Tuesday, September 30, 2014

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எதிரொலி: பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

Tuesday, September 30, 2014
சென்னை::அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தண்டனையை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மாநிலம் முழுவது சோகத்திற்கு உள்ளாகினர். அதில் ஒரு சில தொண்டர்கள் துக்கம் தாங்காமல் மாரடைப்பாலும், அதிர்ச்சியடைந்தும், தீக்குளித்தும், தூக்குமாட்டியும் இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

சென்னை வளசரவாக்கம், ஏ.பி.என். பிரதாப் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் வெங்கடேசன், தீக்குளித்து ஆபத்தான நிலையில் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

சென்னை திருவொற்றியூர் பெரிய மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த யோவான் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகளும், 2-ம் ஆண்டு பி.ஏ. படிக்கும் மாணவியுமான ஜோனஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் தூக்குமாட்டி இறந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் குருவிமலை கிளைச் செயலாளர் ஏ.என்.பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்த திருவையாறு தியாகராஜர் சமாதி தெருவைச் சேர்ந்த முருகேசன் இரவில் பஸ்சில் தனது லுங்கியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் மாமணி தஞ்சை மூப்பனார் சாலையில் உள்ள பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் விருப்பாச்சி நடப்பு தெருவைச் சேர்ந்த சாமிநாதனின் மனைவி பாலாம்மாள், ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் திருவாரூர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்து வந்தார்.

கடலூர் பாதிரிக்குப்பம் காலனி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ராஜேந்திரன், திருவோணம் அடுத்த காட்டாத்தி சித்தன் தெருவைச் சேர்ந்த பழனியப்பன், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கரூர் மாவட்டம் நெடுங்கூர் கிழக்கு கஸ்பா காலனியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ராமசாமி, மூலக்காட்டனூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி வார்டு செயலாளர் வேலுச்சாமி, தளவாபாளையத்தைச் சேர்ந்த ஜீவா, சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மோரூர் கே.எம்.புதூரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் பழனிச்சாமி. நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன், திருப்பூர் மாநகர் மாவட்டம் களியானூர் கிளைச்செயலாளர் கே.எம்.வரதேகவுடர், விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரையைச் சேர்ந்த தங்கவேல் மனைவியும், அ.தி.மு.க. உறுப்பினருமான அம்மணி அம்மாள் ஆகியோர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெருமாள்பேட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை தலைவர் அண்ணாதுரை, கலசபாக்கம் மேலாரணி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி சேட்டு, வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் ஞானபிரகாசம் ஆகியோரும் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த முத்துலாபுரத்தைச் சேர்ந்த தொண்டர் பாலம்மாள், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மலைவேப்பன்குட்டை பகுதி கிளைக்கழக பிரதிநிதி பெருமாள் ஆகியோர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் மாரியப்பன், குற்றாலம், கீழபெரம்பூர் கிளை மேலமைப்பு பிரதிநிதி என்.கண்ணன், கயத்தாறைச் சேர்ந்த ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் உதயராஜ் ஆகியோர் அதிர்ச்சியில் இறந்தனர்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் நாலாயிரம் என்பவர் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் முன்பு குதித்து, படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

சிங்கம்புணரி அடுத்த ஆகாளாப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சுப்பிரமணியன் விஷம் குடித்து இறந்தார்.

மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் சலூன் கடை நடத்தி வந்த பாஸ்கர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 

No comments:

Post a Comment