Thursday, May 30, 2019

ஐ எஸ் ஆயுததாரிகளின் தாக்குதலை அடுத்து இலங்கையில் உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளனர்: மஹிந்தானந்த!

ஐ எஸ் ஆயுததாரிகளின் தற்கொலைத் தாக்குதலை அடுத்து இலங்கையில்   உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாாளுமன்ற உறுப்பினர்
மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த நான்கு வருடங்களாக தேசிய பாதுகாப்பை அச்சுறு த்தலுக்கு உள்ளாகியவர்கள் இன்று தேசப்பற்றாளர்களாக தம்மை அடையாளப்படுத்த முனைவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
 உடனடி நூடில்ஸ் மற்றும் உடனடி பப்படம் தொடர்பில் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். அண்மைக்காலமாக உடனடி தேசப்பற்றாளர்கள் சிலர்  இலங்கையில் உருவாகியுள்ளனர். உங்களுக்கு நினைவிருக்கலாம் கடந்த நான்கரை வருடங்களில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தாதஇ புலனாய்வு சேவைகளை அழித்தஇ அதற்காக கை உயர்த்தியஇ

அதற்காக சட்ட திட்டங்களை உருவாக்கி அந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி சிலர் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் உடனடி தேசப்பற்றாளர்களாக மாறியுள்ளதை நாங்கள் காண்கின்றோம். இவர்கள் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் சிறு குழந்தைகள் போல நடந்துக்கொள்கின்றனர்.
 
அதனால் தேசப்பற்றார்கள் மற்றும் தேசத்துரோகிகளை துல்லியமாக இனங்காணுமாறு பொதுமக்களுக்கு கூறுகின்றோம். இல்லாவிட்டால் நாம் பாரதூரமான துன்பத்தில் விழுந்துவிடலாம். எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி 2 ஆவது காட்டிக்கொடுப்புக்காக இவர்கள் தயாராகி வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி இந்த தேசப்பற்றாளர்கள் எங்கு இருந்தார்கள் என்று சிந்தித்து பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான காட்போட் அரசியல்வாதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்டுக்கொள்கின்றோம். இவர்கள் தேசியவாதம் பேசி சுரங்கமொன்றை அமைக்கின்றனர். இவர்கள் தேசியவாதம் மற்றும் பௌத்தத்தை காட்டி எங்கு செல்கின்றார்கள் என்பதை நீங்களே பாருங்கள்'.
 
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 1 இலட்சத்து 83 ஆயிரம் வாக்குகளில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றார். அன்று 1 இலட்சத்து 83 ஆயிரம் பேர் மேலதிகமாக வாக்களிக்காவிட்டால் தற்போது பயங்கரவாத புலிகளின் தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்கும். பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாத்து ஏனைய மதத்தவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பினை பெற்றுக்கொடுத்தது யார்? எமது நாட்டில் தேசிய கீதம் தொடர்பில் முரண்பாடு காணப்பட்டது. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியான பின்னர் தேசிய கீதத்தை உரத்து இசைக்க ஆரம்பித்த பின்னர்தான் அது எமக்கு தெரிந்தது. காட்போட் அரசியல்வாதிகள் 201 5ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியின் இரண்டாவது பாகத்தை தற்போது அரங்கேற்றவே முயற்சித்து வருகின்றனர்.
 
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் நாடாளுமன்றில் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கான பணத்தை வாரியிறைக்கின்றனர். கடந்த வாரம் இது தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்சியில் பேசிய தொகுப்பாளருக்கு வீடொன்றை நிர்மாணிக்க பணம் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் நேரில் சென்று பேரம் பேசியிருக்கின்றார்.நம்பிக்கையில்லா பிரேரணையை சரியானதாக்க கோடிக்கணக்கில் இன்று பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
 
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சர்களின் வீடுகளுக்கு சென்று அவருக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுப்பதை நாங்கள் பார்க்கின்றோம். தற்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மேலதிகமாக பல குற்றச்சாட்டுகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. குருநாகல் வைத்தியர் தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாளுக்கு நாள் குற்றசாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கம் பாரிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அரசியல் கட்சிகளால் நேரடியாக கூற முடியாதையிட்டு நாங்கள் வருத்தமடைகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment