Sunday, January 1, 2012

தமிழ் சினிமா - 2011 - ஓர் சிறப்பு பார்வை!!!

Sunday, January, 01,2012
தமிழ் சினிமா உலகை பொறுத்தவரை 2011ம் ஆண்டும், படவெளியீட்டை பொறுத்தவரை சிறப்பாகவே இருந்திருக்கிறது. 2010-ல் வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை 180. இதில் நேரடி படங்களின் எண்ணிக்கை 149. 2011-ல் வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை 181. இந்த வருடத்தில் நேரடி படங்களின் எண்ணிக்கை 142. கடந்த 2010ம் வருடம் 31 மொழி மாற்றுப் படங்களும், 2011ம் வருடம் 39 மொழி மாற்று படங்களும் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளன. எனவே நேரடி படங்கள், மொழிமாற்று படங்கள் இரண்டையும் கணக்கில் கொண்டால் 2010ம் ஆண்டைக் காட்டிலும் ஒரு திரைப்படம் 2011-ல் அதிகமாகவே வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* 2011-ல் அதிக படங்கள் வெளிவந்த நாயகர் பட்டியலில் நடிகர் தனுஷ் 5 படங்களில் ‌தோன்றி முதலிடத்திலும், நடிகர் ஜீவா 4 படங்களில் நடித்து 2வது இடத்திலும் இருக்கிறார்.

* நடிகையை ‌ப‌ொறுத்தமட்டில் அஞ்சலி 5 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார்.

* எட்டு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தோன்றி பிரகாஷ்ராஜ் நம்பர்-1 வில்லனாக உள்ளார்.

* சுமார் 13 படங்களில் காமெடியனாக நடித்த வகையில் சந்தானம் நம்பர்-1 காமெடியனாகவும், அவருக்கு அடுத்தபடியாக பத்து படங்களில் ‌காமெடியாக நடித்த வகையில் கஞ்சா கருப்பு 2ம் இடத்திலும் இருக்கின்றனர்.

* 2011-ல் அதிக படங்களை தயாரித்த நிறுவனம் என 4 படங்களை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் பெயரெடுத்துள்ளது.

* தலா இரண்டு படங்களை இயக்கியதன் மூலம் முதலிடத்தில் இருக்கின்றனர் நடிகர் கம் இயக்குநர்கள் தியாகராஜனும், பிரபுதேவாவும்.

* தலா 6 படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ஸ்ரீகாந்த் தேவா, யுவன்சங்கர் ராஜா, தமன் ஆகிய மூவரும் முன்வரிசையிலும், சுந்தர்.சி.பாபு-5 படங்களுக்கும், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ் தலா - 4 படங்களுக்கும், ஹாரிஸ், தினா, விஜய் ஆண்டனி தலா 3 படங்களுக்கும் என அடுத்தடுத்த இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர்.

* ஏ.ஆர்.ரஹ்மான் 2011ம் ஆண்டில் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைக்கவில்லை. மாறாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி தமிழகத்தில் தடை செய்யப்பட்ட டேம்-999 ஆங்கில படத்தின் பாடல்களுக்கு ஆஸ்கர் விருதுகளை தரலாம் என ஆக்ராவில் நடந்த விழா ஒன்றில் ஏடாகூடமாக பேசி பின் வருத்தம் தெரிவித்ததோடு சரி!

* பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 2011ம் ஆண்டில் 37 படங்களுக்கு பாடல்கள் எழுதி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.


2011ம் ஆண்டின் புதுமுகங்கள்

பெரிய கனவுகளோடு சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் நடிகர், நடிகைகள் பலரில் ஒரு சிலர் மட்டுமே ஜொலிக்கிறார்கள். அந்தவகையில் கடந்த 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட 50க்கும் மேற்‌பட்ட ஹீரோக்களும், ஹீரோயின்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் அறிமுகமாகியுள்ளனர். ஹீரோக்களை ‌பொறுத்தமட்டில் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஜொலிக்கவில்லை. அதேபோல் நடிகைகள் பலரில், ஒரு சில நடிகைகள் மட்டுமே சொல்லும்படியான படத்தை கொடுத்துள்ளனர். அந்தவகையில் ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களின் நாயகி டாப்சி, ராதாவின் மகள் கோ கார்த்திகா, கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன், வெப்பம், 180 படங்களின் நாயகி நித்யா மேனன், பிந்து மாதவி, மற்றும் மயக்கம் என்ன, ஒஸ்தி பட நாயகி ரிச்சா கங்கோபாத்யாய ஆகியோர்கள் மட்டுமே.


இனி 2011-ல் வெளியான படங்களும், அதை தயாரித்த நிறுவனங்களும்...

01. அநாகரிகம் - ஆர்.ஹச்.கே அசோசியஷன்
02. அப்பாவி - தேவி விஷன்ஸ்
03. அம்மான்னா சும்மா இல்லடா - அம்மா கலைக்கூடம்
04. அய்யன் - வர்ஷா புரோடக்ஷன்ஸ்
05. அரும்புமீசை குறும்பு பார்வை - நியூலைன் டாக்கீஸ்
06. அவர்களும் இவர்களும் - லக்ஷா பிலிம்ஸ்
07. அவன் இவன் - ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்
08. அழகர்சாமியின் குதிரை - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்
09. ஆசைப்படுகிறேன் - மக்கள் கலைகூடம்
10. ஆடுகளம் - ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ்
11. ஆடுபுலி - குலோபல் இன்போடெயின்மெண்ட்
12. ஆண்மைத்தவறேல் - ரெட்ஹெட் எண்டர்டெயின்மெண்ட்
13. ஆயிரம் விளக்கு - ஹச்எம்1 மூவிஸ்
14. ஆயுதப்போராட்டம் - ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ்
15. ஆரண்யகாண்டம் - கேபிடல் பிலிம் ஓர்க்ஸ் (இந்தியா)
16. ஆரானில் காதல் - ரோஹன் பிலிம்ஸ்
17. இதயத்தில் ஒருவன் - வெங்கடேஸ்வரா ஆர்ட் மூவிஸ்
18. இது காதல் உதிரும் காலம் - ஸ்ரீ ஸ்ரீ இமேஜஸ்
19. இருளில் நான் - பரதன் கிரியேஷன்ஸ்
20. இளைஞன் - மார்டின் புரோடக்ஷன்
21. உச்சிதனை முகர்ந்தால் - குலோபல் மீடியா
22. உதயன் - முத்தமிழ் படைப்பகம்
23. உயர்திரு 420 - ரிச் இண்டியா
24. உயிரின் உயிரே - ஸ்ரீகன்னியம்மன் கிரியேஷன்ஸ்
25. உயிரின் எடை 21 அயிரி - டிரீமர் வோர்ல்டு
26. எங்கேயும் எப்போதும் - ஏ.ஆர்.முருகதாஸ் புரோடக்ஷன்ஸ்
27. எங்கேயும் காதல் - ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்
28. எத்தன் - ஷேராலி பிலம்ஸ்
29. என் உள்ளம் உன்னை தேடுதே - ஷத்திரியன் பிலிம்ஸ்
30. 7ஆம் அறிவு - ரெட் ஜெயன்ட் மூவிஸ்
31. ஐவர் - ஏஜிஆர் ரைடண பிலிம்ஸ்
32. ஒத்திகை - பிஆர்.எண்டர்டெயின்மெண்ட்
33. ஒத்தையடி வீரன் - ஆதவாஸ் சினி ஆர்ட்ஸ்
34. ஒரு சந்திப்பில் -டிரை ஸ்டார் மூவிஸ்
35.ஒஸ்தி - பாலாஜி ரியல் மீடியா
36.கண்டேன் - ஸ்ரீசிவசெல்வநாயகியம்மன் மூவிஸ்
37. கருங்காலி - ஸ்ரீகுருஜோதி பிலிம்ஸ்
38. கருத்தகண்ணன் சி/ஒ ரேக்ளாரேஸ் - ரோஷன் பில்ம் இண்டர்நேஷனல்
39. கல்யாணம் - ஸ்ரீகர் பிலிம் கிராப்ட்
40. காஞ்சனா - ஸ்ரீ தேணான்டான் பிலம்ஸ்
41. காசேதான் கடவுளடா - ஜமால் மூவி கிரியேஷன்ஸ்
42. காதல் குடியிருப்பு -வஷிஷ்டா பிக்சர்ஸ்
43. காதல் அல்ல அதையும் தாண்டி - ஆர்.எம்.எண்டர்பிரைசஸ்
44. காதல் கொண்ட மனசு - வில்சன் மூவிஸ்
45. காதல் மெய்பட - துவாரகாமை சினி புரோடக்ஸன்ஸ்
46. காமேஸ்வரி - ஏஎம்சி எண்டர்டெயின்மெண்ட்
47. காவலன் -ஏகவீரா கிரியேஷன்ஸ்
48. கீழதெரு கிச்சா - ஸ்டார் பிக்சர்ஸ்
49. குமரா - வர்ணா எண்டர்பிரைசஸ்
50. குருசாமி - சேனல் ஆர்.ஃபைவ் புரோ
51. குள்ளநரி கூட்டம் - தர்ஷன் கிரியேஷன்ஸ்
52. கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் - ஸ்ரீ அஷ்டலஷ்மி பிலிம்ஸ்
53. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - எஃப்சிஎஸ் கிரியேஷன்ஸ்
54. கோ - ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட்
55. சகாக்கள் - விவிவி. கிரியேஷன்ஸ்
56. சங்கரன் கோவில் - சிவதர்ஷினி சினி ஆர்ட்ஸ்
57. சட்டப்படி குற்றம் -ஸ்டார் மேக்கர்ஸ்
58. சதுரங்கம் - மாஸ் மூவி மேக்கர்ஸ் (ஸ்ரீ துணா)
59. சபாஷ் சரியான போட்டி - துவாரகா மூவிஸ்
60. சாந்தி அப்புறம் நித்யா - ஜி.கம்பெனி
61. சிங்கம் புலி - சில்வர்லைன் பிலிம் பேக்டரி
62. சிங்கையில் குருஷேத்ரம் - மெட்ரோ பிலிம்ஸ்
63. சிறுத்தை -ஸ்டுடியோ கிரீன்
64. சீடன் - மித் புரொடக்ஷன்ஸ்
65. சுசி அப்படித்தான் - பிராத்தனா புரொடக்ஷன்ஸ்
66. சுட்டும் விழி சுடரே - நிலா பிலம்ஸ்
67. சொல்லித்தரவா - ஷட்டெப்ஸ் புரோடக்ஷன்ஸ்
68. டூ - ஏ.ஜி. எண்டர்டெயின்மெண்ட்
69. தம்பிக்கோட்டை - யோகேஷ் பிக்
70. தம்பி வொட்டோத்தி சுந்தரம் - ஜேஎஸ் 24 பிரேம்ஸ்
71. தமிழ் தேசம் - திராவிடன் கலைப்பாதை
72. தப்பு - எஸ்எஸ்ஏ மூவி
73. திகட்டாத காதல் - சுவீட்சில்லி எண்டர்டெயின்மெண்ட்
74. தூங்காநகரம் - கிளவுட் நைன் மூவி
75. தெய்வதிருமகன் - ஸ்ரீ ராஜகாளி அம்மன் மீடியாஸ்
76. தென்காசி பக்கத்திலே - கிளாசிக் கம்பைன்ஸ்
77. தேனீர் விடுதி - பீகாக் பிக்சர்ஸ்
78. தேவதாசியின் கதை - 3ஸ்டுடியோ காம்
79. நஞ்சுபுரம் -இலுஷன்ஸ் இன்பனைட் பிலிம்
80.நடுநிசி நாய்கள் - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்
81. நந்தி - விஷன் எக்ஸ் மீடியா
82. நர்த்தகி - எஸ்.ஜி.பிலிம்ஸ்
83. நான் சிவனாகிறேன் - எம்என் கிரியேஷன்ஸ்
84. நீயே என் காதலி - அஷ்டலெக்ஷ்மி கிரியேட்டர்ஸ்
85. நூற்றெண்பது - ஸ்ரீ சினிமாஸ்
86. படைசூழ -ராயல் மூன் பிக்சர்ஸ்
87. படைப்பாளி -ஸ்ரீ ரூபவதி பிலிம்ஸ்
88. பதினாறு - பாஷன் மூவி மேக்கர்ஸ்
89. பதினெட்டான் குடி எல்லை ஆரம்பம் - எஸ்.எம்.எஸ்.டாக்கீஸ்
90. பயணம் - சைலண்ட் மூவிஸ்
91. பவானி - ஸ்ரீ மூவி மேக்கர்ஸ்
92. பழகியதே பிரிவதற்காக - சிவஜோதி பிலிம்ஸ்
93. பாசக்கார நண்பர்கள் - ஏஞ்சல் பிலிம் இண்டர்நேஷனல்
