Monday, May 27, 2019

இந்தியாவில் நரேந்திர மோடிக்கு நிகரான தகுதியான தலைவர்கள் இல்லையா??? காரணம் ??

நரேந்திர தாமோதர்தாசு மோதி, குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்.தற்போது இந்தியாவின் சிறந்த தலைவராக மக்களால்  தேர்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
 
தொடர்ந்து நான்கு முறை குஜராத்தின் முதல்வரான பெருமைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார்.

 பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார்.
குஜராத்தின் பொற்காலம்:
 இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார்.
இவர் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக முன்னேற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

  "நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது" எனக் கூறியது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைத்த விருதுகளும், மரியாதைகளும்
இவருடைய சாதனையைப் பாராட்டி, 2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

“ மேலும், குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி  ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.

2009 – ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2012 – ‘டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.
நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா கூறியதை மறுக்க முடியாது.
இந்தியாவின் அதிரடி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பற்றிய நீங்கள் அறியாத  உண்மைகள்
 பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  சிறுவயதில் ஹிமாச்சலம் சென்று இரண்டு  வருடம் அங்கிருந்து பல போதனைகள் கற்று வந்தவர்.
அவர் குஜராத்தி மொழியில் நன்கு கவிதை எழுதும் திறன் படைத்தவர். மேலும் அவர் பல புத்தகங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தான் எடுத்த புகைப்படங்களை கொண்டு கண்காட்சி ஒன்றும் நடத்தி உள்ளார். இவர் சுவாமி விவேகானந்தரின் தீவிர ரசிகர் ஆவார்.

1965 ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த போது இந்திய ராணுவ முகாம்களில் தங்கி ராணுவ வீரர்களுக்கு தன்னார்வ   ஊழியராக  பணியாற்றி உள்ளார்.

 குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது நேரில் சென்று நிவாரண பணிகளை மேற் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மது , மாது , சூது புகை பிடிப்பது போன்ற எந்த கெட்டப்  பழக்கமும் இல்லை என்பது மறைக்க முடியாத உண்மை ஆகும்.
இந்தியாவின் அதிரடி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சைவப் பிரியர் என்பது ஆச்சரியமான உண்மை.

பிரம்மச்சாரி என்று பலரால் கூறப்படும் இவர் பெற்றோர்களின் விருப்பத்தால் தன் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டவர். பின்னர் அரசியலின் மீதும் மக்களின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் தனிமையை விரும்பிச்சென்றார்.

ஆடைகளின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் உடுத்தும் ஆடைகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் செய்யப்படும் ஆடைகளே.
இந்தியாவின் பிரதமராக 2014 - 2019
அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கான மொத்த செலவு 37 கோடிகள் ஆகும். இதில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இதில் அதிக செலவாக ஆஸ்திரேலியா சென்றதற்கு 8.91 கோடிகளும், குறைந்த செலவாக பூடான் சென்று வந்ததற்காக 41.33 லட்சங்களும் செலவிடப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் உள்ள  இந்திய மக்கள்  பாதுகாப்பாக இருப்பதாக கருதுகின்றனர். இந்தியா தற்போது பல நாடுகளுடன் நட்பு நாடாக மாறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு  உலக நாடுகளின் ஆதரவு பெருகியது. இதனால் தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடிந்தது.
இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக  மாற்றும்  முயற்சியில் ஈடுபட்டார் இதற்கு பெரும் ஆதரவும் , அதற்கு நிகரான எதிர்ப்பும் இன்று வரை நிலவி வருகிறது.

 ரூபாய் நோட்டுக்களை மாற்றியதன் மூலம்  இவரது ஆட்சியில் கருப்பு பணமும் ஊழலும்  குறைந்ததாக நம்பப்படுகிறது. மக்களின் கல்வித் தரமும் வாழ்கைத் தரமும் உயர்ந்துள்ளது.
GST(Goods Service Tax) என்ற வரிச் சட்டத்தை  இயற்றியதன் மூலம் ஒழுங்காக வரி கட்டாமல் அதை கருப்பு பணமாக மாற்றும் பல பணக்கார முதலைகளையும் ஒழுங்காக வரி கட்ட வைத்தார். நடுத்தர மக்களுக்கு இச்சட்டம் சற்று சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது மறுக்க முடியாதது.
அதிரடி நாயகன் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அடுத்த அதிரடியை நோக்கி இந்தியா.       காத்திருப்போம்!

No comments:

Post a Comment