Friday, January 31, 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, பிரித்தானியா முயற்சி!

Friday, January 31, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, பிரித்தானியா முயற்சி!
 
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கும்படி, பேரவையின் உறுப்பு நாடுகளிடம் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து அழுத்தம் கொடுக்கவுள்ளன.
 
அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், சிறிலங்காவில் இருந்து லண்டனுக்குச் சென்று இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
நிஷா தேசாய் பிஸ்வாலுடன், பிரித்தானியாவைத் தளமாக கொண்ட  புலிகளுக்கு நெருக்கமான மூத்த பிரித்தானிய அதிகாரிகள், இதுதொடர்பாக சந்தித்துப் பேசவுள்ளனர். அதேவேளை, இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக, இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
 
இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும், காமன்வெல்த் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம், அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி கோருவதற்கு பிரித்தானியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் பிஷ்வால் இலங்கை விஜயம்!

Friday, January 31, 2014
இலங்கை::தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் இன்று இலங்கைக்கு செல்கின்றார். இலங்கைக்கு செல்லும்; பிஷ்வால், பெப்பரவரி மாதம் 2ம்த திகதி வரையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு தணடனை விதிக்கப்படாமை, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிஷ்வால், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

பிஷ்வால் வட மாகாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், வடமாகாணசபை அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவி;க்கப்படுகிறது.

இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டதன் பி;ன்னர், பிஷ்வால் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. பிஷ்வால் ஜெனீவாவிற்கும் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரத் ஃபொன்சேகா இன்று சர்வதேசத்தின் கைப்பொம்மை: ஜனாதிபதியின் இணைப்பாளர் கலகம தம்பவன்ச தேரர் குற்றச்சாட்டு!

Friday, January 31, 2014
இலங்கை::கைப்பொம்மையாகிவிட்ட சரத் ஃபொன்சேகா ஜனாதிபதியின் யுத்த வெற்றியைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதியின் மத அலுவல்கள் பிரிவின் பௌத்த மதத்திற்குப் பொறுப்பான கலகம தம்பவன்ச தேரர் குற்றம்சாட்டினார்.

கொழும்பு பொதுநூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்த கலகம தம்பவன்ச தேரர் மேலும் கூறுகையில்,
 
இன்று சரத் ஃபொன்சேகா சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாகச் செயற்பட்டு வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் பெற்றுக்கொண்ட யுத்த வெற்றியை சிதைக்கும் வகையில் சரத் ஃபொன்சேகா செயற்பட்டு வருகிறார்.
 
இன்னும் இரு மாதங்களில் இரு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் ஆளும் தரப்பினை வெற்றியடைச் செய்து சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு இலங்கையர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
 
வட மாகாண சபையைப் போன்று சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் செயற்படும் மாகாண சபையொன்று மேல் மற்றும் தென் மாகாணத்தில் அமைந்துவிடக்கூடாது. வட மாகாண சபைத் தேர்தலை ஆளும் தரப்பு நினைத்திருந்தால் வென்றிருக்க முடியும்.
 
ஆனால், மக்களின் ஜனநாயகத்தை உறுதிசெய்யும் வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தினார். ஆனால், இன்று வட மாகாண சபை நாட்டைக் காட்டிக்கொடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது.
 
வட மாகாண சபை உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் இவ்வினவாத நடவடிக்கையால் இலங்கையை மீண்டும் இருளுக்குள் தள்ளிவிட வேண்டாம் என்றார்.

நாட்டில் சட்டம் தொடர்பான செயலரமர்வை நடத்துவதற்காக அமெரிக்க நீதிபதிகள் குழுவினர் யாழ். விஜயம்!

Friday, January 31, 2014
இலங்கை::வடக்கு மாகாணத்திலுள்ள நீதிபதிகளுக்கான செயலமர்வு இன்று காலை யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
மாவட்டத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியும், நீதிமன்ற ஆணையாளருமான நீதிபதி பிரேம்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் மற்றும் அமெரிக்காவின் நீதிபதிகள் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
 
இதன்போது, நாட்டின் சட்டங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பாக நீதிபதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் மனிதாபிமான நடைமுறைகள் தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டது.
 
இந்த செயலமர்வில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம்சங்கர் மற்றும் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட மாவட்டத்தை மற்றும் மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நீதிபதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களில் தேசிய கொடியை பறக்க விடுமாறு அறிவிப்பு!

Friday, January 31, 2014
இலங்கை::இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்கள் இயங்கும் கட்டிடங்களை வர்ண கொடிகளினால் அலங்கரிக்குமாறும் அமைச்சின் செயலாளர், அரச நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
 
இலங்கையின் 66 வது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில், கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெறவுள்ளது.
தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.

யுனிசெவ் நிறுவன இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஆளுநருடன் கலந்துரையாடல்!

Friday, January 31, 2014
இலங்கை::யுனிசெவ் நிறுவன இலங்கைக்ககான வதிவிட பிரதிநிதி உனமைக் கோலி வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 27 ஜனவரி 2014 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
 
யுனிசெவ் நிறுவனத்தின் செயத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் யுனிசெவ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை அதிகரிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், யுனிசெவ் நிறுவனத்தின் வட மாகாணத்திற்கான பிரதம இணைப்பாளர் திரு.பிரகாஸ் ஆகியோர் இக்கலந்துரையாடலில் உடனிருந்தார்கள்.

மீனவர் பிரச்சினை தீர தீவிர நடவடிக்கை: கவர்னர் ரோசைய்யா உரை!

Friday, January 31, 2014
சென்னை::இலங்கை தமிழர் - மீனவர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்,  முதல் அமைச்சரின் மதிநுட்ப நடவடிக்கையால், நீண்ட காலமாக இலங்கையால் கைது செய்யப்பட்டிருந்த 295 மீனவர்கள் ? 45 படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர என்றும் கவர்னர் ரோசைய்யா சட்டசபையில் தனது உரையில் கூறியுள்ளார்.

கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் இன வெறிப் போருக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதாபிமானற்ற முறையில் இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்தப்படுவதும், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இனப்படு கொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம் மாநிலத்தில் உணர்ச்சிகரமான பிரச்சினைகளாக உள்ளன.
சிறுபான்மைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதாபி மானமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யவும், இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமையையும், அடிப்படை உரிமைகளையும் பெற்றுத்தரவும், நான்கு முறை இம்மாமன்றம் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

முதல்ஜஅமைச்சர் தமிழ் மக்களின் கொந்தளிப்பான உணர்வு நிலையை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்திய பின்னரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு, இந்த அரசு உறுதியான ஆதரவைத் தொடர்ந்து அளிக்கும்.
தமிழ்நாட்டிலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் அவர்கள் பாரம் பரியமாக மீன் பிடிக்கும் பாக் நீரிணைப் பகுதியில் எந்தக்காரணமுமின்றி இலங்கைக் கடற்படையால் கொலை வெறித் தாக்குதல்களுக்கு தொடர்ந்து உட்படுத்தப்படுவது தமிழ் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மீனவர் சமுதாயத் தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்ஜஅமைச்சர், பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி, உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினைகளுக்கு தூதரக அளவில் முயற்சி மேற்கொண்டு ஒரு உறுதியான முடிவினை எட்டி இந்திய மீனவர்களை மத்திய அரசு காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலவியல் அடிப்படையிலும், வரலாற்று ரீதியாகவும், கலாச்சாரத் தொடர்பின் அடிப்படையிலும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்த கச்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும் என முதல்ஜஅமைச்சர் உறுதியோடு அயராது போராடி வருகிறார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் மனப்பான்மையோடு, தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்திட முதல்ஜஅமைச்சர் அனுமதி அளித்தார். இந்த மதிநுட்பமிக்க முதல்ஜஅமைச்சரின் நடவடிக்கையால், நீண்ட காலமாக இலங்கையால் கைது செய்யப்பட்டிருந்த 295 மீனவர்களும் அவர்களது 45 படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sri Lankans arrested over UK people smuggling racket!

Friday, January 31, 2014
Four Sri Lankans and a British national were charged with helping illegal immigrants to enter UK as stowaways.
A report in 'The Guardian' (Wednesday 29th) states that, five members of a criminal gang who smuggled Sri Lankans into the UK through Channel ports have been jailed.
 
According to the UK Home Office, the men, four Sri Lankans and one British national, helped illegal immigrants attempting to reach the UK by smuggling them in vehicles and charging them œ4,500 each for the service.
 
The gang was caught following a Home Office-led investigation, supported by Kent police, the National Crime Agency (NCA), Europol and French, German and Swiss law enforcement agencies.
Many of the smuggling attempts were foiled by Border Force officers who discovered stowaways hiding in vehicles stopped at ports including Calais, Dunkirk, Coquelles and Dover.
 
The newspaper report quoting the Home Office spokesman states that some illegal immigrants upon
reaching the UK would travel to North America using falsified documents. Investigations are in progress to find illegal immigrants who had entered the UK it further states.
The ringleader of the gang, 37-year-old Sudharsan Jeyakodi from Luton, pleaded guilty last August
to conspiring to facilitate illegal immigration and was jailed for five years and four months at Maidstone Crown Court.
 
Chubramanian Vignarajah (42) from Croydon also pleaded guilty last year to the same offence and was sentenced to three years and four months imprisonment.
 
Kamalanesan Kandiah (39) from Hayes, London, John Anes Soundaranayagam Uvais (41) of East Ham, London, and British national Amarjit Mudhar (46) of Northolt, London, were found guilty of the same charge on 17th January following an eight-week long trial.
 
Kandiah and Uvais were jailed for five years each while Mudhar was sentenced to four years and eight months.

Thursday, January 30, 2014

                                     புதிய இலங்கை செய்திகளை பார்வையிட                                        
                                    
http://srilankaa.blog.com

நாராயணசாமி வீட்டில் குண்டு வீச்சு மத்திய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை புதுவையில் நாளை மறுநாள் பந்த்!

Thursday, January 30, 2014   
புதுவை::புதுவையில்மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமி வீட்டில் கைப்பற்றப்பட்டது சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் குண்டு என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து, பிப்ரவரி 1ம் தேதி புதுச்சேரியில் பந்த் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

புதுவை எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமியின் வீடு முன்பு நேற்று நிறுத்தப்பட்டிருந்த அவரது மகன் காருக்கு அடியில் ஒரு அடி நீளமுள்ள இரும்பு பைப் வெடிகுண்டு நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு அங்கிருந்து அகற்றப்பட்டு, பழைய துறைமுகத்தில் 5 அடி பள்ளம் தோண்டி மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தமிழக கமாண்டோ இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஸ்கேனர் கருவி மூலம் ஆய்வு செய்ததில் வெடிமருந்து இருப்பதை உறுதிபடுத்தினர். 500 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் அருகில் சென்று இரும்பு கம்பி உதவியுடன் வெடித்து சிதறிய பொருட்களை ஒவ்வொன்றாக பரிசோதித்தனர். அப்போது அதில் பவர்டெல்&90 எனும் ஸ்சிலரி ஜெல் 1.5  கி வெடிமருந்தும், அதை வெடிக்க வைக்ககூடிய 21 நான்-எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 12 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்தன. அதை கைப்பற்றிய கமாண்டோ படையினர் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த வெடிகுண்டு சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் குண்டு என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அது வெடித்திருந்தால் மத்திய இணை
அமைச்சர் வீட்டை சுற்றிலும் 100 மீட்டர் தூரத்திற்கு கடும் சேதத்தை விளைவித்திருக்கும். ஆனால் வெடிகுண்டுடன் இணைக்கப்பட்ட 2 திரிகளும் அதிர்ஷ்டவசமாக அணைந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் பிப்ரவரி 1ம்தேதி புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்தனர்.
இதற்கிடையே இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். சீனியர் எஸ்பி சஞ்சீவ் தலைமையில் சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கை விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும், சென்னையிலிருந்து மத்திய சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட குண்டுகளை பார்வையிட அவர்கள் இன்று புதுச்சேரி வருகின்றனர். அவர்கள் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை யும், அதன் வீரியத்தையும் ஆய்வு செய்து திட்டமிட்ட சதியா? என குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

யுத்தத்தின்போது காணாமல் போனோரின் பெற்றோர் ஒன்­றிய அலு­வ­ல­கம் கிளிநொச்சியில் திறந்­து­வைப்பு!

sss3017
sss3016
sss3015
sss3014
sss3013
sss3012
sss3018
Thursday, January 30, 2014
இலங்கை::யுத்தத்தின்போது இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியத்தின் அலுவலகம்கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது .
 
இந்த அலுவலகத்தை கிளிநொச்சி ஏ -9 வீதியில் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இல . 37 இல் கிளிநொச்சி திரேசா தேவாலயப் பங்குத்தந்தை ஜோர்ஜினால் நாடாவெட்டித் திறந்து வைக்கப்பட்டுள்ளது .
 
யுத்தத்தினாலும் இடப்பெயர்வுகளினாலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் தமது வாழ்வாதாரத்தை க்கொண்டு நகர்த்தமுடியாமலும் சிரமப்பட்ட போது வடக்கு மற்றும் கிழ - க்கு மாகாணப் பகுதிகளில் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயற்பட்டு உதவி வருகின்றது .
 
இந்த வகையில் கிளிநொச்சிக் - கான அலுவலகமும் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது . இறந்த மற்றும் காணாமல்போன பெற்றோர் , உறவினர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தில் இறந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர் , உறவினர்கள் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்தின் கிளிநொச்சி அலுவலக அமைப்பாளர் கோபால் குணாளன் தெரிவித்துள்ளார் .
 
இந்த நிகழ்வில் கிளிநொச்சி முருகன் ஆலய பிரதம குருக்கள் , தென்னிந்தியத் திருச்சபையின் கிளிநொச்சி அருட்தந்தை ஜோன் தேவகாம் , இறந்த மற்றும் காணாமல்போன பெற்றோர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ஆனந்த ஜெயமால் அதன் வடக்கு , கிழக்கு அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரன் , கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி , கிராம அலுவலர்கள் , இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் , உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர் .

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கைக் குழுவுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை!

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கைக் குழுவுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை

Thursday, January 30, 2014
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக் குழுவுக்கு  ஒன்றுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேரைக் கொண்ட குற்றவாளி குழு ஒன்றே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு கடத்திச் சென்றதாக குறித்த குழு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் இலங்கையர்கள் எனவும் ஒருவர் பிரித்தானியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தலா 4500 ஸ்ரெலிங் பவுண்ட்கள் அறவீடு செய்து இலங்கையர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், இந்த கடத்தல் முயற்சிகளில் பலவற்றை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் முறியடித்துள்ளனர்,

பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த சிலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வட அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளனர்.

37வயதுடைய சுதர்சன் ஜயகொடி, 42 வயதான சுப்ரமணியம் விக்னராஜா, 39 வயதான கமலநேசன் கந்தையா மற்றும் சௌந்தரநாயகம் உவைஸ் ஆகியோர் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 46 வயதான அமர்ஜித் முதாஹர் என்ற பிரித்தானிய பிரஜை ஒருவரும் தண்டிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து மற்றும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு குடாநாட்டிற்கும் பயணம்!

Thursday, January 30, 2014
இலங்கை::உகாண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு குடாநாட்டிற்கும் பயணம்.
 
உகாண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஒடங்கோ ஜேஜே உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட இராணுவக் குழுவினர் இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். யாழ். பலாலி இராணுவப் படைத் தலைமையத்தில் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
 
அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் முருகன் ஆலயத்திற்கு சென்ற அக்குழுவினர், யாழ். கோட்டைப் பகுதியினைப் பார்வையிட்டதுடன், யாழ். பொதுநூலகத்திற்கும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கொடைவள்ளல் இஸட் ஏ.எம்.றிபாயின் பத்துக் கோடி ரூபா நிதியுதவியுடன் கொழும்பு கைரியாவில் நான்கு மாடி கட்டிடம்; அமைச்சர் பஷில் அடிக்கல்!

Thursday, January 30, 2014
இலங்கை::கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சுமார் பத்துக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடி கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (29) கல்லூரி அதிபர் ஏ.எல்.எஸ்.நஸீரா ஹஸனார் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.
 
நகர அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌசி மற்றும் கட்டிடத்திற்கு நிதி வழங்கிய சம் ஜெம் குறூப் கம்பனி தலைவர் பிரபல கொடை வள்ளல் அல்ஹாஜ் இஸட் ஏ.எம்.றிபாய் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் அடுத்த கட்டம்: யாழில் மேற்கொள்ளப்படவுள்ளது

Thursday, January 30, 2014
இலங்கை::காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடு
கள் பதிவுகளாக பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கிளிநொச்சியின் பல்வேறு இடங்களிலும் இதற்கான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த விசாரணைகளின் அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்த ஆணைக்குழுவின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பாக நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்றதைத் தொடர்ந்தே அடுத்த கட்ட விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் அடுத்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி: கடல் தாமரை போராட்டம்: பா.ஜ., சுஷ்மா பங்கேற்பு!

Thursday, January 30, 2014
ராமேஸ்வரம்::தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ஜன. 31ல் நடைபெறவுள்ள கடல் தாமரை போராட்டத்தில், பார்லி., எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார்.
 
மத்தியபிரதேசம் போபாலில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ஜன., 31ம் தேதி மதியம் 1 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் சுஷ்மா சுவராஜ், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 2.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இறங்குகிறார். பின், அருகில் உள்ள கலோனியர் பங்களாவுக்கு சென்று, அங்கிருந்து காரில் பாம்பன் கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் மாலை 3 மணிக்கு பங்கேற்கிறார்.
 
முன்னதாக, பாம்பனில் மதியம் 2.30 மணிக்கு கடல் தாமரை போராட்டம் துவங்கி விடுகிறது இதில் பா.ஜ., தேசிய பொது செயலாளர் முரளீதர்ராவ், மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை மாநில துணைத்தலைவர் சுப.நாகராஜன், தேசிய குழு உறுப்பினர் முரளீதரன், மாவட்ட மீனவரணி செயலாளர் டைசன் செய்து வருகின்றனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச திவிநெம விவசாய திட்ட பயனாளிகளுக்கான பயிற்சி நெறி!

Thursday, January 30, 2014
இலங்கை::களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திவிநெம விவசாய திட்ட பயனாளிகளுக்கான பயிற்சி நெறி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த பயிற்சி நெறி முகாமைத்துவப் பணிப்பாளர் வி.வரதராசன் தலைமையில் இடம்பெற்றது. இதில் விவசாய போதனாசிரியர்களால் பயிற்சியும் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி நெறியில் வீட்டுத்தோட்டம்,மரக்கறித்தோட்டம் உட்பட பல்வேறுபட்ட விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வோரும் கலந்துகொண்டனர்.

82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை விளக்கம்: தற்போதைய நிலைமை, LLRC பரிந்துரை அமுலாக்கம்: மனித உரிமை முன்னெடுப்புகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜP.எல், நிமல் சிறிபால டி சில்வா விரிவாக எடுத்துரைப்பு!

Thursday, January 30, 2014
இலங்கை::உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், 82 நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார். புதுடில்லியை வதிவிடமாகக் கொண்டபடி இலங்கையிலும் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் தூதுவர்களையே அமைச்சர் இவ்வாறு சந்தித்துப் பேசியுள்ளார்.
 
அபுதாபியிலிருந்து நேரடியாக புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் தற்போதைய நிலைமை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுலாக்கம், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
 
இச்சந்திப்பில் அமைச்சர் பீரிஸஞிடன் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு வின் தலைவரும், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்துகொண்டார்.
 
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஐக்கிய அமெரிக்க இராச்சியம் கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய மற்றும் 2014ஆம் மார்ச் மாதம் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ள பிரேரணை குறித்தும் அமைச்சர்கள் இச்சந்தர்ப்பத்தில் இராஜதந்திரிகளுடன் உரையாடினார்கள். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா தொடர்ச்சியாக இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
மேலும் இலங்கைக்குமான இணைத்தூதுவர்கள் என்ற வகையில் இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து குறுகிய கடந்த 4 ஆண்டு காலப் பகுதிக்குள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஊடாக அடுத்தடுத்த வருடங்களில் பல அழுத்தங்கள் வந்தபோதும் எமது அரசாங்கத்தினால் சளைக்காது முன்னெடுக்கப்பட்டுவந்த சாதனைகளை உலகிற்குப் பிரதி பலிக்க வேண்டுமெனவும் அமைச்சர் பீரிஸ் இராஜதந்திரிகளைக் கேட்டுக் கொண்டார்.
 
இலங்கையில் 2013ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாடு பற்றிக் குறிப்பிடுகையில், அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்தபோது தாங்கள் அதுவரை இந்நாட்டைப்பற்றி கேள்வியுற்றிருந்தமையிலும், அனைத்து அம்சங்களும் வித்தியாசமாக இருந்ததனை தங்களது பொது அபிப்பிராயமாகக் கொண்டிருந்தனர். அத்துடன், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் ஹோட்டல்களின் தரம், மக்களின் தன்னம்பிக்கை, 7.8சதவீத பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை நேரில் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.
 
பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளுக்கு மேலதிகமாக பொதுநலவாய வர்த்தகப் பேரவைக்கு 87 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமையையும் அமைச்சர் பீரிஸ் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தார்.
 
மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டு முதல் இதுவரை எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லையெனத் தெரிவித்த அமைச்சர், பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்ந்திருந்தால் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்ற நிலைமை ஏற்பட்டிருக்க வாய்ப்பு கிட்டியிருக்காது.  பயங்கரவாதம் இலங்கையில் மட்டுமன்றி முழு பிராந்தியத்திலிருந்தும் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
 
மோதல்களின் போது அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய 14,300 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூகத்தில் அவர்களும் கெளரவமாக வாழ்வதற்கு ஏற்றவகையில் வாழ்வாதாரத் தொழில்களும் ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அதற்குப் பின்னர் ஆயுதம் ஏந்தவும் இல்லை, அதற்காக முயற்சிக்க வுமில்லை.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாட்டில் ஏனைய மாகாணங்களைப் போன்றே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் நான்கு அரசாங்கங்களும், நான்கு ஜனாதிபதிகளும் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் யாராலும் செய்யப்படாத ஒன்றை எமது தற்போதைய அரசாங்கமே 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தி முடித்திருந்தது.
 
வெற்றி அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்காத போதிலும், வடக்கு மாகாண மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தியிருந்தது. மீள்குடியேற்றம், மீள் கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு ஒழுங்கு முறைகளுக்கு இதுவே அடிப்படையான அம்சம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
மோதல் காலத்தில் சரிவர இயங்காத பாடசாலைகள் தற்போது அரசாங்கத்தின் உதவியுடன் மீண்டும் சிறப்பாக செயற்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
 
புள்ளிவிபரவியல் திணைக்களம் வடக்கில் கணக்கெடுப்பொன்றை முன்னெடுத்து வருகின்றது. மோதல்களின் போது அழிவுற்ற காணி பதிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக காணி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்துக்கும் மேலாக இலங்கை சர்வதேச நாடுகளுடன் சிறப்பான உறவுகளைப் பேணி வருவதுடன், எச்சந்தர்ப்பத்திலும் நாடுகளுடனான நட்புறவிலிருந்து பின்வாங்கவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடமாகாண சபை தீர்மானத்திற்கு சர்வமதத் தலைவர்கள் கண்டனம் : ஜெனீவா மாநாட்டையிட்டு புலம்பெயர்ந்தோர் பின்னணியில் தீர்மானம்: நிறைவேற்றம் நாட்டைக் காக்க சகலரும் ஒன்றுபட வேண்டும்!

Thursday, January 30, 2014
இலங்கை::இலங்கை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மதத் தலைவர்கள் நேற்று வன்மையாகக் கண்டித்தனர். ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
தேசிய ஒற்றுமைக்கான சர்வமதத் தலைவர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் கம்புருகமுவே வஜிர தேரர், ஜெனீவா மாநா ட்டை கருத்திற் கொண்டே வட மாகாண சபை தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
புலம்பெயர்ந் தோரின் (டயஸ்போரா) தூண்டுதலில் நாட்டுக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலே வட மாகாண சபையை ஜனாதிபதி ஸ்தாபித்தார்.
 
வடக்கு தேர்தலை ஜனாதிபதி நடத்தியிருக்காவிட்டால் முதலமைச்ச ருக்கோ அமைச்சர்களுக்கோ இவ்வாறு செயற்பட முடிந்திருக்காது.  யுத்தத்தினால் இழந்தவற்றை மீள பெற முயல்வதே அன்றி அரசுக்கும் அரசியல் யாப்புக்கும் எதிராக செயற்படுவது முதலமைச்சரது பணி யல்ல.
 
நாட்டுக்கு எதிராக விசாரணை நடத்தக் கோருவது தேசத்துரோகமாகும். தேசத் துரோக குழுக்களே நாட்டில் இன ரீதியான பிரச்சினைகளைத் தூண்ட முயல்கின்றன. நாட்டைப் பாதுகாக்க சகலரும் ஒன்றுகூட வேண்டும். கொலைகாரன் ஒருவனை நாட்டுத் தலைவரைவிட மேலானவராக பொன்சேகா கூறியுள்ளது வெட்கக்கேடான விடயமாகும். ஜெனீவா மாநாட்டிற்கு புதிய தகவல் வழங்க டயஸ்போரா ஊடாக இவர் முயல்கிறார். இந்த முயற்சிகளை தோற்கடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். அமைப்பின் இணைத் தலைவரும் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா,
 
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எதுவும் கிடைக்காது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது அரசியல் இலாபம் கருதி இவ்வாறு நடப்பது அநாகரிகமான செயலாகும். ஆனால, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்க்கவே நடவடிக்கை எடுப்பதாகவும் அரசியல் நோக்கில் செயற்படப் பாவதில்லை எனவும் சி. வி. விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
 
பலஸ்தீன உயர் விருது பெற்ற மக்களின் அன்புக்குரிய ஜனாதிபதியை பிரபாகரனுடன் பொன்சேகா ஒப்பிட்டுப் பேசியது குறித்து வேதனை அடைகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது மக்களுக்காக அன்றி பதவிக்காகவே செயற்படுகிறது. பதவிக்காக மோதிக் கொள்ளும் இவர்கள் எப்படி மக்களை இணைத்துச் செயற்பட முடியும்.
 
ஜனாதிபதியின் கிறிஸ்தவ மதவிவகார இணைப்பாளர் சரத் ஹெட்டியாரச்சி,
இரசாயன ஆயுதங்கள் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நாம் அப்பிரதேசங்களுக்குச் சென்றோம். புலிகளிடம் இருந்து மீண்டுவந்த மக்களை படையினர் சிறப்பாக கவனித்தனர்.
 
அன்றிருந்த நிலை இன்று மாறி நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனை தாங்க முடியாத குழுக்களே நாட்டுக்கு எதிராக சதி செய்கின்றனர். எமது நாட்டில் அராஜக நிலை ஏற்படுத்த சர்வதேச சக்திகள் முயல்கின்றன.
வட மாகாண சபைத் தீர்மானம் நாட்டின் ஆள்புள ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இலங்கையர் என்ற வகையில் சகல மக்களும் ஒன்றுபட்டு நாட்டுக்கு எதிரான சதிகளை தோற்கடிக்க வேண்டும்.  ஜெனீவா மாநாடு நெருங்குகையில் ஏதும் பிரச்சினைகளை தூண்டி விட முயற்சி இடம்பெறும். மத சுதந்திரம் கிடையாது என காண்பிக்க சிலர் தயாராகின்றனர்.
 
சரத் பொன்சேகாவின் கருத்தை கண்டிக்கிறோம்.
ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகார இணைப்பாளரும் அமைப்பின் இணை தலைவருமான ஹசன் மெளலானா சகல இன, மத, மக்களும் சமாதானத்தின் பலனை அனுபவிக்கின்றனர். 30 வருட யுத்தம் நடைபெறுகையில் புலிகளால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது மனித உரிமை குறித்து பேசும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் எங்கு இருந்தன.
 
தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டு தொழுது கொண்டிருந்த போது முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது ஏன் இவர்களால் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை. பிரபாவினாலே மனித உரிமை மீறப்பட்டது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வர முயல்வோர் இது குறித்து அமைதி காக்கின்றனர்.
 
சர்வதேச சதிகளில் பொன்சேகா சிக்கியுள்ளார்.
பிரபாகரன் யுத்தம் செய்யும் காலத்தில் விக்னேஸ்வரன் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. பிரபாகரன் -ஸிள்திருந்தால் வட மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்காது. முதலமைச்சராக வரவும் முடிந்திருக்காது. ஜனாதிபதியே வட மாகாண சபை தேர்தலை நடத்தினார் நாட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோர் தேசத்துரோகிகளாகும்.
 
தர்மாஷ்மி மன்ற தலைவர் கலகம தருமவங்சி தேரர்
யுத்தத்தை முடிவுகட்ட பங்களித்த பொன்சேகா இலங்கைக்கு எதிரான சதிகார கும்பலின் பிரதிநிதியாக மாறியுள்ளார். வெட்கமின்றி மாபெரும் குற்றவாளியான பிரபாகரனை ஜனாதிபதியை விட மேலானவராக கூறினார். ஓய்வுபெற இருக்கையில் தன்னை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதியை பொன்சேகா மறந்துவிட்டார்.
 
இதற்கு முன் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்தனர். நிலைநாட்டப்பட்ட சமாதானத்தை குழப்புவதற்கு பொன்சேகா, சந்திரகா போன்றவர்கள் முயல்கின்றனர். யுத்த காலத்தில் பயங்கரவாதிகளை போசித்த சக்திகள் மீண்டும் தலை தூக்கியுள்ளன.  உள்நாட்டு பிரதிநிதிகள் இதற்கு தலைமை வசிப்பது நாட்டிற்கு ஏற்பட்ட பெரும் துரதிஷ்டமாகும் என்றார்.

ஜேர்மன் வாழ் தமிழர்- தாய்மொழியைக் கற்பதில் மிகுந்த ஆர்வம்; நயந்து பாராட்டுகிறார் தூதுவர்!

Perera2
Perera1
Perera4
Perera3
Perera5
Perera6
Thursday, January 30, 2014
இலங்கை::ஜேர்மனியில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தமிழ் மொழியை கற்கின்றமைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்று ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் உபாலி சரத் கொங்கஹகே மனம் திறந்து பாராட்டி உள்ளார்.
2002 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விழாவில் சிறுவர் இலக்கியத்துக்கான விருது{ ஆங்கில மொழி மூலம் } பேர்லினில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எழுத்தாளர் நெவில் பெரேரா எழுதிய Kitty and the Bell Necklace என்கிற நூலுக்கு கிடைக்கப் பெற்று உள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த வாரம் விருது வழங்கல் விழா இடம்பெற்றது. சுகவீனம் காரணமாக நெவில் பெரேராவால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் இவருக்கான விருதை கையளிக்கின்ற பொறுப்பு தூதரகத்திடம் கையளிக்கப்பட்டது. தூதரகமும், இலங்கைச் சமூகமும் இணைந்து விருது வழங்குகின்ற விழாவை நடத்தின.
இவ்விழாவில் நெவில் பெரேராவின் எழுத்தாற்றலையும், சிறுவர் நூலையும் நயந்து தூதுவர் பேசினார்.
அப்போதே தமிழர்களின் தாய்மொழிப் பற்றை வெகுவாக தூதுவர் நயந்தார்.
இப்பேச்சில் சம்பந்தப்பட்ட பகுதி வருமாறு:-
இலங்கைச் சமூகத்தினர் தாய்மொழியை கற்கின்றமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிங்களவர்கள் சிங்களத்தையும், தமிழர்கள் தமிழையும் முக்கியப்படுத்தி கற்க வேண்டும்.
ஜேர்மனில் உள்ள தமிழர்கள் தமிழ் மொழியை கற்கின்றமைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்மையை நான் அவதானித்து உள்ளேன். இது மனம் திறந்து பாராட்டப்பட வேண்டிய விடயம் ஆகும். இவர்களின் முயற்சிகளுக்கு தூதரகமும் உதவி செய்து வருகின்றது. கல்வி அமைச்சில் இருந்து தேவையான புத்தகங்களை பெற்று, இவர்களுக்கு விநியோகிக்கின்றது. ”

Wednesday, January 29, 2014

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களையும், முறியடிக்கவேண்டும்: விமல் வீரவன்ச!

Wednesday, January 29, 2014
இலங்கை::வட மாகாண சபையில்  நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களையும், முறியடிக்கக் கூடிய நடவடிக்கைகளை, அவசரமாக எடுத்தல் வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாண சபை இலங்கையின் இறைமையை மீறி தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைக் கூட்டத் தொடருக்கும் சர்வதேச நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கே வட மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த தீர்மானங்களை அவசரமாக நிறைவேற்றியுள்ளனர் என அமைச்சர் விமல் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தினை சர்வதேச பரிசோதனைக்கு உட்படுத்துதல், புள்ளிவிபர திணைக்களத்தினால் வடக்கில் திரப்பட்ட விபரங்கள் பிழை எனவும் அதற்காக வடக்கு மாகாண சபை ஊடாக மாவட்டம் தோறும் புள்ளி விபரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பித்;தல் ஆகிய தீர்மானங்கள் வட மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் தீர்மானங்கள் பற்றி அரசு கூடிய அவதானம் செலுத்தல் வேண்டும். இதற்காகத்தான் வட மாகாண சபை தேர்தலை நடத்த முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் இல்லாமல் செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி முன்னரே தெரிவித்தது.

இதனை அமைச்சரவையிலும் கூட தெரிவித்தோம். எமது கோரிக்கையினை ஜனாதிபதி அமுல்படுத்த நினைத்த போது எமது அரசிலும் ஒரு சில அமைச்சர்கள் எதிர்த்தார்கள். அத்துடன் நாடாளுமன்றத்திலும மூன்றிலிரண்டு பெருபான்மை வாக்குப்பலத்துடன் இந்த அதிகாரங்களை குறைக்க வேண்டும். அரசில் உள்ள சில சிறிய கட்சிகளான இடதுசாரி போக்கையுடைய கட்சிகள் தமது எதிர்ப்புக்;களை வெளிப்படுத்தினார்கள்.

இந்த அமைச்சர்கள் தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவும் பாதுகாவலாளராகவும் உள்ளனர். இலங்கை மத்திய அரசின் அதிகாரத்திலுள்ள புள்ளிவிபர திணைக்களத்தின் அதிகாரத்தை மீறி வேறாக புள்ளிவிபரங்கள் சேகரிப்பதற்கு ஒரு போதும் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரமில்லை.

அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவும் புள்ளவிபர திணைக்களத்திற்கு எதிராக குற்றஞ்சாட்டினார். அக்கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இயங்குகின்றது. மக்கள் விடுதலை முன்னணி அரசின் வெறுப்பு காரணமாக செயற்படும்போது அது முழு இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்கா மற்றும்  இந்தியா போன்ற நாடுகள் வடக்கில் தேர்தலை உடனடியாக நடாத்தும் படி அரசிற்கு அழுத்தம் கொடுத்;தன. வட மாகாண சபையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி இலங்கைக்கு எதிரான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றது.

இதனால் இலங்கைக்கு நன்மை கிடைக்கவில்லை. மேலும் இன்;னல்களுக்கு உட்படுத்தி சர்வதேச மட்டத்தில் இந்த யோசனைகளை கொண்டு செல்வதற்கே நாம் வழிவகுத்துக் கொடுத்துள்ளோம். அத்துடன் அமெரிக்கா வடக்கில் உள்ள சில அரசார்பற்ற நிறுவனங்கள்  ஊடாக நிதிகளை வழங்கி சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.

இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தில் கொழும்பில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தனர்.   தற்பொழுது மேல் மாகாணத்தில் நான்கு மடங்காக தமிழ் மக்கள் பெருகியுள்ளனர். ஆனால் வடக்கில் விரட்டப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளகுடியேற்றுவதற்கு தமிழத் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கின்றனர்' என விமல் வீர வன்ச தெரிவித்துள்ளார்.