Friday, August 31, 2012

சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ள பயங்கரமான அறிவிப்பு குறித்து பேசா மடந்தைகளாக இருந்துவிட முடியாது!

Friday, August 31, 2012
இலங்கை::புலிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செய்த அநியாயத்துக்கு எதிராக நான் பேசியதால் .புலிகளின் முன்னுரிமை கொலைப்பட்டியலில் எனது பெயர் உள்வாங்கப்பட்டிருந்தது.இவ்வாறு அவர்கள் எடுத்த முயற்சிகள் அல்லாஹ்வின் துணையால் சிதறிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெற்றது.

கிண்ணியா நகர முதல்வரும்,வேட்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் –

எமது சமூகத்தின் தலைமை என்று கூறிக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து செய்யும் அரசியலுக்காக அன்று மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை ஆரம்பிக்கவில்லை.ஆனால் இன்று என்ன நடக்கின்றது நாளுக்கு நாள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழி நடத்தி தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள அரங்கேற்றப்படும் சதிகள் ஏராளம். இதற்கு திருமலை மாவட்ட முஸ்லிம்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக அரவு பகலாக நாம் மக்களை தெளிவுபடுத்திவருகின்றோம்.

இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமான தொன்று ,திருமலை மாவட்ட மக்கள் இதனை தீர்மானிக்க தவறும் போது,அந்நியச் சமூகம் உங்களை அடக்கியாளும் கடிவாளத்தை நீங்களே உங்களுக்கு இட்டவர்களாகவே மாறும் அவல நிலையேற்பட்டுவிடும்.அதிலிருந்து நாம் மீளுவதற்கு எமது ஆயுதமாக எமது வாக்கினை பயன்படுத்துவோம். இன்று தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ள பயங்கரமான அறிவிப்பு குறித்து பேசா மடந்தைகளாக இருந்துவிட முடியாது.ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து ஆட்சி அமைக்கும் போது,பிரிந்து நிற்கின்ற வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படும் என கூறியுள்ளார்.அய்யா சம்பந்தன் அவர்கள் ஆதரவு வழங்கிய புலிகள் இயக்கம் தான் வடக்கில் முஸ்லிம்களை துரத்தினார்கள்,மூதுரில் ஹபீப் மஹம்மத் அவர்களைம்,மன்னாரில் அரசாங்க அதிபராக இருந்த மக்பூல் அவர்களையும் கொண்றனர்.அதே வேளை முஸ்லிம் என்ற காரணத்தாலும்,முஸ்லிம் சமூகம், நாடு பிளவுபடக் கூடாது என்று செயற்பட்டதாலும் தான் மூதுரிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்டனர்.காத்தான்குடியில் சுஜூது செய்த எமது சகோதரர்கள் சுட்டும்,வெட்டியும் கொல்லப்பட்டனர்,அழிஞ்சுப் பொத்தானையில் வதைக்க வதைக்க முஸ்லிம்கள் கொல்லப்பட்னர்.இது போன்ற எத்தனை அநியாயங்களை அவர்கள் செய்தார்கள்.முஸ்லிம்களின் புனிதப் பள்ளிவாசல்கள் புலிகளால் துவம்சம் செய்யப்பட்டதுடன்,நீர்தடாகங்களாக மாறியது அது யாருடைய காலத்தில் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

இன்று தம்புள்ள பள்ளிவாசல் குறித்து ரவூப் ஹக்கீம் அவர்கள் பேசிவருகின்றார்.தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து மக்கள் உண்மையினை அறிந்து கொண்டார்கள்.இந்த நாட்டின் தலைவர் ஜனாதிபதி அவர்கள் தெளிவாக முஸ்லிம்களின் மத உரிமைகள் பேனப்படும் என்பதை கூறியுள்ளார்.தம்புள்ள பள்ளிவாசலில் இன்றும் தொழுகை நடக்கின்றது,தராவிஹ் கூட இடம் பெற்றது.ஒரு சில பெரும்பான்மை கடும் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களது தனிப்பட்ட லாபங்களுக்கும்,அரசியலுக்காகவும் செயற்படுவதை வைத்துக் கொண்டு நாம் முழு பெரும்பான்மை சமூகத்தையும் துரோகிகளாக பார்க்க முடியாது.தம்புள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தம்புள்ள ரன்கிரி விகாரைக்கு சென்று விகாரதிபதியுடன் தெளிவான செய்தியினை சொல்லிவிட்டு வந்துள்ளார்.ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் பணிக்காக உலக முஸ்லிம் நாடுகள் வழங்கிய ஆதரவை மறந்து செயற்பட முடியாது.இலங்கையில் உள்ள அதிகப்படியான முஸ்லிம்கள் எமது நாட்டுக்காக இறை பிரார்த்தனைகளை செய்தார்கள்,பள்ளிவாசல்களுக்கு முன்பாக ஆரப்பாட்டங்களை செய்தார்கள்,இந்த ஒத்துழைப்பினாலும் தான் இன்று எமது நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது.அதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அதனால் முஸ்லிம்களின் மதக் கடமைகளுக்கு தடைகளை போடும் வேலைகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளார்.இது தான் நடந்துள்ள விடயம்.ஆனால் துரதிஷ்ட வசம் இந்த விடயத்தை திரிவுபடுத்தி ரவூப் ஹக்கீம் அவர்கள் மேடைகளிலே, இன்னும் தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் வேலையினை செய்கின்றார்.

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.அவர் ஜனாதிபதியாக வந்தால் பள்ளிகளில் பாங்கோசைக் கேட்காது என்ற வதந்திகளை கூறி அரசுக்கு எதிராக எதிர் கட்சி அரசியல் செய்துவிட்டு,மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அமைத்ததும்,வலிந்து வந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு, மீண்டும் அவருக்கு எதிராக பேசிக் கொண்டு ,அதே அரசாங்கத்தில் இருந்து கொண்டு போலி பிரசாரங்களை செய்யும் அசிங்கமான அரசியல் கலாசாலரத்துக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சென்றுள்ளது.அன்று தலைவர் அஷ்ரப் அவர்கள் உரிமை அரசியலையும்,சலுகை அரசியலையும் செய்தார்,ஆட்சியினை தீர்மாணிக்கும் பலமிக்க கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்தினார்.முஸ்லிம்களின் உரிமைகளை பெறுவதில் கடும் போக்குடன் செயற்பட்டார்.சலுகைகள் கிடைக்கும் போதெல்லாம் அதனை சமூகத்திற்காக பெற்றுக் கொடுத்தார்.இன்று உரிமையுமில்லை,சலுகையுமில்லை,என்ற நிலையில் முஸ்லிம்களை அழித்து அவர்களது ஜனாஸாக்களின் மீது அரசியல் செய்யும் அணியுடன் சரணாகதி அரசியல் பிழைப்பு நடத்தும் அளவுக்கு ரவூப் ஹக்கீம் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை கொண்டுசென்றுள்ளார்.

இந்த நாட்டின் அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததென்பதை யாவரும் நன்கறிவர்.அப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு எவரும் முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதை கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்கள் நிரூபித்துக் கட்டியுள்ளனர்.இந்த நிலையில் அந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு தான்“ எமது மக்களது பாதுகாப்பு,இருப்பு.உத்தரவாதங்கள் என்பனவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.அதனை மறந்து செயற்பட முடியாது.திருமலை மாவட்ட மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவங்கள் இருந்திருந்தால் இன்னும் எத்தனையா விடயங்களை சாதித்து காட்டியிருக்க முடியும்.இனியும் ஏமாந்த சமூகமாக எமது மக்கள் இருக்க முடியாது.அரசியல் மாற்றம் ஒன்று வர வேண்டும்,அதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் தான்,கிண்ணயா பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது.இன்னும் எத்தனையோ திட்டங்கள் நடை முறையில் உள்ளன.இவைகளெல்லாம் எமக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு,ஏமாற்று அரசியல்வாதிகளின் பின்னால் செல்லப் போகின்றீர்களா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,அதற்கு எதிராக திருமலை மாவட்ட மக்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தியினை கொண்டு சென்று தமது அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ள போலிகளை பரப்பும் அணியின் சதி வலையில் நீங்கள் விழுந்துவிடாதீர்கள்.எமது அணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உங்களது வாக்குகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம்.நாட்டுக்கும்,சர்வதேசத்திற்கும் இலங்கை முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பு இது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வடக்கில் வாழும் மக்களின் உரிமைகளுக்காக ,தேவைகளுக்காக நான் குரல் கொடுக்கும் போது,எனது குரல் வலையினை நசுக்கி என்னை அழித்துவிடுவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றது.என்மீது அபாண்டங்களை சமத்தி எனது அரசியல் செயற்பாட்டுக்கு முடிச்சுப் போட நினைத்த சக்திகளின் சதிகளை அல்லாஹ் தவிடு பொடியாக்கியுள்ளதுடன்,எமது முஸ்லிம சமூகத்தின் விமோசனத்திற்கான செயற்பாட்டை ஒன்று பட்டு முன்னெடுப்பதற்கான சக்தியினை மேலும் விரிவுபடுத்தியுள்ளான்.புகழ் அனைத்தும் அல்லாவுக்கே.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,தொழிலதிபரும்,வேட்பாளருமான அப்துல் ரஸ்ஸாக் (நளீமி),உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

கருணாநிதி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு : முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்தார்!

Friday, August 31, 2012
சென்னை::தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் முழு ஆதரவுடன், ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். ஞாயிற்று கிழமைகளிலும் அலுவலக பணிகளை, அவர் செய்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதி முரசொலி நாளிதழில் கருணாநிதியின் கேள்வி பதில்கள் என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. அதில், கோத்தகிரியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 என்று புகைப்படத்துடன் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே என்ற கேள்வியும், அதற்கு கருணாநிதி அளித்த பதிலில் கோத்தகிரியில் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது பற்றி, கோடநாட்டில் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார் என்று அரசின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்றினை செய்யலாமே? என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த செய்தியை வெளியிட்ட முரசொலி நாளிதழின் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் முரசொலி செல்வம், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது அவதூறு பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் ரூ17 லட்சம் மதிப்புள்ள செயின்கள் கடத்தல் : இலங்கை பயணி இருவர் கைது!

Friday, August 31, 2012
மீனம்பாக்கம்::கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கடத்திய இலங்கை பயணிகள் இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்றிரவு 11.30 மணியளவில் சென்னை வந்தது. அதில், தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிஷாந்தன் (25), ரூபராஜன் (30) ஆகியோர் சுற்றுலா விசாவில் சென்னை வந்தனர். அவர்கள், ‘சுங்க வரி செலுத்துவதற்கான பொருட்கள் எதையும் நாங்கள் எடுத்து வரவில்லைÕ என்று கூறி கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர். அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்து மீண்டும் தீவிரமாக சோதித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் எதுவும் சிக்கவில்லை. இருவரும் கோட் அணிந்திருந்தனர். அதை தடவி பார்த்தபோது, காலர் பகுதியில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. கோட்டை கழற்றி பார்த்த போது, கறுப்பு கார்பன் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த நீளமான பொட்டலம் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 520 கிராம் புத்தம் புதிய தங்க செயின்கள் இருந்தன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.17 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். தங்க செயின்களை கொடுத்து அனுப்பியது யார், யாரிடம் கொடுக்க சென்னை வந்தனர், இதற்கு முன்பாக இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டார்களா என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது –ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, August 31, 2012
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசியலுக்குள் மதத்தை நுழைக்க முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் வங்குரோத்து நிலையை மூடிமறைப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி கபிலவஸ்து புனிதப் பண்டத்தை அரசியலுக்கு இழுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க வழிகோலியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கபிலவஸ்து புனிதப்பண்டத்தை ஒருபோதும் ஆளும் கட்சி பயன்படுத்தப்பட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் இடம்பெறும் மாகாணங்களில் மட்டுமன்றிவேறும் மாகாணங்களிலும் கபிலவஸ்து புனிதப் பண்டம் காட்சிப்படுத்தப்பட்டு வருவதாகக்குறிப்பிட்டுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியங் குவாங் லி இன்று காலை பானகொட இராணுவ முகாமுக்கு விஜயம்!

Friday, August 31, 2012
இலங்கை::சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியங் குவாங் லி இன்று காலை பானகொட இராணுவ முகாமுக்கு விஜயம் செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. அங்கு சென்ற சீன அமைச்சரவை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய வரவேற்றார்.

சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பனாகொட முகாமில் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகளை சீன அமைச்சர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வை செய்தனர். இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

மாணவியுடன் ‘ஓடி பிடித்து’ விளையாடும் மலை பாம்பு!

Friday, August 31, 2012
கேம்பிரிட்ஜ்::இங்கிலாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன் வீட்டில் செல்லப் பிராணியாக மலைப் பாம்பை வளர்த்து வருகிறார். நாய், பூனையைவிட அது அன்பாக பழகுவதாக சொல்லி நெகிழ்கிறார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் கவுன்டியில் உள்ள கைஹர்ன் நகரை சேர்ந்த தம்பதி பீட் , கிம். இவர்களது மகள் குளோ (16) தற்போதுதான் பள்ளிப் படிப்பு முடித்து விலங்குகள் வளர்ப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவரது வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுவது ‘லில்லி’ என்ற மலைப் பாம்பு. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் குளோவுக்கு பொழுதுபோக்கு லில்லிதான். எந்நேரமும் அவரது கழுத்தில் துண்டு போல லில்லி தவழும். தங்கள் செல்லப் பிராணி பற்றி குளோ கூறியதாவது: லில்லிக்கு 7 வயது ஆகிறது. ரொம்ப சாது. உண்மையிலேயே, எங்களது நாய், பூனைகளைவிட லில்லி சமர்த்து. எந்த வகையிலும் தொந்தரவு தராது. குழந்தைகள், பெரியவர்கள் என வித்தியாசம் பாராமல் முதுகில் தவழ்ந்து விளையாடும். எங்களது 3 பெட்ரூம் வீட்டில்தான் அதுவும் வளர்கிறது. லில்லிக்காக பிரத்யேகமாக 10,க்கு 6 அடி சைஸில் கதகதப்பான கன்டெய்னர் செய்து வைத்துள்ளோம். அதில்தான் தூங்கும். தூக்கம் என்றால் லில்லிக்கு கொள்ளை ஆசை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தூங்கும். திடீர் திடீரென குட்டித் தூக்கம் போடும். 3 வாரத்துக்கு ஒருமுறை ஒரு முயல் தின்கிறது. சுள்ளென்று வெயில் அடிக்கும் நேரத்தில் தோட்டத்தின் புல் தரையில் புரள்வது லில்லிக்கு ரொம்ப இஷ்டம். தோட்டத்தில் எங்களுடன் ஓடிப் பிடித்து விளையாடும். அப்பா, அம்மா 25 ஆண்டுகளாக பாம்புகள் வளர்த்து வருகிறார்கள். இப்போது பாம்புக் கடை வைத்துள்ளார்கள். குட்டியாக இருக்கும்போது லில்லியை வாங்கினோம். இப்போது 7 வயது ஆகிறது. 17 அடி நீளம் உள்ளது. 20 அடி வரை வளரும் என்று நினைக்கிறோம். அனேகமாக, இங்கிலாந்திலேயே மிக நீளமான செல்லப் பிராணி இதுவாகத்தான் இருக்கும். பல்வேறு விலங்குகளை பாதுகாத்து வளர்க்கும் உயிரியல் பூங்காவின் பொறுப்பாளர் ஆகவேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு கூறினார்.

Secretary Defence visits the Republic of Sudan!:-சூடானின் உயர் இராணுவ கல்லூரிக்கு பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ விஜயம்!

Friday, August 31, 2012
இலங்கை::ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த உயர் இராணுவதளங்கள் உட்பட பல இடங்கங்களுக்கு விஜயம் செய்துள்ளார்.

அந்தவகையில் சூடானின் உயர் இராணுவக் கல்லூரிக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது அந்நாட்டு இராணுவ அதிகாரிகளால் பாதுகாப்புச் செயலாளருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கல்லூரியும் சுற்றி காண்பிக்கப்பட்டது.

இவ் விஜயத்தில் சூடானின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், நினைவுச் சின்னங்களும் பறிமாற்றப்பட்டன...

பாதுகாப்பு தொடர்பில் இலங்கை - சூடான் இடையே இருதரப்பு இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.

சூடானுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சூடான் அதிகாரிகளுக்கும் இடையில் இது குறித்து உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கடந்த 26ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை சூடானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் சூடான் பாதுகாப்பு அமைச்சர், பிரதான பாதுகாப்பு செயலாளர், இராணுவ பிரதானி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

சூடான் பாதுகாப்பு கல்லூரிகளுக்குச் சென்ற பாதுகாப்பு செயலாளர், இலங்கை யுத்தத்தின் போது பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Secretary Defence visits the Republic of Sudan
The Secretary Defence and Urban Development Mr. Gotabaya Rajapaksa was in the Republic of Sudan on an official vist. (from 26th to 30th August 2012). During the visit the Secretary Defence visited a number of important institutions and military installations.

The Secretary Defence met with Defence Minister of Sudan H. E. Abdul Rahim Mohamed Hussain , Secretary General of Defence H. E. General Abdul Rahaman Mohamed Zain, Deputy Chief of Staff of Army General Emad Adawi and Chief of Joint Staff H. E. General Ismat Abdul Rahman. These meetings were centered on further consolidating and enhancing the excellent bilateral relations between the two countries.

The Secretary Defence also visited the prestigious military and academic institutes in Khartoum. These institutes were Joint Command and Staff College, Higher Military Academy, Military College, Engineering Faculty of Karary University.

The heads of the institutes highly appreciated the visits to their institutes by the Secretary Defence and expressed their desire to enhance scope of cooperation between Sudanese and Sri Lankan military training institutes for sharing expertise and knowledge.

While thanking the warm welcome and hospitality extended to him and the delegation the Secretary Defence reiterated the desire and need for expanding close bilateral cooperation between training institutes for sharing and learning each other's experience and knowledge for mutual benefit.

Secretary Defence invited Sudanese delegations to visit Sri Lankan military training institutes for exploring further training opportunities. The Sudanese counterpart agreed to this suggestion for arranging such visits. The Secratary Defence took the opportunity to visit libraries and meet students at these training institutes.

A Memorandum of Understanding (MoU) was signed between the Secretary Defence and Urban Development and the Secretary General of Sudanese Defence Ministry for promoting bilateral cooperation in the field of training.

At the renowned Defence College in Kartoum, the Secretary Defence delivered a lecture at the on the subject of "Sri Lankan Experience in Defeating Terrorism and Rehabilitation, Reconstruction and Reconciliation". The Sudanese senior armed officials were impressed by the Secretary's lecture about the Sri Lankan experiences.

Officials from both nations expressed their satisfaction on the timely visit which marked an important juncture in relations between Sri Lanka and Sudan.

அனுமதி ரத்து செய்யப்பட்டதால் லண்டன் பல்கலை.யில் இந்திய மாணவர்கள் தவிப்பு!

Friday, August 31, 2012
லண்டன்::இங்கிலாந்தில் லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் லைசன்சை அரசு ரத்து செய்து விட்டதால், இந்திய மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளில் இருந்து 2,600க்கும் அதிகமான மாணவர்கள் இந்த பல்கலைக்கழத்தில் படித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், 26 சதவீத மாணவர்களிடம் சரியான விசா இல்லை, பல்கலைகளில் நடத்தப்படும் ஆங்கில அறிவு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை என்று இங்கிலாந்து அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் லைசன்ஸ் நேற்று ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த மாணவர்களை மட்டும் சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா உள்பட வெளிநாட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், Ôமெட்ரோபாலிடன் பல்கலையில் படித்த வெளிநாட்டு மாணவர்கள், தகுதியுள்ள விசா வைத்திருந்தால் அவர்கள் வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பை தொடர 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அல்லது அவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்Õ என்று தெரிவித்தனர். இதற்கிடையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். மேலும், பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் மாணவர்களுக்கு எதிராகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து மாணவர் சங்கத்தினர், பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரள கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இலங்கை படகு!

Friday, August 31, 2012
சென்னை::கேரளா பிராந்தியத்தின் கொச்சி கரையோரத்திற்கு அருகில் இலங்கை மீன்பிடி படகொன்று நங்கூரமிட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கமைய இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் திடீர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக புலனாய்ப் பிரிவினர் கொச்சி கரையோரப் பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக CNN - IBN LIVE செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றுமொரு மீன்பிடி படகின் மூலம் இலங்கை மீன்பிடி படகிற்கு நபர்கள் ஏற்றிச்செல்லப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவொரு ஆட்கடத்தல் நடவடிக்கையாகும் என இந்திய பாதுகாப்புத் தரப்பு சந்தேகிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன.

அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை கொல்ல சதி: 11 பேர் கைது!

Friday, August 31, 2012
பெங்களூர்::கர்நாடக மாநிலம் பெங்களூர், ஹுப்ளியில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 11 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களைக் கைது செய்ததன் மூலம், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பயங்கரவாதிகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தில்லி, உத்தரப்பிரதேச போலீஸார் அண்மையில் அளித்த தகவலின் பேரில், பெங்களூர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை இரவு பெங்களூர் மற்றும் ஹுப்ளியில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், பெங்களூரில் 6 பேரையும், ஹுப்ளியில் 5 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து கர்நாடக டிஜிபி அலுவலகத்தில் பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2 மாதங்களாக உளவுத் துறையினர் அளித்த தகவலின் பேரில், சிலரை பெங்களூர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தனர். அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி.), ஹர்கத்-உர்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (எச்.யு.ஜெ.ஐ.) ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது.

இதில், பெங்களூர் மற்றும் ஹுப்ளியில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 7.65 எம்.எம் கைத் துப்பாக்கி, 7 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.

இவர்களைக் கைது செய்ததன் மூலம், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு இவர்கள் தீட்டிய சதி குறித்து மேலும் தெரிய வரும் என்றார் அவர்.

பேட்டியின் போது கர்நாடக டிஜிபி லால்ரோகுமா பச்சாவ், நகரக் கூடுதல் காவல் ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சுனில்குமார், நகரக் கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர் தயானந்த் உள்ளிட்டோ ர் உடனிருந்தனர்.

பின்தங்கியுள்ள பிரதேசங்கள் முதலில் கல்வித்தரத்தால் மேம்பாடு அடைய வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பின ர் முருகேசு சந்திரகுமார்!

Friday, August 31, 2012
இலங்கை::பின்தங்கியுள்ள பிரதேசங்கள் முதலில் கல்வித்தரத்தால் மேம்பாடு அடைய வேண்டும் அதனூடாகவே அபிவிருத்தி செயற்பாடுகளின் பயன்களையும் இலகுவாக பெறமுடியும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மூளாய் முன்கோடை கல்வி வளர்ச்சிக் கழகத்தின் மாணவர்கள் பெற்றோர்களை (30) சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று நடைபெற்று வரும் அபிவிருத்தியின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் நாம் அதிக அக்கறை காட்டி வருகின்றோம். இருப்பினும் ஒரு சமூகம் கல்வி ரீதியாக மேம்பாடடைகின்ற போதே அப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடுகள் முழுமைபெறும் என்ற யதார்த்தத்தின் வெளிப்பாடுகளையும் இன்றைய செயற்பாடுகளினூடாக உணரமுடிகின்றது.

எனவே கல்வித்தரத்தால் பின்தங்கியுள்ள பகுதிகள் விரைவாக கல்வி மேம்பாட்டை எட்ட வேண்டிய கட்டாய சூழல் இன்று உருவாகியுள்ளது. இந் நிலையில் அவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக பொருளாதாரத்தால் பின்தங்கிய மாணவர்கள் அப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளிலேயே முழுமையான கல்வியை பெறக்கூடிய சூழலை நாம் படிப்படியாக உருவாக்கி வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் அந்நிலைமையை பூரணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

எனவே மக்களும் இதில் அதிக அக்கறை காட்டுமிடத்து குறித்த இலக்கை விரைவாக எட்ட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மூளாய் முன்கோடை காளி கோவிலடி கல்வி வளர்ச்சிக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கல்விசார் உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

கூடாங்குளம் அணுமின் நிலையம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!

Friday, August 31, 2012
இலங்கை::தென் இந்தியாவிலுள்ள கூடாங்குளம் அணு மின்நிலையம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்தியாவிடம் விசனம் தெரிவித்த இலங்கை, இரு தரப்புக்குமிடையில் உடனடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென கேட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக, புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கு அறிவித்ததாகவும் இரு நாட்டு அணுசக்தி ஆணைக்குழுகளின் பிரதிநிதிகளும் விரைவில் சந்தித்து இப்பிரச்சினைப்பற்றி பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம டெய்லி மிரருக்கு கூறினார்.

இலங்கையின் மேற்கு கரையிலிருந்து 240 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்த அணு நிலையத்தில் கதிர்வீச்சு ஒழுக்கு அல்லது வேறு விபத்து ஏற்படும் போது இலங்கைக்கு பெருங்கேடு விளையும் ஆபத்து உள்ளது என இலங்கை சூழலியலாளர்கள் முன்பு கூறியிருந்தனர்.

இது விடயத்தில் சர்வதேச அணுசக்தி அதிகாரசபையின் உதவியை பெற்றுக்கொள்ளும் உரிமை இலங்கைக்கு உள்ளது என சூழலியலாளர் ஜகத் குணவர்த்தன கூறினார்.

திட்டமிடப்பட்டுள்ள இந்த அணு மின்நிலையம் கற்பிட்டியிலிருந்து 200 கிலோமீற்றர் மேற்கில் உள்ளது. எனவே ஒரு விபத்து ஏற்படும்போது உயர் ஆபத்து ஏற்படும். வீச்சுக்கள் இலங்கை வரமாட்டாது என இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரஞ்சித் விஜயவர்தன கூறினர்.

ஆயினும் இரண்டாம் மட்ட விளைவாக எமது வளிமண்டல, மழைநீர் என்பவற்றில் கதிர்வீச்சு கலக்கும் ஆபத்து உண்டென அவர் கூறினார்.

இங்கு இரண்டு அணு உலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயலளவு உள்ளவை. இவ்வாறு மேலும் நான்கு அணு உலைகள் அமைக்கும் திட்டமும் உள்ளது. இலங்கையின் வருடாந்த மின்தேவை 2000 மெகாவாட் மட்டுமே' என அவர் கூறினார்.

உலகில் இப்போது 450 அணு மின் நிலையங்கள் உள்ளன. செர்னோபில் அணு மின்நிலையத்தால் 1986 இலும் ஜப்பானின் புகுஷீமா நிலையத்தில் கடந்த வருடமும் அனர்த்தங்கள் ஏற்பட்டன.

எனவே அணு உலை விபத்துக்கள் சாத்தியம் குறைவாகவே உள்ளது. இன்னும் 30 வருடங்களில் அனல் மின்நிலையங்கள் செயற்படும் சாத்தியம் இல்லாது போகும். அப்போது நாமும் அணு சக்திக்கு மாற வேண்டியிருக்கும்' என அவர் கூறினார்.

ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு விஜயம்!

Friday, August 31, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான பிரசாரப்பணிகள் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜக்கிய தேசியக் கட்சியின் பிரசாரப் பணிகளை முன்னெடுத்துச் செல்லவரும் எதிர்க்கட்சித் தலைவர் நாளை மட்டக்களப்பு கறுவப்பங்கேணி சன்ப்ளவர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளதாக ஜக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வி.டி.எம்.முபாறக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை காத்தான்குடிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக ஜக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வி.டி.எம்.முபாறக் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்துக்குள் 70 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!

Friday, August 31, 2012
சென்னை::பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை தடுப்பதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் இலவச பஸ்-பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பஸ் பாஸ் ‘ஸ்மார்ட்’ கார்டு வடிவில் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது. சென்னையில் 3.30 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட தமிழகம் முழுவதும் 22.77 லட்சம் பள்ளி மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.

ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்படுவதால் இந்த ஆண்டு தாமதமானது. கிராமப்புறங்களில் பள்ளிகள் தொடங்கி 3 மாதம் ஆகியும் பஸ் பாஸ் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அரசு பஸ்களில் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

அதனால் பள்ளி சீருடையுடன் வரும் மாணவ-மாணவிகள் பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் பஸ்களில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்பிறகும் பல பகுதிகளில் இலவச பஸ் பாஸ் இல்லாத பள்ளி மாணவர்களை பஸ் கண்டக்டர்கள் பாதி வழியில் இறக்கி விடுவதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முயற்சித்தனர்.

விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்டு மாதத்திற்குள் பஸ் பாஸ் கொடுத்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனாலும் தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து நிறுவன அதிகாரி கூறியதாவது:-

புதிய முறையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்படுவதாலும் பள்ளிகளில் இருந்து வழங்கப்பட்ட விலாசங்களில் எழுத்து பிழைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டது.

மேலும் மாணவர்கள் விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அடுத்த முறை இதுபோன்ற தாமதம் ஏற்படாது. இதுவரை 22 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 70 ஆயிரம் பேருக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும். அனைவருக்கும் செப்டம்பர் இறுதிக்குள் பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

(புலி)வைகோ உண்ணாவிரதம்!

Friday, August 31, 2012
சென்னை::இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரன் உயிரை காக்க வலியுறுத்தி மதிமுகவினர், கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கடந்த 27ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவாக இன்று காலை 9 மணி முதல் மதிமுக பொதுச்செயலாளர் (புலி)வைகோ உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவருடன் துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ஷீமாபஷீர், மாநில தேர்தல் பிரிவு செயலாளர் மனோகரன், மகளிர் அணி செயலாளர் குமாரி விஜயகுமாரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது, வைகோ அளித்த பேட்டி: முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, திறந்தவெளி முகாமுக்கு அனுப்ப வேண்டும் என்று 26 நாட்களாக செந்தூரன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிருக்கு எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படலாம். அவர் மரணத்திற்கு தமிழகம் பலியாகி விடக்கூடாது. திறந்தவெளி முகாமிற்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் (புலி)வைகோ.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 24 பேர் கைது!

Friday, August 31, 2012
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 24 பேர், மட்டக்களப்புக்கு கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது கைதாகியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பொருட்டு அவர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, August 31, 2012
இலங்கை::பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகள் மாநாட்டில் கலநது கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாடுகளின் உள்விவகாரங்களில் உலக நாடுகள்தலையீடு செய்யக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கி;ய நாடுகள் பிரகடனம் மற்றும் அணிசேரா நாடுகள் பிரகடனத்திலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாடு பாரியளவில் அபிவிருத்தியை எட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான நிலைப்பாட்டுடன் செயற்பட்ட காரணத்தினால்3 தசாப்த யுத்தத்தை இல்லாதொழிக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கவும் சமாதானம் - பாதுகாப்பை முன்னேற்றவும் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்புகளைபயங்கரவாதத்தை ஒழிக்கவும் வழங்கும் :
பயங்கரவாதத்தை ஒழிக்கவும் சமாதானம் மற்றும் பாதுகாப்பை முன்னேற்றவும் மேற்கொள்ளப்படும் பல் தரப்பட்ட முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரானின் டெஹ்ரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 16 வது உச்சி மாநாட்டில் நேற்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

டெஹ்ரானில் நேற்று ஆரம்பமான அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கான ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கியதுடன் நேற்று மாலை உரையாற்றினார்.

மனித இனத்தின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தடையேற்படுத்தும் தேசிய எல்லைகளை கடந்த அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் நெருங்கிய தொடர்புள்ள சர்வதேச பயங்கரவாதத்தை உலகம் எதிர்நோக்கி வருகிறது.

தெளிவான கொள்கை ஒன்றின் மூலம் மூன்று வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாத சவால்களை இலங்கையால் முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. இவ்வாறன அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வரவும் அதன் பின்னரான பிரச்சினைகள் மற்றும் சவால்களை வெற்றிக்கொள்ளவும் இலங்கையை போன்று, தம்மால் உருவாக்கப்பட்ட மற்றும் மக்களை அடிப்படையாக கொண்ட செயற்திட்டங்கள் அவசியம். அத்துடன் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது கட்டாயம். இந்த அனர்த்ததை இல்லாதொழிக்க வேண்டுமாயின் இரட்டை கொள்கைகள் அல்லது ஒரு தரப்பிற்கு மாத்திரம் சாதகமான கொள்கைள் இருக்கக் கூடாது.

இறையாண்மையை மதிக்க வேண்டும் என்ற கொள்கைளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அனைவரும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மற்றும் அணிசேரா நாடகளின் கொள்கைகளில், நாடுகளில் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிரந்தரமான கொள்கையானது வாரத்தைகளில் மாத்திரம் இருக்கக் கூடாது. அதனை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கூடங்குளம் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : அணுமின் நிலையம் செயல்பட அனுமதி!

Friday, August 31, 2012
சென்னை::கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தடை கேட்டு தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அனைத்து அடிப்படை வசதிகளையும் ஆராய்ந்து பார்த்துதான் அணுமின் நிலையத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பால் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதில் ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய , ரஷ்ய கூட்டு தயாரிப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் செயல்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பலகட்ட போராட்டங்களையும் நடத்தினர். இதற்கிடையே, அணுஉலைகளில் எரிபொருள் நிரப்ப தடை கேட்டு வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்பட சிலர், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி விசாரித்தனர். கடந்த வாரம் இறுதி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தடை கேட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். மத்திய, மாநில அரசுகள் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்த பிறகுதான் அணுமின் நிலையத்துக்கு அனுமதி அளித்துள்ளன. மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் அச்சம் போக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். கூடங்குளம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு படகுகள், நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை அளிக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் அமைத்து தர வேண்டும். அணுசக்தி கழகமும் மாசு கட்டுப்பாடு வாரியமும் இப்பகுதியில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். இப்பகுதி மக்கள் நலனுக்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்த யோசனைகளை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். அணுஉலைகளில் எரிபொருள் நிரப்ப தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதில் ஏற்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது.

தெற்கு அதிவேக மார்க்கத்தினூடாக 750 மில்லியன் ரூபா வருமானம்!

Friday, August 31, 2012
இலங்கை::தெற்கு அதிவேக மார்க்கம் ஆரம்பிக்கப்பட்ட, 2011 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 750 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு அதிவேக மார்க்கத்தின் ஊடாக மூன்று மில்லின் ரூபா வருமானம் கிடைத்து வருவதாக அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு அதிவேக மார்க்கத்தினுள் நாளாந்தம் எண்ணாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரையான வாகனங்கள் பிரவேசிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒருபோதும் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாது - மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Friday, August 31, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒருபோதும் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிள்ளையார் கோயிலடி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிச்சைக்காரனின் உடம்பில் உள்ள புண் போன்றவர்கள். அதனை பெருப்பித்து பெருப்பித்து பிச்சைக்காரன் பிச்சை எடுப்பது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இங்கு அரசியல் செய்து கொண்டு வருகின்றனர்.

நாங்கள் காட்டில் ஆயுதம் தாங்கி போராடிய போது இவர்கள் எங்கிருந்தனர். பல்வேறு நாடுகளில் சுகபோகங்களை அனுபவித்து விட்டு, இங்கு வந்து மக்களை குழப்பி கொண்டிருக்கின்றனர். நான் தமிழ் மக்களுக்காக போராடச் சென்றவன். எனக்கு அவர்களுகுக்கு இருக்கும் உணர்வை விட அதிகமாக உள்ளது. இந்த நாட்டை விட்டுச் சென்று சொகுசாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அநான் அவ்வாறு வாழ விரும்பவில்லை. எமது சனம் தொடர்ந்தும் அழிவுகளை சந்தித்து கொண்டிருக்க முடியாது என்பதற்காகவே நான் போராட்ட முறையில் இருந்து அரசியல் முறைமைக்குள் பிரவேசித்தேன்.

புலிகளின் தலைவரிடம் இந்த போராட்டத்தை வெல்ல முடியாது பேச்சுவார்த்தையினைக்கொண்டு பெறக்கூடிய அதிகாரத்தை பெற்று அரசியல் தீரியாக உரிமைகளை பெற முயற்சிப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று முதலமைச்சர் நிலையில் இருந்திருப்பார்.

நான் போராட்டத்தின் கொள்கையை மாற்றுமாறு கூறவில்லை. போராட்டத்தின் வடிவவத்தை மாற்றி முயற்சி செய்வோம் என்று கூறினேன்.ஆனால் அவர்கள அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அதில் இருந்து பிரிந்து வந்ததுடன் கிழக்கில் 6 ஆயிரம் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி அவர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளேன்.

இன்று மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழு இலங்கையுமே அமைதியாக மாறியுள்ளது. முன்னர் காலையில் எழுந்தவுடன் அழு குரல்களும் சடலங்களையும் நாங்கள் காணுவோம். ஆனால் இந்த நிலைமை இன்றில்லை. அதனை மீண்டும் ஒரு முறை கொண்டு வர நாம் அனுமதிக்கக் கூடாது.

தமிழ் மக்களை பொறுத்த வரையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. நாங்கள் இதில் ஒன்றுப்பட்ட சக்தியாக வாக்களிக்க வேண்டும். நாம் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே எமது சமூகத்தினை முன்னெடுத்து செல்ல முடியும். இதனை உணர்ந்த மக்களாக நாங்கள மாற வேண்டும் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Thursday, August 30, 2012

ஆஸ்திரேலியா அனுப்புவதாக இலங்கை அகதிகளிடம் பல லட்சம் மோசடி: 7 பேர் கைது!

Thursday, August 30, 2012
முதுநகர்::தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை கடலூர் துறைமுகத்தில் இருந்து கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்ற ஏஜன்டுகள் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் துறைமுகத்திலிருந்து கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் 28 பேரை கடந்த 27ம் தேதி இரவு "க்யூ' பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்டவர்களில் 18 பேர் அகதிகளாக பதிவு செய்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என்பதும் மற்ற 10 பேர் பதிவு செய்யாத அகதிகள் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் ஈரோடு மாவட்டம், பவானி சாகர் முகாம் சுந்தர், சென்னை புழல் முகாம் ரவி ஆகியோர், ஆஸ்திரேலியா சென்றால் அதிக வருமானம் ஈட்டலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ஏஜன்டுகளான காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த ஜோதிராஜா, 49, வேதகிரி, 42, மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வீரமணி, 48 ஆகியோர் விசைப்படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்று விடுவர் எனக் கூறியுள்ளனர். அதனை நம்பி 28 பேரும் பணம் கொடுத்துள்ளனர். ஏஜன்டுகள் கூறியபடி 28 பேரும் கடந்த 27ம் தேதி கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்த ஏஜன்டுகள், அகதிகள் 28 பேரையும் சுமோ காரில் கடலூர் முதுநகர் துறைமுகத்திற்கு அழைத்து வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அன்னை வேளாங்கண்ணி பெயர் கொண்ட (பதிவெண்: டி.என்-15-எம்.எப்.பி-42) விசைப்படகில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், நள்ளிரவு விசைப்படகு புறப்படும் போது ஏறிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.அந்த தகவலின் பேரில், விசைப்படகு குறித்து நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலம், வம்பாகீரப்பாளையம் வேலு என்பவருக்கு சொந்தமானது எனவும், இந்த விசைப்படகில் கடலூர், தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த முருகன், எழில்செல்வம், குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் சுமன் ஆகியோர் இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக விசைப்படகின் உரிமையாளரான வேலுவிற்கு 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், அதற்காக முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது தெரியவந்தது.

ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரான ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த கவுசல்யன், 23 கொடுத்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார், சதித்திட்டம் தீட்டி மோசடி செய்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஏஜன்டுகள் ஜோதிராஜா, 49, வேதகிரி, 42, வீரமணி, 48, விசைப்படகின் உரிமையாளர் புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் வேலு, 39, கடலூர், தேவனாம்பட்டனம் எழில்செல்வன், 30, முருகன், 30, குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த சுமன், 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமோ கார், ஒரு பைக், 6 மொபைல் போன்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் நேற்று மாலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்ட இலங்கை தமிழர்களில் பதிவு பெற்ற 18 பேர் அவரவர் தங்கியிருந்த முகாம்களுக்கே அனுப்பி வைக்கவும், பதிவு செய்யப்படாத மற்ற 10 பேரும் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஈரோடு, பவானிசாகர் முகாமில் உள்ள சுந்தர், சென்னை, புழல் முகாமில் உள்ள ரவி ஆகியோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

22 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஏறாவூர் சந்தை வீதி!

Thursday, August 30, 2012
இலங்கை::யுத்த சூழ்நிலை காரணமாக 22 கடந்த வருடங்களாக மூடப்பட்டிருந்த ஏறாவூர் சந்தை வீதி மக்கள் பாவனைக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏறாவூர் நான்காம் குறிச்சி பொதுமக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த வீதியின் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூர் நகரில் தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் இந்த வீதி 1990ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்தது.

எனினும யுத்தம் நிறைவுபெற்று சுமூகமான சூழ்நிலை நிலவியபோதிலும் சில பாதுகாப்பு காரணங்களினால் இந்த வீதி திறக்கப்படாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இனங்க இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் வண்ணமணி பாக்கியராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தினரை வெளியேற்ற கோரி கோவையில் ரயில் மறியல் மதிமுக நிர்வாகிகள் கைது!

Thursday, August 30, 2012
கோவை::குன்னூர் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவத்தினரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் ஏராளமானோர் இன்று கைது செய்யப்பட்டனர். நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 3 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வலியுறுத்தி தமிழக கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கோவை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று காலை போத்தனூர் ரயில் நிலையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பாலக்காட்டில் இருந்து திருச்சி வந்த பயணிகள் விரைவு ரயில் முன்பு அமர்ந்து சுமார் 15 நிமிடத்துக்கு மேல் கோஷமிட்டனர். போலீஸ் பாதுகாப்பையும் மீறி, மாற்று வழியில் சென்று மதிமுகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் விக்னேஸ்வரன், வெள்ளியங்கிரி, கந்தசாமி, நகர செயலாளர் செல்வராஜ், வெள்ளக்கிணர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அருண்குமார் உள்பட 60,க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் 15 நிமிடம் தாமதமாக அந்த ரயில் புறப்பட்டு சென்றது. காலை 7 மணியளவில் மதிமுகவின் மற்றொரு தரப்பினர் கோவையில் இருந்து கண்ணணூர் சென்ற ரயிலை போத்தனூரில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மாணவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கற்பிரயோகம்; ஆறு பொலிஸாருக்கு காயம் - பொலிஸ்!

Thursday, August 30, 2012
இலங்கை::பல்கலைக்கழக மாணவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையில் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின்போது பொலிஸார் மீது கற்பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மருதானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த கற்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமமடைந்தவர்களில் ஐந்து பேர் சிகிச்சையின் பின்னர் வைத்தியாசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸார் மீது கற்பிரயோகம் மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அணி சேரா மாநாடு தொடக்கம் : ஈரான் தலைவர் கமேனியுடன் மன்மோகன் சிங் ஆலோசனை!

Thursday, August 30, 2012
டெஹ்ரான்::அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் முன்னதாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஈரான் பயங்கர அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நாட்டின் மீது ஐ.நா.வும் அமெரிக்கா உள்பட பல நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளன. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கூடாது என்று மற்ற நாடுகளை அமெரிக்கா நிர்பந்தித்தது. இந்நிலையில் 120 நாடுகள் உறுப்பினராக உள்ள அணி சேரா நாடுகளின் 2 நாள் மாநாடு டெஹ்ரானில் இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது, ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்தது. எனினும், மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்தினால், சர்வதேச அளவில் பல நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஈரானும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 30க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயர் அதிகாரிகள் வந்துள்ளனர்.
அணி சேரா நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பில் தற்போது எகிப்து உள்ளது. இந்த பொறுப்பை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஈரான் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டெஹ்ரானில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை (73), பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். முஸ்லிம் நாட்டு தலைவர்களை தவிர வேறு நாட்டு தலைவர்களை கமேனி மிகமிக அரிதாக சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் மன்மோகனுடனான இந்த சந்திப்பு இருநாட்டு உறவில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாற்பது நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி, நேருவின் கொள்கைகள் குறித்து கமேனி புகழ்ந்து பேசினார். அதற்கு மன்மோகன் நன்றி தெரிவித்து கொண்டார். அணி சேரா நாடுகளின் மாநாட்டை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மாநாட்டில் பங்கேற்க கூடாது என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கேட்டுக் கொண்டன. அதை பொருட்படுத்தாத பான் கி மூன், மாநாட்டில் பங்கேற்றார். இதற்கு இரு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஜிக்மி தின்லே, கம்போடிய பிரதமர் ஹூன் சென் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரம், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து உள்பட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் மற்றும் பிராந்திய சிக்கல்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

சர்தாரியுடன் சிங் சந்திப்பு?
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை நேற்று உறுதி செய்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அணி சேரா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் போது, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்திக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அப்போது கசாப் தூக்கு தண்டனை பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
.

சீன பாதுகாப்பு அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதியை சந்திப்பு!

Thursday, August 30, 2012
இலங்கை::சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாங்கு குவாங்லி நேற்று(ஆகஸ்ட்-29) அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார்.

ஜெனரல் குவாங்லி தலைமையிலான 23 பேரைக்கொண்ட சீன நாட்டின் குழுவினர், ஐந்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று(ஆகஸ்ட்-29) இலங்கைக்கு வந்துள்ளனர்.

இச் சந்திப்பில் ஜனாதிபதிக்கும் ஜெனரல் குவாங்லிக்கும் இடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுக்கும் சந்தர்ப்பங்களின் இலங்கைக்கு பக்கபலமாக இருந்தமைக்காக சீன அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது சீனக் குழுவினர் சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் ஊழியர்கள் கல்லூரி, பனான்கொடையில் உள்ள இராணுவ கண்டோன்மென்ட் மற்றும் கொழும்பில் உள்ள பாதுகாப்புச் சேவைக் கல்லூரி ஆகியவற்றிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதிக்கும் சீன பாதுகாப்பு அமைச்சருக்குமிடையே நினைவுச்சின்னங்களும் பறிமாறப்பட்டன.

அணிசேரா நாடுகள் மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

Thursday, August 30, 2012
இலங்கை::அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று உரையாற்றவுள்ளார்.

இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆரம்பமாகவுள்ள 16ஆவது அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று மாலை நாட்டிலிருந்து பயணமானார்.

அணிசேரா நாடுகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் 25 பேரில் இலங்கையும் ஒன்று என்பதுடன், யூகோஸ்லாவாக்கியாவின் பெல்கிரேட்டில் நடைபெற்ற முதலாவது மாநாட்டிலும் இலங்கை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் குழந்தைகள் காப்பகங்களுக்கு 34 சலவை எந்திரங்கள்: ஜெயலலிதா உத்தரவு!

Thursday, August 30, 2012
சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

சமூகநல இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 27 அரசு குழந்தை காப்பகங்கள் மற்றும் 7 சேவை இல்லங்கள் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழைக் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உணவு, உறைவிடம், சீருடைகள் மற்றும் கல்வி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகள் தங்கள் துணிகளை தாங்களே துவைத்துக் கொள்வதால், அவர்கள் பயிலும் நேரம் வீணாகிறது. எனவே, இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் பணிச் சுமையினை குறைக்கும் வகையிலும், துணி துவைக்கும் நேரத்தினை கல்விக்காகவும், ஒய்விற்காகவும் செலவிட ஏதுவாகவும், தமிழ்நாட்டில் உள்ள 27அரசு குழந்தை கள்காப்பகங்கள் மற்றும் 7 அரசு சேவை இல்லங்களுக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடிய தரம் வாய்ந்த 34 சலவை இயந்திரங்களை தலா 3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் வாங்கி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கென 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் மூலம், அரசு காப்பகங்களில் உள்ள குழந்தைகள், தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில், தங்களது கல்வியில் தனிக் கவனம் செலுத்தி நன்முறையில் தேர்ச்சி பெற வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது!

Thursday, August 30, 2012
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான ஒழுங்குகளை செய்வோர் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் சொத்துக்களை முடக்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் இந்த சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2006ம் ஆண்டு குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூலனந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிர்காலத்தில் பிணை வழங்க முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் அனுதாப அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமெனவும், இதனால் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தண்டனை தொடர்ந்தும் 3 மாதங்களாக நீடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவிதமான மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது எனவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதச் சட்டங்களினால் நாடுகள் ஒடுக்கப்படக் கூடாது - ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா!

Thursday, August 30, 2012
இலங்கை::ஆயுதச் சட்டங்களினால் நாடுகள் ஒடுக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் இலகு ரக ஆயுதப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டமானது, நாடுகள் ஆயுதங்களை வைத்திருக்கும் உரிமையை பாதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிய மற்றும் இலகு ரக ஆயுதப் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்கள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்படுவதனை இலங்கை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்பாதுகாப்பு நோக்கில் சட்டரீதியாக சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்களை பயன்படுத்தும் நாடுகளின் உரிமை ஒடுக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் சட்டவிரோத பயன்பாட்டை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல பாகங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்களே ஏதுவாக அமைந்துள்ளது என சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

Wednesday, August 29, 2012

பிரணாப் முகர்ஜி போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொன்ன தகவலால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்: கருணாநிதி விளக்கம்!

Wednesday, August 29, 2012
சென்னை::இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, பிரணாப் முகர்ஜி போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொன்ன தகவலால் சென்னை மெரினா கடற்கரையில் நான் இருந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுத் திரும்பினேன் என்று கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக செயற்குழுவில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பதிலடியாக இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

"மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!” என்று தலைப்பிட்டு கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இனக்கலவரப் போரின் போது, தான் மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியலிட்டு கருணாநிதி கூறியிருப்பவை...

"இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது நான் எதுவும் செய்யவில்லை என்கிறார் ஜெயலலிதா.

14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்,

24-10-2008 அன்று மனிதச் சங்கிலி,

12-11-2008 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம்,

4-12-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரோடு சந்திப்பு,

27-12-2008 அன்று தி.மு. கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்,

28-3-2009 அன்று பிரதமருக்கும், சோனியா விற்கும் கடிதம்,

7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் ஆகியோருக்கு தந்தி,

9-4-2009 அன்று சென்னையில் பேரணி,

21-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி ஆகியோருக்கு மீண்டும் தந்தி,

23-4-2009 அன்று தமிழகத்தில் “பந்த்”,

24-4-2009 அண்ணா அறிவாலயத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் சந்திப்பு,

27-4-2009 அன்று உண்ணாவிரதம்

- இவை எல்லாம் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நான் எடுத்த நடவடிக்கைகள்!

ஆனால் என்னைக் குற்றஞ்சாட்டி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா செய்தது என்ன?

14-10-2008 அன்று கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் “கண்துடைப்பு நாடகம்” என்று கூறி அதனைப் புறக்கணித்தார்.

15-10-2008 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன.

போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது

ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல” என்று என்னைத் தாக்கி அறிக்கை விட்டதைத் தவிர வேறு எதையும் ஜெயலலிதா செய்ய வில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாத ஜெயலலிதா, தற்போது அவரது கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம்

என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

அந்தத் தீர்மானத்தில் போர் முடிந்து விட்டதாக பொய்யான தகவலைக் கூறி நான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதாக சொல்லியிருக்கிறார். நான் உண்ணாவிரதம் இருந்த 27- 4-2009 அன்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

"நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.” இவ்வாறு இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும், மேலும் “குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்” என்றும், “போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்றும் “போர் முனையிலிருந்து வெளி வந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டுமன்றி; போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங் களுக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்” என்றும், இலங்கை அரசு கூறியிருப்பதாகத் தெரிவித்த பிரணாப் அவர்கள், அந்த அறிக்கையில், “போர்ப் பகுதியிலிருந்து வெளிக் கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்க ளுக்குத் தேவையான நிவாரண உதவி களை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள் ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும், அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்கு களங்கம் கற்பிக்க முயலுகிறார் முதல்வர் ஜெயலலிதா

- என்று உண்ணாவிரதத்தை உடனே வாபஸ் பெற்றதற்கு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் கருணாநிதி.

சீன பாதுகாப்பு அமைச்சர் உட்பட உயர் மட்டக்குழுவினர் இன்று இலங்கை வருகை!

Wednesday, August 29, 2012
இலங்கை::சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாங்கு குவாங்லி தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 29) இலங்கை வந்துள்ளனர்.

ஜெனரல் லியாங்கு குவாங்லி தலைமையிலான இவ் உயர் மட்டக்குழுவினர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்துநாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இவர்கள் சபுகஸ்கந்தையிலுள்ள பாது காப்பு சேவைகள், அதிகாரிகள் கல்லூரி, பனாகொட இராணுவ முகாம் ஆகிய வற்றுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளனர்.