Saturday, January 28, 2017

புலிகளினால் தாக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி தாக்குதல்: 21 வருடங்களாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

புலிகளினால் தாக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு மட்டுமே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி தாக்குதலால் மரணித்த மற்றும் ஊனமுற்றவர்களுக்கான சங்கத்தின் தலைவர் எல்.டி.எல்.ஏ.குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச் சம்வத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வு வழங்கப்படும் எனக் கூறியபோதும், இறுதியில் கையெழுத்திட்ட நாள் முதல் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் இடம்பெற்ற காலப் பகுதியில் மத்திய வங்கி ஆளுனராக இருந்த ஏ.எஸ்.ஜெயவர்த்தன, பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு மத்திய வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த போதும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னரும் பதவிக்கு வந்த மத்திய வங்கி ஆளுனர்களுடன் இது பற்றி கலந்துரையாடியுள்ள போதும் அது பலனளிக்கவில்லை எனவும் குணவர்த்தன கூறியுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் தாக்குதல் இடம்பெற்ற தினத்தை அனுஷ்டிக்க மாத்திரம் பாரிய நிதி செலவிடப்படுவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேனும் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment