Sunday, November 27, 2016

செவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து வரும் தகவல்களை ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், செவ்வாயில் உடோபியா பிளனிசியா பகுதியில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தடிமனில் மணல் ஈரப்பகுதி உள்ளதாகவும், அது 12,100 கன கி.மீ., பரப்பளவுக்கு உள்ளதாகவும் 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பரப்பளவு அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரியின் பரப்பளவை விட பெரியது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செவ்வாய் ஆராய்ச்சிக்கென 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியுள்ளது.

Saturday, November 26, 2016

புலிகளை நினைவு கூர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் பாதுகாப்பு அமைச்சு!

மாவீரர் தினத்தில்  புலிகளை நினைவு கூர்ந்து, நீண்டகால போரின் பின்னர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் போரின் போ
 
து உயிரிழந்தவர்களை நினைவு கூரலாமே தவிர  புலிகளுக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
மேலும், நீண்ட கால போரின் பின்னர் தற்போது நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் புலிகளை நினைவுகூர்ந்து நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்!

கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.
 
ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.
மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.
 
ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.
அவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலி்ருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்
கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.
 
கியூபா நாட்டின் அதிபராகவும், பிரதமராகவும் சுமார் அரை நூற்றாண்டுக்காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2008-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார். அதன்பின்னர் மிக அபூர்வமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தார்.

விதவிதமான சுருட்டுகளை பிடிப்பதில் பிரியம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு பரிசளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட 90 அடிநீளம் கொண்ட சுருட்டு கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், சிலநாட்களாக முதுமைசார்ந்த உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டிருந்த பிடல் காஸ்ட்ரோ, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் காலமானதாக அவரது சகோதரரும் அந்நாட்டின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவின் புரட்சித் தலைவர் என்றழைக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவின் உடல் அரசு மரியாதைகளுடன் நாளை (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

Wednesday, November 16, 2016

இரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல் : டொனால்டு டிரம்ப் - புடின் தொலைபேசியில் பேச்சு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், முதன்முறையாக, நேற்று தொலைபேசியில் பேசினர்; அப்போது, இரு நாட்டு உறவுகளை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ, இருவரும் சம்மதித்தனர்.
 
சமீபத்தில் முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றார். அடுத்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக, அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், நேற்று தொலைபேசியில் முதன்முறையாக பேசினர். டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த புடின்,
 
 முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விவகாரங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து விவாதித்தார். டிரம்ப் பேசுகையில், ''அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நட்புறவு மீண்டும் மலர வேண்டும்; ரஷ்ய மக்களுடன் நல்லுறவு நீடிக்க வேண்டும்,'' என்றார். இரு தலைவர்களும், இரு நாடுகள் இடையே நட்புறவை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ சம்மதித்தனர்.