Tuesday, December 25, 2012

உயிரிழப்பு 42 ஆக உயர்வு; இடப்பெயர்வு 24 ஆயிரமாக அதிகரிப்பு!

சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது.
இவர்கள் 124 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் கதிர்காமம் திஸ்ஸவாவியில் மூழ்கிய ஏழு பேரும் உள்ளடங்குகின்றனர்.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 59 ஆயிரத்து 889 ஆக காணப்படுவதோடு இதுவரை ஒன்பது பேர் காணாமற்போயுள்ளனர்.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் மூவாயிரம் வீ்டுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சில வீதிகளூடான போக்குவரத்திற்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஹொரவப்பொத்தானை - திருகோணமலை வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - மட்டக்களப்பு வீதி வெருகல் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கந்தளாய் சேருநுவர வீதியூடான வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா - வெலிமடை வீதி மாலை ஆறு மணிவரை மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment