



Friday, August 31, 2012இலங்கை::சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியங் குவாங் லி இன்று காலை பானகொட இராணுவ முகாமுக்கு விஜயம் செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. அங்கு சென்ற சீன அமைச்சரவை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய வரவேற்றார்.
சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பனாகொட முகாமில் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகளை சீன அமைச்சர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வை செய்தனர். இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment