Monday, June 29, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது: வாசுதேவ நாணயக்கார!

Monday, June 29, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமது தரப்பினருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
 
முன்னாள் ஜனாதிபதி தோல்வியடைந்தாலும் யாரிடமும் அடிபணியவில்லை.
 
அவருக்கு வெற்றிலை சின்னத்தில் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் செயற்பட்டுள்ளார்.
 
எனவே அந்த பிரச்சினை தற்போது தீர்வை எட்டியுள்ளது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
இந்தநிலையில், மத்திய வங்கி முறி பிரச்சினை காரணமாகவே, குறிப்பிட்ட காலத்திற்கு புறம்பாக தற்போது நாடாளுமன்ற கலைக்கப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன எதிர்வரும் தேர்தலில் 55 க்கு மேற்பட்ட ஆசனங்களை பெறாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
 
கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அண்மைக்காலமாக எதிர்கட்சியினர் இனவாதத்தை தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றியீட்டி அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறது.
 
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கிடைத்த வாக்குகளிலும் பார்க்க 30 சதவீதமான வாக்கு எண்ணிக்கை குறைவடையும் என்பது உறுதி.
 
புதியதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அமைய அந்த வாக்குகள் தமது கட்சித் தரப்பினருக்கு நிச்சயமாக கிடைக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment