 2015      
ஜெ. வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்தது. அமைச்சரவையும் இம்முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மேல்முறையீட்டின்போது சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.
 
இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளன. எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வந்தது.
 
இந்த தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த திங்கள்கிழமைக்குள் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
முதல்வர் பதவிக்கு ஆபத்து :
 
கர்நாடக சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய கேட்க உள்ளோம்.
இந்த கோரிக்கை சுப்ரீம்கோர்ட்டால் ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவரும்.
 
தீர்ப்புக்கு தடை :
 
மேலும், ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டு, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் செல்லும் என்று கேட்க உள்ளோம். வழக்கு முடியும்வரையாவது ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கேட்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Monday, June 15, 2015

மகிந்த ஆட்சியை விட மைத்திரி ஆட்சியில் மோசடி!

Monday, June 15, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திலும் பார்க்க பாரிய அளவிலான மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.'

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அலுத்கம இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நாவலப்பிடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கடந்த தினத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விரைவில் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மகிந்த ஆட்சி காலத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்கள். எனினும் இந்த அரசாங்கத்தில் அதைவிட பாரிய மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளன.

அதனை எதிர்வரும் சில தினங்களில் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
            

பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது!

Monday, June 15, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது. -

தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிரும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு டி.வி.உபுலை கைது செய்ததுடன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலிலும் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றை கலைக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை!

Monday, June 15, 2015
பாராளுமன்றை கலைக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளன.

அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இவ்வாறு கேரிரிக்கை விடுக்க உள்ளனர்.

வெகு விரைவில் இது தொடர்பிலான ஆவணமொன்றில் குறித்த உறுப்பினர்கள் கையொப்பமிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆவணத்தில் சுமார் 150 உறுப்பினர்கள் கையொப்பமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

19ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றைக் கலைக்க முடியும் என ஆவணத்தில் சுட்டிக்காட்டத் தீர்மானித்துள்ளனர்.

ஆவணத்தில் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமையவும் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

19ம் மற்றும் 20ம் திருத்தச் சட்டங்களை அமுல்படுத்துவதாகத் தெரிவித்து பாராளுமன்றைக் கலைப்பது கால தாமதமாக்கப்பட்டு வருவதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் நாட்டிற்கு தேவை: சரத் என் சில்வா!

Monday, June 15, 2015
தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் நாட்டிற்கு தேவையென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
 
கேகாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இதனைக் கூறியுள்ளார்.
 
மைத்திரியை ஜனாதிபதியாக தெரிவு செய்யவே மக்கள் வாக்களித்தனர். ரணிலை பிரதமராக்க மக்கள் வாக்களிக்கவில்லை. தற்போது நாட்டில் காணப்படும் அச்சாறு போன்ற ஆட்சியை விரும்பவில்லை.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதை மாத்திரமே எதிர்த்தேன். மஹிந்தவுக்கு எதிராக செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்