Friday, May 31, 2019

மகிந்தராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவோம்!

மகிந்தராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.நேற்று மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கூறுகையில்
 மகிந்த ராஜபக்ச தலைமையிலான  எமது கட்சியின் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 326 கிராமசேவையாளர் பிரிவிலும் விரிவுபடுத்தியுள்ளோம்.எங்களது கடந்த ஆட்சிக்காலத்தில் தான் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சரை கொண்டுவந்தோம்.58 ஆயிரம்

ஆளுநர் ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் பயன்படுத்தப்படுகிறதென நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு

Thursday, May 30, 2019

இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 20 இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அந்நாட்டு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்டு, கிறிஸ்மஸ்தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ எஸ் ஆயுததாரிகளின் தாக்குதலை அடுத்து இலங்கையில் உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளனர்: மஹிந்தானந்த!

ஐ எஸ் ஆயுததாரிகளின் தற்கொலைத் தாக்குதலை அடுத்து இலங்கையில்   உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாாளுமன்ற உறுப்பினர்
மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த நான்கு வருடங்களாக தேசிய பாதுகாப்பை அச்சுறு த்தலுக்கு உள்ளாகியவர்கள் இன்று தேசப்பற்றாளர்களாக தம்மை அடையாளப்படுத்த முனைவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
 உடனடி நூடில்ஸ் மற்றும் உடனடி பப்படம் தொடர்பில் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். அண்மைக்காலமாக உடனடி தேசப்பற்றாளர்கள் சிலர்  இலங்கையில் உருவாகியுள்ளனர். உங்களுக்கு நினைவிருக்கலாம் கடந்த நான்கரை வருடங்களில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தாதஇ புலனாய்வு சேவைகளை அழித்தஇ அதற்காக கை உயர்த்தியஇ

இரண்டாவது முறை பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்: நாளை புதிய அமைச்சரவை கூட்டம்!

ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடக்கும் விழாவில், தொடர்ந்து 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜ தனித்தே 303 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையை எட்டியது. இருப்பினும், தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டத்தில், இதன் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில், 2வது முறையாக

அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை: வாசுதேவ நாணயக்கார!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் அறிவித்துள்ளனர்.ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து நாடு எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நீக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் செயற்படுவதில்லை என சிங்கள பௌத்த தலைமைப் பீடமான அஸ்கிரிய பீடம் குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே  நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

Wednesday, May 29, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களை மறுசீரமைக்க அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கிறது

எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக நியமனம்!

எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
 
புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.அவர்களின் பெயர் விபரங்கள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை எழுத்து மூலம் அறிவிக்க புதிய வசதி!

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரும் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எவருக்கும் தமது கருத்து மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் அனுப்புவதற்கான அறிவித்தல் பத்திரிகைகள் மூலம் விரைவில் வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
 
14 நாட்களுக்குள் இவ்வாறான தகவல்களை அனுப்ப முடியும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மக்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறி?: விமல் வீரவன்ச!

இலங்கையில் மக்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம்சாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடனடியாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களுக்கான கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு மகாநாயக்கத் தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களான மல்வது  அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை இன்றைய தினம் நேரில் சந்தித்து மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின்

Tuesday, May 28, 2019

இலங்கையில் 41 அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள்: துருக்கியில் இருந்து 40 மில்லியன் டொலர் இலங்கைக்கு – ஞானசார தேரர் கடும் எச்சரிக்கை!

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுவோரை – செயற்படுவோரை முடக்கும் வேலைகளுக்காக துருக்கியில் இருந்து 40 மில்லியன் டொலர் இலங்கைக்கு வருவதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
ஞானசார தேரர் மேலும் கூறியதாவது,
“கடந்த ஆட்சி தொடர்ந்து கோட்டாபய பாதுகாப்பு செயலராக இருந்திருந்தால் அப்போது இந்த பிரச்சினைக்கு முடிவை காட்டியிருப்பார். இப்போதைய கோட்டபாய எப்படியோ என்று தெரியாது. ஆனால் அன்று நாங்கள் சொன்னதை அவர் கேட்டார். நாட்டுக்கு ஒரு ஆபத்து இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் புதிய பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்!

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்து வரப்பட்டார். பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த ரொசாந்த் பெர்னாண்டோவுக்கு

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள்..
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தினார்.
தாங்கள் முதலில் கிரிஸ்தவ அடிப்படை வாதத்திற்கு எதிராகவே நாம் முதலில் பேசிவந்தோம் அப்போது இந்த நாட்டிற்கு மீது அன்பு செலுத்தும் முஸ்லிம்கள் எம்மை சந்தித்து பல்வேறு தகவல்களை வழங்கினார்கள்.அவர்கள் இதனை வெளிப்படுத்தினால் அவர்களின்

போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்!

போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அச் செயற்திட்டத்தினை  விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதி வரையான காலத்தை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

Monday, May 27, 2019

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!

வடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியர் தீபிகா உடுகமவின் கையொழுத்துடன் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் மூலம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரிஷாத்தை தூக்கிலிட வேண்டும்! மனுஷ நாணயக்கார`!

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்வது மாத்திரமல்லாது தூக்கிலிட வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,ரிஷாத் பதியுதீன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நிரூபித்துக்கொள்ள பொலிஸார் விசாரணைகளை

அடிப்படைவாத பயங்கரவாத குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம்!

அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் கடல் வழியாக இவர்கள் தப்பியோட முடியாது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடற்படை மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளை மணலை சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நரேந்திர மோடிக்கு நிகரான தகுதியான தலைவர்கள் இல்லையா??? காரணம் ??

நரேந்திர தாமோதர்தாசு மோதி, குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்.தற்போது இந்தியாவின் சிறந்த தலைவராக மக்களால்  தேர்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
 
தொடர்ந்து நான்கு முறை குஜராத்தின் முதல்வரான பெருமைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார்.

 பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார்.

3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாரிய தேடுதல்!

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
 
பொலிஸாருடன், 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
 
ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ பதில்

இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுபலசேனா முழு மூச்சுடன் செயற்படும்! ஞானசார தேரர்!

இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுபலசேனா முழு மூச்சுடன் செயற்படும்! ஞானசார தேரர்!

அத்துடன் 30 ஆயிரம் தமிழர்களை இஸ்லாமிய மதத்திற்கு அடிப்படைவாதிகள் மதம் மாற்றியுள்ளனர். சுமார் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற 80 ஆயிரம் சிங்களப் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியுள்ளனர்.
முழுமையாக பார்வை இட இங்கே கிளிக் செய்யவும் Please click here.. lankatime.over-blog.com
கடந்த 5 வருட காலத்திற்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள யுவதிகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர். குருணாகலை நகர எல்லைக்குள் மாத்திரம் சுமார் 1,000 பௌத்த பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்திற்கும் எழுத்துமூல ஆதாரங்கள் எம்மிடமுள்ளது.
 

Sunday, May 26, 2019

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களில் அபார வெற்றி: 30-ம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் நரேந்திர மோடி!

டெல்லி: வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை  பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்  டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதிவிக்கு நரேந்திர மோடியை முதலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்மொழிந்தார்.

கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு எதிரான பெண்களது முறைப்பாடுகள் தொடர்பில் நாளை சோதனை!

சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்தமைத் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின், வைத்தியர் செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் இருவர் முறைபாடு வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரியிடம் இன்று(26) முறைப்பாடு செய்துள்ளனர்.வாரியபொல, குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 29 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
 
திருமணமாகி குறுகிய கால இடைவெளியில் தாம் கருவுற்று முதலாவது குழந்தையை குருநாகல்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதிக்கும் அழைப்பு!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு, தெரிவுக்குழு முன்னிலையில் முதலாவது சாட்சியாளராக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்றத் தகவலகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், குறித்த தினத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.

welcome back 2020..president and prime minister of sri lanka


பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ராஜ்யசபாவில் பெரும்பான்மை!

லோக்சபாவில் பெரும்பான்மை பெற்றுள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ராஜ்யசபாவில், அடுத்த ஆண்டு இறுதியில், பெரும்பான்மை சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது.

 கடந்த லோக்சபா தேர்தலிலும், தே.ஜ., கூட்டணி, 336 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது. ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், மத்திய அரசால், பல மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.மேலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மசோதா உட்பட பல மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன. கிடைக்க வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா பல நாட்கள் முடங்கியது. நிலம் கையப்படுத்தும் மசோதா, முத்தலாக் தடை  ஆனால்,ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், அரசால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.லோக்சபா, எம்.பி.,க்கள், மக்களால் நேரிடையாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால்,

தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம!

அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.அதன் முதலாவது கூட்டம் நேற்று முன் தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.மகாசங்கத்தினர் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சிரேஷ்ட அமைச்சர்கள் ஆளுநர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட

Saturday, May 25, 2019

வலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்!

வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறுமெனவும் காணி விடுவிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனவும் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.பலாலியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு இன்று சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்துரைத்த அவர், ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து,  வலிகாமம் வடக்கில் 25 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருந்த நிலையில், அது தற்போது தள்ளி போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் நான்கு பேர் கைது!

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்யும் போது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்..

Friday, May 24, 2019

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜை ஒருவர் மியன்மாரில் கைது!

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார்.தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த நபர் சுமார் 1 வருடம் 2
 
மாதங்களுக்கும் மேலாக மியன்மாரில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் மலேசிய பொலிஸாரினால் அனுப்பப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து, யாங்கோன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த புதன் கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பம்!

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்  தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இலங்கை-அமெரிக்க இடையிலான ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்குமான உறுதியான பாதுகாப்பு நடவடிக்கை; அலய்னா ரெப்லிட்ஸ்!

இலங்கை-அமெரிக்க இடையிலான ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்குமான உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக  இலங்கைக்கான
அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று கண்டியில், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,இரண்டு நாடுகளுக்கும் இடையிலான, ஒத்துழைப்பின்

மக்களவை தேர்தலில் பாஜ மகத்தான வெற்றி நரேந்திர மோடி மீண்டும் பிரதமர்: 301 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை!

மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பாஜ மட்டுமே 301 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம், 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் ஏமாற்றமடைந்தன.நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தின் வேலூர் தவிர 542 தொகுதிகளில் நடந்த

தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடத்தில் வெற்றி: பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

தமிழகம், புதுவை என 39 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதியில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி மற்றும் மே 19ம் தேதி நடந்து முடிந்தது.
அதன்படி, 38 மக்களவை தொகுதியில் மட்டும் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 64 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் களத்தில் இருந்தனர்.அதேபோன்று 22

Thursday, May 23, 2019

348 இடங்களில் பாஜக முன்னிலை... 90 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை... மாநில வாரியாக முன்னிலை விவரம் உள்ளே...

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 348 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 105

மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்


17-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் எழு கட்டங்களாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் முறையே ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மே 23  வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

                                                               tamil.thehindu.com
                                 மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்

நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்!

பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னை:..இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட மக்களவை தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20-ஆம்தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தேசிய மற்றும்...

மட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு! Photos!

மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் ஆலயமும் இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்திய உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை
உறுப்பினர்கள்,பௌத்த,இந்து,கிறிஸ்தவ மதகுருமார்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது உயிர்நீர்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடங்கள் மௌன பிரார்த்தனைகள் நடைபெற்றதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்று இறுதியான உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக உயிர்நீர்த்தவர்களின் படங்களுக்கு முன்பாக ஈகச்சுடர்

முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றால் பயங்கரவாதச் செயல்களை செய்த பிரபாகரன் யார் ?:தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்!

மாமனிதர் அஷ்ரஃப்பிற்கு நிகர் அவரே தவிர  வேறு யாருமில்லை அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்.எனவே அமைச்சர் றிசாட் பதவி விலக வேண்டும். சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என  தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
இணையத்தளம் ஒன்றின் ஏற்பாட்டில்  சமகாலம் தொடர்பில் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களுடன் நமது ஊடகங்கள்’ எனும் கருத்துரையுடன்  ஊடகவியலாளர் சந்திப்பு இப்தார் நிகழ்வும்

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வெடி பொருட்கள் வேட்டையில் பொலிஸ் மோப்பநாய் பிரவ்னி! Photos

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வெடி பொருட்கள் வேட்டையில் பொலிஸ் மோப்பநாய் பிரவ்னி....கடந்த மாதம் 21 ம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், தலைநகரம் உட்பட பல பிரதேசங்களில் வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குறிய பொருட்களை தேடி கைது செய்யும் நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் இலக்கம் 1292 ஐக் கொண்ட கொகர் ஸ்பெனியல் எனும் வர்க்கத்தை சேர்ந்த வெடிபொருள் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்ட பிரவ்னி என்ற 02 வயதான பெண் மோப்பநாய் சிறப்பாக செயற்பட்டு இடம்பெற இருந்த பல அசம்பாவித சம்பவங்களை தடுத்து நிறுத்தியது அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 22, 2019

அவசரகால தடைச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால தடைச் சட்டத்தினை நீடிக்க வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் சரத்தில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பாகத்தின் விதிமுறைகள் நாடு பூராகவும் செயற்படுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரச இணையத்தளங்கள் மீதான புலிகளின் சைபர் தாக்குதலையடுத்து உடனடியாக அமுலுக்கு வந்த விசேட வேலைத் திட்டம்!

இலங்கை அரச இணையத்தளங்கள் மற்றும் சில தூதரகங்கள் மீது சைபர் தாக்குதல் ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இணையத்தளங்கள் இரண்டு நாட்கள் முடங்கின.இந்த தாக்குதல்களை புலிகளின் தமிழீழ சைபர் படை அணி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைஇலங்கை  அரசினை அச்சம் கொள்ளவைத்துள்ளது.

அத்துடன் இலங்கைக்கான குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட, நாட்டின் 13 இணையத்தளங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமை

ஜனாதிபதியும் பிரதமரும் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்ற முயலும் முயற்சி: விஜேதாச குற்றச்சாட்டு!

பயங்கரவாதத்துடன் தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக மக்கள் அணித்திரள்வதை எவராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மஹபொல மாணவ நிதியம் மற்றும் கல்வியமைச்சில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொட இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அவநம்பிக்கை பிரேரணைகளை முன்வைத்து காலத்தை வீண் விரயம் செய்ய கூடாது என குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதத்துடன் நேரடி

அமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் இராணுவத்திற்கு வழங்கிவைப்பு! Photos

தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டள்ள பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க 20 ஆயுதங்களை கண்டறியும் கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இக் கருவிகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை

கைதான ஜமால்தீனுக்கு நாடாளுமன்றில் தொழில் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் அமைச்சர் தொடர்பில் விசாரணை!

குருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆயுத பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரை மூன்று மாதாங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கண்டி – அலவத்துகொடையைச் சேர்ந்த 42 வயதான மொஹம்மட் நெளஷாட் ஜமால்தீன் என்பவரையே இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து

நாங்கள் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில்லை: பிரிகேடியர் சாந்த ஹேரத்! Photos

யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர். எந்த வேறுபாடுகளின்றி நாங்கள் எல்லோரும் மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார்
 
கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.

ரிஷாத்தை பாதுகாக்கின்ற அரசாங்கமே அடிபிடிவாத கொள்கையையும் பாதுகாகுகின்றது: நாடாளுமன்றத்தில் விமல் வீரவன்ச! video

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் எச்சரித்தார்..நாடாளுமன்றத்தில்  நேற்று செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்தோட்டங்கள் சட்டத்தின் கீழான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Tuesday, May 21, 2019

கண்ணீரில் நனைந்தது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.இந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம் கடக்கின்றது.21ஆம் திகதி காலை 8.45 மணியளவில் முதல் தாக்குதல் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பதிவானது.தொடர்ந்து, மட்டக்களப்பு – சியோன் தேவாலயம், நீர்கொழும்பு – கட்டான

Lankatime:ලංකා වේලාව:லங்கா ரைம்

மைத்திரிபால சிறிசேன, மீண்டுமொரு தடவை ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்கமாட்டார்: மஹிந்த ராஜபக்ச! Photos

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைப் போன்று இடம்பெற்றுள்ளது.அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.
 
இலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிராகவும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியும் மக்களுக்காக தாமே இன்று இறங்கி சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச