Thursday, June 18, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் தனியான தேர்தல் விஞ்ஞாபனம் தயார்!

Thursday, June 18, 2015      
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளதுடன் அதனை அச்சிடவும் தயாராகி வருகின்றனர்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுப்படுத்தி எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மைத்திரி – மகிந்தவை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மகிந்த கோஷ்டி தனியான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர்களாவர்.
 
2015ம் ஆண்டு பொதுத் தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட உள்ள இந்த தேர்தல் விஞ்ஞாபனம் 19 பக்கங்களை கொண்டது என தெரியவருகிறது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாஙங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தியுள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைத்து விட போவதாகவும் மத்திய வங்கியின் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுதி தராதரமின்றி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....
 
சில தரப்பினர் இலங்கையின் கலாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
நேற்று இடம்பெற்ற பூஜை வழிபாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு சென்ற பாதையை வேறு பக்கம் திசை திருப்பும் முயற்சிகளிலேயே இவர்கள் ஈடுபடுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
எதிர்காலத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளும் மேடைகள் அல்ல மாறாக அரசியல் மேடைகளே உருவாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
குழுவொன்று இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
சிங்கள கலாசாரத்தை நம் மத்தியிலிருந்து தகர்த்தி தூரமாக்குவதற்கே இத்தரப்பினர் முனைந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமைகள், சமத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டு தேசியத்தை நாசகரமாக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வீடுகளில், மாளிகைகளில் திருட்டுத்தனமாக செய்தவற்றை தற்போது பொது இடங்களில் செய்து அதை சட்டமாக்க முனைகின்றார்கள்.
 
நாம் சென்ற பாதையை வேறுபக்கமாக மாற்ற முனையும் போது பழிவாங்கல்கள், பகைமை, குரோதங்கள் இவர்களின் முக்கிய பங்காக காணப்படும் வேளையில் நாம் செய்யும் பூஜை வழிபாடுகளின் காரணமாக அந்த தலைவர்களின் மனங்களில் பகைமை உணர்வுகள் இல்லாமல் போகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment