Wednesday,July 18,2012இலங்கை::புனர்வாழ்வு முகாங்கள் மற்றும் அரசாங்கப் பாதுகாப்பு தங்குமிடம் ஆகியவற்றில், எஞ்சியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தமது புனர்வாழ்வு நிகழ்ச்சியுடன் சிங்கள மொழி பயிற்சிகளையும் பெற்றுவருகின்றனர்.
நாட்டின் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுடனும் பழகுவதற்கான இயலுமையை ஏற்படுத்தல், தன் நம்பிக்கையை வளர்த்தல், சமூகத்துடன் ஒருமைப்பாடுடன் பழகுதல் போன்றவை இலகுவாக மேற்கொள்வதற்கு வழிதிறக்கும் வகையில் இப் பயிற்சியை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது என தேசிய மொழி பிரிவுக்கான பொதுப் பணிப்பாளர் பிரஷாத் ஹேரத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, வெலிக்கடை புனர்வாழ்வு நிலையம் மற்றும் அரசாங்க பாதுகாப்புத் தங்குமிடம் ஆகியவற்றிலுள்ள 90 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இப் பயிற்சி நெறி வழங்கப்படுவதாகவும், இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து தொழிற்திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இப்பயிற்சிகள் அமையும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment