Tuesday, September 30, 2014

ஜெயலலிதா அபராதம் 100 கோடி கட்டினால்தான் ஜாமீன் கிடைக்கும்; நீதித்துறை வல்லுநர்கள் கருத்து! ஜெயலலிதா ஜாமின், மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை

Tuesday, September 30, 2014
சென்னை:ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருந்த சொத்துகள் அனைத்தும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும். 
அது தவிர்த்து, தனியாக 100 கோடி ரூபாயை அபராதமாக ஜெயலலிதா கட்ட வேண்டும்.
 
அதுவும் முறையான கணக்கு வழக்கு காட்டப்பட்ட பணத்தில் கட்ட வேண்டும்.
 
அந்த அபராதத்தைச் செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர் மேல்முறையீட்டுக்கோ அல்லது ஜாமீன் கேட்டோ விண்ணப்பிக்க முடியும், என்று நீதித்துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
 
ஜெயலலிதா ஜாமின், மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை!
 
ஜெயலலிதா ஜாமின், மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்க வேண்டும் என்று விடுமுறை கால நீதிபதிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.100 கோடி அபாராதம் அளித்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா சார்பாக கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமின் கோரியும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரியும் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், இந்த மனுக்கள் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும், விடுமுறை கால நீதிபதி ரத்னகலா நாளை விசாரிப்பார் என்று கூறினார்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வாதாடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பெங்களூர் வந்தார். அரசு சார்பாக வாதாட பவானி சிங்கிற்கு அரசு அறிவிப்பாணை கிடைக்காததால், வழக்கை விசாரிக்க காலஅவகாசம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 6-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், ஜாமின் மனுவை அவசர கால மனுவாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா இந்த மனுவை நாளை விசாரிப்பார் என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணை நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஜெயலலிதா கைது - கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!!

Tuesday, September 30, 2014
சென்னை:ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் 'ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்...

'66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர், பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா), மூன்றாவது ( சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி 'கூட்டுச்சதி (criminal conspiracy)’ செய்தல் குற்றமாகும்.

இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி 'குற்றத்துக்கு உடந்தை (aiding and abet)’ என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. ஒவ்வொருவருக்குமான தண்டனை விவரங்களைப் பிறகு அறிவிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்.''- நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இப்படி வாசித்து முடித்ததும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரோடு அவர்களுடைய வழக்கறிஞர்களின் முகமும் இருண்டு போனது. அப்போது நேரம் 11.30 மணி!
அப்போதே ஜெயலலிதாவின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. அந்த ஒரு நிகழ்வே நீதிமன்ற அறைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு நிலைமையை உணர்த்திவிட்டது. அனைவரும் சோகத்தில் மரத்தடியில் அமர்ந்துவிட்டனர்.

மீண்டும் வாதங்கள்!

மாலையில் நீதிபதி குன்ஹா தண்டனை விவரத்தை வாசித்தார். ''குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன். வழக்குத் தொடரப்பட்டபோது வழக்கில் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். அது அரசாங்க மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அபராதத் தொகை அதற்கேற்றவாறு கணக்கிடப்பட்டு நூறு கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி, இந்த அபராதத்தைக் கட்டாத நிலையில் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுபோல, மற்ற குற்றவாளிகள் தங்களது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்று முடித்தார்.

'பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை மிகச் சாதாரணமாகச் சாதித்துவிடும் எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம்’ என்று விதிக்கப்பட்டது இல்லை. இத்தனை பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்ட முதல் அரசியல்வாதி, முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.


இப்போது இந்த அபராதம் பற்றி தவறான தகவல்கள் வருகின்றன. அதாவது, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் சொத்துகள் போக, மீதம் 34 கோடி ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்று சொல்கின்றனர். ஆனால், தீர்ப்பில் நீதிபதி அப்படிச் சொல்லவில்லை. 100 கோடி ரூபாய் அபராதம் என்பது தனியானது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தினுடையவை. ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது அவருடைய வருமானத்தைத் தாண்டி அவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் வருவாய்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருந்த சொத்துகள் அனைத்தும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அது தவிர்த்து, தனியாக 100 கோடி ரூபாயை அபராதமாக ஜெயலலிதா கட்ட வேண்டும். அதுவும் முறையான கணக்கு வழக்கு காட்டப்பட்ட பணத்தில் கட்ட வேண்டும். அந்த அபராதத்தைச் செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர் மேல்முறையீட்டுக்கோ அல்லது ஜாமீன் கேட்டோ விண்ணப்பிக்க முடியும்'' என்று நீதித்துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

மேல் முறையீடும் அப்பீலும்!

இந்த வழக்கில் மேல்முறையீடும் (அப்பீல்) ஜாமீனும் தனித்தனியாகக் கிடையாது. மேல்முறையீடு செய்யும்போது, 'நான் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்கிறேன். எனக்கு ஜாமீனும் வழங்க வேண்டும்’ என்று மனுச்செய்ய வேண்டும். ஆனால், தீர்ப்பின் நகல் இவர்கள் கையில் கிடைக்கும் வரை அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும் மேல்முறையீடு செய்யும்போது அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி அதற்கான ரசீதை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனு விசாரணைக்கே ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தொகை அதிகம் என்றும் கட்டுவதில் சிரமம் என்றும் சொன்னால், அதற்காகத் தனியாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தீர்ப்பு வரும் வரை சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடுக்கும் ஜாமீனுக்கும் விண்ணப்பிக்க முடியாது.

வழக்குச் செலவை யார் கொடுப்பது?

சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அந்தச் செலவை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை தமிழக அரசு கட்டத் தவறினால், ஜெயலலிதா 1991-க்கு முன்பாக தனக்கு இருந்ததாகக் காட்டியுள்ள சொத்துகளை விற்று அந்த ஐந்து கோடியைக் கட்ட வேண்டும்.

போயஸ் கார்டன்!

போயஸ் கார்டன் வீட்டுக்கு ஏதாவது பிரச்னை வருமா? என்ற சந்தேகம் கிளப்பப்படுகிறது. ''அந்த வீடு ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராவதற்கு முன்பாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் அந்த வீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்ட பகுதிகள், செய்யப்பட்ட ஆடம்பர வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்கள் அரசுடைமையாகும்'' என்று சொல்லப்படுகிறது.

காவல் துறையிடம் ஜெயலலிதாவின் கார்!
ஜெயலலிதாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்தது. அதற்கான சிகிச்சை அளித்தனர். அரை மணி நேரத்தில் ரத்த அழுத்தம் சீரானது. அதன்பிறகு, நான்கு பேரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார்.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அவரை அவர்கள் பொறுப்பில் இருந்து தங்கள் கஸ்டடியில் எடுப்பதற்குள் கர்நாடக மாநில காவலர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையினர், 'எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால்தான், நாங்கள் அவரை அனுப்புவோம்’ என்றனர். இதில் டென்ஷனான கர்நாடக மாநில போலீஸார், 'நீதிமன்ற உத்தரவைக் கேட்டீர்கள் அல்லவா? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் அவர் பதவி உட்பட அவருக்குரிய சலுகைகள் அனைத்தையும் இழந்தவராகிறார். நாங்கள் எழுத்துப்பூர்வமாக கொடுப்பதற்கு எந்த அவசியமும் இல்லை’ என்றனர். அதன்பிறகு ஜெயலலிதாவை கர்நாடக காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
 
அதன் பிறகு, ஜெயலலிதாவின் காரில் அவரை அழைத்துச் சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில், எண் 7402 அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மணி சரியாக இரவு 8.20.

திரையுலகம் உண்ணாவிரதம்: ரஜினி, கமல், விஜய், அஜீத் கடைசிவரை வரவே இல்லை!

Tuesday, September 30, 2014
சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை ஜெயலலிதாவை ஆதரித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கடைசி வரை முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை.
 
முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படும் ஒருவர் கூட சேப்பாக்கம் உண்ணாவிரதப் பந்தல் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
 
தமிழ் திரையுலகின் அத்தனை சங்கங்களும் இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்றன. பங்கேற்ற திரையுலக பிரபலங்கள்:
 
தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, கலைப்புலி தாணு, கேடி குஞ்சுமோன், இயக்குநர் சிராஜ், நடிகர் தியாகு, ராமராஜன், டி அருள்பதி, கே ஆர் செல்வராஜ், குண்டு கல்யாணம், விக்ரமன், காஜா மொய்தீன், ஜேகே ரித்தீஷ், வேல் முருகன், சுரேஷ் காமாட்சி, ஆர் கே செல்வமணி, மனோபாலா, தேவா, சச்சு, சங்கர் கணேஷ், கே பாக்யராஜ், இப்ராகிம் ராவுத்தர் நளினி, கவிதாபாரதி, ஏ எல் அழகப்பன், ராகராஜன் ராஜா, சித்ரா லட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்டன்ட் தவசி, அதியமான், கலைப்புலி சேகரன், ஆர்வி உதயகுமார்,

பி வாசு, ஸ்ரீகாந்த், சரத்குமார், வெண்ணி்ற ஆடை நிர்மலா, செந்தில், ஆர் கே சண்முகம், கேயார், மன்சூர் அலிகான், எஸ் ஏ சந்திரசேகரன், கலைப்புலி சேகரன், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம் ரமேஷ் கன்னா, பிரவீன் காந்த், எஸ் ஜே சூர்யா, பெப்சி விஜயன், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், சிங்க முத்து, சவிதா, அனு மோகன், அபிராமி ராமநாதன், விவேக், மயில்சாமி, சிஆர் சரஸ்வதி, ஆர்த்தி, சத்யராஜ்,

சத்யஜோதி தியாகராஜன், பிரபு, விக்ரம் பிரபு சிபிராஜ், ரவிமரியா, பாத்திமா பாபு, ஜாகுவார் தங்கம், நரேன், சினேகன், முக்தா சீனிவாசன், கே முரளிதரன், சவுந்தர்ராஜன், கல்யாண், சக்தி, லியாகத் அலிகான், சேரன், தரணி, குட்டி பத்மினி ரவி கொட்டாரக்கரா, புஷ்பா கந்தசாமி, புனேஸ்வரி, சிங்கம்புலி, விபி கலைராஜன் எம்எல்ஏ, தேமுதிக எம்எல்ஏ சுந்தரராஜன், இயக்குநர் லிங்குசாமி.
முன்னணி கலைஞர்கள் என்று பார்த்தால், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, இயக்குநர் பாலா என சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

இவர்களில் சிவகார்த்திகேயன் மட்டும் பிற்பகலில் வந்து மாலை வரை அமர்ந்திருந்தார். மற்றவர்கள் பத்துப் பதினைந்து நிமிடம் இருந்துவிட்டு கிளம்பினர்.

ரஜினி, கமல், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் போன்றவர்களில் யாராவது வரக்கூடும். கமல் உள்ளூரிலேயே இருப்பதால் அவராவது வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

ஆனால் மாலை 5 மணி வரை யாரும் வரவில்லை. வந்திருந்த நடிகைகளில் ஒருவர் கூட இப்போது ஃபீல்டில் இல்லை. அல்லது வயதானவர்கள்.
 
இப்போது பிரபலமாக, முன்னணியில் உள்ள ஒருவர் கூட இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் உண்ணாவிரதத்துக்கு தலைமையே நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார்தான்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

Tuesday, September 30, 2014
இலங்கை::
ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 7ம் திகதி நடைபெறலாம் என அரசவட்டாரங்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்க்கு பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாகவே பேச்சுக்களை மேற்கொள்வார் என அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊவா தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி தற்போதைய அரசியல் சூழ்நிலையை மதிப்பிடுவார், ஊவா தேர்தலுக்கு பின்னர் அமைச்சர்களுடனும், கூட்டணிக் கட்சிகளுடனும் இடம்பெறும் முதலாவது பேச்சுக்கள் இவை என தெரிவித்துள்ள அரச வட்டாரங்கள் தேர்தல்களுக்காக ஆரம்ப வேலைகளை அரசு ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளன.

லெனின் சிலையை தகர்த்த உக்ரைன் மக்கள்!!

Tuesday, September 30, 2014
கிவ்::உடைந்த சோவியத் ரஷியாவில் இருந்து உக்ரைன் நாடு உருவானது. இங்கு கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக உள்ள ரஷியா ஆதரவாளர்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வருகின்றனர். அது உள்நாட்டு போர் ஆக உருவெடுத்தது.

போராட்டக்காரர்களுக்கு ரஷியா ஆதரவளித்தது. அவர்களுக்கு ஆயுத உதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் உக்ரைன் மக்கள் ரஷியா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். தங்கள் எதிரியாக கருதுகின்றனர்.

எனவே உக்ரைன் அரசு ஆதரவாளர்கள் ரஷியாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கார்சிவ் நகரில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அங்கு நகரின் மையத்தில் இருந்த மிக உயரமான பிரமாண்ட லெனின் சிலையை அகற்றினர். முன்னதாக லெனின் சிலையின் கால் பகுதியை கியாஸ் வெட்டிங் மூலம் அறுத்தனர். பிறகு கயிறு கட்டி அச்சிலையை கீழே தள்ளி தகர்த்தனர்.

யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கு அதிகளவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன: வை.கே. சின்ஹா!

Tuesday, September 30, 2014
இலங்கை::யுத்தத்தின் பின்னர் இலங்கைக்கு அதிகளவான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளின் அளவும் பரப்பும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1.63 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித்திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு, உட்கட்டுமானம், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடித்துறை, கைத்தொழில் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் முக்கியம் என கருதப்பட்ட திட்டங்களுக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Tuesday, September 30, 2014
சென்னை::இன்று சென்னையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சினிமா நடிகர்-நடிகைகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மர்ம ஆசாமி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

தமிழ் திரையுலகினரும், ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர்– நடிகைகள், உள்ளிட்ட திரைப்பட துறையினர் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சினிமா செய்தி தொடர்பாளரான ராதாகண்ணனின் செல்போன் நம்பருக்கு நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர், சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் குண்டு வெடிக்கும். எல்லோரும் மொத்தமாக போய் சேருங்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகண்ணன், இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் எந்த நம்பரில் இருந்து மிரட்டல் போன் வந்தது என்பது பற்றியும் அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.

ராதாகண்ணனின் செல்போனில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என்பது தெரியவில்லை. போன் நம்பரை வைத்து அவரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் வந்த போன் நம்பர் யாருடையது. அவர் எந்த பகுதியில் வசித்து வருகிறார் என்பது பற்றி சைபர் கிரைம் போலீசார் துப்பு துலக்கியுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சினிமாத் துறை உண்ணாவிரதம்!

Tuesday, September 30, 2014
சென்னை::சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு சினிமா துறையினரும் கலந்துகொண்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

அதில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. உண்ணாவிரதத்துக்கு காலை 8 மணிக்கே திரையுலகினர் வரத் தொடங்கினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். ஜெயலலிதா எல்லா சோதனைகளையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும் என்றார்.

பின்னர் உண்ணாவிரதம் துவங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், சரவணன், குண்டு கல்யாணம், மனோபாலா, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, ஆதிராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப்ராகிம் ராவுத்தர், ராதாகிருஷ்ணன், கில்டு ஜாகுவார் தங்கம், சவுந்தர், சுப்பையா, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. உண்ணாவிரதம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியிலும் சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று காலை தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

இலங்கை சிறையில் இருந்து 9 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Tuesday, September 30, 2014
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று சிறையில் அடைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2-ந் தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது படகு பழுதானது. நடுக்கடலில் தத்தளித்தத அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது.

இந்நிலையில், இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் இன்று அல்லது நாளை ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

(புலிகள் ஆதரவு) தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தன் தலைமையில் உயர்மட்ட குழு நியமனம்!!

Tuesday, September 30, 2014
இலங்கை::(புலிகள் ஆதரவு)  தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இரா. சம்பந்தன் தலைமையில் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய செயற்குழுவின் முதலாவது கூட்டம் திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது இரா. சம்பந்தன் தலைமையில் 10 பேர் கொண்ட உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டது.

இரா. சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், கே. துரைராஜசிங்கம், பேராசிரியர் மு. சிற்றம்பலம், பொன். செல்வராஜா, சி. வி. கே. சிவஞானம், வட மாகாண அமைச்சர் எஸ். குருகுல ராஜா, கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி, எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அடங்குகின்றனர்.

வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் 15ஆவது மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆராய்ந்து அது குறித்து எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கே மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிர்வாகம் மற்றும் செயல் திட்டங்கள் சார்ந்த விடயங்களைப் பொறுப்பேற்று நடாத்தும் அதிகாரங்களை புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் அவரோடு இணைந்த செயற்குழுவினரும் மேற்கொள்ளும் கடமைப்பாடு கொண்டவர்களாக இருக்க புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அரசியல் உயர்மட்ட குழு சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் அதிகாரம் கொண்ட குழுவாக இக்குழு செயற்படும்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினர் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு மற்றும் பிரச்சினைகளுக்கான பரிகாரத்தை அடைவதற்கு வேண்டிய அறவழிப் போராட்டங்களை நியாயப்படுத்தவும் அப்போராட்டங்களில் மக்களை கனதியாக ஈடுபடுத்தவும் வேண்டிய விளக்கங்களையும் ஆலோசனைகளையும் மக்களுக்கு வழங்கும் முகமாக கிராமம் தேர்தல் தொகுதி மாவட்டங்களில் கொண்டு செல்லும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது புதிய செயற்குழுவின் அளிக்கப்பட்ட கடமைகளாக வகுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தஞ்சக் கோரிக்கையாளர்கள் பற்றிய மனு நிராகரிப்பு!

Tuesday, September 30, 2014
இலங்கை::இலங்கையில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடுகடத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு  உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் தஞ்சக் கோரிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படலாம் என மனித உரிமைகள் ஆர்வலர்களால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வீசா இன்றி இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களை வௌியேற்ற
 
இலங்கைக்கு உரிமையுள்ளது என அரச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை நிராகரித்துள்ளனர்

பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான உள்ளுராட்சி மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில்!

Tuesday, September 30, 2014
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான உள்ளுராட்சி மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் கால்ரைட் அவர்களின் தலைமையில்(09.29.2014) நடைபெற்றது.
 
இம்மாநாட்டிற்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும், இம்மாநாட்டில் பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, மாலைதீவு, இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளின் உள்ளுராட்சி துறை சார்ந்த அமைச்சர்களும், அமைச்சுகளினது செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
 
இம்மாநாட்டின்போது பொதுநலவாய நாடுகளின் உள்ளுராட்சித்துறையின் செயலாளர் நாயகம் கால்ரைட் அவர்கள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எதிரொலி: பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

Tuesday, September 30, 2014
சென்னை::அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தண்டனையை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மாநிலம் முழுவது சோகத்திற்கு உள்ளாகினர். அதில் ஒரு சில தொண்டர்கள் துக்கம் தாங்காமல் மாரடைப்பாலும், அதிர்ச்சியடைந்தும், தீக்குளித்தும், தூக்குமாட்டியும் இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

சென்னை வளசரவாக்கம், ஏ.பி.என். பிரதாப் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் வெங்கடேசன், தீக்குளித்து ஆபத்தான நிலையில் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

சென்னை திருவொற்றியூர் பெரிய மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த யோவான் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகளும், 2-ம் ஆண்டு பி.ஏ. படிக்கும் மாணவியுமான ஜோனஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் தூக்குமாட்டி இறந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் குருவிமலை கிளைச் செயலாளர் ஏ.என்.பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்த திருவையாறு தியாகராஜர் சமாதி தெருவைச் சேர்ந்த முருகேசன் இரவில் பஸ்சில் தனது லுங்கியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் மாமணி தஞ்சை மூப்பனார் சாலையில் உள்ள பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் விருப்பாச்சி நடப்பு தெருவைச் சேர்ந்த சாமிநாதனின் மனைவி பாலாம்மாள், ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் திருவாரூர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்து வந்தார்.

கடலூர் பாதிரிக்குப்பம் காலனி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ராஜேந்திரன், திருவோணம் அடுத்த காட்டாத்தி சித்தன் தெருவைச் சேர்ந்த பழனியப்பன், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கரூர் மாவட்டம் நெடுங்கூர் கிழக்கு கஸ்பா காலனியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ராமசாமி, மூலக்காட்டனூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி வார்டு செயலாளர் வேலுச்சாமி, தளவாபாளையத்தைச் சேர்ந்த ஜீவா, சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மோரூர் கே.எம்.புதூரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் பழனிச்சாமி. நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன், திருப்பூர் மாநகர் மாவட்டம் களியானூர் கிளைச்செயலாளர் கே.எம்.வரதேகவுடர், விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரையைச் சேர்ந்த தங்கவேல் மனைவியும், அ.தி.மு.க. உறுப்பினருமான அம்மணி அம்மாள் ஆகியோர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெருமாள்பேட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை தலைவர் அண்ணாதுரை, கலசபாக்கம் மேலாரணி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி சேட்டு, வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் ஞானபிரகாசம் ஆகியோரும் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த முத்துலாபுரத்தைச் சேர்ந்த தொண்டர் பாலம்மாள், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மலைவேப்பன்குட்டை பகுதி கிளைக்கழக பிரதிநிதி பெருமாள் ஆகியோர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் மாரியப்பன், குற்றாலம், கீழபெரம்பூர் கிளை மேலமைப்பு பிரதிநிதி என்.கண்ணன், கயத்தாறைச் சேர்ந்த ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் உதயராஜ் ஆகியோர் அதிர்ச்சியில் இறந்தனர்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் நாலாயிரம் என்பவர் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் முன்பு குதித்து, படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

சிங்கம்புணரி அடுத்த ஆகாளாப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சுப்பிரமணியன் விஷம் குடித்து இறந்தார்.

மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் சலூன் கடை நடத்தி வந்த பாஸ்கர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 

தாய் நாட்டை புலி பயங்கர வாதத்தில் இருந்து காப்பாற்றும் முகமாக கால்களை இழந்தஊனமுற்ற படை வீர்ர்களுக்கு செயற்கை கால்கள் அன்பளிப்பு!

Tuesday, September 30, 2014
இலங்கை::தாய் நாட்டை புலி பயங்கர வாதத்தில் இருந்து காப்பாற்றும் முகமாக கால்களை இழந்தஊனமுற்ற படை வீர்ர்களுக்கு செயற்கை கால்கள் அன்பளிப்பு.
 
தாய் நாட்டை புலி பயங்கர வாதத்தில் இருந்து காப்பாற்றும் முகமாக கால்களை இழந்த 06 இராணுவ வீரர்களுக்காக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் களனி பெதியாகொடை பியகமையைச் சேர்ந்த எஸ் பீ ஹேரத் என்பவரால் 316,400 ரூபாய் பெருமதியில் செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு இராணுவ சேவை அதிகார சபையில்  (செப்.29) இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐ.நா. பொதுச் சபை உரை நாட்டின் நற்பெயரை நிலைநிறுத்த உலக அரங்கில் கிடைத்த சந்தர்ப்பம்!

Tuesday, September 30, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐ.நா. பொதுச் சபை உரையும், உலகத் தலைவர்களுடனான அவரது சந்திப்பும் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளன.
 
ஒரு சில ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு இலங்கை மீது பல் வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும். சர்வதேசம் இன்று உண்மை நிலையையும் யதார்த்தத்தையும் புரிந்திருக் கிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அபிவி ருத்திப் புறக்கணிப்புக்கள் இடம்பெறுவதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா போன்ற நாடுகள் அவதூறு பரப்பி வரும் நிலையில், ஐ.நா. தலைமையகத்தில் உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பது இலங்கை தொடர்பான சர்வதேச அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஐ.நா. பொதுச் சபையின் 69 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஐ.நா. மனித உரி மைகள் பேரவை ஓரவஞ்சனையோடு செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். இலங்கையை இலக்கு வைத்துச் செயற் படும் சில நாடுகளின் கைப்பொம்மையாக மனித உரிமைகள் பேரவை செயற்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் ஜனா திபதி தனது உரையின் போது மிகவும் ஆணித்தரமாகக் கூறி னார்.
 
ஐ.நா. பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் உரைகளை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை முழு உலகையும் ஈர்த்ததாகவே கூறப்படுகிறது.
உலக மேடையில் துணிகரமாக உரையாற்றிய யதார்த்தவாதி என்ற பெருமைக்குரியவராக ஜனாதிபதி மதிக்கப்படுகிறார். உண் மையில் இலங்கையில் எதைக் கூறினாரோ அதையே சர்வ தேசத்துக்கும் எடுத்துக் கூறியவர் ஜனாதிபதி.
 
சிலர் உள்ளூரில் ஒரு கதையும் வெளிநாடுகளில் இன்னொரு கதையும் பேசுகிறார்கள். அதேபோல, இன்னும் சில அரசியல் வாதிகள் சிங்களப் பத்திரிகைகளுக்கு ஒரு பேச்சும் தமிழ், ஆங்கில பத்திரிகைகளுக்கு வேறுவிதமாகவும் பேசி தங்களது அரசியல் இருப்பை தக்க வைக்க முனையும் யுகம் இது.
 
இந்த நிலையில், வார்த்தை மாறாது கொள்கைகளை முன்னெடுத்து யதார்த்தத்துடன் இலக்கை நோக்கிச் செல்லும் பெருந் தலை வராக உலகம் ஜனாதிபதியை இன்று அடையாளங் கண்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் பான்கீ மூன் தெரிவித்துள்ள கருத்து, ஜனாதிபதி யின் ஆளுமைக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கின்ற மிகப் பெரிய அங்கீகாரமாகவே கருதக் கூடியதாக இருக்கிறது.
“இலங்கையின் எஞ்சிய சவால்களையும் மஹிந்தவின் ஆளுமை தோற்கடிக்கும்” என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் முடிவடைந்த குறுகிய காலத்தில் இலங்கை, குறிப்பாக வட க்கு, கிழக்கு மாகாணங்கள் அடைந்திருக்கின்ற அபிவிருத்தி உலக நாடுகளுக்கு மிகப் பெரிய முன்மாதிரியாக அமைந் திருக்கிறது. யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்ட எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பி னர்கள் சுமார் 12,000 பேருக்கு புனர் வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
 
அதே நேரம், தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த மக்கள் நிரந்தர வீடுகளில் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு ள்ளார்கள். யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் விதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முற்றாகப் பூர்த்தியடையும் நிலையில் இருக்கின்றன.
இதைவிடவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் பொறுப் பேற்றுள்ள பாடசாலைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துப் பாக்கியையும் கழுத்தில் சயனைட்டையும் கொண்டு திரிந்த சிறுவர்கள் இன்று பேனாவும் புத்தகங்களும் ஏந்தி நிற்கி றார்கள். இதற்கு இந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடு கள்தான் காரணமாக அமைந்துள்ளதென்பதை எவரும் மறுக்க முடியாது.
 
இலவசக் கல்வியின் பலனை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்க ளும் இப்போது முழுமையாக அனுபவிக்கிறார்கள். தேசிய மட்டப் பரீட்சைகளில் என்றுமில்லாதவாறு வடமாகாண த்திலி ருந்து சிறந்த பெறுபேறுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலைமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பான் கீ மூனுக்கு மட்டுமல்ல, தன்னைச் சந்தித்த உலகத் தலைவர்களுக்கும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
எனவே, இலங்கை பற்றிய தப்பபிப்பிராயத்தைக் களைய உலக மேடை நல்லதொரு களமாக அமைந்திருந்ததாகவே சொல்ல வேண்டும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுடன் மோடி சந்திப்பு!

Tuesday, September 30, 2014
நியூயார்க்::அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றம் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் உடனிருந்தார்.

இருவருடனான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது. பிரதமர் மோடி மற்றும் சுஷ்மா ஆகியோர் கிளிண்டன் தம்பதியரை மகிழ்ச்சியாக வரவேற்றதுடன் இருவரும் கிளிண்டன் தம்பதியினர் தாத்தா பாட்டியானதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கிளிண்டனின் மகளான செல்சீக்கு கடந்த வாரம் தான் பிரசவம் நடந்தது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அக்குழந்தைக்கு கார்லோட்டே என்று பெயரிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தேசிய பொருளாதாரத்தை கட்டமைத்து வரும் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை. அந்த வகையில் உங்கள் செயல்பாடுகளை பார்த்து மிரண்டுவிட்டேன் என்று கிளிண்டன் கூறினார். வரும் 2016 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்க செனட் சபை தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடவுள்ள நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

வடக்கின் அபிவிருத்திக்காக கடந்த 9 வருடங்களிலும் 666 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு:லக்ஷ்மன் யாப்பா!

Tuesday, September 30, 2014
இலங்கை::வடக்கின் அபிவிருத்திக்காக கடந்த 9 வருடங்களிலும் 666 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ‘ஈர்ப்பு சக்திவாய்ந்த வடக்கில் முதலிடுக’ எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்ததாவது :- 1995 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இருந்த காலத்தில் வடக்கின் அபிவிருத்திக்காக 420 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 419 வேலைவாய்ப்பு மற்றும் 04 முதலீடு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனால். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனையின் மூலம் வடக்கின் அபிவிருத்திக்காக 666.712 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 4833 வேலைவாய்ப்புக்கள் மற்றும் 26 செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட் டுள்ளன.
 
யாழ்ப்பாணத்தில் 9 வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் 7 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 7 வேலைத் திட்டங்களில் 6 திட்டங்கள் கிளிநொச்சியில் 5 வேலைத் திட்டங்களில் 3. மன்னார் 9 வேலைத் திட்டங்களில் 8 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
தெற்கில் காணப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் வடக்கிற்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பமும் குறிக்கோளுமாகும்.
அந்த வகையில் நாட்டில் சுதந்திரத்தை சிங்களவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ள வில்லை. தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.
 
ஆசியாவிலும் இலங்கை பொருளாதார வளர்ச்சியில் எழுந்து நிற்க வேண்டும். கசப்பான யுத்தத்தின் பின்னர் ஒரே இனத்தவர்கள் என்ற ரீதியில் தெற்கில் காணப்படும் அனைத்து வசதிகளும் வடக்கிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் குறிக்கோள் ஆகும். அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசத்தினை கட்டி எழுப்ப வேண்டும்.”
 
எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி வடக்குக்கு ரயில் பாதையைத் திறந்து வைக்கிறார். என்றும் அமைச்சர் தெரி வித்தார். பாரம்பரிய கைத்தொழில் சிறு முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பேசுகையில் : பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் அபிவிருத்தியுடன் முதலீட்டு வாய்ப்புகளும் எமக்கு இல்லாமற் போனது. பயங்கரவாதம் முடிந்த பின் அரசு பாரிய முதலீடுகளை வடக்கில் மேற்கொண்டுள்ளது என்றார்.
 
குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் முருகேசு, முதலீட்டுச் சபைத் தலைவர் கலாநிதி லக்ஸ்மன் ஜயவீர, பணிப்பாளர் சபை உறுப்பினர் ஸாகர குணவர்த்தன, யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டுச் சபையின் யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் ஜயமனன். லேக்ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் உட்பட அநேகர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்

தீவிரவாதிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்: பிலிப்பைன்சில் சிக்கிய ஜெர்மானியர்கள் அரசுக்கு கோரிக்கை!

Tuesday, September 30, 2014
மணிலா::பிலிப்பைன்சில் செயல்பட்டுவரும் அபு சயப் என்ற தீவிரவாதக் குழு வெளிநாட்டவர்களைக் கடத்துவதன்மூலம் கடந்த 2000ஆவது ஆண்டு துவக்கத்தில் முக்கியத்துவம் பெறத் துவங்கியது.

அல்கொய்தாவுடனும் இந்த இயக்கம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இருப்பினும் பின்னாளில் இந்த இயக்கம் பணத்திற்காகவும், ஏனைய குற்றவியல் நடவடிக்கைகளுக்காகவும் மனிதக் கடத்தல்களை மேற்கொள்ளத் துவங்கியதாக அரசியல் ஆய்வாளர்களும், பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவின் போர்னியோ தீவுகளுக்கும், தெற்கு பிலிப்பைன்சிற்கும் இடையே சிறிய படகில் சென்று கொண்டிருந்த இரண்டு ஜெர்மானியர்களை அபு சயப் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர். கடத்தப்பட்டவர்களில் ஒருவர் 70 வயது நிரம்பிய ஸ்டீபன் ஒகோனெக் என்ற மருத்துவர்; மற்றொருவர் 50 வயது நிரம்பிய ஹென்றிக் டைலேன் என்ற பெண்மணி ஆவார்.

ஈராக்கிலும், சிரியாவிலும் போரிட்டுவரும் ஐஎஸ் தீவிரவாதிகளைத் தாக்குவதில் அமெரிக்காவிற்கு உதவுவதை ஜெர்மனி நிறுத்தவேண்டும் என்றும், தாங்கள் கைப்பற்றியுள்ளவர்களுக்கான பிணைத் தொகையை அளிக்கவேண்டும் என்றும் அபு சயப் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 10ஆம் தேதியை இதற்கான காலக்கெடுவாகக் குறிப்பிட்டுள்ள இந்த இயக்கம், அவ்வாறு செய்யாவிடில் இவர்களில் ஒருவரைப் பலியிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியும், பிலிப்பைன்ஸ் அரசும் தங்களை விடுவித்து பாதுகாக்க வேண்டும் என்று பிணைக்கைதிகள் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளது இன்று உள்ளூர் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இந்த செய்தி உண்மையாகத் தோன்றியதாகவே புலனாய்வுத் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் ஆலோசனை!

Tuesday, September 30, 2014
சென்னை::முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

பதவியேற்றதும் தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், நேற்று முன்தினம் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், நேற்று முதல்வராகப் பதவியேற்ற பின்னரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் விட்டு தான் அடுத்த வேலையைப் பார்த்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலையில் கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

இதையடுத்து நேராக போயஸ் கார்டன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார் ஓ. பன்னீர் செல்வம். அங்கு வீட்டுக்குள் போய் விட்டு திரும்பி வந்தார். அதன் பின்னர்தான் அவர் தனது சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.

அதேபோல நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு வந்த அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் நேராக மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் விட்டு அதன் பிறகே தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றார்.

சென்டிமென்ட்டாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு பன்னீர் செல்வம் போயிருக்கலாம் என்று தெரிகிறது.

அழுகையும்.. கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!

புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக நேற்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பதவியேற்கும் போது மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இம்முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைக்கு சென்றதை அடுத்து கண்ணீரும் கதறலுமாய் பதவியேற்பு நிகழ்ந்தது.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்த்தைதொடர்ந்து,
வைத்தியலிங்கம். பதவி பிரமாணம் வாசித்தபோது விசும்பல் சத்தம்தான் அதிகம் கேட்டது.

நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல மீண்டும் அமைச்சர்களாக கண்ணீர் மல்க கதறி அழுதபடி பதவியேற்றனர்.

மைச்சர் செந்தில்பாலாஜி. அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தபோது அவரது குரல் உடைந்து கம்மியது. கண்ணீர் வழிந்தோடியது. ஒருவழியாக பதவிப்பிரமாணத்தை வாசித்து முடித்தார்.பா.வளர்மதி நேற்று

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது கண்ணீர் மல்க பதவியேற்ற அவர், பதவிபிரமாணத்தை முடிக்கும் முன்பாகவே கதறி அழுதுவிட்டார்.

இதேபோல மற்ற அமைக்சர்களும் க்ண்ணீர் மல்க பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்,இதுவரை தமிழக அமைச்சர் கள்பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக க்ண்ணீருடன் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகபதவியேற்ற போது கூட அமைச்சர்கள்யாரும் அழுததில்லை என்பது குறிபிடத்தக்கது 

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இன்று உண்ணாவிரதம்!!!

Tuesday, September 30, 2014
சென்னை::தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தீர்ப்பு குறித்த வருத்தத்தையும் உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையிலும் இன்று
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறது. இதில் திரையுலகின் அத்தனை அமைப்புகளும் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ் திரையுலக கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ் திரைத்துறையினர் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் சினிமா படக்காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதில் தமிழ் சினிமாவின் அனைத்து அமைப்புகளும் பங்கேற்கின்றன. படப்பிடிப்புகளும் ரத்து சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர் அதிபர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நாளை திரையரங்குகளில் நான்கு காட்சிகளை ரத்து செய்வது என்றும், தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Monday, September 29, 2014

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மதிப்பீடு செய்ய உள்ளது!

Monday, September 29, 2014
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மதிப்பீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவில் மற்றும் அரசியல் சட்டங்களை சர்வதேச பிரகடனம் அமுல்படுத்தப்படுவதனை கண்காணிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமை குழு, இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய உள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் ஜெனீவாவில் இந்தக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதி இலங்கை குறித்து மீளாய்வு செய்ய உள்ளது.

புருண்டீ, ஹெய்ட்டி, மொல்டா, மொன்டன்கரோ இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தொடர்பிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமை குழுவில் இலங்கை உள்ளிட்ட 168 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் மனித உரிமை நிலைமைகள் குறி;த்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்த அறிக்கையை 18 சுயாதீன நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேசிய மனித உரிமை ஆணைக்குழுக்கள் போன்றவற்றின் கருத்துக்களையும் குழு கவனத்திற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்க்கு கொண்டு வருவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம்: பொதுபல சேனா!

Monday, September 29, 2014
இலங்கை::இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்க்கு கொண்டு வருவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதன் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமலஜோதி, இலங்கை ஒரு பல்லின நாடால்ல அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை ஒரு பௌத்த நாடு, பௌத்த நாட்டில் அது இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின்  அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
 
பௌத்தர்களின் கரிசனைகள் குறித்த ஆவணமொன்றை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம், அரசாங்கம் அதற்க்கு தீர்வை காணவிட்டால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என  குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் தொடர்பாக திகதி விரைவில்: தினேஸ் குணவர்த்தன!

Monday, September 29, 2014
இலங்கை::2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் தொடர்பான திகதி அடுத்த வாரம் இடம்பெறும் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீhமானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் உயர்நீதிமன்ற சட்ட விளக்கத்துக்கு அனுப்ப்பட்டுள்ளதாகவும் சட்டவிளக்கம் எதிர்வரும் 21 நாட்களுக்குள் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா, ஈராக்கில் அசுர வளர்ச்சி : ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்: ஒபாமா பரபரப்பு பேட்டி!

Monday, September 29, 2014
வாஷிங்டன்: ஐஎஸ் தீவிரவாதிகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈராக், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டு அமெரிக்கா தவறு செய்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகிறது. ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளுக்குமே இந்த கருத்து பொருந்தும்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்காக 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும். அதேபோல வெளியில் இருந்து கிடைக்கும் ஆயுத சப்ளை, வெளிநாடுகளில் இருந்து வந்து  ஐஎஸ்சில் சேரும் நபர்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும். உலக வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவம் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்னை ஏற்பட்டால், அந்த நாடுகள் முதலில் அணுகுவது அமெரிக்காவை தான். ரஷ்யாவையோ, சீனாவையோ அந்த நாடுகள் அணுகுவதில்லை.

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சி: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை!

Monday, September 29, 2014
சென்னை::அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சியென்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
 
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் பிரதமர் மோடி தீவிரமாகவுள்ளார். தேர்தலுக்கு முன்பிருந்தே இது குறித்து அவர் பேசி வருகிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இலங்கையிலிருந்து டெல்லி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
 
இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, அங்கு ராஜபக்‌சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்கு தீர்வு காணும் முயற்சியாகும் இதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால், நாம் பேசினால்தான் முடியும். தமிழகத்தின் மற்ற கட்சிகளைவிட இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் பாஜக உறுதியாகவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அக்.10 வரை காவல்: நீதிமன்றம் உத்தரவு!

Monday, September 29, 2014
இலங்கை::இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரையும் அக்டோபர் 10-ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ரத்தினசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற முனியசாமி, கோபு, ஸ்டிபன், சங்கர் ஆகிய 4 பேர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகு பழுதடைந்தது.
 
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 4 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் மீனவர்கள் ஊர்காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
ஞாயிற்றுக்கிழமை இலங்கை நீதிமன்றத்துக்கு விடுமுறை நாள் என்பதால் மீனவர்கள் 4 பேரும் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 4 பேரையும் அக்டோபர் 10-ம் தேதி வரை சிறையிலடைக்குமாறு ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.