Monday, October 17, 2016

சீன விஞ்ஞானிகள் இருவருடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‛ஷெங்ஸோ-11!

சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ‛ஷெங்ஸோ-11' என்ற ராக்கெட்டை இன்று(அக்., 17) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள
 
சீனா, கடந்த 2013ம் ஆண்டு மூன்று சீன விஞ்ஞானிகளுடன் 'டியாங்காங்-1' என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக அவர்கள் பூமிக்கு திரும்பினர்.
 
இந்நிலையில், வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து, சென் டாங் மற்றும் ஜின் ஹயெ்பெங்க் என்ற இரு விஞ்ஞானிகளுடன், 'ஷெங்ஸோ-11' ராக்கெட் இன்று வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் சுமார் ஒருமாத காலம் தங்கியிருக்கும் இரு விஞ்ஞானிகளும், அங்கு ஆய்வுப்
பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினா!

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சி
றிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
 
அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.
 
இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

Saturday, October 1, 2016

சிரியாவில் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு 96 குழந்தைகள் பலி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவம் திடீரென குண்டு வீச்சு!

கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியாவில்  கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்  ஏற்பட்டது. எனவே, அரசு ராணுவமும் கிளர்ச்சியாளர்களும் போரிடாமல் அமைதி காத்தனர்.
 
ஆனால் கடந்த  19-ந் தேதி போர்  நிறுத்த ஒப்பந்தம் மீறல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள்  வசம் நீண்ட  நாட்களாக இந்த அலெப்போ   பகுதியை மீட்க ராணுவம் திடீரென குண்டு வீச்சு   நடத்தியது..
அங்கு குண்டு வீச்சு நடத்தப்பட்டது என்பதை விட குண்டு மழை பொ
ழியப்பட்டது என்றே  கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1900  குண்டுகள் வீசப்பட்டன.
இதனால் அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் இடிந்து  தரைமட்டமாயின.  குண்டு வீச்சுக்கு ஆஸ்பத்திரிகளும்,  மின் நிலையங்களும்,  குடிநீர் சப்ளை  நிலையங்களும் தப்பவில்லை.  இவை அனைத்தும் தரைமட்டமாயின.
 
இத்  தாக்குதலில் அலெப்போ நகரில் மட்டும் 320 பேர் பலியாகினர். அவர்களில் 96 குழந்தைகள் அடங்குவர்.இது தவிர  அலெப்போ மாகாணத்தில்  குண்டு வீச்சில் இடிந்து தரை மட்டமான  வீடுகளில்  இடிபாடுகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களில்  1 லட்சம் பேர் குழந்தைகள்  அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்!

எல்லையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் வற்புறுத்தின.
 
காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28-ந் தேதி. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 7 முகாம்களை இந்திய ராணுவம் துவம்சம் செய்தது. இதில் 38  பேர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதனால் காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
 
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபானே துஜாரிக் கூறியதாவது:-
 
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவி வரும் பதற்றமான நிலையை ஐ.நா. தொடர்ந்து மிகவும் கவலையுடன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் அறிவோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்.
 
இதேபோல் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு நாடுகளுமே எல்லையில் அடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இந்திய-பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் எல்லையில் தொடர்பில் இருப்பார்கள் என்று நம்புகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்கு இதுபோன்ற தொடர்புகள் மிகவும் அவசியம்” என்றார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் :ஜனாதிபதிக்கு மனு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் நேற்று அணிதிரண்ட பொது பலசேனா உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளன.
 
‘எழுக தமிழ்’ பேரணிக்கு தலைமை தாங்கிய விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், கலாபோபஸ்வெவ பிரதேசத்தை உள்ளடக்கிய தனிப்பிரதேச செயலக பிரிவு உருவாக்கப்பட வேண்டும், மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு மத்திய அரசாங்கம் உதவி வழங்க வேண்டும், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது, விகாரைகளுக்கு
பாதுகாப்பு வழங்கவேண்டும், உள்ளூராட்சி சபை எல்லைகளை சரியாக மேற்கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
 
நேற்றைய எதிர்ப்பு பேரணியில் சிங்கள ராவய, சிங்கள பெரமுன, பொது பலசேனா, வடக்கை காத்து நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கம், கலாபோபஸ்வெவ மக்கள் உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் என்பன கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, September 10, 2016

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் முடிந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலி;ல் கூட்டு எதிர்க்கட்சி சிறந்த வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மகிந்த நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதனால் அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 6, 2016

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் புலி பிரிவினைவாதிகளாலோ புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர்   புலி பிரிவினைவாதிகளாலோ   புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி மலேஷியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
'மலேஷியாவில் இலங்கைக்கான தூதுவர் தாக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு விழுந்த அடி என்பதை உணர வேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ எமக்கோ எவ்விதமான பலனும் இல்லை. ஆகவே அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஒருபோதும் சாத்தியமற்ற விடயமாகும். கட்சி கொள்கை எமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல்:புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை: மலேசிய எச்சரிக்கை!


மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் நேற்றைய தினம் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் எதிர்க்கட்சி எம்பியான தினேஷ் குணவர்த்தன ஆகியோரை விமானநிலையத்தில் வழியனுப்பி வைக்கச் சென்று திரும்பிய போதே இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை வழியனுப்பி வைத்துவிட்டு உயர்ஸ்தானிகர் திரும்பியதாக எண்ணியே குண்டர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் குழுக்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன. மஹிந்த ராஜபக்‌ச விகாரைக்குச் செல்லப் போகிறார் என்ற தகவலின் அடிப்படையில் விகாரை மீதும் விகாராதிபதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ.யினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உச்சகட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட இவ்வாறான தாக்குதல் சம்பவங்களோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோ மலேசியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
நாம் விமானத்தில் ஏறுவதற்காகச் சென்று விட்டோம். அதன் பின்னரே அவர் தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பான இடத்துக்கு அவர் சென்றிருந்த போதும் அவரைப் பின்தொடர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த விமானநிலைய பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என தினேஷ் குணவர்த்தன எம்பி கூறினார்.எனினும், தாக்குதல் நடத்தியவர்களில் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இல்லை.
எவ்வாறிருந்தாலும் மலேசிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் மலேசிய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும் 56 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறினார்.
 
எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தொடர்பில் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு நிதியுதவி வழங்குவதுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணைகளும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மாலை 4 மணிக்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தூதுவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு வைத்திய நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கவலையடைகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இந்தக் குழுவினருக்கு எச்சரிக்கின்றேன் என நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மலேசிய பொலிஸ் மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் கூறியுள்ளார்.
 
இதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, இதனைக் கண்டித்திருப்பதுடன், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

Sunday, September 4, 2016

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய 'நந்திக்கடலுக்கான வழி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள!

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள புநந்திக்கடலுக்கான வழிபூ நூல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நூல் எதிர்வரும் 6 ஆம் திகதி- கமல் குணரட்ன ஓய்வுபெறும் தினத்திற்கு மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த நூலில்  புலிகளின் தலைவர்  பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் அடங்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவத்தினர் கூறும் 53 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக 2009 ஆம் ஆண்டு கமல் குணரட்ன கடமையாற்றினார்.

புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை:முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!

மலேசியாவுக்கு செல்லும் முன்னரே, அங்கு தனக்கு எதிர்ப்பு இருக்கும் என அறிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 
 
புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை. யுத்தத்தை நான் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாகவே எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு எதிராகவே ஆர்ப்பட்டங்கள் நடத்தப்படுகின்றன.
 
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிகளவான மக்கள் ஆதரவுள்ள உறுப்பினர்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கட்சியை விட்டு விரட்டுகின்றனர். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கடும் வெறுப்பில் உள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Saturday, September 3, 2016

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தாக்குவது, விரட்டியடிப்பது, சிறை பிடித்துச்செல்வது, மீன்பிடி கருவிகளைப் பறித்துக்கொண்டு வலைகளை வெட்டி வீசுவது என இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.
 
இந்நிலையில், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 113 படகுகளையும்  உடனடியாக விடுவிக்கவும், கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
 
அதன் முதல்கட்டமாக இன்று மீன்பிடிதுறைமுகம் அருகே கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர்கள் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

குருணாகலில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை!

குருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அந்நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப் போவதில்லையென மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
 
இதேபோன்று, மஹிந்த குழு சார்ந்த மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்து கொள்வதில்லையென ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும்- பான் கீ மூன்!

இறுதி கட்ட  போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்தின் முடிவில், கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் பங்கேற்ற பான் கீ மூனிடம், சர்வதேச பங்களிப்பை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்துவருகின்றமை குறித்து கேள்வி எழுப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த ஐ.நா செயலர், இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். நிலைமாறு நீதிப்பொறிமுறையில் முழுமையான அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் பங்கெடுத்துள்ளன என நான் நினைக்கின்றேன். பங்குபற்றுதல் மட்டத்தில் வேறுபாடுகள் காணப்படலாம். அல்லது முக்கியமான விடயங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து வேறுபாடுகள் காணப்படலாம்.
 
ஐக்கிய நாடுகள் சபை மிக முக்கியமான மூன்று விடயங்களை நோக்கி பயணிக்கின்றது.ஒன்று நல்லிணக்கம், அதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.அடுத்தது சர்வதேச நிலைமாறுநீதிப்பொறிமுறை, அந்த விடயத்திலும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் சர்வதேசத்துடனும் இணைந்து பயணிக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நம்பகமான நிலைமாறு நீதிப்பொறிமுறையை அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
நம்பகத்தன்மை என்பது தேசிய ரீதியானதும் சர்வதேச ரீதியானதுமாக அமைய வேண்டும். சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஆழமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டுள்ளது. புரிந்துணர்வு குறைபாடு அல்லது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வேறுபாடுகள் காணப்படலாம். எனினும் நாம் சரியான திசையை நோக்கி முன்னோக்கி பயணிக்கின்றோம். நீங்கள் முன்னோக்கி பயணிக்கின்றீர்கள்.
 
பரஸ்பர புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, மன்னிப்பு வழங்குதல், பொறுமை காத்தல் உள்ளிட்ட இவை அனைத்தையும் ஸ்ரீலங்கா மக்களுக்கும் அரசாங்கமும் இந்த தருணத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவற்றை நோக்கிய நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். என குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக புலிகளுக்கு ஆதரவான மலேசியர்கள் போராட்டத்தில் இறங்கினர்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக புலிகளுக்கு  ஆதரவான    மலேசியர்கள் புத்ரா உலக வணிப மையத்திற்கு முன்புறம் போராட்டத்தில் இறங்கினர். ராஜபக்சே மலேசியாவில் இருக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கூறினர்.
 
ஆசியான் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக நாடு தழுவிய அளவில் புலிகளுக்கு  ஆதரவான    மலேசிய மக்கள் போலீஸ் புகார் அளித்தும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். கடந்த வியாழன்கிழமையும் நேற்றும் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தின் முன் கண்டன ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளுக்கு  ஆதரவான   அமைப்புகளைச் சேர்ந்த மலேசியத் தமிழர்கள் இன்றும் ஒன்று கூடி தனது அதிருப்தியினைத் தெரிவித்தனர்.
 
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று ஒன்று திரண்ட வேளை, "ராஜபக்சே மாநாட்டிலோ அல்லது நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எங்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கோஷமிட்டனர்.
 
மையத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த வேளை, போலீஸ்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர்.
நேற்று ஏற்பாட்டுக்குழு சார்பில் பேசிய அதிகாரி ஒருவர், மாநாட்டு மண்டபத்தில் ராஜபக்சே இல்லை என்று கூறிய ஒரு மணிநேரத்திற்குள் மாநாட்டு மேடையில் ராஜபக்சே உரையாற்றிய புகைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Monday, August 15, 2016

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்குகின்றது – நாமல் ராஜபக்ஸ!

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஓர் காவல்துறைப் பிரிவு அல்ல எனவும் அது சிறிகொத்தவின் ஓர் கிளை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் செயற்பட்டு வருவதாகவும், தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுவதாகத்தெரிவித்துள்ளார்.

இந்தியா- வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து: மோடி!


டெல்லி: இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு பிரதமர் மோடி  சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
 
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில் பேசிய மோடி, நமக்கு சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை என்றும் இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் லட்சக்கணக்கானோரின் தியாகம் உள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கையர்களின் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இந்த விஜயத்துக்கான, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அனைத்து செலவுகளையும் அந்தந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் பணியகம் மூலம் முன்னாள் புலிகளை கைது செய்ய முடியும் - ஹெல உறுமய!

காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய வரவேற்றுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள திக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, காணாமல்போன ஆயிரக் கணக்கான படைவீரர்கள் மற்றும் காவல்துறையினர் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட வேண்டும்.
 
