Tuesday, September 30, 2014

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் ஆலோசனை!

Tuesday, September 30, 2014
சென்னை::முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

பதவியேற்றதும் தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், நேற்று முன்தினம் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், நேற்று முதல்வராகப் பதவியேற்ற பின்னரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் விட்டு தான் அடுத்த வேலையைப் பார்த்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலையில் கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

இதையடுத்து நேராக போயஸ் கார்டன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார் ஓ. பன்னீர் செல்வம். அங்கு வீட்டுக்குள் போய் விட்டு திரும்பி வந்தார். அதன் பின்னர்தான் அவர் தனது சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.

அதேபோல நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு வந்த அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் நேராக மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் விட்டு அதன் பிறகே தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றார்.

சென்டிமென்ட்டாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு பன்னீர் செல்வம் போயிருக்கலாம் என்று தெரிகிறது.

அழுகையும்.. கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!

புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக நேற்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பதவியேற்கும் போது மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இம்முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைக்கு சென்றதை அடுத்து கண்ணீரும் கதறலுமாய் பதவியேற்பு நிகழ்ந்தது.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்த்தைதொடர்ந்து,
வைத்தியலிங்கம். பதவி பிரமாணம் வாசித்தபோது விசும்பல் சத்தம்தான் அதிகம் கேட்டது.

நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல மீண்டும் அமைச்சர்களாக கண்ணீர் மல்க கதறி அழுதபடி பதவியேற்றனர்.

மைச்சர் செந்தில்பாலாஜி. அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தபோது அவரது குரல் உடைந்து கம்மியது. கண்ணீர் வழிந்தோடியது. ஒருவழியாக பதவிப்பிரமாணத்தை வாசித்து முடித்தார்.பா.வளர்மதி நேற்று

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது கண்ணீர் மல்க பதவியேற்ற அவர், பதவிபிரமாணத்தை முடிக்கும் முன்பாகவே கதறி அழுதுவிட்டார்.

இதேபோல மற்ற அமைக்சர்களும் க்ண்ணீர் மல்க பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்,இதுவரை தமிழக அமைச்சர் கள்பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக க்ண்ணீருடன் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகபதவியேற்ற போது கூட அமைச்சர்கள்யாரும் அழுததில்லை என்பது குறிபிடத்தக்கது 

No comments:

Post a Comment