



சென்னை::இன்னும் சில மணி நேரங்களில்.... 2011க்கு விடை கொடுக்கவும், 2012-ஐ வரவேற்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர். சென்னையில் புத்தாண்டு கோலாகலம் காலையில் இருந்தே களை கட்ட தொடங்கி விட்டது. கடைகள், ஓட்டல்கள், வீடுகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. வாழ்த்து எஸ்எம்எஸ்கள் வலம் வர தொடங்கி விட்டன. நட்சத்திர ஓட்டல்களில் கலாசார நடனங்கள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள், வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்க மெரினா கடற்கரையில் பல லட்சம் மக்கள் கூடுவார்கள். அங்கு மட்டும் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பெண்களை கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்க 80 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. மெரினாவில் மீண்டும் கடைகள்: தானே புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் கடல்நீர் புகுந்தது. அங்கிருந்த கடைகள் சேதம் அடைந்தன. இந்நிலையில், புத்தாண்டு வியாபாரத்திற்காக இன்று காலை 7 மணிக்கே வந்து தங்களது கடைகளை வியாபாரிகள் சரி செய்தனர். குப்பைகளை அகற்றி கடற்கரையை சுத்தப்படுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment