Wednesday, June 24, 2015

ரணில் விக்கிரமசிங்க காலாட்டுகிறார்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதணி போடுகிறார்!: விமல் வீரவன்ஸ கிண்டல்!

Wednesday, June 24, 2015
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலை ஆட்டிக் கொண்டிருக்கின்றார் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று பாதணியை எடுத்து மாட்டிப் பார்க்கின்றார் என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
 
அத்துடன், ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டது ஜனாதிபதி வாசம் செய்யத்தான். மாறாக, எலியும் பூனையும் இருப்பதற்கும் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் மறைமுகமாகச் சாடினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "100 நாட்கள் அரசு, தற்போது பெரும் பிரச்சினையில் உள்ளது. என்ன நடக்கிறது என்று அதற்கே தெரியவில்லை. 100 நாட்களில் புதிய அரசு என்றார்கள். ஆனால், இங்கு பிரச்சினைதான் உள்ளது. அமைச்சர்கள் 25 பேர் என்றனர்.
 
ஆனால், தற்போது 80ஐத் தாண்டிவிட்டது. அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுமார் ஒரு கோடியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்று அரசுக்குத் தெரியவில்லை. பிரதமர் நன்றாக காலாட்டிக்கொண்டிருக்கின்றார். ஜனாதிபதி திடீரென்று பாதணி வாங்கிவந்து அணிந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார். இப்படித்தான் நடக்கிறது.
 
ஜனாதிபதி மாளிகை இருக்கிறது. ஆனால், ஜனாதிபதி அதில் வசிப்பதில்லை. சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை தற்போது சுமார் 20 கோடி ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்கின்றனர். இது எதற்காக? ஜனாதிபதி மாளிகையில் இருந்தால், பதவி விலகிய பின்னர் அங்கிருந்து வெளியேறவேண்டும். ஆனால், இப்படியொரு வீட்டை அமைத்துக்கொண்டால் அதிலேயே நிரந்தரமாக இருந்துவிடலாம்'' - என்றார். -

No comments:

Post a Comment