Friday, January 31, 2014

மீனவர் பிரச்சினை தீர தீவிர நடவடிக்கை: கவர்னர் ரோசைய்யா உரை!

Friday, January 31, 2014
சென்னை::இலங்கை தமிழர் - மீனவர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்,  முதல் அமைச்சரின் மதிநுட்ப நடவடிக்கையால், நீண்ட காலமாக இலங்கையால் கைது செய்யப்பட்டிருந்த 295 மீனவர்கள் ? 45 படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர என்றும் கவர்னர் ரோசைய்யா சட்டசபையில் தனது உரையில் கூறியுள்ளார்.

கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் இன வெறிப் போருக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதாபிமானற்ற முறையில் இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்தப்படுவதும், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இனப்படு கொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம் மாநிலத்தில் உணர்ச்சிகரமான பிரச்சினைகளாக உள்ளன.
சிறுபான்மைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதாபி மானமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யவும், இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமையையும், அடிப்படை உரிமைகளையும் பெற்றுத்தரவும், நான்கு முறை இம்மாமன்றம் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

முதல்ஜஅமைச்சர் தமிழ் மக்களின் கொந்தளிப்பான உணர்வு நிலையை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்திய பின்னரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு, இந்த அரசு உறுதியான ஆதரவைத் தொடர்ந்து அளிக்கும்.
தமிழ்நாட்டிலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் அவர்கள் பாரம் பரியமாக மீன் பிடிக்கும் பாக் நீரிணைப் பகுதியில் எந்தக்காரணமுமின்றி இலங்கைக் கடற்படையால் கொலை வெறித் தாக்குதல்களுக்கு தொடர்ந்து உட்படுத்தப்படுவது தமிழ் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மீனவர் சமுதாயத் தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்ஜஅமைச்சர், பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி, உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினைகளுக்கு தூதரக அளவில் முயற்சி மேற்கொண்டு ஒரு உறுதியான முடிவினை எட்டி இந்திய மீனவர்களை மத்திய அரசு காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலவியல் அடிப்படையிலும், வரலாற்று ரீதியாகவும், கலாச்சாரத் தொடர்பின் அடிப்படையிலும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்த கச்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும் என முதல்ஜஅமைச்சர் உறுதியோடு அயராது போராடி வருகிறார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் மனப்பான்மையோடு, தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்திட முதல்ஜஅமைச்சர் அனுமதி அளித்தார். இந்த மதிநுட்பமிக்க முதல்ஜஅமைச்சரின் நடவடிக்கையால், நீண்ட காலமாக இலங்கையால் கைது செய்யப்பட்டிருந்த 295 மீனவர்களும் அவர்களது 45 படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment