Wednesday, May 22, 2019

ஜனாதிபதியும் பிரதமரும் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்ற முயலும் முயற்சி: விஜேதாச குற்றச்சாட்டு!

பயங்கரவாதத்துடன் தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக மக்கள் அணித்திரள்வதை எவராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மஹபொல மாணவ நிதியம் மற்றும் கல்வியமைச்சில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொட இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அவநம்பிக்கை பிரேரணைகளை முன்வைத்து காலத்தை வீண் விரயம் செய்ய கூடாது என குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதத்துடன் நேரடி

தொடர்பிருப்பதாக தேவைக்கு மேலாக சாட்சி உள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை ஒரு கையெழுத்துடன் பதவி விலக்க முடியும்.ஜனாதிபதியும் பிரதமரும் அதனை மேற்கொள்ளாது நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்ற முயலும் முயற்சிகளை முழு இலங்கை வாழ் மக்களும் கண்டிக்க வேண்டும்.குறித்த சகல தரப்பினருக்கும் எதிராக எதிர்காலத்தில் நாட்டு மக்கள் ஒன்று திரள்வதை எவராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

No comments:

Post a Comment