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட  புலிகளின் முன்னாள் போராளிகளைக் கூட மீளவும் கைது செய்து, காணாமல் போன படையினர் பற்றிய தகவல்களை திரட்ட முடியும். தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டவற்றை மறந்து நல்லிணக்கப் பாதையில் நகர மறுத்தல்,  புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் பற்றியும் விசாரணை செய்யப்பட வேண்டும்.
 
காணாமல் போனோர் பற்றிய அலுவலகமானது நாட்டு மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமே தவிர, ஜெனீவாவிற்கு பொறுப்பு சொல்லும் வகையில் அமையக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Sunday, August 14, 2016

கியூபாவின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்தநாள்!!


கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்நாட்டின் பிரபல சுருட்டு தயாரிப்பாளர் 90 மீட்டர் நீளமுள்ள சுருட்டு ஒன்றை தயாரித்து, அந்த சாதனையை தங்கள் நாட்டின் புரட்சித் தலைவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
 
கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்நாட்டின் பிரபல சுருட்டு தயாரிப்பாளர் 90 மீட்டர் நீளமுள்ள சுருட்டு ஒன்றை தயாரித்து, அந்த சாதனையை தங்கள் நாட்டின் புரட்சித் தலைவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
 
அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.
 
கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் கியூபாவுக்கு சென்றார்.
 
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ - ஒபாமாவை சந்தித்துப் பேச மறுத்து விட்டார்.
 
இந்நிலையில், அமெரிக்காவின் பேராதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்த்துநின்று அமெரிக்காவின் அடிவாசலில் அமைந்துள்ள கரிபியன் நாடான கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்படுத்திய அந்நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்தநாளை அந்நாட்டு மக்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
 
தலைநகர் ஹவானாவில் உள்ள கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலைவரை வண்ணமயமான வாணவேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல், நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் வெகு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

ஹவானா நகரில் உள்ள காரல் மார்க்ஸ் கலையரங்கத்தில் பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பாடல்களுடன் கூடிய நாட்டிய நிகழ்ச்சிகளை சிறுவர்-சிறுமியர் நடத்தினர். முதுமை காரணமாக வெகு அரிதாக மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிடல் கேஸ்ட்ரோ, நட்புநாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவுடன் சேர்ந்து முன்வரிசையில் அமர்ந்து இந்த கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
 
இந்நிலையில், தங்கள் நாட்டு தலைவரின் பிறந்தநாளுக்கு மேலும் கவுரவம் சேர்க்கும் வகையில் இங்குள்ள பிரபல சுருட்டு தயாரிப்பாளரான கியூவெட்டோ என்றழைக்கப்படும் ஜோஸ் கேஸ்ட்டலர் கெய்ரோ என்பவர் 90 மீட்டர் (295 அடி) நீளம் கொண்ட பீமெகா சைஸ்பீ சுருட்டு ஒன்றை தயாரித்து, இதன் மூலம் தான் படைத்த புதிய கின்னஸ் சாதனையை பிடல் காஸ்டிரோவுக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார்.
கியூபாவில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிராக 1959-ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியை அடுத்து ஆட்சியை கைப்பற்றி, 1985-ம் ஆண்டுவரை சுமார் அரை நூற்றாண்டு காலம் அந்நாட்டின் ஆட்சிக்கு தலைமை தாங்கிவந்த பிடல் கேஸ்ட்ரோ பல சந்தர்பங்களில் வாயில் புகையும் மெல்லிய, நீளமான சுருட்டுடன்தான் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கொழும்பு யாழ். செல்லும் ரயில்களுக்கு ஆயுதப் பாதுகாப்பு!

யாழ். - கொழும்பு இடையே பயணிக்கும் ரயில்கள் மீது தொடர்ந்து கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து ரயில்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்றுஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றின் மீது ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தை சேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 
இதனையடுத்து தூரச்செல்லும் ரயைில்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்களின்பாதுகாப்பு நேற்று முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, June 20, 2016

நல்லாட்சி அரசாங்கம் 24 மணிநேரமும் அச்சத்தில் உள்ளது: தினேஷ் குணவர்தன!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பலத்தினால் நல்லாட்சி அரசாங்கம் 24 மணிநேரமும் அஞ்சியே ஆட்சியில் இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை சந்திப்பதற்காக இன்று திங்கட்கிழமை(20) ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விஜயம் செய்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன,
 
இந்த அரசியல் சூழ்ச்சி தொடர்பாக நாங்கள் வியப்படைகின்றோம். அரசாங்கம் ஏன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பின்னால் முழுநேரம் கண்ணோட்டம் செலுத்தி அரசியல் சூழ்ச்சி செய்கின்றது?ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்விஷன் பலத்திற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது என்பது இதுமூலம் தெளிவாகின்றது.
 
இந்த நடவடிக்கையின் ஊடாக 24 மணிநேரமும் அரசாங்கம் பயத்துடனே இருக்கின்றது என்பது புலப்படுகின்றது.
அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்கு சென்றாலும், நாட்டின் அரசியல் மாற்றம் பெறாது. அடக்குமுறையும், அதனை மேற்கொள்பவர்களும் இறுதியில் அதனை அவற்றை வாபஸ் பெற்றுக்கொள்வதே காலத்தின் அடிப்படை என்றார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மிலுக்கு விளக்கமறியல்!

இன்று(20) காலை நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த அரசாங்க காலத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தாம், மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரமுயற்சித்த போதும் அதற்கு தடையேற்பட்டது. எனினும் பிரதமர் நிலைக்கு போட்டியிட தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒய்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
இறுதிப்போர் தொடர்பாக கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, நிலைமையை வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறாக எடை போட்டுவிட்டதாக தெரிவித்தார். எனினும் விடுதலைப்புலிகள் மீளிணைவதை தடுப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
 போரின் பின்னர் வடக்கின் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தாம் பாரிய உதவிகளை செய்த நிலையில் அவர்களை தாம் நம்பியிருந்தபோதும் அவர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை கவலையளிப்பதாக மஹிந்த ராஜபக்க தெரிவித்தார்.

கடலில் தவித்த இலங்கை தமிழ் அகதிகள் கரைக்கு வர அனுமதி!

 பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த பல இலங்கை தமிழ் குடியேறிகள், கரைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
 
அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த அவர்கள் சென்ற படகில்
இயந்திர கோளாறு ஏற்பட்டது. முன்னர், அகதிகள் தங்கள் படகைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசியதாலும், கடும் மழை பெய்ததாலும், அதிகாரிகள் தங்கள் முடிவை மாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என, பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன், அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அந்த அகதிகள் குழுவில் 9 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் இராணுவ சேவையில் இருந்து நீக்கம்!

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் பொதுமன்னிப்பின் கீழ் இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 
இதில், 4229 இராணுவ சிப்பாய்களும், 206 கடற்படையினரும், 165 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
 
இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை குறித்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது

Sunday, June 19, 2016

கம்­மன்­பி­ல கைது கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி: விமல் வீர­வன்ச!

பிவிதுர ஹெல உறுமய அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன உதய கம்­மன்­பி­லவை கைது செய்துள்­ளமை கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச குற்றம் சாட்­டி­யுள்­ளார்.
 
பாரா­­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில பொலி­­ஸ் விஷேட விசா­ரணை பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டு­ள்­ளதையிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்ட­வாறு தெரி­­விக்­கப்­பட்­டுள்­ள­­து.
 
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான நாளைக்­கான ஹெலஉறுமய அமைப்­பின் தலை­­வ­ரும் கூட்­டு எதி­ர­ணியின் அங்­கத்­த­­வ­ரு­மா­ன உதய கம்­மன்பில போலி குற்­றச்­சாட்­டினை மையப்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அர­சாங்­கத்தின் இந்தச் செயற்­பாட்­டினை தேசிய சுதந்­திர முன்­னணி வண்­மை­யாக கண்­டிக்­கி­ற­து. அதே­நேரம் நாட்டின் தேசிய பாது­காப்பை முற்­றாக இல்­லா­தொ­ழித்து மீண்டும் தீவி­­ர­வாத சக்தி­க­ளுக்கு உயிர்­கொ­டுக்கும் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்கம் தொடர்­ந்­தும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. தேசத்­திற்கு துரோகம் செய்யும் இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் மக்­களும் அதி­ருப்­தி அடைந்­துள்­ள­னர். என்றும் அவர் கூறியுள்ளார்.

பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பத்பநாபா அவர்களுக்கு ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது!