Saturday, June 28, 2014

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி! (புலிகளின் கிளர்ச்சியாளர்களுக்கு செய்தது போன்று)

Saturday, June 28, 2014
வாஷிங்டன்::சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்குவது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா எம்.பி.க்களுடன் ஆலோசித்து வருகிறார்.
 
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு உள்நாட்டு கலவரம் நடைபெற்று வருகிறது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆசாத் அரசு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. இதையடுத்து ஐ.நா. அதிகாரிகள் தலைமையில் ரசாயன குண்டுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
 
இதற்கிடையே சிரியாவில் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்லனர். இந்த சூழலில் அதிபர் ஆசாத் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கவது (புலிகளின் கிளர்ச்சியாளர்களுக்கு செய்தது போன்று) குறித்து ஆலோசனை நடத்த எம்பிக்களுக்கு அமெரிக்க அதபிர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இதில் ரூ.3 ஆயிரம் கோடியில் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சியாளர்களின் படையை மேம்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
 
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹெய்திலின் ஹைடன் கூறுகையில், சிரியா மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்கா உதவுவதில் இது ஒரு முன்னேற்றமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment