Saturday, June 20, 2015

உலங்கு வானுர்தி விடயம் பொய்யானது: முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான்!

Saturday, June 20, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விஜயங்களுக்காக உலங்கு வானுர்தி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பில் இருந்து தங்காலைக்கு செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பயன்படுத்திய உலங்கு வானுர்தி விஜயத்தை தவிர இன்று வரை அரசாங்கத்தின் உலங்கு வானுர்தி வசதிகளை பெற்று கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அதனை தவிர எந்த சந்தர்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி உலங்கு வானுர்தி வசதியை கோரவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள காவற்துறை மற்றும் இராணுவ பாதுகாப்பு தொடர்பிலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

105 காவற்துறை அதிகாரிகளும், 108 இராணுவ அதிகாரிகளும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அதிகாரிகளுக்கான உரிய வசதிகள் கிடைக்க பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
            

No comments:

Post a Comment