94. பாலை - செம்மை
95. பாவி - ‌தென்னக திரை கூடம்
96. பிள்ளையார் தெரு கடைசி தெரு - சூப்பர் குட் பிலிம்ஸ்
97. புலிவேசம் - ஆர்.கே. வோர்ல்ட்ஸ்
98. பூவா தலையா - லிங்கம் தியேட்டர்ஸ்
99. போட்டா போட்டி - ஏ.வி.ஆர்.டாக்கீஸ்
100. போடி நாயக்கணூர் கணேசன் - லக்ஷ்மி கிருஷ்ணா கம்பைன்ஸ்
101. போராளி - கம்‌பெனி புரோடக்ஷ்ன்ஸ்
102. பொன்னர் சங்கர் - லக்ஷ்மி சாந்தி மூவிஸ்
103. மங்காத்தா - க்ளவுட் நைன் மூவிஸ்
104. மகாராஜா ஜேராம் கிரியேஷன்ஸ்
105. மகான் கணக்கு - பூஜா பிலிம் இண்டர்நேஷனல்
106. மதிகெட்டான் சாலை - திருமலை இன்னோவேஷன்ஸ்
107. மயக்கம் என்ன - ஜெமினி பிலிம் சர்க்யூட்
108. மருதவேலு - சிவ தங்கம் பிலிம்ஸ்
109. மம்பட்டியான் - லக்ஷ்மி சாந்தி பிலிம்ஸ்
110. மார்கண்டேயன் - மாஸ்டர் மைண்ட் பிலிம்ஸ்
111. மார்கழி 16 - ஜெயவிலாஸ் ஆர்ட்ஸ்
112. மாப்பிள்ளை - நேமிசந்த் ஐபக்
113. மிட்டாய் - பி-டிம் பிளேயர்ஸ்
114. மின்சாரம் - கோவை பிலிம் சிடி
115. முதல் இடம் - ஏ.வி.எம்
116. முத்துக்கு முத்தாக - பாண்டிநாடு தியேட்டர்ஸ்
117. முரண் - யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ்
118. மைதானம் - ஆஞ்சனா சினிமாஸ்
119. மெளனகுரு - மோகனா மூவிஸ்
120. யுத்தம் செய் - ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயிண்மெண்ட்
121. யுவன் - எஸ்.வி.புரோடக்ஷன்ஸ்
122. யுவன் யுவதி - ராம் பிக்சர்ஸ்
123. ராமநாதபுரம் - பாரதி கலைக்கூடம்
124. ராரா - ஜேஷன் ஸ்டுடியோஸ்
125. ராஜபாட்டை - பி.வி.பி சினிமா
126. ரெளத்திரம் - சூப்பர்குட் பிலிம்ஸ்
127. லத்திகா - லத்திகா பிலிம்ஸ்
128. வந்தான் வென்றான் - வாசன்ஸ் விஷூவல் வென்சர்ஸ்
129. வர்மம் - கிரசண்ட் கிரியேஷன்ஸ்
130. வர்ணம் - மீடியாசென் இந்தியா
131. வழிவிடு கண்ணே வழிவிடு - எம்.ஜி.எஸ்.புரோடக்ஷ்ன்ஸ்
132. வாகை சூடவா - விலேஜ் தியேட்டர்ஸ்
133. வாடா போடா நண்பர்கள் - பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்
134. வானம் - வி.டி.வி.புரோடக்ஷ்ன்ஸ், மேஜிக் பாக்ஸ் பிக்சர்ஸ்
135. விகடகவி - ஏ.பி.சி. ஸ்டுடியோ
136. வித்தகன் - செவன்த் சேனல்
137. வெங்காயம் - பூவாப்பா கலைக்கூடம்
138. வெடி - ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன்
139. வெண்பணி - கார்த்திக் ஜெய் மூவிஸ்
140. வேங்கை - விஜயா புரோடக்ஷ்ன்ஸ்
141. வேலாயுதம் - ஆஸ்கர் பிலிம்ஸ்
142. வேலூர் மாவட்டம் - ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்


விழா கொண்டாடிய படங்கள்

200 நாட்கள் : கோ

100 நாட்கள் : மைனா, காவலன், சிறுத்தை, வானம், காஞ்சனா, தெய்வத்திருமகள், எங்கேயும் எப்போதும், சிங்கம்புலி, இளைஞன், விருதகிரி, லத்திகா. இதில் சில படங்கள் 100 நாட்கள் ஓட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது.


2011 வெளியான கீழ்கண்ட படங்களில் முந்தைய ஆண்டுகளில் தணிக்கை செய்யப்பட்டவை

01. சதுரங்கம்
02. இளைஞன்
03. காமேஸ்வரி
04. தமிழ்தேசம்
05. நர்த்தகி
06. படைப்பாளி
07. பவானி
08. போட்டா போட்டி
09. மிட்டாய்
10. மம்பட்டியான்
11. அப்பாவி
12. ஆடுகளம்
13. காதல் மெய்பட
14. தம்பிக்கோட்டை
15. படைசூழ
16. பதினாறு
17. பூவா தலையா
18. மார்கழி 16
19. மின்சாரம்
20. குமரா
21. ஆண்மைத்தவறேல்
22. இது காதல் உதிரும் காலம்
23. என் உள்ள உன்னைதேடுதே
24. காதல் குடியிருப்பு
25. பழகியதே பிரிவதற்கா
26. வாடா போடா
27. விகடகவி
28. தேவதாசியின் கதை
29. நீயே என் காதலி
30. அம்மான்னா சும்மா இல்லேடா

2011 நவம்பர் வரை தணிக்கை செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கும் படங்கள்

1. அறியான் - பெலஸ்சிங் எண்டர்டெயின்மெண்ட்
2. அவன் அப்படித்தான் - ரோகித் ஸ்டுடியோஸ்
3. அன்பிற்கு அளவில்லை - ஷெயீட் இண்டியா மீடியா
4. அன்புள்ள துரோகி - சக்திவேல் பிலிம் இண்டர்நேஷனல்
5. அன்புள்ள மான்விழியே - முத்துவேல் மூவிஸ்
6. ஆண்டாள் அழகர் - கலைக்களஞ்சியம் அன்னை கிருஷ்ணவேணி பிலிம்ஸ்
7. ஆனந்த தொ‌ல்லை - பாபா சினி கம்பைன்ஸ்
8. இளமை காதல் - ஆர்.சி.எம். சினி சித்ரா
9. உருமி - ஆகஸ்ட் சினிமா
10. உன்னதமானவன் - ஸ்ரீ சுபாதி கிரியேஷன்ஸ்
11. என் காதல் தேவதை
12. ஒரு மழை நான்கு சாரல் - சி.கே.3 புரோடக்ஷன்ஸ்
13. கண்டவுடன் - இ.அப்துல்லா பிலிம் இண்டர்நேஷனல்
14. காதலிக்கலாமா - ரேவதி சினி கிரியேஷன்ஸ்
15. சக்தி பிறக்குது - பிரகரிதி ஜீவா மீடியா
16. சங்கர் ஊர் ராஜபாளையம் - கோல்டன் சன் பிக்சர் புரோடக்ஷன்ஸ்
17. சிறைப்பொழுதுகள் - நலத்தம்மாள் சினிமாக்ஸ்
18. சிவ சிவா - எஸ்.டி.என். கிரியேஷன்ஸ்
19. சூரன் - ஆரோவனா பிக்சர்ஸ்
20. செங்கடல் - தொல்பாளை தியேட்டர்ஸ்
21. சேட்டை தனம் - தர்ஷினி பிக்சர்ஸ்
22. சொந்தமடி பந்தமடி - ராதா சினி ஆர்ட்ஸ்
23. சொன்னதை செய்வேன் - நவநீதம் பிலிம்ஸ்
24. தந்துவிட்டேன் என்னை - ஸ்ரீ உமையாள் மூவிஸ்
25. தலபுள்ள - ஆர்.கே.மூவி இண்டர்நேஷனல்
26. தாண்டவக்கோனே - அம்பியன்ஸ் மூவிமேக்கர்ஸ்
27. திகில் - ஸ்ரீனிவாசா கிரியேஷன்ஸ்
28. திசை - சுஜிவ் ஆர்ட்ஸ் கமர்ஷியல்ஸ்
29. துரோகம் பண்ணாதீங்க - எம்.எம்.சினி ஆர்ட்ஸ்
30. தேனி மாவட்டம் - செவன் ஸ்டார் ஸ்டான்டர்டு பிலிம்ஸ்
31. நண்டு பாஸ்கி - அய்யனார் கிரியேஷன்ஸ்
32. நாங்க - சினிமா கொட்டகை
33. நினைவில் நின்றவள் - ஸ்ரீ சபரி மூவிஸ்
34. பறக்கனும் போல இருக்கு - பரதன் பிலிம்ஸ்
35. பாலு தம்பி மனசில - பிங்கி புரோடக்ஷன்ஸ்
36. பேசு - சூப்பர்ஸ்பிரிங் எண்டர்டெயின்மெண்ட்
37. புதிய வானம் புதிய பூமி - ஏம்.பி.எஸ். சினி ஆர்ட்ஸ்
38. மாமல்லன் - பல்லவா கிரியேஷன்ஸ்
39. மதுவும் மைதிலியும் - ஜெயலெக்ஷ்மி மூவி இண்டர்நேஷனல்
40. மாற்றி காட்டுவோம் - செய்குப்பா சினி ஆர்ட்ஸ்
41. முன்னவர் - சி.பிலிம்ஸ்
42. மேதை - கலைமகள் கலைக்கூடம்
43. யுகம் - ஏ.சி.இ. எண்டர்டெயின்மெண்ட்ஸ்
44. மை - பத்மாலயா சினி விஷன்ஸ்
45. லீலை - ஆஸ்கார் பிலிம்ஸ்
46. வருடங்கள் 20 - கே.ஆர்.பிரியங்கா புரோடக்ஷ்ன்ஸ்
47. காதலிச்சிப்பார் - பி.ஆர்.குளோபல் எண்டர்டெயின்மெண்ட்ஸ்
48. காதலுக்குள் காதல் - மரியா புன்னை பிலிம்ஸ்
49. காதலை காதலிக்கிறேன் - அன்னபாக்கியம் பிலிம்ஸ்
50. காதலன் காதலி - ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ்
51. காதல் பயணம் - ஏ.ஏ.பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
52. ஒரு மழை நான்கு சாரல் - சி.கே.3 புரோடக்ஷ்ன்ஸ்
53. ஒத்த வீடு - விஷ்ஷிங் வெல் புரோடக்ஷ்ன்ஸ்
54. வாக்கப்பட்ட சீமை - பெரிய நாயகி அம்மன் கிரியேஷன்ஸ்
55. விளையாடவா - திரிபுரசுந்தரி சினி கிரியேஷன்ஸ்
56. வேட்டை - யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ்
57. விநாயகா - சஹானா கிரியேஷன்ஸ்

ஏற்கனவே வெளியான படங்கள் பெயர் மாற்றப்பட்டு 2011-ல் வெளியான படங்கள்

01. வாலிபமே வா
02. பெரிய பொண்ணு
03. சின்ன பையன்
04. தப்பு பண்ணிட்டோம் மன்னிச்சிடுங்க
05. காதலர்களின் ஊடல்
06. அவனின் உணர்ச்சிகள்
07. துரோகக் காதல்


தேசிய விருதுகள்

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2011ம் ஆண்டில் ஏராளமான தேசிய விருதுகளை தமிழ் சினிமா அள்ளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 14 ‌தேசிய விருதுகளை தமிழ் சினமா அள்ளி வந்தது. குறிப்பாக ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் அடங்கும். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 2 தேசிய விருதுகளும், மைனா படத்திற்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகர் தனுஷ், நடிகை சரண்யா, இயக்கநர் சீனு ராமசாமி, வெற்றி மாறன் ஆகியோருக்கு ஜனாதிபதி தேசிய விருது வழங்கிய அதே மேடையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கரங்களால் தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலைமாமணி விருதுகள்

2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட 76 கலைஞர்களுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி பிப்ரவரி 13ம் தேதி வழங்கி கவுரவித்தார்.



அரசியலில் கலைஞர்கள்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திரைத்துறை சம்பந்தப்பட்ட கலைஞர்கள்

* கலைச்செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வரானார்.

* எதிர்க்கட்சி தலைவர்கள் வரிசையில் விஜயகாந்த், மு.கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

* அருண்பாண்டியன், வைகைச் செல்வன்(பாடலாசிரியர்), பழ.கருப்பையா, மைக்கேல் ராயப்பன், ஆர்.சுந்தர்ராஜ் (நடிகர்/இயக்குநர் அல்ல), எர்ணாவூர் நாராயணன், ஜே.அன்பழகன் ஆகியோர் எம்.எல்.ஏ., ஆனார்கள்.


நட்சத்திர திருமணங்கள்

2011ம் ஆண்டில் நடிகர்கள் கார்த்தி, ப்ருத்விராஜ், சக்தி, துஷ்யந்த் ஆகியோரும், நடிகைகள் நவ்நீத் கவுர், அபர்ணா, ஸ்வேதா மேனன், பாக்யாஞ்சலி, ப்ரணி உள்ளிட்டவர்களும், இயுக்குநர்கள் செல்வராகவன், தமிழ்வாணன், ஷெல்வன், மித்ரன் ஆர்.ஜவஹர், எஸ்.பி.ஹோசிமின், சற்குணம் ஆகியோரும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், பாடகி ஸ்வேதா உள்ளிட்டவர்களும் இல்லற வாழ்க்கையில் இனிதே அடியெடுத்து வைத்துள்ளனர். இதில் செல்வராகவனும், யுவன் சங்கர் ராஜாவும் மறுமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்சத்திர விவாகரத்துக்கள்

சினிமா நட்சத்திரங்களின் திருமணங்களைவிட அவர்களது விவாகரத்து செய்திகள் பரபரப்பை கிளப்பி விடுவது வாடிக்கை. அந்த வகையில் இந்த 2011ம் ஆண்டில் மார்ச் 23ம் தேதி நடிகை ஜோதிர்மயி, தனது கணவர் நிஷாந்திடமிருந்து விவாகரத்து கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நயன்தாராவை காதலித்து கரம்பிடிக்க இருக்கும் பிரபுதேவா, அதற்காக ஜூலை 7ம் தேதி தனது மனைவி ரமலத்திடமிருந்து விவாகரத்து பெற்றார். பிரபுதேவாவை மணப்பதற்கு வசதியாக நயன்தாரா ஆகஸ்ட் 8ம் தேதி இந்து மதத்துக்கு மாறினார்.

ஜூலை 27ம் தேதி நடிகை வனிதாவிடமிருந்து அவருடைய இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் பிரிந்தார். அக்டோபர் 12ம் தேதி 2வது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை வனிதா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.


2011-ல் மறைந்த திரைக்கலைஞர்கள்

ஜனவரி 10ம் தேதி காமெடி நடிகை ‌ஷோபனா(வயது 32), பிப்ரவரி-20ல் பாடகர் மலேசியா வாசுதேவன் (வயது 60), ஏப்ரலில் நடிகை சுஜாதா (வயது 58), மே-1ம் தேதி நடிகரும், மேஜிக் கலைஞருமான அலெக்ஸ்(வயது 52), ஜூலை 25ம் தேதி நடிகர் ரவிச்சந்திரன்(வயது 72), ஜூலை 28ம் தேதி அம்புலி பட நாயகர் அஜெய் காதல் தோல்வி காரணமாக செய்து கொண்ட தற்கொலை, செப்டம்பர் 9ம் தேதி புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை காந்திமதி(வயது 71) உள்ளிட்டவர்கள் மறைந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்தன.

மேலும் டான்ஸ் மாஸ்டர் சலீம், இயக்குநர் டி.கே.போஸ், நடிகர்கள் ராமிரெட்டி, வாத்தியார் ராமன், எல்.ஐ.சி.நரசிம்மன், எஸ்.ஏ.கண்ணன், ஜெமினி செல்வம், ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத், தெலுங்கு இயக்குநர் சத்யநாராயணா, மலையாள இசையமைப்பாளர் ஜான்சன், இந்தி நடிகர்கள் தேவ் ஆனந்த், ஷம்மி கபூர், ஒப்பனைக்கலைஞர் பீதாம்பரம், நடன அமைப்பாளர் சலீம், திரையரங்கு உரிமையாளரும், எம்.எல்ஏ.,வுமான மரியம் பிச்சை மறைவு ஆகியவையும் திரை உலகினரை கலங்க வைத்துவிட்டன 2011ம் ஆண்டில்!

No comments:

Post a Comment