Thursday, June 18, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்ற ஓர் யுகப் புருஷரை தோற்கடித்தமை ஓரு வரலாற்றுத் தவறு: உதய கம்மன்பில !

Thursday, June 18, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்ற ஓர் யுகப் புருஷரை தோற்கடித்தமை ஓரு வரலாற்றுத் தவறு என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
திவுலபிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்கவோ அல்லது மைத்திரிபால சிறிசேனவோ தோற்கடிக்கவில்லை. பராக் ஒபாமா, நரேந்திர மோடி போன்றவர்கள் கூட்டாக இணைந்து மஹிந்தவை தோற்கடித்தனர்.
 
ஜோன் கெரி, நரேந்திர மோடி போன்றவர்கள் இலங்கை விஜயம் செய்தமை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவேயாகும். இலங்கைக்கு விஜயம் செய்த நரேந்திர மோடி மற்றும் ஜோன் கெரி இலங்கைக்கு உதவியாக ஒரு சதமேனும் நிதி உதவி வழங்கவில்லை.
 
மஹிந்த ராஜபக்ச ஓர் யுகப்புருஷர். அவ்வாறான ஓர் அரச தலைவரை தோற்கடித்தமை வரலாற்றில் நாம் செய்த மாபெரும் தவறாகாவும், முட்டாள்தனமாகவும் கருதப்பட வேண்டும். இன்னும் 40 ஆண்டுகளில் நாட்டின் எரிபொருள் வளம் இல்லாமல் போய்விடும். மன்னாரில் காணப்படும் எரிபொருள் வளங்களை சூறையாடவே வெளிநாட்டு சக்திகள் இந்த முயற்சியை மேற்கொள்கின்றன. இலங்கையை இந்தியாவினதோ அல்லது அமெரிக்காவினதோ காலனியாக மாற்ற இடமளிக்கப்பட முடியாது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment