Friday, June 27, 2014

மறுபடியும் கொலைகள் செய்வதற்கு புலி பினாமிகளான அனந்தியும் கஜதீபனுகும் நவீன ஆயுதமும், பயிற்சியும் வேண்டுமாம்!!

Friday, June 27, 2014
மறுபடியும் கொலைகள் செய்வதற்கு புலி பினாமிகளான அனந்தியும் கஜதீபனுகும் நவீன ஆயுதமும், பயிற்சியும் வேண்டுமாம்!!
 
பொலிஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தமது பாதுகாப்புக்காக நவீன ஆயுதங்களையும், அவற்றைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் வழங்குமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பா.கஜதீபன் ஆகியோர் சபை அமர்வில் கோரிக்கை விடுத்தனர். நேற்று நடந்த வடமாகாணசபையின் 11ஆவது அமர்விலேயே மாகாணசபை உறுப்பினர்கள் மேற்படி கோரிக்கையை விடுத்தனர். மாகாணசபை உறுப்பினர்களான அனந்த சசிதரன், சுகிர்தன், கஜதீபன், சிவாஜிலிங்கம் ஆகியோருக்கான பொலிஸ் பாதுகாப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான கடிதங்கள் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உறுப்பினர்களுக்கு நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில் நேற்று மாகாணசபை அமர்வின்போது உறுப்பினர்கள் இந்த விடயத்தை எடுத்துக் கொண்டனர். மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தாம் தமது அரசியல் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் தனக்கோ தன்னுடைய பிள்ளைகளுக்கோ ஆபத்து உண்டாகுமானால் அதற்கு மாகாணசபையும் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும் அவர்கள் எமக்கு பொலிஸை பாதுகாப்பை வழங்க மறுத்தால் நவீன ஆயுதங்களையும் அவற்றைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் தமக்கு தரவேண்டும் என்றும் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்தார்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர் கஜதீபன் அவ்வாறான ஆயுதத்தை தமக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் -பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை. எனவே பாதுகாப்பு அமைச்சிடம் அந்தக் கோரிக்கையை முன்வையுங்கள் என பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ்வரும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் எதற்காக விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றும்- வடமாகாண சபையில் உள்ள சிங்கள உறுப்பினர்களுக்கும், தென்னிலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இன்னமும் பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில் எமக்கு மட்டும் எதற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும் சபையில் கேள்வி எழுப்பினார்.
 
இதையடுத்து பாதுகாப்பு விலக்கப்பட்டமை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பேச்சு நடத்தப்படும் என அவைத் தலைவர் கூறினார். இந்த நிலையில் மாகாணசபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மீள வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி இந்த விடயத்தை தீர்மானமாக நிறைவேற்றவேண்டும் என கல்வியமைச்சர் த.குருகுலராஜா பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்ததுடன், அந்தப் பிரேரணையினை தானே முன்மொழிந்தார். அந்தப் பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் வழிமொழிந்த நிலையில் பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment