Thursday, May 30, 2019

இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 20 இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அந்நாட்டு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்டு, கிறிஸ்மஸ்தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாத முற்பகுதியில் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக கருதப்படும் குறித்த படகு அவுஸ்திரேலிய கடற்படையினரால் கடந்தவாரம் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்ட அனைவருக்கும், அண்மையில் மீளத்திறக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த இலங்கையரது புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, சிறப்பு விமானம் மூலம் நேற்றைய தினம் அவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களின் பின்னர் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதலாவது அகதிகள் படகு இதுவென்று குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment