Sunday, May 26, 2019

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதிக்கும் அழைப்பு!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு, தெரிவுக்குழு முன்னிலையில் முதலாவது சாட்சியாளராக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்றத் தகவலகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், குறித்த தினத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.

இலங்ககோன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் 29 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கடந்த 23 ஆம் திகதி முதலாவது தடவையாக கூடியது.இந்த நிலையில், அதன் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment